COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Monday, November 16, 2015

மாலெ தீப்பொறி 2015 நவம்பர் 16 - 30 தொகுதி 14 இதழ் 8

டிசம்பர் 1 - 6 இடதுசாரி கட்சிகளின் கூட்டியக்கம்

இககமாலெ, இககமா, இகக, ஃபார்வர்டு பிளாக், ஆர்எஸ்பி, எஸ்யுசிஅய் கட்சிகளின் மத்திய தலைவர்களின் கூட்டம் நவம்பர் 10 அன்று டில்லியில் இகக அலுவலகத்தில் நடந்தது.
பீகார் தேர்தல்கள் பற்றி விவாதித்த கூட்டம் பீகார் மக்களுக்கு நன்றி தெரிவித்தது. இககமாலெ/இடதுசாரிகளின் மேலான தேர்தல் செயல்பாட்டைப் பாராட்டியது.
மோடி அரசாங்கத்தின் ஆதரவுடன் நடக்கும் சங் பரிவாரின் மதவெறி வெறுப்புப் பிரச்சாரத்துக்கு எதிராக டிசம்பர் 1 முதல் 6 வரை கூட்டியக்கம் நடத்த கூட்டம் அறைகூவல் விடுத்தது.
இந்தியாவின் எழுத்தாளர்கள், திரைப்படங்கள் எடுப்பவர்கள், விஞ்ஞானிகள், வரலாற்றியலாளர்கள், பிற அறிவாளிப் பிரிவினர் ஆகியோர், சங் - பாஜகவின் வெறுப்புப் பிரச்சாரத்துக்கு எதிராக துணிச்சலுடன் எழுந்து நின்றதற்கு இடதுசாரி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்; எதிர்ப்பு தெரிவிக்கிற அறிவாளிப் பிரிவினர் மற்றும் அதிருப்தி குரல்களை சங் - பாஜகவினர் இழிவுபடுத்துவதற்கு கண்டனம் தெரிவித்தனர்.
டிசம்பர் 1 - 6 கூட்டியக்கத்தை வெற்றி பெறச் செய்ய அனைத்து மாநில அமைப்புகளும் பொருத்தமான முன்முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) விடுதலை

யுஜிசி ஆக்கிரமிப்பு போராட்டம் தொடர்கிறது... வளர்கிறது...

