தலையங்கம்
மக்கள் விரோத ஆட்சி நடத்த
ஜெயலலிதாவை அனுமதிக்கக் கூடாது
ஜெயலலிதாவை அனுமதிக்கக் கூடாது
2011 தேர்தல் முடிவுகள் போல 2016 தேர்தல் முடிவுகளும் ஜெயலலிதா எதிர்பாராதவை. கொடநாட்டுக்குச் சென்று ஓய்வெடுக்கத் தயாராகிக் கொண்டிருந்த அவரை, தேர்தல் முடிவுகள் மீண்டும் போயஸ் தோட்டத்தில் தங்க வைத்துள்ளன.
கொடநாட்டில் ஓய்வெடுப்பதா, போயஸ் தோட்டத்தில் ஓய்வெடுப்பதா அல்லது கொடநாட்டில் இருந்து கொண்டு ஆட்சி நடத்துவதா, போயஸ் தோட்டத்தில் தங்கி ஆட்சி நடத்துவதா என்று மட்டும்தான் அவர் முடிவு செய்ய வேண்டும்.
அமைச்சர்கள் தோற்றால் என்ன, வெள்ளம் பாதித்த தொகுதிகளில் தோற்றால் என்ன, தோற்றுப் போன பிறகும் வெற்றி கிடைத்தால்தான் என்ன? எல்லாம் ஒன்று என்ற முக்தி நிலையை, தவ வாழ்க்கை வாழ்வதாகச் சொல்லிக் கொள்கிற ஜெயலலிதாவுக்கு தமிழக மக்கள் தந்துள்ளார்கள். கடந்த ஆட்சியின் கடைசி சட்டமன்றக் கூட்டத் தொடரில் எல்லா எதிர்க்கட்சிகளுக்கும் நன்றி சொல்லி முடித்துக் கொண்ட ஜெயலலிதா இன்று இன்னும் அடக்கமாக தன்னைக் கைவிட்டு விடாத தமிழக மக்களுக்கு நன்றி சொல்கிறார்.
நன்றி சொல்லும்விதமாக, வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாகச் சொல்லி, சிலவற்றை நிறைவேற்றியும் உள்ளார். வழக்கம் போல், மக்கள் வாழ்க்கையில் ஒப்பனை மாற்றம் தவிர, உண்மை மாற்றம் உருவாக்க எந்த வகையிலும் உதவாத வாக்குறுதிகள் அவை. 100 யூனிட் மின்சாரத்துக்கு கட்டணம் இல்லை என்ற வாக்குறுதி, 2011ல் ஆட்சிக்கு வந்தவுடன் ஏற்றிய சுமையைச் சற்று இறக்கியதாக மட்டும் இருக்கும். விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்தது பொதுத்துறை வங்கிக் கடன்களுக்குப் பொருந்தாது. மூன்று நாட்கள் மூடியிருந்தாலே மொத்தமாக வாங்கி வைத்துக் கொள்பவர்கள் இரண்டு மணி நேரம், அதுவும் காலை பத்து மணி முதல் பன்னிரண்டு மணி வரை என்றால் சரக்கை வாங்கி சேமித்து வைத்துக் கொள்ள முடியும். டாஸ்மாக் கடைகள் எண்ணிக்கைக் குறைப்பு தடையின்றி ஓடுகிற சாராய வெள்ளத்தைக் கட்டுப்படுத்தி விடாது. இந்த குறைந்தபட்ச நடவடிக்கைகள் கூட எடுக்காவிட்டால், அவரை மக்களும் எதிர்க்கட்சிகளும் வறுத்தெடுத்துவிடுவார்கள் என்ற அச்சம்தான் இவற்றைச் செய்ய வைத்திருக்கிறதே தவிர, ஜெயலலிதா மக்கள் நலன் காக்கப் புறப்பட்டுவிட்டதால் இவை நடக்கவில்லை.
இந்த நடவடிக்கைகளில் ஜெயலலிதாவின் மக்கள் நலன் பேணும் போக்குத் தெரியவில்லை என்றால் வேறு என்னதான் வேண்டும் என்று அதிமுகவினர் கூடக் கேட்க மாட்டார்கள். மக்கள் நல்வாழ்க்கையை குறைந்தபட்சம் உறுதிப்படுத்தும் திட்டங்கள் எப்படி சூறையாடப்பட்டன, அந்தத் திட்டங்களை நிறைவேற்ற ஒதுக்கப்பட்ட நிதி உண்மையில் எங்கே, எப்படி மறைந்து போனது என்று அவர்களுக்கு நன்கு தெரியும்.
திருநெல்வேலியில் தேர்தல் நாளன்று வாக்களிக்கச் சென்று கொண்டிருந்த நரிக்குறவர்கள் சிலரிடம் தொலைக்காட்சிகள் நேர்காணல் செய்த போது, காய்ந்த தலையும், கந்தல் துணியுமாக இருந்த ஒரு பெண், எங்களுக்குப் பணம் தர பலரும் முயற்சி செய்தார்கள், நாங்கள் வாங்கவில்லை, எங்களுக்குப் பணம் வேண்டாம், எங்கள் குடிசைகளுக்கு மின்சாரம், தண்ணீர் வசதி செய்து தந்தால்போதும் என்றார். அவர் அத்துடன் முடித்துவிடவில்லை, நாங்கள் ‘இலவசமாக’ வாக்களிக்கப் போகிறோம் என்றார். சாமான்ய மக்கள் இப்படித்தான் இருக்கிறார்கள். நியாய அநியாயம், கவுரவம் பார்த்து நடந்து வீணாகப் போகிறவர்கள் அவர்கள். பெரும்போக்கு கொண்டவர்கள்.
அவர் சொன்னதில் இருந்த முரண், கேலி அவருக்குத் தெரியாமல் போகலாம். ஆனால், அது தெரிந்தவர்களுக்கு இந்த அரசாங்கம் மக்களை எந்த அளவுக்கு வஞ்சித்துள்ளது என்பதும், அவர் அனுபவிக்கும் துன்பமும் தெரிகிறது. ஒருவர் அரை மணி நேரம் மேடையில் உட்கார 20 ஏர்கூலர்கள் தேவைப்படும்போது, 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மின்வசதி, குடிநீர் வசதி இல்லாமல் வாழ்க்கை நடத்துகிறார்கள். கடந்த அய்ந்தாண்டுகளில் இவர்களுக்காக எந்த முயற்சியும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.
இவர்களுடைய வாழ்வாதாரம், குழந்தைகள் கல்வி, மருத்துவம் என்பவை இவர்களைப் பொறுத்தவரை தூரத்துக் கனவுகள். பேனர் வைக்க வேண்டாம், காலில் விழ வேண்டாம் என்று ஜெயலலிதா சொல்லிவிட்டதாகச் சொல்லப்படுகிறது. அஇஅதிமுகவினர் அப்படிச் செய்யாமல் இருந்துவிட்டால் மட்டும் இந்த நரிக் குறவ மக்களுக்கு, அவர்கள் இருப்பதுபோன்ற வாழ்க்கை நிலைமைகளில் இருக்கும் கோடிக்கணக்கான தமிழக மக்களுக்கு, வாழ்க்கையில் ஒளி வந்துவிடாது. ஜெயலலிதா மிகவும் அடிப்படையான விசயங்களை தனது கட்சிக்காரர்களுக்கும் அதிகாரிகளுக்கும் சொல்ல வேண்டும்.
நீங்களும் உங்கள் உறவினர்களும் உடன்பிறவாக்களும் நடத்துகிற சாராய ஆலைகளை மூடுங்கள். ஊழல் செய்யாதீர்கள். மக்கள் பணத்தைக் கொள்ளையடித்துச் சொத்து சேர்க்காதீர்கள். தமிழ்நாட்டின் இயற்கை வளங்களை கொள்ளை அடிக்காதீர்கள். கல்வி நிலையங்கள் கொள்ளையடிப்பதைத் தடுத்த நிறுத்த சட்டப்படியான நடவடிக்கைகள் எடுங்கள். வீடுவீடாகச் சென்று பணம் கொடுத்ததுபோல், வீடுவீடாகச் சென்று மக்கள் பிரச்சனைகளைத் தீர்க்க நடவடிக்கைகள் எடுங்கள். நிலங்களை அபகரிக்காதீர்கள். அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்களை அச்சுறுத்தாதீர்கள். மிரட்டாதீர்கள். மக்களின் வாழ்க்கையோடு விளையாடுவதை நிறுத்திக் கொள்ளுங்கள்.... ஜெயலலிதா தனது அமைச்சர்களுக்கு, அதிகாரிகளுக்கு, வட்ட, மாவ டங்ளுக்குச் சொல்ல வேண்டிய இது போன்ற விசயங்களின் பட்டியல் மிக நீளமானது. இந்த விசயங்கள் அனைத்தும் ஜெயலலிதாவுக்கும் பொருந்தும்.
ஜெயலலிதா இப்படிச் சொல்வாரா? அவரும் இதுபோன்ற விசயங்களை பரிசீலிப்பாரா? குறைந்தபட்சம், பிரச்சாரக் கூட்டங்களுக்கு வந்து வெயில் சுட்டெரித்து மக்கள் செத்துப் போன நிகழ்வுகளுக்கு ஜெயலலிதா வருத்தமாவது தெரிவிப்பாரா? அவர் இப்படியெல்லாம் சொல்லிவிட்டாலும், அதைக் கேட்டு நடக்கத்தான், அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் பணத்தை வாரி இறைத்தார்களா?
உண்மையில் அவர்கள் அடுத்து வருகிற உள்ளாட்சித் தேர்தல்களுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். அது வந்துபோகும் வரை, அஇஅதிமுககாரர்கள் மேலோட்டமான அடக்கம் காக்க வாய்ப்புள்ளது. அதற்குப் பிறகு அவர்களது வேட்டை துவங்கக் கூடும். இதற்கு மாறாக, அஇஅதிமுகவினரிடம் வேறு எதுவும் நிச்சயம் எதிர்ப்பார்க்க முடியாது.
ஜெயலலிதாவை தேர்தலில் தோற்கடிக்க முடியாதவர்கள், நாளை மக்கள் பிரச்சனைகள் மீது போராட்டங்கள் நடத்தி அவரை அம்பலப் படுத்தும் கொள்கையும் திட்டமும் இல்லாதவர்கள், சொத்துக் குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் என்ன சொல்லும் என்று காத்திருக்கிறார்கள். முறைகேடாக சொத்து சேர்த்தவர் நிச்சயம் நீதி மன்றத்தில் தண்டிக்கப்பட வேண்டும். ஆனால், கடந்த கால அனுபவங்கள், அதற்கு வாய்ப்பு குறைவு என்று நமக்குச் சொல்கின்றன. அங்கு தப்பினாலும், ஜெயலலிதா, கடந்த அய்ந்தாண்டுகள் நடத்திய அதே மக்கள் விரோத ஆட்சி நடத்த, மக்கள் போராட்டங்கள் அனுமதிக்கக் கூடாது.

2016 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்
ஜெயலலிதா தப்பிப் பிழைத்து வெற்றி பெற்றுவிட்டார்!
எஸ்.குமாரசாமி
ஜெயலலிதாவின் வெற்றியை வரலாறு காணாத வெற்றி, பிரும்மாண்டமான வெற்றி என்று அழைப்பது, யதார்த்த விவரங்களுக்கு புறம்பானது. கடந்த காலங்களில், காமராஜரும் கருணாநிதியும் முதல்வராக இருந்தபோதே சந்தித்த தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளனர். திமுக, அஇஅதிமுக என்ற நிலை தமிழ்நாட்டில் தோன்றிய பிறகு பதவியில் இருந்த எம்.ஜி.ராமச்சந்திரன் 1984ல் வெற்றி பெற்றார். அதற்குப் பிறகு, 32 ஆண்டுகள் கழித்து பதவியில் இருக்கும் ஜெயலலிதா 2016ல் வெற்றி பெற்றுள்ளார் என்பதனாலேயே, இந்த வெற்றிக்கு சமூகரீதியாக எந்த வரலாற்று முக்கியத்துவமும் பிரும்மாண்டத் தன்மையும் வந்து விடாது.
வாக்குகளும் வாக்கு சதவீதமும் சொல்லும் செய்திகள்
எது கூடுதல், எது குறைவு என்பதற்கு ஏதாவது அடிப்படை அளவுகோல் இருக்க வேண்டும். எடை, உயரம், நீளம், அகலம் சில அளவுகோல்கள். தேர்தல்கள் எண்ணிக்கை தொடர்பானவை. வாக்கு சதவீதம், வாக்குகள் மற்றும் வெற்றி பெறும் இடங்கள்தான் அளவுகோல்கள்.
அஇஅதிமுகவின் 2016 தேர்தல் செயல்பாட்டை, 2011 சட்டமன்றத் தேர்தல் விவரங்கள், 2014 நாடாளுமன்றத் தேர்தல் விவரங்களோடு ஒப்பிட்டுப் பார்ப்பதும், 2016ன் முடிவுகளை தமிழ்நாட்டின் வெவ்வேறு பிராந்திய செயல்பாட்டோடு ஒப்பிட்டுப் பார்ப்பதும் மட்டுமே பொருத்தமாக இருக்கும்.
2011ல் ஜெயலலிதா ஒரு பெரிய கூட்டணி அமைத்துப் போட்டியிட்டார். அப்போது அவர் 1,90,85,762 வாக்குகளைப் பெற்றார். அது 51.3% வாக்குகளாகும். அவரது கூட்டணி 203 இடங்களும் அஇஅதிமுக 150 இடங்களும் வெற்றி பெற்றன. திமுக கூட்டணி 2011ல் 39.5% வாக்குகள் பெற்று 1,45,30,215 வாக்குகளுடன் 31 இடங்கள் பெற்றது. ஜெய லலிதா அணி திமுக அணியைக் காட்டிலும் 11.8%, 45,55,547 வாக்குகள் 172 இடங்கள் கூடுதலாகப் பெற்றது.
2014 நாடாளுமன்றத் தேர்தலில் கண்ணுக் கெட்டிய தூரம் வரை எதிரிகளே இல்லை எனச் சொல்லி 39 தொகுதிகளிலும் ஜெயலலிதா போட்டியிட்டார். அஇஅதிமுக 49.3%உடன் 1,79,83,168 வாக்குகள் பெற்றது. திமுக கூட்டணி (திமுக, விடுதலை சிறுத்தைகள், புதிய தமிழகம், மனிதநேய மக்கள் கட்சி) 26.8%உடன் 1,08,87,347 வாக்குகள் பெற்றது. காங்கிரஸ் 4.3%உடன் 17,51,123 வாக்குகள் பெற்றது. பாஜக, பாமக, தேமுதிக, மதிமுக கொண்ட தேஜமு கூட்டணி 18.5%உடன் 75,23,829 வாக்குகள் பெற்றது. அஇஅதிமுக 37 இடங்கள் வென்றது. பாமக ஓரிடமும் பாஜக ஓரிடமும் வென்றன. 217 சட்டமன்றத் தொகுதிகளில் அஇஅதிமுக முன்னிலையில் இருந்தது. திமுக 4 தொகுதிகளில், விசிக 1 தொகுதியில், காங்கிரஸ் ஒரு தொகுதியில், பாஜக 7 தொகுதி களில், பாமக 5 தொகுதிகளில் முன்னிûலை பெற்றிருந்தன.
2011, 2014 தேர்தல் செயல்பாட்டோடு ஒப்பிடுகையில், 2016ல் அஇஅதிமுக ஒரு திட்டவட்டமான சரிவை அடைந்துள்ளது.
