காஷ்மீர்
ஒரு ‘தேசபக்தர்’ மற்றும் சில ‘தேச விரோதிகள்’ குரல்கள்
‘தேசபக்தரின்’ குரல் என்றால், அது, சங் பரிவார் குரல்தான் என்று தீப்பொறி வாசககர்களுக்கு நன்றாகவே தெரியும். காஷ்மீர் பிரச்சனை பற்றி, மத்திய தகவல், ஒளிபரப்பு மற்றும் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சர் வெங்கய்யா நாயுடுவின் கட்டுரையை 26.07.2016 அன்று டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேடு பிரசுரம் செய்துள்ளது. கட்டுரைக்கு, ‘காஷ்மீர் ஒரு நிழல் யுத்தம்’ என தலைப்பு தரப்பட்டுள்ளது. ‘பாகிஸ்தான் இந்தியாவை உடைக்கப் பார்க்கிறது. நாம் ஒன்றுபட்டு உறுதியுடன் நிற்க வேண்டும்’ என வெங்கய்யா நாயுடு தலைப்பு தந்துள்ளார்.