1903ல் தி கிரேட் டிரெய்ன் ராப்பரி என்ற திரைப்படம் வெளியானது. ரயில் கொள்ளை பற்றிய அந்தப் படம், தொழில்நுட்பம் பெரிதும் வளர்ந்திராத காலத்தில் எடுக்கப்பட்டது. அன்றைய கட்டத்துக்கு அது பெரிதும் பேசப்பட்ட படமாக இருந்தது. 1963ல், 2013ல் இதே பெயரில் திரைப்படங்கள் வெளியாயின. ரயிலில் செல்பவர்களிடம் ரயில் கொள்ளையர்கள் நடத்தும் கொள்ளைகள் பற்றிய இந்தப் படங்கள் பரபரப்பாக பேசப்பட்டவை.
இன்று இந்தியாவிலும் ரயில் கொள்ளை நடக்கிறது. இந்தக் கொள்ளையை ரயில் கொள்ளையர்கள் நடத்தவில்லை. மோடி தலைமையிலான அரசாங்கம் நடத்துகிறது. இந்தக் கொள்ளையில் சாமான்ய மக்களிடம் இருப்பது பறிக்கப்படுகிறது.
நாட்டின் கோடிக்கணக்கான வறிய மக்கள் தங்கள் நீண்டதூர பயணத்துக்கு ரயில்களையே நம்பியுள்ளனர். முன்னெப்போதும் இருந்ததை விட கடந்த பத்தாண்டில் வேலை தேடி, கல்வி தேடி லட்சக்கணக்கான இளைஞர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குப் பயணிப்பது அதிகரிக்கிறது. அவர்களும் ரயில்களையே பெரிதும் நம்புகிறார்கள். இரண்டாம் வகுப்புப் பயணத்துக்குக் கூட முன்பதிவு செய்து கொள்ளும் பொருளாதார நிலை இடம்பெயரும் தொழிலாளர்க்கு இருப்பதில்லை. பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு ஏற்ப ரயில்வே உள்கட்டுமானத்தை மேம்படுத்துவதற்கு பதிலாக, தந்திரமான வழியைக் கையாள்கிறது தேஜமு அரசாங்கம். ரயிலில் பயணம் செய்யும் அளவுக்கு வசதியான நிலை இருந்தால் தானே கூடுதல் ரயில்கள், அவற்றில் மேலான சேவைகள் என்று பயணிகள் கேட்பார்கள்? ரயில் பயணத்தையே மிகவும் கடினமானதாக்கிவிட்டால் இந்தக் கேள்வியே எழாது. அதைத்தான் செய்கிறது மோடி அரசாங்கம். ரயில் கட்டணத்தை தாறுமாறாக, தத்கல், ப்ரிமியம் தத்கல் என விதவிதமாக ஏற்றி, இந்த அளவிலாவது இருக்கிறதே என்று திருப்திப்பட வைத்து, பயணம் செய்தே ஆக வேண்டியிருக்கும் சாமான்ய மக்களின் பயணத்தை துன்பப் பயணமாக மாற்றிவிடுகிறது.
“ரயில்வே தனியார்மயமாக்கப்படாது. புரளியை நம்பாதீர்கள். ரயில்வேக்கும் எனக்கும் சிறுவயது பந்தம் உள்ளது. ரயில்வேயை முன்னேற்றவும் நவீனமயமாக்கவும் ரயில்வேயில் தனியார் முதலீடுகளைத்தான் கொண்டு வரப் போகிறோம். பொதுமக்களின் பணம் ஏழைகளின் பணம், அதை கல்விக்கும், சுகாரத்திற்கும் பயன்படுத்த வேண்டும்.”
“ரயில்வே என் அன்புக்குரியது. ரயில்வேத் தொழிலாளர்கள் எல்லாம் என் குடும்பத்தினர். ரயில்வேயை நவீனப்படுத்துவதற்காக, மற்ற நாடுகளின் உதவியுடன் நான்கு ரயில்வே பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்படும்.” இது டிசம்பர் 25, 2014ல் வாரணாசியில் “நல்லாட்சி தின!” கொண்டாட்டத்தின்போது மோடி பேசியது.
