கட்சி வலுப்படுத்தும் இயக்கத்தை ஒட்டி திருவள்ளூர் மாவட்டத்தில் ஜனவரி 20 வரை 24 கிளைக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.
ஜனவரி 21, லெனின் நினைவு நாளன்று, நெல் அரவை ஆலை கிளையும் 15ஆவது வார்டு கிளையும் கூட்டப்பட்டன. இந்தக் கிளைகள் அடங்கிய உள்ளூர் கமிட்டி மாநாடுகள் நடத்தவும், புழல் பகுதி கமிட்டியாக வளர்வதை நோக்கி நகர்வதெனவும் வெகுமக்கள் அமைப்புகள் மத்தியில் இயங்கும் கிளைகளில் ஒன்றான நெல் அரவை ஆலை கிளையை குடியிருப்புப் பகுதி வேலைகள் நோக்கி, வாக்குச் சாவடியை மய்யமாகக் கொண்டு இயங்கும் கிளையாக மாற்றியமைக்கவும் கூட்டங்கள் முடிவு செய்தன.
நெற்குன்றம் உள்ளூர் கமிட்டியின் ஏழாவது மாநாடு ஜனவரி 25 அன்று நடத்தப்பட்டது. தோழர் சீனிவாசன் மாநாட்டு அறிக்கை முன்வைத்தார். இந்த உள்ளூர் கமிட்டிக்குள் கட்சித் தோழர் ஊராட்சித் தலைவராக இருக்கிற ஊராட்சியில் நமது பணிகள் பற்றி பரிசீலனை மேற்கொள்ளப்பட்டது. பகுதியில் உள்ள புரட்சிகர இளைஞர் கழக கிளைகளை விரிவாக்கவும், ஊராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் வெற்றி பெறுவதை நோக்கி வேலைகளை செலுத்துவது எனவும், தீப்பொறி வாசகர் கூட்டங்கள் நடத்துவதெனவும் அடுத்த கட்ட வேலைகளை எடுத்துச் செல்ல உதவும்விதம் உள்ளூர் கமிட்டியின் கீழ் வருகிற உறுப்பினர்களுக்கு கல்வி மற்றும் பயிற்சி வகுப்புகள் நடத்தவும் மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது. மாநாட்டில் தோழர் சீனிவாசன் உள்ளூர் கமிட்டிச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நெற்குன்றம் உள்ளூர் கமிட்டி மாநாடு ஜனவரி 25 அன்று மாலை நடத்தப்பட்டது. வலுப்படுத்தும் இயக்க இலக்குகளை நிறைவேற்ற அனைத்து முயற்சிகளும் எடுக்க வலியுறுத்தப் பட்டது. தோழர் டி.சாந்தி செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். (இந்த உள்ளூர் கமிட்டியில் உள்ள இரண்டு கிளைகள் முழுக்க முழுக்க பெண் உறுப்பினர்கள் கொண்ட கிளைகள்). இந்த உள்ளூர் கமிட்டி மாநாடுகளில் கட்சியின் மாவட்டச் செயலாளர் தோழர் எஸ்.ஜானகிராமன், மாநிலக் குழு உறுப்பினர் தோழர் எ.எஸ்.குமார் வாழ்த்துரையாற்றினர்.