“மக்களுக்காக நான், மக்களால் நான் - ஜெயலலிதா” என்று கொட்டை எழுத்தில், (நீதி மன்றத்தால் தண்டிக்கப்பட்ட) ஜெயலலிதாவின் படத்தோடு பகட்டாக எழுதப்பட்டு பள்ளிக் கல்வித் துறையால் அமைக்கப்பட்ட அலங்கார ஊர்தி சென்னை குடியரசு தினவிழாவில் அணிவகுத்துக் கொண்டிருந்த வேளையில், திருச்சியில் தனியார் பாலிடெக்னிக் மாணவர்கள், தமிழக அரசின் ஆணை: 92க்கு எதிராக தங்களை கல்விக் கட்டணம் செலுத்தச் சொல்வதைக் கண்டித்து வீதியில் அமர்ந்து போராடிக் கொண்டிருந்தார்கள்.
திருச்சி சிரகனூரில் உள்ள தனியார் தொழில் நுட்பக் கல்லூரி நிர்வாகம், கல்லூரியில் பயிலும் தலித் மற்றும் பழங்குடியின மாணவர்கள் ஜனவரி 24 தேதிக்குள் தங்களது கல்விக் கட்டணத்தைச் செலுத்திவிட வேண்டும், இல்லையென்றால், அனைவரும் தகுதியிழப்பார்கள் என்று உத்தரவிட்டது. பல தனியார் கலைக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், தொழில்நுட்பக் கல்லூரிகளின் நிர்வாகங்கள், அரசாணை 92க்கு எதிராக, பட்டியலின மாணவர்களிடம் கட்டாயப்படுத்தி கல்விக் கட்டணத்தை வசூல் செய்துகொண்டுதான் இருக்கின்றன.
அரசாணை 92ன்படி அரசு மற்றும் தனியார் சுயநிதிக் கல்லூரிகள் தலித், பழங்குடியின மாணவர்களிடம் கல்விக் கட்டணத்தை வசூலிக்கக் கூடாது. அவர்களுக்கான கட்டணத்தை மத்திய அரசு மற்றும் மாநில அரசால் வழங்கப்படும் கல்வி உதவித் தொகைத் திட்டத்தின் மூலம் அரசு செலுத்தி விடும். இதற்கான அரசாணை 92 போடப்பட்டு ஆண்டுகள் பல ஆனபோதும், அது பற்றி கண்டு கொள்ளாமல் தனியார் கல்லூரி நிர்வாகங்கள் கொள்ளையடிக்க அனுமதித்துக் கொண்டிருந்த தமிழக அரசைத் தட்டிக் கேட்டு போராட்டம் நடத்தின அகில இந்திய மாணவர் கழகமும், புரட்சிகர இளைஞர் கழகமும். அரசாணை 92அய் அமல்படுத்தக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு போடப்பட்டது. நீதிமன்றத்தில் அரசாணை 92அய் முழுமையாக அமல்படுத்திடுவோம் தமிழக அரசு உத்தரவாதம் அளித்தது. ஆனால், இன்று வரை முழுமையாக அமல்படுத்தப்படாமல் பல மாவட்டங்களில் அது ஏட்டுச் சுரைக்காயாகவே உள்ளது.
இந்த நிலையில், கல்வியைக் காவிமயமாக்க, கல்விக் கூடங்களை வர்ணாசிரம சனாதனக் கொள்கைகளைப் பரப்பும் சாமியார்களின் மடங்களாக்க துடித்துக் கொண்டிருக்கிற மோடியின் மத்திய அரசு, தலித், சிறுபான்மையினருக்கான கல்வி உதவித் தொகையையே இல்லாமல் செய்வதற்கான திட்டங்களைத் தீட்டிக் கொண்டிருக்கிறது. அதைச் செயல்படுத்த, மாணவர்களுக்கான மத்திய அரசின் உதவித் தொகையை நேரடி பணப் பரிமாற்றத் திட்டத்துடன் இணைத்து வங்கிகள் மூலம் நேர டியாக மாணவர்களுக்கு வழங்கப் போவதாக அறிவித்துள்ளது. அதை உத்தரவாதப்படுத்த பல்கலைக்கழக மானியக் குழு எல்லா பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளையும் கேட்டுக்கொண்டுள்ளது. அதற்காக, பொது நிதி நிர்வாக முறையில் அனைத்து கல்வி நிறுவனங்களும் தங்களை பதிவு செய்து கொள்ள கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் இணையத் தளம் வாயிலாக மாணவர்கள் அனுப்பும் விண்ணப்பங்களை ஆய்வு செய்து மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை நேரடியாக உதவித் தொகைகளை மாணவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்துமாம். அதை எடுத்து மாணவர்கள் தங்கள் கல்விக் கட்டணங்களை செலுத்திக் கொள்ளலாம் என்கிறார்கள்.
