பிணம்
அவர்கள்
பொழுது விடியும் வரை
சேவல் எதிர்த்து எழும் வரை
பிணத்தை
சித்திரவதை செய்தனர்
அதன் சதையில் ஆணியை நுழைத்தனர்
அதனை மின்விசிறியில் இருந்து தொங்கவிட்டனர்
சித்திரவதை
செய்தவர்கள் ஒருவழியாய் சோர்ந்துபோய்
ஓர் இடைவேளை எடுத்தபோது
பிணம் தன் சுண்டு விரலை
அசைத்தது
காயப்பட்ட
புண்களைத் திறந்தது
ஏதோ முணுமுணுத்தது.
அது தண்ணீர் கேட்டதா?
அது ஒருவேளை ரொட்டி கேட்டதா?
அது அவர்களை சபித்ததா அல்லது
மேலும் வதைக்கச் சொன்னதா?
சர்கன்
பவுலஸ்
அரேபிய
மொழிக் கவிதை
சிஅய்ஏ
சித்திரவதைகள் தொடர்பாக
அய்க்கிய
அமெரிக்க செனட் செலக்ட் கமிட்டி
ஆன் இன்டலிஜென்ஸ் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அது தொடர்பாக
எழுதப்பட்ட கவிதை
போக்குவரத்துத் தொழிலாளர் போராட்டம் வெல்லட்டும்!
தீபாவளி
மிகவும் மகிழ்ச்சியான பண்டிகை என்று மக்கள்
கருதுகிறார்கள்.சாமான்ய மக்கள் கடன்
வாங்கியாவது புதுத் துணி வாங்கி
பட்டாசு கொளுத்திவிடுகிறார்கள். தமிழக மக்களுக்கு இந்த
ஆண்டு இரண்டாவது தீபாவளி வந்திருக்கிறது. டிசம்பர்
29 அன்று வர வேண்டியது. டிசம்பர்
28 அன்றே ஆர்ப்பாட்டமாகத் துவங்கிவிட்டது.இந்த தீபாவளி ஒரு
நாள் தீபாவளி அல்ல.எத்தனை
நாட்கள் தொடரும் என்று தெரியாது.
இந்த தீபாவளிக்காக தமிழக மக்கள் ஒன்றரை
லட்சம் போக்கு வரத்துத் தொழிலாளர்களுக்கு
வாழ்த்துச் சொல்ல வேண்டும். இந்த
தீபாவளியை அவர்களுடன் சேர்ந்து கொண்டாட வேண்டும். சாமான்ய
மக்களை, போராடுகிற போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு எதிராக நிறுத்த அஇஅதிமுக
அரசு எல்லா முயற்சிகளும் எடுக்கும்.
இந்த விசயத்தில் ‘முன்மாதிரி’
வேலையளிப்பவராக நடந்துகொள்ளும். நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம்.
அந்த முயற்சிகளையும் அவர்களுடன் சேர்ந்து நின்று முறியடிக்க வேண்டும்.
பேருந்து ஓட்டும்போது நெஞ்சுவலி வந்ததால் எப்படியோ சமாளித்து பேருந்தை நிறுத்தி பேருந்தில் இருந்தவர்களின் உயிர்களைக் காப்பாற்றிய பிறகு தன் உயிர்
விட்ட ஓட்டுநருக்கு, தன்னலத்தை பின்தள்ளி பொதுநலன் காக்கும் அவரைப் போன்ற தொழிலாளர்களுக்கு பிரதிபலன் செய்ய, அவர்களுடன் சேர்ந்து
நிற்க தமிழக மக்களுக்குக் கிடைத்திருக்கிற
அரிய வாய்ப்பு இது.
முன்பு
ஒரு முறை, போக்குவரத்துத் தொழிலாளர்கள்,
தங்கள் போர்க்குணமிக்க வேலை நிறுத்தப் போராட்டம்
மூலம் ஜெயலலிதா ஆட்சிக்கு பாடம் கற்பித்திருக்கிறார்கள். இன்றைய அஇஅதிமுக
ஆட்சியின் அனைத்தும் தழுவிய குற்றமய அலட்சியப்
போக்குக்கு, மக்களை வஞ்சிக்கிற இறுமாப்புக்கு
இன்று அவர்கள் நடத்துகிற போராட்டம்
ஏற்கனவே சரியான அடிகொடுத்துவிட்டது. போராட்டத்தை
ஒடுக்க அரசு எந்திரம் தயாராகிக்
கொண்டிருந்தபோதே, தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தைத்
துவங்கிவிட்டார்கள்.
எங்கள்
சங்கத்தில் 91,000 பேர், நாங்கள் வேலை
செய்து போராட்டத்தை முறியடிப்போம் என்று ஒரு மிகச்சிறு
பிரிவு தொழிலாளர்களை சொல்ல வைத்து போராடுகிற தொழிலாளர்களை
பிளவுபடுத்தும் வேலைகளில் அஇஅஇதிமுக இறங்கிவிட்டது. ரவுடிகள் நுழைந்து போராட்டத்தில் இருக்கிற தொழிலாளர்களைத் தாக்குகிறார்கள். அஇஅதிமுக அரசின் காவல்துறை வழக்கம்போல்,
போராட்டக்காரர்களை கைது செய்கிறது. பொதுமக்கள்
பாதிக்காமல் இருக்க அரசு அனைத்து
முயற்சிகளும் மேற்கொள்கிறது என்று முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சொன்னார். அவர் சொல்கிற அந்த
முயற்சிகளுக்கு ஏற்கனவே ஓர் இளைஞர்
பலியாகிவிட்டார். டிசம்பர் 28 அன்று மாலை தற்காலிக
தொழிலாளி ஒருவர் ஓட்டிய பேருந்து
அவர் மீது மோதியது. அங்கேயே
அந்த இளைஞர் உயிரிழந்தார். அஇஅதிமுக
நிர்வாகிகள் ஆர்வமாக முன்வந்து பேருந்துகளில்
ஓட்டுநர்களாக, நடத்துநர்களாக சுயநியமனம் செய்து கொண்டனர். பயணிகளின்
உயிரும் பாதுகாப்பும் அவர்களுக்கு இரண்டாம் பட்சம். போராட்டத்தை முறியடிப்பதே முதல் நோக்கம். இந்த
அத்துமீறல்களுக்கு அஇஅதிமுக ஆட்சியின் ஆசி பின்னால் இருக்கிறது.
தனியார்
நிறுவனங்களில் தொழிலாளர்கள் போராட்டம் அறிவித்தால் நிர்வாகம் தொழிலாளர்
தரப்பை அழைத்துப் பேசுவது உண்டு. அஇஅதிமுக
அரசாங்கம் அந்த குறைந்தபட்ச நடவடிக்கையை
கூட பொருளுள்ள விதத்தில் செய்ய தயாராக இல்லை.
மின்வாரிய ஊழியர்கள் ஊதிய உயர்வு கோரிக்கை
எழுப்பியபோது ஊழியர்களை, அவர்களுடைய சங்கங்களை அழைத்துப் பேசாமல் ஜெயலலிதாவுக்கு விருப்பமான
ஊதியம் அறிவிக்கப்பட்டது. கூட்டுபேர உரிமையை அரசே காலில்
போட்டு மிதித்தது. இப்போது, போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஓர் இடைக்கால நிவாரணம்
மட்டும் அறிவிக்கப்பட்டது. போக்குவரத்துத் தொழிலாளர்கள் மின்வாரிய ஊழியர் நிலைமை தமக்கும்
ஏற்பட்டுவிடாமல் வருமுன் பாதுகாக்கும் நடவடிக்கையில்
இறங்கியுள்ளனர் என்று சொல்லலாம். உனக்கென்ன
ஊதியம் தர வேண்டும் என்று
கேட்க உனக்கு உரிமை இல்லை
என்று சொல்லும் எதேச்சதிகாரத்தை கேள்விக்கு உள்ளாக்கியுள்ளனர் என்று சொல்லலாம்.
நாட்டில்
உள்ள தொழிலாளர்கள் மீது, தமிழ் நாட்டில்
உள்ள தொழிலாளர்கள் மீது அடுத்தடுத்து தாக்குதல்கள்
தொடுக்கப்படும் ஒரு சூழலில், தொழிலாளர்களின்
உரிமைகள் திட்டமிட்ட விதத்தில் பறிக்கப்படும் சூழலில், நோக்கியா தொழிலாளர்கள் வஞ்சிக்கப்பட்டு வேலையிழந்து, வாழ்க்கை இழந்துள்ள பின்னணியில், பாக்ஸ்கான் தொழிலாளர்களையும் 25 வயதில் விருப்ப ஓய்வு
என்ற வைரஸ் தாக்குகிற பின்னணியில்,
ஆளும்கட்சி பலவீனமாக உள்ள பின்னணியில், தமிழ்நாட்டில்
போக்குவரத்துத் தொழிலாளர் நடத்தத் துவங்கியுள்ள போராட்டம்
மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. எதிரிகளே கண்ணுக்கெட்டிய தூரம் வரை இல்லை
என்ற அஇஅதிமுக நினைப்பில் போக்குவரத்துத் தொழிலாளர்கள் தண்ணீர் ஊற்றி அணைக்கிறார்கள்.
போராட்டத்தின் இறுதி விளைவு என்ன
என்பதற்கு அப்பால், சாமான்ய மக்கள், தொழிலாளர்கள்
அனைத்து அத்துமீறல்களையும் வாய் மூடி மவுனமாக
ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், கேள்வி கேட்பார்கள் என்ற
செய்தியை அஇஅதிமுக ஆட்சிக்குச் சொல்லும் விதம், அவர்கள் போராட்டம்
நடத்துவதே இன்றைய சூழலில் உயர்த்திப்
பிடித்தாக வேண்டிய தொழிலாளர் வர்க்க
நடவடிக்கை.
போக்குவரத்துத்
தொழிலாளர்களின் நியாயங்களை பொதுமக்கள் புரிந்துகொள்வதும், பொதுமக்களின் தேவைகளை தொழிலாளர்கள் முன்னிறுத்துவதும்
இந்தப் போராட்டத்திற்கு முன்பும் பின்பும் நடக்க வேண்டிய விசயங்கள்
என்பது தமிழ்நாட்டின் முற்போக்கு ஜனநாயக சக்திகளின் விருப்பங்களாகும்.
தமிழ்நாட்டில்
கருமுட்டை விற்பனை நடப்பது போல்,
குழந்தை விற்பனை பரபரப்பாக நடப்பது
பற்றிய கவலை தரும் செய்திகள்
வந்தவண்ணம் இருக்கின்றன.வெறும் ரூ.20,000 பெற்றுக்
கொண்டு, பெற்ற குழந்தையை விற்க
பெண்கள் தயாராக இருக்கிறார்கள். கந்துவட்டி
வாங்கியவர்கள் மிரட்டப்பட்டு தற்கொலை செய்து கொள்கிறார்கள்.கொல்லப்படுகிறார்கள்.
தமிழ்நாட்டில்
அரசியல், பொருளாதார, சமூக நெருக்கடி தீவிரமடைந்துள்ள
நிலையில் ஆலைமூடல், தொழிலாளர்கள், விவசாயிகள் பிரச்சனைகள் பற்றி ஆளும்வர்க்கக் கட்சிகளே
பேச வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
அந்தக் கட்சிகளுக்கே நிர்ப்பந்தம் என்றால், உழைக்கும் மக்கள் நலன்களை நாளும்
முன்னிறுத்தும் இடதுசாரிகள் மக்கள் போராட்டங்களை விசையுடன்
முன்னகர்த்த வேண்டியுள்ளது.
எது எனது வீடு?
‘மதம்
கடவுள் அல்லது ஆயுதங்களின் மூலம்
எதையும் கைப்பற்றும் எண்ணமோ அல்லது அடக்கியாளும்
எண்ணமோ இந்துக்களுக்கு இருந்ததில்லை. அவர்களுக்கு நாடு பிடிக்கும் ஆசையோ,
பிற மதத்தினரை தங்களது மதத்திற்கு மாற்ற
வேண்டிய அவசியமோ இருந்ததே கிடையாது.
அடிப்படையில் இந்துக்களுக்கு மதமாற்றத்தில் நம்பிக்கையும் கிடையாது’.இந்துக்கள் பற்றி ஆர்எஸ்ஸின் எஸ்.குருமூர்த்தி இப்படிச் சொல்வது உண்மைதான். அவர்கள்
தங்களது நாளொன்றை குறைந்தபட்ச கவுரத்துடன் கடத்தும் கவலையில் தள்ளப்பட்டுள்ளவர்கள். அது தொடர்பான நடவடிக்கைகளில்தான்
அவர்கள் மூழ்கியிருக்கிறார்கள்.
இந்துத்துவ
சக்திகளுக்கு, மதம் கடவுள் அல்லது
ஆயுதங்களின் மூலம் எதையும் கைப்பற்றும்
எண்ணமோ அல்லது அடக்கியாளும் எண்ணமோ
இருந்ததில்லை, இருப்பதில்லை என்று அவரால் சொல்ல
முடியாது. குஜராத் முதல் முசாபர்நகர்
வரை இந்துத்துவ சக்திகளது அந்த பரிசோதனை வெற்றி
பெற்றுள்ளது. டில்லியில் தேர்தல் நெருங்கும் நேரத்தில்
அந்த வழிமுறைகள் திட்டமிட்டு அமலாக்கப்படுகின்றன. ஆட்சியைப் பிடிக்க ஆதரவளித்த பிக்கியின்
புதிய தலைவர் போன்ற கார்ப்பரேட்
நிறுவன பிரதிநிதிகளே பாஜக வளர்ச்சி நிகழ்ச்சிநிரலில்
கவனம் செலுத்த வேண்டும், இந்துத்துவ
நடவடிக்கைகள் வழிவிலகல்கள் என்று சொல்லும் அளவுக்கு,
பாஜகவின் இந்துத்துவ நிகழ்ச்சிநிரல் வாய்ப்புள்ள இடங்களில், வாய்ப்புள்ள தருணங்களில் எல்லாம் அமலாகிறது.
இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி,
கிருஷ்ண ஜெயந்தி, தீபாவளி எல்லாம் வழக்கம்போல்
கொண்டாடிய இந்திய மக்கள், கிறிஸ்துமஸ்
நாளை மட்டும் வழக்கமான மகிழ்ச்சியுடன்
கொண்டாட முடியாமல் போனது. காந்தி பிறந்த
தினமான, தேசிய விடுமுறை நாட்களில்
ஒன்று என்று கருதப்பட்டு வருகிற,
அக்டோபர் 2 அன்று மத்திய அரசு
ஊழியர்களுக்கு விடுமுறை இல்லை, அலுவலகத்துக்கு வர
வேண்டும், உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று
மோடி சொன்னதில், பாஜக ஆட்சியாளர்கள் அரசியல்
கணக்குத் தீர்த்துக் கொள்கிறார்கள் என்று கூட வைத்துக்கொள்வோம்.
கிறிஸ்துமஸ் தினத்தன்று மத்திய அரசு ஊழியர்கள்
அலுவலகத்துக்கு வர வேண்டும் என்று
சொல்வதற்கு என்ன கணக்கு? இந்த
விசயத்தில் மத்திய அரசுக்கு யார்
எதிரிகளாக, வேண்டாதவர்களாக ஆகிப் போனார்கள்? அந்த
நாளில், நாட்டில் ஏன் நஞ்சு கலக்கப்பட்டது?
மசூதி இடிக்கப்பட்டது நாட்டின் மதச்சார்பின்மை இழையை அறுத்தெறிந்தது என்றால்,
கிறிஸ்துமஸ் தினத்தன்று கிறித்துவர்களை வேறு வேலை பார்
என்று சொல்வதும், தீவிரம் குறைந்தது என்றாலும்,
அதை ஒத்ததொரு நடவடிக்கைதானே? ஆர்எஸ்எஸ் குருமூர்த்தி, சிறுபான்மை மக்களின் இந்த கேள்விகளுக்கு என்ன
பதில் வைத்திருக்கிறார்?
