1
வர்க்கப் பகுப்பாய்வு,
கள ஆய்வு, படிப்பு
ஆகியவற்றின் மூலம்
விவசாயிகளின்
வர்க்கப் போராட்டத்தை
வளர்த்தெடுப்போம்
சாரு மஜூம்தார்
“விவசாயிகளின் பரந்ததோர் இயக்கத்தை வளர்த்தெடுத்து, அந்த இயக்கத்துக்குள் பரந்த வெகுமக்களை ஈர்க்க நாம் முயற்சி செய்யவில்லை என்றால், விவசாய வெகுமக்களின் உணர்வில் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான அரசியல் உறுதியாக வேர் விட, இயல்பாக நீண்ட காலம் ஆகும். விளைவாக, போராட்டத்தில் அரசியல் மேலோங்கியதாக இல்லாமல், ஆயுதங்களின் மீது மட்டும் இன்னும் இன்னும் கூடுதலாக சார்ந்திருக்கும் போக்கு வளர தலைப்படும். கெரில்லா போர் என்பது அரசியல் தலைமையின் கீழ் நடக்கிற விவசாயிகளின் வர்க்கப் போராட்டத்தின் ஓர் உயர்ந்த வடிவமாகும். ஆக, வர்க்கப் பகுப்பாய்வு, கள ஆய்வு, படிப்பு, வர்க்கப் போராட்டம் என்ற நான்கு ஆயுதங்களை வெற்றிகரமாக பொருத்துவதன் மூலம் மட்டுமே விவசாயிகளின் ஆயுதப் போராட்டப் பகுதிகளை உருவாக்க முடியும்.....
......பணக்கார விவசாயிகள் தவிர,
பிற அனைத்து விவசாயிகளையும் வெறும் ஆதரவாளர்களாக மட்டுமின்றி போராட்டத்தில் பங்கேற்பவர்களாகவும் அணிதிரட்ட வேண்டும். தொழிலாளர் வர்க்கத்தின் தலைமையில், வறிய நிலமற்ற விவசாயிகள், பரந்த விவசாய வெகுமக்களின் போராட்ட ஒற்றுமையை கட்டியெழுப்ப முடியும். அதுபோன்ற ஒற்றுமை எவ்வளவு துரிதமாக எட்டப்படுகிறதோ, அவ்வளவு துரிதமாக போராட்டம் புரட்சிகர தன்மை பெறும். தலைவர் மாவோவின் போதனையை நாம் நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும்: புரட்சிகரப் போர் வெகுமக்களின் போர்.
அதை வெகுமக்களை அணிதிரட்டுவதன் மூலம் மட்டுமே, அவர்களை சார்ந்து மட்டுமே நடத்த முடியும்.”
லிபரேசன், நவம்பர் 1968
*********
2
என்எல்சி தொழிலாளர் போராட்டம் மேலும் விரிவடைய வேண்டும்!
நானும் எவ்ளோ நாள்தான் நல்லவனா நடிக்கிறது? தமிழ் நாட்டில் சில மாதங்களுக்கு முன் பிரபலமாக இருந்த திரைப்பட வசனம் இது. இன்று ஜெயலலிதா அந்த வசனத்தை தனதாக்கிக் கொண்டிருக்கிறார்.
மக்கள் சொத்தான என்எல்சி நிறுவனத்தின் பங்குகளை மக்கள் விருப்பத்துக்கு எதிராக விற்க முயற்சி செய்யும் மத்திய அரசுக்கு எதிராக புறப்பட்டுவிட்ட ஜெயலலிதா மக்கள் சொத்தைப் பாதுகாக்க, தமிழ்நாட்டில் என்எல்சி தொழிலாளர் போராட்டத்தால் ஏற்பட்டுவிடக் கூடிய பதட்டத்தில் இருந்து தமிழக மக்களை பாதுகாக்க, என்எல்சி நிறுவனத்தின் அய்ந்து சத பங்குகளை தமிழக அரசாங்கம் வாங்கிக் கொள்ளும் என்று சாகச அறிவிப்பு விடுத்தார். மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். இது முடியுமா, முடியாதா, செல்லுமா, செல்லாதா என்று சிதம்பரம் முதல் ராமதாஸ் வரை பேச வைத்தார். ரத்தத்தின் ரத்தங்கள் அம்மாவின் அரசியல் சாதுர்யத்தை வியந்து போற்றிக் கொண்டிருந்தார்கள். அண்ணா தொழிற்சங்கப் பேர வையினரும் என்எல்சி தொழிலாளர் போராட்டத்தில் ஆர்வத் துடன் பங்கேற்றிருந்தார்கள்.
திடீரென காட்சியை மாற்றினார் ஜெயலலிதா.
என்எல்சி பங்கு விற்பனைக்கு எதிராக ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் எட்டு நாட்களுக்கும் மேல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும்போது, ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், சிறை நிரப்பு என்று அந்தப் போராட்டம் தீவிரமடையும்போது, அய்ந்து சத பங்குகளை தமிழ்நாடு அரசு வாங்குவது என்ற ஜெயலலிதாவின் முன்வைப்பை செபி பரிசீலிப்பதாக செய்திகள் வந்துகொண்டிருக்கும்போது, ஜெய லலிதாவிடம் இருந்து அந்த வெடிகுண்டு தாக்குதல் வந்தது. தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் விநியோகக் கழகம் தனியாரிடம் இருந்து மின்சாரம் வாங்கும்.
ஜெயலலிதாவின் உண்மை முகம் இதுதான். இது நவதாராள வாதக் கொள்கை ஆதரவு ஆட்சிதான். கூடன்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தை தமிழ்நாட்டின் காவல்துறை கொண்டு ஒடுக்கும் முன்பு போராட்டக்காரர்களுக்கு எதிரான மனநிலையை மக்களிடம் உருவாக்க செயற்கையான மின் வெட்டை அமலாக்கியதுபோல், என்எல்சி தொழிலாளர் வேலை நிறுத்தத்துக்கு ஆதரவுபோல் ஒரு பக்கம் காட்டிக்கொண்டு, மறுபக்கம் தன் நிஜமான விருப்ப நடவடிக்கைகளைத் துவங்கி விட்டார்.
தனியாரிடம் மின்சாரம் வாங்குவது தொடர்பான அறிவிப்பு ஜெயலலிதாவே நேரடியாகச் செய்யவில்லை. தேர்வுகளில் தமிழ் இல்லை என்று வெளியான அறிவிப்புக்கு கடுமையான எதிர்ப்பு வந்த பிறகு, அது தன் பார்வைக்கு வரவேயில்லை என்று சொல்லி அதை நிறுத்தி வைத்ததுபோல், இதிலும் இடம் வைத்துக்கொள்ள இந்த அறிவிப்பு தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் விநியோகக் கழகத்தின் அறிவிப்பாக வெளியிடப்பட்டுள்ளது. இந்து நாளிதழில் வெளியாகியுள்ள இந்தச் செய்தியில் இந்த முன்வைப்புக்கான உந்துதல் முதலமைச்சரிடம் இருந்து வந்ததாகச் சொல்லப்படுகிறது.
அறிவிப்பு வெளியாகியிருக்கிற பின்னணி, ஜெயலலிதா உண்மையில் இப்படி ஒரு தருணத்துக்காக காத்துக் கொண்டிருந்ததை உறுதிப்படுத்துகிறது. அறிவிப்பின்படி, நிலவுகிற 4000 மெ.வா மற்றும் இன்னும் அதிகரித்துக் கொண்டே இருக்கிற மின்பற்றாக்குறையை சரிசெய்ய, தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் விநியோகக் கழகம், நான்கு தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து, ஒரு கிலோவாட் ரூ.4.910 என்ற விலையில், 1208 மெ.வா மின்சாரம் வாங்க, அடுத்த 15 ஆண்டு களுக்கு ஒப்பந்தம் போட முடிவு செய்கிறது. 4000 மெ.வா மின்பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய, லட்சியத்தை நிறைவேற்றும் அணுகு முறையுடன், அடுத்த 4 மாதங்களில் மீதமுள்ள 2222 மெ.வா மின்சாரம் வாங்கவும் இன்னும் சில தனியார் நிறுவனங்களுடன் அவசர ஒப்பந்தங்கள் போட வேண்டும் என்றும் ஜெய லலிதா அறிவுறுத்தியுள்ளார். உற்பத்திச் செலவை விடக் கூடுதலாகக் கொடுத்து, இந்தத் தனியார் நிறுவனங்களிடம் மின்சாரம் வாங்கப்படும். டிபி பவர்,
ஜின்டால் பவர்,
இந்த் பாரத் எனர்ஜி (உத்கல்) மற்றும் பால்கோ ஆகிய நான்கு நிறுவனங்கள் 1208 மெ.வா மின்சாரத்துக்கான ஒப்பந்தம் பெற்றுள்ளன. 2012 அக்டோபர் முதலே தனியார் மின்உற் பத்தி நிறுவனங்களிடம் மின்சாரம் வாங்குவ தற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் விநியோக கழகம் செய்து கொண்டிருக்கிறது.
நாகப்பட்டினத்தில் உள்ள பிபிஎன் என்கிற தனியார் மின்உற்பத்தி நிலையம் 2005 - 2006 முதல் 2010 - 2011 வரை உற்பத்தி செய்த எரிபொருளுக்கு தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் விநியோகக் கழகம் ரூ.331.5 கோடி கூடுதலாக செலுத்தியிருப்பதாக மத்திய தணிக் கையாளர் அறிக்கை சமீபத்தில் வெளியிடப் பட்டது. மக்கள் வரிப்பணம் நேராக தனியார் நிறுவனத்தில் சட்டைப் பைக்குள் சென்றுள்ளது. இது கருணாநிதி ஆட்சிக் காலம் என்றாலும், 2 ஜி ஊழல் அலை மீதேறி ஆட்சியைப் பிடித்த ஜெயலலிதா இன்று வரை இது பற்றி மூச்சு விடவில்லை. கருணாநிதி ஆட்சி தமிழ்நாட்டின் கருவூலத்தை காலி செய்து விட்டது என்று வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சொல்லிக் கொண்டிருந்த ஜெயலலிதா, இதுபற்றி மட்டும் குறிப்பாக இன்று வரை எதுவும் சொல்ல வில்லை. மின்கட்டண உயர்வுக்கு மின்வாரியத் தின் மோசமான நிதிநிலையை காரணம் காட் டிய போதும் பிபிஎன் நிறுவனத்துக்கு ரூ.331.5 கோடி கூடுதலாக செலுத்தப்பட்டது பற்றி அவர் பேசவில்லை. மத்திய மின் தொகுப்பில் தமிழ்நாட்டுக்கு கூடுதல் மின்சாரம் வேண்டும் என்று மத்திய அரசுக்கு கடிதங்கள் எழுதிய போதும் அவர் இதுபற்றி பேசவில்லை. ஜெய லலிதாவுக்கு கருணாநிதி மீதுள்ள விரோதத்தை விட தனியார் நிறுவனத்தின் மீது பற்று கூடுதல்.
டீசல் விலை,
இயற்கை எரிவாயு விலை ஆகியவற்றில் மத்திய அரசின் கொள்கைகள் தவறு என்று சொல்லும் ஜெயலலிதா, தனியார் மின்உற்பத்தி நிலையங்களுக்கு முதல் நான்கு ஆண்டுகளுக்கு முதலீட்டுச் செலவில் 24% மாநில அரசுகள் தர வேண்டும் என்று சொல்லி யிருப்பதையோ, அதற்கேற்ப, புதிய மின்உற்பத்தி நிலையங்கள் அமைக்க தமிழ்நாடு மின்வாரியம் வாங்கிய கடன் தனியார் மின்வாரியங்களுக்கு இந்தத் தொகையைத் தரவே சரியாகப் போனதையோ ஜெயலலிதா பேச மறுக்கிறார். ஏற்கனவே தனியார் மின்உற்பத்தி நிறுவனங் களிடம் மின்சாரம் வாங்கியதில் தமிழ்நாடு மின் வாரியம் நட்டமாகிப் போனதைப் பற்றியும் பேச மறுக்கிறார்.
தனியார் மின்உற்பத்தி நிறுவனங்கள் தமிழ் நாட்டு மக்களின் வரிப்பணத்தை விழுங்கிக் கொண்டிருக்க தமிழக மக்கள் மின்வெட்டு, 100 சதத்துக்கும் மேலான மின்கட்டண உயர்வு என்று விழிபிதுங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
மின்வெட்டால் மக்கள் படும் துன்பங்க ளையே பயன்படுத்தி சூரிய ஒளியில் மின்சக்தி என்று இன்னும் 29 தனியார் நிறுவனங்களுடன் தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் விநியோக கழகம் 20 ஆண்டுகளுக்கான ஒப்பந்தங்கள் போடத் தயாராகிறது. கிருஷ்ணகிரி, ராமநாதபு ரம், தூத்துக்குடி, சிவகங்கை, திருச்சி, விருது நகர்,
திருவண்ணாமலை மாவட்டங்களில் இந்த மின்நிலையங்களை அமைக்க விரும்பும் தனியார் நிறுவனங்கள், தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் விநியோகக் கழகம் எதிர்ப் பார்க்கிற 1000 மெ.வா மின்உற்பத்தி என்ற இடத்தில் 499 மெ.வா உற்பத்திக்கான ஒப்பந்தப் புள்ளிகளை முன்வைத்துள்ளன. அந்த மின்சாரத்தை ஒரு யூனிட் ரூ.6.48 என்ற விலையில் தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் விநியோகக் கழகம் வாங்கும். இந்த விலை கட் டாது என்று தனியார் நிறுவனங்கள் சொல்லிக் கொண்டிருக்கின்றன. இந்த விலையும் தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் விநியோகக் கழகம் சொல்வதுபடி 2014 - 2015லேயே இந்த விலை ரூ.9.75 என்று உயரும்.
மின்உற்பத்தி தனியார்மயம் நாட்டுக்கு என்ன விளைவுகள் உண்டாக்கும் என்பதை என்ரான் ஏற்கனவே தெளிவாகக் காட்டியிருக் கிறது. மின்கட்டணம் தாறுமாறாக ஏறி மக் களை திக்குமுக்காடச் செய்தது மட்டுமின்றி என்ரான் நிறுவனத்துக்கு ஏற்பட்ட நட்டத்துக்கு இந்திய அரசாங்கம், ஒப்பந்தப்படி ரூ.6000 கோடிக்கும் மேல் அபராதம் கட்ட வேண்டியி ருந்தது. நிறுவனமும் நாட்டை விட்டு ஓடியது.
இப்போதும் தமிழ்நாடு மின்வாரியத்தின் மின்உற்பத்தி திறனை அதிகரிப்பது பற்றிய எந்தத் திட்டமும் இல்லாமல் தனியாரை நம்பி நாளைய மின்விநியோகம் இருக்கும் நிலையை உருவாக்கத் திட்டமிடப்படுகிறது. தனியார் நிறுவனங்கள் வைக்கும் விலை நாளை சட்டம் ஆகும். ரிலையன்ஸ் நிறுவனத்துக்காக இயற்கை எரிவாயு விலை உயர்த்தப்பட்டதைப் போல் தனியார் நிறுவனங்கள் நலன்காக்க மின்சாரம் வாங்கும் விலை நிர்ணயிக்கப்படும்.
