தலையங்கம்
பாலனும் ரவீந்திரனும் அஜித்குமாரும்
அய்ந்தாண்டுகால அஇஅதிமுக அரசின் பொய்களை அம்பலப்படுத்துகிறார்கள்

ஜெயலலிதாவுக்காகவே இரண்டு மாதங்களுக்கு முன்னரே தேர்தல் அறிவிப்பு வந்ததுபோல் தெரிகிறது. உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம், தேர்தல் ஆணையம் எல்லாம் ஜெயலலிதாவுக்கு இசைவாக இயங்குவதுபோல் தெரிகிறது. வழக்குகள் நடக்கும்.
நீடிக்கும். அது ஜெயலலிதாவுக்கு ஒரு பொருட்டல்ல. (இப்போது கூட சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கை உச்சநீதி மன்றம் விசாரிக்க முடியாது என்றும் உயர்நீதிமன்றத்தில் இரண்டு நீதிபதிகள் அமர்வுதான் விசாரிக்க முடியும் என்றும் ஜெயலலிதா தரப்பில் சொல்லப்பட்டு, அதற்கு மனு சமர்ப்பிக்கும்படி உச்ச நீதிமன்றம் சொல்லியுள்ளது).
மக்களைச் சந்திக்க வேண்டும். அது அவருக்கு மிகப்பெரிய சவால். சில வாரங்களே, சில நாட்களே என்றாலும் கூட, தமிழக மக்கள் வாழ்வுரிமைகள் பறிக்கப்பட்டிருப்பதால், எந்தப் பிரிவு மக்கள் எப்போது, எங்கிருந்து எதிர்ப்புக் குரல் எழுப்புவார்கள் என்று கவனித்துக் கொண்டே இருந்திருக்க நேர்ந்திருக்கும். போராட்டக் களத்தில் இருக்கும் மக்களை ஒடுக்க காவல்துறையை முடுக்கி விட நேர்ந்திருக்கும். அமைச்சர்களும் அதிகாரி களும் இருக்கிற சில நாட்களில் முடிந்த அளவு கொள்ளையடிக்க முயற்சி செய்து மாட்டிக் கொண்டால், அதற்கு பதில் சொல்ல நேர்ந்திருக்கும். இந்த அனைத்துக்குமாக, மக்கள் மத்தியில் இருந்து எழுகிற சீற்றத்தை சமாளிக்க ஏதாவது சொல்ல, செய்ய நேர்ந்திருக்கும். இப்போது அப்படி எந்தப் பிரச்சனையும் இல்லை. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டன. (நெக்ஸ்ட்டு... ரெஸ்ட்டு... என்று, ஜெயலலிதா ஓய்வெடுப்பது போல் ஆனந்த விகடன் இதழில் வெளிவந்த கேலிச் சித்திரத்தை வாசகர்கள் இங்கு கற்பனையில் பார்த்துக் கொள்ளுங்கள்).
ஜெயலலிதாவும் ஊரைச் சுருட்டி உலையில் போட்டுக் கொண்ட அமைச்சர்களும் அதிகாரிகளும் ஓய்வெடுக்க முடியும். ஆனால், தமிழக மக்கள் பாடு மேலும் மேலும் நெருக்கடிக்கு உள்ளாகிறது. ஆட்சிக் காலம் முடிவுக்கு வந்துவிட்டாலும், நான்கரை ஆண்டுகளுக்கும் மேல் நடந்த ஆட்சியின் குற்றமய அலட்சியம் தமிழக மக்களை விரட்டுகிறது.
ரூ.9,000 கோடி கடன் வாங்கிய விஜய் மல்லையா நாட்டை விட்டு ஓடிவிட்டார். ட்ராக்டர் வாங்கிய கடனில் கடைசி இரண்டு தவணைத் தொகையான ரூ.64,000அய்ச் செலுத்த அவகாசம் கேட்டதற்காக தஞ்சை விவசாயி பாலனை தனியார் நிதிநிறுவன குண்டர்களும் காவல்துறையினரும் தாக்கியிருக்கிறார்கள். ஜெயலலிதா பொறுப்பில் இருக்கிற காவல்துறை அவரை கைது செய்ததுடன், அவரது குடும்பத்தை மிரட்டியிருக்கிறது. பரமக்குடி துப்பாக்கிச் சூடு முதல் மாற்றுத் திறனாளிகளை, டாஸ்மாக் எதிர்ப்பு மாணவிகளை தாக்கியது வரை காவல் துறையின் சாதனைகளை ஒப்பிட்டுப் பார்த்தால், குண்டர்களுக்கு துணை போனதும் வெறும் கைது, மிரட்டல் என்று நிறுத்திக் கொண்டதும் தமிழக மக்களைப் பொறுத்தவரை மிகப்பெரிய விசயம் இல்லைதான். அஇஅதிமுக ஆட்சி காலத்தில் மக்கள் இதற்கும் மேல் எவ்வளவோ பார்த்துவிட்டார்கள். அந்த விவசாயிக்கு நேர்ந்தது பனிக்கட்டியின் நுனி மட்டுமே.
நெருக்கடியில் தள்ளப்பட்டுள்ளது தமிழக விவசாயிகள் வாழ்க்கை. அஇஅதிமுக ஆட்சியில் இதுவரை 35 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன. இவர்கள் கடன் சுமை தாளாமல், விவசாயம் பொய்த்துப் போனதால் தற்கொலை செய்து கொண்டவர்கள். வயிற்று வலி, காதல் தோல்வி, குடும்பப் பிரச்சனை ஆகியவைதான் காரணம் என்று செத்துவிட்ட அவர்களை தமிழக அரசு கொச்சைப்படுத்தியது. ஊழல் குற்றச்சாட்டில் தண்டிக்கப்பட்டு சிறைக்குச் சென்று திரும்பினாலும், ஏதோ சாதனை செய்து திரும்பியது போல் நடமாடும் நெஞ்சுறுதி அவர்களுக்கு இல்லை. இப்போது பாலனுக்கு நேர்ந்தது, தங்களுக்கு நேர்ந்துவிடக் கூடாது, ஊர் முன்னால் மானம் போய் விடும் என்ற கலக்கத்தில் தங்களை மாய்த்துக் கொண்டவர்கள் அவர்கள்.
ட்ராக்டர் வாங்க, தனியார் நிதிநிறுவனத்தில் பாலன் வாங்கிய ரூ.3.80 லட்சத்துக்கு, வட்டியும் அசலுமாக ரூ.4.11 லட்சம் செலுத்தியுள்ளார். எந்த முன்னறிவிப்பும் இல்லாமல், ட்ராக்டரை பறிமுதல் செய்ய வந்ததாகவும், தடுத்த தன்னை தாக்கியதாகவும் பாலன் சொல்கிறார்.
ஜெயமந்திரம் சொல்லிவிட்டு பன்னீர்செல்வம் படித்த வரவு செலவு திட்ட உரைகள் விவசாயிகள் நலன் காப்பதில் அஇஅதிமுக அரசு முன்மாதிரியாக விளங்குவதாகச் சொல்கின்றன. 2011 - 2012ன் திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கை, விவசாயிகளுக்கு கூட்டுறவு பயிர்க் கடன் இலக்கு ரூ.3,000 கோடி என்று சொல்கிறது. ரூ.3,113 கோடி வரை கடனும் தரப்பட்டுள்ளது. 2012 - 2013ல் ரூ.4,000 கோடி இலக்கு. ரூ.3,720 கோடி கடன் தரப்பட்டுள்ளது. 2013 - 2014ல் ரூ.4,000 கோடி இலக்கு. ரூ.3,948 கோடி கடன் தரப்பட்டுள்ளது. 2014 - 2015ல் ரூ.5,000 கோடி இலக்கு. ரூ.4,955 கோடி கடன் தரப்பட்டுள்ளது. 2015 - 2016ல் ரூ.5,500 கோடி இலக்கு. 2011 - 2012 முதல் இதுவரை ரூ.22,486 கோடி அளவுக்கு பயிர்க்கடன் தரப்பட்டுள்ளதாக சமீபத்திய இடைக்கால நிதிநிலை அறிக்கை சொல்கிறது. அதன்படி, 2015 - 2016ல் ரூ.6,750 கோடி தரப்பட்டிருக்க வேண்டும். (பன்னீர் செல்வமும் குமாரசாமிபோல் ஏதோ கணக்கு போட்டுவிட்டாரா?) ஒவ்வோர் ஆண்டும் 8 லட்சம் முதல் 9 லட்சம் விவசாயிகள் வரை பயனடைந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. அரசு தரும் இந்த விவரங்கள்படி அந்த அய்ந்து ஆண்டுகளில் சராசரியாக ஒரு விவசாயிக்கு ரூ.50,000 வரை பயிர்க்கடன் கிடைத்திருக்கிறது. இதை சாதனை என்று சொல்ல முடியாது. விவசாயத்தின் மேல், நிலத்தின்மேல் பற்றுகொண்டு, கட்டுப்படியாகாவிட்டாலும் வீம்புக்கு விவசாயம் செய்துகொண்டிருக்கும் பலர், இந்த 45 லட்சம் பேரில் இருக்க வாய்ப்புண்டு. பாலனுக்கு நேர்ந்ததுபோல், இவர்கள் கழுத்தை யாரும் பிடிக்க மாட்டார்கள் என்றாலும் இந்தக் கடன் வாங்கி விவசாயம் செய்ததில் அவர்கள் வருமானம் விண்ணைத் தொட்டுவிடவில்லை.
பாலன் ட்ராக்டர் வாங்கத்தான் கடன் வாங்கியிருக்கிறார். அதில்தான் நெருக்கடியைச் சந்தித்திருக்கிறார். இந்தக் கடன் வேறு. இங்கு சொல்லப்பட்டுள்ள பயிர்க்கடன் வேறுதான். பாலன் தனியார் நிதிநிறுவனத்தில்தான் வாங்கியிருக்கிறார். கூட்டுறவு வங்கியில் அல்ல. ஆயினும் அவரது கடன் பாக்கிக்காக ட்ராக்டரை பறிமுதல் செய்ய குண்டர்கள் போனதை காவல்துறையினர் தடுத்திருக்க வேண்டும். மாறாக, காவல்துறையினர் அவர்களுக்கு உடந்தையாக இருந்ததற்கு ஜெயலலிதாதான் பொறுப்பேற்க வேண்டும்.
பாலனின் மனைவியும் இன்று விஜய் மல்லையா பற்றி கேள்வி எழுப்புகிறார். விஜய் மல்லையா மோசடி செய்கிறார்தான். ஆனால், நாட்டில் விஜய் மல்லையா மட்டுமா இப்படி மோசடி செய்கிறார்? ஏன் மற்றவர்கள் மாட்டிக் கொள்ளவில்லை? தமிழ்நாட்டில் சூரியஒளி மின் உற்பத்திக்கு அதானி குழுமம் நிலம் வாங்குவது பற்றி அதானி குழுமத்தின் வழக்கறிஞர் கேள்வி எழுப்புவதாக கருணாநிதி சொல்கிறார். அந்த ஒப்பந்தமே முறைகேடாக பெறப்பட்டுள்ளது என்றும், முறைகேடாக பெறப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் அடிப்படையில் அதானி குழுமம் வங்கி களில் ரூ.4,300 கோடி வரை கடன் வாங்கியிருப்பதாகவும் அந்த வழக்கறிஞர் சொல்கிறார். (அவருக்கும் அதானி குழுமத்துக்கும் வழக்கறிஞர் கட்டணம் தொடர்பான பேச்சில் முட்டிக் கொண்டது).
கடன் வாங்குவது, கடனைத் திருப்பிச் செலுத்துவது அடுத்தடுத்து வருகிற பிரச்சனைகள். கடன் வாங்கியதற்கு அடிப்படையே, முறைகேடாக போடப்பட்டுள்ள ஒப்பந்தம் என்று செய்திகள் வந்துவிட்டன. இந்த முறைகேட்டில் ஈடுபட்ட தமிழக அதிகாரிகள், அதானி குழும அதிகாரிகள் மீது தமிழக காவல்துறையினர் பாலன் மீது பாய்ந்ததுபோல் பாய்வார்களா?
விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சர் சுந்தரராஜன் புதுக்கோட்டையில் உள்ள மாவட்ட பெண்கள் விளையாட்டு விடுதிக்கு நள்ளிரவில் சென்று திடீர் ‘ஆய்வு’ நடத்தியுள்ளார். அவர் ஆய்வு மேற்கொண்ட போது மாணவிகளிடம் பேசிய விசயங்களும் அவர் நடத்தையும் பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தலைத் தடுக்கும் சட்டப்படி தண்டனைக்குரியவை. பாலனை கைது செய்த காவல்துறையினர், ரவீந்திரனிடம் கறாராக நடந்த கொண்ட அதிகாரிகள், அமைச்சர் சுந்தரராஜன் விசயத்தில் வீறுகொண்டு எழக் காணோம். முத்துக்குமாரசாமி கொலை வழக்கில் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி குற்றமற்றவர் என்று அறிவிக்கப்பட்டுவிட்டது. தமிழ்நாட்டு கறார் காவல்துறையினர் ஏன் போதுமான சாட்சிகளை முன்வைக்கவில்லை?
காவிரியை கொண்டு வந்துவிட்டதுபோல், தமிழக விவசாயிகள் வாழ்க்கையில் ஒளியேற்றிவிட்டதுபோல், அஇஅதிமுகவினர், ஓடுகிற பேருந்துகளை நிறுத்தி பயணிகளுக்கு லட்டு கொடுத்தார்கள். தமிழ்நாட்டுக்குள் ஒரு தனியார் நிறுவனத்திடம் கடன் வாங்கி, பயிர் பொய்த்ததால் ஒரு தவணை தவறிப்போய், அதற்காக இழிவுபடுத்தப்படும் நிலையில்தான் இன்று ஒரு தமிழக விவசாயி இருக்கிறார். இந்த நிலைமைகளில், மின்உற்பத்தித் திட்டங்கள் போக, மீத்தேன், கெயில் என்று வேறு வேறு ஆள் விழுங்கி பூதங்களையும் தமிழக விவசாயிகள் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.
ஜெயலலிதா ஆட்சியின் கடைசி நாடகம் ஏழு பேர் விடுதலை. அதை இப்படிச் செய்ய வேண்டும், அப்படிச் செய்ய வேண்டும் என கருணாநிதியும், மீண்டும் அஇஅதிமுக ஆட்சி அமைந்தால் ஏழு பேருக்கு நிச்சயம் விடுதலை என்று நாஞ்சில் சம்பத்தும், இன்னும் வேறு வேறு விசயங்களை இன்னும் பலரும் ஒலிபெருக்கி முன்னும், சட்டையில் ஒட்டிய ஒலிபெருக்கியிலும் பேசிக் கொண்டிருக்க, ரவீந்திரன், எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே தற்கொலை செய்துகொண்டார். இலங்கைத் தமிழர்களுக்காக இத்தனை ஆண்டுகளாக முதலமைச்சர் ஜெயலலிதா விட்டக் கண்ணீரில் ரவீந்திரன் அடித்துச் செல்லப்படவில்லை. தனது மகனுக்கு உதவித் தொகை கிடைக்காமல் போய்விடுமே என்ற அச்சத்தில் அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்க முயற்சி செய்தவர், அடுத்தடுத்த வேகத்தில் உயரத்தில் இருந்து குதித்து ரத்த வெள்ளத்தில் செத்துப்போனார். இலங்கைத் தமிழர்கள் பெயரைச் சொல்லித்தான் ஜெயலலிதா தமிழக அரசியலை தன் பக்கம் வைத்திருந்தார். அந்த வேடம் கலைந்துபோனது.