2016ல் அஇஅதிமுக 40.8%உடன், 1,76,17,060 வாக்குகள் பெற்று 134 இடங்கள் வென்றுள்ளது.
2011ல் மொத்தம் பதிவான வாக்குகள் 3,67,53,106. இது 78.12% ஆகும்.
2014ல் மொத்தம் பதிவான வாக்குகள் 4,06,44,282. இது 73.74% ஆகும்.
2016ல் மொத்தம் பதிவான வாக்குகள் 4,28,73,674. இது 74.26% ஆகும்.
தொகுத்துப் பார்த்தால் 2011ல் பதிவான 3,67,53,106 வாக்குகளில் அஇஅதிமுக அணி 1,90,85,762 வாக்குகளும், 2014ல் பதிவான 4,06,44,282 வாக்குகளில் 1,97,83,168 வாக்குகளும் பெற்றது.
2016ல் 2014அய்க் காட்டிலும் 22 லட்சம் கூடுதலாகப் பதிவாகி உள்ளன. ஆனால், அஇஅதிமுக 2016ல் 2014அய் காட்டிலும் 3,66,108 வாக்குகள் குறைவாக, 1,76,17,060 வாக்குகள்தான் பெற்றுள்ளது.
அஇஅதிமுகவின் வாக்கு சதவீதமும் வாக்குகளும் 2011, 2014அய்க் காட்டிலும் 2016ல் குறைந்துள்ளன.
2011ல் 203 இடம் பெற்ற அணி, 2014ல் 217 தொகுதிகளில் முதல் நிலையில் இருந்த அஇஅதிமுக, 2016ல் 134 இடங்கள் மட்டுமே வென்றுள்ளது.
2016ல் திமுக கூட்டணி 39.7% உடன் 1,71,75,314 வாக்குகள் பெற்றுள்ளது.
2016ல் அஇஅதிமுக, திமுகவை விட கூடுதலாக 1.1%மும், 4,41,746 வாக்குகளும் மட்டுமே பெற்றுள்ளது.
மதில் மேல் இருந்த பூனை, அஇஅதிமுக பக்கம் குதித்துள்ளது. இந்த வெற்றியில் எந்த பிரும்மாண்டமோ, சமூக உள்ளடக்கம் கொண்ட எந்த வரலாற்றுச் சாதனையோ நிச்சயம் இல்லை. ஜெயலலிதா தோல்வியிலிருந்து தப்பிப் பிழைத்து வெற்றி பெற்றுள்ளார்.
2014 நாடாளுமன்றத் தேர்தல் அகில இந்திய அளவில் மோடி எதிர் மற்ற அனைவரும் என அமைந்தது என்றால் 2016 தமிழக சட்டமன்றத் தேர்தல் அஇஅதிமுக எதிர் மற்ற அனைவரும் என்பதாகவே அமைந்தது. திமுக மட்டுமல்லாமல், மக்கள் நலக் கூட்டணி, தேமுதிக, தமாக, பாமக, பாஜக, நாதக அனைவருமே ஜெயலலிதாவின் அஇஅதிமுகவுக்கு எதிராகவே வாக்குகள் கோரினர். ஜெய லலிதாவிற்கு எதிரான கிட்டத்தட்ட 55% வாக்குகள் திமுக அணி 39.7%, மநகூ 6.1 + பாமக 5.3% + பாஜக 2.8% + நாதக 1.1%, அதாவது 15.3% எனப் பிரிந்தன. வாக்குகள் சிதறியதால் அஇஅதிமுக தப்பித்தது. அஇஅதிமுக வேண்டாம் என வாக்களித்தவர்களே அதிகம்.
வசதி கருதி, தமிழ்நாட்டை வடக்கு, தெற்கு, மத்திய டெல்டா மற்றும் மேற்கு மண்டலங்களாகப் பிரித்து அஇஅதிமுகவும் திமுகவும் பூகோளரீதியாகப் பெற்ற வாக்குகளைக் காண்பதும் உதவும்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் என வடக்கு மாவட்டங்களில் மொத்த முள்ள 78 இடங்களில் திமுக அணி 44 இடங்களும் அஇஅதிமுக 34 இடங்களும் பெற்றுள்ளன. திமுக 10 இடங்கள் கூடுதலாகப் பெற்றுள்ளது.
டெல்டா - மத்திய மாவட்டங்களான பெரம்பலூர், அரியலூர், திருச்சி, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டையில் உள்ள 36 இடங்களில் அஇஅதிமுக 21, திமுக 15 இடங்கள் பெற்றுள்ளன. அதிமுக கூடுதலாகப் பெற்றது 6 இடங்கள்.
தென் மாவட்டங்களான திண்டுக்கல், சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், தேனி, விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டங்களில் உள்ள 58 இடங்களில் அஇஅதிமுக 32 இடங்களும் திமுக 26 இடங்களும் பெற்றுள்ளன. அஇஅதிமுக கூடுதலாகப் பெற்றுள்ள இடங்கள் 6.
மேற்கு மாவட்டங்களான கிருஷ்ணகிரி, தர்மபுரி, நீலகிரி, சேலம், கரூர், நாமக்கல், கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் உள்ள 60 இடங்களில் அஇஅதிமுக 47 இடங்களும் திமுக அணி 13 இடங்களும் பெற்றுள்ளன. இங்கு அஇஅதிமுக திமுகவைவிடக் கூடுதலாகப் பெற்ற இடங்கள் 34.
மேற்கு மாவட்டங்களில் அஇஅதிமுக பெற்றுள்ள இந்த 34 இடங்கள்தான் அஇஅதிமுகவை, ஜெயலலிதாவைத் தப்பிக்க வைத்துள்ளன. தமிழ்நாட்டின் மற்ற 3 பிராந்தியங்களில் உள்ள 172 தொகுதிகளில் அஇஅதிமுக 87 இடங்களும் திமுக 85 இடங்களும் பெற்றுள்ளன என்பது ஒரு முக்கியமான விவரம்தானே!
தோல்வியின் விளிம்பிற்கு அஇஅதிமுக ஏன் சென்றது?
எதேச்சதிகார, ஆணவமான, எந்த வெளிப்படைத் தன்மையும் இல்லாத, மக்களுக்கு பொறுப்புடன் பதில் சொல்லாத ஆட்சி முறை, சாதியக் கொடுமைகள், தீவிரமடையும் விவசாய மற்றும் தொழில்துறை நெருக்கடி, அதனால் பாதிப்படைந்த விவசாயத் தொழிலாளர்கள், உழைக்கும் விவசாயிகள், தொழிலாளர்கள், நகர்ப்புற, கிராமப்புற வறியவர்கள், இளைஞர்கள், மழை வெள்ளத்தின்போது காட்டிய குற்றமய அலட்சியம், சாவுகளில் அழிவுகளில் விளம்பரம் தேடிய கொடூரம், டாஸ்மாக் சாராய எதிர்ப்பு, ஊழல், சூறையாடல், அரசு ஒடுக்குமுறை என்ற பல்வகைப்பட்ட காரணங்களும் 100ல் 55 பேருக்கு மேல் அஇஅதிமுக வேண்டாம் என வாக்களிக்க வைத்துள்ளது.
தமிழகத்தில் அஇஅதிமுக, திமுக தாண்டி எதுவுமில்லை என்பதா
தேர்தல் முடிவுகளின் செய்தி?
தேர்தல் முடிவுகள்படி சட்டமன்றத்தில், அஇஅதிமுக, இரட்டை இலையில் போட்டியிட்ட அதன் கூட்டாளிகள் தனியரசு, தமிமூன் அன்சாரி, கருணாஸ் என 134 பேர் இருப்பார்கள். அரவக்குறிச்சி தஞ்சாவூரில் தேர்தல் நடக்க வேண்டியுள்ளது. திருப்பரங்குன்றத்தில் வெற்றி பெற்ற அஇஅதிமுகவின் சீனிவேல் இறந்துவிட்டார். திமுகவினர் 89 பேர், காங்கிரஸ் 8 பேர், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஒருவர் இருப்பார்கள். 80.5% வாக்குகள் பெற்ற அஇஅதிமுக மற்றும் திமுக அணி மட்டுமே சட்டமன்றத்தில் இருக்கும்.
1952ல் முதல் தேர்தல் நடந்து 64 ஆண்டு களுக்குப் பிறகு இடதுசாரி உறுப்பினர் ஒருவரும் சட்டமன்றத்தில் இருக்க மாட்டார். 6.1% பெற்ற இடதுசாரிகள் அடங்கிய தேமுதிக -மநகூ - தமாகா அணி, 5.3% பெற்ற பாமக, 2.8% பெற்ற பாஜக, 1.1% பெற்ற நாம் தமிழர் கட்சி ஆகியோர் சட்டமன்றத்தில் இருக்க மாட்டார்கள்.
இந்த விவரங்களிலிருந்து, கழகங்கள் ஆண்டது போதும் எனவும் ஒரு மாற்று தேவை எனவும் மக்கள் கருதி வருவதை, தேடி வருவதை, மறுக்க முடியுமா? அல்லது அஇஅதிமுக, திமுகவின் ஊழலும் சூறையாடலும் தொடரட்டும், மது விலக்கு வேண்டாம் என மக்கள் தீர்ப்பளித்து விட்டனர் எனக் கருத முடியுமா? அல்லது தமிழ்நாட்டு மக்கள் வேலை, வருமானம், கல்வி, மருத்துவம், நல்வாழ்க்கை, கட்டுப்படியான விவசாயம், ஜனநாயகம் ஆகியவற்றை கழகங்கள்தான் தர முடியும், சாதி, மத, பால்ரீதியான ஒடுக்குமுறைகளைக் கழகங்கள்தான் முடிவுக்குக் கொண்டு வரும் என முடிவு செய்து விட்டனர் என இந்தத் தேர்தல் முடிவுகளில் இருந்து காண முடியுமா?
நிச்சயம் முடியாது. 100க்கு 55 பேருக்கு மேல் அஇஅதிமுக வேண்டாம் என முடிவு எடுத்துள்ளனர். 100க்கு 56 பேருக்கு மேல் திமுகவை மாற்றாக ஏற்று வாக்களிக்கத் தயாராகவில்லை. இது நமது விருப்பம் சார்ந்த கற்பனை அல்ல. இது தேர்தல் முடிவுகள் பற்றிய விவரங்கள் சொல்லும் செய்தி. உண்மை ஆகும். பணபலமே முதன்மையானது, வாக்குக்கு பணம் கொடுத்து தங்கள் ஊழல் கறையை மக்கள் மீதும் பூசி விடுகிறார்கள் என்ற வாதங்கள், இனி திமுக, அஇஅதிமுகவுக்கு நம்பகமான மாற்றுக்கு தமிழகத்தில் வாய்ப்பே இல்லை என்ற கருத்துக்கு இட்டுச் செல்லும். இது மக்கள் மீது மாற்றத்தின் மீது அவநம்பிக்கை கொண்ட புலம்பலாக, ஓலமாக மட்டுமே அமையும்.
வைகோ, விஜயகாந்த், வாசன் தலைமையிலான அரசியல் சக்திகள் முன்னிறுத்திய மாற்றைத்தான் மக்கள் நிராகரித்தார்களே தவிர, அஇஅதிமுக, திமுகவுக்கு மாற்று வேண்டும் என்ற கருத்தை நிராகரிக்கவில்லை.
மக்கள் கோணத்தில் இருந்து
அஇஅதிமுக, திமுக பெற்ற வாக்குகளை எப்படிப் பார்க்க முடியும்?
வறண்டு கிடக்கிற மக்கள் வாழ்க்கையில், ஒரு கோப்பை, ஒரு குவளை குடிநீர் கிடைத்தாலும் கூட, அது ஆறுதலாகவே உள்ளது. ஜெயலலிதா அரசு, அடிப்படைப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் அக்கறைமிக்க எந்த முயற்சியும் எடுக்காதபோதும், விலையில்லா, விலை குறைவு பொருட்கள், கட்டணம் இல்லா, கட்டணக் குறைவு சேவைகள் மூலம் ஒரு தாக்கத்தைச் செலுத்தவே செய்துள்ளது.
அரிசி, தங்கம், மகப்பேறு பலன், மடிக்கணினி, மாணவர்க்கான சீருடை, புத்தகம் நோட்டுகள், ஆடு, மாடு ஆகியவை வறிய மக் கள் கண்முன் நடந்த விசயங்கள். ‘தவ வாழ்க்கை’ ‘அம்மா’ ‘உங்களால் நான் உங்களுக்காக நான்’ என்ற உரை வீச்சு, கடைசி நேர, 100 யூனிட் மின்சாரத்திற்கு கட்டணம் இல்லை, 50% மான்யத்தில் இரு சக்கர வாகனம் என்ற தேர்தல் வாக்குறுதிகள், கவனமாகக் கட்டமைக்கப்பட்ட ஜெயலலிதாவின் ‘வறியவர் சார்பு’ பிம்பத்திற்கு உதவியுள்ளன. ஜனரஞ்சக நல நடவடிக்கைகளுடன், பல்வேறு எதிரிகளை, தடைகளைச் சந்திக்கிற துணிச்சலான வெற்றி பெறும் பெண் என்ற அவரது ஆளுமையும், வறியவர்கள் மீது குறிப்பாக பெண்கள் மீது தாக்கம் செலுத்திய தாகத் தெரிகிறது. தமிழ்நாட்டில் 163 தொகுதிகளில் பெண் வாக்காளர்கள் அதிகம் என்பதும், இந்தத் தொகுதிகளில் பெரும்பான்மை அஇஅதிமுக பக்கம் சென்றுள்ளன என்பதும் கூட காணத்தக்க விவரங்களே.
பாஜக, பாமக செல்வாக்கு சில பகுதிகளில் சுருங்கியது. மநகூ, தேமுதிக - மநகூ - தமாகா அணியாக மாறிய பிறகு, அதன் துவக்க ஈர்ப்பு வடிந்து வற்றியது. ஜெயலலிதா ஆட்சி, அஇஅதிமுக வந்துவிடக் கூடாது என நினைப்பவர்கள், மிகவும் இயல்பாக, தேர்தலில் எடுக்கக் கூடிய முடிவாக, மற்ற கூட்டணிகள் எடுபடாதபோது, அஇஅதிமுகவை தோற்கடிக்கும் மாற்று என திமுகவைத் தேர்வு செய்தனர். திமுகவுக்கு என இருக்கும் ஒரு வாக்காளர் அடித்தளத்தையும் ஒரு பகுதி ஊடக ஆதரவையும் நாம் கணக்கில் கொண்டாக வேண்டும். புதிய வாக்காளர்கள் பற்றிப் பெரிதும் பேசப்பட்டாலும், அவர்கள், இந்தத் தேர்தலில், தமிழ்ச் சமூகத்தின் ஒரு பகுதியாகவே, சொல்லிக் கொள்ளத்தக்க சிறப்பு பாணி எதுவும் இல்லாமல் வாக்களித்து இருப்பதாகவே தெரிகிறது.
மாற்று அணி விசயங்கள் என்ன ஆயின?
இரண்டு தகவல்கள் முக்கியமானவை. இந்தத் தேர்தலில் அஇஅதிமுக, திமுக அணி அல்லாதவர்களில், பாமக எடப்பாடி, ஜெயங் கொண்டம், பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி என்ற நான்கு இடங்களிலும், பாஜக நாகர்கோ வில், விளவங்கோடு, குளச்சல் என்ற 3 தொகுதிகளிலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி காட்டு மன்னார்கோவிலிலும், சிபிஅய்யின் சர்ச்சைக்குரிய வேட்பாளர் தளியிலும் இரண்டாம் இடம் பெற்றுள்ளனர்.