கட்டாயப்படுத்தி,
குடும்ப அட்டை வாங்கித் தருவதாகச்
சொல்லி இசுலாமியர்களை இந்துக்களாக மாற்றுகிறார்கள் இந்துத்துவ அமைப்புகள். வீடு திரும்புகிறார்கள் என்கிறார்கள்.
வீடு திரும்ப, எது எனது வீடு?
இந்து மதமா? தெருவில் நடக்காதே,
மலத்தை தலையில் ஏந்து, காலில்
செருப்புப் போடாதே, மேல் சட்டை
அணியாதே, ஊருக்கு வெளியே ஒதுக்குப்புறத்தில்
குடியிரு, பிணத்தை எரி, எப்போதும்
காலின் கீழே கிட என்று
சொல்லும் அதர்மம் வேண்டாம் என்றுதானே
போனோம். அதில் மாற்றம் வருமா?
அந்தந்த சாதிக்குத் திரும்பிச் செல்லலாம் என்று பெருந்தன்மையாகச் சொல்கிறார்களாம்.
சாதிய ஒடுக்குமுறையே வேண்டாம் என்றுதானே போனார்கள்? ஆசை காட்டி அழைத்ததால்
போனார்கள் என்கிறார்கள். எதற்கு ஆசை? கஞ்சிக்கும்
கல்விக்கும் கவுரவத்துக்கும்தானே? அவர்கள் வீடு திரும்பவில்லை
என்றால்தான் என்ன?சுனாமி தாக்குமா?
வெள்ளம் கொண்டு போகுமா? பூகம்பம்தான்
இழுத்துக்கொள்ளுமா?
மோடி பெஷாவர் பற்றி பேசுகிறார்.
இன்னும் ஏதேதோ பேசிக்கொண்டே இருக்கிறார்.அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப
அவரவர் வீடுகளில், மதங்களில் இருக்கட்டும் என்று சொல்ல மட்டும்
மோடி தயாராக இல்லை. சங்பரிவார்
விஷமிகள் வாய்ப்பைப் பயன்படுத்தி மதமாற்றத் தடைச் சட்டம் வேண்டும்
என்று சொல்லத் துவங்கிவிட்டனர். மதமாற்றத்
தடைச் சட்டம் கொண்டு வந்த
ஜெயலலிதாவுக்கு தமிழக மக்கள் இரட்டை
தண்டனை வழங்கியிருக்கிறார்கள். தங்கள் ஜனநாயக உரிமைகள்
நசுக்கப்படுவதை பொதுவாக மக்கள் அனுமதிப்பதில்லை.
கர் வாப்சி நடவடிக்கைகளில் ஈடுபடும்
இந்துத்துவ சக்திகள் மீது குற்றவியல் நடவடிக்கை
எடுத்து விட்டு, இந்துத்துவா நிகழ்ச்சிநிரலை
மூட்டை கட்டி போகி கொளுத்திவிட்டாலே
இந்துத்துவா நிகழ்ச்சிநிரல் பிரச்சனைகளில் நாடாளுமன்றத்தில் நரேந்திர மோடி யாருக்கும் பதில்
சொல்ல வேண்டியிருக்காது. அது நடக்காவிட்டால் கேள்விகள்
நிற்காது.
முன்னுரை
சம்கலீன் பிரகாஷன், பாட்னா வெளியிட்ட கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின்
இந்தி பதிப்புக்கு நவம்பர் 1998ல் தோழர் வினோத் மிஸ்ரா எழுதிய முன்னுரை
1847 நவம்பர்
மாதம் லண்டனில் கூடிய கம்யூனிஸ்ட் லீகின்
காங்கிரஸ், மார்க்சையும் எங்கெல்சையும், “கட்சிக்கு விரிவான தத்துவ நடைமுறை
திட்டம்”
ஒன்றை எழுதுமாறு பணித்தது. அதற்கேற்ப மார்க்சும் எங்கெல்சும், ஜனவரி 1848ல் கம்யூனிஸ்ட் அறிக்கையை
எழுதினர். அதனுடைய முதல் பதிப்பு,
பிப்ரவரி 24 1848ல் பிரான்சில் புரட்சி
வெடிப்பதற்கு, சில மாதங்களுக்கு முன்பு
வெளிவந்தது.
நவீன தொழிலின் மிகப்பெரிய வளர்ச்சியாலும், அதன் விளைவாய் தொழிலாளர்
வர்க்கக் கட்சியின் அமைப்புக்கள் விரிவடைந்து வளர்ந்ததாலும், மிகவும் குறிப்பாக 1871 பாரிஸ்
கம்யூன் அனுபவம் தந்த வெளிச்சத்தாலும்,
திட்டம், அதன் சில விவரங்களில்
காலாவதியாகிவிட்டது என, கம்யூனிஸ்ட் கட்சி
அறிக்கை வெளியான கால் நூற்றாண்டுக்குப்
பிறகு, மார்க்சும் எங்கெல்சும் உணர்ந்தனர். இரண்டாவது அத்தியாயத்தின் இறுதியில் சொல்லப் பட்டுள்ள திட்டம்,
நிச்சயம் வேறு விதமாக எழுதப்பட்டிருக்கும்
என அவர்கள் கருதினர். சோசலிச
இலக்கியம் பற்றிய விமர்சனமும், அது,
1847க்கு பிந்தைய காலம் பற்றி
ஏதும் சொல்லாததால், முழுமையடையாமல் இருந்தது. அப்போது, அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த பல கட்சிகளும் மறைந்துவிட்டன.
அரசியல் சூழலில் ஏற்பட்டிருந்த மிகப்பெரிய
மாற்றங்கள், கம்யூனிஸ்ட்களுக்கும் பிற எதிர்க் கட்சிகளுக்கும்
இடையிலான உறவுகளைப் பற்றிய பல குறிப்புக்களையும்
பெருமளவு காலாவதியாக்கிவிட்டன. கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெளிவந்து
150 ஆண்டுகள் கடந்து விட்டன. உலக
முதலாளித்துவத்தின் மிகப் பெரிய நெருக்கடி
கட்டங்கள், உலகச் சந்தை மீதான
கட்டுப்பாட்டிற்கான தேடுதல் முதலாளித்துவ அரசுகளிடையே
ஏற்படுத்திய இரண்டு உலகப் போர்கள்,
சோசலிச புரட்சிகள் வெற்றி பெற்று உதயமான
சோசலிச அரசுகள் ஆகியவற்றை இந்த
150 ஆண்டுகள் கண்டன. ஆனால் இருபதாம்
நூற்றாண்டின் கடைசி பத்தாண்டில், சோசலிசத்திற்கும்
முதலாளித்துவத்திற்கும் இடையிலான உலகளாவிய போட் டியில், முதலாளித்துவமே,
வெற்றி பெற்றது.
ஓர் ஒரு துருவ உலகம்,
ஒரு புதிய பொருளாதார ஒழுங்கு,
ஆபத்தான வேகம் கொண்ட உலகமயம்,
பன்னாட்டு நிறுவனங்களின் அனைத்தும் தழுவிய ஆதிக்கம், விஞ்ஞான
தொழில்நுட்பப் புரட்சி, உலகையே ஓர் ஒற்றை
கிராமமாகச் சுருக்கிவிடும் தகவல் புரட்சி -இவையே
இன்றைய காலத்தின் முதன்மையான கூறுகள். தொழிலாளர் வர்க்கத்தின் சர்வதேச ஒருமைப்பாட்டில் விரிசல்,
இனக்கூறு, பெண்ணிய, சூழலிய இயக்கங்களின் எழுச்சி,
பின் நவீனத்துவ சித்தாந்தம் போன்றவை, மார்க்சியத்தின், கம்யூனிச இயக்கத்தின் பொருத்தப் பாட்டையே கேள்விக்குள்ளாக்குகின்றன.
உலகெங்கும்
உள்ள கம்யூனிஸ்ட் இயக்கம் ஒரு குறுக்குச்
சாலையில் நிற்கும்போது, இன்றைய கேள்விகளுக்கான விடை
தொடர்பான திசையைத் தேடி, மார்க்சிய அறிவாளிகள்,
மார்க்சிய செவ்விலக்கியங்கள் தொடர்பான ஒரு புதுப்பித்த வாசிப்பிற்கு
மீண்டும் திரும்புகின்றனர். ஒவ்வொரு முற்போக்காளரும், கம்யூனிஸ்ட்
அறிக்கைக்கு திரும்புவதும், அதனை மீண்டும் வாசிப்பதும்
அத்தியாவசியமாகி உள்ளது.
“இடையறாமல்
உற்பத்தி புரட்சிகரமாதல், எல்லா சமூக நிலைமைகளும்
இடைவிடாமல் கொந்தளித்தல், எப்போதும் நீடிக்கும் நிச்சயமற்ற தன்மை மற்றும் கிளர்ச்சி
ஆகியவை, முந்தைய அனைத்து சகாப்தங்களிலிருந்தும்
முதலாளித்துவ சகாப்தத்தை வேறுபடுத்துகின்றன. எல்லா நிலையான, வேகமாய்
உறைந்து போன உறவுகளும், அவற்றோடு
கூடவே வந்த புராதன புனித
தப்பெண்ணங்களும் கருத்துக்களும் அடித்துச் செல்லப்படுகின்றன. புதிதாக உருவானவை அனைத்தும்,
அவை வளர்வதை நிறுத்தும் முன்பே
பழையதாகிப் போகின்றன. திடமானவை எல்லாம் காற்றில் கரைகின்றன.
புனிதமானவை எல்லாம் மரியாதை இழக்கின்
றன. இறுதியாக மனிதர்கள், தமது உண்மையான வாழ்நிலைமைகளை,
மனித குலத்துடனான, தமது உறவுகளை, நிதானத்துடன்
சந்திக்குமாறு நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள்”
என கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை சொல்கிறது.
மேலும்
காண்கிறோம்: “பழைய உள்ளூர் மற்றும்
தேசிய தனித்திருத்தல் மற்றும் தன்னிறைவுக்கு மாறாக,
நாம் ஒவ்வொரு திசையிலும் ஊடாடுகிறோம்.
தேசங்களின் பரஸ்பர சார்பு உலகளாவியதாகிறது.
பொருளாயத உற்பத்தியில் நடப்பது போலவே அறிவுத்
துறை உற்பத்தியிலும் நடக்கிறது.”
அறிக்கை
மேலும் சொல்கிறது: “முதலாளித்துவம், உற்பத்திச் சாதனங்களில் துரித முன்னேற்றம், பிரும்மாண்ட
தொடர்பு வசதிகள் மூலம், நாகரிக
உலகத்திற்குள் மிகவும் காட்டுமிராண்டி தேசங்களையும்
கொண்டுவருகிறது. ஒரு வரியில் சொன்னால்,
அது தன் பிம்பத்திலான ஓர்
உலகை உருவாக்குகிறது. அது எவ்வாறு கிராமப்புறப்
பகுதிகளை நகரங்களைச் சார்ந்திருக்க வைக்கிறதோ, அதே போல் காட்டுமிராண்டி
அரை காட்டுமிராண்டி நாடுகளை நாகரிக நாடுகளையும்,
விவசாய நாடுகளை முதலாளித்துவ நாடுகளையும்,
கிழக்கை மேற்கையும் சார்ந்திருக்க வைக்கிறது.”
இந்த வரிகளில், உலகமயம் தொடர்பான ஓர்
உயிரோட்டம் நிறைந்த சித்திரத்தை, விவரமான
வாசகர் காண முடியும்.
மூலதன உலகமயமாக்கத்திற்கு மாறாக, உழைக்கும் மக்களின்
சர்வதேசியம் தொடர்பாக, மார்க்ஸ் எங்கெல்ஸ் தீட்டிய சித்திரம், தேசிய
சர்வதேச நிலைமைகள், வர்க்கங்கள் மற்றும் நாடுகள் ஆகியவற்றுக்கிடையிலான
சிக்கலான பரஸ்பர உறவை அடிக்கோடிட்டுக்
காட்டுகிறது: “உழைக்கும் மக்களுக்கு எந்த
நாடும் கிடையாது. அவர்களிடம் இல்லாத ஒன்றை அவர்களிடமிருந்து,
நாம் எடுக்க முடி யாது.
பாட்டாளி வர்க்கம் முதலில் அரசியல் முதன்மை
நிலையை அடைய வேண்டும். தேசத்தின்
முன்னணி வர்க்கமாக எழுந்தாக வேண்டும். தன்னையே தேசமாக்கிக் கொள்ள
வேண்டும், அது அந்த அளவில்,
தானே தேசிய தன்மை வாய்ந்ததாகும்.
(முதலாளித்துவ பொருளில் இல்லாவிட்டாலும்)”
எந்த அளவுக்கு மனிதரை மனிதர் சுரண்டு
வதற்கு முடிவு கட்டப்படுகிறதோ, அந்த
அளவுக்கு ஒரு நாட்டை மற்றொரு
நாடு சுரண்டுவதற்கும் முடிவு கட்டப்படும். தேசத்திற்குள்,
வர்க்கங்களுக்கிடையிலான பகைமை எந்த அளவுக்கு
முடிவுக்கு வருகிறதோ அந்த அளவுக்கு ஒரு
தேசத்திற்கும் மற்றொரு தேசத்திற்கும் இடையிலான
பகைமையும் முடிவுக்கு வரும்.
அறிக்கை
தெளிவாகச் சொன்னது: “நவீன அரசு, ஒட்டுமொத்த
முதலாளித்துவ வர்க்கத்தின்
பொது விவகாரங்களை நிர்வகிப்பதற்கான ஒரு செயற்குழுவே ஆகும்.”
நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மிகவும், தாராளமான ஆகப் பரந்த வடிவத்திலும்
கூட, சாரத்தில், நவீன அரசு வேறு
எப்படியும் இருக்க முடியாது. மாறாக,
சோசலிச அரசு, பொது மக்களுக்கு
உண்மையான ஜனநாயகத்தை முன்நிறுத்துகிறது. இப்படி இருந்தும், முதலாளித்துவம்,
சோசலிசத்தின் தோல்வியை ஜனநாயகத்தின் வெற்றியாக முன்வைப்பதில் வெற்றி பெற்றுள்ளது. நாம்
நிச்சயம், இதற்கான காரணத்தை ஆழமாகப்
பரிசீலிக்க வேண்டும்.”
1871 பாரீஸ்
கம்யூனில் பாட்டாளி வர்க்கம் முழுவதுமாக இரண்டு மாதங்கள் அரசியல்
அதிகாரத்தை கட்டுப்படுத்திய அனுபவத்தில் இருந்து, மார்க்ஸ் ஒரு முக்கிய படிப்பினை
எடுத்தார்: “தொழிலாளர் வர்க்கம், தயார் நிலையில் உள்ள
அரசு எந்திரத்தை அப்படியே எடுத்துக் கொண்டு, அதனைத் தன்
நோக்கத்திற்காகப் பயன்படுத்த முடியாது.”(பிரான்சில் உள்நாட்டுப் போர்).
லெனின்
தனது அனைத்து முக்கியத்துவமும் கொண்ட
படைப்பான ‘அரசும் புரட்சியும்’ நூலில்
காவுத்ஸ்கியுடனான தனது விவாதத்தில், புரட்சிக்குப்
பிறகு பழைய அரசு எந்திரம்
தொடருமா அல்லது தகர்க்கப்படுமா என்ற
கேந்திரமான பிரச்சனையை எழுப்புகிறார். மேலே சுட்டிக்காட்டப்பட்ட மார்க்சின்
முடிவை முன்நிறுத்தி, லெனின் இந்த கேள்விக்கு
திட்டவட்டமாகப் பதில் சொல்கிறார்: “பழைய
அரசு எந்திரம் தகர்க்கப்பட வேண்டும். ஏனெனில், முதலாளித்துவ அரசு, அரசு அதிகாரத்திலிருந்து
மக்கள் அந்நியப்பட்டுள்ளனர் என்ற அடிப்படையிலேயே அமைந்துள்ளது”.