நெல்லுக்கும் கரும்புக்கும் கூடுதல் விலை வேண்டும் என்று கேட்கும் விவசாயிகளுக்கு அளந்து அளந்து கொடுக்கும் ஆட்சியாளர்கள், தனியார் நிறுவனங்களுக்கு அவர்கள் கேட்கும் விலையை அள்ளிஅள்ளிக் கொடுக்கத் தயாராக இருப்பார்கள். லட்சக்கணக்கான மக்கள் உயிர் போனாலும் அடுத்தடுத்த சந்ததியினர் உரு குலைந்து போனாலும் மாதக்கணக்கில் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும் அணு மின்சாரம் வேண்டும் என்று கூடன்குளத்தில் வேகவேக மாக வேலை நடக்க துணை நிற்பார்கள்.
டெல்டா மாவட்டத்தின் விளைநிலங்கள் மின்உற்பத்தி நிலையங்களால் லாபக்கூடங்க ளாக மாற்றப்படுகின்றன. மீத்தேன் என்ற புதிய பூதம் ஒன்று தமிழ்நாட்டை மிரட்டிக் கொண் டிருக்கிறது. விவசாயிகளின் வாழ்வுரிமை வீசை என்ன விலை என்று கேட்கின்றன தனியார் மின்உற்பத்தி நிறுவனங்கள். ஜெயலலிதாவும் விலை சொல்ல தயாராகவே உள்ளார். நாற்பது கனவு கூட இந்த உந்துதலில் இருந்து அவரை தடுத்துவிடவில்லை.
தனியார்மயம் ஆபத்து, கூடாது என்ற குரல் எல்லாத் திசைகளிலும் ஒலித்துக் கொண் டிருக்கும் போது,
அதற்காக நடத்தப்படும் ஒரு போராட்டத்தைக் காரணம் காட்டியே கூடு தல் தனியார்மயத்துக்கு தயாராகிறார் ஜெய லலிதா. அதுவும் லட்சியத்தை எட்டும் அணுகு முறையுடன் இன்னும் நான்கே மாதங்களில் முடித்துவிட வேண்டும் என்கிறார். தமிழ் நாட்டைச் சூழ்ந்துள்ள இருளுக்கு ஜெயலலிதா சொல்கிற பதில் இன்னும் கூடுதல் இருட்டு.
ஈராண்டு சாதனையைப் பற்றி அதிமுக காரர்கள் ஒரு பக்கம் பொதுக் கூட்டங்கள் நடத்திக் கொண்டிருக்க, பெற்ற குழந்தையை ரூ.7000க்கு விற்க ஊர்விட்டு ஊர் வருகிறார் ஒரு தாய். விவசாயம் பொய்த்துப் போன மாவட்டங்களில் இருந்து கழிவுநீர்க் குழாய் களை, தொட்டிகளை சுத்தம் செய்ய சென்னை வந்து சேருகிறார்கள் விவசாயிகள்.
இந்தக் கூடுதல் இருட்டைச் சுற்றியுள்ள வெள்ளிக் கீற்றாகத்தான் என்எல்சி தொழிலா ளர்கள் போராட்டம் நடந்துகொண்டிருக் கிறது. ஜெயலலிதாவின் நவதாராளவாதக் கொள்கை விசுவாசத்தை, சேவையை, அதை உறுதிப்படுத்தும் ஜெயலலிதாவின் ஒடுக்குமுறை முகத்தை கூடன்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டக்காரர்கள் அம்பலப்படுத்தியதைப் போல, அய்முகூ அரசின் மின்உற்பத்தி தனியார் மயத் திட்டங்களை அய்முகூ அரசாங்கத்தை விட வேகமாக அமலாக்கும் ஜெயலலிதாவின் உண்மை முகத்தை என்எல்சி தொழிலாளர்கள் போராட்டம் அம்பலப்படுத்த வேண்டும்.
என்எல்சி தொழிலாளர்கள் நாட்டின் செல்வத்தைக் காக்கும் மகத்தான போராட்டத் தில் உள்ளனர். இது மத்திய அரசுக்கு எதிரானப் போராட்டம் என்று கூட அந்தப் போராட்டத் தின் நடுநடுவே சன்னமாக சில குரல்கள் கேட் கின்றன. இந்தப் போராட்டத்தைப் பயன்படுத் தித்தான் ஜெயலலிதா தமிழ்நாட்டில் மின் உற்பத்தி தனியார்மயத்தை முன்தள்ளுவார் என்றால், போராட்டத்தின் எல்லைகள் விரிவ டைய வேண்டியுள்ளது. தொழிலாளர் போராட் டங்களால் பதட்டம் உருவாகும் என்று முன் கூட்டியே ஊரடங்கு உத்தரவு போட்டு ஜெய லலிதா தயாராவார் என்றால், ஜெயலலிதாவின் நவதாராளவாதக் கொள்கை தாக்குதலை எதிர்கொள்ள வேண்டிய தமிழக மக்களும் இன்னும் தீவிரமான போராட்டங்களுக்கு முன்கூட்டியே தயாராக வேண்டியுள்ளது.
*********
3
இறுதிச்
சடங்கு செய்ய வேண்டியது
இளவரசனுக்கு
அல்ல...
சாதியாதிக்க
வெறி அரக்கனுக்கு...
இளவரசனின்
துர்மரணம் கொலையா,
தற்கொலையா என்று
தமிழகத்தின் இரண்டு
பிரிவுகள் விவாதித்துக்
கொண்டுள்ளன. ஒரு பிரிவு,
இதில் மாநில அரசும்
அதன் காவல்துறை
யும் அடக்கம்,
இளவரசன் ஓடும்
ரயிலின் முன் பாய்ந்து
தற்கொலை செய்துகொண்டார்
என்பதற்கான ஆதாரங்களை
தேடித்தேடி கண்டுபிடித்துக்
கொண்டுள்ளது. இன்னொரு பிரிவு
அது கொலைதான் என்பதை
நிறுவ படாத பாடு
பட்டுக்கொண்டு
இருக்கிறது. இறுதியில் வல்லான்
சொல் நிற்கும்
நியதி நிற்கும்.
இளவரசனின்
மரணம் தற்கொலை
என்று தமிழக காவல்துறை
நிறுவுவதன் மூலம்
யாரைக் காப்பாற்ற
முனைகிறது? தமிழகத்தின்
சட்டம் ஒழுங்கையா?
ஆபத்தில் இருந்த
இளவரசன் உயிரைக்
காப்பாற்றும்
கடமையில் இருந்து
தவறிய தமிழக அரசாங்கத்தையா?
அரசியல் தோற்றத்தைப்
பெற சாதி வெறியை
தூண்டிவிட்ட ராமதாசையா?
பாமகவின் பிற
சாதியாதிக்க வெறியர்களையா?
தற்கொலை
என்று நிறுவிவிட்டால்
மட்டும் நடந்தேறியுள்ள
சாதிவெறி கொடூரத்துக்கு
இளவரசன் பலியாகியுள்ளதை
நியாயப்படுத்தி
விட முடியுமா? இளவரசன்
என்று பெயரிட்டு
மகிழ்ந்த பெற்றோரின்
கனவு ரயில் தண்டவாள
ஓரத்தில் சிதைந்து
போவதுதான் முடிவா?
சாதி விதி மீறல்
அவ்வளவு பெரிய
குற்றமா? முன்னேற்றம்,
முதலிடம், வளர்ச்சி,
நாகரிகம், ஜனநாயகம்,
ஆணையங்கள், சட்டங்கள்,
குழுக்கள் அத்தனையையும்
மீறி, புரையோடிப்
போயிருப்பது வெறும்
சாதி வெறிதானா?
தமிழகம் தாழ்ந்துவிட்டதென்று
இளவரசன் மரணம்
உரத்துச் சொல்லவில்லையா?
சாதி
விதி மீறிய இளவரசன்
என்கிற தலித் இளைஞனை
புதைத்து விடுவதன்
மூலம் சாதியாதிக்க
எதிர்ப்பை புதைத்து
விடத்தான் முடியுமா? எந்த
ஜீன்ஸ் போட்டுக்கொண்டு
அலைகிறார்கள்
என்று சாதிவெறி
தலைக்கேற ராமதாஸ்
பொருமினாரோ, அதே
ஜீன்ஸ்தான் இளவரசனின்
கடைசி உடையாக இருந்தது.
இளவரசனின் உடல்
மீண்டும் ஒரு முறை
பரிசோதனைக்கு
உட்படுத்தப்படுவதோடு,
தமிழ்ச் சமூகத்தை,
அதன் மனசாட்சியை,
இங்கு வேர்கொள்ளப்
பார்க்கிற சாதியாதிக்க
வேட்கையை அறுத்து
ஆழ்பரிசோதனைக்கு
உட்படுத்துவது
இன்று அவசியம்.
இளவரசன்
மரணித்து நான்கு
நாட்கள் கழித்துத்தான்
ஜெயலலிதாவுக்கு
அந்த மரணம் வேதனை
தந்துள்ளது. கொடியன்குளத்தையும்
பரமக்குடியையும்
முன்னின்று நடத்தியவருக்கு
இளவரசன் மரணம்
வேதனை உருவாக்கியது
வியப்பாகவே இருக்கிறது.
விசாரணைக்
குழு காலம் கடத்தி,
எழுந்திருக்கிற
சீற்றத்தைத் தணிக்கும்
என்று அவர் எதிர்ப்பார்க்கிறார்.
தமிழக காவல்துறை
துப்பாக்கிச்
சூட்டில் தலித்
தொழிலாளர் ரத்தத்தால்
தாமிரபரணி சிவந்தபோது
கருணாநிதி ஆட்சியின்
காவல் துறை நடத்திய
கொடூரம் கண்டு
பதைக்காத வர்கள்,
இளவரசன் மரணத்துக்கு
கலப்பு மணம் காரணம்
என்று ஜெயலலிதா
சொல்ல, கலப்பு
மணம் என்று சொல்லக்
கூடாது என்று பெரியார்
சொன்னதை மறந்துவிட்டார்
என்று பதைத்துப்
போகிறார்கள். பெரியாரை நினைவு
கூர அவர்களுக்கு
இப்போதுதான் சந்தர்ப்பம்
கிடைத்தது. ஜெயலலிதா கலப்பு
மணம் என்று சொன்னதை
விட தலித் மக்கள்
மீது நடத்தப் படும்
தாக்குதல்களை
தடுக்காததுதான்
பெரிய குற்றம்
என்று அவர்களுக்குப்
படவில்லை.
இளவரசன்
இளைஞர்களின் திருவுருவாக
முடியாது, அவன்
தற்கொலை செய்து
கொண்டவன் என்று
இன்னொரு கும்பல்
பதைத்துப் போகிறது. ‘சமூக’ நல்லிணக்கத்திற்
கும் ‘சமூக’ ஒற்றுமைக்கும்
பங்கம் வந்துவிடாமல்
பார்த்துக் கொள்ள
இன்னொரு கழகம்
புறப்பட்டுவிட்டது.
யார் இவர்கள்
சொல்லும் சமூகம்?
தலித் மக்கள்
தலை மீதேறி, மற்ற
சாதியினரின் நல்லிணக்கம்
ஒற்றுமை பற்றி
பேசுவது சாத்தியமேயில்லை.
யாருடைய நல்லி
ணக்கத்துக்கும்
ஒற்றுமைக்கும்
தலித் மக்கள் குறுக்கே
நிற்கவும் இல்லை.
முள் விதைத்து
நெல்லறுக்க முடியாது.
பதட்டமும்
கலகமும் தான் விளையும்.
இளவரசன்
விசயத்தில் தாங்கள்
தோற்று விட்டதாக,
செய்ய வேண்டியதைச்
செய்யத் தவறிவிட்டதாக
சிலர் சொல்கின்றனர்.
தலித்
மக்கள் அதிகாரம்
பெறுவது என்ற பெயரில்
தமிழகத்தில் உருவான,
செயல்படுகிற கட்சிகள்
திக்குத்தெரியாத
காட்டில் தேடுவது
எதை என்பதையே மறந்துவிட்டதாகத்
தெரி கிறது. முதலாளித்துவ
அரசியல் கட்சிகளின்
அணிதிரட்டல்களில்
எண்ணிக்கைக்காக
தலித் மக்கள் இருப்பதைப்போல்,
எண்ணிக்கை அரசியலுக்கு
உடன்படும்போக்கில்,
நெல் லுக்குப்
பாயும் நீர் சற்று
புல்லுக்குப்
பாய்கிறது. அரசியல் அதிகாரமும்,
அறுதியிடலும்
அடை யாள அளவில்
நின்றுவிடுகிறது.
அஇஅதிமுகவும்
திமுகவும் இன்னும்
பிற முதலாளித்துவ
கட்சி களும் நடத்தும்
சாதி அரசியலில்
கலந்துவிட நேரிடுகிறது.
அரசியல்
புலப்பாடு மகாஅவசியம். அதன்
முக்கியத்துவத்தை
யாரும் குறைத்து
மதிப்பிட முடியாது.
ஆனால், அது என்ன
விலை கொடுத்து
பெறப்படும் என்பது
கேள்வி. சமரசங்கள்
இன்றியும் அரசியல்
வெளியில் சஞ்சரிக்க
முடி யாது. ஆனால், அதற்கு
என்ன விலை தரப்
படுகிறது என்பது
கேள்வி.
சில கேள்விகளை
சில சந்தர்ப்பங்களில்,
அவை சங்கடம் தருபவையாக
இருந்தாலும், எழுப்பியே
ஆக வேண்டியுள்ளது. சில
வரலாற்று நிகழ்வுகளை
நினைவுபடுத்தியே
ஆக வேண்டி யுள்ளது.
‘ரயில்வே
கட்டமைப்பில்
இருந்து விளையும்
நவீன தொழில், இந்திய
முன்னேற்றத்துக்கும்
இந்திய அதிகாரத்துக்கும்
தீர்மானகரமான
தடைகளாக இருக்கிற
இந்திய சாதிகளை
தாங்கி நிற்கும்
மரபுரீதியான வேலைப்
பிரிவி னையை அழித்துவிடும்’ என்கிறார்
மார்க்ஸ். மார்க்ஸ்
சொன்னது பெருமளவில்
நடந்திருந்தா
லும் அந்த நிகழ்வுப்போக்கு
முற்று பெறவில்லை.
புரட்சிகர
கம்யூனிஸ்ட் கட்சி
அதை முடிக்கும்
நோக்கத்துடன்தான்
முன்சென்று கொண்டிருக்
கிறது. உற்பத்தி
சக்திகளின் வளர்ச்சியை
முடக்கும் நிலப்பிரபுத்துவ
மிச்சசொச்சங்களை
ஒழிக்கப் பாடுபடுகிறது.
வழியில் பல்வேறு
சக்தி களையும்
இணைத்துக் கொள்ள
விடாமுயற்சி எடுக்கிறது.
நிலப்பிரபுத்துவ
மிச்சசொச்சமான
சாதிய கட்டமைப்பை
தக்க வைத்து ஆதாயம்
தேடும் முதலாளித்துவ
அரசியலை நாளும்
விடாமல் எதிர்கொள்கிறது.
நிலப்பிரபுத்துவத்தின்
நெஞ்சுக்குழிக்குள்
கால் வைத்து சவுக்கடிக்கும்
சாணிப்பாலுக்கும்
தலித் மக்கள் முற்றுப்புள்ளி
வைத்தனர். தருமபுரியில்
இரட்டைக் குவளை
முறைக்கு முடிவு
கட்டினர். இன்று பெரியகோட்டையில்
வழிபாட்டு உரிமையை
கெஞ்சிப் பெறாமல்,
நெஞ்சு நிமிர்த்தி
தாங்களாக எடுத்துக்
கொண்டு ஆரவாரம்
செய்கின்றனர்.