இதற்கு 25 நாட்களுக்கு முன்பு,“ரயில்வே வசதிகள் 100 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்ததோ அப்படித்தான் இப்பவும் இருக்கிறது. ரயில் நிலையங்களைத் தனியார்மயமாக்கி நவீனப்படுத்தவேண்டும். அதை 10-12 இடங்களில் முதலில் செய்வேன். ரயில் நிலையங்களை விமான நிலையங்களைவிடச் சிறப்பாக மாற்றவேண்டும். ஏனென்றால், பெரும்பான்மையான ரயில் பயணிகள் ஏழைகள். ரயில்வேக்குச் சொந்தமான இடங்களை, ஆடம்பர ஓட்டல்கள், உணவகங்களை தனியார் கட்டுவதற்குக் கொடுக்க வேண்டும்”.
“ஒரு ரயில் பெட்டியை இணைப்பதிலேயோ அல்லது ஒரு ரயில் நிலையத்தை மேம்படுத்துவதிலேயோ எனக்கு சந்தோஷம் வந்துவிடாது. இந்தியப் பொருளாதாரத்தின் என்ஜினாக ரயில்வேயை மாற்ற வேண்டும்”. என்று அஸ்ஸாம், கவுகாத்தியில் புதிய ரயிலுக்கு கொடியசைத்து மோடி சொன்னது.
வெவ்வேறு நிகழ்ச்சிகளில் மோடி பேசி யதை சேர்த்துப் பார்த்தால் அவருடைய நோக்கம் தெளிவாகத் தெரிந்துவிடுகிறது. ஏழைகளின் பெயரைச் சொல்லியே ஏழைகள் வயிற்றிலடிக்கும் வேலைகளைத்தான் ஆண்டாண்டு காலமாக ஆட்சியாளர்கள் செய்து வந்து கொண்டிருக்கிறார்கள். அதையே மிகவும் பகிரங்கமாக, துளிகூட பதற்றமில்லாமல் செய்வதுதான் மோடி ஸ்டைல்.
மத்திய மோடி அரசு மக்களுக்கு கொடுத்த முதல் பரிசே ரயில் கட்டண உயர்வுதான். ரயில்வே பட்ஜெட்டைத் தாக்கல் செய்வதற்கு முன்பே பயணிகள் ரயில் கட்டணத்தை 14.2%, சரக்குக் கட்டணத்தை 6.5% உயர்த்தி அறி வித்தார் மோடியின் முதல் ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா. “இது நாங்கள் செய்ய வில்லை. ஏற்கனவே இருந்த அய்முகூ அரசு உயர்த்தி வைத்திருந்தது. அதை இப்போது அமல்படுத்துகிறோம். அவ்வளவுதான்.” என்று சதானந்தா சாக்கு சொன்னார். அடுத்து மருந்து முதலில் கசக்கத்தான் செய்யும். கடைசியில் அமிர்தமாக இனிக்கும் என்று சொல்லிக் கொண்டே ரயில்வே பட்ஜெட் படித்தார்.