லெனின்
கூற்றுப்படி, முதலாளித்துவ சமூகத்தில், முதலாளித்துவச் சுரண்டலின் குறுகிய வரம்புகளுக்குள் ஜனநாயகம்
எப்போதுமே நெரிக்கப்படும்; மக்களின் பெரும்பான்மையினர்க்கு பொது மற்றும் அரசியல்
வாழ்க்கையில் பங்களிப்பு மறுக்கப்படும்.
காவுத்ஸ்கி,
பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் போராட்டத்தை, நாடாளுமன்ற பெரும்பான்மை
பெறுவது அரசு எந்திரத்தின் மீது
நாடாளுமன்ற கட்டுப்பாட்டை நிலை நாட்டு வது
என்ற குறிக்கோள்களோடு சுருக்கிக் கொள்ளும் போது, லெனின் பாட்டாளி
வர்க்கத்தின் பின்வரும் தன்மைகள் கொண்ட ஒரு பிரதிநிதித்துவ
அவையை முன்வைக்கிறார். “அது, ஒரே நேரத்தில்
செயல்படுத்தும் தன்மை கொண்ட மற்றும்
சட்டமியற்றும் தன்மை கொண்ட ஒரு
செயல்படும் அமைப்பாக இருக்க வேண்டும்; அங்கு
வாக்காளர்கள் திரும்ப அழைக்கும் உரிமை
கொண்டிருப்பார்கள்; பிரதிநிதிகள் தாம் இயற்றிய சட்டங்களை
அமல்படுத்த பொறுப்பேற்க வேண்டும்; வேலை செய்ய வேண்டும்;
அவற்றின் தாக்கம் நிஜ வாழ்வில்
சோதிக்கப்படும், அவர்கள் நேரடியாக வாக்காளர்களுக்குப்
பொறுப்பாவார்கள்”.
“மக்கள்
திரளினர் தேர்தல்களில் வாக்களிப்பதோடு, அரசின் அன்றாட நிர்வாகத்திலும்
சுதந்திரமான பங்கு வகிக்க எழுவார்கள்.
சோசலிசத்தின் கீழ் மக்கள் அனைவரும்,
அவரவர் முறைக்கு ஏற்ப நிர்வகிப்பார்கள்; விரைவில்
எவரும் நிர்வகிப்பதில்லை என்பது பழக்கப்பட்டுப் போகும்.”-
அரசும் புரட்சியும், லெனின்.
லெனினைப்
பொறுத்தவரையில் பாரீஸ் கம்யூன் அத்தகைய
ஓர் அமைப்பாகும்; ரஷ்யப் புரட்சிக்குப் பிறகு
சோவியத்துக்கள் அத்தகைய அமைப்பாக எழுந்தன.
அரசு என்பதைப்
பொறுத்தவரை, கம்யூனிச சமூகத்தின் முதல் கட்டத்தில் சோசலிச
அரசே கூட முதலாளித்துவ அரசின்
ஓர் எச்சம் என்ற அளவுக்குச்
சொல்கிறார்.
“இனியும்
முதலாளிகள் இல்லை, வர்க்கங்கள் இல்லை,
விளைவாய் எந்த வர்க்கங்களையும் ஒடுக்குவதற்கில்லை
என்ற விதத்தில் அரசு உலர்ந்து விடுகிறது.
ஆனால் யதார்த்தத்தில் சமத்துவமின்மையை நியாயப்படுத்தும், ‘முதலாளித்துவ விதியை’
பாதுகாப்பது இன்னமும் நிலவுவதால், அரசு இன்னமும் முதன்மையாக
உலர்ந்து போய்விடவில்லை. அரசு முழுமையாய் உலர்ந்து
உதிர, முழுமையான கம்யூனிசம் அவசியமாகும்.”
அதனால்தான்,
கம்யூனிசத்தின் முதல் கட்டத்தில் முதல்
படியில், கம்யூனிசம் இன்னமும் முழுமையாக பொருளாதார ரீதியாக முதிர்ச்சி அடைந்திருக்க
முடியாது; முதலாளித்துவ மரபுகள் மற்றும் எச்சங்களிடமிருந்து
முழுமையாக சுதந்திரம் அடைந்திருக்காது. அதனால்தான், கம்யூனிசம் தன் முதல் கட்டத்தில்
‘முதலாளித்துவ விதியின் குறுகிய தொடுவானத்தை’ தக்க
வைத்துக் கொள்ளும், சுவையான நிகழ்வுப்போக்கு இருக்கிறது.
நிச்சயமாய், நுகர்வுப் பண்டங்களை விநியோகித்தல் தொடர்பான முதலாளித்துவ விதி, முதலாளித்துவ அரசின்
இருத்தலை முன் அனுமானம் செய்கிறது.
ஏனெனில் சட்ட விதிகளை அனுசரிப்பதை
அமல்படுத்தும் ஆற்றல் உள்ள ஒரு
பொறியமைவு இல்லாமல், சட்டம் பொருளற்றதாகிவிடும்.
இதிலிருந்து,
“கம்யூனிசத்தில், ஒரு நேரம் வரை,
முதலாளித்துவ சட்டம் மட்டும்
அல்லாமல், (முதலாளித்துவம் இல்லாமல்) முதலாளித்துவ அரசும் கூட இருக்கிறது
எனக் காண முடியும்” (அரசும்
புரட்சியும்).
பாரீஸ்
கம்யூன் நாட்களில் இருந்து, ரஷ்ய சீனப் புரட்சிகள்
வரை, பாட்டாளி வர்க்க அரசியல்
அதிகாரம் தொடர்பான பல பரிசோதனைகளை நாம்
கண்டுள்ளோம். சீனத்தின் கலாச்சாரப்
புரட்சி, பாட்டாளி வர்க்க அரசு அதிகாரத்தின்
இயல்பு மற்றும் வடிவம் தொடர்பான
துடிப்பான விவாதங்களைக் கண்டது. சமீபத்திய வருடங்களில்
சோசலிசம் சந்தித்த பின்னடைவும், இந்த விவாதங்களைத் தீவிரப்படுத்தியுள்ளது.
சமூக ஜனநாயகம், நாடாளுமன்ற ஜனநாயகத்தை, ஜனநாயகத்தின் இறுதி எல்லையாக ஏற்றுக்கொள்ளும்போது,
அராஜகவாதமோ, அதன் முதிர்ச்சியற்ற நாடாளுமன்ற
ஜனநாயக மறுப்பின் மூலம் ஜனநாயகத்தையே மறுப்பதாக
முடிகிறது. ஆகவே, இன்று மார்க்சிஸ்டுகள்,
நாடாளுமன்ற ஜனநாயக எல்லைகள் தாண்டிய
பாட்டாளி வர்க்க ஜனநாயகத்தின் பரந்த
வடிவங்களைக் கண்டறிய வேண்டிய அடிப்படை
சவாலைச் சந்திக்கின்றனர்; இதன் மூலம், வரும்
நூற்றாண்டில், உலக முதலாளித்துவத்தின் வெற்றி
சோசலிசத்தின் வெற்றியாக மட்டுமின்றி, ஜனநாயகத்தின் வெற்றியாகவும் காணப்படும்.
சர்வதேச
கம்யூனிச இயக்கத்தின் கடைசி 150 ஆண்டு கால அனுபவங்களில்
இருந்து எழும் கேள்விகளின் வெளிச்சத்தில்,
‘கம்யூனிஸ்ட் அறிக்கையில் பல மாற்றங்கள் செய்ய
முடியும்.ஆனால், அறிக்கை ஒரு
வரலாற்று ஆவணமாகிவிட்டதால், அதை மாற்ற எங்களுக்கு
இனி உரிமை இல்லை’ என
1872 ஜெர் மன் பதிப்புக்கான முன்னுரையில்
மார்க்சும் எங்கல்சும் எழுதியுள்ளனர். ஆம். மிகவும் குறிப்பாக
ஆவணம் முன்வைத்த பொது கோட்பாடு கள்
150 ஆண்டுகளாக ஏறத்தாழ உண்மையாகவே உள்ளன
என்பதால், இன்று யாருக்குமே அந்த
உரிமை இல்லை. ஆனால், இந்தக்
கோட்பாடுகளை நடைமுறையில் அமலாக்குவது, ஒரு குறிப்பிட்ட நாடு
அல்லது காலத்தின் வரலாற்றுச் சூழலைச் சார்ந்தது ஆகும்.
பாசிசம்: சம காலப் புரிதலும் சவால்களும்
ஒவ்வொன்றும் ஒரு விதம்
பாசிசம்
நாசிசம் என்ற சொற்கள் 1930 களில்
1940களில்தான் உலகிற்கு அறிமுகமாயின. மார்க்சிய - லெனினியம், மூர்க்கமாக முன்னேறும் ஏகாதிபத்தியத்தோடு தொடர்புப் படுத்தியே, அன்று பாசிசத்தை விவரித்தது.
மார்க்சிய -லெனினியம், உயிரற்ற மூடுண்டு போன
விஷயம் அல்ல; அது ஒரு
வற்றாத ஜீவ ஊற்று. 1930 - 1940 காலத்தோடு,
சமூக வாழ்வும் வரலாறும் உறைந்து நின்றுவிடவில்லை. ஜெர்மனி
- ஹிட்லர், இத்தாலி - பெனிட்டோ முசோலினி ஜோடிகளுடன் ஆசியாவின் ஜப்பானும் பாசிஸ்ட்களாக அடையாளம் காணப்பட்டனர். அவையும் ஒரே சீரான
தன்மைகள கொண்டவை அல்ல. அந்தக்
காலத்திலேயே, ஸ்பெயினில் பிரான்சிஸ்கோ பிராங்கோ, போர்ச் சுகல்லில் அந்தோனியோ
டி ஒலிவெய்ரோ சலேசார், ஹங்கேரியில் மிக்கோலஸ் ஹோர்சி, ருமேனியாவில் அயன்
அன்டலோஸ்கு என்ற பாசிச சர்வாதிகாரிகளும்
இருந்தனர். பின்னர், கீழை நாடுகளிலும், ஆசிய,
தென்அமெரிக்க நாடுகளிலும் பாசிஸ்ட் ஆட்சிகள் இருந்துள்ளன. இந்தோனேஷியா சிலி ஆகிய நாடுகளை
அடையாளப்படுத்த முடியும். அவசர நிலைப் பிரகடன
கால இந்திரா ஆட்சி, சிறீலங்காவின்
ராஜபக்சே ஆட்சி ஆகியவற்றையும் பாசிஸ்ட்
ஆட்சிகளாகக் காட்டமுடியும். இப்போதைய சங் பரிவாரின் அங்கமான
பாஜகவின் நரேந்திர மோடியின் ஆட்சியை, பெருந்தொழில்குழும மதவெறி (கார்ப்பரேட் கம்யூனல்)
பாசிஸ்ட் ஆட்சி என அழைக்கலாம்.
வேறுபாடுகள் தாண்டிய அடிப்படையான ஒற்றுமை
சுவையான
ஒரு முரணுடன் (துணைத் தலைப்புடன்) துவங்கலாம்.வேற்றுமைகளில் ஒற்றுமையை நிராகரிப்பது, பாசிஸ்ட்களின் பொதுப் பண்பு. பாசிஸ்ட்களும்
கூட, முதலாளித்துவ
அமைப்புபற்றி அதில் உள்ள ஊழல்
போன்ற விஷயங்கள் பற்றி காரசாரமாக விமர்சிப்பது,
தேச மக்களின் வளமான வருங்காலம் பற்றிப்
பேசுவது போன்றவற்றைச் செய்வார்கள். ஹிட்லரின் கட்சியின் பெயரில், ‘தேசிய’‘சோசலிஸ்ட்’
என்ற சொற்கள் இருந்தன.
ஆனபோதும், சாராம்சத்தில், பாசிச ஆட்சிகள் அனைத்துமே,
தனிச் சொத்தின் பாதுகாவலர்களே. வருமானங்கள் மற்றும் செல்வங்களை, ஆகக்
குறைவான சிலர் கைகளில் குவிக்கும்,
ஏகப்பெரும்பான்மை மக்களிடம் இருந்து பறிக்கும், சமூக
அமைப்பிற்கு பொருளாதாரத்திற்கு, அரசியல்ரீதியாகத் தலைமை தாங்குவார்கள். அடிப்படை
ஒற்றுமை, இந்த படுமோசமான, பாரதூரமான
பொருளாதார மறுவிநியோகத்துடன் தொடர்புடையதாகும்.
நாட்டுப்பற்று
தேசியம் தேச நலன் தேசப்
பெருமிதம் தேசப் பாரம்பரியம் எனக்
கொடி பிடிப்பார்கள். இன நிற மொழி
சாதி மத அடிப்படைகளிலான ஆதிக்க
வாதத்தை (சாவுனிசம் - டாமினேஷன்), ‘நாம் எதிர் அவர்கள்’
என்ற சமன்பாட்டைக் கட்டமைத்து, சமூகப் பதட் டத்தை
சமூகப் பிளவுகளை உருவாக்குவார்கள்; அவற்றின் துணை கொண்டு, அவற்றின்
மீது நின்று கொண்டு, ஒரு
வலுக்கட்டாயமான ஒழுங்கை ஒற்றுமையைத் திணிப்பார்கள்.
துப்பாக்கி தடி கொண்டு என்று
மட்டுமல்லாமல், சமூகத்தின் சிந்தனையின் மீது மேலாதிக்கத்தை தற்காலிகமாக
வென்று நிறுவவும் செய்வார்கள்.
ஆனால்,
வெவ்வேறு நாடுகளின் வெவ்வேறு வரலாற்றுக் கட்டங்களின் தன்மைகளை, கூறுகளைப் பெறுகிற பாசிசம், முதலாளித்துவ
நெருக்கடி முற்றும் போது, நெருக்கடியிலிருந்து மீளும்
முயற்சியில, ஆளும் வர்க்கங்களின் ஆகப்
பிற்போக்கான பிரிவினர் உந்தித் தள்ளும் அரசியல்
பதில்வினையாகவே, எப்போதும் இருந்துள்ளது. பாசிசத்திற்கும் நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கும் தேர்தல்களுக்கும் தொடர் பில்லை எனக்
கருதுவது, அரசியல் அறியாமையே.
(நாடாளுமன்ற ஜனநாயகமே, ஏகப் பெரும்பான்மை உழைக்கும்
மக்கள் வாக்குகளுடன், முதலாளிகளுக்காக ஆட்சி நடத்துகிற, முதலாளித்துவ
சர்வாதிகாரம்தான்). 534 நாடாளுமன்ற இடங்களில் 282 இடங்களை வென்றும் கூட
பாசிசம் ஆட்சிக்கு வரும்.
சமகால உலகில், அய்க்கிய அமெரிக்கா
தலைமை தாங்கும் ஒரு ‘சர்வதேச அளவிலான
பயங்கரவாத எதிர்ப்புப் போர்’
நீடிக்கும் போது,
வன்மையான அரசு கடுமையான சட்டங்கள்
(ஏஅதஈ நபஅபஉ ஏஅதநஏ கஅரந)
அடிப்படையிலேயே ‘ஜனநாயக ஆட்சிகள்’ நடை
பெறும்; அங்கு பாசிசக் கூறுகளின்
‘அளவு’
மாற்றம், ஒரு கட்டத்தில், முழுமையான
பாசிச அரசு என்ற ‘பண்பு’
மாற்றமாக மாறும். அளவு மாற்றம்
பண்பு மாற்றமாகிறது என்பது சரியே என்றாலும்,
இந்தப் புதிய பிரும்மாண்டமான ‘அளவும்’,
இந்தப் புதிய ‘பண்பும்’ கூட,
சமூகம் இதுவரை சந்தித்திராத கொடூரங்களை
அரங்கேற்றும் என்பதும், அவற்றை எதிர் கொள்ள,
வழக்கத்திற்கு மாறான பதில்வினைகள் தேவை
என்பதும், கவனத்தில் கொள்ளத்தக்கவையாகும். தகவல் தொழில்நுட்பம், தொலை
தொடர்பு, சமூக ஊடகங்கள் பரந்து
விரிந்துள்ள உலகில், நாடாளுமன்ற ஜனநாயக
மரபுகள் பழகிப் போயுள்ள உலகில்,
ஒரு முழு முற்றூடான பாசிச
ஆட்சி, அப்படியே நீடிப்பதும் மிகவும் கடினமாகும்.