வாக்குச் சாவடிகளுக்குச்
சென்று தங்கள்
வாக்குகளை தாங்களே
இட்டறியா தலித்
மக்கள் தங்கள்
போராட்டத்தின்
மூலம் அரசியல்
உரிமையை மீட்டெடுத்தனர்.
இவற்றை தலித்
மக்கள் கம்யூனிஸ்ட்கள்
தலைமையிலேயே செய்தனர்.
தேசிய ஊரக வேலை
உறுதித் திட்டத்தில்
வாழ்வுக்கான கூலி
வேண்டும், நிலமற்ற
தலித் மக்களுக்கு
நிலம் வேண்டும்
என்ற கோரிக் கைகளை
எழுப்பிக்கொண்டே,
தலித் மக்கள் கவுரவத்துக்கான,
அரசியல் அறுதியிடலுக்கான
போரில் எப்போதும்
போல் இனியும் புரட்சிகர
கம்யூனிஸ்ட்கள்
முன்னிற்பார்கள்.
மறுபக்கம்,
இத்தனை ஆண்டு கால
தலித் கட்சித்
தலைவர்களின் அரசியல்
புலப்பாடு இளவரசனைக்
காப்பாற்றக் கூட
போதுமான தாக இல்லை. இது
யதார்த்தம். இந்த அரசியல்
புலப்பாடு இன்னும்
வேறுவிதமாக, இன்னும்
அழுத்தமாக, கூடுதல்
அறுதிடலுடன் இருக்க
வேண்டியுள்ளதன்
அவசியம் எழுந்துவிட்டது.
விசயங்கள்
ஒரு முழுச்சுற்று
வந்துவிட்டது.
கொடியன்குளமும்
தருமபுரியும்,
தங்கள் வாழ்நிலையில்
மேம்பாடு கண்டுகொண்டிருந்த
தலித் மக்களை முடக்கும்
நோக்கம் கொண்ட
தாக்குதல்கள். எனக்குச்
சமமாக நீயா என்ற
கேள்வியுடன் தொடுக்கப்பட்ட
தாக்குதல்கள்.
தலித் சிறுவன்
இன்னும் கூட தன்
காலணியை தலையில்
சுமக்க நேர்கிறது.
பரமக்குடியும்
இன்னும் அதுபோன்ற
சம்பவங்களும்
பல சுற்றுக்கள்
முன்னேறிவிட்ட
காலச்சக்கரத்தை
பின்னோக்கித்
திருப்பும் முயற்சிகளே.
‘எந்த
அரசியல் பாதுகாப்பு
வேண்டுமானா லும்
கேளுங்கள், அது
உங்களுக்குத்
தரப்படும்’ என்று
அயர்லாந்தின்
ஹோம் ரூல் பிரதிநிதி
சொன்னபோது, ‘யாருக்கு
வேண்டும் நீங்கள்
தரும் பாதுகாப்பு.
எந்த விதத்திலும்
நீங்கள் எங்களை
ஆள்வதை நாங்கள்
விரும்பவில்லை’ என்று,
அயர்லாந்தின்
ஹோம் ரூல் அரசியல்
சட்டத்துக்கு
கீழ்ப்படிய மறுத்த
உல்ஸ்டர் மக்களின்
பிரதிநிதி சொன்னதைச்
சொல்லி, உல்ஸ்டர்
மக்கள் சொன்னதைப்
போல் இந்தி யாவில்
சிறுபான்மை மக்கள்
சொல்லியிருந்தால்
பெரும்பான்மையினரின்
அரசியல் விருப்பங்கள்
என்னவாகியிருக்கும்
என்று அம்பேத்கர்
கேள்வி எழுப்புகிறார்.
சிறுபான்மை
மக்கள் என்று தலித்
மக்களையே குறிப்பிடுகிறார்.
தலித் மக்கள்
கேட்க வேண்டும்
என்று அம்பேத்கர்
நினைத்த கேள்வியை
இன்று அவர்கள்
கேட் கிறார்கள்.
உங்கள் விதிப்படி
நாங்கள் ஏன் ஆட
வேண்டும் என்று
கேட்கிறார்கள்.
நீங்கள் சொல்கிற
சட்டகத்துக்குள்
நாங்கள் ஏன் நிற்க
வேண்டும் என்று
கேட்கிறார்கள்.
தமிழ்நாட்டின்
தலித் இளைஞர்கள்,
தலித் மக்கள் கொதித்துப்
போய் இருக்கிறார்கள். தங்கள்
விடுதலையை யார்
கருணையும் இன்றி
தாங்களேதான் போரிட்டு
வென்றெடுக்க முடியும்
என்று நம்புகிறார்கள்.
அவர்களுக்கு
என்ன சொல்ல வேண்டும்,
எந்தத் திசையில்
அழைத்துச் செல்ல
வேண்டும் என்பதை
தலித் தலைவர்கள்
முடிவு செய்ய வேண்டும்.
அவர் கள் மார்க்ஸ்
சொன்னதை பின்பற்ற
காலம் எடுக்கலாம்.
ஆனால், அம்பேத்கர்
சொன்னதை யாவது
பின்பற்ற வேண்டியுள்ளது.
எங்களுக்கு
பாதுகாப்பு தர
நீங்கள் யார் என்ற
கேள்வியை எழுப்ப
வேண்டியுள்ளது.
இறுதிப் போரில்
ஆயிரக்கணக்கான
சிறி லங்கா தமிழர்கள்
கொல்லப்பட்டபோது
வெளிப்பட்ட சீற்றத்தை
விடக் கூடுதலான
சக்திவாய்ந்த
சீற்றம் சிறுவன்
பாலச்சந்திரன்
நிழற்படங்கள்
வெளியிடப்பட்டபோது
உருவா னதைப் போல்,
நாய்க்கன்கொட்டாய்
சாதி வெறியர்களால்
சூறையாடப்பட்டபோது
வெளிப்பட்ட சீற்றத்தை
விடக் கூடுதலான
சக்திவாய்ந்த
சீற்றம் இளவரசன்
மரணித் துள்ளபோது
உருவாகியுள்ளது.
வன்னியர்
சமூகத்தைச் சேர்ந்த
திவ்யாவும் அவரது
குடும்பத்தினரும்
சேர்ந்துதான்
இங்கு சாதிவெறியாட்டத்துக்கு
பலியாகியுள்ளனர். வன்னிய
சமூகத்தைச் சேர்ந்த
பெண்களுக்கு தங்கள்
இணையைத் தாங்களே
தேடிக் கொள்ளும்
சுதந்திரம் இல்லை
என்பது மட்டும்
இன்றி, அவர்கள்
வன்னிய சமூகத்தின்
பெருமை காக்க தூய்மையை
கடைபிடிக்க வேண்டிய
வர்கள், வெறும்
பொம்மைகள் என்பதையும்
நடந்து கொண்டிருக்கிற
சாதி வன்முறை வெறி
சொல்கிறது. சாதிப் பெருமையே
பிரதானம் என்று
நிலப்பிரபுத்துவ
மொழி பேசுகிறது.
தங்கள் பிரச்சாரம்
வெற்றி பெற்றுவிட்டது
என்று ராமதாசோ,
அவர் கட்சியைச்
சேர்ந்த மற்றவர்களோ,
அவர்கள் மூட்டிய
சாதிவெறித் தீயை,
பரப்பியவர்களோ
கருதுவார்களேயா
னால், அவர்கள்
என்றென்றும் முட்டாள்களின்
சொர்க்கத்தில்
வசிப்பவர்களாக
இருப்பார்கள்.
தமிழ்நாட்டில்
பாரதியையும் பெரியாரையும்
சீனிவாசராவையும்
புதைத்துவிட்டு
மனுவுக்கு உயிர்
தருவது அத்தனை
எளிதல்ல.
ஊரடங்கு
உத்தரவு போட்டு,
இளவரசன் மரணத்தால்
கொந்தளித்துப்
போயிருக்கும்
தலித் மக்கள்,
குறிப்பாக, தலித்
இளைஞர்கள் எதிர்ப்பை
தற்காலிகமாக தடுத்து
நிறுத்தலாம். இளவரசனின்
உயிரற்ற சடலத்தில்
வைக்கப் படும்
தீ தமிழகத்தின்
உயிருள்ள தலித்
மக்கள் நெஞ்சங்களிலும்
வைக்கப்படும்.
அந்தத் தீ சக்தி
வாய்ந்தது. அதன் தகிப்புக்கு
தமிழகத்தின் சாதி
வெறியர்கள் நிச்சயம்
பதில் சொல்ல வேண்டியிருக்கும்.
இளவரசனின்
உடலுக்கு வைக்கப்படும்
அந்தத் தீ, சாதியாதிக்க
வெறி அரக்கனுக்கும்
இறுதிச் சடங்கு
நடத்தும்.
*********
4
சாதி வெறிக்கு
இளவரசன் உயிர்ப்
பலி!
ராமதாஸ்,
அன்புமணி, குருவை
கைது செய்!
ஜனநாயக வழக்கறிஞர்கள்
சங்கம் ஆர்ப்பாட்டம்
04.07.2013 அன்று
இளவரசன் மர்மமான
முறையில் இரயில்
தண்டவாளத்தின்
அருகில் பிணமாக
கிடந்தார். இளவரசன்
மரணம் கொலை என்று
கருதப்படுவதால்
சிபிஅய் விசாரணைக்கு
உத்தரவிட வேண்டுமென்றும்,
காதல் திருமணம்
செய்பவர்களை பாதுகாக்க
சட்டமியற்றி, நடைமுறைப்படுத்த
வேண்டுமென்றும், சாதி
வெறியோடு, அரசியலமைப்புக்கு
எதிராக பேசுபவர்கள்
மீது கடுமையான
நடவடிக்கை உறுதி
செய்ய வேண்டுமென்றும்,
சாதியை ஒழிப்போம்
சமூக நலன் காப்போம்
என்ற முழக்கத்தோடு
சென்னை உயர்நீதிமன்றத்தில்
05.07.2013 அன்று நூற்றுக்கும்
மேற்பட்ட வழக்கறிஞர்கள்
ஜனநாயக வழக்கறிஞர்
சங்கம் நடத்திய
ஆர்ப்பாட்டத்தில்
கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு
ஜனநாயக வழக்கறிஞர்
சங்க பொறுப்பாளர்
பாரதி தலைமை தாங்கினார். சென்னை
உயர்நீதிமன்ற
வழக்கறிஞர் தமிழினியன்,
இறுதியாக வழக்கறிஞர்
சங்கரசுப்பு உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில்
கலந்து கொண்ட வழக்கறிஞர்கள்
நீதிமன்றத்தின் நடவடிக்கையும்,
இளவரசன் இறப்பதற்கு
ஒரு முக்கியக்
காரணம் என்றனர்.
தமிழக அரசாங்கம்
முறையான நடவடிக்கை
எடுத்திருந்தால்
தர்மபுரி, மரக்காணம்,
இளவசரன் இறப்பு
நடந்திருக்க வாய்ப்பில்லை
என்றும், தமிழக
அரசும், நீதித்துறையும்
அவரது இறப்பிற்கு
முக்கியக் காரணம்
என்று தெரிவித்தனர்.
ஆட்கொணர்வு
வழக்குகளில் வழக்கை
இரண்டு மூன்று
அமர்வுகளுக்கு
இழுப்பதும், அந்த
அமர்வுகளில் கேட்கப்படும்
ஆணாதிக்க மற்றும்
நிலப்பிரபுத்துவ
அடிப்படை கொண்ட
கேள்விகளுமே வழக்கில்
தொடர்புடையவர்களை
சிறுமைப்படுத்துவதாக
அமைந்து விடுவதை,
அந்தக் கேள்விகள்
அவர்களுக்கு எதிராக,
பொதுவாக தாழ்த்தப்பட்ட
சமூகத்தைச் சேர்ந்தவர்கள்
மற்றும் பெண்களுக்கு
எதிராக திரும்பி
விடுவதை சுட்டிக்காட்டினர்.
கிட்டத்தட்ட இதுபோன்ற
ஓர் அணுகுமுறையே
திவ்யா - இளவரசன்
தொடர்பான வழக்கில்
அவரை முன்னுக்குப்பின்
முரணாக, சாதியாதிக்கத்திற்கும்
மிரட்டலுக்கும்
அடிபணிந்து பேச
வைத்திருப்பதாக
குற்றம் சாட்டினர்.
இதுவே இளவரசன்
மரணத்துக்கும்
ஒரு காரணம் என்றும்
குறிப்பிட்டனர்.
பாமக ராமதாஸ்,
காடுவெட்டி குரு,
அன்புமணி ராமதாஸ்,
பாமக வழக்கறிஞர்
பாலு ஆகியோர் இந்த
சம்பவங்களுக்கெல்லாம்
பின்புலமாக இருந்து
செயல்பட்டார்கள்
என்றும், இந்த
பின்னணியில் இவர்கள்
மீது வன்கொடுமை
தடுப்புச் சட்டத்தின்
கீழ் வழக்கு பதிவு
செய்யப்பட வேண்டுமென்றும்
கோரிக்கை விடுத்தனர்.
ஆர்ப்பாட்டம்
சாலை மறியலாக மாறியது. இந்நிகழ்ச்சியில்
வழக்கறிஞர்கள்
ஆதிக்க சாதி வெறிக்கு
எதிராக உணர்வுபூர்வமிக்க
விதத்தில் கலந்து
கொண்டனர். அடுத்த கட்டமாக
வழக்கறிஞர்களை
திரட்டி சாதியாதிக்க
வெறிக்கு எதிராக
போராட்டங்கள்
நடத்துவதென ஜனநாயக
வழக்கறிஞர்கள்
சங்கம் முடிவெடுத்துள்ளது.
- பாரதி
*********
5
பெரியகோட்டை
அழகேரி அம்மன்
திருவிழாவில்
உரிமையை நிலைநாட்டிய
தலித் மக்கள்
சாதிய
ஒடுக்குமுறைக்கு
பெயர் பெற்றது
புதுக்கோட்டை
மாவட்டத்திலுள்ள
கந்தர்வ கோட்டை
ஒன்றியம். இதற்கு
எதிராக கலகக்குரல் எழுப்பியவர்தான்
இகக(மாலெ) மாவட்டக்
குழு உறுப்பினர்
தொ.கா.கோவிந்தசாமி.
இதனால் ஆத்திரமடைந்த
ஆதிக்க சாதியினர்
கந்தர்வக்கோட்டை
கடைவீதியிலேயே
இவரைத் தாக்கினர்.
இரும்புக்
குழாய்கள் கொண்டு
தாக்கப்பட்ட இவர்
கால் எலும்புகள்
முறிந்து பல மாதம்
மருத்துவமனையில்
சிகிச்சை பெற்று
மீண்டு வந்தார்.
நடந்து முடிந்த
ஊராட்சி மன்றத்
தேர்தலில் ஆதிக்க
சக்திகளுக்கெதிராக
போட்டியிட்டு
பெரியகோட்டை ஊராட்சி
மன்றத் தலைவரானார்.
பெரியகோட்டை
ஊராட்சி மன்ற எல்லைக்குட்பட்ட
அழகேரி அம்மன்
கோவிலில் வருடாவருடம்
‘மது எடுக்கும்
திருவிழா’ நடக்கும். இது
ஒரு வகை கஞ்சியை
வீட்டில் தயாரித்து
கலையத்தில் முளைப்பாரியுடன்
எடுத்து வந்து
சாமி கும்பிடும்
திருவிழா.