ரயில்வேயில் வரும் வருமானத்தில் எரி பொருளுக்கு, சம்பளத்திற்கு, பென்சனுக்கு, தண்டவாளம், ரயில் பெட்டிப் பராமரிப்புக்கு, பயணிகள் பாதுகாப்புக்கு என ஒரு ரூபாயில், 94 பைசா செலவாகிவிடுகிறது. 6 பைசாதான் மிச்சமாகிறது. அந்த உபரியும், கட்டண உயர்வு இல்லாததால் குறைந்து கொண்டே போகிறது. கட்டாய லாபப்பங்கீடு மற்றும் குத்தகைகளுக்குக் கொடுத்ததுபோக தற்போதைய நிதி ஆண்டில் ரூ. 602 கோடிதான் மிச்சம். இது 2007-08ல் ரூ.11,754 கோடியாக இருந்தது. அதனால் இனி பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு ஏற்ப ரயில் கட்டண நிர்ணயம் செய்யும் முறை கொண்டுவரப்படும். புதிய திட்டங்களுக்கு ஆண்டிற்கு 50 ஆயிரம் கோடி நிதி தேவைப்படுகிறது. அதனால், 100% அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படும். ரயில்வேயில் அனைத்து வேலைகளும் திட்டங்களும் தனியார் கூட்டுடன் செயல்படுத்தப்படும். தனியாரிடம் கொடுப்பதன் மூலம் ரயில்வேயில் ஊழல் கட்டுப்படுத்தப்படும் என்று அடுக்கிக் கொண்டே போனார். தனியார் முதலாளிகளுக்கும் ஊழலுக்கும் தொடர்பே இல்லாததுபோல் பேசினார்.
2007-08ல் இருந்த உபரியைப் பற்றிச் சொன்னவர், 2013-14ல் ரூ.93,468.84 கோடி வருவாய் வந்துள்ளது. இது 2012-13ல் ரயில் கட்டணத்தின் மூலம் வந்த வருவாயைவிட 10.23% கூடுதல். இதைப் பற்றி வசதியாக மறைத்துவிட்டார் சதானந்த கவுடா.
12617 ரயில்கள் 7172 ரயில் நிலையங்களுக்கிடையே தினமும் 23 மில்லியன் (2.3 கோடி) பேர் பயணிக்கிறார்கள். மொத்தம் 63,870 ரயில் பெட்டிகள். சராசரியாக ஒரு பெட்டிக்கு 360 பேர் வீதம் பயணிக்கிறார்கள். 7421 சரக்கு ரயில்கள். 2.4 சரக்கு ரயில் பெட்டிகள் தினமும் 3 மில்லியன் டன் சரக்கு களைச் சுமந்து செல்கிறது. மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 13.1 லட்சம். பயணிகள் தேவைக்கு ஏற்ப ரயில்கள் விட வழியில்லை. ஆனால், வருமானம் வரவில்லை என்று சொல்கிற ரயில்வே அமைச்சர் வைர நாற்கர இருப்புப் பாதைகள் போடப் போகிறாராம். பாதுகாப்புத் துறையின் இயக்கத்திற்கு முக்கியப் பங்காற்றுவது ரயில்வேதான் என்று சொல்லும் கவுடா ரயில்வே சேவைத் துறை என்பதை மறைத்துவிட்டு வரவு செலவு பார்க்கச் சொல்கிறார்.
ஆனால், பட்ஜெட்டிற்கு முன்பே கூட்டப்பட்ட கட்டண உயர்வால், எல்லா வகுப்புப் பயணிகளும் பாதிக்கப்பட்டனர். ஏசிக் கட்டணங்கள் விமானக் கட்டணத்தைத் தொட்டன. டில்லி கொல்கத்தா இடையே முதல் வகுப்பு ஏசி கட்டணம் ரூ.3813 ஆக இருந்தது ரூ.4354 ஆனது. விமானத்தில் ரூ.5555. அதேபோல் ரூ.85 ஆக இருந்த இரண்டாம் வகுப்பு சீசன் டிக்கட் ரூ.150 ஆனது.