மூன்றாம் இடம் எனக் காண்கையில் எஸ்டிபிஅய் 1, சுந்தர் சமாஜ் கட்சி 1, சுயேச்சை கள் 2, கொங்கு மக்கள் தேசிய கட்சி 5, தமிழக வாழ்வுரிமை கட்சி 1, பார்வர்ட் பிளாக் 1 என்ற இதரர் 11 இடங்கள் பெற்றுள்ளனர். திமுக 2, அஇஅதிமுக 5, காங்கிரஸ் 2 இடங்களில் மூன்றாம் இடம் பெற்றுள்ளன.
பாமக 69 இடங்களில் மூன்றாம் இடம் பெற்றது. பாஜக 32 இடங்களில் மூன்றாம் இடம் பெற்றது. மூன்றாம் அணி, மாற்றணி என முன்வைக்கப்பட்ட தேமுதிக - மக்கள் நலக்கூட்டணி - தமாகா அணி 111 இடங்களில் மூன்றாம் இடம் பெற்றனர். (விசிக 7, தமாகா 11, மதிமுக 14, சிபிஎம் 17, சிபிஅய் 18, தேமுதிக 44).
வைப்புத் தொகை இழப்பு கணக்கும் முக்கியமானது. ஒரு தொகுதியில் பதிவான வாக்குகளில் ஆறில் ஒரு பகுதி பெறும் வேட்பாளருக்கு மட்டுமே வைப்புத் தொகை திருப்பித் தரப்படும். அதாவது வைப்புத் தொகை திரும்பப் பெற 16.6% வாக்குகள் பெற வேண்டும். இந்தத் தேர்தலில் விளவங்கோடு மற்றும் தளியில் அஇஅதிமுக வைப்புத் தொகை இழந்தது. பாமக 212 தொகுதிகளில் வைப்புத் தொகை இழந்தது. பாஜக கூட்டணி 180 தொகுதிகளில் வைப்புத் தொகை இழந்தது. தேமுதிக 104ல் 103 இடங்களிலும், தமாகா 26ல் 26 இடங்களிலும், சிபிஎம் 25ல் 25 இடங்களிலும், மதிமுக 29ல் 27 இடங்களிலும், சிபிஅய் 25ல் 23 இடங்களிலும், விசிக 25ல் 22 இடங்களிலும், வைப்புத் தொகை (டெபாசிட்) பெற முடியவில்லை.
அஇஅதிமுக, திமுக தாண்டிய மூன்றாவது இடம் பெறுவதில் கடுமையான போட்டி நிலவியுள்ளது. பாஜகவும் திமுகவும் வலைவீசிப் பிடிக்கப் பார்த்த விஜய்காந்த் டெபாசிட் இழந்தார். அவர் கட்சி போட்டியிட்ட 104 தொகுதிகளில் 60 தொகுதிகளில் மூன்றாம் இடமும் பெறவில்லை. 104ல் 1 தொகுதியில் மட்டுமே, பதிவான வாக்குகளில் 16.66% பெற்று, வைப்புத் தொகை பெற்றுள்ளது.
பாமக செல்வாக்கு பெருமளவுக்கு வன்னியர் வாழ் பகுதிகளில் உள்ளது. வன்னியர் திரட்சி, வன்னியர் சாதிரீதியாக அணி திரட்டல் நடந்த வெகு குறைவான தொகுதிகளில் மட்டுமே, பாமக கணிசமான வாக்குகள் பெற்றுள்ளது. தனி ஒரு கட்சியாக அதிகமான இடங்களில் மூன்றாவதாக வந்துள்ளது.
பாஜக, இந்துத்துவா அரசியல் செல்வாக்குள்ள இடங்களில் மட்டுமே எடுபட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட நகர்ப்புறப் பகுதிகளில் சிலவற்றில் மூன்றாம் இடம் பெற்றுள்ளது.
தமிழ்நாட்டு மக்கள் தேமுதிக - மநகூ - தமாகா அணிக்கு மிகக் குறைவாகவே வாக்களித்துள்ளனர். சிபிஅய், சிபிஎம், விசிக ஆகிய மூன்று கட்சிகளும், வைகோ, விஜய்காந்த், வாசன் கூடா நட்பு கேடாய் முடிந்தது என்ற யதார்த்தத்தை துணிந்து ஒப்புக்கொண்டு மேலே செல்லத் தயாராக வேண்டும்.
தேமுதிக - மநகூ - தமாகா அணி என்றான பிறகும், சாதி ஆதிக்கக் கொலை தடுப்புச் சட்டம் வேண்டும் என்ற கோரிக் கையை அந்த அணி எழுப்பியதும் அதில் விலகாமல் நின்றதும் நல்ல விசயம். தலித் அறுதியிடல், தலித் சமத்துவம் என்ற கோணத்தில் திருமாவளவனும் கிருஷ்ணசாமியும் தோல்வி அடைந்துள்ளது கவலை தருவதாகவே அமைந்துள்ளது.
உணர்வைக் கொடுத்து உயிராய் வளர்த்த கனவை மறக்கலாமா?
அகில இந்திய அளவில், அசாம் வெற்றி, மேற்கு வங்க, கேரள சட்டமன்ற நுழைவு தாண்டி, இரண்டு ஆண்டுகள் ஆட்சி முடித்த மோடிக்கு, ஆறுதல் அளிக்க எதுவும் இல்லை. காங்கிரசும் சரிந்து வருகிறது. பிராந்தியக் கட்சிகள் தாக்குப் பிடித்துள்ளன. நாடாளுமன்ற ஜனநாயக முறை அறிமுகமாகி, 1952ல் இருந்து நடக்கிற எல்லா தேர்தல்களிலும் பொதுவாக மக்களுடைய வாக்குகளைப் பெறுபவர்கள் வசதி படைத்தவர்களுக்கான ஆட்சி நடத்தினார்கள் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
வறுமையும் செல்வக் குவிப்பும் அக்கம்பக்கமாக நிலவும் நாட்டில், சுரண்டலும் ஆதிக்கமும் ஒடுக்குமுறையும் நிலவும் நாட்டில், இடதுசாரி அரசியலுக்கு நிச்சயம் வாய்ப்பு உள்ளது.
தமிழ்நாட்டில், கருத்துக் கணிப்புக்கள் எப்படி கருத்துத் திணிப்புக்களை அஇஅதிமுக - திமுக இரு துருவம் நோக்கி வேகமாக தேர்தலுக்கு முன்பு நகர்த்தினவோ, அதே போல இப்போது ஊடகங்கள் சட்டமன்ற ஜனநாயகம், நாகரிகம் பற்றிப் பெரிதும் பேசுகின்றன.
சட்டமன்றத்தில் திமுக 89 இடங்களிலும் திமுக அணி 98 இடங்களிலும் மிகப் பெரிய எதிர்க்கட்சியாக இருக்கிறது, இது ஜனநாயகத்திற்கு மிகவும் நல்லது எனப் பேசப்படுகிறது. நிச்சயம் எதிர்த்துக் கேள்வி கேட்க ஓர் எதிர்க்கட்சி வலுவாக இருப்பது, ஜனநாயக விரோத தமிழக சட்டமன்ற செயல்பாடுகளுக்கு ஒரு தடுப்புதான். ஆனால் திமுக, மக்கள் நலன் காக்கும் ஒரு எதிர்க்கட்சியாக இருக்கும் என்று நம்பிக்கை பெற அதன் கடந்த கால செயல்பாடுகளும் வர்க்க இயல்பும் இடம் தரவில்லை. ஸ்டாலினுக்கு பதவியேற்பு நிகழ்ச்சியில் உரிய இடம் தரவில்லை என்பது பற்றிப் பேசிய கருணாநிதி, ஜெயலலிதா திருந்தவில்லை திருந்தப் போவதுமில்லை, தமிழக மக்கள்தான் திருந்த வேண்டும் என வருத்தப்பட்டார். இதனையே திமுக திருந்தவில்லை, திருந்தாது என்பதற்கான உதாரணமாகச் சொல்ல முடியாதா?
ஜெயலலிதா பதவியேற்பில் ஃபிளக்ஸ் பேனர்கள் இல்லை, அவரது காலில் விழுவது தடுக்கப்பட்டது, தனக்கு தெரிந்திருந்தால் ஸ்டாலினுக்கு உரிய இடத்தில் அமர வைத் திருக்கக் கூடும் என அவர் பேசியது, சட்டமன்றத்தில் ஸ்டாலினுக்கு அவர் பதில் வணக்கம் வைத்தது பற்றி எல்லாம் பேசுகிறார்கள்.
நாம் அவர்களுக்கு வேறு இரண்டு விசயங்களையும் எடுத்துத் தருவோம். இந்த முறை தேர்தல் பிரச்சாரத்தில் தீயசக்தி கருணாநிதி என்று அழைக்காமல் திரு.கருணாநிதி என ஜெயலலிதா அழைத்தார். நத்தம் விசுவநாதன் சட்டமன்றத்தில் 2016ல் மதுவிலக்கு சாத்தியமே இல்லை என்று சொன்ன பிறகும், ஜெயலலிதா படிப்படியாக மதுவிலக்கு என அறிவித்தார். இப்போது கடை நேரம் மற்றும் எண்ணிக்கை குறைப்பை அறிவித்துள்ளார். ஜெயலலிதா ஜனநாயகவாதியாக திடீரென மாறி விட்டாரா? அம்மா புகழ் பாடாத அஇஅதிமுக தமிழ்நாட்டில் சாத்தியம் இல்லை. ஜெயலலிதா தேர்தல் தோல்வி பயத்தில் படிப்படியான மது விலக்கு அறிவிப்பு வெளியிட்டார். தோல்வியோடு கூடிய வெற்றி என்ற மக்கள் தீர்ப்பால் நிதானமாக நடப்பதாகத் தோற்றம் தருகிறார்.
அஇஅதிமுக, திமுக இரண்டு கட்சிகளும் சரிவை, தலைமை நெருக்கடியை, உட்கட்சிப் பூசல்களை உள்ளார்ந்த விதத்தில் கொண்டுள்ளன. இந்தப் பிரச்சனைகள், மக்கள் வாழ்வின் அடிப்படைப் பிரச்சனைகளை தீர்ப்பதற்கும் இவர்களுக்கும் தொடர்பில்லாததால் ஏற்படுபவை. தீவிரமடையும் விவசாய, தொழில்துறை, சமூக நெருக்கடியால், தமிழ்நாட்டின் அரசியலில் ஒரு கடைசல் ஏற்பட வாய்ப்புள்ளது. மக்கள் நலன் கருதி இடதுசாரி இயக்கங்கள் தம்மை மாற்றிக் கொண்டு, தகவமைத்துக் கொண்டு, பலப்படுத்திக் கொள்ள வேண்டும். உரிய தயாரிப்பு டன், களப்பணிகளுடன், அமைப்பு வலிமையுடன் மாற்றுக்கான தேடலை, தேவையை, தருணத்தைக் கைப்பற்ற வேண்டும்.

தேச பக்தர்களுக்கும் தேச விரோதிகளுக்கும்
இடையிலான சண்டை எப்படி முடிந்தது?
இடையிலான சண்டை எப்படி முடிந்தது?
எஸ்.குமாரசாமி
அசாம், மேற்குவங்கம், கேரளா, தமிழ்நாடு, மற்றும் புதுச்சேரியில் நடந்த தேர்தல்களை, அமித் ஷா, தேசபக்த சக்திகளுக்கும் தேச விரோத சக்திகளுக்கும் இடையிலான போராட்டம் என விவரித்தார். தேசவிரோத, தீவிரவாத, சாதிய சக்தி என ரோஹித் வெமுலா முத்திரை குத்தப்பட்டு வேட்டையாடப்பட்டு நிறுவனரீதியான படுகொலைக்கு ஆளான பின்னணியில், ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர்கள் மீது தேசவிரோத முத்திரை குத்தப்பட்டு ஒடுக்குமுறை ஏவப்பட்ட பின்னணியில், பாரத் மாதா கீ ஜே என முழக்கமிடாவிட்டால் பாகிஸ்தானுக்கு ஓடு எனப் பேசப்பட்ட பின்னணியில்தான், நாடாளும் பாஜகவின் தலைவர் சட்டமன்றத் தேர்தல்களை தேசபக்த தேசவிரோத சக்திகளுக்கிடையிலான போராட்டம் என அழைத்தார்.
அசாமில் 126, மேற்கு வங்கத்தில் 234, தமிழ்நாட்டில் 232, கேரளாவில் 140, புதுச்சேரியில் 30 இடங்களுக்குத் தேர்தல் நடந்தது. மொத்த இடங்கள் 762. பாஜக அசாமில் 60, கேரளாவில் 1, மேற்கு வங்கத்தில் 3, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பூஜ்யம் என மொத்தம் 64 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அசாமில் அதன் கூட்டாளிகள் 26 இடங்களில் வென்றுள்ளனர். ஆக மொத்தம் 90. 90 இடங்களில் தேச பக்த சக்திகளும் மீதமுள்ள 672 இடங்களில் தேச விரோத சக்திகளும் வென்றுவிட்டதாக அமித் ஷா வாதப்படி ஆகாதா? மமதாவின், ஜெயலலிதாவின் பாஜக எதிர்ப்பு உறுதியற்றது, சூழலுக்கேற்ப மற்ற பல கட்சிகளைப் போல் ஆதரவாக மாற வாய்ப்புள்ளது என்ற போதும், மே 2016 சட்டமன்றத் தேர்தல்களில் பாஜக, மமதாவையும் ஜெயலலிதாவையும் தோற்கடிக்குமாறு கோரித்தானே போட்டியிட்டது? அமித் ஷாவால், அவரது தலைவர் மோடியால் ‘தேச விரோத’ சக்திகள் வெற்றி பெறுவதைத் தடுக்க முடியவில்லையே!
காங்கிரஸ் இல்லாத இந்தியாவை, (காங்கிரஸ் முக்த் பாரத்தை)
பாஜக கொண்டு வந்துவிட்டதா?
காம்ரூப் முதல் கட்ச் வரை தாங்கள் இருப்பதாக அமித் ஷா சொல்வது சரிதான். மோடி மொத்த இந்தியாவின் பிரதமர் என்பதில் சந்தேகம் இருப்பதால், பாஜக செல்வாக்கு நாடெங்கும் பரவி இருக்கிறது எனக் காட்ட, காம்ரூப் முதல் கட்ச் வரை என அவர் சொல்லி உள்ளார் போலும்.
காங்கிரஸ் சரிந்துள்ளது. தேய்ந்துள்ளது. அதன் செல்வாக்கு வடிந்து கொண்டே இருக்கிறது என்பது உண்மைதான். இன்றளவில் காங்கிரஸ் புதுச்சேரி, இமாச்சல்பிரதேஷ், உத்தர்காண்ட், கர்நாடகா, மேகாலயா, மணிப்பூர், மிசோரம் என்ற மாநிலங்களில் மட்டுமே ஆள்கிறது. புதுச்சேரியில், தேர்தல் முடிந்த உடனேயே யார் முதல்வர் என கோஷ்டிப் பூசல் துவங்கிவிட்டது. மற்ற மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சிகள் உள்வெடிப்பால் சிதறும் ஆபத்து எப்போதும் உண்டு. மேற்கு வங்கத்தில் சட்டமன்ற உறுப்பினர்களிடம் கட்சி மாற மாட்டோம் என ரூ.100 முத்திரைத்தாளில் பிரமாண வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
இந்த சட்டமன்றத் தேர்தல்களில் எல்லா மாநிலங்களிலும் மொத்தமாக பாஜக 64 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளபோது, காங்கிரஸ் மேற்கு வங்கத்தில் 44, தமிழ்நாட்டில் 8, புதுச்சேரியில் 15, அஸ்ஸôமில் 26, கேரளாவில் 22 என மொத்தம் 115 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பாஜகவைவிட காங்கிரஸ் 51 இடங்கள் கூடுதலாகப் பெற்றுள்ளது.