இது நாள்
வரை தலித் தவிர
மற்ற அனைத்து பிற்பட்ட
சாதியினரும் மதுவை
கோவிலுக்கு எடுத்துச்
சென்று தேங்காய்
உடைத்து வழிபட்டு
வந்தனர். தலித்
மக்கள் அதே தினத்தில்
அவரவர் காலனி தெருக்களில்
மது கலையத்தை ஓரிடத்தில்
வைத்து வழிபட வேண்டும்.
பெரியகோட்டை
அழகேரி அம்மன்
கோவிலுக்கு உட்பட்ட
பகுதியாக பெரியகோட்டை,
நம்புரான்பட்டி,
வீரடிப்பட்டி
ஆகிய தலித் கிராமங்கள்
வருகின்றன. இந்த
எல்லா ஊர்களிலும்
துடிப்பாக செயல்படும்
இகக(மாலெ) கட்சி
கிளைகளும், முன்னணிகளும்
உண்டு.
இம்முறை திருவிழா
அறிவிக்கப்பட்டவுடன்
இப்பகுதி தலித்
இளைஞர்கள் மத்தியிலிருந்து
நாமும் கோவில்
சென்று வழிபட வேண்டும்,
இம்முறை இந்தத்
தீண்டாமைக்கு
முடிவு கட்ட வேண்டும்
என குரல் எழுந்தது.
இம்முறை அழகேரி
அம்மன் திருவிழாவில்
தலித்துகள் பங்கேற்பார்கள்
என்ற செய்தியும்,
இகக(மாலெ) அதற்கு
உறுதுணையாக நிற்கும்
என்ற செய்தியும்
பரவலாக பிரச்சாரம்
செய்யப்பட்டது.
பிற்படுத்தப்பட்ட
சமுதாய மக்களின்
ஆதிக்க பிரிவினர்,
இதை அனுமதிக்க
முடியாது என்ற
நிலை எடுத்தனர்.
இதனால் இந்தப்
பகுதியில் பதட்டமான
சூழல் ஏற்பட்டது.
வட்டாட்சியர்
அமைதிப் பேச்சுவார்த்தைக்கு
ஏற்பாடு செய்தார்.
தீண்டாமை ஒரு பாவச்
செயல், அதைக் கடைப்பிடிப்பவர்கள்
கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்
என பிரச்சாரம்
செய்யும் அரசாங்கம்
கோவில் வழிபாட்டு
விசயத்தில் கடைபிடித்து
வரும் தீண்டாமைக்கு
முடிவு கட்ட வேண்டும்
என்று இகக(மாலெ)
சார்பில் வாதிடப்பட்டது.
சாதி ஆதிக்க
சக்திகள் அனுமதிக்க
முடியாது என உறுதியான
நிலை எடுத்தனர்.
அரசு நிர்வாகத்தை
தம் பக்கம் நிறுத்திக்கொள்ள
ஆனதெல்லாம் செய்தனர்.
மந்திரிகள்,
நாடாளுமன்ற, சட்டமன்ற
உறுப்பினர்கள்,
நிர்வாகத்தில்
செல்வாக்குமிக்க
சக்திகள் என பலரையும்
பார்த்து திரட்டினர்.
தலித்துகளின்
வழிபாட்டு உரிமையை
நிலைநாட்ட வேண்டிய
வட்டாட்சியர்
திருவிழாவை ரத்து
செய்து உத்தரவிட்டார்.
ஆயிரக்கணக்கான
மக்கள் வழிபடும்
திருவிழா நின்று
போனதற்கு இகக(மாலெ)யும்,
தலித்துகளுமே
காரணம் என்று பிரச்சாரம்
செய்யப்பட்டது.
திருவிழாவை
ரத்து செய்வதும்
தலித் மக்கள் கோயிலுக்குள்
வருவதைத் தடுக்கும்
தீண்டாமை செயலே
என்றும், திருவிழா
நடக்க வேண்டும்,
அதில் தலித் மக்கள்
பங்கேற்க வேண்டும்
என்றும், திருவிழா
நிறுத்தப்பட்டதற்கு
இகக(மாலெ)வை
காரணமாக்காதே,
சாதி ஆதிக்கத்துக்கு
துணை போகாதே தலித்துகளின்
வழிபடும் உரிமையைப்
பறிக்காதே என்றும்
இகக(மாலெ) ஊரெங்கும்
சுவரொட்டி பிரச்சாரம்
மேற்கொண்டது. மாவட்ட நிர்வாகம்,
காவல்துறை தீண்டாமைக்கு
துணை போகிறதா என்ற
கேள்வி வலுவாக
எழுப்பப்பட்டது.
மாவட்ட நிர்வாகம்
முடிவு எடுத்தாக
வேண்டிய நிலைக்கு
தள்ளப்பட்டது.
பிறகு காவல்துறை
அதிகாரிகள், மாவட்ட
நிர்வாகத்தினர்
என பலசுற்று பேச்சுவார்த்தைகள்
நடத்தப்பட்டது.
இரு தரப்பினரும்
உறுதியாக இருந்த
நிலையில் திருவிழா
நடைபெறும் என்றும்,
இருதரப்பாருக்கும்
வேறு வேறு வழிபாட்டு
நேரம் ஒதுக்கப்படும்
என்றும் அறிவிக்கப்பட்டது. அதன்படி
மதியம் 2 மணியிலிருந்து
4 மணி வரை பிற்படுத்தப்பட்ட
சமூகம் என்றும்
மாலை 4 மணியிலிருந்து
6 மணி வரை தலித்
மக்கள் வழிபடுவார்கள்
என்றும் நிர்வாகம்
அறிவித்தது. தலித் மக்கள்
தரப்பில் இரு வேறு
நேரங்கள் ஒதுக்குவதில்
மாறுபாடு இருந்தாலும்,
முதலில் இம்முறை
கோவிலுக்குள்
செல்வது என்று
முடிவெடுக்கப்பட்டது.
இதையும் அதிகாரிகள்
எழுத்துபூர்வமாக
தராத நிலையில்,
அதிகாரிகள் இப்படிச்
சொல்லியிருப்பதாகவும்
அதை அமலாக்கவும்,
திருவிழாவுக்கு
வரும் தலித் மக்களுக்கு
பாதுகாப்பு அளிக்க
வேண்டும் என்று
வலியுறுத்தியும்
தலித் மக்கள் கிராமங்கள்
சார்பாக அரசு நிர்வாகத்துக்கு
கடிதங்கள் தரப்பட்டன.
இதையொட்டி
மூன்று கிராமங்களிலும்
போலீசார் குவிக்கப்பட்டனர். ரோந்து
பணியிலும் ஈடுபட்டனர்.
பதட்டமான சூழ்நிலை
நிலவியது. தலித் கிராமங்களில்
ஊர் கூட்டங்கள்
நடத்தப்பட்டு
மக்கள் வழிபடத்
தயாராகினர். திருவிழா தினத்தன்று
பெரியகோட்டை பெண்கள்
மதுகலையங்களுடன்,
முளைப்பாரியுடன்
அணிவகுத்து நின்றனர்.
மேள வாத்தியங்கள்
என ஊரே திருவிழா
கோலம் பூண்டது.
நம்புரான்பட்டியிலிருந்தும்,
வீரடிப்பட்டியிலிருந்தும்
மேளதாளங்கள், வான
வேடிக்கைகளுடன்
பெண்களும், ஆண்களும்,
சிறுவர்களும்
அணி வகுத்தனர்.
சைக்கிள், கார்,
ஆட்டோ, இருசக்கர
வாகனம் என்று ஆயிரக்கணக்கான
மக்கள் குடும்பத்துடன்
திரண்டனர். காவல்துறையினர்
அனைவரையும் ஓரிடத்தில்
நிறுத்தி பலத்த
பாதுகாப்புடன்
கோவிலுக்கு அழைத்துச்
சென்றனர்.
கோவிலுக்கு
செல்லும் வழியில்
மழை கொட்டியதால்
பிற்பட்ட சமூக
மக்கள் வசிக்கும்
தெரு வழியாக சிலர்
குறுக்கே செல்ல
முயன்றபோது அங்கே
இரு தரப்பாருக்கும்
‘தள்ளுமுள்ளு’ நடைபெற்றது.
காவல்துறையினர்
தலையிட்டு நிலைமை
மோசமடையாமல் பார்த்துக்
கொண்டனர். கோவிலிலும்
கூட முன்னடியான்
என்ற அய்யனார்
போன்ற சாமி உள்ளது.
அதோடு தலித்துக்கள்
திரும்பி விடலாம்
என சொல்லப் பார்த்தனர்.
ஆனால் அதையும்
தாண்டி சென்று
முதல்முறையாக
அழகேரி அம்மனுக்கு
தேங்காய் உடைத்து
வழிபாடு நடத்தப்பட்டது.
தலித் மக்களின்
உரிமை நிலைநாட்டப்பட்டது.
மொத்த நிகழ்விலும்
இகக(மாலெ) கட்சிக்காரர்கள்
வழிபாடு நடத்தாமலும்,
மத அடையாளங்கள்
எதுவும் இல்லாமல்,
தலித்துகளின்
வழிபாட்டு உரிமைக்காக
நின்றதை அனைத்து
சமூக மக்களும்
உன்னிப்பாக கவனித்தார்கள்.
ஆயிரக்கணக்கில்
குடும்பம், குடும்பமாக
தலித்துகளின்
அனைத்து தட்டு
மக்களும் கூடியதால்
இயல்பாக பதட்டம்
தணிந்து மக்கள்
குதூகலிப்போடு,
மகிழ்ச்சியாகக்
கொண்டாடினார்கள்.
கோவிலைச் சுற்றியுள்ள
பரந்த பகுதியில்
அமர்ந்து கலையத்தில்
கொண்டு வந்திருந்த
மதுவை அருந்தி
மகிழ்ந்தார்கள்.
மிகப்பெரிய ஆலமரத்தில்
தலித் சிறுவர்கள்
ஊஞ்சலாடியும்,
அங்கே திடீரென
முளைத்த பலூன்
கடைகளில் பலூன்
வாங்கியும், அய்ஸ்கிரீம்
கடைகளில் அய்ஸ்கிரீம்
சாப்பிட்டும்
புதுவகை சுதந்திரத்தை
அனுபவித்து புதுவிதி
செய்தார்கள்.
- தேசிகன்
*********
6
2014 மக்களவை
தேர்தலுக்குத்
தயாராகும் திடீர்
போராளிகள்
அய்முகூ
அரசு எதிர்ப்புப்
போராளியாக மட்டுமே
இருந்த ஜெயலலிதா
திடீரென ‘பெருநிறுவன
எதிர்ப்புப் போராளியாக’ உரு வெடுத்தார். இயற்கை
எரிவாயு விலை உயர்வு
பற்றிய அவருடைய
அறிவிப்பு இடதுசாரி
பத்திரிகைகளில்
வெளியிடப்படும்
செய்தி போலவே இருந்தது.
இயற்கை எரிவாயு
விலை உயர்வால்
ஒரு பெருநிறுவனம்
மட்டுமே லாபம்
அடையும் என்றும்
அதற்காக மட்டுமே
அய்முகூ அரசாங்கம்
விலையை உயர்த்துவதா
கவும் சொன்னவர்,
அந்தப் பெருநிறுவனம்
ரிலையன்ஸ் என்று
மட்டும் சொல்லவில்லை.
தமிழ்நாட்டில்
கருணாநிதி ஆட்சியில்
இருந் தால் கருணாநிதி
பெயரை, ஜெயலலிதா
ஆட்சியில் இருந்தால்
ஜெயலலிதா பெயரை
சொல்லக் கூடாது
என்று எழுதப்படாத
விதி இருக்கிறது.
ஜெயலலிதா போன்ற
நவதாராள வாதக்
கொள்கை ஆட்சியாளர்களுக்கு
மரி யாதை மிகுதி
காரணமாக ரிலையன்ஸ்,
பிபிஎன் போன்ற
பெயர்களை சொல்லக்
கூடாது என்ற விதி
இருக்கக் கூடும்.
ரிலையன்ஸ் பெயரைச்
சொல்லாத ஜெய லலிதா,
ஏப்ரல் 2014 விலையை
மாற்றியமைக்க
இன்றைய அரசுக்கு
அதிகாரமில்லை,
எனது ஆதரவுடன்
அமையவிருக்கும்
அடுத்த மத்திய
அரசு அதைப் பார்த்துக்
கொள்ளும் என்றும்
சொன்னார். துணிச்சலுக்குப்
பெயர் போனவர் உண்மையைச்
சொல்லிவிட்டார்.
அய்முகூ அரசு பற்றி
அவர் காட்டும்
எதிர்ப்பெல்லாம்
அந்த இடத்தில்
தான் அமர்ந்து
அந்தக் கொள் கைகளை
தான் அமலாக்க வேண்டும்
என்பதும் அந்தக்
கொள்கைகளை அமலாக்குவதில்
அய்முகூவுக்கு
இருக்கும் போதாமையை
தனது ஆதரவுடன்
அமையும் ஆட்சிதான்
ஈடுகட்டும் என்பதும்
அய்முகூ அரசு சிக்கியிருக்கும்
கொள்கை முடக்குவாதத்தில்
இருந்து தான் மட்டுமே
அந்தக் கொள்கைகளைக்
காப்பாற்ற முடியும்
என்றும் செய்தி
சொல்கிறார். 2023 நோக்கிய
அவருடைய லட்சியப்
பார்வை தனி யாரை
கொழுக்கச் செய்வது
என்ற செய்தியை,
மின்உற்பத்தி
தனியார்மயம், கூடன்குளம்,
அத்தியாவசியப்
பொருட்கள் விலை
உயர்வு என ஏற்கனவே
போதுமான அளவுக்கு
பதியச் செய்துவிட்டதால்
பெருநிறுவனங்களுக்கு
அச்சமில்லை.
2014ல் அமையும்
அரசு பார்த்துக்
கொள் ளும் என்று
ஜெயலலிதா உறுதியாகச்
சொல்ல அய்முகூ
அரசாங்கமும் இப்போதைக்கு
அந்த இயற்கை எரிவாயு
விலை உயர்வு இல்லை
என்று தற்காலிகமாக
நிறுத்தி வைத்துள்ளது.
ஜெயலலிதா அறிவிப்பை
ஓரளவுக்காவது
சமன் செய்ய வேண்டும்
என்பதால், ரிலையன்ஸ்
ஒப்புக்கொண்ட
உற்பத்தியை தந்த
பிறகே விலை ஏற்றம்
என்று முதலில்
சொல்லிவிட்டு
மறுநாள், அதுவும்
இப்போது இல்லை
என்று சொல்லிவிட்டது.
இதனால் இப்போதைக்கு
ரிலையன்சுக்கு
எந்த நட்டமும்
இல்லை.
அணுசக்தி
தயாரிக்கும் நாட்டில்
அரிசிக்கு வழியில்லை
என்பதுதான் உணவுப்
பாதுகாப்பு அவசரச்
சட்டம் சொல்லும்
செய்தி. அய்முகூ
ஆட்சியாளர்கள்
அதை உலகிலேயே மிகப்பெரிய
நலநடவடிக்கை என்று
கொண்டாடுகிறார்கள்.
65 ஆண்டுகளுக்கும்
மேலான சுதந்திர
இந்திய ஆட்சியாளர்கள்
இனிதான் உணவுப்
பாதுகாப் பையே
உறுதி செய்யப்
போகிறார்கள்.
