COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Wednesday, November 6, 2019

கம்யூனிஸ்ட் கட்சி வெளியீடு

சோசலிசத்தையும் கம்யூனிசத்தையும் ஒன்றுக்கொன்று எதிராக நிறுத்தும் முயற்சிகள் நடக்கும்போது, கழகங்களையும் கம்யூனிஸ்ட் கட்சிகளையும் முட்டாள்தனமாய் கொத்திப் பொறுக்கி சேர்க்கப் பார்க்கும் நேரத்தில், தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சி வெளியீடு வருகிறது.


தமிழ் மொழி மீது பற்று கொள்வதும் தமிழ்நாட்டு மக்கள் நலன்களை முன்னிறுத்துவதும், புரட்சிக்கு ஆகாது, ஆகவே ஆகாது என்று, ஆச்சாரசீல அக்மார்க் இடதுசாரிகள் நாங்களே என்று, சிலர் கூவிப் பிதற்றும் நிலையில், தமிழ்நாட்டு மக்கள் வாழ்வு காக்க, தமிழ் காக்க வேண்டியதும் கம்யூனிஸ்டுகளின் ஜனநாயகக் கடமையே என கம்யூனிஸ்ட் கட்சி வெளியீடு பிரகடனம் செய்கிறது.

சர்வதேசியத்தை மந்திரமாக்காமல், உலக நடப்புகளை உலகளாவிய சக்திகளின் சமநிலையை வெளிச்சம் போட்டுக் காட்டி, போராட நம்பிக்கை தருகிறது கம்யூனிஸ்ட் கட்சி வெளியீடு.

நாடெங்கும் மக்களைத் தாக்கும் கார்ப்பரேட் மதவெறி பாசிசம், தமிழ்நாட்டில் தடுக்கப்பட்ட பாசிசம், தமிழ்நாட்டு மக்கள் மீது தமிழ் மீது போர் தொடுத்துள்ள சூழலில், ஆளும் வர்க்கங்களின் தவிர்க்க முடியாத நெருக்கடி பற்றியும், ஆளப்படும் மக்கள் சீற்றம் தேர்தல்களில் வெளிப்படுவதையும் கம்யூனிஸ்ட் கட்சி வெளியீடு சுட்டிக் காட்டுகிறது.

மோடியை விரட்டிய தமிழ்நாட்டு மக்கள், பல்லக்கு தூக்கும் பழனிச்சாமி அரசாங்கத்தை அனைத்து முனைகளிலும் தளங்களிலும் எதிர்த்தாக வேண்டும் என்ற கரிசனத்தைச் சொல்கிறது கம்யூனிஸ்ட் கட்சி வெளியீடு.

ஒடுக்குமுறையை எதிர்த்தெழும் அசுரரைப் போற்றுகிறது கம்யூனிஸ்ட் கட்சி வெளியீடு.
பிரிக்கால், மதர்சன் போராட்டங்களின் அனுபவ வெளிச்சம் கண்டவர்கள், போராடுவதற்காக கற்பதையும் கற்பதற்காக போராடுவதையும் தொடர வேண்டும் என நம்புபவர்கள், மக்களை நேசிப்பவர்கள், தங்கள் தமிழ் அடையாளத்தை நினைவில் நிறுத்திக் கொண்டே, இந்தியப் புரட்சியையும் சர்வதேசியத்தையும் உயர்த்திப் பிடிப்பவர்கள் கம்யூனிஸ்ட் கட்சி வெளியீட்டை கொண்டு வந்துள்ளனர்.

களத்தில் போராட உதவ, கம்யூனிஸ்ட் கருத்து ஆயுதமான அரசியல் ஏட்டை விரைவில் கொண்டு வருவோம்.

Search