2004ல் தோற்று, 2009லும் தோற்ற பிறகு, 2011 வாக்கில் பாஜக உள்ளுக்குள் வெடித்துச் சிதற இருந்த நிலையை, நினைவில் கொள்ள வேண்டும். 2012லிருந்து மே 2016 வரை தெலுங்கானா நீங்கலாக நடந்த சட்டமன்றத் தேர்தல்கள் தொடர்பான சில விவரங்கள் கவனிக்கத்தக்கவை.
பல்வேறு மாநிலங்களில் நடந்த தேர்தல் களில், காங்கிரஸ் 11.6 கோடி வாக்குகளையும் பாஜக 12.6 கோடி வாக்குகளையும் பெற்றுள் ளன. இரண்டு கட்சிகளும் 23.2 கோடி வாக்கு களை, 42% வாக்குகளைக் கைப்பற்றின. காங்கிரஸ், பாஜக அல்லாத கட்சிகள் 33.5 கோடி வாக்குகள் பெற்றனர். அதாவது 58% வாக்குகள் பெற்றனர்.
காங்கிரஸ் 871 இடங்களும் பாஜக 1091 இடங்களும் என இரண்டு கட்சிகளுமாக 1922 இடங்களும், காங்கிரஸ், பாஜக கட்சிகள் அல்லாதவர்கள் 2,195 இடங்களும் பெற்றனர். இதில் காங்கிரஸ் பாஜக கட்சிகளின் கூட்டணி கட்சிகளும் உண்டு.
மொத்தத்தில், காங்கிரஸ் அல்லாத பாஜக அல்லாத என்ற நிலையே மேலோங்கியுள்ளது. (ஆயினும் இதை, காங்கிரஸ் எதிர்ப்பு பாஜக எதிர்ப்பு எனச் சுலபமாகச் சொல்லிவிட முடியாது). 2014ல் பாஜக 31% வாக்குகளுடன் தான் ஆட்சியில் அமர்ந்தது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மே 2016 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், நம்பகத்தன்மை இழந்து கொண்டிருக்கிற பாஜகவுக்கு உத்வேகத்தையும், சரிந்து கொண்டி ருக்கின்ற காங்கிரசுக்கு மிகப் பெரிய அடியையும் கொடுத்துள்ளன. அசாம் போன்ற பன்மைத் தன்மை கொண்ட, சிக்கலான ஒரு மாநிலத்தில், பாஜக அழுத்தமான விதத்தில் ஆட்சியைப் பிடித்திருப்பது, மாநிலத்தில் உள்ள ஜனநாயகம் மற்றும் நல்லிணக்கம் விரும்பும் சக்திகளுக்கு ஒரு புதிய சவாலைக் கொண்டு வந்துள்ளது. பாரம்பரியமாக இடதுசாரி சாய்வு கொண்ட கேரளாவிலும் மேற்கு வங்கத்திலும் பாஜக தன் கணக்கைத் துவக்கியுள்ளதும் கவலைக்குரியதே.
பாஜக விசயத்தில் கவலை தரும் அம்சங்கள் எவை?
புதுச்சேரியில் பாஜக பற்றிப் பெரிதாகக் கவலைப்பட ஏதுமில்லை. தமிழ்நாட்டில் அவர்களால் கூட்டணியில் எந்த கட்சியையும் சேர்க்க முடியாமல் சாதியக் கட்சிகளை மட்டுமே சேர்த்துக் கொள்ள முடிந்தது. மிஸ்டு கால் உறுப்பினர்கள் 50 லட்சம் பேரில், 37ணீ லட்சம் பேர் பாஜகவுக்கு மிஸ்டு வாக்காளர்கள் ஆனார்கள். 2014 நாடாளுமன்றத் தேர்தல்களில் 7 சட்டமன்றத் தொகுதிகளில் முதலிடம் பெற்றிருந்த பாஜக, மே 2016ல் அவற்றில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை. 3 தொகுதியில் இரண்டாம் இடம் பெற மட்டுமே முடிந்துள்ளது.
கேரளாவில், சட்டமன்றத் தேர்தலில் தாமரை மலராது என காங்கிரசும் இடது முன்னணியும் அறுதியிட்டுச் சொன்னார்கள். இந்தத் தேர்தலில் பாஜக, ஈழவ சமூக அமைப்பு, ஜானு தலைமை தாங்கும் பழங்குடி யினர் அமைப்பு, கேரள காங்கிரசின் ஒரு துணைப் பிரிவு ஆகியோரைக் கொண்டு ஒரு மகா கூட்டணி அமைத்தது. பாஜக செல்வாக்கு, புறக்கணிக்கப்பட்ட பழங்குடியினர் மத்தியில் பெருகி வருகிறது. சிறுபான்மையினர் காங்கிரசி டமிருந்து விலகி இடதுசாரிகள் பக்கம் பெருமளவுக்கு திரும்ப, நாயர் சமூகம் உள்ளிட்ட இந்து சமூகத்தின் ஒரு பிரிவு, பாஜக நோக்கி நகர்ந்துள்ளது. கூட்டாளி பாரத் தர்ம சேனா 3.5% வாக்குகள் பெற்றது. இடது முன்னணி 91 இடங்கள் காங்கிரஸ் தலைமையிலான முன்னணி 47 இடங்கள் சுயேச்சை 1 இடம் பெற, கேரள சட்டமன்றத்தில் திருவனந்தபுரம் நெமம் தொகுதியில் ஓ.ராஜகோபால் மூலம் பாஜக தன் கணக்கைத் துவங்கியது. இந்த முறை பாஜக தலைமையிலான கூட்டணி 14.65% வாக்குகளைப் பெற்றுள்ளது. மஞ்கேஸ் வரத்தில் பாஜகவின் சுரேந்திரன் 89 வாக்குகள் வித்தியாசத்தில் இரண்டாம் இடம் பெற்றார். கேரளத்தில் இகக(மா) கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது, பாஜகவுக்கு மட்டுமே மேலும் மேலும் சாதகமாக அமையும். கேரளாவில் முரட்டு எதிர்க்கட்சியாவதற்கு ஏற்ப, பாஜக டெல்லியிலும் முயற்சி செய்யும். அதற்கு ஊடக செல்வாக்கையும் பயன்படுத்தும். சமீபத்தில் டெல்லி சிபிஎம் அலுவலகம் மீதான தாக்குதல், இதற்கு ஒரு சான்றாகும். கேரளாவில் பாஜக ஒரு மூன்றாவது அணி என சட்டமன்றத் தேர்த லில் மாறி இருப்பது ஆபத்தானதாகும்.
மேற்கு வங்கத்தில், நாடாளுமன்றத் தேர்தலில் 17% வாக்குகள் பெற்ற பாஜக, மமதா தொகுதி உள்ளிட்ட பல சட்டமன்றத் தொகுதிகளில் முன்னிலை வகித்த பாஜக, இந்த முறை 10.2% வாக்குகள் பெற்று 3 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. சிபிஎம் வாக்குகள் சரிவதும், பாஜக பலப்படுவதும் நடக்கிறது.
நெல்லி, கோக்ரஜார் என்ற இசுலாமிய சிறுபான்மையினர் படுகொலை நடந்த மாநிலம் அசாம். பங்களாதேஷ் இசுலாமியர் ஊடுவருவல், ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம் அழிந்தது, நம் நிலம் நம் அடையாளம், நம் சொந்த பூமி (JATI - MATI - BETI - LAND - IDENTITY - HOMELAND) என இந்தத் தேர்தலில் பாஜக உரத்துக் கூக்குரலிட்டது. குறுகிய வெறிவாத அசாம் கண பரிசத், போடோ மக்கள் முன்னணி மற்றும் சில பழங்குடி அமைப்புக்கள் ஆகியவற்றைக் கூட்டு சேர்த்துக் கொண்டது. வழக்க மான பாணியில், ஆர்எஸ்எஸ், சங் பரிவார் அமைப்பு வலிமை அடிப்படையில் பாஜக, அசாமில் வெற்றி பெறவில்லை. ஆனால் அந்த அமைப்பின் தந்திரத்தால், காங்கிரஸ் மீதான அதிருப்திகளை பயன்படுத்திக் கொள்ள அசாமின் குறிப்பான இன, மதச் சிக்கல்களைக் கையாளும் கூட்டணியை அமைத்தது. 126 பேர் கொண்ட சட்டமன்றத்தில் 60 இடங்கள் மட்டுமே கொண்ட பாஜகவுக்குத் தனிப்பெரும்பான்மை கிடையாது. நாடாளுமன்றத் தேர்த லில், 67 தொகுதிகளில் பாஜக முன்னிலை வகித்தது. 2011ல் அசாம் கண பரிசத்தை விட்டு வெளியே வந்து பாஜகவில் சேர்ந்த சர்பானந்த சோனேவால்தான், பாஜக கூட்டணியின் முதல்வர். இவர் ஆல் அசாம் ஸ்டூடன்ட்ஸ் யூனியன் தலைவராக இருந்தவர். சட்டவிரோத குடியேறிகள் (தீர்ப்பாயங்கள் தீர்மானித்தல்) சட்டம், (ILLEGAL MIGRANTS DETERMINATION BY TRIBUNALS) ACT)க்கு எதிராக, அது குடியேறி களுக்குச் சாதகமானது அசாமியருக்கு எதிரானது என உச்சநீதிமன்றத்தில் வழக்கு போட்டு வெற்றி பெற்றவர். சர்பானந்த சோனேவால் அப்போது கவுஹாத்தி திரும்பிய போது, மாபெரும் நாயகத்தன்மைவாய்ந்த வரவேற்பு பெற்றார். மோடியால் வைரம் என அழைக்கப்பட்ட இவர், பழங்குடி சமூகத்தவர். அய்க்கிய அமெரிக்காவின் டொனால்ட் டிரம்ப், குடியேறும், குடியேறிய மெக்சிகர்களுக்கு எதிராக, நஞ்சை உமிழ்வது போல், சோனேவால், பங்களாதேஷ் எல்லையில் இரும்பு வேலி அமைப்பேன், குடிமக்கள் பதிவேடு பராமரிப்பேன் என ஆபத்தாகவே ஆரம்பித்துள்ளார்.
அசாமில் பாஜக வெற்றி பெற, 15 ஆண்டுகளாகத் தொடர்ந்து ஆண்டு வரும் தருண் கோகாய் தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கத்தின் தோல்விகளும் முக்கியக் காரணம். தருண் கோகாயின் வலதுகரமாக இருந்த காங்கிரஸ் அமைச்சர் ஹிமாந்த பிஸ்வா சர்மா, கடைசி நேரத்தில் காங்கிரசை விட்டு ஓர் அணியாக வெளியேறி பாஜகவில் சேர்ந்தார். கூட்டம் சேர்க்கும் நட்சத்திரப் பேச்சாளராக அமைந்தார் ஹிமாந்த பிஸ்வா சர்மா.
எது எப்படியானாலும் பாஜக வடகிழக்கில் மிகப் பெரிய மாநிலத்தில் ஆட்சி அமைத்திருப்பதும், அந்த வடகிழக்கு பிராந்தியத்தின் நுட்பமான இன மதச் சிக்கல்களை ஆர்எஸ்எஸ் தன் பிளவுவாத நிகழ்ச்சி நிரலுக்கேற்ப கையாள ஒரு வாய்ப்பு உருவாகியுள்ளதும், ஆபத்தான அறிகுறிகளாகும். ஏற்கனவே ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரங்கள் சட்டம் அமலில் இருக்கும் வடகிழக்கில், எதிர்ப்புக் கிளர்ச்சிகளை கையாள்வது தொடர்பாக எந்தப் பதிலும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என அசாமில் ஒரு நிலை உள்ளபோது, ஆர்எஸ்எஸ் பாஜக சட்டகத்துக்குள் அசாமிய பிராந்தியவாதம் பொருத்தப்பட்டுள்ளது பேராபத்தான ஒரு விசயமே.
மோடி அரசு, மாணவர், இளைஞர், விவசாயிகள், பெண் தொழிலாளர் உள்ளிட்ட தொழிலாளர்கள், ஜனநாயக முற்போக்கு மற்றும் தாராளவாத அறிவாளிகளின் வலுவான எதிர்ப்பை சந்தித்து வந்துள்ளது. பெண்கள், தலித்துகள் மற்றும் சிறுபான்மையினரிடமிருந்து தனிமைப்பட்டு வருகிறது. தேர்தலில் போட்டியிட எதையும் செய்யும், சந்தர்ப்பவாத எண்ணிக்கை விளையாட்டுக்கள் மூலம் ஏதேதோ சமரசம் செய்யும் கட்சிகளால், பாஜக அரசுக்கு வலுவான எதிர்ப்பைக் கட்டமைக்க முடியாது.
பாஜகவின், சாதிய/மதவாத பிளவுவாத அரசியலுக்கும், கார்ப்பரேட் ஆதரவு நவதாராளவாத நிகழ்ச்சி நிரலுக்கும் எதிரான, ஜனநாயகத்திற்கான மக்கள் போராட்டங்களின் மேடையாக, முன்னெடுக்கும் சக்தியாக, இடது சாரிகளின் ஒன்றுபட்ட சுதந்திரமான பாத்திரத்தை நிறுவுவது அவசர அவசிய தேவையாகி உள்ளது.

மேற்கு வங்கத்தில் இடது முன்னணி 2011 அய் காட்டிலும் 2016ல்
ஏன் படுமோசமாகத் தோல்வி அடைந்தது?
ஏன் படுமோசமாகத் தோல்வி அடைந்தது?
காம்ரேட்
1977ல் இருந்து 2011 வரை 32 வருடங்கள் தொடர்ந்து மேற்கு வங்கத்தில் பதவியில் இருந்த இடது முன்னணி, 2011ல் திரிணாமூல் காங்கிரஸ் தலைமையிலான (காங்கிரசும் இருந்த) கூட்டணியிடம் தோல்வி அடைந்தது. அப்போது திரிணா மூல் காங்கிரஸ் 184 இடங்களிலும் காங்கிரஸ் 42 இடங்களி லும் வெற்றி பெற்றன. திரிணா மூல் காங்கிரஸ் 38.93% வாக்குகள் பெற்றது. காங்கிரஸ் 9.09% வாக்குகள் பெற்றது. அந்தத் தேர்தலில் இடது முன்னணி 40%வாக்குகளுடன் 60 இடங்கள் பெற்றது. அப்போது பாஜக 5.2% வாக்குகள் பெற்றது.
2014ல் நாடாளுமன்றத் தேர்தல் நடந்த போது மமதா தனித்து போட்டியிட்டார். மமதா 34 இடங்களில் வெற்றி பெற்றார். இடது முன்னணி வாக்குகள் 30% எனக் குறைந்தது.