தேசிய நுழைவுத் தேர்வு மூலம் அல்லாது ஆராய்ச்சி கல்வி பயில்பவர்களுக்கு உதவித் தொகையை நிறுத்துவதற்கான பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) முயற்சிகளுக்கு எதிராக பல்வேறு பல்கலைக் கழகங்களைச் சார்ந்த மாணவர்கள், பல்கலைக் கழக மானியக் குழு வளாகத்தை ஆக்கிரமித்து வரலாற்றுச் சிறப்புமிக்க யுஜிசி (பல்கலைக்கழக மானியக் குழு) ஆக்கிரமிப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள். டில்லியின் கடுங்குளிரால் கூட அந்தப் போராட்டத் தீயை மட்டுப்படுத்த முடியவில்லை. மாணவர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்திய பின்பும் காவல்துறை தடியடி நடத்திய பின்பும் சில மாணவர்களுக்கு காயம் ஏற்பட்ட பின்பும் பல மாணவர்கள் கைது செய்யப்பட்ட பின்பும் போராட்டம் தொடர்கிறது.
நவம்பர் 3 அன்று ஸ்வராஜ் அபியன் செயல்வீரர்களுடன் யுஜிசியின் மேனாள் உறுப்பினர் பேராசிரியர் யோகேந்திரயாதவ், பேராசிரியர் சமன்லால் ஆகியோர் யுஜிசி ஆக்கிரமிப்பு இயக்கத்தோடு இணைந்து கொண்டு அன்று இரவை மாணவர்களுடன் கழித்தனர். திலிப் சி மண்டல் போன்ற பத்திரிகையாளர்கள், பேராசிரியர் மேரி ஜான் போன்ற கல்வியாளர்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த தடுப்புகளுக்கு அருகிலேயே திறந்த வெளியில் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தினர். நவம்பர் 4 அன்று ஜாமியா மில்லியா இஸ்லாமியா மாணவர்கள் யுஜிசி ஆக்கிரமிப்பு இயக்கத்துக்கு ஒருமைப்பாடு தெரிவித்து பேரணி நடத்தினார்கள்.
நவம்பர் 5 அன்று, தேசிய தலைநகர் பிராந்தியத்தின் பல்வேறு பல்கலைக் கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள், ஆசிரியர்களும் செயல்வீரர்களும் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தை நோக்கி யுஜிசியை ஆக்கிரமிப்போம் பேரணி  நடத்தினர்.அமைச்சகம் முன்பு குழுமியிருந்த மாணவர்கள், ஆசிரியர்கள், செயல்வீரர்களின் எண்ணிக்கை பலம் அமைச்சரை வெளியில் வந்து போராட்டக்காரர்களை சந்தித்துப் பேச நிர்ப்பந்தித்தது.
அடுத்த கல்வியாண்டு முதல் தேசிய நுழைவுத் தேர்வு மூலம் வராத ஆராய்ச்சி படிப்பு மாணவர்களுக்கான மானியம் வழங்குவது பற்றி பரிசீலிப்பதற்காக போடப்பட்ட பரிசீலனைக் குழுவை முற்றிலுமாக கலைத்துவிட வேண்டும் என மாணவர்கள் கோரினர். மாணவர்களிடையே எவ்வித ஒப்புதலும் அளிக்க மறுத்த அமைச்சர், யுஜிசியை ஆக்கிரமிப்போம் போராட்டத்தின் முதல் சுற்றின்போது மனிதவளத் துறை அமைச்சகம் வெளியிட்ட பத்திரிகை செய்திதான் தனது நிலைப்பாடு என்றார். மாணவர்கள் பின்வாங்க மறுத்து, இந்திய குடிமக்கள் அனைவருக்கும் உயர்கல்வி  உரிமையாக்கப்படும் வரை போராட்டத்தை தொடர உறுதி பூண்டுள்ளனர்.

இந்துத்துவா மதவெறி, சாதி வெறிக்கெதிராக நவம்பர் 2 மாநிலம் தழுவிய எதிர்ப்பு நாள் ஆர்ப்பாட்டங்கள்