இதற் கான மானியத்தை
நினைத்தால்தான்
தூக்கமே வருவதில்லை
என்று நேற்றைய
நிதி அமைச்ச ராக
இருந்து சொன்ன
இன்றைய குடியரசுத்
தலைவர் அவசர சட்டத்துக்கு
ஒப்புதல் தந்தி
ருக்கிறார். உண்மையில்
இந்த அவசரச் சட்டம்
உணவுப் பாதுகாப்பை
ஓழித்துவிடும்
என்று நாடு முழுவதும்
எதிர்ப்பு எழுந்து
கொண்டிருக் கிற
வேளையில், ஜெயலலிதா
அந்த எதிர்ப்பி
லும் தன் இடத்தை
பதிவு செய்கிறார்.
“தமிழகத்தில்
மற்ற மாநிலங்களைக்
காட்டிலும் பொதுவிநியோகம்
சிறப்பாகச் செயல்படுகிறது. தமிழகத்தில்
உள்ள 1.95 கோடி குடும்ப
அட்டைகளில் 1.84 கோடி
குடும்ப அட்டைதாரர்கள்
அரிசி ரேசன் கடை
களில் வாங்குகிறார்கள்.
தமிழகத்தில்
20 கிலோ அரிசி இலவசமாக
வழங்கப்படுகிறது.
அதனால், ஆண்டிற்கு
சுமார் 4800 கோடி ரூபாய்
மானியம் தமிழக
அரசால் வழங்கப்படுகிறது.
புதிய உணவுப்
பாதுகாப்புச்
சட்டம் அமலுக்கு
வந்தால் இன்னும்
கூடுதலாக 1800 கோடி
ரூபாய் செலவாகும்.
அதனால், மத்திய
அரசு தமிழகத்திற்கு
வழங்கும் பங்கைக்
குறைக்கக் கூடாது.
புதிய சட்டத்தில்
இருந்து விலக்கு
வேண்டும். புதிய சட்டம்
பெரும் குழப்பத்தை
ஏற்படுத்தும்,
மாநில அரசின் உரிமைகளில்
தலையிடும் செயல்
இது” என்று அவருடைய
அறிவிப்பு சொல்கிறது.
பொது
விநியோகத் திட்டத்தில்
தமிழகம் மற்ற மாநிலங்களுடன்
ஒப்பிடும்போது
சிறப் பாக செயல்படுகிறது
என்பது தமிழக மக்கள்
நிறுவியிருக்கிற
உண்மை. அது ஜெயலலிதா
அர சாங்கத்தின்
சாதனை அல்ல. வருமானத்துக்கு
ஏற்றபடி விதவிதமான
ரேசன் அட்டை என்று
சொல்லி விதவிதமான
அட்டைகளுக்கு
வித விதமான விலையில்
விதவிதமான அளவு
அரிசி என்று சொல்லி
தமிழ்நாட்டின்
கிராமப்புறங்க
ளிலும் நகர்ப்புறங்களிலும்
விதவிதமான எதிர்ப்புக்களைச்
சந்தித்து ஆட்சியை
இழந்தவர் ஜெயலலிதா.
தமிழக பெண்கள்
ரேசன் கடை களை
இழுத்துப் பூட்டினார்கள்.
பொது விநி யோகத்தில்
கைவைப்பது தங்கள்
ஆட்சிக்கு தாங்களே
குழிதோண்டிக்
கொள்வதற்கு சமம்
என்று தமிழக மக்கள்
ஆட்சியாளர்களுக்கு
பல சந்தர்ப்பங்களில்
அழுத்தம் திருத்தமாக
உணர்த்தியிருக்கிறார்கள்.
அதனால் தமிழ்நாட்
டின் பொதுவிநியோகம்
ஒப்பீட்டளவில்
சிறப் பாகத்தான்
செயல்படும்.
தமிழ்நாட்டில்
அரிசி விலை அறுபது
ரூபாயை எட்டிவிட்டது. பருப்பு,
எண்ணெய் என கையில்
பிடிக்கும் விலையில்
எந்த உணவுப் பொருளும்
தமிழ்நாட்டில்
கிடைப்பதில்லை.
மலிவு விலை
அரிசி, காய்கறி
விற்க ஏற்பாடு
செய்துள்ள ஜெயலலிதா
விலைக்குறைப்புக்கு
ஏற்பாடு எதுவும்
செய்யவில்லை.
மத்திய அரசின்
மக்கள் விரோதக்
கொள்கைகளால் மக்கள்
துன்புறுவதாகச்
சொல்லும் ஜெயலலிதா,
தமிழ் நாட்டில்
மக்கள் ஆதரவுக்
கொள்கைகளை அமலாக்குவதை
யார் தடுத்தார்கள்?
வெளிச் சந்தையிலும்
அரிசி இருபது ரூபாய்க்குத்தான்
என்று ஜெயலலிதா
சொல்வாரா? கூட்டுறவு கடைகளில்
கிடைக்கும் அதே
விலையில் வெளிச்
சந்தையில் காய்கறிகள்
கிடைக்குமா? 8 கோடி தமிழர்களின்
உணவுத் தேவையை
இந்த தற்காலிகத்
திட்டங்கள் நிரந்தரமாகத்
தீர்த்து விடாது.
அவர்கள் கழுத்தை
முறிக்கும் விலை
உயர்வை தடுத்துவிடாது.
ஜெயலலிதா எடுத்
துள்ள இந்த நடவடிக்கை
வெளிச்சந்தை விலையைக்
கட்டுப்படுத்த
என்னால் முடியாது
என்று அவர் ஒப்புக்
கொள்வதாகத்தான்
இருக் கிறதே தவிர
அதைக் கட்டுப்படுத்தும்
நோக் கம் கொண்டதல்ல.
உணவுப்
பாதுகாப்பு அவசரச்
சட்டத்தில் இருந்து
தமிழ்நாட்டுக்கு
மட்டும்தான் விலக்கு
கேட்கிறார் ஜெயலலிதா. இயற்கை
எரிவாயு விலையை
2014ல் எங்களது மத்திய
அரசு நிர்ண யித்துக்
கொள்ளும் என்று
சொன்னவர், 2014ல் எங்களது
ஆட்சி இலக்கு வைத்த
பொது விநியோகம்
இல்லாமல் தமிழ்நாட்டில்
உள்ளது போல் நாடு
முழுவதும் அனைத்தும்தழுவிய
பொது விநியோகத்
திட்டம் கொண்டு
வரும் என்று சொல்லவில்லை.
தமிழ்நாட்டில்
தனது ஆட்சியைக்
காப்பாற்றிக்
கொள்ள பொது விநி
யோகத்தில் கைவைக்க
முடியாது என்பதுதான்
ஜெயலலிதாவின்
கரிசனமே தவிர நாட்டு
மக்க ளின் உணவுப்
பாதுகாப்புக்கு
ஆபத்து ஏற்படு
வது பற்றி அவருக்கு
அக்கறை இல்லை.
கிடைக்கும்
பந்துகளை எல்லாம்
அடித்துக் கொண்டிருக்கிறார்
ஜெயலலிதா. ஜெயலலிதா
மீதான ஊழல் வழக்கில்
விசாரணை முடிந்து
அடுத்த கட்டத்துக்குக்
காத்திருக்கிறது.
தண் டனை பெற்ற
சட்டமன்ற நாடாளுமன்ற
உறுப்பினர்கள்
பதவி இழப்பார்கள்
என்ற சமீ பத்திய
தீர்ப்பு எதிர்ப்பின்றி
அமலானால், ஜெய
லலிதா குற்றவாளி
என்று அறிவிக்கப்பட்டு
தண்டனைக்கு உட்படுத்தப்படுவாரானால்
அவர் அடித்த எந்த
பந்துக்கும் பயனின்றி
போகும். தமிழக
மக்கள் ஒப்பீட்டளவில்
மூட நம்பிக்கைகளுக்கும்
ஆளாவதில்லை. பெங்களூரு
நீதிமன்றத்தின்
தீர்ப்பை விட தங்கள்
தீர்ப்பு வலுவானதாக
இருக்கும் என்ற
நம்பிக்கை அவர்களுக்கு
உண்டு.
*********
7
ஒரு தொழிலாளியின்
கல்லூரிக் கனவும்
நிஜமும்
நான்
எ.சேகர். டிஅய்டிசி
இந்தியா தொழிலாளி.
25 வருடங்களாக
வேலை செய்கிறேன்.
இன்னும் சில
ஆண்டுகளில் ஓய்வு
பெற்று விடுவேன்.
என் குடும்பத்தில்
எல்லோரும் மாலெ
கட்சியில் இருக்கிறோம்.
கல்லூரி படிப்பு
கிலோ என்ன விலை
என்று கேட்கும்
நிலையில் உள்ள
எங்க வீட்டில்
எனது இரண்டாவது
மகன் முதல் பட்டதாரி
ஆகிவிடுவார் நம்புகிறோம்.
எனது
இரண்டாவது மகன்
சமீபத்தில் 12ம்
வகுப்பு தேர்ச்சி
பெற்றார். முதல்
மகன் 10ம் வகுப்பு
படிக்கும் போது
அம்பத்தூரில்
உள்ள ராமசாமி பள்ளியில்
ஆசிரியர் சாதி
வெறியுடன் நடக்கிறார்
என புகார் செய்ததற்காக
பழி வாங்கப்பட்டார்.
எனது இரண்டு
மகன்களும் பள்ளியில்
இருந்து வெளியேற்றப்பட்டனர்.
எனது
இரண்டாவது மகன்
12ம் வகுப்பில்
65 சதவீதம் மார்க்குகள்
மட்டுமே பெற முடிந்தது. நான்
ஓய்வு பெறுவதற்குள்
ஏதாவது ஒரு படிப்பு
முடித்துவிட்டு
அவர் வேலைக்குச்
செல்ல வேண்டியிருக்கலாம்.
எனவே,
இஞ்சினியரிங்,
பெரிய படிப்பெல்லாம்
நினைக்க முடியாது,
கலை, அறிவியல்
கல்லூரியில் இடம் கிடைக்குமா
எனத் தேடினோம்.
ஜூன் மாதம்
மாநிலக் கல்லூரி,
நந்தனம், பச்சையப்பா,
கந்தசாமி, இந்து
கல்லூரி என பல
கல்லூரிகளில்
விண்ணப்பங்கள்
வாங்கி பூர்த்தி
செய்து அனுப்பினோம்.
என் மகனுக்கு
பி.எல்., கிடைக்கும்
முயற்சி செய்யுங்கள்
என்று பலரும் சொன்னார்கள்.
சிலர் பி.எ.,
பொருளி யல், வரலாறு
ஏதாவது கேட்டுப்
பாருங்கள் என்று உண்மையாகச்
சொன்னார்கள்.
எங்களுக்கு
இதெல்லாம் புரியவில்லை. விண்ணப்பம்
போட்ட காலேஜ் எல்லாம்
இன்டர்வியூ அனுப்புவார்கள்.
போய் இடம் கேட்க
வேண்டும். அதற்கு பெயர்தான்
கவுன்சிலிங் என
எனது துணைவியாரும்
மகனும் நினைத்துக்
கொண்டுள்ளார்கள்.
ஆனால்,
எந்த இண்டர்வீயூ
அழைப்பும் வரவில்லை. கட்சித்
தோழர்கள் என்னாச்சு
காலேஜ் படிப்பு
என கேட்டபோது இண்டர்
வியு வரவில்லை
என்று சொன்னோம்.
எந்தெந்த காலேஜ்
போட்டீர்கள் என்று
கேட்டுவிட்டு
எங்கள் பட்டியலைப்
பார்த்து இதற்கெல்லாம்
இண்டர்வியூ வராது,
நீங்கள் போய் பாருங்கள்
என சொன்னார்கள்.
நான் 3 நாள் லீவு
போட்டு அலைந்தேன்.
என் துணைவியார்
ஒரு வாரம் அலைந்தார்.
விண்ணப்பம்
போடுவதற்கே ஒரு
வாரம் சுத்தினார்கள்.
இப்போது மீண்டும்
அலைச்சல் என்று
கவலையாக இருந்தது.
முதலில்
பட்டாபிராமில்
உள்ள இந்து காலேஜ்க்கு
போனோம். எங்களுக்கு
அதுதான் அருகில்
உள்ளது. 4, 5 மணி
நேரம் காத்திருந்து
எங்கள் விண்ணப்பத்தின்
நிலைமையை தெரிந்து
கொள்ள முடிந்தது.
ஓர் உதவியாளர்
எங்களுக்கு விவரம்
சொல்லி உதவினார்.
பக லில் படிக்கும்
படிப்பெல்லாம்
விற்றுவிட்டது,
அந்த சீட்டெல்லாம்
விலை அதிகம், அதனால்,
நிர்வாகமே நடத்துகிற
மாலை நேர கல்லூரியில்
சேருங்கள், அதில்தான்
கிடைக்க வாய்ப்பு
என்றார். இந்த
காலேஜில்தான்
கலை, அறிவி யல்
படிப்புக்கு ரொம்ப
குறைவான பீஸ் எனச்
சொன்னார்கள்.
இதற்கே பல ஆயிரம்
சொன் னார்கள்.
சரி இதை பிறகு
பார்க்கலாம் என்று வந்துவிட்டோம்.
என்ஜினியரிங்,
டிப்ளமோ போன்ற
படிப் பெல்லாம்
பல இலட்சங்கள். கலை,
அறிவியல், படிப்பெல்லாம்
வாங்க வேண்டுமென்றால்
சில இலட்சங்கள்
என்ற விவரம் கொஞ்சம்
கொஞ்சமாக புரிய
ஆரம்பித்தது.
கந்தசாமி
கல்லூரிக்கு போனோம். போன
உடனேயே இரண்டு
நாள் கழித்து வாருங்கள்
என்றனர். எங்கள்
விண்ணப்பம் பற்றி
கேட்ட போது கண்டுகொள்ளவில்லை.
2 நாட்கள் கழித்து
போய் கேட்டோம்.
அந்த சீட்டெல்
லாம் எப்போதோ முடிந்துவிட்டது
என்றார்கள். நீங்கள்தானே
சொன்னீர்கள் இரண்டு
நாள் கழித்து வாருங்கள்
என்று என தயங்கிய
போது இதெல்லாம்
ஜூன் 11ம் தேதியே
முடிந்து விட்டது,
எந்த சீட்டும்
இல்லை என வெளியே
அனுப்பிவிட்டார்கள்.
வெளியே
வரும்போது ஓர்
அதிகாரி எங்களை
நிறுத்தி பச்சையப்பா
காலேஜ் போகிறீர்களா? நிர்வாக
சீட்டு வேண்டுமானால்
இருக்கு. இந்த
காலேஜூம், அந்த
காலேஜும் ஒரே நிர்வாகம்,
டிரஸ்ட்தான் எனச்
சொன்னார். சரி
எவ்வளவுதான் ஆகும்
என கேட்டதற்கு
பி.எ., பொருளாதாரம்,
வேண்டுமென்றால்
வருடத்திற்கு
30 ஆயிரம்,
எப்போது வேண்டு
மானாலும், போன்
செய்யுங்கள் வந்து
பாருங் கள் என்றார்.