2016ல் திரிணாமூல் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டு 44.9% வாக்குகளுடன் 211 இடங்களில் வென்று 2,45,64,523 வாக்குகளைப் பெற்றுள்ளது. இடது முன்னணி 199 இடங்களில் போட்டியிட்டு 32 இடங்களில் வென்றது. சென்ற சட்டமன்றத் தேர்தலை விட 14.13% குறைவாக, 25.9% வாக்குகளுடன் 1,42,16,327 வாக்குகள் பெற்றுள்ளது. திரிணாமூல் காங்கிரசை விட, ஒரு கோடிக்கும் மேல், குறைவான வாக்குகளைப் பெற்றுள்ளது.
காங்கிரஸ் 2016ல் 92 இடங்களில் போட்டியிட்டு 44 இடங்கள் வெற்றி பெற்றுள்ளது. 2011 தேர்தலைக் காட்டிலும் 3.2% அதிகமாக 12.3%மும் 67,00,938 வாக்குகளும் பெற்றுள்ளது. 18 தொகுதிகளில் இடது முன்னணியும் காங்கிரசும் நட்புரீதியாக போட்டியிட்டதால், அணியின் வாக்கு சதவீதம் மொத்த வாக்குகள் எனச் சொல்வது சரியாக இருக்காது.
2011 சட்டமன்றத் தேர்தலில் 5.2% வாக்குகள் பெற்ற பாஜக இந்தத் தேர்தலில் 10.7% பெற்று 58,09,860 வாக்குகள் பெற்றுள்ளது. பார்த்த மாத்திரத்தில் 2011ல் இருந்து 2016ல் அவரவர் வழியில் திரிணாமூல் காங்கிரஸ், காங்கிரஸ் மற்றும் பாஜக ஆதாயம் அடைந்துள்ளனர் என்பதும், வாக்கு சதவீதத்தில் பெரும் சரிவை இடது முன்னணி மட்டுமே சந்தித்துள்ளது என்பதும் சட்டமன்ற இடங்களும் இடது முன்னணிக்கு மட்டுமே குறைந்துள்ளது என்பதும் தெரிகிறது.
2011, 2016 தேர்தல்களில் என்ன வேறுபாடு?
2006ல் வெற்றி பெற்ற இடது முன்னணியும், அதன் இகக(மா) முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்யாவும், அந்த வெற்றியை, அதிவேக தொழில்மயம், தனியார் முதலீட்டுடன் நெருக்கமான உறவு மூலம் தொழில்மயமாக்கம் ஆகியவற்றுக்கு அளிக்கப்பட்ட வாக்குகள் என, பொருள்படுத்திக் கொண்டனர். தொழில்கள் வராமல், வேலை வாய்ப்புக்கள் உருவாகாமல், நந்திகிராமில் இந்தோனேஷிய சலேம் குழுமத்திற்கும் சிங்கூரில் டாடாவுக்கும் விவசாய நிலங்களைக் கைப்பற்றித் தர முயன்றனர். ஆபரேசன் பர்கா என்ற மேற்குவங்க நிலச் சீர்திருத்தத்தின் பயன்கள் வடிந்துவிட்ட பிறகு, விவசாயிகளுக்கு நிலம் பெற்றுத் தர வேண்டிய இடதுசாரிகள், விவசாயிகளின் நிலங்களை முதலாளிகளுக்காகப் பிடுங்கித் தருகிறார்கள் என்ற அவப்பெயருக்கு ஆளாயினர். தோற்ற அளவில் ஓர் இடதுசாரி நிகழ்ச்சி நிரலுடன், நிலப்பறி எதிர்ப்புப் போராட்டம் நடத்துபவராக மமதா 2011ல், சிபிஎம்மைத் தோற்கடித்தார்.
2011 தோல்விக்குப் பிறகு திருத்திக் கொள்ளும் இயக்கம் நடத்தப்போவதாக சிபிஎம் சொன்னது. ஆனால், நந்திகிராம் சிங்கூரில் முதலாளிகளுக்காக அரசு முன் நின்று நிலம் கையகப்படுத்தப் பார்த்தது தவறு என, சிபிஎம் எந்த சுயவிமர்சனமும் செய்து கொள்ளவில்லை.
2016ல் திரும்பவும், மமதா கொண்டு வராத தொழில் வளர்ச்சியைக் கொண்டு வருவோம் எனச் சொல்லி சிங்கூர் முதல் சல்போனி வரை ஒரு பாத யாத்திரை நடத்தினர். சல்போனி, நந்திகிராமிலிருந்து இரண்டு மணி நேர பயண தூரத்தில் உள்ளது. 4,000 ஏக்கர் அரசு நிலத்தில் 7 வருடங்களுக்கு முன்பு அங்கு ஜிண்டால் நிறுவனம் ஸ்டீல் ஆலை நிறுவ முயன்று தோற்றது. டாடா நிறுவனமே மஞ்சள் நிற நானோ கார் மாடலை, அந்த விசயம் சரிப்பட்டு வராது எனக் கைவிட்ட பிறகும், சிபிஎம்மின் சிங்கூர் வேட்பாளர் 2016 சட்டமன்றத் தேர்தலில் அந்த மஞ்சள் நிற நானோ காரில் பிரச்சாரம் செய்தார். திருந்தவில்லை என்ற அளவு தாண்டி, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியதாகவே, இந்த நடவடிக்கைகளை மக்கள் பார்த்துள்ளனர்.
அரசியல் செயல்தந்திரம் என்ற விசயத்திலும் சிபிஎம் பெரும் தவறிழைத்தது. பீகாரில், 2015 தேர்தலில் இடது அணி அமைத்தோம். அந்தத் தேர்தலில் இகக(மாலெ) மட்டுமே இடது அணியில் 3 இடங்களை வென்றது.
அய்க்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் மெகா கூட்டணி வெற்றி பெற்றது. பீகார் மெகா கூட்டணி அனுபவம்தான் உடனடிப் பயன்தரும் வெற்றிகரமான அனுபவம், இடது அணி அனுபவம் உடனடி வெற்றிக்கு உதவாது என ஒரு வேளை சிபிஎம் கருதி இருக்கலாம். அதோடு கூட, சுலபமான தேர்தல் எண்ணிக்கை கூட்டல் கணக்கு ஒன்றும் போட்டுப் பார்த்தது. தனது வாக்குகளும், காங்கிரஸ் 2011ல் பெற்ற 9.09% வாக்குகளும் சேர்ந்தால் வெற்றி பெறவும் வாய்ப்புண்டு எனக் கணக்கிட்டது.
‘சிபிஎம் காங்கிரஸ் கூட்டணி’ என பகிரங்கமாக அறிவிக்க முடியாமல் சிபிஎம் தயங்கியது. அவர்களது விசாகப்பட்டினம் காங்கிரஸ் முடிவுப்படி, காங்கிரசோடு கூட்டணியை நியாயப்படுத்த முடியாது. காலாகாலமாக, பல பத்தாண்டுகளாக காங்கிரசை எதிர்த்து வந்த இடதுசாரிகள் எப்படி காங்கிரசோடு கூட்டணி வைக்கலாம் என்ற கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் சங்கடப்பட்டனர். அதனால்தான், கீழிருந்து மக்கள் விருப்பப்படி, தொண்டர்கள் விருப்பப்படி, திரிணாமுல் காங்கிரசுக்கு எதிராக இடது முன்னணி அல்லது காங்கிரஸ் போட்டியிடுவது என்று முடிவானது என நியாயப்படுத்தினர். கூட்டணி என்று அமைத்திருந்தால், காங்கிரஸ் கூட்டங்களில் வெளி மாநிலங்களில் உள்ள சிபிஎம்மின் அரசியல் தலைமைக்குழு, மத்தியக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டிருப்பார்களே என்றும் கூடச் சொன்னார்கள். ஆனால், சிபிஎம் மேற்குவங்க மாநிலச் செயலாளர், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் டாக்டர் சூர்யகாந்த் மிஸ்ரா முதலமைச்சர் வேட்பாளர் ஆகக் தகுதி வாய்ந்தவர் எனக் காங்கிரசாரும் ஊடகங்கள் பலவும் பேசினார்கள்.
தேர்தல் முடிந்து முடிவுகள் வந்த பிறகு திரிணாமுல் ஆட்சி அமைக்காமல் தடுக்கவே, காங்கிரஸ் ஆதரவு நாடப்பட்டது என்பதல்ல விஷயம். இது தேர்தலில் தேர்தலுக்காக ஏற்பட்ட கூட்டணி. தமிழக ஊடகங்கள் கடைசி சில நாட்களில், கருத்துக் கணிப்புக்கள் மற்றும் செய்திகள் மூலம் அஇஅதிமுக, திமுகதான் எல்லாம் எனச் சொன்னதுபோல், மேற்கு வங்கத்திலேயே மிகவும் சக்தி வாய்ந்த ஆனந்த் பஜார் பத்திரிகா ஊடகக் குழுமம், இடது முன்னணி காங்கிரஸ் கூட்டணி அமைய, அந்தக் கூட்டணியே வெற்றி பெறும் என்ற தோற்றம் உருவாக்க, அயராது பாடுபட்டது. ஆனந்த் பஜார் பத்திரிகா குழுமம், இடது முன்னணி காங்கிரஸ் கூட்டணியை, துணிச்சலான, காரியம் சாதிக்கும், மிகவும் புத்திசாலித்தனமான கூட்டணி எனச் சிலாகித்தது. மேற்குவங்க மக்கள், இந்த சந்தர்ப்பவாதக் கூட்டணியை, அதனை நியாயப்படுத்தும் முயற்சிகளை, சந்தர்ப்பவாதம் ஏதும் இல்லை என ஏமாற்றும் முயற்சிகளை நம்பவில்லை என்பதோடு மட்டுமல்லாமல் தண்டிக்கவும் செய்தனர்.
இடது முன்னணி - காங்கிரஸ் கூட்டணியால் யார் ஆதாயம் அடைந்தார்கள்?
2011ல் 60 இடங்கள் இருந்த இடது முன்னணி இப்போது 32 இடங்களை மட்டுமே பெற்றுள்ளது. 2011ல் பெற்றதை விட 14.13% வாக்குகள் குறைவாகப் பெற்றுள்ளது. 2011ல் 9.09% வாக்குகள் பெற்ற காங்கிரஸ் 2016ல் 3.2% கூடுதலாக 12.3% வாக்குகள் பெற்று, சட்ட மன்றத்தில் கூடுதல் இடங்களைப் பெற்றுள்ளது. இந்தக் கூட்டணியின் வெற்றிக்கு உந்து சக்தியாக அமையும் என எதிர்பார்க்கப்பட்ட, மமதா படுதோல்வி அடைவார் எனப் பெரிதும் பேசப்பட்ட, வடக்கு வங்க அலிபுர்தூர், கூச் பிகார், டார்ஜிலிங், மால்டா, மத்திய வங்க முர்ஷிதாபாத்தில், இந்தக் கூட்டணி 38 இடங்கள் பெற்றுள்ளது. திரிணாமூல் காங்கிரஸ் 30 இடங்களைப் பெற்றது. அந்த 38 இடங்களில், காங்கிரஸ் 28 இடங்களிலும் சிபிஎம் 10 இடங்களிலும் வெற்றி பெற்றன. காங்கிரஸ் இடது முன்னணியோடு 18 இடங்களில் நட்புரீதியாகப் போட்டியிட்டது. காங்கிரஸ் கட்சியினர் பல இடங்களில் திரிணாமூல் காங்கிரசுக்கு வாக்களித்தனர். இடது முன்னணிக்கு வாக்களிக்காமல் நோட்டாவுக்குக் கூட வாக்களித்தனர். கூட்டணியின் அமைப்பாளர் டாக்டர் சூர்யகாந்த் மிஸ்ரா மேற்கு மிதினாப்பூரின் நாராயண்கர் தொகுதியில் தோல்வி அடைந்தார். காங்கிரஸ் மேற்கு வங்கத்தில் சட்டமன்ற எதிர்க்கட்சியாகி உள்ளது.
மமதா வெற்றிக்கு நேர்மறை காரணங்கள் இல்லையா?
பதவியில் இருக்கும் மமதா, சிபிஎம்மைக் காட்டிலும் ஒரு கோடிக்கும் கூடுதலான வாக்குகள் பெறுகிறார் என்றால், இடது முன்னணி - காங்கிரஸ் கூட்டணியின் நம்பகத் தன்மை எடுபடவில்லை என்பது மட்டும் அல்ல காரணம். 2011ல் கிராமப்புற, நகர்ப்புற அடித்தட்டு மக்கள், வறியவர்கள், உழைக்கும் விவசாயிகள் சமூக அடித்தளம் மமதா நோக்கி நகர்ந்தது. முற்போக்கு அறிவாளிகளும், மமதா பக்கம் சென்றனர். மமதாவின் சைக்கிள் வழங்குதல், வறுமைக் கோட்டிற்கு கீழிருப்போருக்கு கிலோ ரூ.2க்கு அரிசி, படிப்பைத் தொடரும் பெண்களுக்கு கன்யாஸ்திரீ நலத்திட்டம், கிராமப்புறச் சாலைகள், கிராமங்களுக்கு மின்சாரம் ஆகியவை, நிச்சயமாய் மமதாவிற்கு பெருவெற்றி தேடித் தந்துள்ளன.
கவுரவம் பாதுகாப்புடன் கூடிய போதுமான வருமானம் உள்ள வேலை, கட்டுப்படியாகும் விவசாயம் போன்ற பிரச்சனைகள் தீராமலே ஜனரஞ்சக நல நடவடிக்கைகள் மக்கள் மனதில் பெரிதாகத் தோன்றுவதும், அந்த நட வடிக்கைகள் தொடர்பாக ஏற்பட்ட சாதகமான மக்களின் மனோநிலையும், மேற்கு வங்க மக்களின் பின்தங்கிய பொருளாதார நிலையைப் புலப்படுத்தும்.
மேற்கு வங்க மக்கள் நாரதா, சாரதா ஊழல் முறைகேடுகளை ஏற்றுக் கொண்டு விட்டனர், மமதா ஆட்சியின் அராஜகத்தை ஏற்றுக் கொண்டுவிட்டனர் என்பதாக நாம் தேர்தல் முடிவுகளைக் காண முடியாது. சாரதா ஊழலில் சிறை சென்ற மதன் மித்ராவும் திரிணாமூலின் எட்டு அமைச்சர்களும், இந்தத் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் முடிந்த பிறகு, திரிணாமூல் நிகழ்த்தும் வன்முறையை நிச்சயம் மக்கள் கவனித்துக் கொண்டுதான் உள்ளனர்.
ஒட்டுமொத்தத்தில், எந்த சமூக உள்ளடக்கமும் இல்லாத இடது முன்னணி - காங்கிரஸ் கூட்டணியின் ‘ஜனநாயகம் காப்போம்’ முழக்கமும், கூட்டணியின் சந்தர்ப்பவாதத் தன்மையும், மமதாவின் ஜனரஞ்சகத் தன்மை முன்பு ‘மமதா வறியவர் சார்பானவர்’ என்ற கருத்தின் முன்பு படுதோல்வி அடைந்தன.
தேர்தலை அடுத்து?
