COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Sunday, March 1, 2015

வனக் கல்லூரி மாணவர் 
போராட்டத்துக்கு ஆதரவாக

வனவர் பணிகளில் நேரடி நியமனத்துக்கான தேர்வை ரத்து செய்து வனவியல் பட்டதாரிகளுக்கு முன்னுரிமை அளித்தல், வனச்சரகர் பணிக்கான அரசாணை 118அய் மீண்டும் அமல்படுத்துதல் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்டம் மேட்டுபாளையம் வனக் கல்லூரி மாணவர்கள் கல்லூரி வளாகத்திற்குள் ஜனவரி 27 முதல் கால வரையற்ற வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர்.

கோவை மாவட்ட ஏஅய்சிசிடியு சார்பாக தோழர்கள் பிப்ரவரி 9 அன்று நேரில் சென்று போராடுகிற மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர். தொடர்ச்சியாக பிப்ரவரி 19 அன்று இகக (மாலெ) சார்பாக கோவை மாவட்டச் செயலாளர் தோழர் பாலசுப்பிரமணியன், புரட்சிகர இளைஞர் கழகம் சார்பாக தேசியச் செயலாளர் தோழர் பாரதி, ஜனநாயக வழக்கறிஞர் சங்கம் சார்பாக வழக்கறிஞர் லூயிஸ் மாணவர்களை சந்தித்தனர். இவர்களுடன் ஏஅய்சிசிடியு மாநிலச் செயலாளர் தோழர் குருசாமி, பிரிக்கால் முன்னணி தோழர் சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். பிரிக்கால் தொழிலாளர்கள் சார்பாக ரூ.5,000 நிதி உதவியும் அளிக்கப்பட்டது.

Search