மாணவர்களின் நலன்களைப் பாதுகாக்கவும் பாரபட்சமின்றி இடையூறு இல்லாமல் உதவி கிடைத்திட வேண்டும் என்பதற்காகத்தான் நேரடி மானியத் திட்டத்தின் மூலம் வங்கிக் கணக்கில் கல்வி உதவித் தொகை சேர்க்கப்பட உள்ளது என்று மத்திய அரசு இதற்குக் காரணம் சொல்கிறது. நேரடி பணப் பரிமாற்றத் திட்டத்துடன் இணைக்கப்படும் மாணவர்களின் வங்கிக் கணக்குகள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்த நாட்டில் பார்சி இனத்தவர்கள்தான் சிறுபான்மையினர் என்று கூறிய சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சர் நஜ்மா ஹெப் துல்லா, சிறுபான்மையினருக்குரிய மேற்படிப்பிற்கான உதவித் தொகை, தகுதி மற்றும் வருமான அடிப்படையிலான உதவித் தொகைகளை நேரடிப் பணப் பரிமாற்றத் திட்டத்தின் மூலம் செயல்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டு அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார். அடுத்த கட்டமாக, பள்ளிகளில் பயிலும் சிறுபான்மையினருக்கான கல்வி உதவித் தொகைகளையும் நேரடிப் பணப் பரிமாற்றத் திட்டத்துடன் இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதற்காக அனைத்து சிறுபான்மையின மாணவர்களும் ஆதார் திட்டத்துடன் இணைப்பது விரைவாக முடிக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
தற்போது இந்தக் கல்வி உதவித் தொகைகள் மத்திய அரசு 75% மாநில அரசு 25% பங்களிப்பில் வழங்கப்பட்டு வருகின்றன. மத்திய அரசு மாநில அரசுக்கு அனுப்பி மாநில அரசுகள் உதவித் தொகைகளை சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களுக்கு அளித்து வருகின்றன. அதில் பல ஊழல்கள், பாரபட்சங்கள் இருந்த போதிலும் மாணவர்களுக்கான கட்டணத்தை அரசு செலுத்துவிடும் என்கிற குறைந்தபட்ச நம்பிக்கையாவது இருக்கும். அரசாணை 92அய் அரசு அமல்படுத்தக் கோரி நடத்தப்பட்ட போராட்டங்களுக்குப் பின்னர் கல்வி உதவித் தொகை பெறும் தலித், சிறுபான்மை மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்தது. கல்வி நிறுவனங் கள் குறிப்பாக தனியார் கல்வி நிறுவனங்கள் மாணவர்களிடம் பணத்தைக் கட்டச் சொல்லிக் கட்டாயப்படுத்தக் கூடாது என்று மாநில அரசு உத்தரவாவது போட முடிந்தது. இனி, தனியார் கல்லூரிகள், பள்ளிகள் மட்டுமல்ல. அரசுக் கல்வி நிறுவனங்களும் தலித், சிறுபான்மை மாணவர்களிடம் “வங்கியில் பணம் வரும் போது நீ எடுத்துக் கொள். எங்கள் பணத்தை முதலில் கட்டு” என்பார்கள். இதனால் பல தலித் மற்றும் சிறுபான்மையினர் கல்விக் கட்டணம் கட்ட முடியாமல் கடும் நெருக்கடிக்குள்ளாவார்கள். அவர்களின் படிப்பு பாதியில் நிறுத்தப்படும்.
படிப்பை பாதியில் நிறுத்துபவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கிறது என்கிறது ஓர் ஆய்வு. ஏழ்மையும் வசதியின்மையும் பழங்குடியின மக்கள் வசிக்கும் இடங்களில், கிராமப்புறங்களில் பள்ளிகள் இல்லாமையும், பெற்றோர்கள் வேலை தேடி வேறு வேறு இடங்களுக்குச் செல்வதும் பள்ளிகளில் போதிய வசதிகள் குறிப்பாக பெண்களுக்கு கழிப்பிட வசதி இல்லாமையும் அதற்குக் காரணம் என்கிறது அந்த ஆய்வு.