முதலாளித்துவ நெருக்கடி
கருவான முதலாளித்துவப் பொருளாதாரங்கள்,
மெதுவான வளர்ச்சி, அதிகரிக்கும் வேலை இன்மை, குறை
வேலை வாய்ப்பு, வீணாக்கப்படும் உற்பத்தி ஆற்றல் ஆகியவற்றால் குறிக்கப்படும்
நீண்ட கால தேக்கத்தைச் சந்திக்கின்றன.
வளர்ச்சி விகிதம் என்பதில் ஒரு
நீண்டகால சரிவுப் போக்கு தொடர்கிறது.
வருமான மற்றும் செல்வ ஏற்றத்தாழ்வு,
மலைக்கும் மடுவுக்கும் இடையிலானதாக மாறிவிடுகிறது.
தேக்கமும் ஏற்றத்தாழ்வும் ஒன்றிலிருந்து ஒன்று உருவாகி ஒன்றை
ஒன்று பலப்படுத்தவும் செய்கின்றன.
வால் ஸ்ட்ரீட்டைக் கைப்பற்றுவோம்
இயக்கம், முதலாளித்துவப் பொருளாதாரத்தின், அசிங்கம் பிடித்த ரகசியங்களை வெளியே
கொண்டு வந்துள்ளது. வருமான, செல்வ ஏற்றத்
தாழ்வுகள் பாரதூரமாய் அதிகரிக்கின்றன என்ற விவரங்கள் இதற்கு
முன்பும் கிடைத்தனதான் என்றபோதும், இப்போது 99% எதிர் 1% இயக்கத்திற்குப் பிறகு, அவை, போதுமான
ஊடக, சமூக ஊடக கவனம்
பெறுகின்றன.
சில விவரங்கள்
எக்கனாமிக் பாலிசி இனிஷியேடிவ் - பொருளாதார
கொள்கை முன்முயற்சி அமைப்பு 1979 முதல் 2013 வரை உற்பத்தித் திறன்
உயர்வு 68.9% இருந்தும், தனியார் துறையின் 80% உற்பத்தித்
தொழிலாளர்களின் வருமானம் 8% மட்டுமே உயர்ந்தது என்கிறது.
அய்க்கிய அமெரிக்காவின் மக்கள் தொகை 32 கோடி.இதில் வயது வந்தோர்
26 கோடி.அவர்களில் 1% என்பது 26 லட்சம். 0.1% 2.6 லட்சம். 0.01% 26,000 பேர் ஆகும்.
13
கோடி பேரின் வருமானத்தை செல்வத்தை
400 பேர் வைத்துள்ளனர்.
1950
முதல் 1970ல் சமூகத்தின் கடைநிலை
90% சம்பாதிப்பவர்கள், 1 டாலர் கூடுதலாகச் சம்பாதித்தபோது,
மேல் நிலை 0.01%, அதாவது சுமார் 14,000 குடும்பங்கள்
162 டாலர்கள் சம்பாதித்தனர். அதாவது 162 மடங்கு ஏற்றத்தாழ்வு. இதே
ஏற்றத்தாழ்வு 1990 - 2002 காலகட்டத்தில் 18,000 மடங்கானது.
அய்ரோப்பாவில் சில விளைவுகள்
ஏற்றத்தாழ்வுகள்,
ஒட்டுமொத்த தேக்கத்தை ஆழப்படுத்தி தீவிரமடைய வைத்துள்ளன.ஸ்பெயின் கிரீஸ் இங்கிலாந்து பிரான்ஸ்
போன்ற அய்ரோப்பிய நாடுகளில் கரத்தாலும் கருத்தாலும் உழைப்பவர்கள், போர் எதிர்ப்பாளர்கள் பல
லட்சங்களில் அணி திரள்கிறார்கள். அதே
நேரம், கிரீஸ், இங்கிலாந்து, பிரான்ஸ்,
ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, ஏன், நார்வே ஸ்வீடன்
டென்மார்க் போன்ற நாடுகள் உட்பட,
இசுலாமிய எதிர்ப்பு, அகதிகள் எதிர்ப்பு மனோ
நிலை பரவி வருகிறது. அய்ரோப்பா
நெடுக இசுலாமியப் பெண்கள் பொது வெளிகளில்
பர்தா அணியக் கூடாது, மசூதிகளில்
இருந்து வெளியில் கேட்குமாறு ஓதக் கூடாது என்ற
நிர்ப்பந்தங்கள் அதிகரித்து வருகின்றன. அதிகார பூர்வமாகி வருகின்றன.
ஓரஞ்சாரம் விளிம்பு நிலை என்ற நிலை
மாறி, பாசிஸ்ட்கள் நாஜிக்கள் என்ற அவப்பெயர்கள் தாண்டி,
அவர்கள், அரசியல் மய்யத்திற்கு வந்துள்ளனர்.
‘தேசிய வாதிகள், தேச பக்தர்கள்’ ஆகியுள்ளனர்.
முன்னாள்
கிழக்கு ஜெர்மனியின் டிரெஸ்டன் நகரில், கிறிஸ்துமஸ் பாடல்களை பாடிக்கொண்டு,
17,000 பேர், ‘மேற்குலகம் இசுலாமியமயப்படுத்தப்படுவதற்கெதிரான
அய்ரோப்பியர்கள்’
என்ற பதாகையின் கீழ் அணிதிரண்டனர். ‘அய்ரோப்பாவின்
கிறிஸ்துவ கலாச்சாரம் மற்றும் மரபுகளின் வேர்கள்
அரித்துப் போகவைக்கப்படுகின்றன; நாங்கள் நாஜிக்கள் அல்ல,
தேச பக்தர்களே’
என்கிறார்கள். அய்ரோப்பாவிலேயே, வளர்ச்சியடைந்த ஒப்பீட்டுரீதியில் ஸ்திரமான பொருளாதாரம், ஜெர்மனியினுடையதாகும். நாஜிக்களின் வதை முகாம்கள் என்ற
கொடூர வரலாற்றின் வடுக்கள் நிறைந்தது ஜெர்மனி. அந்த ஜெர்மனியின் பின்
தங்கிய பகுதி, முன்னாள் கிழக்கு
ஜெர்மனியாகும். இது முன்னாள் சோசலிச
முகாமைச் சேர்ந்ததும் கூட. இங்குதான் விஷமெனப்
பரவுகிறது மதவெறி. கூடவே‘தேசியம்’.
ஆனால்,
ஜெர்மானிய சமூகத்தில், ‘பொருளாதாரம்’,
நாஜி அரசியலை விமர்சனம் செய்கிறது.
ஜெர்மன் பெடரேஷன் ஆஃப் இண்டஸ்ட்ரீஸ் தலைவரான
உல்ரிச் கிரில்லோ, ‘ஒரு வளமான நாடு
என்ற விதத்திலும், சக மனிதர்களிடம் கிறிஸ்துவ
அன்பு காட்டும் விதத்திலும், நம் நாடு கூடுதல்
அகதிகளை எடுத்துக் கொள்ள வேண்டும்’ என்கிறார்.
அய்ரோப்பாவின் முதன்மை நிலையில் உள்ள
பொருளாதாரம், போட்டியில் நிற்க, வெளி நாடுகளிலிருந்து
வரும் அகதிகள் அவசியம் என,
முதலாளித்துவ நலன்கள் நிர்ப்பந்திக்கின்றன.
இந்தியாவில் பாசிசம்
இந்திரா காந்தி அவசரநிலைப்
பிரகடனம் செய்து ஒரு பாசிச
ஆட்சியை நடத்தினார். விரைவில் ஒரு தேர்தல் நடத்தி
தோற்றும் போனார். பாசிச ஆட்சி
நீடிக்க முடியவில்லை.
சங் பரிவாரின் பாசிச
ஆட்சி திடீரென
ஓரிரவில் தோன்றியதல்ல. பாரதிய ஜனதாவும் சங்
பரிவாரும், அரசியல் தீண்டாமையிலிருந்து, ஜனதா
காலத்திலேயே வெளியே வந்து விட்டார்கள்.
வாஜ்பாய் காலத்திலேயே, ஆகக் கூடுதல் கட்சிகள்
கூட்டணியுடன் தேசிய ஜனநாயகக் கூட்டணி
அமைக்கப்பட்டுவிட்டது. வேறு வேறு கட்டங்களில்,
வேறுவேறு சூழல்களில், ஆகக் குறைவான சில
அரசியல் இயக்கங்கள் தாண்டி, பாரதிய ஜனதா
கட்சியோடு பல கட்சிகளும் உறவாடி
உள்ளன.
சர்ச்சிலுக்கு முன் இங்கிலாந்தின் பிரதமராக
இருந்த சேம்பர்லைன், ஹிட்லர், ஜான் கேட்டால் முழம்
கொடுத்தார். காங்கிரசின் துவக்க காலத்திலிருந்தே, அது
மென்மையான இந்துத்துவா கட்சியாகும். இந்திரா பிரதமராக இருந்தபோதே,
அவரது ஆலோசனையின் பேரில் மத்தியபிரதேசம், ஒடிஷா
மாநிலங்களில் மதமாற்றத் தடைச் சட்டங்கள் வந்தன.
ராஜீவ் காலத்தில்தான், ஷிலன்யாஸ் பூஜைக்கென, மசூதியின் கதவுகள் திறக்கப்பட்டன.நரசிம்மராவ்
அரசு வேடிக்கை பார்த்தபோதுதான் மசூதி இடிக்கப்பட்டது.
காங்கிரஸ் அரசுகள், மதவாதக் குற்றம் புரிந்த
பால் தாக்கரே, நரேந்திர மோடி மீது எந்த
குற்றவியல் நடவடிக்கைûயும் எடுக்கத் துணியவில்ûலை.
1999
முதல் 2004 வரை வாஜ்பாய் பதவியில்
இருந்த காலத்திலிருந்து, 2014 துவங்கி உள்ள மோடி
பதவிக்காலம் நிச்சயம் மாறுபட்டது. இந்தக் கட்டம் தோன்றுவதும்,
காங்கிரசின் வரலாற்றுச் சரிவு ஒரு பண்பு
மாற்றத்தை அடைவதும், ஒரு சேர நடந்துள்ளன.
காங்கிரஸ், ஜனசங்கம்- பாஜக 1969 முதல் 2014 வரை நாடெங்கும் வென்றுள்ள
சட்டமன்ற இடங்களிலிருந்து, சங் பரிவார் நாடெங்கும்
பரவியுள்ளதையும் காங்கிரஸ் சரிந்துள்ளதையும், காண முடியும்.
நேரடி, முழுமுற்றூடான, பாசிச
ஆட்சி இல்லாதபோதே, இந்திய பாதுகாப்பு விதிகள்
(ஈஐத), எஸ்மா, மிசா, தேசிய
பாதுகாப்பு சட்டம், தடா, பொடா,
சட்டவிரோத நடவடிக்கைகள்
தடுப்புச் சட்டம், ஆயுதப் படைகள்
சிறப்பு அதிகாரங்கள் சட்டம், நாடெங்கும் உள்ள
நகரங்களில் 15.08.1947ல் இருந்தே அனுமதியின்றி
கூட்டம் பேரணி நடத்த முடியாது
என்பவையும் தொடர்வதில், சுலபமாக பாசிசக் கூறுகளைக்
காண முடியும்.
பசுமை
வேட்டை, போலி மோதல் படு
கொலைகள், ஊரடங்கு உத்தரவு, கலவரப்பகுதி
பிரகடனம் எப்போதும் இருப்பவை. கருத்துச் சுதந்திரப் பறிப்பும், ஆணாதிக்க சாதிய தார்மீக காவல்
கண்காணிப்பும் தொடர்கதை என்பதிலும் பாசிசக் கூறுகளைக் காண
முடியும்.
தமிழ்நாட்டில், தேவாரம் வெறியாட்டம், மதமாற்ற
தடைச் சட்டம், ஆடு கோழி
பலியிடத் தடை, லட்சக்கணக்கான அரசு
ஊழியர் ஆசிரியர் ஒரே நாளில் வேலை
நீக்கம், கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பை
அந்நிய நாட்டு எதிரி மீதான
போர் போல் கருதி ஒடுக்கியதும்,
பாசிச வெளிப்பாடுகளே ஆகும்.
இப்போதைய பெரும் தொழில் குழும
மதவெறி பாசிச ஆட்சியில், முறைகள்,
அமைப்புக்கள், நிறுவனங்கள் (பெயரளவிலான வையாகவே இருந்தபோதும்) போன்றவை
ஓரங்கட்டப்பட்டுவிட்டு, சர்வ வல்லமை வாய்ந்த
ஆகத் திறன் வாய்ந்தவர் என
மோடி என்ற தனிநபர் முன்நிறுத்தப்படுகிறார்.
இனியும் பாஜக ஓரஞ்சாரக்
கட்சி அல்ல. அது ஒரு
பிரதான நீரோட்டக் கட்சி ஆகும். இங்கிலாந்தின்
பழமைவாதக் கட்சி (கன்சர்வேடிவ்), அய்க்கிய
அமெரிக்காவின் குடியரசுக் கட்சி (ரிபப்ளிக்கன்), போன்றவை
போல், பாஜகவும் பிரதான நீரோட்டக் கட்சி
ஆவதில், வலதுசாரி திசையில் சமூகம் பயணம் செய்வது
ஒரு முக்கியக் காரணமாகும்.
பொருளாதாரக் கொள்கைகளில் தேசிய பிராந்திய பிரதான
நீரோட்டக் கட்சிகளின் கருத்தொற்றுமை, சிபிஅய் சிபிஎம் சரிவு,
மாவோயிஸ்ட் தேக்கம், சிபிஅய்எம்எல்லின் மெதுவான மந்தமான வளர்ச்சி
போன்றவற்றையும் கூட, பாசிச ஆட்சியின்
உதயத்தின் பின்புலமாகக் காண முடியும்.
எதிர்காலம்
இன்று,
மூர்க்கமாக முரட்டுத்தனமாக முதலாளித்துவ லாபங்களைப் பெருக்கும் நடவடிக்கைகளுக்கு
பாஜக உதவுகிறது. அவசரச் சட்டங்கள் போடவும்
தயங்கவில்லை. ஆகவே, ஆளும் வர்க்கங்கள்
பாஜகவை விரும்புகின்றன.நாய் தான் தன்
வாலை ஆட்ட முடியுமே தவிர,
வால் நாயை ஆட்ட முடியாது.
இந்தியப் பொருளாதாரம் வளரவில்லை என்றால், பாஜக ஆளும் வர்க்கங்களின்
செல்லப் பிள்ளையாகத் தொடர முடியாது. பொதுவாக
சாமான்ய மக்கள், குறிப்பாக நடுத்தர
மக்களின் கீழ் மத்தியப் பிரிவினரின்
வாழ்க்கைத் தரம் உயரவில்லை, மாறாக
சரிகிறது என்ற நிலை நீடித்துத்
தொடர்ந்தால், பாஜக ஆட்சி தொடர
முடியாது. முதலாளித்துவப் பொருளாதார நெருக்கடி, இந்தியாவில் தீர்வு பிறந்து, இந்தியப்
பொருளாதாரம் பாய்ச்சலில் முன்னேற, பேரதிசயங்கள்
பொருளாதாரத்தில் நிகழ்வதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை.
