நில அபகரிப்புச் சட்டத்தை கைவிடு!
பிப்ரவரி 23 நாடு தழுவிய இயக்கம்
மத்திய அரசின் நிலம் கையகப்படுத்துதல் அவசரச் சட்டத்தை கைவிட வலியுறுத்தி நாடு முழுக்க பிப்ரவரி 23 அன்று அகில இந்திய விவசாயிகள் மகாசபையும் அனைத்திந்திய விவசாயத் தொழிலாளர் சங்கமும் கண்டன இயக்கம் நடத்தின.பிப்ரவரி 23 அன்று விழுப்புரத்தில், தோழர் கலியமூர்த்தி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தோழர்கள் சுசீலா, என்.கணேசன், ஜி.ஏழுமலை, கண்ணம்மாள், திருஞான சம்பந்தம், வீரன், கஜேந்திரன், சந்திரபாபு, ஆர்.கந்தசாமி ஆகியோர் கண்டன உரையாற்றினர். மாலெ கட்சி மாவட்டச் செயலாளர் தோழர் எம்.வெங்கடேசன் சிறப்புரையாற்றினார்.
மயிலாடுதுறையில் பிப்ரவரி 23 அன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அவிதொச மாநிலத் தலைவர் தோழர் டிகேஎஸ்.ஜனார்தனன், வீரச்செல்வன், காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர் தோழர் காவிரி தனபாலன், மாலெ கட்சியின் மாவட்டச் செயலாளர் தோழர் எஸ்.இளங்கோவன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். மாநிலச் செயலாளர் தோழர் பாலசுந்தரம் சிறப்புரையாற்றினார்.
திண்டுக்கல்லில் 23.02.2015 அன்று அகில இந்திய விவசாயிகள் மகா சபை அமைப்பாளர் தோழர் குழந்தைவேல் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் திண்டுக்கல், மதுரை மாவட்ட பொறுப்பாளர்கள் தோழர்கள் ஜெயவீரன், மதிவாணன், மாவட்ட அமைப்புக்குழு உறுப்பினர் தோழர் முருகேசன், அசோகன், ஏஅய்சிசிடியு மாநிலச் செயலாளர் தோழர் மணிவேல் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
பிப்ரவரி 23 அன்று புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடியில் தோழர் விஜயன் தலைமையில் அவிதொச ஆர்ப்பாட்டம் நடத்தியது. தோழர்கள் ரெங்கசாமி, கலைசெல்வன், முருகேசன், ராஜாங்கம், அவிதொச மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் தோழர் வளத்தான் கண்டன உரையாற்றினர். இதே நாளில் கந்தர்வகோட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய விவசாயிகள் மகா சபை அமைப்பாளர் தோழர் நடராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தோழர்கள் ராஜாங்கம், ஜோதிவேல், கட்சி மாவட்டச் செயலாளர் தோழர் ஆசைத்தம்பி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
சேலத்தில் 23.02.2015 அன்று அகில இந்திய விவசாயிகள் மகா சபை அமைப்பாளர் தோழர் அய்யந்துரை தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்சி மாவட்டச் செயலாளர் தோழர் மோகனசுந்தரம், உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ரத்தினம், கட்சி மாநில கமிட்டி உறுப்பினர் தோழர் சந்திரமோகன் உரையாற்றினர்.