எம்ஆர்எஃப் தொழிலாளர்
போராட்டத்துக்கு ஆதரவாக
ஊதிய உயர்வு ஒப்பந்தம் போடப்பட்ட தேதியில் இருந்து புதிய ஒப்பந்தம் அமலாகும் நடைமுறையால், சென்னை திருவெற்றியூரில் இயங்கும் எம்ஆர்எஃப் தொழிலாளர்கள் பல ஆண்டுகள் ஊதிய உயர்வு பலன்களை இழந்துள்ளனர். எனவே, பழைய ஊதிய உயர்வு ஒப்பந்தம் முடிந்த தேதியிலிருந்து, புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தம் வேண்டும் என்ற கோரிக்கையுடன் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். பிப்ரவரி 2 முதல் சங்க அலுவலகத்தில் காலவரையற்ற பட்டினிப் போராட்டத்திலும் தொழிலாளர் பிரதிநிதிகள் ஈடுபட்டுள்ளனர்.
எம்ஆர்எஃப் தொழிலாளர்களின் இந்தப் போராட்டத்தை ஆதரித்து அனைத்து கட்சிகள், மற்றும் தொழிற்சங்கங்களின் ஒருமைப்பாட்டு ஆர்ப்பாட்டம் பிப்ரவரி 21 அன்று நடத்தப்பட்டது. ஏஅய்சிசிடியு மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் தோழர் எ.எஸ்.குமார் ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரையாற்றினார். கோவை மாவட்ட பிரிக்கால் தொழிலாளர் ஒற்றுமை சங்க நிர்வாகிகளும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். சங்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் சாமிநாதன் கண்டன உரையாற்றினார். எம்ஆர்எஃப் தொழிலாளர் போராட்டத்துக்கு பிரிக்கால் தொழிலாளர்கள் நிதியளித்தனர். ஏஅய்சிசிடியு மாவட்டத் தலைவர்கள் பங்கேற்றனர்.