திருபெரும்புதூரில் உள்ள செயின்ட் ஜோசப் கல்லூரியில் இரண்டாமாண்டு பொறியல் பட்டம் படித்துக் கொண்டிருந்த மாணவர் அஜித்குமார், கல்லூரி முதல்வர் கடுமையாகப் பேசியதால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டார். இந்த ஆட்சிக் காலத்தில் நடந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர் தற்கொலைகளில் அஜித்குமார் தற்கொலையும் ஓர் எண்ணிக்கையாகச் சேர்ந்துகொண்டது. இங்கும் சிலர் மீது சம்பிரதாய நடவடிக்கைகள், கைதுகள் மேற்கொள்ளப்பட்டு பின்னர் கல்லூரி வழக்கம்போல் இயங்கி அடுத்த கொலைக்குத் தயாராகும்.
அய்ந்தாண்டு கால ஆட்சி முடியும்போது அஇஅதிமுக அரசாங்கம் தமிழக மக்களுக்கு விட்டுச் சென்றிருப்பது பாலனையும் ரவீந்திரனையும் அஜித்குமாரையும்தான். காவிரி வரவே இல்லை. இலங்கைத் தமிழர்களுக்கு தமிழ்நாட்டுக்குள்ளும் நீதியில்லை. காசு கொடுத்து கல்வி வாங்கினாலும் தமிழக மாணவர்களுக்கு எதிர்காலம் என ஒன்று இல்லவே இல்லை.
ஆட்சிக் காலம் முழுவதும் வஞ்சகம் செய்த கட்சி மீண்டும் அதிகாரம் கேட்கிறது. குற்றவாளியாக நிற்கிற ஆட்சிக்கு தண்டனை தர வேண்டிய பணி மக்களுக்கு இருக்கிறது. (10.03.2016)

மத்திய நிதிநிலை அறிக்கை 2016 – 2017
அருண் ஜெட்லியும்
பாஜக ஆதரவு ஊடகவியலாளர்களும்
வாயில் வடை சுடுகிறார்கள்
பாஜக ஆதரவு ஊடகவியலாளர்களும்
வாயில் வடை சுடுகிறார்கள்
2009 செப்டம்பர் 24. ஏஅய்சிசிடியு சென்னையில், சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் பத்திரிகையாளர் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தது. அன்று, அந்த அரங்கம் பத்திரிகையாளர்களால், புகைப்படக்காரர்களால், தொலைக்காட்சி அலைவரிசையில் இருந்து வந்திருந்தவர்களால் நிறைந்திருந்தது. ஏஅய்சிசிடியு அழைத்த பத்திரிகையாளர் கூட்டத்தில் அன்று வரை அப்படி நடந்ததில்லை. அதற்குப் பிறகு இன்று வரை அப்படி நடக்கவில்லை.
பிரச்சனை பிரிக்கால் தொழிலாளர்கள் மீது அரசு நடத்திய தேடுதல் வேட்டை. முற்றுகை. வந்திருந்தவர்கள் தொழிலாளர்கள் மீது நடத்தப்படும் ஒடுக்குமுறை நடவடிக்கைகள் பற்றி சற்றும் கூருணர்வற்றவர்களாக, அங்கு நடந்த மரணத்தைப் பற்றி, அது தொடர்பாக தொழிலாளர்களை கொலைகாரர்களாகச் சித்தரிக்க முயற்சி செய்பவர்களாகவே இருந்தனர். அரசு எந்திரத்தால் முற்றுகையிடப்பட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவாக அவர்கள் மத்தியில் இருந்து ஒரு குரல், ஒரு வார்த்தை கூட அன்று வரவில்லை. அவர்கள் நிர்வாகத்துக்கு ஆதரவாக அப்படிச் செய்யவில்லை. இயல்பாகவே அப்படிச் செய்தார்கள்.
நடந்தவற்றை கவனித்துக் கொண்டிருந்த மூத்த தலைவர் ஒருவர் சொன்னார்: பத்திரிகையாளர்கள் ஜனநாயக உணர்வு கொண்டவர்களாக இருந்த காலம் போய்விட்டது. இப்போது இருப்பவர்கள் அதற்கான படிப்பு படித்துவிட்டு வந்திருக்கிறார்களே தவிர, ஜனநாயக உணர்வு, முற்போக்கு உணர்வு போன்றவை பற்றி அறியாதவர்களாக இருக்கிறார்கள் என்றார்.
எவ்வளவு உண்மை! அருண் ஜெட்லி முன் வைத்த 2016 - 2017 நிதிநிலை அறிக்கை விவசாயிகளுக்கு ஆதரவானது என்று பாஜக ஆதரவு ஊடகவியலாளர்கள் பிம்பம் கட்டுகிறார்கள். பத்திரிகைகளில் பத்திபத்தியாக எழுதுகிறார்கள். இவர்கள் இதழியல் படித்தவர்களாக மட்டுமே இருக்க முடியும். ஓரளவு கையில் காசு புழங்கக் கூடிய நிலையில் உள்ள தொழிலாளர்களின் இறுதிக் கால சேமிப்புக்கு வரி விதித்து, அதையும் பறித்துவிடும் வரிவிதிப்பை, சிறப்பான திட்டம் என்று மட்டும்தான் அவர்கள் எழுதவில்லை. இந்த விசயத்தில் ஜெட்லியும் அடி வாங்கினார்.
விவசாய ஆதரவு நிதிநிலை அறிக்கையா?
அறிக்கை, விவசாய சமூகத்துக்கு செய்யப்பட்டுள்ள ஒதுக்கீடு பற்றி முதலில் சொல்லிவிடுவதாலேயே அது விவசாய ஆதரவு நிதிநிலை அறிக்கை ஆகிவிடாது.
விவசாயம் மற்றும் விவசாயிகள் நலன் என்ற தலைப்பில் இதற்கான மொத்த ஒதுக்கீடு ரூ.35,984 கோடி என்று சொல்லப்படுகிறது. இந்த ஒதுக்கீட்டை, சாலைகளுக்கும் நெடுஞ்சாலைகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ள ரூ.2,21,246 கோடியுடனும் ராணுவத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள ரூ.2,49,099 கோடியுடனும் ஒப்பிட்டுப் பார்த்தால் இது விவசாய ஆதரவு நிதிநிலை அறிக்கை இல்லை என்பதை தெரிந்துகொள்ளலாம். ராணுவத்துக்கான ஒதுக்கீடு பற்றி இந்த முறை நிதியமைச்சர் உரையில் சொல்லப்படவில்லை. துணை ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. மோடியின் வெளிநாட்டுப் பயணங்களும் போர் விமானங்கள் வாங்க போட்ட ஒப்பந்தங்களும் இந்த ஒதுக்கீடு, பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்குச் செல்லும் என்பதை விளக்குகின்றன. நெடுஞ்சாலைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியும் அரசு தனியார் கூட்டு முயற்சிகளில் தனியார் கைகளுக்குச் செல்லும். (இந்த ஒதுக்கீடு பற்றி சொல்லப்பட்டுள்ள பத்திக்கு அடுத்த பத்தியிலேயே தனியார் போக்குவரத்து ஊக்குவிக்கப்படும் எனச் சொல்லப்படுகிறது).
நாட்டில் உள்ள விளைநிலங்களில் 46% நிலத்துக்கு மட்டுமே நீர்பாசன வசதி இருப்பதாகச் சொல்லும் அறிக்கையில், 89 நீர் பாசன திட்டங்களை அமல்படுத்த ரூ.17,000 கோடி தேவை என்று சொல்லப்பட்டு, நிதிநிலையில் இருந்தும் கடன் வாங்கியும் ரூ.12,517 கோடி ஒதுக்கப்படும் எனச் சொல்லப்படுகிறது. நிதிநிலை அறிக்கையில் பாசனத்துக்கென ரூ.5,840 கோடி ஒதுக்கப்படும்போது, அணுசக்திக்கு ரூ.15,760 கோடி ஒதுக்கப்படுகிறது. அப்படியானால், மோடி அரசின் முன்னுரிமை விவசாயம் அல்ல. அணுசக்தி. இந்த 89 பாசனத் திட்டங்களிலும், மார்ச் 31, 2017க்குள் 23 திட்டங்கள் மட்டும் முடிக்கப்படுவது உறுதி செய்யப்படும். முதலில் விவசாயிக்கு விவசாயம் செய்ய நிலம் வேண்டும். அதைப் பறித்தெடுக்கும் முயற்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன. இருக்கும் நிலத்தில் விவசாயம் செய்ய பாசனம் வேண்டும். அதற்கு பொறுப்பான பொருத்தமான நடவடிக்கைகள் என்பதாக பாசன வசதி தொடர்பாக நிதிநிலை அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள அம்சங்கள் அமையவில்லை.
நிலத்தடி நீர்வள ஆதாரங்களை நிர்வகிக்க ரூ.6,000 கோடி தேவை என்றும் இந்த நிதியும் வேறுவேறு விதங்களில் திரட்டப்படும் என்றும் சொல்லப்படுகிறது. நிதிநிலை அறிக்கையில் எவ்வளவு ஒதுக்கப்படும் என்று தெளிவாக சொல்லப்படவில்லை.
நூறு நாள் வேலைத் திட்டத்தின் கீழ் 5 லட்சம் குளங்களும் கிணறுகளும், இயற்கை உரம் தயாரிக்க 10 லட்சம் பள்ளங்களும் உருவாக்கப்படும். இதற்கான நிதி இந்தத் தலைப்பில் இருந்து இல்லை. அது கிராமப்புற வளர்ச்சி தலைப்பில் இருந்து வரும்.
உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 622 மாவட்டங்களுக்கு பருப்பு சாகுபடிக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு. மாவட்டத்துக்கு ஒன்றரை கோடி ரூபாய் கூட வரவில்லை. உள்நாட்டில் உற்பத்தி செய்தால் உற்பத்தியாளரின், விவசாயியின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டு பருப்பு இறக்குமதிக்கு காத்திருக்கும் நிலைக்கும் பருப்பு விலை உயர்வுக்கும் முடிவு வரும். இந்தப் பிரச்சனைகளைப் பற்றி அக்கறை கொள்ளாமல் மாவட்டத்துக்கு ஒன்றரை கோடி ரூபாய் ஒதுக்க, அதை பெருமையாக, விவசாயிகள் நலன் தலைப்பில் உண்மையில் துணிச்சல் வேண்டும்.
விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களுக்கு கட்டுப்படியாகும் விலை வேண்டும் என்று விவசாயிகள் கேட்பது அருண் ஜெட்லியின் காதுகளில் விழவில்லை. விவசாயிகளின் மிகவும் அடிப்படைப் பிரச்சனையான கொள்முதல் விலை பற்றி இந்த அறிக்கை பேசவில்லை. கொள்முதல் செய்யும் விளைபொருட்களை இருப்பு வைக்க இடமின்றி, எலிகள் தின்பதும், மழை வெள்ளத்தில் நாசமாவதும் தொடரும்போது, இதையே காரணம் காட்டி கொள்முதலையும் குறைக்கும்போது, கிட்டங்கி வசதிகள் மேம்பாடு பற்றி சென்ற ஆண்டு என்ன நடந்தது என்று மட்டும் உரை சொல்கிறது. இப்போது கிட்டங்கிகள் கட்ட வெறும் ரூ.206 கோடி ஒதுக்கப்படுகிறது.
பால் உற்பத்தி மேம்பாட்டுக்கு அடுத்த சில ஆண்டுகளுக்கு ரூ.850 கோடி ஒதுக்கீடு. அடுத்த எத்தனை ஆண்டுகளுக்கு இந்த ஒதுக்கீடு, இந்த ஆண்டுக்கு எவ்வளவு ஒதுக்கீடு என குறிப்பாக எதுவும் சொல்லப்படாத இந்த அறிக்கை எந்த வகையில் விவசாயிகள் நலன் காக்கும்?
விவசாயிகள் தற்கொலைகளைத் தடுக்க என்ன நடவடிக்கை, அவர்கள் கடன்களை தள்ளுபடி செய்ய வழியேதும் உள்ளதா, நிலப்பறிக்கு என்ன தீர்வு, இடுபொருட்கள் விலைக் கட்டுப்பாட்டுக்கு என்ன நடவடிக்கை, கொள்முதல் விலை உயர்த்த என்ன திட்டம், இருப்பு வசதிகளை மேம்படுத்துவது எப்படி, இவற்றுக்கு என்ன பாதுகாப்பு பொறியமைவு என விவசாயத்தை, விவசாயிகளைப் பாதுகாக்கும் எந்த அடிப்படை பிரச்சனையையும் கண்டு கொள்ளாத இந்த அறிக்கை, விவசாயிகள் ஆதரவு அறிக்கையாக இருக்க முடியாது. மாறாக, இது போன்ற வெற்று அறிக்கையை வைத்து விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்குவது பற்றி பேசுவது நெருக்கடியில் இருக்கிற இந்திய விவசாயியை பரிகசிப்பதாகவே இருக்கிறது. வருமானத்தை இரட்டிப்பாக்குவதும் அடுத்த வாரத்தில் அல்ல, அடுத்த அய்ந்து ஆண்டுகளில். எவ்வளவு கொடூரமான திட்டம். இன்னும் அய்ந்து ஆண்டுகள் வரை விவசாயிகள் தங்கள் வருமானம் இரட்டிப்பாவதற்குக் காத்திருக்க வேண்டுமானால், அதற்குள் இன்னும் எத்தனை பேர் தற்கொலை செய்துகொள்ள வேண்டும்? 2015ல் சராசரியாக நாளொன்றுக்கு 52 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர். மகாராஷ்டிராவில் மட்டும் 2015 ஜனவரி முதல் அக்டோபர் வரை 2,950 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். 2014ல் இந்த எண்ணிக்கை 1,611 என இருந்தது. அய்ந்து ஆண்டுகளுக்குப் பிறகு இரட்டிப்பாகும் வருமானம் இன்றைய மதிப்பில் இருக்காது என்பதை மக்கள் மிக எளிதாக புரிந்து கொள்வார்கள் எனத் தெரிந்தே நிதியமைச்சர் இப்படிச் சொல்வார் என்றால், அது விவசாயிகளை கேலி செய்வதேயன்றி வேறென்ன?
நாட்டில் உள்ள 17 மாநிலங்களில் விவசாயியின் ஆண்டு வருமானம், அவர் விவசாயம் செய்து விற்றது தனக்கென வைத்துக் கொண்டது எல்லாம் சேர்த்து வெறும் ரூ.20,000. அதாவது மாதம் ரூ.1,700க்கும் கீழ். இது இரட்டிப்பாக இந்திய விவசாயி இன்னும் அய்ந்து ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்கிறது அறிக்கை. இது எப்படி விவசாயி ஆதரவு அறிக்கையாக இருக்க முடியும்?
துரோகங்களால் எழுப்பப்பட்ட தூண்கள்
நிதிநிலை அறிக்கையின் ஒன்பது தூண்கள் என்று ஜெட்லி சொல்பவற்றின் முதல் தூணான விவசாயிகள் நலன் என்ற தூண் மோடி அரசின் துரோகங்களால் எழுப்பப்பட்ட தூணாக இருப்பது போலவே, அதன் மற்ற அம்சங்களும் உள்ளன.