இககமா தரப்பில், சந்தர்ப்பவாதக் கூட்ட ணியை நியாயப்படுத்தி, கூட்டணி வைத்ததற்கும் கூட்டணி தொடர்வதற்கும் காரணங்களை அடுக்குவதற்கு, ஒரு வாய்ப்பு உள்ளது. சட்டமன்ற தேர்தல் முடிவுகளை அடுத்து, பிரபலமான இடதுசாரி கருத்தியலாளர் பிரபாத் பட்நாயக் எழுதியுள்ள விசயங்கள் கவனத்துக்குரியவை. ‘புரட்சி உடனடியாக வராது என்பதை மறுத்து, நடைமுறை அரசியலுக்கு மேலாக தார்மீக பரிசுத்த நிலையை முன்வைக்கும் போக்கு, இடதுசாரிகள் வளரத் தடையாகும்’. ‘சில குறிப்பிட்ட கட்சிகளை நவதாராளவாத கட்சிகள் என அடையாளப்படுத்தி அவற்றோடு உறவில்லை என முடிவெடுப்பது மதச்சார்பின்மை மற்றும் ஜனநாயகம் காக்கும் போராட்டத்தைப் பலவீனப்படுத்தும்’. ‘இந்துத்துவா மற்றும் அரை பாசிச சக்திகளுக்கு எதிரான போராட்டத்தில், மற்றவர்களோடு போராட்டங்களில், மேடைகளில், அரசாங்கங்களில் அய்க்கியப்படுவதும், நவதாராளவாத நிகழ்ச்சி நிரலுக்கு எதிரான ஸ்தூலமான மாற்று நிகழ்ச்சி நிரல் அடிப்படையில் அய்க்கியப்படுவதும், மக்களுக்கு மேலாக உதவும்’.
இந்தக் கருத்துக்களுக்கு பொருத்தமாகவே மேற்குவங்க சிபிஎம் செயலாளர், இடதுசாரி ஜனநாயக மதச்சார்பற்ற சக்திகளின் அய்க்கியம் காலத்தின் தேவை என்கிறார். 2014 நாடாளுமன்றத் தேர்தலில் இடது முன்னணி 27, காங்கிரஸ் 29 சட்டமன்றத் தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்றிருந்ததாகவும், இடது முன்னணி 2 இடங்கள், காங்கிரஸ் 4 இடங்கள் மட்டுமே வென்றதாகவும், இந்தக் கூட்டணி அமைத்ததால் 2016ல் கூடுதல் இடங்கள் கிடைத்தது எனவும், பாஜக இரண்டாம் இடம் பெறாமல் தடுக்க முடிந்தது எனவும், தேர்தலுக்குப் பின் சொல்லி உள்ளார். (ஜனநாயக, மதச்சார்பற்ற கட்சிகள் என்று, பாஜக, திரிணாமூல் அல்லாத பலரையும், கடந்த காலத்தில் அழைத்துள்ளனர்).
மற்றொரு வாய்ப்பும் பயணப் பாதையும் கூட இருக்கிறது. மேற்கு வங்கத்தின் அவமானகரமான தோல்வி, செயல்தந்திர தவறு ஆகி யவை சிபிஎம்மின் உள்நெருக்கடியைத் தீவிரப்படுத்தும். நாடெங்கும் காங்கிரஸ் சரியும்போது, காங்கிரசோடு கூட்டணி என்ற பரிசோதனை தோல்வி அடைந்துள்ளதால், அனைவரையும் உள்ளடக்கிய அய்க்கியம் என்ற இடதுசாரி - தாராளவாத வட்டார கூக்குரல் பலவீனப்படவும், ஒப்பீட்டுரீதியில் சுதந்திரமான ஒன்றுபட்ட இடதுசாரி அறுதியிடலுக்கான குரல் பலப்படவும் வாய்ப்புள்ளது.

என்னை எனது உடனடி அடையாளத்தோடு சுருக்கி விடாதீர்கள்
ஜேஎன்யு பல்கலைக் கழக தலித் மாணவி சிந்து குமாரி 16 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தபோது அவருக்காக கரிசனப்படுவதாகச் சொல்லி, அவரை இடதுசாரி அரசியலின் பலிகடா என்று வர்ணித்து சின்மயா என்பவர் முகநூலில் பதிவிட்டதற்கு பதில் அளித்து ஜேஎன்யு பல்கலைக் கழக அகில இந்திய மாணவர் கழக தோழர் சிந்து குமாரி எழுதியதிலிருந்து.... (தமிழில்: தேசிகன்)
முதலில் நான் ஒரு தலித், கம்யூனிஸ்ட், அம்பேத்காரியவாதி என்பதில் பெருமிதம் கொள்கிறேன். அகில இந்திய மாணவர் கழகம் எனும் இடதுசாரி இயக்கத்தில் நான் நானாக முன்வந்துதான் இணைந்து கொண்டேன். அகில இந்திய மாணவர் கழக உறுப்பினராக சேருமாறு யாரும் என்னை அணுகவில்லை.
நான் இகக (மாலெ) விடுதலையின் ஒரு பகுதியாக இருக்கும்போது, என்னை ஒரு தலித் என்றும் நான் பலி கடா ஆக்கப்பட்டதாகவும் யாரும் எடுத்துக் கொள்ளத் தேவையில்லை; எடுத்துக் கொள்ளக்கூடாது; ஏனென்றால், இகக (மாலெ)தான் பீகாரின் மிகவும் விளிம்புநிலை சாதிகளுக்காக, வர்க்கத்திற்காக இருப்பதை சிறு வயது முதல் அனுபவபூர்வமாகப் பார்க்கிறேன்.
எங்களது போராட்டம் இல்லாமல் தலித்துகளின், பின்தங்கிய மக்களின் விடுதலை சாத்தியமில்லை. இந்தியாவில் சாதி, வர்க்கம் சம்பந்தமாக வேறுவேறு கருத்துக்கள் வைத்திருக்கிற தோழர்களோடு எனக்கு எவ்வித பிரச்சனையுமில்லை. இங்கு சாதி, வர்க்கத்தின் வரலாறு பற்றி நான் பிரசங்கம் செய்யப் போவதுமில்லை. அதேநேரம் அடையாள அரசியல் 100 சதம் சரி என்பதோ இடதுசாரி அரசியல் எப்போதுமே தவறு என்பதோ அல்லது இடதுசாரி அரசியல் பத்திரை மாற்றுத் தங்கம் போன்றது என்பதோ அடையாள அரசியல் தவறு என்பதோ மிகவும் சர்ச்சைக்குரியது. சில மாநிலங்களில், அம்பேத்கார் வழி நடப்பவர்கள், சமூக நீதியை உயர்த்திப் பிடிப்பவர்கள் என்று சொல்லி ஆட்சி பீடத்தில் இருந்தவர்கள் தலித் படுகொலைகள் நடக்கும் போது வேடிக்கை பார்த்தார்கள்; குற்றவாளிகளை தப்பிச் செல்ல விட்டு துரோகம் இழைத்தார்கள். அதுபோலவே வேறு சில மாநிலங்களில் இடதுசாரிகள் என்று சொல்லிக் கொள்பவர்கள் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள தலித்துகள் மற்றும் பிற ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்கு துரோகம் இழைத்தார்கள். வரலாற்றில் இருவருமே தவறு செய்திருக்கிறார்கள். அவர்கள் தங்களை சுயபரிசோதனை செய்து காலத்துக்கு தகுந்த மாற்றங்களை செய்து கொள்ள வேண்டும். நான் தலித்தாக இருப்பதால் இடதுசாரிகளால் பலிகடா ஆக்கப்பட்டேன் என்று சிலர் சொல்லும்போது உள்ளபடியே என் மனதிற்குள் சில கேள்விகள் எழுகின்றன.
ஒரு தலித் பெண்ணாக எனக்கென்று சொந்தமாக ஓர் அரசியல் கண்ணோட்டம் இருக்கக் கூடாதா?
என்னுடைய அரசியல் கண்ணோட்டம் இதுவாகத்தான் இருக்க வேண்டும் என்று யாராவது எனக்கு கட்டளை பிறப்பிக்க வேண்டுமா?
என்னை பெயர் குறிப்பிட்டு, இடதுசாரி செயல்பாட்டின் பலிகடா என்று சொல்வதற்கு இவர்களுக்கு யார் உரிமை கொடுத்தது?
ஒரு தலித்தாக இருப்பதாலேயே எனக்கென சொந்தமாக கருத்தோ, அரசியல் கண்ணோட்டமோ இருக்கக் கூடாதா?
சமூக நீதிக்காகவும், சமூகரீதியாக அனைவரையும் உள்ளடக்கிய நிலைமைக்காகவும் நான் 16 நாட்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டேன். ஓரஞ்சாரத்திலுள்ள சாதிகள் மற்றும் வர்க்கங்களுக்கு ஜேஎன்யுவில் இதுநாள் வரை இருந்து வந்த கூடுதல் மதிப்பெண் சலுகையை பாதுகாக்க நான் போராடினேன். இதர பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டுக்காக அகில இந்திய மாணவர் கழகமும், ஜேஎன்யு மாணவர் சங்கமும் போராடியபோது நானும் அதில் ஒருவராக இருந்தேன். மற்ற மாணவர் களோடு கூடவே விளிம்பு நிலை மாணவர்களை குறிவைத்து உயர்நிலைக் குழுவின் அறிக்கை இருக்கும்போது அதற்கு எதிராக நான் போராடிக் கொண்டிருக்கிறேன். எங்கள் உடல்நிலை குறித்து மிகவும் கவலைப்பட்ட ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள், பிற கல்லூரி மாணவர்கள் பெற்றோர்கள் ஆகியோரும் எங்களுக்காக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அது எங்களுக்கு உத்வேகம் அளித்தது. ஆனால் மாறுபட்ட கருத்துக்கள் இருந்தபோதும் என்னுடைய அதே உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வதாய் சொன்னவர்கள் நான் உயிரோடு இருக்கிறேனா அல்லது இறந்து கொண்டிருக்கிறேனா என்று கூட வந்து பார்க்கவில்லை என்பது எனக்கு அதிர்ச்சியளிக்கும் விசயமாகும். சிலருக்கு அணுகுமுறைகளில் வேறுபட்ட கருத்து இருக்கலாம். ஆனால், ஒரே நோக்கத்திற்காக வேறு மாறுபட்ட அணுகுமுறை எடுப்பதை அது ஒரு போதும் தடுக்கக் கூடாது.
ஜேஎன்யு உடனான எனது பிணைப்பு என்பது எனது கற்பனைகளைத் தாண்டி பல்வேறு பிரச்சனைகள் மீது கூருணர்வு கொள்ளவும் அதோடு என்னை அடையாளப்படுத்திக் கொள்ளவும் உதவியது. நான் சாதியை ஒழிக்கப் போராடுவது கூடவே ஆணாதிக்கம், மதவாதம், சிறுபான்மையினர் வேட்டையாடப்படுவது, பழங்குடி மக்கள் வாழ்விடங்களிலிருந்து அப்புறப்படுத்தப்படுவது, பெருந்தொழில்குழும கொள்ளை, பாலின சிறுபான்மையினர் பாகுபடுத்தப்படுவது, தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் ஏழை விளிம்புநிலைப் பிரிவு மக்கள் ஒடுக்கப்படுவது ஆகியவற்றுக்கு எதிராகவும் போராடுவேன்.
நீங்கள் ரோஹித் வேமுலா பற்றிப் பேசுகிறீர்கள். ஆனால் அவர் பெயரைச் சொல்லி என் விருப்பங்களை எனக்கு மறுக்காதீர்கள். ரோஹித் வேமுலாவின் போராட்டங்கள் அல்லது வார்த்தைகள் மீது உங்களுக்கு நம்பிக்கை இருக்குமானால், என்னை எனது உடனடி அடையாளத்தோடு சுருக்கி விடாதீர்கள் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இகக மாலெ தேர்தல் செயல்பாடு
தமிழ்நாட்டில் மாதவரம், விழுப்புரம், குமாரபாளையம், அம்பத்தூர், குளச்சல், திருபெரும்புதூர், மேட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம், கந்தர்வகோட்டை, வேடசந்தூர் ஆகிய பத்து தொகுதிகளில் இகக மாலெ போட்டியிட்டது. சுருங்கிய மக்கள் அடித்தளம், குறுகிய அரசியல் செல்வாக்கு, போதுமான பலம் இல்லாத அமைப்பு என்ற அடிப்படைப் பிரச்சனைகளால், தேர்தல் போட்டிக் களத்தில் நுழைந்ததற்கு அடையாளமான வாக்குகளைக் கூட பெற முடியவில்லை. அதிகபட்சம் 1,004 வாக்குகள் கவுண்டம்பாளையத்தில் கட்சி பெற்றுள்ளது. குளச்சலில் 1,000 வாக்குகள் பெற்றுள்ளது. மற்ற எட்டு தொகுதிகளிலும் சேர்த்து 2,968 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளது. ஆனால், மாநிலம் முழுவதும் 1,500க்கும் மேற்பட்ட தோழர்கள் நிதியும் அர்ப்பணிப்பான உழைப்பும் தந்து கடுமையாகப் பாடுபட்டனர். தேர்தல் செயல்பாட்டை முன்னேற்றவும் வரும் காலங்களில் கூடுதல் அர்ப்பணிப்புடன், கூடுதல் திறனுடன் மக்கள் பணியாற்றவும் இககமாலெ தமிழ்நாட்டு மக்களிடம் உறுதி கூறுகிறது.
மோடியின் இரண்டாண்டு கால ஆட்சி
குஜராத் முதல் குஜராத் வரை
குஜராத் முதல் குஜராத் வரை
மோடியின் இரண்டாண்டு கால ஆட்சி பற்றி மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு நாளிதழ்களில் எழுதுகிறார். மக்கள் பணத்தை செலவு செய்து அரசு விளம்பரங்கள் வெளியிடப்படுகின்றன. விவாதங்கள் தொலைக்காட்சிகளைப் பற்ற வைக்கின்றன. மக்கள் வாழ்வு மலரப் போகிறது என்ற மோடி பாணி வசனங்கள் வலம் வருகின்றன. அவரது வாக்குறுதிகளின் இன்றைய நிலை பற்றி விவாதிக்கப்படுகிறது. உண்மை நிலையைத் தெரிந்து கொள்ள, புரிந்துகொள்ள மோடியின் குஜராத்தில் அவர் முதலமைச்சராக இருந்தது முதல் அவர் பிரதமராகிவிட்ட பிறகும் தொடரும் சில நிலைமைகள் நமக்கு உதவும். கார்ப்பரேட் கொள்ளை ஒரு புறமும் நலிந்த பிரிவினர் மேலும் நலிவுறுவது ஒருபுறமும் தொடர்வது தெளிவாகத் தெரியும். குஜராத்தில் நடப்பதுதான், நாடு முழுவதும் நடக்கிறது, நடக்கும். இங்கு சொல்லப்பட்டுள்ள நிலைமைகள் ஒரு பானை சோற்றுக்கு இரு சோறு பதம் வகை.
அன்று மகாராஷ்டிராவில் விதேசி என்ரான்
இன்று குஜராத்தில் சுதேசி அதானி, எஸ்ஸார், டாடா....

உழைப்புச் சுரண்டல் மட்டுமின்றி, நில அபகரிப்பு, இயற்கை வளங்கள் அபகரிப்பு, அரசு கருவூலத்தை வடித்தெடுப்பது என மூலதனக் குவிப்புக்கு பல வழிகளைக் கையாளும் முதலாளித்துவம், மக்கள் கையில் இருப்பதைப் பறிப்பதையும் ஓர் உத்தியாகக் கொண்டுள்ளது. இது நவதாராளவாதப் பொருளாதாரம் என்ற பெயரில் தீவிரமாக நடைமுறையாகிறது.