ரூ.190ஆக இருந்த மாதாந்திர பாஸ் ரூ.480 ஆக உயர்த்திவிட்டார்கள். முதல் வகுப்பு சீசன் பாஸ் ரூ.795 என்று இருந்ததை ரூ.1930 ஆக உயர்த்தியது மோடி அரசு. அடுத்து பிரிமியம் ரயில்கள், பிரிமியம் கட்டணம், பிரிமியம் தட்கல் என்று பந்தாவாக அறிவித்தார்கள். பிரிமியம் பயணச் சீட்டு எடுத்தவர்கள் பையில் இருந்த பணமெல்லாம் பறிபோனது. பிரிமியம் ரயில்களில் டைனமிக் பிரைஸிங் முறையாம். அதாவது பயணிகளின் தேவைக்கு ஏற்ப, முன் பதிவு நிலவரத்தைப் பொறுத்து ரயில் பயணச் சீட்டுக் கட்டணமும் உயர்ந்து கொண்டே இருக்கும். முதலில் 10% இருக்கைகள் சாதாரணக் கட்டணத்தை விட 10% கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். அடுத்த 10% இருக்கைகளுக்கு 20% கூடுதல் கட்டணம். அதையடுத்த 10% இருக்கைகளுக்கு 40% கூடுதல் கட்டணம். இப்படி 80%, 160%, 200% கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
ரயில் நேரம் நெருங்க, நெருங்க, கந்து வட்டி, மீட்டர் வட்டி போல, ரயில் டிக்கட் கட்டணமும் ஏறிக் கொண்டே போகும். சென்னையில் இருந்து திருச்சிக்கு சாதாரணமாக படுக்கை வசதி பயணச் சீட்டுக் கட்டணம் ரூ.225 என்றால், பிரிமியம் ரயிலில் ரூ.800. சாதாரண தட்கலில் கட்டணம் ரூ.250 என்றால் பிரிமியம் தட்கலில் ரூ.500. சென்னையிருந்து திருநெல்வேலிக்கு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதிக் கட்டணம் ரூ.385. தட்கலில் ரூ.485. பிரிமியக் கட்டணம் ரூ.1130.
பிரிமியம் ரயிலில் காத்திருப்பு பயணச் சீட்டு (ரஹண்ற்ண்ய்ஞ் கண்ள்ற் பண்ஸ்ரீந்ங்ற்) கிடையாது. முன் பதிவு செய்துவிட்டால் அதை ரத்து செய்ய முடியாது. பிரிமியம் முறையில் ஆன்லைனில் மட்டுமே பயணச் சீட்டு எடுக்க முடியும். சென்னையிலிருந்து கோவைக்கு மூன்றடுக்கு ஏசியில் சாதாரணக் கட்டணம் ரூ.805. அதே தட்கல் என்றால் ரூ.1065. அதுவே பிரிமியம் என்றால் ரூ.3010. இரண்டடுக்கு ஏசி சாதாரணக் கட்டணம் ரூ.1135. தட்கல் ரூ.1445.
பிரிமியத்தில் ரூ.3155. பயணிகளுக்கு எந்த வசதியும் செய்து தராமல் கட்டணத்தை மட்டும் பல மடங்கு வசூல் செய்கிறது. ஒரு ரயிலில் சராசரியாக 15 முன்பதிவு இரண்டாம் வகுப்பு பெட்டிகள் என்றால், சுமார் 1000 பேர் பயணிப்பார்கள். இதில் முக்கால்வாசி தட்கல் டிக்கட்டிற்கும், அதில் பாதிக்கு மேல் தட்கல் பிரிமியத்திற்கும் ஒதுக்கப்படுகின்றன. முழுவதும் பிரிமியம் ரயில் என்றால், சொல்லவே வேண்டாம்.
ஒரே ரயில் வசதி மட்டுமே உள்ள வழித்தடத்தில் ஓடும் ரயிலைகளையும் கோவில்கள் மற்றும் சுற்றுலா மய்யங்களுக்கு செல்லும் ரயில்களையும் பிரிமியம் ரயில்கள் என மாற்றி விட்டனர். சென்னையில் இருந்து செங்கோட்டைக்குச் செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் இப்போது பிரிமியம் ரயில். இந்த வழித்தடத்தில் ஓடும் ஒரே பிரதான ரயில். சென்னையிலிருந்து தென்காசிக்கு இரண்டாம் வகுப்புக் கட்டணம் ரூ.355. அதுவே தட்கலில் 455. விடுமுறை காலங்களில் இன்னும் கூடும். இப்போது அந்த ரயில் பிரிமியம் ரயில் ஆகிவிட்டதால் குறைந்தது ரூ.900 கொடுக்க வேண்டும்.