நூறு நாட்கள் வேலைத் திட்டம் அய்முகூ அரசின் தோல்வியின் சின்னம் என்று மோடி சொன்னார். ஆனால், அந்தத் திட்டம் கோடிக்கணக்கான கிராமப்புற தொழிலாளர் கைகளில் ஏதோ கொஞ்சம் பணத்தை விட்டுச் சென்றது. வறண்ட பாலைவனத்தில் தொண்டை வறண்டு போன கோடிக்கணக்கானவர்கள் சேர்ந்து ஒரு குவளை தண்ணீரையாவது பார்த்தார்கள். அதற்கு ஒதுக்கீடு ரூ.38,500 கோடி. இதிலும் ரூ.6,000 கோடி வரை பழைய பாக்கிகளுக்குச் சென்று மீதமுள்ள ஒதுக்கீடு மிகக் குறைவான ஒதுக்கீடாகவே இருக்கும்.
முதலீடு அகற்றுதலுக்கு அமைச்சகத்தை உருவாக்கிய பெருமை பாஜகவையே சேரும். அருண் ஷோரி அதன் அமைச்சராக இருந்தார். பிறகு அது துறையானது. இப்போது துறையின் பெயர் முதலீடு மற்றும் பொதுச் சொத்து நிர்வாகத் துறை என்று மாற்றியமைக்கப்படுகிறது. பொதுத்துறை நிறுவனங்கள் தங்கள் நிலங்களை, உற்பத்தி மய்யங்களை வேறு பயன்பாட்டுகளுக்கு திருப்பிவிட வேண்டும் என்று அறிக்கை சொல்கிறது. அவை தனியார் அனுபவத்துக்கு செல்ல வேண்டும் என்று அந்த வாக்கியத்தை நாம் இட்டு நிரப்பிக் கொள்ள வேண்டும். முதலீடு அகற்றுவதன் மூலம் ரூ.36,000 கோடி வர வேண்டும் என்று சொல்கிற அரசு இதனால் ஏற்படும் வேலை இழப்புகளுக்கு எந்த பதிலும் சொல்லவில்லை. இதுவரையில் சொன்னதும் இல்லை.
வேலை வாய்ப்பு உருவாக்கம் என்ற பெயரில் முதலாளிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது, புதிய தொழில்கள் துவங்குவதை ஊக்குவிக்க புதிதாக வேலைக்கு அமர்த்தப்படும் தொழிலாளர்களுக்கு முதல் மூன்று ஆண்டு களுக்கு தொழிலாளர் ஓய்வூதியத் திட்ட பங்களிப்பு 8.33% அரசு அளிக்கும். ரூ.15,000 வரை ஊதியம் பெறுபவர்களுக்கு இந்தத் திட்டம் அமலாகும். இதற்கு ரூ.1,000 கோடி ஒதுக்கீடு. தேசிய வேலை வாய்ப்பு மய்யத்தில் 2015 ஜ÷லையில் இருந்து இதுவரை மூன்றரை கோடி பேர் வேலை கேட்டு பதிவு செய்துள்ளனர். இவர்களுக்கு வேலை தர என்ன திட்டம் என்று மேக் இன் இந்தியா பேசும் மோடி அரசு எதையும் முன்வைக்கவில்லை.
ஷாப்பிங் மால்கள் வாரத்தில் ஏழு நாட்களும் திறந்திருக்கும் என்றால் மற்ற கடைகள் ஏன் அப்படி திறந்திருக்க முடியாது என்று ஜெட்லி தனது உரையில் கேட்கிறார். இதை உறுதி செய்ய மாதிரி கடை மற்றும் நிறுவனங்கள் மசோதா அறிமுகப்படுத்தப்படும் என்றும், மாநிலங்கள் தாமாக முன்வந்து அமல்படுத்த வேண்டும் என்றும் சொல்கிறார். தொழிலாளர்களின் வேலை நேரம், வார விடுமுறை போன் றவை பாதுகாக்கப்பட வேண்டும் என்று சொல்கிற அவர், அவை எப்படி பாதுகாக்கப்படும், சட்டங்களை மீறும் நிறுவனங்களுக்கு என்ன தண்டனை என ஏதும் சொல்லவில்லை. நாட்டு நடப்பு நமக்கு நம்பிக்கை தருவதாக இல்லை.
சென்ற நிதிநிலை அறிக்கையில் பெரிதாகப் பேசப்பட்ட முத்ரா திட்டத்தில் இரண்டரை கோடி பேருக்கு ரூ.1 லட்சம் கோடி கடன் அளிக்கப்பட்டுள்ளதாகவும் வரும் ஆண்டுக்கு இந்த இலக்கு ரூ.1,80,000 கோடியாக இருக்கும் என்றும் அறிக்கை சொல்கிறது. சென்ற ஆண்டில் சராசரியாக ரூ.50,000க்கும் குறைவாகவே அளிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகையில் என்ன தொழில் செய்து எப்போது அந்த இளைஞர் பில்லியனராவார்?
தூய்மை இந்தியா திட்டத்துக்கு ரூ.9,000 கோடி ஒதுக்கப்படும்போது, அடல் பெயரிலும் ஆம் ஆத்மி பெயரிலும் உள்ள ஓய்வூதியத் திட்டங்களுக்கு ரூ.650 கோடி ஒதுக்கப்படுகிறது. அந்த ரூ.9,000 கோடி, சில ஒப்பந்ததாரர்கள் கைகளுக்குச் செல்லும். பல லட்சக்கணக்கான வறிய மக்களுக்கு அற்பப் பணம் செல்லும்.
வரிவிதிப்புக்கு உட்பட்ட எல்லா சேவைகளுக்கும் கிரிஷி கல்யாண் செஸ் 0.5% வசூலிக்கப்படும் என்றும் விவசாயத்துக்கும் விவசாயிகளுக்கும் இது பயன்படுத்தப்படும் என்றும் 2016 ஜ÷ன் 1 முதல் அமலுக்கு வரும் என்றும் அறிக்கை சொல்கிறது. இதற்கு முன்னும் இதுபோன்ற பல்வேறு நலநிதிகள் வசூலிக்கப்பட்டுள்ளன. பல்வேறு தலைப்புகளில் வசூல் செய்யப்பட்ட நலநிதியில் மொத்தம் ரூ.1.4 லட்சம் கோடி பயன்படுத்தப்படாமல் இருப்பதாக சமீபத்திய மத்திய தணிக்கை அதிகாரியின் அறிக்கை ஒன்று சொல்கிறது. செகன்டரி மற்றும் உயர்கல்விக்காக வசூல் செய்யப்பட்ட நலநிதியில் ரூ.64,288 கோடி பயன்படுத்தப்படவில்லை. கட்டுமான நல நிதியில் ரூ.13,300 கோடி செலவு செய்யப்படாமல் உள்ளது. துவக்கக் கல்விக்கான நலநிதியில் ரூ.13,298 கோடி செலவிடப்படவில்லை. இந்த நிதி தூங்குகிறது. சாமான்ய மக்கள் துயரத்தில் இருக்கிறார்கள். மட்டுமின்றி, 13 வகையான நலநிதிகளுக்கு முடிவு கட்டப்படுகிறது. இவை ஒவ்வொன்றிலும் ரூ.50 கோடிக்கும் குறைவாக நலநிதி வந்தால், அது ரத்து செய்யப்படுகிறது.
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ப்புத் திட்டத்துக்கு ரூ.25,000 கோடி ஒதுக்கீடு கோரி போராட்டங்கள் நடக்கும்போது, அதற்கான ஒதுக்கீடு சென்ற ஆண்டில் இருந்ததை விடவும் குறைக்கப்பட்டு, ரூ.15,860 கோடி மட்டும் ஒதுக்கப்படுகிறது. இதைக் கூட வேதாந்தா எடுத்துக் கொண்டு போய்விடுமா என்ற கேள்வி இருக்கிறது.
பள்ளிக் கல்வி, உயர்கல்வி, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் போன்ற அடிப்படை ஒதுக்கீடுகளும் இருக்கும் நிலைமைகளை மேம்படுத்தும் நோக்கம் கொண்டவையாக இல்லை.
வசதி படைத்தவர்களும் வரி ஏய்ப்பாளர்களும்
01.04.2017 முதல் வரி ஏய்ப்பைத் தடுக்கும் பொது விதிகள் அமலாகும். அப்படியானால், அது வரை அமலாகாது. வரி ஏய்ப்பு செய்யலாம்.
கருப்புப் பணத்தை திருப்பிக் கொண்டு வருவதாகச் சொன்னவர்கள் அதற்கு முழு பாதுகாப்பு அளிக்கிறார்கள். அறிவிக்கப்படாத வருமானத்துக்கு வரியும் அபராதமுமாக 45% செலுத்தி விட்டால், அந்த வருமான ஆதாரங்கள் பற்றி எந்த விசாரணையும் சோதனையும் இருக்காது என்றும், ஜ÷ன் 1 முதல் செப்டம்பர் 30 வரை இதைச் செய்துவிட வேண்டும் என்று சொல்லும் அறிக்கை, கணக்கில் வராத செல்வங்களை வரி என்ற பெயரில் பெரிய இழப்பின்றி ஓரளவு கணக்கில் காட்டவும், மற்றவற்றை பாதுகாத்துவிடவும் போதுமான அவகாசம் தருகிறது.
ரூ.5.5 லட்சம் கோடி மதிப்பிலான 3 லட்சம் வரி விதிப்பு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளில் அபராதம் கட்டுவதில் விலக்கு அளிக்கப்படுகிறது. மொத்த அபராதத் தொகையில் 25% செலுத்தினால் போதும். வரி விதிப்பின் அடிப்படையே இருப்பவர்களிடம் இருந்து பெற்று இல்லாதவர்களுக்குத் தருவது. அதைத் தலைகீழாகச் செய்கிறது மோடி அரசு.
ரூ.1.4 லட்சம் கோடிகளும் ரூ.2,50,433 கோடியும்
2013 - 2015 காலகட்டத்தில் ரூ.1.4 லட்சம் கோடி வாராக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. இப்போது மீண்டும் பொதுத் துறை வங்கிகளுக்கு ரூ.25,000 கோடி ஒதுக்கப்படுகிறது. பண மோசடி செய்த லலித் மோடிக்கு நெருக்கமானவர்கள், விஜய் மல்லையா நாட்டை விட்டு வெளியேற வழிசெய்தவர்கள், இந்த ரூ.25,000 கோடியையும் ‘பார்த்து’ செலவு செய்வார்கள்.
சர்வதேசச் சந்தையில் எண்ணெய் விலை குறைந்ததால் அரசு சேமித்த ரூ.1.4 லட்சம் கோடி என்னவானது என்று ப.சிதம்பரம் கேள்வி கேட்கிறார்.
மார்ச் 2015ல் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டிலும் அரசுக்கு ரூ.1.1 லட்சம் கோடி வருமானம் வந்தது. இதை எப்படிச் செலவு செய்தார்கள் என்றும் சொல்லப்படவில்லை.
மறுபுறம் இந்த நிதிநிலை அறிக்கையில் மக்கள் நலத் திட்டங்களுக்கு என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள மொத்த மானியமும் ரூ.2,50,433 கோடிதான்.
இந்த ரூ.1.4 லட்சம் கோடிகளும், ரூ.2,50,433 கோடியும் நிதிநிலை அறிக்கையின் அழுத்தத்தை தெளிவாகக் காட்டிவிடுகின்றன.
எந்தப் பெயர் சொல்லி அழைத்தாலும் சாக்கடை நாறத்தான் செய்யும்
வருவாய் மீது வரி ஊக்கம் செலுத்தும் தாக்கம் என்று ஓர் அறிக்கை தரப்படுகிறது. கேட்க நன்றாக இருக்கிறது. வரி ஊக்கம் செலுத்தும் தாக்கம் என்றால் அது ஆக்கபூர்வமானது என்று கருதத் தோன்றும் என்று எதிர்ப்பார்க்கிறார்கள். நிதிநிலை அறிக்கை ஆவணங்களுக்கான குறிப்புகள் என்ற ஆவணத்தில் பத்தி 3 எம், விட்டுக்கொடுக்கப்பட்ட வருவாய் என்று இது வரை சொல்லப்பட்டது எப்படி மாற்றி அழைக்கப்பட்டுள்ளது என்று சொல்கிறது. 2006 - 2007 நிதிநிலை அறிக்கையில், முதலில், விட்டுக் கொடுக்கப்பட்ட வருவாய் பற்றிய அறிக்கை வெளியிடப்பட்டது. அதன் பிறகு ஒவ்வோர் ஆண்டும் நிதிநிலை அறிக்கையில் இந்த விவரங்கள் விட்டுக் கொடுக்கப்பட்ட வருவாய் என்ற தலைப்பில் வெளியிடப்படுகின்றன. ஒவ்வோர் ஆண்டும் பெரிய பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இவ்வளவு பெரிய தொகையை ஏன் விட்டுக் கொடுக்க வேண்டும் என்று சரமாரியாகக் கேள்விகள் எழுவதால், உள்ளடக்கத்தை மாற்றாமல் வடிவத்தை மட்டும் மாற்றியிருக்கிறார் ஜெட்லி. விட்டுக் கொடுக்கப்பட்ட வருவாய் என்பதற்குப் பதிலாக, அதை மத்திய வரி கட்ட மைப்பில், வருவாய் மீது வரி ஊக்கம் செலுத்தும் தாக்கம் என்று அழைக்கலாம் என்றும் இனி அப்படியே அழைக்கப்படும் என்றும் சொல்கிறார். சாக்கடையை பெயர் மாற்றிச் சொன்னாலும் அது நாறத்தான் செய்யும் என்கிறார் மூத்த பத்திரிகையாளர் பி.சாய்நாத்.
அந்தச் சாக்கடை முன்னர் இருந்ததை விட இன்னும் கூடுதல் நாற்றம் அடிக்கிறது. ஏனென்றால் விட்டுக்கொடுக்கப்பட்டுள்ள வரி வருவாய் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கார்ப்பரேட் வரியில் 2014 - 2015ல் ரூ.65,067.21 கோடியும் 2015 - 2016ல் ரூ.68,710.98 கோடியும் விட்டுத் தரப்படுகிறது. கலால் வரியில் 2014 - 2015ல் ரூ.1,96,789 கோடியும் 2015 - 2016ல் ரூ.2,24,940 கோடியும் விட்டுத் தரப்படுகிறது. சுங்க வரியில் 2014 - 2015ல் ரூ.2,38,967 கோடியும் 2015 - 2016ல் ரூ.2,57,549 கோடியும் விட்டுத் தரப்படுகிறது. மொத்தம் 2014 - 2015ல் 5,00,823.21 கோடியும் 2015 - 2016ல் ரூ.5,51,199.98 கோடியும் விட்டுத் தரப்படுகிறது.
ரூ.9,000 கோடியுடன் ஓடிப்போன விஜய் மல்லையா பற்றித்தான் இப்போது நாடு பரபரப்பாகப் பேசுகிறது. கருப்புப் பணத்தை அறிவித்தால் அபராதத்தில் தள்ளுபடி, விட்டுத் தரப்படும் வரி, வாராக் கடன் என வெவ்வேறு தலைப்புகளில், கார்ப்பரேட் நிறுவனங்களும் பெரும்பணக்காரர்களும் பெரும் செல்வத்தை சுருட்ட விதவிதமான வழிகளை நிதிநிலை அறிக்கையிலேயே அமைத்துவிடுகிறது மோடியின் ஆசியுடன் அருண் ஜெட்லி முன்வைத்துள்ள நிதிநிலை அறிக்கை.
கோடிக்கணக்கான வறிய மக்கள் வாழ்க்கையை மேம்படுத்தும் நலத் திட்டங்களுக்கு வாயில் வடை சுடுகிறார்கள். வரவு - செலவுக் கணக்கை ஒழுங்குபடுத்துவதில் ஜெட்லி அக்கறை காட்டியுள்ளார் என்று சொல்லப்படுகிறது. அவர் காட்டியுள்ள அக்கறை வசதி படைத் தவர்களுக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் மட்டுமே சாதகமாக உள்ளது. சாமான்ய மக்களுக்கு ஒழுங்கை விட அவர்கள் வயிற்றுப் பிரச்சனை, வாழ்க்கைப் பிரச்சனை முக்கியம். அந்தப் பிரச்சனைகளை கணக்கில் கொள்ளாத ஒழுங்கு, அனைத்தும் தழுவிய ஒழுங்கீனத்துக்கு இட்டுச் செல்லும்.