இஸ்லாமியர்கள், தலித்துகள், பெண்கள் உயிருக்கும் உரிமைகளுக்கும் கவுரவத்திற்கும் பாதுகாப்பு வழங்கு! அவர்கள் மீது நடக்கும் தாக்குதல்களை கொலைகளை தடுத்து நிறுத்து!
மதச்சார்பின்மை, சமூக நீதி, நல்லிணக்கத்தை தகர்க்கும் மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட இந்துத்துவா மதவெறி, சாதிவெறி குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கு!
அரசியல் சட்டம் வழங்கியுள்ள பேச்சுரிமை எழுத்துரிமை மாறுபடும் உரிமை உணவு உரிமை, காதலிக்கும் உரிமை விரும்பியவரை மணந்து கொள்ளும் உரிமைகளை உத்தரவாதம் செய்!
இந்த கோரிக்கைகள் மீது தமிழ்நாடு முழுவதும் இகக (மாலெ) ஆர்ப்பாட்டங்கள் நடத்தியது.
அம்பத்தூர் தொழிற்பேட்டையில் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் தோழர் முனுசாமி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் குமாரசாமி, குமுக விடுதலை தொழிலாளர் இயக்கத்தின் எம்ஆர்எஃப் கம்பெனியைச் சேர்ந்த தோழர் மா.சேகர், ஜனநாயக வழக்கறிஞர் சங்கத்தின் தோழர் சங்கர், கட்சியின் சென்னை மாவட்டக் குழு உறுப்பினர் தோழர் பழனிவேல் ஆகியோர் உரையாற்றினர்.
விழுப்புரத்தில் கட்சியின் மாவட்டச் செயலாளர் தோழர் வெங்கடேசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் பாலசுந்தரம், புதுச்சேரி மாநிலச் செயலாளர் தோழர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். தோழர்கள் கலியமூர்த்தி, கணேசன், செண்பகவள்ளி, கண்ணம்மாள், பாபுகஜேந்திரன், ஏழுமலை உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் மாவட்டக் கமிட்டி உறுப்பினர் மலைராஜா தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் தோழர் எஸ்.ஜானகிராமன், மாநிலக் கமிட்டி உறுப்பினர் தோழர் .எஸ்.குமார், ஆகியோர் உரையாற்றினர். உள்ளூர் கமிட்டி செயலாளர்கள் தோழர்கள் ராமன், அன்புராஜ், மணி, சாந்தி, சீனுவாசன், வெங்கடேசன், சுரேஷ் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு மாநகரக் குழு உறுப்பினர் தோழர் வேல்முருகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலக் குழு உறுப்பினர் தோழர் என்.கே.நடராஜன் கண்டன உரையாற்றினார். மாநிலக் குழு உறுப்பினர்கள் தோழர்கள் பாலசுப்பிரமணியன், தாமோதரன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் தோழர்கள் சாமிநாதன் மற்றும் சாந்தி கியர்ஸ் பாலமுருகன் கலந்து கொண்டனர். தோழர் ஜெயப்பிரகாஷ்நாராயணன் நன்றி கூறினார்.
திருபெரும்புதூரில் மாவட்டக் குழு உறுப்பினர் தோழர் ராஜகுரு தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் திருபெரும்புதூர் பகுதி செயலாளர் தோழர் ராஜேஷ், ஏஅய்சிசிடியு சென்னை மாவட்ட பொதுச் செயலாளர் தோழர் ராஜேஷ், கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் தோழர் இரணியப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டையில்  மாவட்டக் குழு உறுப்பினர் தோழர் ஜோதிவேல் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் மாவட்டச் செயலாளர் தோழர் பழ.ஆசைத்தம்பி, மாநிலக் குழு உறுப்பினர் தோழர் தேசிகன், கறம்பக்குடி ஒன்றிய  செயலாளர் தோழர் விஜயன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் தோழர்கள் வெ.தங்கராஜ், கோவிந்தராஜ் ஆகியோர் உரையாற்றினர். தோழர்கள் கோவிந்தசாமி, சரோஜா, ரேவதி, ராஜா, .கோவிந்தராஜ் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
திருநெல்வேலி டவுனில் கட்சியின் மாவட்டக் கமிட்டி உறுப்பினர் தோழர் சுந்தரராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் தோழர் சங்கரபாண்டியன், மாநிலக் குழு உறுப்பினர் தோழர் ரமேஷ், மாவட்ட குழு உறுப்பினர்கள் தோழர்கள் கணேசன், கருப்பசாமி ஆகியோர் உரையாற்றினர்.
சேலத்தில் தோழர் வேல்முருகன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் தோழர் மோகனசுந்தரம், மாநிலக் குழு உறுப்பினர் தோழர் சந்திரமோகன், அகில இந்திய மக்கள் மேடை பிரச்சாரக் குழு உறுப்பினர் தோழர் அறிவழகன், தோழர் பிச்சமுத்து, தோழர் அய்யந்துரை உரையாற்றினர்.