ஒரு நபரிடம் கூடுதலாக ரூ.500 என்றால், ஆயிரம் பேரிடம் ரூ.5 லட்சம். ஒரு நாளில் ஒரு தடவையில். 30 நாட்களுக்கு ரூ.1.5 கோடி. இது இரண்டாம் வகுப்பில் மட்டும் கூடுதலாக வசூலிப்பது. 3ஆம் வகுப்பு ஏசி சாதாரணக் கட்டணம் ரூ.957. பிரிமியத்தில் குறைந்தது ரூ2500. நூறு பயணிகளுக்கு ரூ.2,50,000. இன்னும் 2ஆம் வகுப்பு ஏசி வேறு இருக்கிறது. தென்காசி, குற்றாலம் பகுதிப் பொதுமக்களும் வியாபாரிகளும் பொதிகை ரயில் பிரிமியம் ரயிலாக அறிவிக்கப்பட்டதற்கு எதிராகப் போர்க் கொடி தூக்கியுள்ளார்கள். கடந்த ஏப்ரல் மாதம் நாடு முழுவதும் 133 பிரிமியம் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
இப்போது பிரிமியம் ரயில்களின் எண்ணிக்கை 800அய் தாண்டும். இதுபோக எல்லா எக்ஸ்பிரஸ் ரயில்களிலேயும் பிரிமியம் டிக்கட் முறை உள்ளது. 7000 ரயில்களுக்கு மேல் எக்ஸ்பிரஸ் ரயில்கள்தான். ஒரு நாளில், ஒரு தடவையில் பல லட்சம் கோடிகள் ரயில் பயணிகளிடம் டைனமிக், பிரிமியம் என்று வசூல் வேட்டை நடக்கிறது. ரயில்களின் எண்ணிக்கையைக் கூட்டாமல், வசதிகளைச் செய்து தராமல் அவசரத் தேவையைப் பயன்படுத்தி பகல் கொள்ளையடிக்கிறது மோடி அரசு.
கொள்ளையின் அடுத்த கட்டமும் ஆரம்பமாகிவிட்டது. சதானந்த கவுடா போய் சுரேஷ் பிரபு ரயில்வே அமைச்சரானார். ரயில்வே உள் கட்டமைப்பை மேம்படுத்த மாநில முதல்வர்கள் மத்திய அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்கிறார். ரயில்வே நிகழ்ச்சி ஒன்றில் ரயில்வே சுமை தூக்கும் தொழிலாளி இவருக்கு கேக் ஊட்டுவதுபோல் போட்டோ வேறு. தொழிலாளியின் தோழனாம். நாட்டில் உள்ள 30,348 ரயில்வே லெவல் கிராஸிங்குகளில் 11,563 ஆளில்லா லெவல் கிராஸிங்குகள். பள்ளிக் குழந்தைகள், உழைக்கும் மக்கள், கோவிலுக்கு சென்றவர்கள் என லெவல் கிராஸிங்குகளில் ரயில் மோதி இறப்பவர்கள் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு அதிகரித்துக் கொண்டே போகிறது.
ஆளில்லா லெவல் கிராஸிங்குகளால்தான் 59% ரயில் விபத்து இறப்புகள் ஏற்படுகின்றன என்று ரயில்வே உயர்மட்டக் குழு அறிக்கை கூறுகிறது. அதுவும் பகல் நேரத்தில்தான் 89% விபத்துக்கள் நடக்கின்றன என்கிறது. ஆபத்தான இந்த ஆளில்லா லெவல் கிராஸிங்குகளுக்கு ஆட்களை நியமிப்பதற்கோ அல்லது பாலங்கள் கட்டுவதற்கோ தயாராக இல்லாத மோடியின் ஆட்கள் புல்லட் ரயில்கள் பற்றியும் ரயில்வேயின் உள்கட்டமைப்பைப் பற்றியும் பசப்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆளில்லா லெவல் கிராஸிங்குகளுக்கு தொழிலாளர்கள் நியமிக்கப்பட்டால் சுமார் 40,000 பேருக்கு வேலை கிடைக்கும். 59% ரயில் விபத்து இறப்புகள் தடுக்கப்படும்.