மோடியின் கார்ப்பரேட் ஆதரவு
கப்பல் போக்குவரத்துத் திட்டங்கள்
கப்பல் போக்குவரத்துத் திட்டங்கள்
ஜி.ரமேஷ்
கடலில் பறக்கும் விமானங்கள், நிலத்திலும் நீரிலும் போகும் பேருந்துகள், மிதக்கும் நட்சத்திர உணவு விடுதிகள், எல்லாமே நீர் வழியாக... கேட்கும்போது ஜேம்ஸ்பாண்ட் படங்களில் வரும் காட்சிகள் கண்முன் வருகிறதல்லவா?. பாஜக அரசின் நெடுஞ்சாலைகள், சாலைகள் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி, இந்தக் காட்சிகளை இந்திய மக்களுக்கு நிஜமாக்கப் போகிறாராம். சாலைப் போக்குவரத்தைவிட, ரயில் போக்குவரத்தைவிட குறைந்த செலவில் நீர் வழியாகவே நாடு முழுவதும் பயணம் செய்யலாமாம். அதற்காக இந்தியாவில் உள்ள பல்வேறு நதிகளை, நீர்வழிகளை இணைத்து உள்நாட்டு நீர் வழிப் போக்குவரத்து உருவாக்க முனைப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.
போகும் இடமெல்லாம் கட்கரி தன் கனவைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருக்கிறார். ‘சீனாவில் 47% சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்து நீர் வழியாக நடக்கிறது. கொரியாவில் 43%, ஜப்பானில் 44% அய்ரோப்பிய நாடுகளில் 40% உள்ளது ஆனால், இந்தியாவில் வெறும் 3.5%தான் நீர்வழிப்போக்குவரத்து உள்ளது’ என அங்கலாய்கிறார். சாலைப் போக்குவரத்திற்கு 1 கி.மீக்கு ரூ. 1.50, ரயில் போக்குவரத்திற்கு ஒரு கி.மீக்கு 1 ரூபாய் செலவாகிறது. ஆனால், நீர் வழிப் போக்குவரத்திற்கு வெறும் 25 பைசாதான் செலவாகிறது. நாங்கள் கங்கையில் வாரணாசி முதல் ஹால்டியா வரை வேலை தொடங்கி 30 துறைமுகங்கள் அமைத்துக் கொண்டிருக்கிறோம். இதனால் நம் ஏற்றுமதி எங்கோ போகப் போகிறது என்று பெருமையாகச் சொல்கிறார்.
ஆனால், இந்தியாவில் ஆறுகளும் நீர் நிலைகளும் ஆட்சியாளர்களால், மாஃபியாக்களால் ஆக்கிரமிக்கப்பட்டும் பெப்சி, கோக் கம்பெனிகளால் உறிஞ்சப்பட்டும் அருவருக்கத்தக்க வகை யில் மாசுபட்டு, சுகாதாரமற்றும் இருக்கும்போது, தானும் அம்பானிகளும் அதானிகளும் சேர்ந்து இந்தியாவின் நீர் ஆதாரங்களை எப்படி கொள்ளையடிப்பது என்பது கட்கரியின் கவலை.
இந்திய அரசின் கீழ் உள்ள 13 துறைமுகங்களில் 12 துறைமுகங்களை (சென்னை, கொச்சின், கண்ட்லா, கொல்கத்தா, மும்பை, புது மங்களூர், மர்முகோவா, பாரதீப், வ.உ.சிதம்பரனார், விசாகப்பட்டணம், ஜவஹர்லால் நேரு துறைமுகங்கள்) தனியார் கம்பெனிகளிடம் ஒப்படைத்து போட்டியை உருவாக்கி தரத்தை முன்னேற்றப் போவதாக கடந்த ஆண்டு பிப்ரவரியில் அறிவித்தார்கள். அதற்காக வரைவுச் சட்டமும் உருவாக்கினார்கள். துறைமுகங்கள் அரசாங்கத்தின் கீழ் அறக்கட்டளை நிறுவனங்களாகச் செயல்பட்டுக் கொண்டிருப்பதை அதானி அம்பானிகளின் நிறுவனங்களாக்க, பெருந்துறைமுக அறக்கட்டளைகள் சட்டம் 1963அய் (Major Port Trusts Act 1963) திருத்தம் செய்து பெருந்துறைமுக அதிகாரங்கள் சட்டம் 2015 (Major Port Authorities Act 2015) உருவாக்கப்பட்டுள்ளது. அரசின் கீழ் உள்ள துறைமுகங்களை திட்டமிட்டுக் காலி செய்யும் நடவடிக்கையை ஏற்கனவே ஆரம்பித்துவிட்டார்கள்.
ஒடிசாவில் உள்ள பாரதீப் துறைமுகத்திற்குப் பக்கத்தில் உள்ள தர்மா துறைமுகத்தை அதானி குழுமம் கடந்த மே மாதம் வாங்கியது. அதற்குப் பின்னால், பாரதீப் துறைமுகத்திற்கு இறங்குமுகம்தான். அங்கு வர வேண்டிய சரக்குகள் தர்மா துறைமுகத்திற்கு மாற்றி விடப்பட்டன. சரக்கைத் துறைமுகத்தில் இருந்து எடுத்துச் செல்லும் ரயில் சேவையைக் குறைத்தார்கள். இதனால், சரக்கு இறக்கும் நிறுவனங்களுக்கு நெருக்கடி ஏற்படுத்தி அவர்களை பாரதீப்பில் இருந்து அப்புறப்படுத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்தார்கள். இதனால் கடந்த செப்டம்பர் மாதம் தொழிலாளர்கள், குறிப்பாக சரக்கு லாரி ஓட்டுநர்கள் 8 நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டார்கள். இதற்கு முன்னர் 1984ல்தான் வேலை நிறுத்தம் நடந்துள்ளது. அதிலிருந்து போராட்டம் இல்லாமலேயே பிரச்சனைகள் பேசித் தீர்க்கப்பட்டுள்ளன.
இப்போது சரக்கு இறக்கும் கம்பெனிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் இடையிலான முரண்பாடுகள், மோதல்கள் அதிகமாகி தொழிலாளர்கள் பலர் வேலையை, வருமானத்தை, வாழ்க்கையை இழக்கும் நிலை உருவாகியுள்ளது. இந்திய எரிவாயு நிறுவனம் (கெயில்) தனது எரிவாயு முனையத்தை (LNG Terminal) பாரதீப் துறைமுகத்தில் அல்லாமல் தர்மாவில் நிறுவப் போவதாக அறிவித்துள்ளது. ஆனால், அதற்கு முன்பாகவே பாரதீப் துறைமுகத்தோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளது கெயில். அது பற்றி கண்டுகொள்ளப்படாமலேயே இப்போது கெயில் நிறுவனத்தின் ரூ.5,600 கோடி மூலதனம் அரசாங்க துறைமுகத்திடமிருந்து அதானி துறைமுகத்திற்கு திருப்பி விடப்படுகிறது.
இதற்கெல்லாம் வசதியாக, பாரதீப் துறை முகத்தின் சேர்மனாக இருந்த சுதன்சு சேகர் மிஸ்ராவை இடம் மாற்றம் செய்துவிட்டு முழு நேரச் சேர்மன் ஒருவரை நியமிக்காமலும் அல்லது அவரின் பொறுப்பை துணைத் தலைவருக்கும் கொடுக்காமலும், விசாகப்பட்டிணம் துறைமுகச் சேர்மன் எம்.டி.கிருஷ்ணபாபுவிடம் ஒப்படைத்தார்கள். ஒரிசா ஸ்டீவ்டோர்ஸ் என்ற கம்பெனி பாரதீப் துறைமுகத்தில் 70 சதவீத சரக்குகளை ஏற்றி இறக்குகிறது. அதில் 1,000 தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். எல்லாம் தர்மாவுக்கு மாற்றப்படுவதால் எங்கள் கம்பெனியை நாங்கள் மூடத்தான் வேண்டும் என்று அதன் அதிகாரி ஒருவர் தெரிவிக்கிறார்.
ஏற்கனவே குஜராத்தில் உள்ள பொதுத் துறையான முந்த்ரா துறைமுகம் மோடி குஜராத் முதல்வராக இருந்தபோதே அதானி துறை முகம் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டல வரையறுக்கப்பட்ட நிறுவனம் என மாற்றப்பட்டுவிட்டது. அதன் பின்னர் அதை விரிவாக்கம் செய்ய, அருகில் உள்ள கண்ட்லா துறைமுகத்தை திட்டமிட்டு நஷ்டப்படுத்தினார்கள்.
சரக்கு இறக்குமிடத்தை கண்ட்லா துறை முகத்தில் இருந்து முந்த்ரா துறைமுகத்திற்கு 2000ம் ஆண்டு மாற்றிவிட்டனர். கண்ட்லா துறைமுகத்திற்கான சேவைகளுக்காகவே உருவாக்கப்பட்ட காந்திதாம் என்கிற நகரத்தையே முந்த்ராவின் சேவைக்கு மாற்றிவிட்டார் மோடி. மகாராஷ்டிராவில் உள்ள பெரிய துறைமுகமான ஜவஹர்லால் நேரு துறைமுகத்தின் விரி வாக்கத்தைத் திட்டமிட்டுத் தாமதப்படுத்தினார்கள். ராஜ் தாக்கரே கூட மும்பையின் பெரிய துறைமுகத்தின் விரிவாக்கத்தை, குஜராத்தின் தனியார் நிறுவனத்திற்காக கிடப்பில் போடுகிறார்கள் என்று குற்றம் சுமத்தினார்.
குஜராத்தில் முந்த்ரா, துனா தேரி, ஹசீரா, தகேஜ் ஆகிய நான்கு துறைமுகங்களும் கோவாவில் மர்முகோவா, கேரளாவில் விழிஞ்ஞம், தமிழ்நாட்டில் எண்ணூர், ஆந்திராவில் வைசாக், ஒடிசாவில் தர்மா ஆகிய துறைமுகங்கள் ஏற்கனவே அதானி குழுமத்திடம் உள்ளன. அடுத்து ஆந்திராவின் கிருஷ்ணப்பட்டணம் மற்றும் கங்காவரத்தையும் அதானி குழுமம் கைப்பற்றப் போகிறது. கேரளாவில் காங்கிரசின் உம்மன் சாண்டி அரசு, அரசு நிறுவனமான விழிஞ்ஞம் துறைமுகத்தை அதானி குழுமத்திற்கு விற்றுள்ளது. அதுவும் மொத்தத் திட்டச் செலவில் 40%த்திற்கு நஷ்டம் ஈடுகட்டும் நிதி (Viability Gap Fund - VGF) அளிக்கும் உத்தரவாதத்துடன். மொத்த திட்டச் செலவு ரூ.4,089 கோடி என்றால் அதில் நஷ்டம் ஈடு கட்டும் தொகை ரூ.1,635.60 கோடி. இதை மத்திய அரசு பாதியும் மாநில அரசு பாதியும் செலுத்தும். அதானி குழுமத்தைத் தவிர வேறு யாருமே ஏலத்தில் கலந்து கொள்ளவில்லை என்று சாண்டி அரசு காரணம் சொன்னது. இனி நாட்டில் உள்ள அனைத்துத் துறைமுகங்களையும் ஏகபோகமாக அதானி மட்டுமே ஆட்சி செய்யப்போகிறார்.
‘ஆந்திராவில் உள்ள கங்காவரம் துறை முகத்தை வாங்குவதற்கு முயற்சித்தோம். ஆனால், அதன் மதிப்பு அதிகமாக இருந்தது. ஆந்திராவின் பவனப்பாடு துறைமுக ஏலத்தில் கலந்து கொள்ளத்தான் எங்களுக்கு வசதி இருந்தது. பணம் சம்பாதிப்பது அவ்வளவு எளிதல் லவே’ இப்படி பணக்கஷ்டத்தில் இருப்பதுபோல் பேசியிருப்பது மோடியின் நண்பர் கவுதம் அதானியின் மகன் கரண் அதானி. கங்காவரம் துறைமுக விலை அதிகமாக இருக்கிறது என்று அதானி மகன் வடித்த கண்ணீரைப் பார்க்கப் பொறுக்க முடியாமல் மோடியும் கட்கரியும் நாட்டில் உள்ள துறைமுகங்களை தனியார் கையில் கொடுப்பதற்கேற்பச் சட்டம் கொண்டு வந்துவிட்டால் கரண் அதானி கண்ணீர் விடமாட்டார் என்று பெருந்துறைமுக அதிகாரங்கள் சட்டம் 2015அய் நாடாளுமன்றத் தில் தாக்கல் செய்து நிறைவேற்ற இருக்கிறார்கள் போலும்.
ஏற்கனவே இருக்கிற பெரிய துறைமுகங்களை அதிக விலை கொடுத்து வாங்குவதை விட, இளம் துறைமுகங்களை (Greefield Port) வாங்கி நமக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளலாம். இளம் துறைமுக இடங்களுக்கு ஆரம்பத்தில் ரூ.200 கோடி கொடுத்தால் போதும். அது நான்கு அய்ந்து ஆண்டுகளில் பல்கிப் பெருகிவிடும். ஏறக்குறைய ரூ.2,500 கோடியில் இருந்து ரூ.3,000 கோடி வரை ஒவ்வொரு ஆண்டும் பணமாகவே கிடைக்கிறது என்று கரண் அதானி சொல்கிறார். அதானி துறைமுகக் குழுமத்தின் நிகர லாபம் 25 சதவீதம் உயர்ந்திருக்கிறது. கடந்த ஆண்டு அக்டோபர் - டிசம்பர் காலக் கட்டத்தில் மட்டும் நிகர லாபம் ரூ.511.97 கோடியில் இருந்து ரூ.638.10 ஆக உயர்ந்திருக்கிறது.
2020ம் ஆண்டிற்குள் 600 மில்லியன் டன் சரக்குகளை எங்கள் கம்பெனி கையாளும் என்றும் வங்காள விரிகுடா, வங்காளதேசம், மியான்மர், தென்கிழக்கு ஆசியா, இந்தோனேசியா, மலேசியா, கிழக்கு ஆப்பிரிக்கா போன்ற நாட்டுத் துறைமுகங்களோடு இந்தியாவை மய்யமாகக் கொண்டு நாங்கள் இயங்கப் போகிறோம் என்றும் தென்கிழக்கு ஆசியா விற்கு, சீனாவில் இருந்து அய்ரோப்பாவிற்கு விழிஞ்ஞம் துறைமுகம் வாயிலாகக் கொண்டு செல்ல முடியும் என்றும் அவர் மிகவும் தெளிவாகவே பேசுகிறார். கொழும்பு துறைமுகத்திற்கு போட்டியாக விழிஞ்ஞம் துறைமுகம் சரக்குப் பெட்டகப் போக்குவரத்து துறைமுகமாக உருவாக்கப்படுகிறது.