இதற்கு
எந்த அப்ளிகேஷனும்
போட வேண்டியதில்லை
என்று சொன்னார்கள். உத்தரவாதமாக
சீட்டு கிடைக்குமா
எனக் கேட்டுவிட்டால்
அவர்களுக்கு கோபம்
வரும், வேறு எங்காவது
போய் பார்த்துக்
கொள்ளுங் கள் என
விரட்டி விடுவார்கள்,
இந்த பிரச் சனையை
பொறுத்தவரை கண்ணும்
கண்ணும், காதும்,
காதும் பொத்தி
வைத்துக்கொண்டு
பேசுகிற மாதிரி,
ரொம்ப சட்டம்,
ரசீது, அப்ளிகேஷன்
அந்த மாதிரி விஷயங்கள்
இந்த பிசினஸில்
கிடையாது, கிடைத்தால்
பாரு, இல்லையென்றால்
போ என்றார்கள்.
மாநிலக்
கல்லூரியில் காசெல்லாம்
கேட்க மாட்டார்கள்,
மார்க்கிருந்தால்
சீட் தருவார் கள்
என்று சொன்னார்கள். என்
துணைவியா ரும்,
மகனும் போனார்கள்.
அங்கே அடுத்த
வாரம், அடுத்த
வாரம் என இரண்டு
முறை திருப்பி
அனுப்பிவிட்டார்கள்.
இரண்டு நாள்
கழித்து வாருங்கள்
முடிவெடுத்து
சொல்கி றோம் என்றார்கள்.
பி.எ., பொருளாதாரம்தான்
கிடைக்கும் என
சொன்னார்கள். மூன்றாவது
முறையாக மாநிலக்
கல்லூரிக்கு போனபோது அதுவும்
முடிந்துவிட்டது
என்றார்கள்.
என் மகனுக்கும்
துணைவியாருக்கும்
சட்டப் படிப்பில்
இடம் கிடைத்துவிடும்
என்ற நினைப்பு
இருந்தது. இப்படியே
ரிசல்ட் வந்த பிறகு
2 மாதங்கள் அப்ளிகேஷன்
வாங்க, விசாரிக்க
என அலைந்து விட்டோம்.
அப்புறம் தான்
இனிமேல் சுற்றுவதில்
பலனில்லை எனப்
புரிந்தது.
போட்ட அப்ளிகேஷனுக்கு
பதில் வர வில்லை
என்ற விசயங்களை
புரிந்து கொள்வ
தற்கும், அதுபற்றி
எந்த பதிலும் வராது
என்று புரிந்து
கொள்வதற்கும்
நாங்கள் இரண்டு
மாதங்கள் அலைய
வேண்டியிருந்தது.
இந்த அலைச்சலுக்கும்,
தேடலுக்கும் எந்த
சம்பந்தமும் இல்லாத
விவேகானந்தா கல்லூரியில்
வேலை செய்யும்
தோழர் ஒருவரு டைய
மகன் ஏதாவது ஒரு
சீட்டு கேட்டுப்
பார்க்கிறேன்
என்று சொல்லி பி.எ.,
வரலாறு படிக்கட்டும்
எனச் சேர்த்துவிட்டார்.
பி.ஏ., வரலாறு
யாருக்கும் பிடிக்காத
ஒரு பாடப் பிரிவு.
நமக்கு பெரிதாக
எதுவும் கிடைத்து
விடவில்லை, கிடைத்ததை
வைத்துக் கொண்டு
படிக்கப் பார்ப்போம்
என எனது மகனையும்
தயார் செய்தேன்.
இது மாதிரி
படிப்புதான், இதுமாதிரி
ஒரு காலேஜ்தான்
எங்களைப் போன்ற
தொழிலா ளர்களின்
பிள்ளைகளுக்கு
இன்று சாத்தியம்
என்பதை அனுபவப்பூர்வமாக
உணர்ந்து கொண்டேன். இரண்டு
மாதங்களில் தமிழக
அரசாங்கமும், கல்வித்துறையும்
எங்களுக்கு நேருக்கு
நேராக இதை புரிய
வைத்தன.
அரசுக் கல்லூரியில்
படித்தவர்கள்தான்
இன்று பெரிய மனிதர்களாக
இருக்கிறார்கள்
என்று சொல்லி அரசுக்
கல்லூரிகளின்
இடங் களைக் கூட
விற்று அதை ஒரு
வியாபாரமாக ஆக்கிவிடுகின்றன
அரசு கல்லூரி நிர்வாகங்கள்.
குமாஸ்தா
படிப்புக்கு எங்கு
படித்தால் என்ன
இருக்கிறது? எப்படியாவது
மூன்றாண்டு கல்லூரி
முடித்துவிட்டு
சமூகத்தில் ஒரு
மனித னாக எனது
மகன் வெளியில்
வருவார். சமூகத்தை
மாற்றுவதற்காக
விஞ்ஞான அறிவை
அவருக்கு நிச்சயம்
காசு கொடுத்து
வாங்க வேண்டியதில்லை
என்பதும், போராடி
வாங்க வேண்டும்
என்பதும் அப்போது
புரியும். குடும்பத்துடன்
மீண்டும் போராட்டங்களில்
சந்திக்கலாம்
தோழர்களே.
பின்குறிப்பு:
ஒரு மகனையாவது
எப்படி யாவது பட்டதாரி
ஆக்கிவிட வேண்டும்
என்ற கனவுடன் இருந்த
நானும் எனது துணைவியா
ரும் எங்கள் மகனை
கல்லூரியில் சேர்த்த
அனுபவம் பற்றிய
இந்தக் கட்டுரையை
யாரா வது எப்படியாவது
தமிழ்நாட்டின்
முதலமைச் சர் ஜெயலலிதா
அவர்களின் பார்வைக்குக்
கொண்டு செல்ல முடியுமா?
- எ.சேகர்
*********
8
இந்தியா ஒரு
ஜனநாயக நாடு!
இங்கு யாரும்
என்ன செய்ய வேண்டும்
என்பதை அரசு
சொல்லும்!
ஷீதல்
சாதே ஜூன் 27 அன்று
பிணையில் விடுதலை
செய்யப்பட்டார். எட்டு
மாத கர்ப்ப காலத்தை
முடித்துவிட்டு
எந்த நேரமும் குழந்தை
பிறக்கக் கூடும்
என்ற நிலையில்தான்
அவருக்கு பிணை
தர மகாராஷ்டிரா
அரசாங்கம் அனுமதித்தது.
பிணையில் விடுதலையாகும்
முன்பு இரண்டு
மாதங்கள் அவர்
சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
சட்டவிரோத
நடவடிக்கைகள்
தடுப்புச் சட்டத்தில்
மாவோயிஸ்ட் என்ற
சந்தேகத்தின்
பேரில் அவர் சிறையில்
அடைக்கப்பட்டார்.
மகாராஷ்டிரா
காவல்துறை அவரை
தேடிப்பிடிக்கவில்லை.
ஷீதல் தன் இணையருடன்
தானாகத்தான் ஏப்ரலில்
கைதானார்.
28 வயதான
ஷீதல் மகாராஷ்டிராவில்
உள்ள கபீர் கலா
மன்ச் என்ற கலைக்குழுவின்
தலைவர். தலித்.
மகாராஷ்டிராவின்
கத்தார் என்று
கூட அவர் அழைக்கப்படுகிறார்.
தலித் மக்களுக்கு
இழைக்கப்படும்
அநீதிக்கு எதிராக,
அரசாங்கத்தின்
மீதுள்ள சீற்றத்தின்
வெளிப்பாடாக மேடைகள்
ஏறி பாடல்கள் பாடியதுதான்
அவர் செய்த குற்றம்.
அவரைப் போல
அதே குற்றம் புரிந்த
கலைக்குழுவைச்
சேர்ந்த மூன்று
பேர் இன்னும் சிறையில்
உள்ளனர்.
2002ல் குஜராத்
மனிதப்படுகொலைகள்
நடத்தப்பட்டபோது
உருவாக்கப்பட்ட
கபீர் கலா மன்ச்,
பின்னர், தலித்
மக்கள் மீதான கொடுமைகளுக்கு
எதிராக கலை நிகழ்ச்சிகள்
நடத்தும் குழுவாக
மாறியது. அம்பேத்கர்,
மார்க்ஸ் கருத்துக்கள்
அந்தக் கலைக் குழுவுக்கு
ஏற்புடையவையாக
இருந்தன.
கயிர்லாஞ்சியில்
தங்களுக்குச்
சொந்தமான நிலத்தை
விற்க மறுத்த ஒரு
தலித் குடும்பத்தை,
அந்த குடும்பத்தின்
மூத்த ஆணைத் தவிர
மற்றவர்களை மொத்த
கிராமமுமாகச்
சேர்ந்து சித்திரவதை
செய்து படுகொலை
செய்தபோது மகாராஷ்டிராவில்
எழுந்த எதிர்ப்பின்
ஒவ்வொரு நிகழ்ச்சியிலும்
கபீர் கலா மன்ச்சின்
பங்கு இருந்தது.
அப்போது முதலே,
மாவோயிஸ்ட் தொடர்பு
இருப்பதாகச் சொல்லப்படும்
அமைப்புக்கள்
பட்டியலில் கபீர்
கலா மன்ச் பெயரையும்
மகாராஷ்டிரா அரசாங்கம்
இணைத்துக் கொண்டது.
ஜெய்தாபூர்
அணுஉலை எதிர்ப்பு,
லவாசா ஊழல் எதிர்ப்பு
எனவும் கலைக்குழுவின்
நடவடிக்கைகள்
விரிந்தன.
ஏப்ரல்
2011 முதல் மகாராஷ்டிரா
அரசாங்கம் குழுவினரை
வேட்டையாடத் துவங்கியது. தடை
செய்யப்பட்ட மாவோயிஸ்ட்
கட்சி உறுப்பினர்
என்று சொல்லப்பட்டு
முதலில் இரண்டு
பேர் கைது செய்யப்பட்டனர்.
ஜூலை 2011ல் குழுவில்
இருந்த அத்தனை
பேர் மீதும் சட்ட
விரோத நடவடிக்கைகள்
தடுப்புச் சட்டத்தில்
வழக்குகள் பதிவு
செய்யப்பட்டன.
‘சமூகத்தில்
நிலவுகிற தவறுகளைச்
சுட்டிக்காட்டுவது,
அவற்றை மாற்ற வேண்டிய
தேவை இருப்பதை
வலியுறுத்துவது
ஆகியவற்றை, இந்திய
கம்யூனிஸ்ட் கட்சி
(மாவோயிஸ்ட்) உறுப்பினர்கள்
என்பதற்கான சான்றுகளாக
கருதுவதும், நீதிமன்றத்தை
ஏற்றுக்கொள்ளச்
செய்ய அந்தச் சான்றுகளைப்
பயன்படுத்துவதும்
வியப்பாக இருக்கிறது’ என்று
கைது செய்யப்பட்டவர்
களில் நான்கு பேருக்கு
பிணை வழங்கிய நீதிபதி
குறிப்பிட்டார்.
‘அவர்கள் மாவோயிஸ்ட்
சித்தாந்தத்தின்
அனுதாபிகளாக இருக்கலாம்,
ஆனால், அவர்கள்
யாரும் தடைசெய்யப்பட்ட
அமைப்பான இகக
(மாவோயிஸ்ட்) உறுப்பினர்கள்
அல்ல’ என்று சொல்லி
அவர்களுக்கு பிணை
வழங்கினார். இந்தப் பிணைகளுக்குப்
பிறகு ஷீதல் தனது
இணையருடன் தானாக
சரணடைந்தார்.
ஷீதல் விடுதலை
செய்யப்பட வேண்டும்
என்று வலுவான குரல்
எழுந்த பிறகே இப்போது
அவர் பிணையில்
விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
சிதம்பரம்
முன்வைத்த சட்ட
விரோத நடவடிக்கைகள்
தடுப்புச் சட்டம்
அரசின் ஒடுக்குமுறைக்கு
எதிரான நடவடிக்கைகளை
சட்டவிரோத நடவடிக்கைகள்
என்கிறது. ஷீதல்,
சோனு சோரி, ராகினி
என்று யாரும் அரசாங்கத்தை
எதிர்த்து ஒரு
வார்த்தை பேசினாலும்
அது சட்ட விரோதம்.
இந்தியா ஒரு
ஜனநாயக நாடு.
இங்கு யாரும்
என்ன செய்ய வேண்டும்
என்பதை அரசு சொல்லும்.
*********
9
தந்திக்கு
அஞ்சலி
தந்திக்கு
அஞ்சலி. இந்த
செய்தியுடன் இந்திய
மக்களுக்கு இனி
ஒரு தந்தி வர முடியாது.
தந்தி செத்துவிட்டது.
ஜூலை 15 முதல்
தந்தி சேவை இருக்காது.
புதியன புக
பழையன கழிகின்றன.
160 வருடங்களாக
இந்தியாவில் இருந்த
ஓர் அத்தியா வசிய
சேவையை அதன் தேவை
இருக்கும்போதே
முடிவுக்கு கொண்டு
வந்துவிட்டார்கள்.
முதலாளித்துவ
சமூகத்தில் தேவைக்கேற்ற
உற்பத்தி நடைபெறுவதில்லை. சந்தைக்கேற்ற
உற்பத்தியே நடைபெறுகிறது.
தேவையே இல்லாத
சேவை பல வழிகளிலும்
விற்கப்படும்;
தேவையான சேவையும்
சந்தைக்கு தேவை
இல்லை என்றால்
கிடப்பில் போடப்படும்.
சந்தைக்கு,
லாபத்துக்கு எது
தேவையோ, எது உதவுமோ
அதுவே நிற்கும்.
சந்தைக்கு,
லாபத்துக்கு அவசியம்
இல்லை என்றால்,
பரிவர்த்தனை மதிப்பு
இல்லை என்றால்
அதற்கு பயன்மதிப்பும்
இல்லை என்று காட்டப்படும்.
இன்று
ஃபேஸ்புக் என்றொரு
சேவை இருக்கிறது. உலகமெங்கும்
பிரசித்தி பெற்ற
சேவை. உலகெங்கும்
கடந்த மூன்று மாதங்களாக
100 கோடி பேருக்கும்
மேல் இந்த சேவையை
பயன்படுத்துகிறார்கள்.
2004ல் இந்த எண்ணிக்கை
வெறும் 10 லட்சமாக
இருந்தது. இந்தியாவில்
ஃபேஸ்புக் பயன்படுத்துபவர்கள்
எண்ணிக்கை மார்ச்
2012ல் 7 கோடியே 80 லட்சம்.
இந்த 7 கோடியே
80 லட்சம் பேர் ஃபேஸ்புக்
சேவையை பயன்படுத்த
வேண்டும் என்றால்
முதலில் மின்னஞ்சல்
முகவரி வேண்டும்.
மின்னஞ்சல்
முகவரி மூலம் அவர்கள்
ஃபேஸ்புக்கில்
தங்கள் பக்கத்தை
உருவாக்குகிறார்கள்.
பின்னர், அந்த
ஃபேஸ்புக் பக்கத்தில்
இருந்து இது எனது
பக்கம் என்று தெரிந்தவர்களுக்கு
எல்லாம் மின்னஞ்சல்
செய்தி அனுப்பி
எனது நண்பராகுங்கள்
என்று கேட்கிறார்கள்.
பிறகு தகவல்
பரிமாறிக் கொள்கிறார்கள்.
முன்பின் தெரியாதவர்களுக்கும்
செய்தி சொல்லலாம்தான்.
தெரிந்தவர்கள்
மத்தியில் தகவல்
பரிமாற்றம்தான்
பெரும்பாலும்
நடக்கிறது. சமீபத்தில்
நடந்த பல போராட்டங்களில்
ஃபேஸ்புக் பங்காற்றியதும்
உண்மையே. ஆனால்
ஃபேஸ்புக் மூலம்
மட்டுமே அது நடந்தது
என்றும் சொல்வதற்கில்லை.