மக்களின்
வாழ்வுரிமை மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கான
இயக்கம், அடிப்படையான அனைத்தும் தழுவிய சமூக மாற்றத்திற்கான
இயக்கம், இந்திய மக்களின் போர்க்குணமிக்க
போராட்ட ஒற்றுமை என்பவற்றில் மட்டுமே
பாசிசத்திற்கெதிரான முறிவு மருந்து உள்ளது.
இடதுசாரி கட்சிகள் கூட்டியக்கம்
சிபிஅய்எம்எல்,
சிபிஅய்எம், சிபிஅய், எஸ்யுசிஅய்,சி ஆகிய இடதுசாரிக்கட்சிகள்
இணைந்து டிசம்பர் 8 முதல் 14 வரை இயக்கம் நடத்திட
அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து மாலெ கட்சி மாநிலம்
முழுவதும் பல்வேறு முன்முயற்சிகள் மேற்கொண்டது.
விருதுநகர்
மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் 08.12.2014
அன்று நடைபெற்ற கூட்டத்தில் இககமாலெயின் தோழர் ஆர்.ராஜேந்திரன்,
கூடலிங்கம், இகக மாநிலக் குழு
உறுப்பினர் தோழர் ராமசாமி, மாவட்டக்
குழு உறுப்பினர் தோழர் முருகேசன், இககமா
மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர் கே.அர்சுணன்,
ஒன்றியக் குழு உறுப்பினர் தோழர்
சிங்கராஜ் ஆகியோர் உரையாற்றினர்.
ராஜபாளைத்தில்
08.12.2014 அன்று நடைபெற்ற கூட்டத்தில் இககமாலெயின் தோழர் ஆவுடையப்பன், அழகர்,
இகக மாநிலக் குழு உறுப்பினர்
தோழர் பி.லிங்கம், மாவட்டக்
குழு உறுப்பினர் தோழர் ராமசாமி, இகக
மா மாவட்ட செயற்குழு உறுப்பினர்
தோழர் ஏ.குருசாமி, ஒன்றிய
குழு உறுப்பினர் தோழர் ராமர் ஆகியோர்
உரையாற்றினர்.
09.12.2014 அன்று
குமரி மாவட்டம் கிள்ளியூர் கருங்கல் பகுதியில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் இககமாலெ மாநிலக் குழு
உறுப்பினர்கள் தோழர்கள் அந்தோணிமுத்து, மேரி ஸ்டெல்லா, இகக மாவட்டச் செயலாளர்
தோழர் துரைராஜ், இகக மா மாவட்ட
செயற்குழு உறுப்பினர் தோழர் முருகேசன் ஆகியோர்
உரையாற்றினர். .
புதுக்கோட்டையில்
டிசம்பர் 10, 12 மற்றும் 15 தேதிகளில் நடைபெற்ற வாகன பிரச்சார தெருமுனைக்
கூட்டங்களில், இகக மாலெ மாவட்டச்
செயலாளர் தோழர் ஆசைத்தம்பி, மாவட்டக்
கமிட்டி உறுப்பினர்கள் தோழர்கள் வளத்தான், ஜோதிவேல், இகக மாவட்டச் செயலாளர்
தோழர் செங்கோடன், இககமா மாவட்டக் குழு
உறுப்பினர்கள் தோழர்கள் அன்பழகன், பொன்னுசாமி, உடையப்பன் ஆகியோர் உரையாற்றினர்.
சீர்காழியிலும்
இடதுசாரி கட்சிகளின் முன்முயற்சிகள் கட்டமைக்கப்பட்டன.
ஜார்கண்ட் மற்றும் ஜம்மு காஷ்மீர் தேர்தல் முடிவுகளும்
மோடி அரசாங்கத்தின் தொடரும் கார்ப்பரேட் மற்றும் வகுப்புவாத தாக்குதலும்
2014 இறுதியில்
அறிவிக்கப்பட்ட தேர்தல் முடிவுகள்படி, பாஜக
எதிர்பார்த்தபடியே ஜார்கண்ட்டை
தனது வரவில் சேர்த்துக் கொண்டது.
அதே நேரத்தில், மிகவும் பிரிந்தும், பிளவு
பட்டும் கிடந்த ஜம்மு மற்றும்
காஷ்மீரில் இரண்டாவது தனிப் பெரும் கட்சியாக எழுந்துள்ளது.
இந்த இரண்டு மாநில சட்டமன்றங்களிலும்
இதுவரை இல்லாத அளவு கட்சி
வெற்றி பெற்றிருந்தாலும், பாஜகவும், தேர்தல் கருத்துக் கணிப்பாளர்களும்
தாராள மனதோடு கணித்த, எதிர்பார்த்த
எண்ணிக்கைக்கு குறிப்பிடத்தக்க அளவு குறைவாகவே முடிவுகள்
வந்தி ருக்கின்றன. காஷ்மீரில் பாஜக, பள்ளத்தாக்குப் பகுதியில்
ஓர் இடம் கூட பெற
முடியவில்லை. ஜார்கண்டில் அனைத்து ஜார்கண்ட் மாணவர்
அமைப்போடு (எஜேஎஸ்யு) கடைசி நேர தேர்தல் உடன்படிக்கை செய்திராவிட்டால்
அறுதிப் பெரும்பான்மை கிடைத்திருப்பது கடினம்தான்.
பாஜகவின்
மய்ய முழக்கமான, தெளிவான முழுமையான அறுதிப்
பெரும்பான்மை என்ற முழக்கம் ஜார்கண்ட்
வாக்காளர்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
மாறாக இது நாள் வரை
அதிகாரத்தில் இருந்த ஒவ்வொரு தலைவரையும்
மக்கள் புறக்கணித்திருக் கிறார்கள். பாஜகவின் முன்னாள் முதல்வரான பாபுலால் மராண்டி அவரது சொந்தத் தொகுதியான
தன்வாரில் இகக(மாலெ)யின்
ராஜ்குமார் யாதவால் தீர்மானகரமாக தோற்கடிக்கப்பட்டார்.
(ஆனால், 1990லிருந்து தொய்வில்லாம லும் 2005ல் தோழர் மகேந்திர
சிங் படு கொலையை அடுத்து
எதிர்த்து நின்றும் தக்க வைத்து வந்த
வரலாற்றுச் சிறப்புமிக்க பகோதர் தொகுதியில், துரதிஷ்டவசமாக
கட்சி கண்டுள்ள தோல்வியோடு சேர்ந்தே இந்தக் குறிப்பிடத்தகுந்த வெற்றி
வந்துள்ளது). அதே நேரம், இன்னுமொரு
பாஜக முதல்வர் அர்ஜ÷ன் முண்டா அவரது
பாரம்பரியமான கார்சவான் தொகுதியில் மண்ணைக் கவ்வினார். எல்லோரா
லும் நன்கு அறியப்பட்ட ஊழல்
பேர்வழியான மது கோடா மஜ்கனான்
தொகுதியில் தோற்றுப் போனார். துணை முதல்வரும்
எஜேஎஸ்யுவின் தலைவருமான சுதேஷ் மகடோ சில்லி
தொகுதியில் தோற்கடிக்கப்பட்டார்.இப்போது வெளியேறும் ஜேஎம்எம்மின்
முதல்வர் ஹேமத் ஷோரன் கூட
தும்கா தொகுதியில் இரண்டாவதாகத்தான் வந்தார்.
ஜார்கண்டில்
பாஜக - எஜேஎஸ்யு கூட்டணிக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுப்பது
முக்கியமான சவாலாகும். ஜார்கண்ட் அரசாங்கம் மோடி சர்க்காரின் ஒரு
கிளைதான் என்று முன்னிலைப்படுத்தி தேர்தல்
பிரச்சாரத்தின் போது இந்தக் கேள்வி
பின்னுக்கு தள்ளப்பட்டது. இன்னொரு பக்கம் ஜம்மு
காஷ்மீரில் தொங்கும் சட்டமன்றம் உருவாகியிருக்கிறது. இது புதிய அரசாங்கம்
உருவாக்குவது என்ற மொத்தப் பிரச்சனையையும்
தேர்தலுக்கு பிந்தைய நுட்பமான கணக்குகளின்
தயவிற்கு விட்டுச் சென்றிருக்கிறது. அரசியல் சாசன பிரிவு
370அய் நீக்குவது என்ற அறைகூவலை தற்காலிகமாக, செயல்தந்திரரீதியில் மூடி வைத்திருக்கிற அதே
வேளையில், டெல்லியில் ஆட்சிக்கு வந்துள்ள மோடி அரசாங்கத்தின் அய்யத்திற்கிடமற்ற
இந்துத்துவாவின் முழுமையான நிகழ்ச்சிநிரல் ஜம்மு காஷ்மீரின் அரசியல்
சூழலை ஏற்கனவே சீர்குலைத்துவிட்டது. காஷ்மீரில் அரசாங்கம்
அமைப்பதில் பாஜகவின் எந்த ஒரு தலையீடும்,
இன்னும் கூடுதல் ஸ்திரமின்மைக்கான வழிமுறையாகவே
அமையும்.
இந்த ஆண்டு முடிவடையும் தறுவாயில்,
தேர்தல் வேகம் குறைந்திருந்த நிலையிலும்,
மோடியின், எல்லாவற்றையும் அழித்தொழிக்கும் சக்தி கட்டவிழ்த்துவிடப்படும் போது, வரும்
ஆண்டு, நிச்சயம், எல்லா முனைகளிலும் நம்
கூட்டு இருத்தலுக்கு மிகப் பெரும் சவால்
விடுப்பதாக இருக்கும்.
அறிகுறிகள்
ஏற்கனவே தெள்ளத் தெளிவாக இருக்கின்றன.
பொருளாதார முனையிலும், எல்லா கேந்திரமான துறைகளையும்
தனியார்மயமாக்குவதை நோக்கி அரசாங்கம் போய்க்
கொண்டிருக்கிறது. உரத்து ஒலித்த ‘இந்தியாவில்
உற்பத்தி செய்வோம்’
முழக்கம் கூட கண்மூடித்தனமான அந்நிய
நேரடி முதலீடு நுழைவதை ஊக்குவிப்பதோடு,
அந்நிய நேரடி முதலீடுக்கான லாபம்
அளிக்கின்ற இடமாக இந்தியாவை விற்பதற்காக
அனைத்து சுற்றுச் சூழல் மற்றும் தொழிலாளர்
உரிமை பாதுகாப்புகள் மீதும் கடுமையான தாக்குதலை
தொடுக்கிறது. இந்தப் பொருளாதார தாக்கு
தலோடு கைகோர்த்து, சங்பரிவாரின் வளர்ந்து வரும் வகுப்புவாத மற்றும்
குறுங்குழுவாத தாக்குதலும், ‘கர் வாப்சி’ மற்றும்
இந்து ராஜ்ஜியம் என்ற கூக்குரலும் ஒரு
முழு நிறைவுத் தன்மை பெறுகிறது. மோடியும்
அவருடைய அமைச்சர் சகாக்களும், அரசியலமைப்புச் சட்ட ஜனநாயக நிறுவனங்கள்
மற்றும் நாடாளுமன்ற பொறுப்புணர்வு மதிப்பீடுகளை அறவே அவமதிப்பது பற்றி
எவ்வித ரகசியமும் காப்பதில்லை.
ஆர்எஸ்எஸ்ஸின்
வளர்ந்து வரும் தாக்குதல், வலதுசாரி
தாராளவாதிகள் என்று சொல்லிக் கொள்பவர்கள்
மத்தியிலான குழப்பத்தை புதுப்பித்திருக்கிறது. இந்துத்துவ தாக்குதல் என்பது சில ஓரஞ்சார
குழுக்களின் வேலை என்றும் மோடி
அவர்களை ஒழுங்கு படுத்துவதிலும், அரசியலமைப்பு
சட்டம் மற்றும் அரசாட்சியின் ‘லட்சுமணக்
கோட்டை’
தாண்டாமல் இருப்பதிலும் காத்திரமாக
உள்ளார் என நாம் நம்ப
வேண்டும் என விரும்புகிறார்கள். இந்தக்
கற்பனையை விட எளிதான ஒன்று
இருக்கவே முடியாது. அவசர நிலைக்குப் பின்னரான
ஜனதா கட்சி ஆட்சி காலத்தில்
சங்பரிவார் பிரதிநிதிகள் தங்களது அடையாளத்தால் தனிமைப்படுதலை
சந்தித்தார்கள்.
வாஜ்பாய்
காலகட்டத்தில், தோற்றத்தையும், உள்ளடக்கத்தையும் சட்டபூர்வமாக்க முகமூடி என்ற ஒப்புமையை
ஏற்படுத்திப் பார்த்தார்கள். இப்போது சங் பரிவாரம்
மோடியை உயர்பதவி வகிக்கும் முதலாவது மற்றும் இயற்கையான விளைபொருள்
என்றது. அரசாங்க செயல்பாடுகளில் ஆர்எஸ்எஸ்ஸின்
தாக்கத்தையும் தலையீட்டையும் விரிவாக்க அரசாங்க செயல்பாடுகளில் ஒவ்வொரு
சந்தர்ப்பத்தையும் பயன்படுத்துகிறார். சங் - பாஜக கூட்டு,
இதைவிட வெளிப்படையாக இருப்பது சாத்தியமில்லை.
தாராளவாதிகள்,
மோடி அரசாங்கத்தின் வளர்ந்து வரும் வகுப்புவாத - எதேச்சதிகார
நோக்கு நிலையிலிருந்து தங்களை பிரித்து நிறுத்துவதற்கான
சவாலை சந்தித்துக் கொண்டிருக்கின்றனர். தாக்குதலை எதிர்கொள்ளக் கூடிய கடமை போராடுகிற
இடதுசாரி கட்சிகளுக்கும், பல்வேறு மக்கள் இயக்கங்களுக்கும்
உள்ளது. காங்கிரசை சக்திவாய்ந்த விதத்தில் அப்புறப்படுத்திய பிறகு, மோடி தலைமையிலான
பாஜக, காங்கிரஸ் ஆட்சியில் இல்லாத மாநிலங்களை குறிவைக்கிறது.
இடதுசாரிகள் இந்தச் சவாலை நேருக்கு
நேர் எதிர் கொண்டாக வேண்டும்.
எல்லா வகையிலும் பார்க்கும் போது, 2015 இந்தியாவின் எதிர்காலத்திற்கான போராட்டத்தில் முக்கிய ஆண்டாகும். எந்தத்
தேர்தல் பின்னடைவுகளையும் எதிர்கொண்டு புரட்சிகர கம்யூனிஸ்டுகள் எல்லா முனைகளிலும் எதிர்ப்புப்
போராட்டத்தைத் தீவிரப் படுத்த வேண்டும்.
ஆதார்:
மக்களுக்கானதல்ல கார்ப்பரேட்
நிறுவனங்களுக்கானது
ஆதார் திட்டத்தில் தமிழ்நாட்டில் இது வரை 5,0087,395 பேர்
உடற்கூறு விவரங்கள் பெறப்பட்டுள்ளன. 4,71,75,490 பேருக்கு ஆதார் எண்கள் தரப்பட்டுள்ளன.
உடற்கூறு விவரங்கள் பெறப்பட்டு, ஆதார் எண்கள் தரும்
வேலை நடந்து கொண்டிருப்பதால் 2015க்கும்
குடும்ப அட்டைகளில் உள்தாள் ஒட்டப்படும் என்று
தமிழ்நாடு உணவுத் துறை முதன்மைச்
செயலாளர் எம்.பி.நிர்மலா
சொல்கிறார். ஆதார் எண்கள் தரப்படும்
வேலைக்கும் குடும்ப அட்டைக்கு உள்தாள்
ஒட்டும் பணிக்கும் முடிச்சு போடப்படும்போது, சமையல் எரிவாயு இணைப்புக்கு
அடுத்து மான்ய இணைப்பு இழக்கப்
போவது குடும்ப அட்டை மூலம்
சாமான்ய மக்கள் பெறும் பயன்கள்
என்று நாம் அனுமானிக்கலாம்.