தனியார் முதலாளிகள் நடத்தும் தொழில்களுக்கு ஏற்ப பிரத்தியேக துறைமுகங்களையும் (Captive Port) வர்த்தகத் துறைமுகங்களையும் (Commercial Port) அமைத்து வருகிறார்கள். குறிப்பிட்ட தேவைக்காக மட்டுமே பயன்படுத்திக் கொள்ளும் பிரத்தியேகத் துறைமுகங்களைக் (Captive Port) கட்டி கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் தேவைக்கு வைத்துக் கொள்ளலாம். அதை (BOO - Build Own Operate) கட்டு, சொந்தமாக்கு, செயல்படுத்து திட்டம் என்று சொல்கிறார்கள். ஆனால், எந்தவொரு துறைமுகத்தையும் எந்தவொரு கார்ப்பரேட் கம்பெனியும் தன் சொந்தக் காசில் கட்டப் போவதில்லை. அதானி ஆஸ்திரேலியாவில் நிலக்கரிச் சுரங்கத் தொழில் செய்வதற்காக 1 பில்லியன் டாலர் பாரத ஸ்டேட் வங்கி கடனாகக் கொடுக்கச் சொன்னார் மோடி என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.காமராஜர் (எண்ணூர்), காட்டுப்பள்ளி, விழிஞ்ஞம் துறைமுகங்களில் அதானி குழுமம் முழுக்க முழுக்க சரக்குப் பெட்டகங்களை (Containers) அமைக்கிறது. முந்த்ரா மற்றும் தர்மாவில் எரிவாயு முனையம் அமைக்கிறார்கள். தமிழ்நாட்டில் குளச்சல் மீன்பிடித் துறைமுகத்தை வர்த்தகத் துறைமுகமாக மாற்றத் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதற்கான ஆய்வுப் பணியை ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஒரு நிறுவனம் நடத்தி முடித்திருக்கிறது. அவர்கள் அளித்துள்ள அறிக்கையின் படி இனயத்தில் 6 கிலோ மீட்டர் தூரத்தில் அலை தடுப்புச் சுவரும் கடலின் உள்ளே 500 ஏக்கர் பரப்பளவுக்கு மண் நிரப்பப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் கடலில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் குடியிருப்புகள், கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள் அமைந்துள்ளன. 6 கிலோமீட்டரில் தடுப்புச் சுவர் கட்டினால் மக்கள் வாழ்க்கையே போய்விடும், கடலில் மண் நிரப்பப்படுவதால் மீன்கள் இல்லாமல் அவர்கள் வாழ்வாதாரமே போய்விடும் என்று அங்குள்ள மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்கள்.
நிதின் கட்கரியின் பூர்தி குழுமம் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகிறது. ஏற்கனவே, சில ஆண்டுகளுக்கு முன்பு தலைமைத் தணிக்கை அதிகாரி கட்கரியின் நிறுவனம் முறைகேட்டில் ஈடுபட்டதைக் கண்டுபிடித்தார். கடந்த ஆண்டு டெல்லியில் இ ரிக்ஷா மற்றும் எத்தனால் அறிமுகப்படுத்துவதில் கட்கரி அதிக ஆர்வம் காட்டினார். அதற்குக் காரணம் பூர்தி பசுமை தொழில்நுட்பங்கள் (Purti Green Technologies) என்கிற கட்கரியின் நிறுவனம் அந்தத் தயாரிப்புகளில் ஈடுபட்டது. போக்குவரத்து, எண்ணெய், எரிவாயு என எல்லாத் தொழில்களிலும் கட்கரியின் பூர்தி குழுமம் உள்ளது. அந்த வகையில், பொதுவாக தன்னுடைய கணக்கர்கள், வேலையாட்களின் பினாமி பெயரில்தான் தொழில்களை நடத்தி வரும் கட்கரி இப்போது நீர்வழிப் போக்குவரத்தில் கார்ப்பரேட்களுடன் சேர்ந்து தானும் ஈடுபடப் போகிறார் எனத் தெரிகிறது.
மத்திய அமைச்சர்கள் குழு தேசிய நீர் வழிப் போக்குவரத்து மசோதா 2015க்கு ஏற்கனவே ஒப்புதல் அளித்துவிட்டது. ஏற்கனவே நடைமுறையில் உள்ள 5 தேசிய நீர்வழிகளுடன் புதிதாக 106 உள்நாட்டு நீர் வழிகளை உருவாக்கி மொத்தம் 111 தேசிய நீர் வழிகள் அமைக்கப் போகிறது மோடி அரசு. இந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரிலேயே நீர்வழி மசோதாவிற்கு ஒப்புதலைப் பெற்று விடுவோம், எதிர்பார்க்காத பொருளாதார வளர்ச்சியை நாட்டிற்கு அது கொண்டுவரப் போகிறது என்கிறார் கட்கரி. உண்மையில் இது யார் நலனுக்கானதாக இருக்கும் என்பது சொல்லாமலேயே விளங்கும்.
துறைமுகத் தொழிலாளர்கள் 48,000 பேர் உள்ளனர். இவர்கள் பாஜக அரசு கொண்டு வரும் புதிய துறைமுகச் சட்டம், துறைமுகங்களைக் கார்ப்பரேட் நிறுவனங்களின் கையில் கொடுப்பதற்காகத்தான் உருவாக்கப்படுகிறது, நாங்கள் அதை அனுமதிக்க மாட்டோம் என்று 2015 மார்ச் 9 அன்று மாபெரும் வேலை நிறுத்ததிற்கு அழைப்பு விடுத்தார்கள். மத்திய அரசு இறங்கி வந்து தொழிற்சங்கக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி சில உத்தரவாதங்களை அவர்களுக்கு வழங்கினார்கள்.
ஆனால், உறுதியளித்ததற்கு மாறாக, புதிய சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி வேகமாக அமல்படுத்துவதை நோக்கித்தான் மோடி அரசு நகர்ந்து கொண்டிருக்கிறது. பெருந்துறைமுக அதிகாரங்கள் சட்டம் 2015, உள்நாட்டு நீர்வழிகள் சட்டம் 2015 இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாகும். துறைமுகத்தில் நேரடியாக வேலைபார்க்கும் தொழிலாளர்கள் தவிர கண்டெய்னர் லாரிகளில் வேலை பார்க்கும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களும் புதிய சட்டம் அமலுக்கு வந்தால் பெரும் பாதிப்படைவார்கள். துறைமுகத் தொழிலாளர் போராட்டம் பெரிய அளவில் வெடிக்கக் காத்திருக்கிறது.
காவிக்குள் ஒளிந்திருக்கும் கார்ப்பரேட் கொள்ளையர்கள்
வித்யாசாகர்
பாபா ராம்தேவ், மோடியின் யோகா குரு. காங்கிரஸ் ஆட்சியின்போது இந்தக் காவிச் சாமியார் ஊழலுக்கு எதிரான, கருப்புப் பணத்திற்கு எதிரான போராளியாகத் தன்னைக் காட்டிக் கொண்டார். லோக்பால் மசோதாவிற்காகவும் கருப்புப் பணத்தை ஒழிப்பதற்காகவும் அன்னா ஹசாரே, சாந்தி பூஷன், கேஜ்ரிவால் ஆகியோர் போராட்டங்கள் நடத்தியபோது தானும் போராடப் புறப்பட்டார். கருப்புப் பணத்தை ஒழிப்பதற்காக அவர் டில்லி ராம் லீலா மைதானத்தில் தடையை மீறி உண்ணா விரதமிருந்து கைது ஆனார்.
கருப்புப் பணத்தை ஒழிக்க 2014 பொதுத் தேர்தலில் மோடியைப் பிரதமராக்க வேண்டும் என பிரச்சாரம் செய்தார் பாபா ராம்தேவ். மோடி ஆட்சிக்கு வந்தவுடன் ஊழல், கருப்புப் பணம் ஆகியவை ஒழிந்துவிட்டதுபோல் இப்போது லோக்பால் பற்றியோ கருப்புப் பணம் பற்றியோ பாபா வாய் திறப்பதில்லை. வெளிநாட்டில் உள்ள கருப்புப் பணத்தைக் கைப்பற்றி இந்தியாவில் உள்ள ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் 15 லட்ச ரூபாய் போடுவேன் மோடி எனச் சொன்னது என்னவானது என ராம்தேவ் கேட்கவில்லை. கேட்க மாட்டார். அவரும் பாசிச காவிக் கும்பலின் ஓர் அங்கமே.
ராம் தேவ் வெறும் காவி உடுத்திய சாமியார் மட்டுமல்ல. அவர் கார்ப்பரேட் கம்பெனி முதலாளியும்கூட. காவி, கார்ப்பரேட் சாமியார் ராம்தேவ்வுக்கு பல ஆயிரம் கோடிகளில் சொத்து இருக்கிறது என்பது மட்டுமல்ல, அவரிடமே பல ஆயிரம் கோடி கருப்புப் பணம் இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. அதைப் பாதுகாத்துக் கொள்ள ஆளும் பாஜகவின் ஆதரவு தேவையாக இருக்கிறது. பாஜகவிற்கும் ராம்தேவின் பின்னால் திரளும் கூட்டம் தங்கள் வகுப்புவாத பாசிச கலாச்சாரத்தை நிலை நிறுத்த தேவைப்படுகிறது.
பதஞ்சலி யோக பீடம் அறக்கட்டளை, திவ்ய யோக மந்திர் அறக்கட்டளை, பாரத் ஸ்வபிமான் அறக்கட்டளை என அறக்கட்டளைகளின் பெயரால் ஆயுர்வேத மருத்துகளை, பல்வேறு பொருள்களைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறார் இந்த முற்றும் துறந்த(!) துறவி. ஆயுர்வேத மருந்துகள், உணவுப் பொருட்கள், மூலிகை அழகுசாதனப் பொருட்கள் என்று ஒவ்வொரு மனிதருக்கும் தலை முதல் கால்வரை தேவையான அனைத்துப் பொருட்களையும் தயாரிக்கப் போகிறாராம் ராம்தேவ். இயற்கை முறையில் பயிர் செய்யப்பட்ட பருத்தி மூலம் ஆயத்த ஆடைகள் தயார் செய்யும் திட்டமுமிருக்கிறதாம். நாடு முழுவதும் வடக்கு தெற்கு என உற்பத்திக் கூடங்கள் அமைக்க திட்டமிட்டுள்ளார். ராம்தேவின் பதஞ்சலி ஆயுர்வேத மருந்துகள் மூலம் மட்டுமே 2015ல் ரூ.2,500 கோடி லாபம் கிடைத்திருக்கிறது.
மோடியின் ஆட்சி வந்த பின் இன்றைய சந்தையில் பதஞ்சலி ஒரு முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கிறது. பதஞ்சலியின் சொத்து மதிப்புகள் ரூ.14,000 கோடிக்கு மேல். ஹஃபிங்ஸ்டன் போஸ்ட் இந்தியா அறிக்கையின்படி 2012ல் வெறும் ரூ.450 கோடியாக இருந்த பதஞ்சலி பொருள்களின் விற்பனை மூன்று ஆண்டுகளுக்குள் 5 மடங்காகப் பெருகியிருக்கிறது. நுகர்வோர் பொருட்களைத் தயார் செய்து விற்கும் மற்ற நிறுவனங்களுக்கு விளம்பரத்திற்கு ஆகும் செலவைக் காட்டிலும் பதஞ்சலி விளம்பரத்திற்காக செலவு செய்வது என்பது மிகவும் குறைவு. இங்குதான் ராம் தேவ்வின் காவி அரசியல் வேலை செய்கிறது. 2012ல் வெறும் 150 விற்பனை நிலையங்கள் என்பதிலிருந்து தற்சமயம் 4,000 விற்பனை நிலையங்கள் உருவாகியுள்ளன.
பதஞ்சலி நிறுவனம் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு ஆட்சேபணைகளும் எதிர்ப்புகளும் கிளம்பின. உணவுப் பாதுகாப்பு மற்றும் ஒழுங்குபடுத்தும் ஆணையம் பதஞ்சலி தயாரிக்கும் ஆட்டா நூடுல்சுக்கு உரிமம் வாங்கப்பட வில்லை என்றது. உரிமம் பெறாமலேயே ஆட்டா நூடுல்ஸ் உற்பத்தி செய்கிறது ராம்தேவ்வின் பதஞ்சலி. அதேபோல் பதஞ்சலி தயாரிக்கும் ஆயுர்வேத மருத்துகளில் பசு மூத்திரம் கலக்கப்படுவதாக புகார் எழுந்தது. பல இசுலாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மருந்துகளிலும், அழகுசாதன பொருட்களிலும், உணவு பொருட்களிலும், பசு மூத்திரம் கலப்பது இசுலாமியர் நெறியில் தடை செய்யப்பட்ட ஒன்றாகும். பசு மூத்திரம் கலந்துள்ள பதஞ்சலியின் பொருட்களை வாங்கக் கூடாதென்று தமிழ்நாடு ஜவ்ஹித் ஜமாத் சொன்னது.
ஆந்திராவில் செம்மரங்கள் கடத்தியதாக 20 தொழிலாளர்கள் ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொல்லப்பட்டார்கள். அந்தச் செம்மரக்கட்டைகளை இந்தியாவிலேயே அதிகம் வாங்குவது ராம்தேவ்தான். தொழிலாளர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படும் 706 டன் செம்மரக் கட்டைகளை ரூ.207 கோடிக்கு ஆந்திர அரசிடமிருந்து ராம்தேவ் நிறுவனம்தான் வாங்கியது. பல்வேறு பொருட்கள் தயாரிக்கப்படுவதற்கு செம்மரக்கட்டை பயன்படுத்தப்படுகிறது.
ஆண் குழந்தைகள் பெண் குழந்தைகள் பாகுபாடு பார்க்கக்கூடாது. கரு ஆணா பெண்ணா என்று ஸ்கேன் பார்த்துச் சொன்னால் குற்றம். ஆனால், ராம்தேவ், ஆண் குழந்தை பெற்றுக் கொள்வதற்வாக என்று ‘புத்ர ஜீவிக் பீஜ்’ என்ற ஆயுர்வேத மருந்தை தயாரித்து விற்பனைக்குக் கொண்டுவந்தார். மாநிலங்கள வையில் இதைப்பற்றி பெரிய சர்ச்சை எழுப்பப்பட்டது. 2006லேயே பிருந்தா காரத், ராம்தேவ் செய்யும் மருந்துகளில் மிருக பாகங்கள் கலக்கப்படுவதாக ஆதாரபூர்வமாக வழக்குத் தொடர்ந்தார். அப்படிப்பட்ட சாமியார் இன்று காவி பாசிச பாஜக ஆட்சியில் தன் வியாபாரத்தை பல மடங்கு பெருக்கிக் கொண்டார். அதற்காகவே அவர் மன்மோகன் ஆட்சியில் ஊழலுக்கு எதிரான உத்தமர் போல நடித்து மோடியைப் பிரதமராக்கத் துடித்தார்.
இந்த (அ)யோக்கியத்துறவி நடத்தும் நிறுவனங்களில்தான் மற்ற கார்ப்பரேட் கம்பெனிகளில் இருக்கும் தொழிலாளர்கள் மீதான ஒடுக்குமுறையைவிட அதிகமான ஒடுக்குமுறையும் சுரண்டலும் நடக்கின்றன. 2005ல் ஹரித்வாரிலுள்ள இவரது ‘திவ்ய யோகா மந்திர்’ அறக்கட்டளையில் பணிபுரிந்த 113 தொழிலாளர்கள் சிஅய்டியு தலைமையில் கூலி உயர்வு, இஎஸ்அய், பிஎஃப் போன்ற கோரிக்கைகளுக்காகப் போராடினார்கள். அதனால், பல தொழிலாளர்கள் வெளியேற்றம் செய்யப்பட்டனர்.