கடந்த அக்டோபர் மாதம் கோரக்பூரில் நடந்த ரயில் விபத்தில் பலர் இறந்தார்கள். பல பேர் காயமுற்றார்கள். ரயில்வே நிர்வாகம் விபத்துக்கு காரணம் லோகோ ஓட்டுநர்கள்தான் என்று அவர்களை தற்காலிகப் பணி நீக்கம் செய்தது. உண்மையில், அந்த ரயிலை ஓட்டி வந்த ராம்பகதூருக்கும் ராம்ஜித்திற்கும் ஓய்வே கொடுக்கப்படவில்லை. 81,000 ஓட்டுநர்கள் இருக்க வேண்டிய இடத்தில் 65000 பேர்கள் தான் உள்ளனர். அதிலும் 5000த்திற்கும் மேற்பட்டவர்களை மற்ற வேலைகளுக்கு அனுப்பி விடுகிறார்கள் என்கிறது அனைத்து இந்திய ரயில்வேமென் கூட்டமைப்பு.
தொழிலாளர் பற்றாக்குறை, நிர்வாகச் சீர்கேடு, பழைய தொழில் நுட்பம் போன்றவற்றால் ஏற்படும் இழப்புகள், பயணிகளுக்கு பாதுகாப்பின்மை ஆகியவற்றை சரிசெய்வதற்கு பதிலாக ரயில்வேயின் வருவாயை அதிகரிப்பது பற்றி ஆலோசனை சொல்ல டி.கே. மிட்டல் தலைமையில் ஒரு குழுவை கடந்த டிசம்பர் 4 அன்று நியமித்தார் சுரேஷ் பிரபு. டிசம்பர் 30 அன்று தரப்பட்ட குழுவின் அறிக்கை, புறநகர் ரயில்களுக்கான கட்டணங்களை, சீசன் டிக்கட்டுகளுக்கான கட்டணங்களை அதிகரிக்க வேண்டும், பயணிகள் கட்டணத்தை கிலோ மீட்டருக்கு 2 பைசா உயர்த்த வேண்டும், அதையும் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை உயர்த்திக் கொண்டே இருக்க வேண்டும், குறைந்தபட்சத் தொலைவு சாதாரண வண்டிகளில் 10 கி.மீ. என்று இருப்பதை 20 கி.மீ. என்றும் விரைவு வண்டிகளில் 20 கி.மீ. என்றிருப்பதை 50 கி.மீ என்றும் மாற்ற வேண்டும் என்று பரித்துரைத் துள்ளது. மானியம் வழங்கப்படுவதால் ஏற்படும் இழப்பை, பயணிகள் ரயில் கட்டணத்தை உயர்த்தி சரி செய்ய வேண்டும் என்கிறது மிட்டல் குழு. விமானக் கட்டணம்போல், நெகிழ்வான கட்டணம், (Flexi Fares) விருப்பமான இட வசதிக் கட்டணம், விடுமுறை காலக் கட்டணம் என பல வகைக் கட்டணங்களை கொண்டு வர வேண்டும், ரயில்வே சுற்றுலா சேவை நடத்த வேண்டும் என்கிறது.
அதன்படி, பாரம்பரிய நகரங்களை, சுற்றுலாத் தலங்களைப் பார்க்க, ஏழு நட்சத்திர ஓட்டலுடன் அதிநவீன “மகாராஜா எக்ஸ்பிரஸ்” என்ற சொகுசு சுற்றுலா ரயிலை அறிமுகப்படுத்தியுள்ளது இந்திய ரயில்வே. 23 பெட்டிகள் உள்ள இந்த ரயிலில் 88 பேர் மட்டுமே பயணிக்கலாம். 14 விருந்தினர் படுகைகள். 20 டீலக்ஸ் அறைகள். 18 ஜ÷னியர் சூட்கள்.அம்பானியின் மும்பை வீடுபோல. இது ஆசியாவிலேயே மிக அதிகமான கட்டணம் கொண்டதாம். பெரியவர்களுக்கு ரூ.2.39 லட்சம் முதல் ரூ.14.75 லட்சம் வரை, சிறியவர்களுக்கு (5-12வயது) ரூ.1.20 லட்சம் முதல் ரூ.7.40 லட்சம் வரைதானாம். இது போல் இன்னும் பல ரயில்களை விட உள்ளார்களாம்.