ஃபேஸ்புக்
பயனற்றது என்று
சொல்வதல்ல இங்கு
வாதம். ஃபேஸ்புக்
இல்லாமலும் உலகம்
உய்யும், தகவல்
பரிமாற்றம் நடக்கும்
என்பதே வாதம்.
ஃபேஸ்புக்கை நீக்கி
தந்தி சேவையை தொடர
வேண்டும் என்பதும்
வாதமல்ல. வேறு
விதங்களிலும்
நடந்துவிடக் கூடிய
தகவல் பரிமாற்றத்தை
கவர்ச்சிகரமாக
முன்வைத்து, மிகப்பெரிய
மக்கள் தொகை பயன்படுத்தாத
ஒரு சேவையைக் கொடுத்து
ஃபேஸ்புக் நிறுவனம்
கொள்ளைகொள்ளையாய்
லாபம் பார்க்கிறது.
நாட்டில்
தந்தி இன்னும்
கூட தேவை. அதன்
பயன்பாடு அற்றுப்
போய்விடவில்லை.
சில சந்தர்ப்பங்களில்
தந்தி மிகமிக அவசியம்.
அரசு அலுவலக
செயல்பாடுகளில்,
ராணுவம், நீதிமன்றம்
தொடர்பான தொடர்புகளில்,
இன்னும் தந்தியே
அதிகாரபூர்வமான
ஆதாரமாக கணக்கில்
கொள்ளப்படுகிறது.
கிராமப்புறங்களில்
உள்ள சாமான்யர்களுக்கு
தந்தி சேவை இன்னும்
கூட தேவை. 2006 - 2007ல்
கூட 79 லட்சம் தந்திகள்
அனுப்பப்பட்டுள்ளன.
தந்தி அனுப்புவது
இன்றும் கூட ஒடுக்கப்படும்
பிரிவினரின் போராட்ட
வடிவமாக இருக்கிறது.
தந்தி சேவை
தொடர வேண்டும்
என்று பிஎஸ்என்எல்
ஊழியர்கள் மட்டும்
போர்க்குரல் எழுப்புகிறார்கள்.
பிஎஸ்என்எல்
நிறுவனத்தை நட்டமாக்க
அனைத்து முயற்சிகளையும்
விடாமல் எடுத்துக்
கொண்டிருக்கும்
மத்திய அரசு, தந்தி
சேவையில் நட்டம்
ஏற்படுவதாகவும்
அதனால் அதை நிறுத்திவிடுவதாகவும்
சொல்கிறது. தந்தி சேவையில்
தனியார் இல்லை.
எனவே அந்த சேவை
தேவையில்லை. இதை விட அய்முகூ
அரசாங்கத்துக்கு
வேறு உன்னத காரணம்
இல்லை.
*********
10
இஷ்ரத் ஜெஹானுக்கு நீதிகோரும்
போராட்டம் தீவிரப்படுத்தப்பட வேண்டும்
குஜராத் காவல்துறையினரும்,
உளவுத் துறை அதிகாரிகளும்
இணைந்து 19 வயதே
ஆன இஷ்ரத் ஜெஹான்
மற்றும் அவருடன்
3 பேரை நஞ்சு கொடுத்தும்,
துப்பாக்கியால்
சுட்டும் கொன்ற
போலி மோதல் வழக்கில்
மத்திய புலனாய்வுத்
துறை குற்றப்பத்திரிகை
தாக்கல் செய்திருப்பது,
நீதிக்கான பாதையில்
காலங்கடந்த, அரைகுறை
நடவடிக்கையாகும்.
குஜராத் காவலர்கள்
சிலரின் வாக்கு
மூலங்கள், இந்தக்
கொடூரக் கொலையின்
அசிங்கமான விவரங்களை
நிரூபணம் செய்வதாக
உள்ளன.
10 ஆண்டுகளுக்கு
முன்னர், குஜராத்
காவல்துறை இஷ்ரத்
ஜெஹான் மற்றும்
3 பேரின் இறந்த
உடல்களைக் காட்டி,
அவர்கள் நரேந்திர
மோடியை கொலை செய்ய
குறி வைத்தவர்கள்
என்றும், காவல்துறையுடன்
நடந்த மோதலில்
கொல்லப்பட்டார்கள்
என்றும் சொன்னது.
அதை தொடர்ந்து,
2009ல் அகமதாபாத்
பெருநகர நீதித்துறை
நடுவர் எஸ்.பி.தமங்
இதை போலி மோதல்
என்று குறிப்பிட்டார். 2011ல்,
நீதிமன்றத்தால்
நியமிக்கப்பட்ட
சிறப்பு புலனாய்வுப்
பிரிவும் (எஸ்அய்டி)
இந்த மோதல் திட்டமிட்டு
நடத்தப்பட்டது
என்று முடிவு செய்தது.
தமங் அறிக்கை,
எஸ்அய்டி அறிக்கை,
நீதிமன்ற உத்தரவின்படி
நடைபெற்ற சிபிஅய்
விசாரணை அறிக்கை
ஆகிய எல்லாமே,
இது வரை இஷ்ரத்தின்
தாயார் மற்றும்
குடும்பத்தி னர்
சொல்லிவந்த, ரத்த
வெள்ளத்தில் நடை
பெற்ற கொலைதான்
என உறுதி செய்திருக்கின்
றன. கொலை செய்வதற்கு
முன்னரே எழுதப்
பட்ட முதல் தகவல்
அறிக்கைக்கு பொருந்திப்
போகிறவாறு கொலை
நிகழ்த்தப்பட்டது.
மேலும், குஜராத்
உள்துறை அமைச்சர்
அமித் ஷா (இன்றைய
உத்திரபிரதேச
மாநில பிரச்சார
பொறுப்பாளர்) மற்றும்
முதல்வர் நரேந்திர
மோடி ஆகியோர் கொலைக்கு
பச்சைக் கொடி காட்டியதை
நோக்கியும் நீள்கிறது.
காவலர் களில் ஒருவர்
நடத்திய ரகசிய
படமெடுக்கும்
நடவடிக்கை உட்பட
சிபிஅய்யிடம்
காவலர் கள் கொடுத்த
வாக்குமூலங்கள்
என எல்லாம், இதில்
ஈடுபட்ட குஜராத்தின்
உயர்காவல்துறை
அதிகாரிகள், உளவுத்
துறை உயர்அதிகாரிகள்
ஆகிய அனைவரும்
அமித் ஷா மற்றும்
நரேந்திர மோடிக்கு
மிகவும் நெருக்கமானவர்கள்
என்பதை வெளிப்படுத்தின.
இந்தக்
குறிப்பிட்ட மோதல்
படுகொலை, சுட்டுத்
தள்ளுவதில் மகிழ்ச்சி
பெறும் சில காவலர்களின்
செயல் மட்டுமல்ல
என்பது தெளிவானது. இந்தக்
கொலைக்குப் பின்னால்,
பரந்த ‘அரசியல்
சதி’ இருப்பதற்கான
எல்லா அறிகுறிகளும்
இருக்கின்றன.
குஜராத்தில் தொடர்ந்து
நடைபெற்ற சொராபுதின்,
கௌசர் பி, துளசிராம்
பிரஜாபதி, சாதிக்
ஜமால், சமீர் கான்
ஆகிய எல்லா மோதல்
கொலைகளுமே போலி
என்றும் சில அரசியல்
கதைக்காக நடத்
தப்பட்ட நாடகம்
என்றும் இப்போது
விசார ணைகளில்
நிரூபணம் ஆகியுள்ளது.
முஸ்லீம்க
ளின் தீவிரவாத
தாக்குதலுக்கு
மோடி இலக்கு என்ற
கட்டுக் கதையை
கட்டவிழ்த்துவிட்ட
டி.ஜி.வன்ஸôரா தலைமையிலான
அணிதான் எல்லாக்
கொலைகளுக்கும்
காரணம். மோடிக்கு
அரசியல்ரீதியான
ஆதாயம் தரும் இந்தப்
படுகொலைகளுக்கு
உத்தரவிட்டது
யார், அதை காவல்
துறை உயர் அதிகாரிகள்
எப்படி செயல்படுத்தினர்
ஆகியவை விடைகாணப்பட
வேண்டிய கேள்விகள்.
நரேந்திர
மோடியைக் குறிவைக்க,
காங்கிரஸ் - அய்முகூ
கையிலுள்ள ஆயுதம்
சிபிஅய் என்று
பாஜக குற்றம் சாட்டிவருகிறது. ஆனால்
காங்கிரஸ் - அய்முகூவே
கூட இதை மூடிமறைக்க
பார்த்தது என்பதுதான்
உண்மை.
கடந்த காலங்களில்,
இஷ்ரத் போலி மோதல்
கொலையை மூடி மறைக்க
உள்துறை முயன்றதுபோல்,
இப்போது இதில்
இணைக்கப் பட்டுள்ள
உளவுத் துறை அதிகாரிகளை
விடு விக்க முயற்சிக்கிறார்கள்.
மத்திய அரசிடமி
ருந்து அனுமதி
பெற்ற பின்னரே
உளவுத் துறை (அய்பி)
அதிகாரிகள் மீது
சிபிஅய் குற்றவியல்
நடவடிக்கை எடுக்க
முடியும் என்பதை
தெளிவுபடுத்திவிட்டார்கள்.
இந்திய அரசியல்
அமைப்புக்கு எவ்வித
பொறுப்புமில்லாமல்
உளவுத்துறை (அய்பி)
கறை படிந்த ஒரு
நிறுவனமாக தொடரக்
கூடாது. உளவுத்
துறை அதிகாரிகளின்
சட்ட மீறல், மற்ற
குடிமக்களின்
சட்ட மீறலைப் போலவே
கடுமையாக தண்டிக்கப்பட
வேண்டும்.
சிபிஅய்
குற்றப் பத்திரிகையில்
அய்பி அதிகாரி
ராஜேந்திர குமார்
மற்றும் அதிகாரி
களின் பெயர்கள்
இடம்பெற வில்லை. இஷ்ரத்
ஜெஹானை சட்டவிரோதமாக
காவலில் வைக்க
ராஜேந்திரகுமார்
உதவியதும் ஜாவித்
மற்றும் இஷ்ரத்
ஆகியோர் காவலில்
இருந்த போது வன்சாராவுடன்
சென்று இவர் பார்த்து
வந்ததும் குற்றப்பத்திரிகையில்
இடம் பெற்றி ருக்கிறது.
இப்படிப்பட்ட
ஆதாரங்கள் குற்றப்
பத்திரிகையில்
இடம் பெற்றிருக்கும்போது
ராஜேந்திரகுமார்
மீது வழக்குப்
போடாமல் இருக்க
காரணம் எதையும்
ஏற்றுக் கொள்ள
முடியாது. பாஜகவும்,
சமாஜ்வாதி கட்சியும்
கூட, உளவுத் துறையை
உணர்விழக்கச்
செய்ய (டிமாரலைஸ்)
சிபிஅய்யை அனுமதிப்பதன்
மூலம் அய்முகூ
அரசாங்கம் தீவிரவாதத்துக்கு
எதிரான போராட்டத்தை
வலுவிழக்கச் செய்கிறது
என்று குற்றஞ்சாட்டின.
போலி மோதல்கள்
உண்மையான தீவிரவாதிகளை
கண்டுபிடிக்கவோ
அல்லது தண்டிக்கவோ
உதவாது. உளவுத்
துறையின் உணர்வை
உயர்த்தி பிடிப்பது
என்ற பெயரில் கொலையை
மன்னிக்கும் வெட்கக்கேடான
அரசியலை அம்பலப்படுத்தி
தடுத்திட வேண்டும்.
இந்தியா ‘வரம்பிற்குட்பட்ட
கொலை களை’ நிறுவனமயப்படுத்த
வேண்டும் அல்லது
‘ஒழுங்கு’ ‘சட்டத்தோடு’ பொருந்திப்
போகா மல் இருக்கலாம்
போன்ற என்ற ஊடக
விமர் சகர்களின்
ஆலோசனைகள் மிகவும்
ஆபத்தா னவை. ஓர்
உண்மையான ஜனநாயகத்தில், இந்திய
அரசியல் சாசனத்தின்
உணர்வில், யார்
குற்றவாளி அல்லது
தீவிரவாதி என்பதை
நீதிமன்றங்கள்தான்
முடிவு செய்ய வேண்டுமே
ஒழிய, காவல்துறையினர்
அல்ல. நீதிக்குப்
புறம்பான கொலைகளை
மன்னிப்பதோ, நியாயப்படுத்துவதோ,
எந்த வடிவத்தில்
வந்தா லும் ஜனநாயக
குடிமக்கள் அதை
கடுமையாக எதிர்த்திட
வேண்டும்.
இஷ்ரத், லஸ்கர்
இ தொய்பா தீவிரவாதி
களுடன் தொலைபேசியில்
உரையாடியதற் கான
ஆதாரங்கள் இருப்பதால்
அவர் தீவிர வாதி
என்றும், டேவிட்
ஹெட்லி அவரை லஸ்கர்
இ தொய்பாவை சேர்ந்தவர்
என்று உறுதிப்படுத்தியிருப்பதாகவும்
உளவுதுறை சொல்லப்
பார்க்கிறது. இவை எவற்றுக்கும்
பின்புலமாக ஆதாரம்
எதுவும் இல்லை.
லஸ்கர் இ தொய்பாவுடையது
என்று சொல்லப்படும்
ஒலி நாடாக்களில்,
லஸ்கர் இ தொய்பா
அழைப்புகளில்
இஷ்ரத் பற்றி குறிப்பிடப்பட
வில்லை. இந்த
நாடா உண்மை என்றால்
உளவுத் துறை இதை
தமங் விசாரணை முன்போ
அல்லது எஸ்அய்டி
முன்போ புலனாய்வின்
போது ஏன் கொடுக்கவில்லை
என்ற கேள்விக்
கும் அய்பியிடம்
பதில் இல்லை.
என்அய்ஏ விசாரிக்கும்போது
ஹெட்லி இஷ்ரத்தை
தீவிரவாதி என்று
சொன்னதாகச் சொல்வதை
என்அய்ஏ இன்னும்
உறுதி செய்யவில்லை.
மேலும் ஊடகத்தின்
ஒரு பிரிவினர்
ஹெட்லி சொன்னதாகச்
சொல்வதும் எந்த
விதத்திலும் இஷ்ரத்
தீவிரவாதி என்று
உறுதிசெய்யவில்லை.
தீவிரவாத
பிணைப்பை உறுதியாக
நிலைநிறுத்த முடியாத
பின்னணியில், பாஜக
அவரை பாலியல்ரீதியாக
கொச்சைப்படுத்த
முயற்சிக்கிறது. இஷ்ரத்
என்ற இளம்பெண்
தனியாக ஒரு ஆணுடன்
பயணம் மேற்கொள்
கிறார் என்பதே
பலத்த சந்தேகத்தை
உருவாக் குகிறது
என்று பாஜக செய்தி
தொடர்பாளர் மீனாக்ஷி
லேகி சொல்கிறார்.
இஷ்ரத் ஏழ்மை
யான குடும்பத்தைச்
சேர்ந்த இளம்பெண்
என்பதால், ஒரு
தீவிரவாதி ஆவதற்கான
பொருத்தமான நபர்
என்றும் குறிப்பிடுகிறார்.