இப்படிப்பட்ட நிறுவனத்திற்கு இப்போது மோடி அரசு மத்தியத் தொழிலகப் பாதுகாப்புப் படை (சிஅய்எஸ்எப்) பாதுகாப்பு வழங்க அனுமதி அளித்துள்ளது. பொதுவாக, மத்தியத் தொழிலகப் பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்பு அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு மட்டுமே வழங்கப்படும். ஆனால், ராம் தேவ்வின் நிறுவனங்களுக்கு இந்தப் பாதுகாப்பு வழங்கியிருக்கிறது. ராம்தேவ்வுக்கு ஏற்கனவே ‘இஜட்’ பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. பாசிச பாஜக ஆட்சியில் யார் உண்மையில் பாதுகாப்பாக உள்ளார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. ஹரியானாவின் பாஜக அரசு கடந்த ஆண்டு பாபாராம்தேவை ஹரியானாவின் நன்னம்பிக்கை தூதுவராக நியமித்ததோடு அவருக்கு கேபினட் அமைச்சர் அந்தஸ்தும் வழங்கியது.
2014 தேர்தல் நேரத்தில் ராம்தேவும், பாஜக வேட்பாளராகிய மஹந்த் சந்த்நாத்தும் கறுப்புப் பணத்தை கொண்டு வருவது, தேர்தலில் பயன்படுத்துவது குறித்து பேசியதை ஒரு தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்டது. பாரத் ஸ்வாபிமான் அறக்கட்டளையும் பதஞ்சலி யோக பீடமும் தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகளுக்கு குறிப்பாக பாஜகவிற்கு பணம் வாங்கிக் கொடுக்கும் வேலை செய்த தாக தேர்தல் கமிசன் குற்றம் சாட்டியது.
இந்திராகாந்திக்கு ஒரு திரேந்திர பிரம்மச்சாரி. பி.வி.நரசிம்மராவிற்கு ஒரு சந்திராஸ்வாமி. இதற்கு முன் ஆட்சியில் இருப்பவர்களுக்கு, முதலாளிகளுக்கு, நிலப்பிரபுக்களுக்கு நெருக்கமான ஆலோசகர்களாக சாமியார்கள் எப்போதும் இருப்பார்கள். அவர்கள் திரைமறைவில் செயல்பட்டார்கள். ஆனால், இப்போது பல சாமியார்கள் ஆட்சியின் அனைத்து விசயங்களிலும் வெளிப்படையாகவே தலையிடுவது, கட்டுப்படுத்துவது மட்டுமின்றி, கட்டுப்பாடே இல்லாமல் நாட்டின் வளங்களைக் கொள்ளையடிக்கும் சீரழிக்கும் காவி உடையணிந்த கார்ப்பரேட் முதலாளிகளாகவே மாறிவிட்டார்கள். காவி ராம்தேவ் ஒருபுறம் என்றால், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் எனும் வெள்ளுடைச் சாமியார், டெல்லி யமுனை நதிக்கரையில் இருந்த விவசாய நிலங்களை எல்லாம் நாசப்படுத்தி, ஏழை விவசாயிகளின் குடியிருப்புகளைத் தரை மட்டமாக்கி வாழும் கலை விழா நடத்துகிறார். பசுமைத் தீர்ப்பாயம் அவ்விழாவுக்கு தடை விதிக்க முடியாது என்கிறது. ஆனால், 5 கோடி ரூபாய் அபராதம் கட்டச் சொல்கிறது. அதைக் கட்ட முடியாது என்று திமிராகவே பேசுகிறார் எளிமையை மற்றவர்களுக்குப் போதித்துவிட்டு தான் மட்டும் ராஜ வாழ்க்கை வாழும் சாமியார்.
காவிகளின், கார்ப்பரேட்களின் கூட்டணி பாசிச பாஜக ஆட்சிக்கு பதிலடி கொடுக்க உழைக்கும் வர்க்கமும் மாணவர் இளைஞர் அறிவாளிப் பிரிவினர் அனைவரும் ஓரணியில் திரள ஆரம்பித்துவிட்டனர்.

சென்னையில் பிரிக்கால் தொழிலாளர்கள் ஒருமைப்பாட்டு இயக்கம்
எஸ்.சேகர்
டிசம்பர் 3 அன்று இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட பிரிக்கால் தொழிலாளர்களுக்கு நியாயம் கேட்கும் இயக்கம் ஜனவரி 6ல் சென்னை அம்பத்தூரில் துவங்கப்பட்டது. இகக மாலெ தலைவர்கள், ஏஅய்சிசிடியு தேசியத் தலைவர்கள், அணுஉலை எதிர்ப்பு இயக்கத் தலைவர்கள் பங்கேற்று முதல் எட்டு கையெழுத்துக்களுடன் பதிவு செய்த பதாகைகளுடன் துவங்கிய இந்த இயக்கம் துவங்கும்போது அனைத்துத் துறைகள் அரங்குகள் சிறிய, பெரிய ஆலைத் தொழிலாளர்கள், அமைப்பு சாராத் தொழிலாளர்கள் என அனைவரும் பங்கேற்கும் விதம் துவங்கப்பட்டது.
அயப்பாக்கத்தில் பிப்ரவரி 23 அன்று ஒரு மூத்த தொழிலாளி உங்கள் கட்சி என்ன செய்தது எனக் கேட்டபோது, சுதந்திர இந்தியாவில், சங்கம் ஆரம்பித்து ஜனநாயகம் கோரியதால் எங்கள் சங்கத் தலைவர்கள் பொய் வழக்கை சந்திக்கிறார்கள், எங்கள் தோழர்கள் எட்டு பேர் இரட்டை ஆயுள் தண்டயை பெற்றும், அடக்குமுறைகளை எதிர்கொண்டும், கொண்டாட்டமாய்ப் போராடுகிறோம், போரட்டங்களைக் கொண்டாடும் இயக்கம் நாங்கள்தான் எனக் கூறினார்கள். இது போலவே, தோழர்கள் வீடுகளில் வீதிகளில் கடைகளில் பிரச்சாரம் செய்தார்கள்.
ஆலைகளில் ஒருமைப்பாட்டு இயக்கத்தை எடுத்துச் செல்ல முதல்கட்டமாக அம்பத்தூர், திருபெரும்புதூரில் தயாரிப்புக் கூட்டங்களில் முன்னோடிகளிடம் விவாதிக்கப்பட்டது. ஜனவரி 6 முதல் 26 வரை, மூடிய டன்லப் ஆலை நிலத்தை மீட்கிற போராட்டம், லூகாஸ் டிவிஎஸ் பயிற்சித் தொழிலாளர் போராட்டக் கூட்டங்களில், வண்டலூரில் விடுமுறை நாளில் பூங்காவுக்குள் வரும் பல மாவட்டங்களைச் சேர்ந்த உழைக்கும் மக்கள் மத்தியில், சென்னையில், அம்பத்தூரில், திருபெரும்புதூரில், திரு வெற்றியூரில் நாம் நடத்தும் கூட்டங்களில் பங்கேற்கும் தொழிலாளர் முன்னோடிகள், மக்கள் மத்தியில், ஹ÷ண்டாய் தொழிலாளர் கூட்டத்தில் தொழிலாளரிடம் என எதிர்வந்த அனைத்து வாய்ப்புக்களிலும் சந்தித்தவர்களிடம், பிரிக்கால் எட்டு தொழிலாளர் இரட்டை ஆயுள் தண்டனைக்கு நீதி கேட்கிறோம் என தலைப்பிடப்பட்ட பதாகைகளில் கையெழுத்து பெறுகிற வேலைகளை சென்னை ஏஅய்சிசிடியு, இகக மாலெ தோழர்கள், பல நாட்கள், பல மய்யங்களில் பல்லாயிரக்கணக்கானவர்கள் மத்தியில் செய்தனர். எட்டு பிரிக்கால் தொழிலாளர்களுக்கு விடுதலை வேண்டும் என்ற தலைப்பில் ஏஅய்சிசிடியு வெளியிட்ட பிரசுரங்களை விநியோகித்தனர். அஇஅதிமுககாரர்கள் அம்மா ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டிருக்க, இகக மாலெ மற்றும் ஏஅய்சிசிடியு தோழர்கள் எட்டு பிரிக்கால் தோழர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற பல்லாயிரக்கணக்கான ஸ்டிக்கர்கள் ஒட்டும் வேலையை தீவிரப்படுத்தினர்.
ஜனவரி 18 தேசிய ஒருமைப்பாடு தினம், ஜனவரி 27 திருபெரும்புதூரில் அனைத்து சங்கத் தலைவர்கள் பங்கேற்ற பொதுக்கூட்டம் வரை தொடர்ந்து கூட்டங்கள், தயாரிப்புக்கள் என்றே நாட்கள் சென்றன.
பிப்ரவரி 3 அன்று மாவட்டத் தலைமை தோழர்கள் நடந்த வேலைகள் பற்றி விவாதித்த போது கூட்டம் கூட்டம் என்றே நாட்கள் ஓடி விட்டன, பிரச்சார வடிவங்கள் மாற வேண்டும், பல ஆயிரம் தொழிலாளரிடம் போய்ச் சேர வேண்டும், அவர்கள் பங்கேற்பை உறுதி செய்ய வேண்டும், கையெழுத்துக்கள், புத்தக விநியோகம், பரந்த தொழிலாளர் மத்தியில் விவாதங்கள் கட்டமைத்தல், நிதி திரட்டுதல் ஆகியவற்றைச் செய்ய வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
ஹ÷ண்டாய், டிஅய்டிசி, ஓஎல்ஜி, இன்னோவேட்டர்ஸ் தோழர்கள் ஒரு லட்சம் ரூபாயை திரட்டிக் கொண்டு பிப்ரவரியில் நடக்கவுள்ள கட்சியின் மாநில மாநாட்டுக்கு வருவதாகச் சொன்னார்கள்.
சொன்னபடியே பிப்ரவரி 28 கட்சி மாநில மாநாட்டில் பிரிக்கால் சங்கத் தலைமை தோழர்களிடம் ஒரு லட்சம் ஒருமைப்பாட்டு நிதியை தோழர்கள் வழங்கினார்கள். அயர்லாவும் ரூ.15ஆயிரம் வழங்கியது. அப்போதுதான் அடுத்த சுற்றை அசாத்தியமாகச் செய்து முடிப்போம், 10 நாட்களில் முடித்து விடுவோம் என்ற முடிவுக்கு வர முடிந்தது.
மார்ச் 2, 3 தேதிகளில் தோழர்கள் பழனி வேல், சேகர், பழனி ஆகியோர், திருவெற்றியூர் பகுதி சங்கங்களின் தலைமைத் தோழர்களிடம் ஆதரவு கோரினர். மார்ச் 10க்குள் ஆலைக்கு வருவோம், ஆலைவாயிலில் துண்டேந்தி நிற்போம், பதாகையுடன் வருவோம், கையெழுத்து போடுங்கள், நீதிக்கானப் போருக்கு நிதியும் வேண்டும் என்றோம். எம்ஆர்எப் தவிர, அசோக் லேலண்டு, இந்துஜா பவுன்டரீஸ், கார்பரண்டம் யுனிவர்செல், ராயல் என்பீல்ட், எவரெடி சங்கத்தைச் சேர்ந்தவர்கள் வரச்சொன்னார்கள்.
எம்ஆர்எப் சங்கப் பொதுச் செயலாளரும், நிர்வாகிகளும், இருக்கிற சூழலில், வெற்றிகரமாக எப்படி நடத்துவது என்று துவக்கத்தில் கவலைப்பட்டார்கள். அவர்கள் ஏற்கனவே தங்களுக்குள் மனப் போராட்டங்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஒப்பந்தம் தள்ளிக்கொண்டே போகிறது. அவர்களின் பிரசவ கால வலியை சொல்ல முடியாமல் தவித்தார்கள்.
மாருதி தொழிலாளர் ஒருமைப்பாட்டு இயக்கத்துக்கு போராட்டக் குழு உருவாக்கி தலைமை தாங்கி நடத்தியவர்கள், பிரிக்கால் தோழர்களுக்கு என்ன செய்வது, பல்வேறு நெருக்கடிகளில் சிக்கியுள்ள இந்தச் சூழலில் பிரிக்கால் விஷயத்தில் தொழிலாளர் ஆதரவை எப்படி திரட்டுவது என்று தங்களுக்குள் இருந்த கேள்விகளை வெளிப்படையாக முன்வைத்தனர். தொழிலாளர்களை நேரில் சந்தித்து செய்தி சொல்ல, கையெழுத்து இயக்கத்தை நடத்த, பிரசுரங்கள் விநியோகிக்க முதலில் முயற்சி செய்யலாம், நிதி திரட்டுதலை பிறகு பார்க்க லாம் என அவர்களுக்குச் சொல்லப்பட்டது.
அம்பத்தூரில் இருந்து, 05.03.16 அன்று கட்சி மாநகரச் செயலாளர், ஏஅய்சிசிடியு மாநில நிர்வாகிகள் உட்பட ஆறு தலைமைத் தோழர்கள் ராயல் என்பீல்டு ஆலை வாயில் சென்றனர். முன்னாள் இன்னாள் தலைமைத் தோழர்கள் உற்சாகத்தோடு வரவேற்று தொழிலாளர்கள், பயிற்சியாளர்கள் கையெழுத்துக்களை திரட்டியதோடு நிதியும் அளித்தனர். பயிற்சியாளர்கள், 10ஆம் தேதி சம்பளம் வரும், கையெழுத்து போடுகிறோம், இப்போது கையில் இருப்பதைத் தருகிறோம் சம்பளம் வாங்கிய பிறகு மீண்டும் நிதி தருகிறோம் என்றனர். இகக மாலெ, ஏஅய்சிசிடியு தோழர்களுக்கு அவர்கள் அப்ரோச் பிடித்துவிட்டது. ஒரு வழியாக அன்று 4 மணிக்கு வரை அங்கு பிரச்சாரம் மற்றும் நிதி திரட்டும் வேலைகளைச் செய்து விட்டு, திருவெற்றியூர் சந்தைக்கு தோழர்கள் சென்றனர். அங்கு சிறு வர்த்தகர்கள் நிதி கொடுத்தனர். தங்கள் கடைகளில் ஸடிக்கர் ஒட்டச் செய்தனர். அன்று சில ஆயிரங்களில் நிதி திரட்டிக் கொண்டு தோழர்கள் அலுவலகம் வந்தனர்.
அடுத்த நாள் ஞாயிறு விடுமுறையினால் அம்பத்தூரில் இயக்கம் நடத்தப்பட்டது. 07.03.16 அன்று காலை 10 மணிக்கு புறப்பட்டு தோழர்கள் அசோக் லேலண்ட் எண்ணூர் பிளான்ட் சென்றனர். லேலண்டில் 10க்கும் மேற்பட்ட வாயில்கள் உள்ளன. உணவு இடைவேளையில் வெளியே வருவதற்கான ஒரு வாயில் அருகே பொதுக்கூட்டத் திடல் உள்ளது. அங்கு பேனர் கட்ட முயன்றபோது ஆலை காம்பவுண்ட்டில் கட்டக் கூடாது என ஆட்சேபிக்கப்பட்டது. இரண்டு தோழர்கள் பேனரை கையில் பிடித்து கொண்டு நின்றனர். அங்கு சென்ற 12 பேரும் பிரசுரங்கள் விநியோகிக்க, ஒரு தோழர் கையெழுத்து போட மார்க்கர் வைத்துக் கொண்டு நின்றார்.
முதல் உணவு இடைவேளையில் 10 நிமிடங்கள், இரண்டாவது மூன்றாவது இடைவேளைகளில் வெளியே வரும் தொழிலாளர்கள் சில ஆயிரம் பேர் மத்தியில், நமது குழுக்களில் உள்ள யாராவது ஒரு தோழர் பேசி ஏதாவது ஒரு மெட்டீரியலை தந்து விட வேண்டும், முடிந்தால் கையெழுத்து போட வைக்க வேண்டும், கையெழுத்து போடும்போது புக் லெட் விரிவாக உள்ளது.... படியுங்கள், நிதி கொடுங்கள் எனச் சொல்லி அடுத்தடுத்த ஸ்டெப் நகர உரிய தேர்ச்சியை தோழர்கள் பெற்றுவிட்டனர்.