ரயில்வேயில் ரயில் கட்டுமானம், பராமரிப்பு மட்டுமின்றி ஓட்டுநர்கள், ஸ்டேசன் மாஸ்டர், கார்டு வரை அனைத்து வேலைகளையும் அந்நியருக்கு கொடுக்க முடிவெடுத்து, படிப்படியாக அமல்படுத்திக் கொண்டிருக்கும் மோடி அரசு, 2032ஆம் ஆண்டுவரை ரயில்வேக்கு 35 லட்சம் கோடி ரூபாய் தேவைப்படுகிறது அதை அந்நிய முதலீட்டாளர்களிடமிருந்து திரட்டப் போகிறோம் என்கிறது. மோடிமஸ்தான் வேலை காட்டுகிறார் மோடி. எந்த கார்ப்பரேட் முதலாளியாவது தன் கையில் உள்ள மூலதனத்தைத் தருவானா? ரயில்வேயில் இருந்து அள்ளிக் கொண்டு போக வேண்டுமானால் வருவார்கள்.
டில்லி ஏர்போர்ட் மெட்ரோ எக்ஸ்பிரஸ் லைன் பெரும்பாலும் சுரங்கப்பாதையைக் கொண்டது. இந்தத் திட்டத்தை ரிலையன்ஸ் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து ஆரம்பித்தது டில்லி மெட்ரோ ரெயில் கார்ப்பரேஷன். ரூ. 5700 கோடி திட்டம். டில்லி மெட்ரோ ரூ.2815 கோடியும் ரிலையன்ஸ் ரூ.2885 கோடியும் போட்டதாகக் கூறினார்கள். வேலையை இழுத்தடித்து, திட்டத்திற்கு திறப்பு விழா நடத்தினர். 20ரூபாய்க்கு பதில் 150 ரூபாய் டிக்கட் வைத்து காசு பார்த்தது ரிலையன்ஸ் நிறுவனம். கொஞ்ச நாளில் ரிலையன்ஸ் கட்டிய சுரங்கப் பாதை ஒழுகியது. கட்டுமானங்கள் கழன்று விழுந்தன. ஓராண்டிலேயே போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதுதான் தனியார் பங்களிப்பு!. 27 முறைக்கும் மேலாக சென்னை விமான நிலையக் கூரை இடிந்து விழுந்து கொண்டிருப்பதை நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.
அதானியின் முந்த்ரா துறைமுகத்திற்கு குறுக்கு வழி போடுவதற்காகவே கட்ச் ரயில்வே கம்பெனி திட்டத்தை உருவாக்கினார்கள். இப்படி அதானிகளையும் அம்பானிகளையும் மேலும் கொழுக்கச் செய்யவே நமோ, “ஏழைகள் ரயில். என் அன்பு ரயில்” என்றெல்லாம் ஏழை மக்களை ஏமாற்றப் பார்க்கிறார்.
இந்தியாவிற்கு இருப்புப் பாதைத் திட்டத்தைக் கொண்டு வந்த இங்கிலாந்து நாட்டிலேயே ரயில்வேயை தனியாரிடமிருந்து அரசாங்கம் கையில் எடுக்க முடிவு செய்திருக்கும் போது, இந்தியாவில் அரசாங்கத்திடமிருந்து ரயில்வேயைத் தனியாரிடம் ஒப்படைத்து கொள்ளையடிக்கத் துடிக்கும் மோடியின் முகத்திரை விரைவில் கிழியும்.