பாஜகவுக்கும்
காங்கிரசுக்கும்
இடையி லான அரசியல்
கொச்சைப்படுத்தல்
போட்டி களில் காங்கிரஸ்
பேசும் மதச்சார்பின்மைக்கு
ஏற்றபடி அது நடந்துகொள்ளவில்லை
என்ற உண்மையை மறைக்க
முடியாது. இஷ்ரத்
ஜெஹான் விசயத்தில்
போலி மோதலை மூடி
மறைக்க உள்துறை
தொடர்ந்து முயற்சி
செய்தது. பிற
மதவெறி வன்முறைகள்
அல்லது, போலி மோதல்கள்
ஆகியவற்றுக்குக்
காரண மானவர்களை
தண்டிக்க காங்கிரஸ்
அரசாங் கம் தீர்மானகரமான
நடவடிக்கை எடுத்த
தில்லை. காங்கிரஸ்
அரசாங்கமே போலி
மோதல்களில் ஈடுபட்டிருக்கிறது;
யாதுமறியா முஸ்லீம்கள்
மீது தீவிரவாத
வழக்குகளை ஜோடித்திருக்கிறது.
பாட்லா ஹவுஸ்,
மலேகான், மெக்கா
மசூதி வழக்கு ஆகியவையே
சாட்சி. பாப்ரி
மசூதி இடிப்பு
வழக்கில் லிபரான்
கமிசன் பரிந்துரைகளுக்குப்
பிறகும் அத்வானி
மீதோ பிற பாஜக
தலைவர்கள் மீதோ,
மும்பை கலவர வழக்கில்
ஸ்ரீகிருஷ்ணா
கமிசன் பரிந்துரைக
ளுக்குப் பிறகு
பால் தாக்கரே மீதோ
காங்கிரஸ் அரசாங்கங்கள்
நடவடிக்கை எடுக்கவில்லை.
தொடர் போலிமோதல்
படுகொலைகளுக்காக
உச்சநீதிமன்றம்
மணிப்பூர் அரசாங்கத்தை
கண் டனம் செய்தது.
காஷ்மீரில்
ஒன்றாக பலர் புதைக்கப்பட்ட
கல்லறைகள் நூற்றுக்கணக்கான
போலிமோதல் படுகொலைகளுக்கு
சான்றுகள். இஷ்ரத்
வழக்கில் ஏற்பட்டுள்ள
எந்த முன்னேற்றமும்
காங்கிரஸ் அரசாங்கத்தால்
ஏற்பட்டதல்ல. மாறாக,
அவரது குடும்பத்தினரின்,
மனிதஉரிமை ஆர்வலர்களின்
துணிச்சலான முயற்சியால்
ஏற்பட்டது.
இஷ்ரத்
ஜெஹான் வழக்கில்
கொலையாளிகளும்
கொலைக்குக் காரணமான
அரசியல் சதியாளர்களும்
தண்டிக்கப்படுவதை
உறுதி செய்ய நாம்
போராட வேண்டும். இஷ்ரத்
ஜெஹான் விசயத்தில்
கிடைக்கும் நீதி,
நாடு முழுவதும்
நீதிக்குப் புறம்பாக
கொல்லப்பட்டவர்கள்களுக்கும்
நீதி கிடைக்க வழிவகுக்கும்.
(எம்எல்
அப்டேட், 2013 ஜூலை
09 - 15) தமிழில்: தேசிகன்
*********
11
என்எல்சி பங்கு விற்பனையைக் கண்டித்து ஏஅய்சிசிடியு
என்எல்சி
பங்கு விற்பனையைக்
கண்டித்து, பிரிக்கால்
தொழிலாளர்கள்
ஜூலை 6 அன்று பிளான்ட்
1 மற்றும் பிளான்ட்
3 வாயில்களில்
கண்டன ஆர்ப்பாட்டம்
நடத்தினார்கள். ஆர்ப்பாட்டத்தில்
ஏஅய்சிசிடியு
மாநிலத் தலைவர்
தோழர் என்.கே.நடராஜன்
மாநிலச் செயலாளர்கள்
தோழர்கள் கிருஷ்ணமூர்த்தி,
குருசாமி ஆகியோர்
நூற்றுக்கணக்கான
தொழிலாளர்கள்
மத்தியில் உரையாற்றினர்.
பிரிக்கால்
நிர்வாகத்துக்கு
எதிரான போராட்டம்
பற்றிய அறிவிப்புகளையும்
வெளியிட்டனர்.
சென்னையில்
ஏஅய்சிசிடியு,
எச்எம்எஸ், தொமுச
மற்றும் ஏஅய்டியுசி
கூட்டாக என்எல்சி
தொழிலாளர் போராட்டத்துக்கு
ஆதரவாக நடத்திய
ஆர்ப்பாட்டத்தில்
ஏஅய்சிசிடியு
மாநில சிறப்புத்
தலைவர் தோழர் ஜவஹர்
உரையாற்றினார்.
*********
12
என்எல்சி பங்கு விற்பனையைக் கண்டித்து அவிதொச
தொழிலாளர்கள்,
பொது மக்கள் ஒன்றுபட்டுப்
போராடி என்எல்சியை
பாதுகாப்போம். மக்கள்
சொத்து என்எல்சியை
விற்கத் துடிக்கும்
மன்மோகன் அரசாங்கத்தை
விரட்டுவோம் என்ற
முழக்கத்துடன்
அவிதொச ஜூலை 10 அன்று
மயிலாடுதுறை, விழுப்புரம்,
நெய்வேலி ஆகிய
மய்யங்களில் பிரச்சாரம்
மேற்கொண்டது.
துண்டுப்பிரசுரங்கள்
விநியோகித்தது.
மயிலாடுதுறையில்
அவிதொச மாநிலச்
செயலாளர் தோழர்
டி.கண்ணையன் தலைமையில்
13 தோழர்கள் கலந்து
கொண்ட பிரச்சார
இயக்கம் நடைபெற்றது. மதியம்
2 மணிக்கு சித்தர்காட்டில்
தொடங்கி மயிலாடுதுறை
ஜங்சன், மற்றும்
பிரதான சாலைகளின்
வழியாக மயிலாடுதுறை
பழைய பேருந்து
நிலையம், புதிய
பேருந்து நிலையம்,
இரயில்வே அலுவலகங்கள்,
பொதுப்பணித்துறை,
கருவூலம், பிஎஸ்என்எல்,
தபால் அலுவலகம்,
ஆர்டிஓ அலுவலகம்
என்று பல பகுதிகளிலும்
மாலை 6.30 மணி வரை பிரச்சாரம்
நடைபெற்றது. 10000 பேர் மத்தியில்
பிரச்சாரம் சென்றடைந்துள்ளது.
இரயில்வேயில்
பணியில் ஈடுபட்டிருந்த
20க்கும் மேற்பட்ட
பெண் தொழிலாளர்கள்
(ஒப்பந்த தொழிலாளர்கள்)
என்ன பிரச்சாரம்
என்று கேட்டனர். என்எல்சி
பங்குகளை விற்பனை
செய்வதை எதிர்த்து
பிரச்சாரம் என்று
சொன்ன போது, அந்தப்
பெண் தொழிலாளர்கள்
‘பங்கை மட்டுமா
விக்கிறானுவ, எங்களையும்
வித்துட்டானுவ,
நீங்க பாத்துகிட்டு
இருங்க ஒங்களையும்
வித்துருவானுவ’ என்று
சொன்னார்கள். மக்கள் விரோத
கொள்கையால் மத்திய
அரசு அம்பலப்பட்டுப்
போயுள்ளது என்பதை
இது வெளிப்படுத்தியது.
விழுப்புரத்தில்
மாலெ கட்சி மாநிலக்
குழு உறுப்பினர்
தோழர் வெங்கடேசன்
தலைமையில் 20 பேர்
கொண்ட குழு சேந்தநாடு,
பாலி, திருநாவலூர்
போன்ற ஊராட்சிகளிலும்,
வானூரிலும் 10000 பேர்
மத்தியில் துண்டுப்பிரசுரம்
விநியோகித்தது.
நெய்வேலியில்
கடலூர் மாவட்ட
மாலெ கட்சி மாநிலக்
குழு உறுப்பினர்
தோழர் அம்மையப்பன்
தலைமையில் 5 பேர்
கொண்ட குழு என்எல்சி
தொழிலாளர் மத்தியிலும்,
மக்கள் மத்தியிலும்
துண்டுப்பிரசுரம்
விநியோகித்தது.
இளங்கோவன்
*********
13
மாருதி தொழிலாளர்களை சந்தித்து
ஒருமைப்பாடு தெரிவித்தது தமிழ்நாடு ஏஅய்சிசிடியு குழு
ஏஅய்சிசிடியு
மாநிலச் செயலாளர்
தோழர் பழனிவேல்
தலைமையில், கோவை
பிரிக்கால் தொழிலாளர்
ஒற்றுமைச் சங்கத்தின்
தலைவர் தோழர் ஜான்சுந்தரம்
மற்றும் எம்ஆர்எஃப்
தொழிலாளி தோழர்
கோகுலகிருஷ்ணன்
ஆகியோர் ஜூலை
7 அன்று பரிதாபாதில்
அரியானா தொழிலாளர்
அமைச்சர் இல்லத்தை
நோக்கி மாருதி
தொழிலாளர்கள்
நடத்திய பேரணியில்
கலந்துகொண்டனர்.
பரிதாபாத்தில்
மாருதி தொழிலாளர்களுடன்
ஏஅய்சிசிடியு,
அகில இந்திய மாணவர்
கழகம், புரட்சிகர
இளைஞர் கழகம்,
அவிதொச தோழர்கள்
என 200க்கும் மேற்பட்டோர்
மாருதி நிர்வாகத்தைக்
கண்டித்தும், அரியானா
அரசையும், மத்திய
அரசையும் கண்டித்தும்
முழக்கங்கள் எழுப்பினர்.
ஓராண்டாக சிறையில்
அடைக்கப்பட்டிருக்கும்
147 மாருதி தொழிலாளர்களை
உடனடியாக விடுதலை
செய்யக் கோரி அச்சடிக்கப்பட்ட
துண்டறிக்கைகள்
பொது மக்களுக்கு
விநியோகிக்கப்பட்டன. மாருதி
தொழிலாளர்கள்
நிலைமை குறித்தும்,
சிறையில் உள்ளவர்கள்,
அவர்கள் குடும்பங்களை
குறித்தும் முன்னணித்
தோழர்கள் பேசினார்கள்.
ஏஅய்சிசிடியு
தேசியச் செயலாளர்
தோழர் ராஜீவ் திம்ரி
மாருதி தொழிலாளர்களின்
போராட்டத்திற்கு
ஆதரவு தெரிவித்து
அவர்கள் மத்தியில்
உரையாற்றினார்.
தமிழ்நாட்டில்
இருந்து சென்ற
குழுவை மாருதி
தொழிலாளர்கள்
மத்தியில் அறிமுகப்படுத்தினார்.
தமிழ்நாட்டில்
இருந்து சென்ற
குழு சென்னையில்
மாருதி தொழிலாளர்களின்
போராட்டத்திற்கு
ஆதரவு தெரிவித்து,
ஓராண்டாக சிறையில்
அடைக்கப்பட்டிருக்கும்
147 மாருதி தொழிலாளர்களை
உடனடியாக விடுதலை
செய்யக் கோரி கையெழுத்துக்கள்
வாங்கிய டிஜிட்டல்
பேனர்களை அவர்களிடம்
கொடுத்தார்கள்.
அத்துடன் மாருதி
தொழிலாளர்கள்
போராட்டத்துக்கு
ஒருமைப்பாடு தெரிவித்து,
அவர்களுக்கு ஆதரவாக,
பிரிக்கால், சாந்தி
கியர்ஸ், சுபா
பிளாஸ்டிக்ஸ்,
எல்எம்டபிள்யு,
கோஆப்டெக்ஸ், எம்ஆர்எஃப்,
டைமண்ட் செயின்,
ஹ÷ண்டாய், ஓஎல்ஜி,
காஞ்சி காமகோடி
மருத்துவமனை, ஜிம்கானா
கிளப், திருச்சி
துப்பாக்கி தொழிற்சாலை
ஆகிய நிறுவனங்களின்
தொழிலாளர்கள்
மற்றும் குமரியின்
அமைப்புசாரா தொழிலாளர்கள்
அளித்த ஒரு லட்சம்
ரூபாய் நிதியில்
முதல் தவணையாக
ரூ.50,000த்தை தோழர்
பழனிவேல் குழு
சார்பாக வழங்கினார்.
கூடியிருந்த
மாருதி தொழிலாளர்கள்
மத்தியில் தோழர்
ஜான் சுந்தரம்
உரையாற்றினார். அரியானா
அரசும், மத்திய
அரசும், உடனடியாக
தலையிட்டு சிறையில்
உள்ள 147 பேரையும்
விடுதலை செய்ய
வேண்டும் என்றும்,
மாருதி நிர்வாகம்
வேலை இழந்த தொழிலாளர்களுக்கு
மீண்டும் வேலை
தர வேண்டும் என்றும்
வலியுறுத்தினார்.
மாருதி தொழிலாளர்கள்
பிரச்சனை ஒட்டுமொத்த
இந்தியத் தொழிலாளர்களின்
வர்க்கப் பிரச்சனை
என்று குறிப்பிட்டார்.
ஏஅய்சிசிடியு
டில்லி மாநிலச்
செயலாளர் தோழர்
கபில்சர்மா பேசி
முடிந்தவுடன்,
பேனர்களையும்,
கொடிகளையும் பிடித்துக்
கொண்டு முழக்கங்கள்
போட்டவண்ணமாக
அரியானா தொழிலாளர்
மந்திரியை சந்தித்து
மனு கொடுக்க பேரணியாக
மாருதி தொழிலாளர்கள்
சென்றனர். காவல்துறையினர்
பேரணியைத் தடுத்தார்கள்.
தடையை மீறி, அய்ந்து
பேர் மட்டுமே உள்ளே
வர வேண்டும் என்று
காவல்துறையினர்
சொன்னதை மீறி,
தோழர்கள் கபில்சர்மா,
அரியானா சிபிஅய்எம்எல்
கட்சியின் மூத்த
தோழர் பிரேம்சிங்,
தோழர் ராஜீவ் திம்ரி
ஆகியோர் தலைமையில்
மாருதி தொழிலாளர்கள்,
தமிழ்நாட்டு குழுவின்
தோழர்கள் பழனிவேல்
மற்றும் ஜான் சுந்தரம்
உட்பட 30 பேர் அமைச்சரை
சந்தித்தனர். மாருதி
தொழிலாளர்களின்
கோரிக்கைகளை விளக்கி
தோழர்கள் ராஜீவ்
டிம்ரி, பிரேம்
சிங், மாருதி தொழிலாளர்கள்
மற்றும் தோழர்
பழனிவேல் ஆகியோர்
அமைச்சருடன் பேச்சு
வார்த்தை நடத்தினர்.
ஜூலை 11 அன்று
சண்டிகரில் மாருதி
தொழிலாளர்களுக்கு
ஒருமைப்பாடு தெரிவித்து
ஏஅய்சிசிடியு
நடத்திய பேரணியில்
தமிழ்நாடு ஏஅய்சிசிடியுவின்
ஒருமைப்பாட்டு
நிதி, மாருதி தொழிலாளர்களிடம்
இரண்டாவது தவணையாக
ரூ.50,000 தரப்பட்டது.
பழனிவேல்