தோழர்கள் பாலகிருஷ்ணனும், பொன் ராஜ÷ம், தொழிலாளர்கள் சாப்பிட்டு விட்டு கடை நோக்கி, திடல் நோக்கி வெளியே வரும் போது அவர்கள் கூடவே 20 அடி நடந்து வருவார்கள். இது என்ன அணுகுமுறை என பார்ப்பவர்களுக்குத் தோன்றும். ஆனால் இந்த அப்ரோச் பிடித்து போனவர்களும் உண்டு. அவர்கள் ஒரு கட்டம் சென்றவுடன், தொழிலாளர்கள் கையில் சில 10, 20, 30 ரூபாய்களை கொண்டு வந்து நிதி போடும்போதும், பதாகையில் கையெழுத்து போடும்போதுதான், அவர்க ளுடன் பேசிக் கொண்டு வந்த தொழிலாளி, புக்லெட் வாங்கிவிட்டதும் மெசேஜ் பிக் அப் செய்ததும் தெரியும். அவர்கள் பிறகு டைம் இருந்தால் மட்டுமே யுடர்னில் வந்து கையெழுத்து போடுவார்கள் என்ற நிலையும் பார்க்க முடிந்தது. இல்லையென்றால் தோழர் பாலகிருஷ்ணனிடமே நிதியை கொடுத்து அவரையே போட்டு விடச் சொன்னார்கள்.
இப்படிப் போய் வந்ததில் ஒரு கட்டத்தில் தோழர் பொன்ராஜ் களைத்துப் போனார். நின்று பேசும் தொழிலாளர்கள் மத்தியில் பேசும் தோழர்களுடன் சேர்ந்து பேசத் துவங்கிவிட்டார். ஒரு நிமிடத்தில் 2 நிமிடங்களில் பேசும் உரைகளை, அந்தச் சூழலுக்கேற்ப லைவ்வாக பேசி, தோழர்கள் பழனிவேல் குப்பாபாய், பசுபதி, மோகன், முனுசாமி, ராஜேந்திரன், ரவிச்சந்திரன் என நமது 12, 13 தோழர்கள் சில நிமிடங்களில் சில ஆயிரம் பேரை ஈர்த்துவிட்டனர். சில தொழிலாளர்கள், உங்கள மாதிரி திறமையானவங்களை கில்லாடிகளை நாங்கள் இது வரை பார்த்ததே இல்லப்பா. எவ்ளோ பெரிய மேட்டர இவ்ளோ அசால்டா டீல் பண்றீரிங்களே? உங்கள அடிச்சிக்க முடியாதுய்யா.. நீங்க என்னென்னமோ பண்றீங்க... நீங்கள்ளாம் எப்பவோ இந்தப் பக்கம் வந்திருகனும்பா... ட்ரை பண்ணுங்க என வாழ்த்திவிட்டு போனவர்களும் உண்டு.
திடீர் என சில இளம்தொழிலாளர்கள் வந்து கையெழுத்து போட வந்தனர். அவர்கள் பிரிக்கால் கான்ட்ராக் ஒர்கர்ஸ் என்றனர். அவர்கள் பற்றி விசாரித்தபோது, பிரிக்கால் நிறுவனம், லேலண்டின் கான்ராக்ட் மேன்பவர் சப்ளை செய்வதாகவும், அந்த பிசினசில் லேலன்டுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் சொன்னார்கள். எவ்வளவு நாட்கள் இங்கு வேலை இருக்கும் எனத் தெரியாது என்றனர். என்ன நடக்கிறது பிரிக்காலில்? நாங்கள் 2012க்கு பிறகு வந்தோம். செய்யாத குற்றத்துக்கு தண்டணை தரப்பட்டதாக காண்ட்ராக்ட் அதிகாரிகளே சொன்னார்கள் என அதிர்ச்சி தெரிவித்துவிட்டு, இது பத்தி தெரிஞ்சிக்க புக் கொடுங்க என கேட்டு வாங்கிக் கொண்டனர். 500க்கும் மேற்பட்ட ஒரு சிறுபிரசுரம் ஆலை வாயிலில் வாங்கி லேலண்டில் இதுவரை யாரும் பார்த்ததில்லை.
அசோக் லேலேண்ட் தொழிலாளர் உணவகத்தில் தோழர்களுக்கு உணவும் தரப்பட்டது.
உணவு இடைவேளையில் எவரெடி ஆலை வாயிலில் 20 நிமிடங்களில் கையெழுத்துக்களும் நிதியும் வாங்கி முடித்தனர். இதன் தாக்கம் மூன்று வாயில்களில் மாலை ஷிப்ட் முடிந்து செல்லும் தொழிலாளரிடம் தெரிந்தது. எடுத்துச் சென்ற பேனர்கள் கையெழுத்துக்களால் நிரம்பின. மாலை 4.30க்கு அன்று பிரச்சாரம் முடிந்து தோழர்கள் அம்பத்தூர் திரும்பினார்கள்.
அடுத்த நாள் அதிகாலை 4 மணிக்கு புறப்பட்ட தோழர்கள் குப்பாபாய், முனுசாமி, பழனி, சேகர், பசுபதி, ராஜேந்திரன் கொண்ட டீம் 5.45க்கே எம்ஆர்எப் வாயிலுக்குச்சென்றுவிட்டனர். காலை ஆலை வாயிலுக்குச் சென்ற வுடன் காவல் பணி தோழர் அன்புடன் வரவேற்றார். ஆலைக்குள் மூன்றாவது ஷிப்ட் பணியில் இருந்த தொழிலாளர் ஒருவர் கனிவுடன் சில நிமிடங்களில் தோழர்கள் வந்துடுவாங்க என்றார். கேட் அருகில் பேனர் கட்டிவிட்டு 6.10க்கு கையெழுத்து வாங்கத் தயாரானார்கள் தோழர்கள். உள்ளே காலை ஷிப்ட் சென்றவர்கள் ஆர்வமாய் கையெழுத்திட்டுவிட்டு சென்றனர். அடுத்தடுத்த நிமிடங்களில் சங்க பொதுச் செயலாளரும் மற்ற மற்ற முன்னோடிகளும் நம்முடன் நின்று பேச வந்துவிட்டார்கள். 120 பேர் சில ஆயிரங்கள் நிதி போட்டவுடன் பதாகை வழிவதை பார்த்து, தோழர்கள் பணத்தை அடுக்கி ரப்பர் பான்ட் போட்டனர். அடுத்த 1 மணிநேரத்தில் 7.30க்கு முதல் சுற்று 3ஆவது ஒரு பகுதி 1வது ஷிப்ட் தோழர்கள் கையெழுத்தும் நிதியும் போட்டதோடு நமது மெட்டீரியல் அனைத்தும் பெற்றுச் சென்றனர். 18 ஆயிரம் ரூபாய் வசூலாகியிருந்தது. நம்முடன் அந்தத் தோழர்களும் இந்தப் பிரச்சாரத் தில் உள்வயப்பட்டுவிட்டதை உணர முடிந்தது. இன்னும் நிறைய செய்ய வேண்டும் என்ற கடப்பாட்டை எம்ஆர்எப் தோழர்கள் அனைவருமே வெளிப்படுத்தினார்கள்.
தோழர்கள் பழனிவேல், லிங்கேஷ் குமார், ரவிச்சந்திரன், சேகர், ஆன் லோடு கியர்ஸ் தோழர்களுடன் மதியம் 2 மணிக்கு சென்று புதிய பேனரை பிடித்துக் கொண்டு நின்றனர். 2ஆவது ஷிப்ட் தோழர்கள் வந்துவிட்டனர். நிர்வாகத்துடன் நடந்துகொண்டிருந்த பேச்சு வார்த்தையிலிருந்து சில நிமிடம் அவகாசம் கேட்டு பொதுச் செயலாளரும் மற்ற முன்னோடிகளும் நம்முடன் நின்று பேசினார்கள். எம்ஆர்எப் தொழிலாளர்கள் அன்று மாலை திரும்பவும் ரூ.17 ஆயிரத்துக்கும் மேல் நிதியளித்திருந்தனர். ஸ்டிக்கர்களும், புக்லெட்டுகளும் தீர்ந்து போயின. அங்கிருந்து தோழர்கள் பெண்கள் தின கூட்டு கூட்டத்துக்கு சென்றோம். அங்கும் தையல் தொழிலாளர் நிலை புத்தகமும் பிரிக்கால் ஸ்டிக்கர்களும் நூற்றுக்கணக்கானவர்கள் மத்தியில் வினியோகம் செய்யப்பட்டன. துவக்கத்தில் தயக்கம் காட்டிய எம்ஆர்எப் தொழிலாளர்கள்தான் கூடுதலான நிதியளித்தனர்.
மறுநாள் 9 மார்ச் அன்று திருமுல்லைவாயிலில் அம்பத்தூரில் கடைகளில் ஸ்டிக்கர் வினியோகித்து பிரச்சாரம் செய்தபோது. இந்துஜா பவுண்டரிக்கு நாளை வர வேண்டும் என தோழர்களுக்கு அழைப்பு வந்தது. அன்றே அம்பத்தூர் கிளைச் சங்கங்களில் ஸ்டான்டர்டு கெமிக்கல்ஸ், மெர்குரி பிட்டிங்ஸ், ஜெய் இஞ்சினியரிங் தோழர்கள் முடிந்த நிதியை கொண்டுவந்து கொடுத்துவிட்டனர். எம்ஆர்எப் தோழர்கள் பங்கு பெற்று நடத்தி வரும் உழைக்கும் மக்களை இஞைர்களை பாதிக்காத மெட்ரோ ரயில் திட்டம் வேண்டும் என்ற இயக்கத்தின் பட்டினிப் போரிலும் நமக்கு அழைப்பு வந்து சென்று ஒருமைப்பாடு தெரிவிக்கப்பட்டது.
மறுநாள் இந்துஜா பவுண்டரி சென்றோம். இரண்டு ஷிப்டிலும் மூத்த தொழிலாளர் முதல் இளம் பயிற்சியாளர் வரை மிகவும் வறண்ட நிலையில் இருந்தாலும் எப்படியாவது சின்ன நிதியாவது தருவதை அனைவரும் உறுதி செய்தனர். ஸ்டிக்கர்களை வாங்கிச் சென்றனர். புதியதாக அய்டி புரூப், அட்ரஸ் புரூப் நகல் எடுத்துக் கொண்டு வந்த இஞைர்கள் கூட கையெழுத்துப் போட்டு விட்டுச் சென்றனர். தஞ்சை பகுதி இளைஞர்கள் சிலர் விவரமான நமது வெளியீட்டை அடம் பிடித்து வாங்கிச் சென்றனர்.
திருவெற்றியூரில் பிரச்சாரம் மார்ச் 10 அன்று முடிந்தது. திருபெரும்புதூர் தோழர்கள் 11, 12 தேதிகளில் தேவையெனில் வரலாமா எனக் கேட்டபோது ஹ÷ண்டாயில் அதன் துணை யூனிட்டுகளில் விதவிதமான வடிவத்தில் இயக்கம் நடந்திருந்தது. ஹ÷ண்டாய் தொழிலாளர்கள் மட்டும் ரூ.1 லட்சம் அளித்திருக்க, திருபெரும்புதூரில் பிற ஆலைகளில் அதற்கும் மேல் நிதி திரட்டப்பட்டிருந்தது.
ஒரகடம் நிப்பான் எக்ஸ்பிரஸ், திருமுடி வாக்கம் ஆர்எம்சி, இருங்காட்டுக்கோட்டை டென்னகோ, சுங்குவார்சத்திரம் சிஎம்ஆர், ஏசியன் பெயின்ட் (யுடிசி) என முன்னோடிகள் போராட்டத்தைக் கொண்டாட மார்ச் 13 அன்று பிரிக்கால் 10ஆம் ஆண்டு போராட்ட துவக்கத்தில் வந்து சங்கமித்து விட்டனர்.
தோழர்கள் விழாவில், ரூ.1,00,000 மற்றும் சென்னை தொழிலாளர்கள் ஒருமைப்பாட்டு கையெழுத்துக்கள் போட்ட பதாகைகளைக் கொண்டு வந்து கொடுத்தனர். பிரிக்கால் தொழிலாளர் போராட்டம் சர்வதேச இயக்கம், இந்த இயக்கத்தில் இன்னும் மேலான இலக்குகளை எட்டவும் தோழர்கள் தயார் என்கின்றனர். சென்னை உள்ளிட்ட அனைத்துத் தொழிலாளர்களும் உற்சாகம் அடைகிறோம். பிரிக்கால் 8 இயக்கம் இன்னும் பல பரிமாணம் எடுக்கும். இறுதியில் வெல்லும்.....

பிரிக்கால் தொழிலாளர் போராட்டத்தின் 10ஆவது ஆண்டு துவக்கம்
போராட்டமே கொண்டாட்டம் கொண்டாட்டமாய்ப் போராட்டம்

போராட்டத்தைக் கொண்டாடுவோம் கொண்டாட்டமாய்ப் போராடுவோம் என 2007 மார்ச் 3 அன்று ஆரம்பமான கோவை பிரிக்கால் தொழிலாளர் போராட்டம் 10ஆவது ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ள தினத்தைக் கொண்டாடும் விதமாக பிரிக்கால் போராட்டத்தின் 10ஆம் ஆண்டுத் துவக்க விழா, கோவை யில் 13.03.2016 அன்று காலை இளைய தோழர்களின் கோவை கலைக் குழுவின் மேளம் தாளம் ஆட்டம் பாட்டு என கொண்டாட்டமாய் ஆரம்பமானது.
விழாவின் முதல் நிகழ்ச்சியாக சங்கக் கொடியை, கொலைக் குற்ற வழக்கில் விடுதலை செய்யப்பட்ட தோழர் மல்லிகா ஏற்றினார். நாட்டு மக்களுக்காகவும் தொழிலாளர் வர்க்கத்திற்காகவும் போராடிய தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. கோவை மாவட்ட பிரிக்கால் தொழிலாளர் ஒற்றுமைச் சங்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் சாமிநாதன் தலைமையுரையாற்றினார்.
பிரிக்கால் தொழிலாளர்கள் போராட்ட வழக்குகளில் அவர்களுக்காக வாதாடிய வழக்கறிஞர்கள் கே.எம்.ரமேஷ், லட்சுமணநாராயணன், பாரதி ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர்.