ஆதாரும் நேரடி மான்யமும்
சமையல்
எரிவாயு உருளை மான்யம் பெற
தமிழக மக்கள் அலைகழிக்கப்படுகிறார்கள். வங்கிக்குப் போ,
கணக்கு துவங்கு, ஆதார் அட்டையை காட்டு,
சமையல் எரிவாயு உருளை முகவரைப்
பார், விவரங்களைக் கொடு என்று கொஞ்சமும்
தேவையில்லாத வேலைகளைச் செய்யச் சொல்கிறார்கள். ஆதார்
அட்டை இல்லை என்றாலும் வங்கிக்
கணக்கு மட்டும் போதும் என்று
இப்போது சொல்லப்பட்டாலும், ஆதார் எண் கிடைத்ததும்
தந்துவிட வேண்டும் என்று மான்யம் பெறுவதற்கான
ஒன்றுபட்ட விண்ணப்பப் படிவத்தில் சொல்லப்பட்டுள்ளது. முகவர்களிடம் முறையான விவரங்களும் அணுகு
முறையும் இல்லை, மக்கள் அவமானப்படுத்தப்
படுகிறார்கள், வங்கிகளிடம் இந்த கூடுதல் வேலைக்குத்
தேவையான மனிதவளம் இல்லை என்ற நிலைமைகளில்
வெறும் ரூ.400க்கு, நிச்சயம்
வருமா வராதா என்ற கேள்வியுடன்,
சாமான்ய மக்கள் பிழைப்புக்கான வேலையை
விட்டுவிட்டு வங்கிகளிலும் சமையல் எரிவாயு உருளை
முகமைகளிலும், இன்று இல்லாவிட்டாலும் நாளை
வேண்டுமே என்பதால், ஆதார் முகாம்களிலும் காத்துக்கிடக்கிறார்கள்.
இந்த நிலைமைகள் உருவாகக் கூடாது என்பதால்தான் ஆதார்
திட்டமும் நேரடி மான்யத் திட்டமும்
வேண்டவே வேண்டாம் என்கிறோம்.ஆனால், இரண்டு திட்டங்களும்
அமலாகத் துவங்கிவிட்டன. பாஜகவின் மக்கள் விரோதத் துணிச்சலும்
அஇஅதிமுகவின் குற்றமய அலட்சியமும் கைகோர்த்துக்
கொண்டு தமிழ்நாட்டின் சாமான்ய மக்களை அல்லாட
வைத்திருக்கின்றன. அனைவரையும் உள்ளடக்கவே என்று சொல்லப்படும் ஆதார்
திட்டம், யதார்த்தத்தில் பெரும்பான்மையானோரை வெளியேற்றவே பயன்படுத்தப்படுகிறது என்பதை சமையல் எரிவாயு
உருளை மான்யம் விசயத்தில் தமிழக
மக்கள் அனுபவித்து உணர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
நலத்திட்டப்
பயன்கள் பெற ஆதார் அட்டையை
கட்டாயமாக்கக் கூடாது என்ற உச்ச
நீதிமன்ற தீர்ப்பு இருக்கிற நிலையில், வங்கிக் கணக்கில் மான்யம்
தரப்படும் என்று சொல்லப் பட்டு,
ஆதார் அட்டையை கட்டாயமாக்காதது ஏதோ
நீதிமன்றம் சொல்கிறபடி நடந்து கொள்வது போல்,
அந்த விதத்தில் மக்களுக்கு ஏதோ சலுகை தரப்பட்டதுபோல்
காட்டப்பட்டு, தமிழ்நாட்டில் நேரடி மானியத் திட்டம்
என்ற பெரிய தாக்குதல் அரங்கேறுகிறது.
இந்த வாழ்வாதாரப் பிரச்சனையில் தமிழ்நாட்டின் எதிர்க் கட்சிகள் பிரச்சனையின்
தீவிரத்துக்கு ஏற்ப, தீவிரமான போராட்டங்களும்
நடத்தவில்லை.
2013ல்
ராஜஸ்தானில் மண்ணெண்ணெய்க்கு நேரடி மான்யத் திட்டம்
அமலாக்கப்பட்டதில், மண்ணெண்ணெய்யை சந்தை விலையில்தான் வாங்க
நேர்கிறது என்றும் மான்யம் தங்கள்
வங்கிக் கணக்குகளில் முறையாக செலுத்தப்படுவதில்லை என்றும்
மக்கள் புகார் எழுப்பினர். தமிழ்நாட்டு
மக்களுக்கு சமையல் எரிவாயு மான்யம்
விசயத்தில் இதே போல் நேரத்தான்
வாய்ப்புக்கள் அதிகம். ஆதார் அட்டை
தருவதாகச் சொல்லி சில கிராமங்களில்
தலைக்கு ரூ.30 வாங்கி மக்கள்
ஏமாற்றப்பட்ட நிகழ்வுக ளும் ராஜஸ்தானில் நடந்தன.
பாஜகவின்
ஆதார்: அன்றும் இன்றும்
2014 மக்களவை
தேர்தல்களுக்கு முன்பு, நேரடி மான்யம்
மற்றும் ஆதார் திட்டங்களை
குஜராத்திலும் ராஜஸ்தானிலும் அமலாக்கிக் கொண்டே, ஆதார் ஒழிக
என்று பாஜககாரர் கள் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
(இரண்டு திட்டங்களும் வேண்டாம் என்று அஇஅதிமுக சொல்லிக்கொண்டிருந்தது
தனியாக விவாதிக்க வேண்டிய விசயம்).
2014 தேர்தல்களில்
தெற்கு பெங்களூரு தொகுதியில், ஆதார் திட்டத்தின் முன்னாள்
தலைவரும் காங்கிரஸ் வேட்பாளருமான நந்தன் நீல்கேணிக்கு எதிராகப்
போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ஆனந்த்
குமார், நாங்கள் ஆட்சிக்கு வந்தால்
ஆதார் திட்டம் குப்பைக் கூடையில்
எறியப்படும் என்றார்.
நாட்டுக்குள்
இடம்பெயர்ந்தவர்கள் சட்ட விரோதமாக தங்குவதை
முறைப்படுத்தும் ஒரு திட்டம் என்றும்,
சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழைந்தவர்களுக்கு குடியுரிமை தரப்படுவதுதான்
ஆதார் திட்டம் என்றும், அது
நாட்டில் நடக்கும் மிகப்பெரிய மோசடி என்றும் இப்போது
தெற்கு பெங்களூரு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக
இருக்கிற ஆனந்த் குமார், தேர்தல்
பிரச்சாரத்தில் சொன்னார்.
மார்ச்
11, 2014 அன்று பெங்களூருவில் பேசிய பாஜக அதிகாரபூர்வ
பேச்சாளர் மீனாட்சி லேகி, ஆதார் திட்டம்
ஒரு மோசடி திட்டம் என்றார்.
திட்டம் பற்றி மத்திய புலனாய்வு
விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றார். 33 பேர் நாடாளுமன்ற நிலைக்குழு
வில் 31 பேர் ஆதார் திட்டத்துக்கு
எதிராக வாக்களித்தனர் என்ற கூடுதல் தகவலையும்
அன்று மீனாட்சி லேகி பகிர்ந்து கொண்டார்.
2014 ஜனவரியில்
புவனேஸ்வரில் பாஜக வின் மஹிளா
மோர்ச்சா, சமையல் எரிவாயு நிறுவனங்கள்,
சமையல் எரிவாயு உருளை மான்யம்
பெற ஆதார் அட்டையை கட்டாய
மாக்கியதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியது.
அந்த விதி உடனடியாக ரத்து
செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தியது.
முன்னாள்
பாஜக நிதியமைச்சரும் அய்முகூ ஆட்சியில் நாடாளுமன்ற
நிலைக்குழு தலை வருமாக இருந்த
யஷ்வந்த் சின்ஹா, பாஜக ஆட்சிக்கு
வந்தால், ஆதார் அடிப்படையில் அல்லாமல்
தேசிய மக்கள் தொகை பதிவேட்டின்
அடிப்படையில்தான் நேரடி மானியம் வழங்கப்படும்
என்றார்.
அக்டோபர்
22, 2013 அன்று வெளியான செய்தி ஒன்றில்,
ஸ்மிருதி இரானி, இந்தத் திட்டம்
தனிநபர் தனியுரிமைக்கான அரசியல் சாசன பிரிவை
மீறுகிறது என்றார்.
ஆதார் திட்டத்துக்கு என்ன செலவு செய்யப்படுகிறது
என்று சென்னையில் நடந்த தேர்தல் பிரச்சாரக்
கூட்டத்துக்கு வந்திருந்த போது மோடி கூட
கேட்டார். பெங்களூருவில் நடந்த தேர்தல் பிரச்சாரக்
கூட்டத்திலும் மோடி இந்தக் கேள்வியை
எழுப்பினார்.
இன்றைய
பிரதமர், மத்திய அமைச்சர், நாடாளுமன்ற
உறுப்பினர் என பாஜக தலைவர்கள், நேற்று குப்பை கூடையில்
போட வேண்டும் என்று சொன்ன ஆதார்
திட்டம், வேறு எந்த அடிப்படை
மாற்றமும் செய்யப்படாமல், அதே உள்ளடக்கம் மற்றும்
வடிவத்தில், இன்று பாஜக ஆட்சி
வந்தவுடன் எப்படி, ஏன் புனிதத்
தன்மை பெற்றது?
ஆதார் திட்டத்தை குப்பையில் போட வேண்டும் என்று
சொன்னவர்கள், 2014 - 2015 நிதியாண்டுக்கு ரூ.2,039 கோடி ஒதுக்கியுள்ளார்கள். 2014 டிசம்பர் 25 அன்று
70 கோடி பேருக்கு ஆதார் எண்கள் வழங்கப்பட்டுள்ளதாக
ஆதார் இணையதளம் சொல்கிறது. 2015 மார்ச்சுக்குள் நாட்டில் உள்ள அனைவருக்கும் ஆதார்
அட்டை வழங்க வேண்டும் என்று
மத்திய பாஜக அரசு இலக்கு
நிர்ணயித்துள்ளது.
ஆதார் திட்டம் பற்றி கேள்வி
எழுப்பிய போதும், மறுபக்கம், குஜராத்
முதலமைச்சராக இருந்தபோது, குஜராத்தில் ஆதார் அமலாக்கக் குழுவின்
தலைவராக மோடிதான் நியமிக்கப் பட்டார்.2012 மே 1 அன்று மோடிதான்
குஜராத்தில் திட்டத்தைத் துவக்கி வைத்தார். 2013, டிசம்பர்
31 அன்று 2.2 கோடி பேர் ஆதார்
திட்டத்தில் சேர்க்கப்பட்டிருந்தனர். திட்ட அமலாக்கத்தின்போது குஜராத்
அரசாங்கம், வருமான வரி அட்டை,
வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப
அட்டை, மாற்றுத் திறனாளி அட்டை, சமையல்
எரிவாயு உருளை பற்றிய விவரங்கள்
போன்றவற்றையும் சேகரித்தது. இவற்றை தரவில்லை என்றால்
நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.ஆகவிசுவாசமாக
ஆதார் திட்டம் குஜராத்தில் நிறைவேற்றப்பட்டது.ஆதார் திட்டமும் நேரடி
மான்யத் திட்டமும் வெற்றிகரமாக இணைக்கப் பட்டன. சாமான்ய மக்கள்
பெற்று வந்த நல் வாழ்வு
நடவடிக்கைகளை வெட்டிச் சுருக்குவது தவிர இதற்கு வேறெந்த
மேலான நோக்கமும் இருக்க முடியாது. பாஜக
ஆட்சியாளர்கள் இப்போது ஆதார் திட்டத்தை
கொண்டாடுவதற்கும் இதுதான் நோக்கம். குஜராத்தில்
நடப்பதை நாடு முழுவதும் நடத்த
வேண்டும் என்று வெளிப்படையாகச் சொன்னவர்கள்
அவர்கள். அது ஆதார் திட்ட
அமலாக்கத்தில் இன்று வெளிப்படுகிறது.
நலத்திட்டங்களுக்கான
மான்யம் உரியவர்களுக்குச் சென்று சேர்வதை உறுதிப்படுத்த
ஆதார் திட்டம் என்று சொல்லப்படுகிறது.
வறிய மக்கள் வெவ்வேறு ஆதாரங்கள்
காண்பித்து இரட்டைப் பயன் பெற்றுவிடுகிறார்கள் என்று
மன்மோகனைப் போலவே மோடியும் கவலைப்படுகிறார்.
ஆனால், ஆதார் திட்டமே உரிய
நடைமுறைகளை பின்பற்றாமல்தான் அமலாக்கப்படுகிறது. ஆதார் திட்ட மசோதா,
நாடாளுமன்றத்தில் நிராகரிக்கப்பட்டது. திட்டம் நாடாளுமன்ற நிலைக்குழுவிலும்
நிராகரிக்கப்பட்டது. நிராகரிக்கப்பட்ட ஒரு திட்டத்தை அய்முகூ
அமலாக்கியதை அன்று கேள்விக்கு உள்ளாக்கிய
பாஜககாரர்கள் அந்த நிலைமைகளில் எந்த
மாற்றமும் இல்லாமலேயே இப்போது அமலாக்குகிறார்கள். அமலாக்கமே
கேள்விக்குட்படுத்தப்படுகிற
ஒரு திட்டத்தின் மூலம், முறைகேட்டை தடுக்கப்
போவதாக சொல்வது கேலிக்கூத்தானது.
கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதார்
நலத்திட்டங்கள்
அமலாக்கத்தில் ஆதார் திட்டம் வெளிப்படைத்
தன்மையை உறுதிப்படுத்திவிடும்
என்கிறார்கள். ஆனால், ஆதார் திட்டத்துக்கான
செலவினங்கள் பற்றிய விவரங்களில் வெளிப்படைத்
தன்மை இல்லை. 2009 முதல் 2012 டிசம்பர் வரை ஆதார் திட்டத்துக்கு
ரூ.2,300.56 கோடி செலவு செய்யப்பட்டதாக
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில்
விவரம் வெளியாகியுள்ளது. 2014 நவம்பர் வரை ரூ.5,311.6
கோடி செலவிடப்பட்டுள்ளதாக ஆதார் இணையதளம் சொல்கிறது.
2014 ஜ÷ன் வரை ஆதார்
திட்டத்திற்காக ரூ.50,000 கோடிக்கும்
மேல் மத்திய அரசு செலவு
செய்துள்ளது என உச்சநீதிமன்றத்தில் ஆதாருக்கு
எதிராக வழக்குத் தொடுத்துள்ள கர்நாடகா உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.எஸ்.புட்டாசாமி தெரிவித்துள்ளார்.
ஆதார் திட்டத்துக்காக 2009 - 2010ல் ரூ.120 கோடி,
2010 - 2011ல் ரூ.1,900 கோடி, 2011 - 2012ல் ரூ.3,000 கோடி,
2012 - 2013ல் ரூ.1,758 கோடி, 2013 - 2014ல் ரூ.14,232 கோடி
ஒதுக்கப்பட்டது. 2012 மார்ச் வரை ஒதுக்கப்
பட்ட நிதி ரூ.5,020 கோடி.