நவதாராளப் பொருளாதாரம் நாட்டுக்கு மக்களுக்கு வளம் கொண்டு வரப் போகிறது என்று சொல்லி இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் காங்கிரஸ் ஆட்சியில் அய்க்கிய அமெரிக்க பகாசுர நிறுவனம் என்ரான் நாட்டுக்குள் நுழைய வழி செய்யப்பட்டது. மகாராஷ்டிரா மாநில மின்வாரியம் என்ரானிடம் மின்சாரம் வாங்குகிறதோ இல்லையோ ஆண்டொன்றுக்கு 220 மில்லியன் டாலர் என அடுத்த இருபது ஆண்டுகளுக்கு என்ரானுக்குத் தந்துவிட வேண்டும் என ஒப்பந்தம் போடப்பட்டது. இதற்கு மத்திய, மாநில அரசுகள் உத்தரவாதம் அளித்தன. கிழக்கிந்திய கம்பெனி வந்து நாட்டு வளங்களைக் கொள்ளையடித்துச் சென்றது போல், என்ரான் இந்தியாவின் பொதுத் துறை வங்கிகளில் ரூ.6,000 கோடி வரை கடன் பெற்று, மின்கட்டண உயர்வால் மகாராஷ்டிரா மாநில மின்வாரியத்தை திவாலாக்கி, மக்களை கூடுதல் மின்கட்டணம் செலுத்த வைத்து, பிறகு நட்டம் என்று சொல்லி அதற்கும் இந்திய அரசிடம் ரூ.5,600 கோடி இழப்பீடு பெற்று, இந்திய வங்கிகளிடம் வாங்கிய கடனையும் திருப்பிச் செலுத்தாமல் ஓடிப்போனது.
நவதாராளவாதப் பொருளாதார மாதிரி யின் மிகப் பெரிய முயற்சி என்று முன்னிறுத்தப்பட்ட என்ரான் இந்திய வளத்தை கொள்ளை மட்டுமே அடித்துச் சென்றது. நாட்டுக்கு நட்டத்தை மட்டுமே உருவாக்கியது. மக்களுக்கு மின்கட்டண உயர்வை மட்டுமே தந்தது. என்ரானின் தபோல் மின்நிலையம் அருகில் நிலத்தடி நீர் மாசுபட்டுவிட்டது. பயிர்கள் நாசமாகின்றன. மீன்பிடிப்பு குறைகிறது. சிறிய அளவில் அங்கு போபால் நிகழ்ந்துள்ளது.
அதற்குப் பிறகு நவதாராளவாத பொருளாதார மாதிரிகள் அனைத்தும் பெரும்தொழில் நிறுவனங்கள் வளர்வதை உறுதி செய்தனவே தவிர வளமை கீழே உள்ள யாருக்கும் வடிந்து வரவேயில்லை. அதே நவதாராளவாதக் கொள்கைகளை ஊழல் மட்டும் இல்லாமல் நடை முறைப்படுத்தி நாட்டின் தலையெழுத்தை மாற்றப் போவதாக மோடி சொன்னார். மின்சாரம் இல்லா கிராமங்களே இல்லை என்ற நிலையை உருவாக்குவது தனது லட்சியங்களில் ஒன்று என்றும் சொல்லி வருகிறார். இப்போது இந்தியாவின் மின்உற்பத்தி நிறுவனங்கள் ரூ.50,000 கோடி ஊழலில் ஈடுபட்டுள்ளதாகச் செய்திகள் வருகின்றன. இந்த ஊழலில் பெரிதும் ஆதாயம் அடைந்திருப்பது மோடியின் நண்பர் கவுதம் அதானியின் மின்உற்பத்தி நிறுவனம். இதுவும் மோடி மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு நடந்த ஊழல் அல்ல. மோடி குஜராத் முதலமைச்சராக இருந்தபோதே குஜராத்தில் நடக்கத் துவங்கி இப்போது, மோடி பிரதமர் ஆன பிறகு கேட்பாரற்றுத் தொடர்கிறது.
இந்தோனேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியின் விலை கூடுதலாகக் காட்டப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் இயங்குகிற வருவாய் நுண்ணறிவு பிரிவு இயக்ககம் 40க்கும் மேற்பட்ட மின் உற்பத்தி நிறுவனங்களில் விசாரணை நடத்தியுள்ளது. அறிக்கை இயக்ககத்திடம் உள்ளது. அறிக்கை வெளியிடப்படவில்லை.
நிலக்கரியின் விலையைக் கூடுதலாகக் காட்டுவதால், உற்பத்திச் செலவு கூடுதலாகி விட்டது என்று காட்டி, மின்உற்பத்தி நிறுவனங்கள், மின் ஒழுங்குமுறை ஆணையங்கள் தருகிற இழப்பீட்டு கட்டணம் பெற முடியும். இதனால் ஏற்பட்டுள்ள மின்கட்டண உயர்வு மொத்தமாக ரூ.50,000 கோடி என்று இப்போது மதிப்பிடப்பட்டுள்ளது. இது இன்னும் அதிகரிக்க லாம் என்றும், இதன் மூலம் அதானி, எஸ்ஸôர், அனில் அம்பானி குழுமம் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆதாயம் பெற்றுள்ளன என்றும் சொல்லப்படுகிறது.
குஜராத்தின் முந்த்ரா சிறப்புப் பொருளா தார மண்டலத்தில் உள்ள முந்த்ரா மின் நிலையம் அதானிக்குச் சொந்தமானது. குஜராத் மற்றும் அரியானா மாநிலங்களின் மின்சார வாரியங்களுக்கு மின்சாரம் விற்கிறது. அதே பகுதியில் உள்ள டாடா மின்நிலையம் குஜராத், மகாராஷ்டிரா, பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான் மாநிலங்களுக்கு மின்சாரம் விற்கிறது.
இந்த நிறுவனங்கள் இந்தோனேசியாவில் உள்ள தங்கள் சொந்த நிறுவனங்களிடமிருந்து குறைந்த விலையில் நிலக்கரி இறக்குமதி செய்து கொள்கின்றன. ஆனால், இந்தோனேசிய அரசு வெளியிட்ட ஓர் ஆணை இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் சர்வதேச விலையில் நிலக்கரியை வாங்க வேண்டும் என்று சொன்னதால், தங்கள் நிறுவனங்களுக்கு நட்டம் என்றும் அதற்கு இழப்பீடு வேண்டும் என்றும் அதானி, டாடா நிறுவனங்கள் முறையிட்டன.
பிற நாட்டுச் சட்டத்தால் ஏற்பட்ட மாற்றத்துக்கு தான் ஒன்றும் செய்ய முடியாது என்று சொல்லிவிடுகிற மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பிறகு ஒரு குழு அமைக்கிறது. அந்தக் குழு இந்த இரண்டு நிறுவனங்களும் இழப்பீட்டு கட்டணம் தர வேண்டும் என்று பரிந்துரைக்கிறது. இன்று ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் தலைவராக இருக்கிற அருந்ததி பட்டாச்சார்யா, மத்திய அரசின் பல்வேறு ஆலோசனைக் குழுக்களில் உறுப்பினராக இருந் தீபக் பரேக் போன்றவர்கள் அந்தக் குழுவில் இருந்தார்கள்.
இந்தப் பரிந்துரையை தள்ளுபடி செய்கிற மின்சார மேல்முறையீட்டு தீர்ப்பாயம், மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையமே இந்தோனேசிய சட்டத்துக்கு ஏற்ப நமது ஒப்பந்தங்களில் உள்ள சரத்துக்களை மாற்றி கட்டணத்தை மாற்றியமைக்கலாம் என்று சொல்லிவிடுகிறது. இப்படி மாற்றியமைப்பதால் அதானி நிறுவனத்துக்கு ரூ.6,000 கோடியும் டாடா நிறுவனத்துக்கு ரூ.3,000 கோடியும் இழப்பீடாகக் கிடைக்கும். இந்தத் தொகை மக்களுக்கு மின்கட்டணத்தை உயர்த்துவதன் மூலம் ஈடுகட்டப்படும்.
இப்போது, இந்த நிறுவனங்களிடம் மின்சாரம் வாங்கும் மின்வாரியங்கள், தீர்ப்பாயத்தின் இந்த முடிவுக்கு எதிராக உச்சநீதிமன்றம் செல்ல வேண்டும். அதாவது பாஜக ஆட்சி நடக்கிற குஜராத், ராஜஸ்தான் மற்றும் அரியானா மாநில மின்வாரியங்கள் இதைச் செய்ய வேண்டும். அதானிக்கு, டாடாவுக்கு எதிராக பாஜக ஆளும் அரசாங்கங்கள் இதைச் செய்யுமா?
மின்உற்பத்தி நிலையங்களுக்குத் தேவையான எந்திரங்களின் விலைகளை ரூ.6,000 கோடி வரை உயர்த்திக் காட்டியதாக 2014ல் அதானி நிறுவனத்துக்கு வருவாய் நுண்ணறிவு பிரிவு இயக்ககத்தில் இருந்து காரணம் கோரும் அறிவிப்பாணைகள் அனுப்பப்பட்டன. இரண்டு ஆண்டுகளாக இது தொடர்பாக சம்பந்தப்பட்ட சுங்கத் துறை அதிகாரிகள் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. எஸ்ஸôர் குழுமமும் ரூ.3,000 கோடி வரை எந்திரங்கள் விலையை உயர்த்திக் காட்டியுள்ளதாகச் சொல்லி 2015ல் காரணம் கோரும் அறிவிப்பாணை அனுப்பப்பட்டது. அறிவிப்பு அறிவிப்புடன் நிற்கிறது.
இந்த எந்திரங்கள் சீனத்தில் இருந்தோ தென்கொரியாவில் இருந்தோ நேரடியாக இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படுகின்றன. ஆனால், இந்த எந்திரங்களுக்கான பற்றுச் சீட்டுகள் மட்டும் துபாயில் உள்ள இடைப் பட்ட நிறுவனங்கள் மூலம் வருகின்றன. இந்த நிறுவனங்கள் எந்திரங்களின் விலையை உயர்த்திக் காட்டுகின்றன. எந்திரங்களின் விலையை உயர்த்திக் காட்டுவதால் உற்பத்திச் செலவை உயர்த்திக் காட்ட முடியும்.
ஆக, எந்திரங்களின் விலையை உயர்த்திக் காட்டி, நிலக்கரி விலையை உயர்த்திக் காட்டி, இழப்பீட்டு கட்டணம் நிர்ணயித்து, அதானியும் டாடாவும் ரூயாவும் கொழுக்க, மின்கட்டண உயர்வு மக்கள் தலையில் விழுகிறது.
ஓர் அறிக்கை தயார் செய்யும் காலத்தில் ரூ.4,800 கோடி கடன் வாங்கியதாக ஜெய்ராம் ரமேஷ் குஜராத் மாநில அரசின் எரிவாயு துரப்பண பணிகள் பற்றிய தனது கட்டுரையில் சொல்கிறார். குஜராத் மாநில எரிசக்தி கழகம் 2008ல் இருந்து 2015 வரை 15 பொதுத்துறை வங்கிகளில் இருந்து இதற்காக ரூ.19,720 கோடி கடன் வாங்கியிருக்கிறது. இதற்கு வட்டி மட்டும் ஆண்டுக்கு ரூ.1,800 கோடி வர வேண்டும் என்று மத்திய தணிக்கையாளர் அறிக்கை சொல்கிறது. வங்கிக்கு வர வேண்டிய வட்டித் தொகை வருமா? மோடி காலத்தில் தனியார் நிறுவனங்கள் ஆதாயம் பெற அரசு கடனாக வாங்கிய இந்தப் பணம் திரும்புமா? இதிலும் பெருமளவில் ஆதாயம் அதானிக்கே.
2009 - 2010ல் அதானி பவர் மற்றும் அதானி பவர் மகாராஷ்டிரா லிமிடெட் நிறுவனங்களின் மொத்தக் கடன் ரூ.10,000 கோடி. இந்தக் காலம் மோடி முதலமைச்சராக இருந்த காலம். இப்போது, ஓடிப்போன மல்லையாவை மீண்டும் வரவழைக்க முயற்சி எடுப்பதாக காற்றில் கம்பு சுழற்றும் மத்திய பாஜக ஆட்சியாளர்கள், மோடியின் நெருங்கிய நண்பர் அதானி தர வேண்டிய கடன்களை வாங்க முயற்சி எடுக்கவில்லை. சமையல் எரிவாயு உருளை மானியத்தை விட்டுக் கொடுங்கள் என்று மோடி இந்திய மக்களிடம் கேட்டார். அதானி கடனாக வாங்கிய பணத்தை திருப்பித் தரச் சொல்லி அவரிடம் கேட்கவில்லை.
என்ரான் நிறுவனம் தனது சொந்த நாட்டில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு சிக்கிக் கொண்டது. ஆனால், இந்தியாவில் இருந்து எந்த பாதிப்பும் இல்லாமல் கிடைத்தவரை சுருட்டிக் கொண்டு ஓடியது. இன்று நம் சொந்த நாட்டு நிறுவனங்கள் அந்தக் கொள்ளையை பல்வேறு மோசடி முறைகளில் செய்கின்றன. மத்தியிலும் குஜராத்திலும் ஆட்சியில் இருப்பவர்கள் அவர்களுக்கு சாமரம் வீசுபவர்கள். எனவே அவர்கள் கொழுப்பது இன்னும் கூடத் தொடரும் என்பதைத்தான் இதுவரை இந்த விசயத்தில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் காட்டுகின்றன. அய்நூறுக்கும் ஆயிரத்துக்கும் இந்திய மக்கள் உயிரை உருக்கி உழைத்துக் கொண்டிருக்கும்போது, மோடியின் நண்பர்கள் பல ஆயிரம் கோடிகளை மோடியின் பாதுகாப்புடன் அள்ளிக் கொண்டுப் போகிறார்கள்.
மோடி முதலமைச்சராக இருந்தபோது குஜராத் அதானிக்கு. மோடி இந்தியாவுக்கு பிரதமரான பிறகு இந்தியாவே அதானிக்கு. டாடாவுக்கும் அம்பானிக்கும் நிச்சயம் பங்கு உண்டு.
(தகவல்கள் ஆதாரம்: எகனாமிக் அண்டு பொலிடிகல் வீக்லி தொகுப்பு 51, இதழ் 20, மே 14, 2016ல் வெளியான பரன்ஜோய் குஹா தாகுர்தா எழுதிய கட்டுரை).
குஜராத் மாநிலத்தின் கொலைக்களம்
ஜென்டி இன்று உயிரோடு இல்லை. அவரது நான்கு குழந்தைகள் அனாதைகளாகிவிட்டன. மத்தியப் பிரதேச மலைப்பகுதிகளைச் சார்ந்த (அலிராஜ்பூர்) ஜென்டி, பழங்குடி இனத்தவர். அவரது கணவர் அவரை விட்டு அகன்ற பிறகு தனது நான்கு குழந்தைகளைக் காப்பாற்ற குஜராத்தின், கோத்ரா அருகேயுள்ள பலாசிநோர் என்ற இடத்திற்கு குவார்ட்ஸ் பொடியாக்கும் தொழிற்சாலைக்கு 2003ல் ஏஜென்டுகள் மூலம் வேலைக்குச் சென்றார். ஒரு வாரத்திற்கு ரூ.300 கூலிக்கு வேலை செய்து கொண்டிருந்தார். இரண்டு வருடத்திற்குள் சிலிகோஸிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு அதற்கு மருத்துவமே இல்லாததால் 2006ல் உயிரிழந்தார். 3லிருந்து 10 வயது வரை இருந்த அவரது நான்கு குழந்தைகள் தற்சமயம் நடுத்தெருவில்.