அதைத் தொடர்ந்து தமிழக சட்டமன்றத் தேர்தல் 2016க்கான தொழிலாளர் வர்க்க சாசனத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) பொதுச் செயலாளர் தோழர் திபங்கர் வெளியிட ஏஅய்சிசிடியு மாநில நிர்வாகிகள் தோழர்கள் என்.கே.நடராஜன், ஜவகர், சங்கரபாண்டியன், எ.எஸ்.குமார், புவனேஸ்வரி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய தோழர் திபங்கர், நான் இங்கு வரும்போது வழியில் வைத்திருந்த புகைப்படங்களைப் பார்த்தேன். அவை ஒரு தொழிற்சாலைத் தொழிலாளர்களின் போராட்டம், அவர்களின் குடும்பத்தாரின் போராட்டமாக, பின்னர் சமூகத்தின் போராட்டமாக மாறியுள்ளதை வெளிப்படுத்தின. பிரிக்கால் தொழிலாளர் போராட்டம் தொழிலாளர் வர்க்கப் போராட்டத்தில் ஒரு முன்னுதாரணமிக்கப் போராட்டமாகத் திகழ்கிறது. இன்று 3 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துள்ளார்கள். ஆனால் மக்கள் பணத்தை, வங்கிப் பணத்தைக் கொள்ளையடித்த விஜய் மல்லையா, லலித் மோடி போன்றவர்கள் பத்திரமாக வெளிநாட்டிற்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். இந்த அரசால் ஜனநாயகத்திற்காக, நீதிக்காகக் குரல் கொடுப்பவர்கள் மீது தேசத்துரோக வழக்குப் போடப்படுகிறது. கூடங்குளம் அணுஉலைக்கு எதிராகப் போராடிய மக்கள் மீது, சாராயத்திற்கு எதிராகப் பாடிய புரட்சிப் பாடகர் கோவன் மீது, ஜேஎன்யு மாணவர்கள் மீது என எல்லோர் மீதும் தேசத் துரோக வழக்கு போடப்படுகிறது. எல்லா தரப்பினரும் போராடுகிறார்கள். இது தேர்தல் நேரம், தமிழ்நாட்டில் பல முன்னணிகள் உள்ளன. திமுக ஓர் அணி, அதிமுக ஓர் அணி அமைக்கலாம், வைகோ ஓர் அணி, பாஜக ஓர் அணி இப்படி பல கூட்டணிகள் முன்னணிகள் இருக்கலாம். வரலாம். ஆனால், உண்மையான அணி, முன்னணி போராட்ட அணி மட்டுமே, மக்களுக்காக தொழிலாளர்களுக்காக போராடுகின்ற அணி மட்டுமே. மாணவர்கள் தொழிலாளர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் இணைந்து போராட வேண்டிய காலமிது. வரும் காலத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராடுவோம் என்றார்.
அதைத் தொடர்ந்து ஏஅய்சிசிடியு தேசியத் தலைவர் எஸ்.குமாரசாமி உரையாற்றினார். அவர் தனது உரையில், பிரிக்கால் தொழிலாளர்கள் ஜெயலலிதா போலவோ, கனிமொழி போலவோ ஊழல் வழக்கில் சிறைக்குச் செல்லவில்லை. தொழிலாளர் போராட்டத்தில் சிறையில் உள்ளனர். அவர்கள் இருக்கும் கோவைச் சிறை, தொழிலாளர் போராட்டத்தில் முன்னோடியாக இருந்த, சுதந்திரப் போராட்டத்தில் இரட்டை ஆயுள் தண்டனை பெற்ற வ.உ.சி இருந்த சிறை...... அவரைப் போலத்தான் இன்று எட்டு பிரிக்கால் தொழிலாளர் முன்னோடிகள், அதே சிறையில், இரட்டை ஆயுள் தண்டனையில் இருக்கிறார்கள். பிரிக்கால் தொழிலாளர்கள் விரைவில் வெளியே வருவார்கள், பகத்சிங் வழி மரபைப் பின்பற்றி, அம்பேத்கரின் ஜனநாயகப் போராட்டத்தைப் பின்பற்றி மக்களைக் காக்க ஜனநாயகம் காக்க வரும் மார்ச் 23 முதல் ஏப்ரல் 14 வரையிலான பிரச்சாரத்தை நாம் மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் என்றார்.
பின்னர் வருகின்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மேட்டுபாளையம் மற்றும் கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதிகளில் இகக (மாலெ) சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் தோழர் நடராஜன், தோழர் வேல்முருகன் ஆகியோரை தோழர் திபங்கர் அறிமுகப்படுத்தினார். அதனைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கில் வந்திருந்த தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தார் அனைவரும் எழுச்சியுடன் முழக்கமிட்டனர். விழா மதிய உணவுடன் முடிவு பெற்றது.
மார்ச் 13 அன்று விழா துவங்குவதற்கு முன் பிரிக்கால் தொழிலாளர் சங்க அலுவலகத்தில் தோழர் டிகேஎஸ் ஜனார்த்தனன் நினைவு நூலகத்தை கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் திபங்கர் திறந்துவைத்தார்.

ரோஹித் வேமுலாவின் மரணத்திற்கு நீதி வேண்டும்!
சாதி வெறி மதவெறிச் சக்திகளை முறியடிப்போம்!
ஜேஎன்யு காப்போம்! ஜனநாயகம் காப்போம்!

பிப்ரவரி 23 அன்று, ரோஹித் வேமுலா மரணத்திற்கு நீதி கேட்டும், சாதிவெறி, மதவெறிச் சக்திகளை முறியடிப்போம் ஜேஎன்யு காப்போம் ஜனநாயகம் காப்போம் எனும் முழக்கங்களுடனும் கோயம்புத்தூர் பெரியநாயக்கன்பாளையத்தில் இகக (மாலெ) ஆர்ப்பாட்டம் நடத்தியது. மாவட்டக்குழு உறுப்பினர் தோழர் நடராஜ் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். இகக (மாலெ) மாநிலக் குழு உறுப்பினர்கள் தோழர்கள் என்.கே.நடராஜன், பாலசுப்பிரமணியன், வெங்கடாசலம் ஆகியோருடன் மாவட்டக் குழு உறுப்பினர்கள் தோழர்கள் சாமிநாதன், ஜெயப்பிரகாஷ்நாராயணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தோழர் கண்ஹையா குமாரை விடுதலை செய்!
மாணவர்கள் மீதான தேசத்துரோக வழக்கைத் திரும்பப் பெறு!
மாணவர்களின் போராடும் உரிமையை, ஜேஎன்யுவை காப்போம்!

6 இடதுசாரிக் கட்சிகள் கூட்டாக வெளியிட்ட அழைப்பை ஏற்று பிப்ரவரி 23 அன்று சென்னையில் கூட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் தோழர் முத்தரசன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநிலச் செயலாளர் தோழர் இராமகிருஷ்ணன், இகக (மாலெ) மாநிலச் செயலாளர் தோழர் பாலசுந்தரம், சோசலிஸ்ட் யூனிட்டி சென்டர் ஆஃப் இந்தியா (கம்யூனிஸ்ட்) மாநிலச் செயலாளர் தோழர் ரெங்கசாமி ஆகியோர் உரையாற்றினர். இகக (மாலெ) மாநிலக்குழு உறுப்பினர்கள் தோழர்கள் எ.எஸ்.குமார், சேகர், ஜானகிராமன், இரணியப்பன், பாரதி மற்றும் மாநகரக் குழு உறுப்பினர்கள் தோழர்கள் மோகன், முனுசாமி, குப்பாபாய் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
திருப்பதி வழக்கறிஞர் கிராந்தி சைதன்யாவிற்கு சேலத்தில் பாராட்டுவிழா
ஆந்திர சிறைகளில் 25 மாதங்களாக பொய் வழக்குகளில் வாடிய 350 தமிழக பழங்குடித் தொழிலாளர்கள் விடுதலைக்குப் பணியாற்றிய திருப்பதி வழக்கறிஞர் கிராந்தி சைதன்யா அவர்களுக்கு பாராட்டு விழா, மார்ச் 10 அன்று கோ.வேடியப்பன் தலைமையில் தமிழக பழங்குடி மக்கள் இயக்கம் சார்பில் நடைபெற்றது. சிறையிலிருந்து விடுதலையான சுமார் 100 பழங்குடியினர் நிகழ்ச்சியில் பங்கெடுத்துக்கொண்டனர்.
சிறையிலிருந்து திரும்பியவர்கள் சார்பாக சிவராஜ், வள்ளிமதுரை (தருமபுரி), கணேசன் கருமந்துறை (சேலம்), தருமன், அரசநத்தம் (தருமபுரி), அன்பழகன், வெள்ளிமலை (விழுப்புரம்), கண்ணன், கொட்டாவூர் (திருவண்ணாமலை) உரையாற்றினர். சிறைக் கொடுமைகளை விவரித்ததுடன், வழக்கறிஞர் கிராந்தி சைதன்யா ஆற்றிய பணிகளையும் விவரித்தனர். நன்றி தெரிவித்தனர். ஆந்திர சிறைகளில் உள்ளவர்கள் விடுதலைக்காகப் பல போராட்டங்களை நடத்திய அகில இந்திய மக்கள் மேடை மத்திய பிரச்சாரக் குழு உறுப்பினர் தோழர் சந்திரமோகன், இகக (மாலெ) மாநிலக் குழு சார்பில் வெங்கடேசன், கோ.மோகனசுந்தரம், பேசினர்.
பாராட்டுவிழாவில் நிறைவுரையாற்றிய கிராந்தி சைதன்யா வழக்கு நடைபெற்ற இயக்கப் போக்கையும் அவரது பங்கேற்பையும் விவரித்தார்.
ஆந்திர அரசாங்கம் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசாங்கம் ரூ.5 லட்சம் மறுவாழ்வுத் தொகையை சிறையிலிருந்து மீண்டவர் குடும்பங்களுக்கு உடனே வழங்கிட வேண்டும் என்றும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

மத்திய அரசின் தொழிலாளர் விரோத கொள்கைகளுக்கு எதிராக
மய்ய தொழிற்சங்கங்களின் ஆர்ப்பாட்டம்
மய்ய தொழிற்சங்கங்களின் ஆர்ப்பாட்டம்
மார்ச் 10, மத்திய அரசின் தொழிலாளர் விரோத கொள்கைகளுக்கு எதிராகஏஅய்சிசிடியு, சிஅய்டியு, ஏஅய்டியுசி, ஏஅய்யுடியுசி, எச்எம்எஸ், அய்என்டியுசி, பிஎம்எஸ், எல்பிஎஃப் உள்ளிட்ட சங்கங்கள் அகில இந்திய எதிர்ப்புகள் கடைபிடிக்க கூட்டாக அழைப்பு விடுத்திருந்தன. அதையொட்டி அன்றைய தினம் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற அனைத்துத் தொழிற்சங்க ஆர்ப்பாட்டத்தில் ஏஅய்சிசிடியு மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் தோழர் எ.எஸ்.குமார் உரையாற்றினார். மாநில சிறப்புத் தலைவர் தோழர் ஜவகர், தோழர்கள் சேகர், முனுசாமி, மோகன், குப்பாபாய் உட்பட பலரும் கலந்துகொண்டனர். திருவள்ளூரில் ஏஅய்சிசிடியு மாவட்டப் பொதுச் செயலாளர் தோழர் திருநாவுக்கரசு தலைமையில் அனைத்து தொழிற்சங்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட துணைத் தலைவர் தோழர் அன்புராஜ் உரையாற்றினார். சேலத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் தோழர் வேல்முருகன், கரூரில் ஏஅய்சிசிடியு மாவட்ட அமைப்பாளர் தோழர் பால்ராஜ் உரையாற்றினார்கள்.
தூத்துக்குடியில் நடைபெற்ற அனைத்துச் சங்க ஆர்ப்பாட்டத்தில் ஏஅய்சிசிடியு சார்பில் தோழர் சிவராமன் உரையாற்றினார். தோழர்கள் ஆறுமுகம், வேலுராஜ் மற்றும் துறைமுக கண்டெய்னர் லாரி ஓட்டுனர் சங்கத்தினர் கலந்துகொண்டனர்.
திருநெல்வேலியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏஅய்சிசிடியு மாநிலப் பொதுச் செயலாளர் தோழர் சங்கரபாண்டியன், மாநில துணைத் தலைவர் ரமேஷ், மாவட்டச் செயலாளர் கணேசன், தோழர் சுந்தர்ராஜ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
தருமபுரியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏஅய்சிசிடியு மாநில நிர்வாகி தோழர் கோவிந்தராஜ் மற்றும் தமிழ்நாடு மின்சார வாரிய டாக்டர் அம்பேத்கர் பணியாளர் மற்றும் பொறியாளர் சங்கத்தின் தோழர் முருகன் உரையாற்றினர்.
நாமக்கல்லில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஏஅய்சிசிடியு சார்பில் தோழர் கே.ஆர்.குமாரசாமி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் தோழர் சுப்பிரமணி உரையாற்றினர். தோழர்கள் தண்டபாணி, மாரியப்பன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இரட்டை ஆயுள் தண்டனையில் சிறையில் உள்ள எட்டு பிரிக்கால் தொழிலாளர்களுக்கு விடுதலை வேண்டும் என்று இந்த ஆர்ப்பாட்டங்களில் வலியுறுத்தப்பட்டது.

இடதுசாரி பெண்கள் அமைப்புகளின் சர்வதேச பெண்கள் தினக் கருத்தரங்கம்
சென்னையில் மார்ச் 8 அன்று இடதுசாரி பெண்கள் அமைப்புகளான அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம், அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய தேசிய மாதர் சம்மேளம், அகில இந்திய பெண்கள் கலாச்சார இயக்கம் ஆகியவை இணைந்து கருத்தரங்கு நடத்தின. தோழர் பேச்சியம்மாள் தலைமையில் நடந்த கருத்தரங்கில் அஇமுபெக மாநில அமைப்பாளர் தோழர் தேன்மொழி, அஇஜமாச அகில இந்திய துணைத் தலைவர் தோழர் உ.வாசுகி, இதேமாசவின் தோழர் பத்மாவதி, அஇபெகஇயின் மாவட்டச் செயலாளர் தோழர் சுமதி ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
பெண்கள் பற்றிய பிற்போக்குக் கருத்துகளுக்கு எதிரான நடவடிக்கை, குழந்தைகள், பெண்கள் மீதான பாலியல் கொடுமைகளுக்கு எதிரான சட்டம், பொதுத்துறை, அரசுத்துறை போல் தகவல் தொழில்நுட்பம் உட்பட இதர துறைகளில் பணியாற்றும் பெண்களுக்கு மகப்பேறு விடுப்பு, பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான 2013ம் ஆண்டு சட்டத்தை கறாராக அமல்படுத்துவது, நலத்திட்ட உதவிகள் பெற ஆதார் அட்டையை கட்டாயமாக்கக் கூடாது, பொது விநியோக முறையைப் பலப்படுத்த வேண்டும், சாதியாதிக்கக் கொலைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும், பொதுத்துறை நிறுவனங்கள் பாதுகாக்கப்பட வேண்டும், உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், சட்டமன்றம், நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு சட்டமாக்கப்பட வேண்டும் ஆகியவை கருத்தரங்கின் முக்கியக் கோரிக்கைகள்.

குமாரபாளையம் வடக்கு உள்ளூர் கமிட்டி மாநாடு
மார்ச் 5 அன்று தோழர்கள் ஜெயா, தமிழ்ச்செல்வி, ஈஸ்வரன் ஆகியோர் தலைமையில் நாமக்கல் மாவட்டம், இகக (மாலெ) குமாரபாளையம் வடக்கு உள்ளூர் கமிட்டி மாநாடு நடைபெற்றது. கமிட்டிச் செயலாளர் தண்டபாணி வேலை அறிக்கை முன்வைத்தார். சட்டமன்றத் தேர்தலுக்கான தயாரிப்பு, உறுப்பினர் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது, தீப்பொறிக்கு 50 சந்தாக்கள் சேர்ப்பது பற்றி விவாதிக்கப்பட்டது. இகக (மாலெ) பள்ளிப்பாளையம் நகரச் செயலாளர் தோழர் மாரியப்பன் பார்வையாளராகக் கலந்து கொண்டார். மாநாடு தோழர்கள் தண்டபாணி, ஈஸ்வரன், எஸ்.நாகேஸ்வரன், ஜி.நாகேஸ்வரன், கவுதம், முருகன், சுப்பிரமணி ஆகியோர் கொண்ட 7 பேர் கமிட்டியைத் தேர்வு செய்தது. தோழர் தண்டபாணி மீண்டும் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார்.