தமிழ்நாட்டில் 1-5 வகுப்புகளில் சேர்க்கப்படுவர்கள் எண்ணிக்கை 2005-2006ல் 61.86 லட்சமாக இருந்தது 2012 -13ல் 60.40 லட்சமாகக் குறைந்து 2014 - 15ல் 57.69 லட்சமாகக் குறைந்துவிட்டது. 6 -8 வகுப்புகளுக்கான சேர்க்கை 2012 - 13ல் 37.36 லட்சமாக இருந்தது 2014 - 15ல் 36.26 லட்சமாகக் குறைந்துள்ளது. இந்த நிலையில், பெரும்பாலும் அரசின் உதவித் தொகையை நம்பியே வெளியூர்களுக்குச் சென்று விடுதிகளில் தங்கிப் படிக்கும் தலித், சிறுபான்மையின மாணவர்களின் படிப்பும் நேரடிப் பணப் பரிமாற்றத் திட்டத்தால் இனி கேள்விக்குறியாகும். ஏற்கனவே ஊரக வேலை உறுதித் திட்டத்தில் வேலை செய்தவர்களுக்கான கூலிப் பணம் முறையாக வங்கியில் செலுத்தப்படாமல் அவர்கள் வதைபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
மாணவர்களுக்கும் பணம் முழுமையாக வங்கிக் கணக்கில் வந்து சேருமா? உதவித் தொகையில் மாநில அரசின் பங்கு என்னவாகும்? அப்படியே பணம் மாணவர்களின் வங்கிக் கணக்கில் வந்து சேர்ந்தாலும் அது முறையாகக் கல்விக்கு மட்டும் பயன்படுமா?
எல்லாருக்கும் வங்கிக் கணக்கு, நேரடி பணப் பரிமாற்றத் திட்டம் ஆகியவை மக்களுக்கான மானியங்களை, அரசு உதவிகளை காலி செய்வதற்காகவே திட்டமிட்டு கொண்டு வரப்படுகின்றன. சமையல் எரிவாயுவிற்கு அரசாங்கம் கொடுக்கும் மானியத்தை எரிவாயு நிறுவனங்களிடமே நேரடியாகக் கொடுத்துவிடலாமே. எதற்காக அது மக்களின் வங்கிக் கணக்கில் போடப்பட வேண்டும்? இப்போது வசதி படைத்தவர்களுக்கு மானியம் கிடையாது என்று கூற ஆரம்பித்துவிட்டார்கள்.
தலித், சிறுபான்மை மாணவர்களுக்கான கல்விக் கட்டண உதவித் தொகைகளை அரசே செலுத்துவதற்கு மாறாக, எதற்காக மாணவர்களின் கையில் பணத்தைக் கொடுக்க வேண்டும். இதன் மூலம் தலித், சிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையை படிப்படியாக குறைத்து, முற்றிலுமாக இல்லாமல் செய்து அவர்கள் கல்வி கற்பதை, மேல்படிப்பிற்கு வருவதைக் தடுக்க நினைக்கிறது மோடி அரசு. ராஜஸ்தானில் உள்ள பாஜக அரசு உள்ளாட்சி அமைப்புகளில் தலித் மக்கள், பழங்குடியினர் வராமல் செய்வதற்காகவே உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிடுபவர்களுக்கு குறைந்தபட்சக் கல்வித் தகுதி என்று சட்டம் கொண்டு வந்துள்ளது. அதை மற்ற பாஜக ஆளும் மாநிலங்களிலும் அமல்படுத்தத் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதையும் மீறி தப்பித் தவறி தலித், பழங்குடியின மக்கள் படித்து மேலே வந்து விடக் கூடாது என்பதற்காக அவர்களுக்கான கல்வி உதவியைக் காலி செய்கிறது மத்திய மோடி அரசு.
அடுத்து தலித் மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டை இல்லாமல் செய்வதற்காக, தலித் மாணவர்களின் தகுதி மேம்படுத்துதலுக்கான மத்திய திட்டம் ஒன்றை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. தலித் மாணவர்கள் கல்வித் தரத்தில் குறைபாடு கொண்டவர்களாக உள்ளனர், அதனால், அவர்களுக்கு இட ஒதுக்கீட்டின் மூலம் மருத்துவம், பொறியியல் போன்றவற்றில் கிடைக்கக் கூடிய இடங்களைக் கூட அவர்களால் பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை, அப்படியே அவர்கள் சலுகைகள் மூலம் இடத்தைப் பெற்றாலும் அவர்களால் படிப்பை முழுமையாக முடிக்க முடியவில்லை அல்லது படிப்பை முடிக்க பல ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறார்கள், அவர்களின் பற்றாக்குறையான கல்வித் தகுதியினால் அவர்களால் வேலை வாய்ப்பில், அதற்கான போட்டித் தேர்வில் வெற்றி பெற முடியவில்லை. ஆகவே, அவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் இத்திட்டத்தின் மூலம் 9ஆம் வகுப்பில் இருந்து 12ஆம் வகுப்பு வரை படிக்கும் தலித் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் வாயிலாக சிறப்பான வகுப்புகள் நடத்தப் போகிறோம் என்று மத்திய அரசு சொல்கிறது.