அலிராஜ்பூர், ஜபுவா, தர் ஆகிய மத்தியப் பிரதேச மாநிலத்திலுள்ள மலை மாவட்டங்களில் செய்த ஆய்வின்படி 102 கிராமங்களிலிருந்து குஜராத்திற்கு குவார்ட்ஸ் குவாரிகளுக்கு வேலைக்குச் சென்றவர்களில் 1,701 பேர் சிலி கோசிஸ் நோய்க்கு ஆட்பட்டிருந்தனர். 1983 முதல் 2011 வரை இதில் 538 பேர் இறந்துவிட்டனர். இதில் 185 பேர் குழந்தைகள். 216 குழந் தைகள் அனாதைகளாக்கப்பட்டனர். 78% குடும்பங்களில் குடும்பத்தலைவர் சிலிகோசிஸ் நோயினால் பாதிக்கப்பட்டனர். பலர் இறந்து விட்டனர். வறுமையின் காரணமாக, வாங்கிய கடனை அடைக்க கொத்தடிமைகளாக பல தொழிலாளர்கள் தங்கள் குடும்பங்களோடு குஜராத்தின் கோத்ரா பகுதியில் குவார்ட்ஸ் குவாரிகளில் வேலைக்குச் செல்கின்றனர்.
குவார்ட்ஸ், கண்ணாடி போல் தோற்றமளிக்கும் ஓர் இயற்கை கனிமம். கண்களைக் கூச வைக்கும் இந்தக் கனிமம் குஜராத் மாநிலத்திலுள்ள கோத்ரா, பலாசிநோர், தபோல் போன்ற பகுதிகளில் ஏராளமாகக் கிடைக்கிறது. குவார்ட்ஸ் கனிமத்தை பொடியாக்கும் தொழிற்சாலை முதன்முதலில் 1960ல் இங்கு துவங்கப்பட்டது. தற்சமயம் ஒரு மாதத்திற்கு 4,500 டன் குவார்ட்ஸ் வெட்டி எடுக்கப்பட்டு அங்குள்ள 20 தொழிற்சாலைகளில் பொடி யாக்கப்படுகிறது. இந்தப் பொடி கண்ணாடித் தொழிற்சாலை, ஸ்டீல் உற்பத்தி, வார்ப்படம், அலுமினியம் அலாய், பீங்கான் பொருட்கள், மருந்து உற்பத்தி, பெயிண்ட், பேப்பர் உற்பத்தி போன்ற தொழிற்சாலைகளில் மூலப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது. மேலாகத் தோண்டினாலே இன்னும் 300 ஆண்டுகளுக்குத் தேவை யான குவார்ட்ஸ் கற்கள் குஜராத்தில் இருப்பதாகக் கணக்கெடுக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தூள்களை சாக்குப் பைகளில் நிரப்பி பேக் செய்யும் தொழிலில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுபட்டிருக்கின்றனர். 100% சிலிகோசிஸ் தன்மையுடைய இந்தத் துகள்கள் தொழிலாளர்களின் நுரையீரல்களில் புகுந்து அவர்களைக் கொல்கிறது. தேசிய மனித உரிமை ஆணையம் பலமுறை வலியுறுத்தியும் தொழிலாளர்களுக்கு எந்தவித பாதுகாப்பும் அளிக்கப்படவில்லை.
வளர்ச்சிக்கு உதாரணமாக குஜராத் மாநிலத்தைக் காட்டி, ஏமாற்றி மத்தியில் ஆட் சியைப் பிடித்த மோடி, குஜராத்தில் முதலமைச்சராக இருந்த காலத்திலிருந்தே குவார்ட்ஸ் குவாரிகளில் வேலை செய்யும் ஏராளமான தொழிலாளர்கள் உயிர் இழப்பது அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. லாப வெறியே நோக்கமாகக் கொண்ட கார்ப்பரேட் ஆதரவு மோடி அரசு இதைக் கண்டுகொள்ளவில்லை. 2005லிருந்த இந்தப் பிரச்சனை பற்றி பல ஆய்வறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டு அவை கிடப்பில் போடப்பட்டன. தேசிய மனித உரிமை ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டு அவர்களால் விரிவான அறிக்கை தரப்பட்டது.
உயிரிழந்த தொழிலாளர்களுக்கு நஷ்டஈடு வழங்கக் கோரி 2009லேயே உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்தது. மறுபடியும் 2013ல் உச்ச நீதிமன்றம் உயிரிழந்த தொழிலாளர்களுக்கு நஷ்டஈடு வழங்க உத்தரவிட்டது. குஜராத் அரசு எதையும் கண்டுகொள்ளவில்லை. தொழிலாளர் நீதிமன்றமோ, இஎஸ் அய்யோ நஷ்டஈடு என்ற விசயத்தைக் கண்டுகொள்ளவில்லை.
மார்ச் 2015ல் தொழிலாளர் நீதிமன்றம் உயிரிழந்த தொழிலாளர்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று ஆணையிட்டது. இதற்கு எதிராக குஜராத் அரசாங்கம் குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன் உச்சநீதிமன்றம் உயிரிழந்த 238 தொழிலாளர் குடும்பங்களுக்கு 7 கோடி ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று ஆணையிட்டது. மனித உயிரை துச்சமாக மதிக்கும் கார்ப்பரேட் லாபவெறி ஆதரவு குஜராத் அரசு இதற்கு இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை.
வெளிப்படையான ஆளுகைப் பற்றி பேசுகிற மோடியின் ஆட்சியில் குஜராத்தில் செயல்படும் அதானியும் டாடாவும் நிலக்கரி இறக்குமதிக்கு கூடுதல் விலை காட்டியது தொடர்பான விசாரணை அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை. அவர்களுக்கு கூடுதல் வழங்க வேண்டும் என்று தீர்ப்பாயம் அளித்துள்ள தீர்ப்புக்கு எதிராக குஜராத், அரியானா, மகாராஷ்டிரா என பாஜக ஆளும் அரசாங்கங்கள் இன்னும் நீதிமன்றம் செல்லவில்லை.
தகவல் தொழில்நுட்பத்தின் நவீனங்களை பயன்படுத்துவதை படாடோபமாக ஊடகங்களில் வெளிப்படுத்தும் மோடியின் ஆட்சியில் குஜராத்தில் சிலிகாசிஸ் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு எந்த நவீன சிகிச்சையும் அளிக்கப்படவில்லை. குவார்ட்ஸ் பொடியாக்கும் வேலையில் ஈடுபடுபவர்களுக்கு எந்த நவீன பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்படவில்லை. நல்ல நாட்கள் வரும் என்று சொன்ன மோடியின் ஆட்சியில் குவார்ட்ஸ் குவாரி தொழிலாளர்களுக்கு நல்ல சாவுக்குக் கூட வாய்ப்பில்லை. மேக் இன் இந்தியா பேசும் மோடியின் ஆட்சியில் தொழிலாளர்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டு நிலைமைகளில்தான் உழைத்துச் சாக வேண்டியிருக்கிறது.
மோடியின் கார்ப்பரேட் ஆதரவு ஆட்சியும் கார்ப்பரேட் கொள்ளைகளும் மக்கள் துன்பங்களும் தொடரக் கூடாது. மக்கள் போராட்டங்கள் இதை உறுதி செய்ய வேண்டும்.

தொழிலாளர் வர்க்க தோழர் கோட்டைக்கு செவ்வஞ்சலி
தோழர் கோட்டை மே 26 அன்று காலமானார்.
1980களில் அம்பத்தூர் டிஅய் சைக்கிள்ஸ் நிறுவனம் தொழிலாளர்களைச் சுரண்டி கொள்ளையடித்தபோது, தாக்குதல் நடத்தியபோது, அந்தக் கொடுமைகளுக்கு எதிராகத் துவங்கப்பட்ட டிஅய் பொதுத் தொழிலாளர் சங்கத்துடன் (பதிவு எண் 1714), டிஅய்டிசி, டன்லப் போன்ற பெருந்தொழிற்சாலை தொழிலாளர் சங்கங்கள் டிஅய்யில் சுரண்டல், ஒடுக்குமுறையை எதிர்த்துப் போரா டின. தமிழகத்தில் தொழிற்சங்க ஒற்றுமை ஓங்கட்டும், தொழிலாளர் ஒற்றுமை ஓங்கட்டும் என்ற முழக்கம் உயிரார்ந்த விதத்தில் பொருந்திப் பங்காற்றிய நேரத்தில் இந்த போராட்டத்தில் ஏஅய்சிசிடியுவின், இககமாலெ யின் அடையாளமாகத் திகழ்ந்த தோழர் கே.ஆர்.பழனியப்பனை தொடர்ந்து, டிஅய் சைக்கிள்சில் நடந்த அடுத்தச் சுற்றுப் போராட்டத்தில் அதன் தொழிலாளி தோழர் கோட்டை வேலை இழந்தார். 1990களின் துவக்கத்தில் ஏஅய்சிசிடியு போராட்டங்களில் முன்னோடியாகவும் இகக(மாலெ)வில் சில பத்தாண்டு காலம் இணைந்தும் செயல்பட்ட போராளி தோழர் வி.கோட்டை.
தோழர் கோட்டை 30 ஆண்டுகளுக்கு மேலாக கட்சி உறுப்பினர் என்ற நிலையை தாண்டி பொறுப்புகள் எதையும் எடுத்துக்கொள்ளவில்லை. ஏற்க மறுத்துள்ளார். இளைஞர்கள்தான் அந்த இடத்தில் இருக்க வேண்டும் என்பதுடன், தான் போராளியாகவே, சாதாரண உறுப்பினர் நிலையிலேயே தொடர்வேன் என்றும் வாழ்ந்தவர். அவரது குடும்ப வாழ்க்கையில் கிட்டத்தட்ட எல்லா நேரமும் துன்பங்கள் துயரங்கள் இன்னல்கள் நிறைந்து இருந்தன. எப்போதும் நேர்மை உண்மை எளிமை போர்க்குணம் என இருந்தவர், இறுதியில் தனது மரணத்தை தானே தேடிக்கொண்டது கவலைக்குரிய விசயமாகும். நமது கோட்டை தோழருக்கு செங்கொடி தாழ்த்தி அஞ்சலி செலுத்துகிறோம். இககமாலெ, சென்னை

ஏஅய்சிசிடியு உத்தரகாண்ட் மாநிலப் பொதுச் செயலாளர்
தோழர் கே.கே.போரா மீது தாக்குதல்
தோழர் கே.கே.போரா மீது தாக்குதல்
உத்தரகாண்ட் மாநில ஏஅய்சிசிடியு பொதுச் செயலாளரும் தேசியச் செயலாளருமான தோழர் கே.கே.போரா ருத்ராபூர் சிட்குல்லில் தொழிலாளர் சட்டங்களை அமல்படுத்துவதற்காக பல்வேறு தொழிலாளர் போராட்டங்களுக்கு தலைமையேற்று வழிநடத்தி வருபவர். சமீபத்தில் டெல்பி டிவிஎஸ் தொழிலாளர் போராட்டங்களை விடாப்பிடியாக தலைமை தாங்கி நடத்தியவர். அதனாலேயே இவர் கம்பெனிகள், காவல்துறை நிர்வாகத்தின் இலக்காகி இருக்கிறார். கடந்த சில மாதங்களாக ருத்ராபூர் உத்தம்சிங் நகரிலுள்ள மிண்டா இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் கம்பெனியின் சட்டவிரோத ஆட்குறைப்பு, இடைநீக்கம், தொழிலாளர் உரிமைகள் பறிப்பு இவற்றிற்கு எதிராக தொழிலாளர்களின் போராட்டத்தை தலைமை ஏற்று நடத்திவருகிறார்.
மே 19, 2016 அன்று தொழிலாளர் துறை அலுவலகத்தில் நடைபெற இருந்த முத்தரப்புப் பேச்சுவார்த்தைக்கு தொழிலாளர்களை அழைத்துக் கொண்டு செல்லும்போது காவல்துறையினர் இவரை கைது செய்ய முயற்சித்தனர். வாரண்ட் இருக்கிறதா என்று கேட்டபோது காவல்துறையினரிடம் அதற்கு பதில் இல்லை. தொழிலாளர்கள் தங்கள் சக்தியால் அப்போது கைது நடவடிக்கையை தடுத்து நிறுத்தினார்கள். காவல்துறை பின்வாங்க நிர்ப்பந்திக்கப்பட்டது.
காவல்துறை கைது நடவடிக்கையில் தோல்வியுற்ற பிறகு மே 20 அன்று அவர் ருத்ராபூருக்கு டெம்போவில் சென்று கொண்டிருந்துபோது காரில் வந்த முகமூடி அணிந்த சிலர் டெம்போவில் இருந்த மற்றவர்களை இறக்கிவிட்டு, அவர்மீது தாக்குதல் தொடுத்தனர். எண் பலகை இல்லாத ஸ்கார்பியோ காரில் வந்த அவர்கள் டெம்போவை முந்திச் சென்று பாண்ட் நகரிலுள்ள தாபர் தொழிற்சாலைக்கு அருகில் மடக்கினர்.
தோழர் போரா தனது கைகளால் தன் மீது விழுந்த தாக்குதலைத் தடுத்ததால், கட்டையால் அடிக்கப்பட்டு அவருடைய கை கால்களில் காயம் ஏற்பட்டது. கைகளால் அவர் தடுக்கவில்லை என்றால், அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருக்கும். தோழர் போரா மீதான இந்தத் தொடர் தாக்குதல் தொழிலாளர்களின் கோரிக்கைகள் மற்றும் உரிமைகளை திட்டமிட்டு மறுத்து போராட்டத்தை ஒடுக்குவதற்கான சதிச் செயல் ஆகும்.
இந்தச் சம்பவம் இப்பகுதியில் கம்பெனி நிர்வாகத்திற்கும் அரசு நிர்வாகத்திற்கும் இடையே கூட்டு நிலவுகிறது என்பதையே காட்டுகிறது.
பட்டப்பகலில் தொழிற்சங்கத் தலைவர் மீது தொடுக்கப்பட்டுள்ள இந்தத் தாக்குதல் சம்பவம் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருப்பதைக் காட்டுகிறது. ஆகவே, மாநில முதலமைச்சர் கீழ்கண்ட கோரிக்கைகளில் உடனே தலையிட வேண்டுமென ஏஅய்சிசிடியுவும் மற்ற போராடும் இயக்கங்களும் கோரிக்கை விடுக்கின்றன.
1. தோழர் கே.கே.போரா மீது தாக்குதல் நடத்திய குண்டர்களும் சம்பந்தப்பட்ட கம்பெனி நிர்வாகத்தினரும் கைது செய்யப்பட வேண்டும்.
2. தொழிலாளர் துறை அதிகாரிகள் மற்றும் கம்பெனி நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தபோது தோழர் போராவை கைது செய்ய முயற்சித்த காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
3. ருத்ராபூர் பகுதியில் தொழிலாளர் நலச் சட்டங்கள் கறாராக அமல்படுத்தப்பட வேண்டும். மிண்டா கம்பெனி தொழிலாளர் பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும்.
இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் உள்ள ஏஅய்சிசிடியு அமைப்புகள் சார்பாக உத்தரகாண்ட் முதலமைச்சருக்கு தந்தியும் தொலைநகலும் உடனடியாக அனுப்பப்பட்டன. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இந்தத் தாக்குதலைக் கண்டித்தும் தோழர் போராவை தாக்கியவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
கோவையில் மே 27 அன்று பிரிக்கால் தொழிலாளர்கள் பிளான்ட் 1 மற்றும் 3ல் ஆலைவாயில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.