இதில் பாதிக்கும் குறைவாகத்தான் செலவிடப்பட்டுள்ளது. இருந்தும் அடுத்தடுத்த நிதியாண்டுகளில் திட்டத்துக்கான
ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது. செலவுகள் பற்றி தேர்தல் நேரத்தில்
கேள்வி எழுப்பிய மோடி ஆட்சிக்கு வந்த
பிறகு இன்னும் ஒரு ரூ.2,039
கோடி ஒதுக்கப்பட்டுள் ளது. வெளிப்படைத் தன்மை
பேசுகிற மோடி அரசு, வெளிப்படைத்
தன்மை கொண்டு வரும் என்று
சொல்லப்படுகிற இந்தத் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட
நிதியில் இதுவரை என்ன செய்யப்பட்டது,
பயன்படுத்தப்படாத நிதியை வைத்து என்ன
செய்கிறார்கள் ஆகியவை பற்றி வெளிப்படையான
உண்மை விவரங்களை இன்னும் வெளியிடவில்லை.
அய்க்கிய
அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் கூட,
செயல்படாத திட்டம் என்பதால் ரத்து
செய்துவிட்ட ஒரு திட்டத்தை அமலாக்க,
இந்திய ஆட்சியாளர்கள் ஏன் விடாப்பிடியாக முயற்சி
செய்கிறார்கள்?
ஆதார் திட்டம் ஆகப்பெரியது என்பது
அடுத்தடுத்து நிதியாண்டுகளில் ஒதுக்கப்பட்ட நிதியின் அளவில் இருந்து நாம்
தெரிந்துகொள்கிறோம். ஆதார் திட்டத்தில் வறிய
மக்கள் ஆதாயம்
அடைவார்கள் என்று சொல்லப்படுவதற்கு மாறாக,
கார்ப்பரேட் நிறுவனங்கள் பெரும் ஆதாயம் அடைகின்றன
என்பதுதான் நிஜம்.
ஆதார் திட்ட அமலாக்கத்துக்கு ரூ.45,000
கோடி முதல் ரூ.1,50,000 கோடி
வரை செலவாகும்
என்று சொல்லப்பட்டது. எல் 1 அய்டன்டிடி சொலுயூசன்ஸ்,
அய்க்கிய அமெரிக்க நிறுவனம். ராணுவம் தொடர்பான தொழில்நுட்பங்கள்
வழங்கும் இந்த நிறுவனம், அய்க்கிய
அமெரிக்க, சவூதி அரேபிய அரசாங்கங்களுக்கு
உடற்கூறு தொழில்நுட்பம் தருகிறது. ஆதார் திட்டத்துக் கான
தொழில்நுட்பம் இந்த நிறுவனத்திடம் இருந்தும்
மார்போ என்ற இன்னொரு நிறுவனத்திடம்
இருந்துதான் பெறப்படுகிறது.
இந்த நிறுவனங்கள் தவிர, ஆதார் திட்டம்
தொடர்பான வேலையைச் செய்ய எச்சிஎல், விப்ரோ,
எச்பி, மேக் அசோசியேட்ஸ், டோடம்
இன்டர்நேஷனல், ஏர்செல், பார்தி ஏர்டெல், ரிலை
யன்ஸ் கம்யூனிகேசன்ஸ், டாடா கம்யூனிகேசன்ஸ், மஹிந்திரா
சத்யம், அசென்ட்ச்யுர், டிசிஎஸ், எர்னஸ்ட் அன்டு யங் போன்ற
உள்நாட்டு, பன்னாட்டு தொலைதொடர்பு மற்றும் தகவல் தொடர்பு
கார்ப்பரேட் நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. அந்த நிறுவனங்கள் மிகப்பெரும்
தொகையை பங்கு போட்டுக்கொள்ளத் தயாராகின்றன.
திட்ட அமலாக்கம், திட்டம் தொடர்பான சேவைகளை
அந்த தனியார் நிறுவனங்களிடம் இருந்து
தொடர்ந்து பெறுவது தொடர்பானது. தொடர்ச்சியாக
அந்த நிறுவனங்களுடன் புரிந்து ணர்வுகள் இருக்கும். ஆதார் திட்டத்தை, தேர்தலுக்கு
முன்பு ஒரு சொல்லும் தேர்தலில்
வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தபின்
ஒரு செயலும் இருப்பதை, இந்த
தனியார் நிறுவனங் களின் நலன்களே உந்தித்
தள்ளுகின்றன.
ஆதார் திட்டம் வேண்டாம். வாழ்வாதாரத்தை
உறுதி செய்யும் அடையாளம் வேண்டும்
நாட்டின்
பாதுகாப்புக்கு ஆபத்து, சட்ட விரோதமாக
உள்ளே நுழைபவர்களுக்கு குடியுரிமை
தரும் திட்டம், பங்களாதேஷிகள் ஊடுரு வல் என்று
நாட்டு மக்கள் மத்தியில் பிளவைத்
தூண்டும் பேச்சுக்கள் பேசிய பாஜக தலைவர்கள்
இன்று அதே ஆதார் திட்ட
அமலாக்கத்துக்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.
பங்களாதேஷிகள் சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழைகிறார்கள், அசாமில் அவர்கள்தான் 50% பேர்
இருக்கிறார்கள் என்று தேர்தல் சமயத்தில்
மோடியும் அதற்கு முன்பும் பின்பும்
சங்பரிவார் கூட்டங்களும் கூக்குரல் இடுவது ஆகப்பெரிய பொய்
என்பதை, மக்களை பிளவுபடுத்த சங்
பரிவார் அமைப்புகள் மேற்கொள்ளும் சதி நடவடிக்கைகள் என்பதை,
இன்றைய மத்திய பாஜக அரசு,
ஆதார் திட்டத்தை ஊக்குவிப்பது அம்பலப்படுத்திவிடுகிறது.
ஆதார் திட்டம் தனிநபர் விசயத்தில்
தலையிடும் திட்டம் என்ற அடிப்படையில் கடுமையான
எதிர்ப்பு எழுந்தது. திட்டம் தனிநபர் ரகசியத்தில்
தலையிடுவது உண்மைதான். இந்த விவரங்களை, இந்த
நிறுவனங்கள் கட்டுப்பாட்டில் எப்படியும் பயன்படுத்த முடியும். யார் கேட்டாலும் அனுமதி
பெற்றோ, அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாகவோ
தர முடியும்.ஆனால், ஒரு கேள்வி
எழுகிறது. கோடிக்கணக்கான சாமான்ய இந்திய மக்களிடம்
என்ன ரகசியம் இருக்கிறது? பட்டினி
கிடப்பதில் முடிந்த வரை ரகசியம்
காப்பது தவிர வேறு பெரிய
ரகசியம் இந்திய மக்களிடம் இல்லை.கோடிக்கணக்கானவர்களுக்கு குளிக்க, கழிக்கக் கூட பிரைவசி இல்லை.
ரகசியமும் முறைகேடும் மக்கள் விரோத ஆட்சியாளர்களிடம்தான்
உள்ளன. இவற்றை அம்பலப்படுத்தும் ஆதார்
திட்டம் இருந்தால், ஆதார் அட்டை மூலம்
உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பணம் பதுக்கி வைப்பவர்களை
கண்டுபிடிக்க முடியுமானால் நாம் வரவேற்கலாம். ஆனால்,
நடப்பது தலை கீழான ஒரு
விசயம். இருக்கிற, மக்களுக்கு மிகவும் அவசியமான அடையாள
அட்டைகளை முறையாக பராமரிக்கும் பொறியமைவையே
இன்னும் நமது ஆட்சியாளர்கள் உறுதிப்படுத்தவில்லை.
மருத்துவக் காப்பீட்டு அட்டைகள் ஆற்றங்கரையிலும் நலவாரிய அட்டைகள் குப்பைத்
தொட்டியிலும் கொட்டப்பட்டிருந்ததை தமிழ்நாட்டில் நாம் பார்த்திருக்கிறோம்.
அடையாளம்
சில உரிமைகளைப் பெற்றுத் தரும் என்றால், நாமும்
சில அடையாளங்கள் வேண்டும் என்று கோருகிறோம். நிரந்தரத்
தன்மை கொண்ட வேலைகளில் ஈடுபடுத்தப்படும்
பயிற்சியாளர்களுக்கும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கும் நிரந்தரத் தொழிலாளர்கள் என்ற அடையாளம் வேண்டும்.
நாட்டில் உள்ள கோடிக்கணக்கான அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு,
விவசாயத் தொழிலாளர்களுக்கு தொழிலாளர்கள் என்ற அடையாளம் வேண்டும்.
அடையாள அட்டை, சட்டப் பாதுகாப்பு
ஆகியவற்றுக்கு அப்பால் தள்ளப்பட்டுள்ள பீடித்
தொழிலாளர்களுக்கு, விசைத்தறி தொழிலாளர்களுக்கு, தையல் தொழிலாளர்களுக்கு தொழிலாளர்கள்
என்ற அடையாளம் வேண்டும். அவர்கள் வேலை செய்யும்
இடங்களுக்கு தொழில்கூடங்கள் என்ற அடையாளம் வேண்டும்.
இன்று இந்த அடையாளங்கள்தான் இந்திய,
தமிழக சாமான்ய மக்களுக்கு உடனடி
அவசியம். ஆதார் என்ற பெயரில்
வேறெந்த ‘இல்லாத’
அடையாளமும் தேவையில்லை.
அரசின்
நலத்திட்டப் பயன்கள் உண்மையில் யாருக்குச்
சென்று சேர வேண்டுமோ அவர்களை
இலக்கு வைத்து தருகிறோம் என்ற
பெயரில், அவர்களை பெருமளவில் அந்தத்
திட்டங்களில் இருந்து வெளியேற்றுவதையே இலக்காகக்
கொண்டவையே ஆதார் திட்டமும் நேரடி
மான்யத் திட்டமும். பெரும்பான்மை இந்திய மக்களுக்கு எதிராகச்
செயல்படிக்கூடிய, அவர்களுக்கு எந்தப் பயனும் இல்லாத,
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மட்டும் பயன் அளிக்கக்
கூடிய ஆதார் திட்டத்துக்கு செலவழிப்பதை
விட, அந்த ஆகப் பெரிய
தொகையை மக்கள் நலத் திட்டங்களுக்கான
மான்யங்களுக்கு செலவழிக்க ஆட்சியாளர்களை நிர்ப்பந்திக்கும் போராட்டங்கள் எழ வேண்டும்.
மகாராஷ்டிரத்தின் தொடரும் அவமானம்
ஆனந்த்
டெல்டும்டே
மகாராஷ்டிராவில்
கடந்த சில மாதங்களாக நிகழ்ந்துவரும்
சாதிக் கொடுமைகள், ஜோதிபா பூலே மற்றும
அம்பேத்கர் குறித்த பாம்பரியத்தைக் கட்டிக்காப்பதாக
அந்த மாநிலம் தம்பட்டம் அடித்து
வருவது எந்த அளவுக்குப் போலியானது
என்பதை அம்பலப்படுத்துகிறது. தலித்துகளுக்கு எதிரான கொடுமை என்பது
இந்த மகத்தான நாட்டில் புதிய
விஷய மில்லைதான். இந்தியாவில் நாள்தோறும் சராசரியாக இரண்டு தலித்துகள்
கொல்லப்படுவதாகவும்
மூன்று தலித் பெண்கள் வன்கொடுமைக்கு
ஆளாக்கப்படுவதாகவும் ஓதப்படும் புள்ளிவிவர மந்திரம், இங்கு தலித்துகள் மீதான
அதிகரித்துவரும் கொடுமைகளைப்
புலப்படுத்தப் போதுமானது அல்ல.
2000ஆம்
ஆண்டு புள்ளி விவரத்தோடு ஒப்பிடுகையில்
இந்தியாவில் தலித் பெண்கள் மீதான
பாலியல் வன்கொடுமைகள் தற்போது ஏறக்குறைய இரண்டு
மடங்காக அதிகரித்துள்ளன.
இந்த நாட்டில் நாள்தோறும் 1.85 தலித்துகள் கொல்லப்படுவதாகவும், 3.68 தலித் பெண்கள் பாலியல்
வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவதாகவும் அண்மையில் வெளியிடப்பட்ட
தேசிய குற்ற ஆவண அமைப்பின்
2013ம் ஆண்டுக்கான புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
மொத்தமாக 2013ல் சாதிக் கொடுமை
குறித்த குற்றங்கள் 39,408 ஆக அதிகரித்துள்ளன. அதாவது
ஒரு நாளைக்கு 108 குற்றங்கள், ஒரு மணி நேரத்திற்கு
4.5 குற்றங்கள் நிகழ்கின்றன. இவையெல்லாம் காவல்துறையில் பதிவு செய்யப்பட்ட குற்றங்களின்
எண்ணிக்கைதான். உண்மையான எண்ணிக்கை எவ்வளவு இருக்கும் என்பதை
நாம் ஊகித்துக் கொள்ளலாம்.
என்னதான்
தம்பட்டம் அடித்தாலும் மறுத்தாலும், சாதிய வன்முறையில்
மகாராஷ்டிராவின் பங்கு சற்றும் குறைவானதல்ல.
முற்போக்கு மாநிலம் என்ற பொது
அபிப்பிராயத்துக்கு மாறாக, சாதியம், வகுப்புவாதம்,
மதவாதம் ஆகியவற்றில் முன்னணியில் இருந்து வருகிறது மகாராஷ்டிரா.
ஆனால், ஜோதிபா பூலே - அம்பேத்கர்
ஆகியோரின் முற்போக்கு முகமூடியை அணிந்து கொண்டு இதை
மக்களிடம் இருந்து ஆளும் உயர்சாதியினர்
மறைத்து வருகிறார்கள். தற்போது அந்த முகத்திரையை
கிழித்தெறியவும், பூலே -அம்பேத்கர் புகழ்மிக்க
பாரம்பரியத்தை அழிக்கும் உயர் சாதியினரை அம்பலப்படுத்தவும்
நேரம் வந்துவிட்டது.
கயிர்லாஞ்சியிலிருந்து
கார்தா வரை
கயிர்லாஞ்சியில்
2006 செப்டம்பரில் தலித் குடும்பத்தைச் சேர்ந்த
4 பேர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டதை எதிர்த்து மாநிலம் தழுவிய எழுச்சி
ஏற்பட்டும் மகாராஷ்டிரத்தின்
நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுவிடவில்லை. மாநில அரசும் ஊடகங்களும்,
சாதியக் கொடுமைகளுக்கு எதிராகத் தாம் செயல்படாததற்கு எந்த
விதத்திலும் வருந்தியதாகத் தெரியவில்லை. அந்த கொடூரமான சாதிய
வன்முறையை, திருமணமான பெண் ஒருவர், பக்கத்து
கிராமத்தைச் சேர்ந்த ஒருவருடன் உறவு
வைத்திருப்பதை கைவிடும்படி தாங்கள் கூறியதை ஏற்காததால்,
அறச்சீற்றமடைந்த கிராம மக்கள் நிகழ்த்திய
வன்முறை என ஊடகங்கள் மறைக்க
முயற்சித்தன. உண்மை கசிந்து, தன்னிச்சையாக
போராட்டங்கள் எழுந்தபோது, அந்த போராட்டங்கள் ‘நக்சைலட்டுகளின்
ஆதரவுடன் நடப்பதாக’
மாநிலத்தின் அப்போதைய உள்துறை அமைச்சர் கூறினார்.
அதன் மூலம் தனது காட்டுமிராண்டித்தனத்தை
கட்டவிழ்த்துவிட காவல்துறைக்கு ‘சுதந்திரம்’
கொடுக்கப்பட்டது. அரசும் ஊடகங்களும் கூட்டு
சேர்ந்து மாநிலத்தில் நடக்கும் ஒவ்வொரு
சாதியக் கொடுமையையும் ‘காதல் விவகாரம்’ என்று,
கூறியும் அந்த கொடுமைகளுக்கு எதிராக
நடைபெறும் போராட்டங்களுக்கு ‘நக்சலைட்’
முத்திரை குத்தியும் மறைக்கவும் சிறுமைப்படுத்தவும் முயற்சிக்கின்றன. அரசு மற்றும் ஊடகங்களின்
பாரபட்சங்களை மீறி, மாநிலத்தில் நடக்கும்
ஒவ்வொரு சாதியக் கொடுமையை எதிர்த்தும்
எழும் துணிச்சலான போராட்டங்களுக்கான பெருமை, தலித் இளைஞர்களையே
சாரும்.