இந்த திட்டத்தின்படி மாநில/யுனியன் பிரதேச அரசுகள் அவரவர் விரும்பப்படி அந்தந்த மாநிலத்தில் கல்வியறிவில்லாத தலித் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தேவையான, தகுதியான கேந்திரிய வித்யாலயா பள்ளிகளைத் தேர்வு கொண்டு, அதில் படிக்கப் போகும் தலித் மாணவர்களையும் தேர்வு செய்து மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டுமாம்.
அந்தப் பள்ளிக்கூடங்கள் தலித் மாணவர்க்கு தங்கள் வீடு போல் உணரும் வகையில் வசதிகள் இருந்தால்தான் தேர்வு செய்யப்படுமாம்.
ஆனால், இந்தத் திட்டத்தின் கீழ் அதிகபட்சம் ஆண்டுக்கு 2,050 மாணவர்கள்தான் சேர்க்கப்படுவார்களாம். இதில் ஆண்களும் பெண்களும் 50:50. மாற்றுத் திறனாளிகளுக்கு 3%.மாற்றுத் திறனாளிகளில் கண் தெரியாத தலித் மாணவர்களுக்கு வாசிப்பாளர் படியாக ரூ.200. மாற்றுத் திறனாளி மாணவர் விடுதியில் தங்கிப் படிக்கவில்லை என்றால், அவருக்கு போக்குவரத்து படியாக மாதம் ரூ.100 தரப்படுமாம். அதுபோல், மிக மோசமான மாற்றுத் திறனாளிக்கு பாதுகாப்பாளர் படி மாதம் ரூ.100 கொடுக்கப்படுமாம்.
ஒரு மாணவருக்கு ஆண்டுக்கு ரூ. 25,000 இந்தத்திட்டத்தில் மத்திய அரசு செலவு செய்யுமாம். அதில் ரூ.15,000 மாணவருக்காம். (அதில் ரூ.9,000 பத்து மாதத்திற்கு சாப்பாட்டிற்கும் தங்குமிடத்திற்கும். கைச் செலவுக்கு ரூ.3,000. புத்தகங்களுக்கு ரூ.3,000.) மீதி ரூ.10,000 பாடம் சொல்லிக் கொடுக்கும் பள்ளியின் முதல்வர் மற்றும் ஆசிரியர்களுக்கு. மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் அமைச்சகத்திற்கு மோடியின் ஆட்சியில் விலைவாசி, போக்குவரத்துக் கட்டணம் எல்லாம் காலணா, அரையணா என்று இருப்பதாக எண்ணம் போலும். இந்த உதவித் தொகையையும் நேரடி பணப் பரிமாற்றத் திட்டத்தின் கீழ் மாணவர்களின் வங்கியில் சேர்த்துவிடுவார்களாம்.
மாணவருக்கு ஆதார் எண் கண்டிப்பாக இருக்க வேண்டுமாம். இந்தப் பணம் ஒழுங்காக மாணவருக்கு சென்று சேர்கிறதா என்று ஆதார் கொண்டு கண்காணிப்பார்களாம்.
இந்தத் திட்டத்திற்குப் பெயர் தலித்/பழங்குடியினர் அறிஞர் பட்டத் திட்டம். இந்தத் திட்டத்தில் 18 மாநிலங்களும் 1 யூனியன் பிரதேசம் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளது. எந்தெந்த மாநிலத்திற்கு எத்தனை பேர் என்றும் கூட நிர்ணயித்துவிட்டார்கள். தமிழ்நாடு இதில் சேர்க்கப்படவில்லை.
கோடிக்கணக்கில் உள்ள தலித், பழங்குடியின மக்கள் அடிப்படைக் கல்விக்கே வகையற்று இருக்க, அவர்களில் வெகு சிலருக்கு கல்வி உதவித் தொகை, இட ஒதுக்கீடு ஆகியவற்றின் மூலம் கிடைத்து அரிதாகக் கிடைத்து வரும் கல்வி அறிவையும் ஒழித்துக் கட்டி விட்டு, ஆண்டுக்கு நாடு முழுவதிலும் இருந்து 2,050 தலித் மற்றும் பழங்குடி மாணவர்களை மட்டும் அறிஞர்கள் ஆக்கப் போகிறார்களாம்.
பாஜக அரசு திட்டமிட்டு தலித் மற்றும் சிறுபான்மை மாணவர்களுக்கான கல்வியை காலி செய்ய முயற்சிக்கிறது. தலித் மாணவர் களை, அவர்களின் அறிவை கொச்சைபடுத்துகிற செயலை கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் இறுமாப்பாகச் செய்கிறது. பாஜகவின் வர்ணா சிரம, சனாதன, பார்ப்பனிய கோர முகம் முக மூடியே இல்லாமல் பல்லிளிக்கிறது மோடியின் ஆட்சியில்.