மயிலாடுதுறையில் புரட்சிகர இளைஞர் கழக தோழர் வீரச்செல்வன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாவட்டச் செயலாளர் தோழர் இளங்கோவன், அகில இந்திய விவசாய மற்றும் கிராமப்புற தொழிலாளர் சங்க மாநில செயற்குழு  உறுப்பினர் தோழர் கண்ணையன் ஆகியோர் உரையாற்றினர். புரட்சிகர இளைஞர் கழக தோழர்கள் செவ்வழகன், செபா தென்றல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கரூரில் தோழர் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் அரவக்குறிச்சி செயலாளர் தோழர் அப்துல்ரகுமான், மாவட்டப் பொறுப்பாளர் தோழர் ராமச்சந்திரன், ஏஅய்சிசிடியு மாநிலக் குழு உறுப்பினர் தோழர் பால்ராஜ் உரையாற்றினர். நவம்பர் 2 அன்று மதுரையிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
35.34 சத போனஸ் கோரி கோவை பிரிக்கால் தொழிலாளர்கள் பட்டினிப் போராட்டம்
2010 முதல் 20% போனசும் 15.34% லாபத்தில் பங்கு தொகையும் கொடுத்து வந்த நிர்வாகம் இந்த வருடம் அங்கீகரிக்கப்பட்ட பிரிக்கால் தொழிலாளர் ஒற்றுமை சங்கத்துடன் எவ்வித பேச்சு வார்த்தையும் நடத்தாமல் தன்னிச்சையாக 8.33% போனஸ் அறிவித்து தொழிலாளர்கள் வங்கிக் கணக்கிலும் செலுத்திவிட்டது. இந்தத் தொழிலாளர் விரோத நடவடிக்கைக்கு எதிராக பெரியநாயக்கன்பாளையத்தில் 04.11.2015 அன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. ஆலைக்குள் பணியிலிருந்த தொழிலாளர்களும் உண்ணாவிரதம் இருந்தனர்.
மாலை வேலை முடிந்து தொழிலாளர்கள் உண்ணாவிரதப் பந்தலில் கூடியபோது ஏஅய்சிசிடியு அகில இந்திய தலைவர் தோழர் குமாரசாமி கண்டன உரையாற்றினார். நிர்வாகம் அறிவித்த போனஸ் தொகையை ஏற்க மறுத்து தொழிலாளர்கள் தனித்தனியே நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பியிருக்கின்றனர். சங்கத்தில் இல்லாத ஒரு பிரிவு தொழிலாளர்களும் இது போல் கடிதம் அனுப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.
மாநகராட்சிப் பள்ளிகளை காப்போம் இயக்கம்
சேலம் சஞ்சீவராயன் பேட்டையிலுள்ள பழமை வாய்ந்த நகராட்சி நடுநிலைப் பள்ளி வளாகத்தில் மாநகராட்சி கட்டிடங்களும், கடைகளும் கட்ட மாநகராட்சி நிர்வாகம் பூமி பூஜை நடத்தியதையடுத்து நெசவாளர் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களும், அமைப்புசாரா தொழிலாளர் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களும் படித்து வரும் பள்ளியைக் காக்கவும், உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தவும் வலியுறுத்தி ஏஅய்சிசிடியுவின் தோழர் வேல்முருகன் தலைமையில் பகுதி மக்களிடம் கையெழுத்து இயக்கம் நடைபெற்று வருகிறது. பத்திரிகை செய்தியின் அடிப்படையில் மூத்த வழக்கறிஞர் ரத்தினம் அவர்கள் தொடுத்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருக்கிறது.
யுனிலீவர் மீது நடவடிக்கை கோரி ஆர்ப்பாட்டம்

கொடைக்கானலில் செயல்பட்டு வந்த யுனிலீவர் கம்பெனி பாதரச கழிவுகளை மலைப் பகுதியில் கொட்டி சுற்றுச் சூழலுக்கு சேதம் விளைவித்ததால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்க்கு, அவர்கள் குடும்பத்தினருக்கு நிவாரணம் கேட்டு, இறந்து போன தொழிலாளிக்கு யுனிலீவரிலிருந்து ரூ.1 கோடி நிவாரணம் பெற்றுத் தர மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி, யுனிலீவர் பொருட்களை விற்பனை செய்ய தடை விதிக்க வலியுறுத்தி, 04.11.2015 அன்று திண்டுக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தோழர்கள் ஜெயவீரன், மணிவேல், மதிவாணன், கட்சியின் மாவட்ட அமைப்பாளர் எரியோடு தோழர் முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இகக மாலெ மாநிலச் செயலாளர் தோழர் பாலசுந்தரம், மாநிலக் குழு உறுப்பினர் தோழர் என்.கே.நடராஜன் உரையாற்றினர்

Search