சோனாய்
படுகொலை
கடந்த ஆண்டு மராத்தா சாதிப்
பெண் ஒருவருடன் தலித் இளைஞர் தொடர்பு
வைத் திருந்தார் என்பதற்காக மூன்று தலித் இளைஞர்கள்
கொல்லப்பட்டனர். அந்த சம்பவத்தை ஒரு
மாத காலமாக வெற்றிகரமாக மறைத்த
காவல்துறையும், ஊடகங்களும் தலித் செயல் வீரர்கள்
தலையிட்டு நிர்ப்பந்தம் செய்த பிறகே செயல்படத்
தொடங்கினர். நீதிமன்றத்திலும் அந்த வழக்கில் பெரிய
அளவில் முன்னேற்ற மில்லை. இந்த ஆண்டு
நடந்த மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு கோண்டியா மாவட்டத்தில்
உள்ள காவ்லிவாடா கிராமத்தைச் சேர்ந்த பாஜக ஆதரவாளர்களான
போவார் சமூகத்தினர், மோடி அவையின் தேர்தல்
வெற்றிக் கொண்டாட்டத்தின்போது, மே 14 அன்று, தலித்
செயல்வீரரான 48 வயதான சஞ்சய் கோப்ரகடேக்கு
உயிரோடு தீ வைத்தனர்.
புத்த விகாரத்தின் கட்டடத்துக்கு ஒதுக்கப் பட்ட நில அபகரிப்பை
எதிர்த்ததுதான் அவர் செய்த ‘குற்றம்’.
உடலில் 94% தீக்காயம் அடைந்த சஞ்சய் கோப்ரகடே,
‘போவார்’
இனத்தைச் சேர்ந்த ஆறு பேரின்
பெயர்களை, போலீசாரிடமும் செய்தியாளர்களிடமும் இரண்டு
முறை தெரிவித்தார். அதை மரண வாக்குமூலமாகக்
கொண்டு காவல்துறை வழக்குப் பதிவு செய்திருக்க வேண்டும்.ஆனால், காவல்துறை ஆய்வாளர்
அனில் பாட்டீலோ ‘காதல் விவகாரம்’ என்று
கூறி சதி செய்து சஞ்சய்
கோப்ரகடேயின் வயதான மனைவி தேவகாபாய்
மற்றும் அவரது பக்கத்து வீட்டுக்காரரான
ராஜ÷
காட்போலே இருவரையும் கைது செய்தார். அவர்களுக்குள்
தகாத உறவு இருந்ததாகவும் அவர்கள்
சேர்ந்திருப்பதை சஞ்சய் கோப்ரகடே பார்த்து
விட்டதால் இருவரும் சேர்ந்து அவரை கொலை செய்து
விட்டார்கள் என்றும் கதை கட்டினார்.
காவல் துறையின் கட்டுக்கதையை எதிர்த்து ஒட்டு மொத்த கிராமமும்
கிளர்ந்தெழுந்தபோதும் அந்த இருவரையும் போலீசாரின்
சித்திரவதையில், அவமதிப்பில் இருந்து காப்பாற்ற முடிய
வில்லை. சஞ்சய் கொலை என்ற
வெந்த புண்ணில், இந்த ஜோடனை வேல்
பாய்ச்சப்பட்டது.
ஆனால்,
தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் மீதான
கொடுமைத் தடுப்புச் சட்டம் 1989 மற்றும் இந்திய தண்டனைச்
சட்டத்தின் 310, 307வது பிரிவுகளின் கீழ்
குற்றம் சாட்டப்பட்ட ‘போவார்’
இனத்தவர் விரைவிலேயே விடுக்கப்பட்டார்கள். ஏப்ரல் 28 அன்று மராத்தியப் பெண்ணுடன்
பேசிய ‘குற்றத்துக்காக’
நிதின் ஆகே என்ற 17 வயது
பள்ளி மாணவர்
பள்ளிக்கூடத்திலிருந்து வெளியே இழுத்து வரப்பட்டு
பட்டப்பகலில் கொடூரமாகக் கொல்லப்பட்டார். தனது தலித் பெற்றோருக்கு
ஒரே மகனான நிதின் ஆகேவை
அகமதுநகர் மாவட்டம் ஜாம்ஷெட் தாலுகாவைச் சேர்ந்த கார்தா கிராமத்தைச்
சேர்ந்த மராத்தா சாதியினர் சிலர்
படுகொலை செய்தனர். அந்தச் சம்பவம் தலித்
இளைஞர்களிடையே தன்னெழுச்சியான போராட்டத்தை ஏற்படுத்தியது. ஆனாலும் குற்றவாளிகள் கைது
செய்யப்படுவதை உறுதி செய்ய முடியவில்லை.
கொடூரத்தின்
உச்ச கட்டம்
சோனாய்
பகுதியில் நடந்ததைப் போல அகமது நகர்
மாவட்டத்தில் அக்டோபர் 20 அன்று ஜாவ்கிடே (கல்சா)
கிராமத்தில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது.
இது ‘தகராறுகள் இல்லாத கிராமம்’ என்று
மாநில அரசின் விருதைப் பெற்ற
கிராமம். கயிர்லாஞ்சியைப் போலவே வெந்த புண்ணில்
வேலைப் பாய்ச்சுவதைப் போல இங்குள்ள தலித்துகளுக்கு
எதிரான பதற்றமான நிலை புறக்கணிக்கப்பட்டு சாதி
ஏற்றத்தாழ்வுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று உணர்த்துகிற வகையில்
அந்த விருது வழங்கப்பட்டது. சஞ்சய்
ஜகந்நாத் ஜாதவ் (42), அவரது மனைவி ஜெயசிரி
(38), அவர்களது ஒரே மகன் சுனில்
(19) ஆகிய மூவரும் அவர்களது பயிர்
அறுவடைக்காக அமைக்கப்பட்ட தற்காலிகக் குடியிருப்பில் படுகொலை செய்யப்பட்டனர். தந்தை,
மகன் இருவரது சடலங்களும் துண்டு
துண்டாக வெட்டப்பட்டு அருகில் இருந்த பாழுங்கிணற்றிலும்,
ஆழ்துளைக் கிணற்றுக் குழயிலும் வீசப்பட்டிருந்தன. ஜெய சிரியின் சடலம்
தலையில் பலத்த காயத்துடன் கண்டெடுக்கப்பட்டது.
மும்பையில் இரண்டாம் ஆண்டு கல்லூரிப் படிப்பு
படித்துவந்த சுனில், தீபாவளி விடுமுறைக்காக
ஊருக்கு வந்திருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது.
தலித் அத்யாச்சார் கிருதி சமிதி வெளியிட்ட
உண்மையறியும் குழுவின் அறிக்கையின்படி இந்தக் கொலை குறித்து
மராத்தா வாஹ் குடும்பத்தைச் சேர்ந்த
சிலரது பெயர்களை சஞ்சயின் சகோதரர் உடனடியாக போலீசாரிடம்
தெரிவித்தார். குற்றவாளிகளைக் கைது செய்ய வலியுறுத்தி
தலித்மக்களும் போராடினர். ஆனால் போலீசாரோ விசாரணை
என்ற பெயரில் கிராமத்தினரையும் சுனிலின்
நண்பர் களையும் துன்புறுத்தியதுதான் மிச்சம்.
அந்த துன்புறுத்தலுக்கு எதிராக, வழக்கத்துக்கு மாறாக,
அந்தப் பகுதி மக்கள் முழு
அடைப்புப் போராட்டம் நடத்தினர். சமீபத்தில் பாஜக சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள
மோனிகா ராஜாலே மற்றும் செல்வாக்கு
மிக்க அரசியல்வாதிகளும் வாஹ் குடும்பத்தினருக்கு உறவினர்கள்.
இங்கும் பிரச்சனைக்குக் காரணம் வாஹ் குடும்பத்தைச்
சேர்ந்த பெண் ஒருவரிடம் சுனிலுக்குத்
தொடர்பு இருந்ததாகவும் நக்சலைட்டுகளின் ஆதரவுடன் போராட்டம் நடப்பதாகவும் சித்தரிக்கப்பட்டது. சுனில் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டது,
சமூக சாதிய விதிகளுக்குச் சவால்
என, மராத்தாக்கள் கருதியதே, வன்முறைக்குக் காரணம்.
மேல்சாதிப்
பெண்களைத் தங்கள் வலையில் விழவைக்க
துணிச்சலாக முயற்சிப்பவர்களாக தலித்துகளை மோசமாக சித்தரிப்பதும், சாதியக்
கொடுமைகளில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு ஆதரவாக அனுதாபத்தை ஏற்படுத்தவும்
‘காதல் விவகாரம்’
என்ற கட்டுக் கதை வழி
வகுத்தது. ஆனால், ஆண் - பெண்
தொடர்பு குற்றமல்ல என்ற அம்சம் புறக்கணிக்கப்பட்டது.
மறுபுறம் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் மீதான
கொடுமைத் தடுப்புச் சட்டம் 1989ன் கீழ் ‘அடையாளம்
தெரியாத நபர்கள்’
மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். அடையாளம்
தெரியாத நபர்கள் மீது இச்சட்டத்தின்
கீழ் வழக்குப் பதிவு செய்ய முடியாது.
அடையாளம் தெரியாத நபர்களை தாழ்த்தப்
பட்டோர் அல்லது பழங்குடியினர் அல்லாதோர்
என்று அனுமானிக்க முடியாது என்று கூட தெரியாமல்
போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
ஜாவ்கடேயில் ஜாதவ்கள் உடல்கள் கிணற்றில் கண்டெடுக்கப்பட்ட
அதே அக்டோபர் 21 அன்று, அகமத் நகர்
மாவட்டம் பார்னர் தாலுகா, அல்கோடி
கிராமத்தில், திருடினார்கள் என்ற சந்தேகத்தில், பார்த்தி
பழங்குடியினர் 4 பேர், கிராமத்தவர்களால் ஊராட்சி
அலுவலகம் முன் கற்களால் அடித்து
தாக்கப்பட்டனர். ராகுல் பிஞ்சயா சவான்,
பிகேஷ் பிஞ்சயா சவான் என்ற
இரண்டு பேர் மடிந்தனர். இருவர்
படுகாயத்துடன் மருத்துவமனையில் உள்ளனர்.
கடந்த ஆண்டில் (2013) அகமது நகர் மாவட்டத்தில்
மட்டும் இதுபோன்று 113 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இந்த ஆண்டு அக்டோபர்
வரை 74 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.ஆனால், வெளிச்சத்துக்கு வந்தவை
ஒரு சில சம்பவங்கள் மட்டுமே.
வாய் பேசாத காது கேளாத
நிலமற்ற குடும்பத்தைச் சேர்ந்த அபா காலே
என்ற தலித் இளைஞர், முன்னாள்
அமைச்சரும் தற்போதைய பாஜக நிர்வாகியுமான பபன்ராவ்
பாக்புதே என்பவரால் ‘காதல் விவகாரம்’ என்று
கூறப்பட்டு தாக்கப்பட்டது, பபன்விமிசால் மற்றும் ஜனாபாய் போர்கே
என்ற இரு தலித்துகள் உயிருடன்
எரிக்கப்பட் டது, நாடோடி பழங்குடியினத்தைச்
சேர்ந்த சுமன் காலே என்ற
பெண் பாலியல் வன்முறைக்கு கொடூரமாக
கொல்லப்பட்டது, ஷெவ்கான் தாலுகாவின் பைதானில் துண்டு துண்டாக வெட்டப்பட்டு
தலித் இளைஞர் கொலை செய்யப்பட்ட
சம்பவம் ஆகியவை வெளிச்சத்துக்கு வந்த
சில சம்பவங்களாகும். இந்தச் சம்பவங்களில் ஒன்றில்
கூட குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை என்பதோடு கைது செய்யப்படவில்லை என்பது
குறிப்பிடத்தக்கது. இவை தலித்துகளின் கலாச்சார
அறுதியிடலை கொடூரமான முறையில் அழிக்கும் சாதிய சக்திகளுக்கு தைரியமூட்டின.
பிராமணிய
சாபக்கேடு
ஒவ்வொரு
சாதியக் கொடுமை நிகழ்கிற போதும்
மகாராஷ்டிராவின் மேட்டுக்குடியினர் பூலே - அம்பேத்கர் பாரம்பரியம்
போய் விட்டதாக வெட்கமின்றி வருத்தம் தெரிவிக்கிறார்கள். சமீப ஆண்டுகளில் புள்ளிவிவரப்படி
தலித்துகளுக்கு எதிரான கொலைகளிலும் பாலியல்
வன்கொடுமைகளிலும் நாட்டின் 29 மாநிலங்களில் மகாராஷ்டிரா
தொடர்ச்சியாக அய்ந்து அல்லது ஆறாவது
இடத்தில் உள்ளது. சமீப ஆண்டுகளில்
மகாராஷ்டிரத்தில் தலித்துகளுக்கு எதிரான குற்றங்கள் குறிப்பிடும்
வகையில் அதிகரித்து வருகின்றன. இந்த நவீன காலத்தில்
மகாராஷ்டிரத்தில் பிற்போக்கான பார்ப்பனிய பேஷ்வாக்கள் சமூக பிராமண ஆட்சி
தனித்தன்மையுடன் இருக்கிறது. 1818ல் பிரிட்டிஷ் படையால்
(அவர்களில் பெரும்பாலா னவர்கள் மஹார் சாதி
போர் வீரர்கள்) மராத் தியப் பேரரசு
தோற்கடிக்கப்பட்டதையடுத்து,
பிரிட்டிஷாருக்கு எதிராக புனே பிராமண
சமூகத்தினர் ஆயுதமேந்திப் போராடினர். ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதாகக் காட்டிக் கொண்டாலும் உண்மையில் இழந்த அரசை மீட்கவே
அவர்கள் போராடினார்கள்.
நாட்டின்
பல்வேறு பகுதிகளில் இந்துத்துவ இயக்கங்கள் எழுந்தபோதும், மகாராஷ்டிரா தான் அதற்கு தலைமை
வழங்கியது. இந்துத்துவ கொள்கைகளும் ஆர்எஸ்எஸ் இயக்கமும் உதயமானது இந்த மாநிலத்தில்தான். கம்யூனிச
சோசலிச இயக்கத்தவர்கள் உட்பட பார்ப்பனிய
மேலாதிக்கத்தில் இருந்து தப்ப முடியவில்லை.அவர்களது சில தலைவர்கள் வேதங்களில் கம்யூனிசத்தைக் கண்டனர்.
காந்தியைக்
கொன்ற நதுராம் கோட்சே, பிற்போக்குவாதியான
பால் தாக்கரே அபிநவ் பாரத்
அமைப்பின் ரகசிய பயங்கரவாதிகள் ஆகியோரது
பூமி மகாராஷ்டிர மாநிலம். ஷாஹித் ஆஸ்மி, பகுத்தறிவு
கொள்கைகளுக்காகப் போராடிய நரேந்திர தபோல்கர்
ஆகியோர் கொல்லப்பட்ட பூமி மகாராஷ்டிரம். ‘நவீன
பணக்காரர்கள் மற்றும் கலாச்சாரமில்லா சூத்திரர்களின்
கைகளுக்கு பார்ப்பனியம் ஆட்சியை மாற்றியுள்ளது’. இந்துக்களின்
மறுஎழுச்சி, மகாராஷ்டிரத்தில் நிச்சயமாக தலித்துகளுக்கு கெட்டகாலம் என்பதையே காட்டுகிறது. குறைந்தபட்சம், எரியும் அடுப்பில் இருந்து
பூலேயை, அம்பேத்கரை மீட்டால் நல்லது.