ஜனநாயகம் பிழைக்க தழைக்க
நீதித்துறை சுதந்திரமும் பொறுப்பேற்றலும் மிகவும் அவசியம்
எஸ்.குமாரசாமி
ஆட்சித் துறை, சட்டமியற்றும் துறை, நீதித்துறை என்ற மூன்றையும் கொண்டதே நாடாளுமன்ற ஜனநாயக முறையாகும்.
இவற்றில் சட்டமியற்றும் நாடாளுமன்றமும், சட்டமன்றங்களும், தமது பெரும்பான்மையில் இருந்து முறையே, மத்திய மாநில ஆட்சிகளை நடத்துபவர்களை தேர்ந்தெடுக்கின்றன. ஆனால், இந்தியாவில் நீதிபதிகளை நீதிபதிகளே, கொலிஜியம் என்ற முறை மூலம் தேர்வு செய்கிறார்கள். இந்த மூன்று துறைகளும், அரசியலமைப்புச் சட்ட அடிப்படை கட்டுமானத்துக்கு (பேசிக் ஸ்ட்ரக்ச்சர்) கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்பது அனைவரும் ஏற்றுக்கொண்டாக வேண்டிய விசயமாகும்.
இந்தியா தன்னை ஒரு மக்களாட்சி, குடியரசு என்றெல்லாம் அழைத்துக் கொள்கிறது. அரசியலமைப்புச் சட்டத்தின் பகுதி 3 குடிமக்களின் அடிப்படை உரிமைகள் பற்றி பேசுகிறது. ஆட்சித் துறையும் சட்டமியற்றும் துறையும் அரசியலமைப்புச் சட்டப்படி நடக்கிறார்களா என்று பார்த்து, மீறல்களை களைந்து, ரத்து செய்து நீதியை நியாயத்தை நிலைநாட்ட வேண்டியது நீதிமன்றங்களின் கடமையாகும்.
அய்க்கிய ராஜ்ஜிய உச்சநீதிமன்றமும் இந்திய உச்சநீதிமன்றமும்
அய்க்கிய ராஜ்ஜியம் (யுகே) அல்லது பிரிட்டன் என்பது, இங்கிலாந்து - வேல்ஸ், ஸ்காட்லாந்து, அயர்லாந்து ஆகிய மூன்றையும் உள்ளடக்கிய பகுதியாகும். அய்ரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலக (பிரெக்சிட்) பிரிட்டன் முடிவு செய்தது. இந்த முடிவு பிரிட்டனின் சமூக, பொருளாதார, அரசியல் வாழ்வின் மீது பெரும் தாக்கம் செலுத்தும் முடிவாகும். இந்த முடிவை அமல்படுத்தும் பிரச்சனையில், பிரிட்டிஷ் பிரதமர் தெரசா மே பதவி விலக நேர்ந்தது. பிரிட்டனின் புதிய பிரதமராக போரிஸ் ஜான்சன் தேர்வு செய்யப்பட்டார். பிரெக்சிட் தொடர்பான நாடாளுமன்ற விவாதங்களை தவிர்க்க, போரிஸ் ஜான்சன், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் பல வாரங்களுக்கு நாடாளுமன்றத்தை ஒத்தி வைக்க (Prorogue) ஆகஸ்ட்டில் மகாராணிக்கு பரிந்துரை செய்தார். இந்தப் பரிந்துரைக்கு எதிராக, இங்கிலாந்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டபோது, அரசின் அரசியல் முடிவை நீதிமன்றம் விசாரிக்க முடியாது என்று, இங்கிலாந்து உயர்நீதிமன்றம் சொன்னது. பிரதமரின் முடிவு தவறு என்று, ஸ்காட்லாந்து உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இரண்டு நீதிமன்றங்களும் ஓரிரு தினங்களில் வழக்கை விசாரித்து தீர்ப்புகள் வழங்கின. இரு தரப்பினரும் இரண்டு தீர்ப்புகளுக்கும் எதிராக, பிரிட்டனின் உச்சநீதிமன்றத்தை அணுகினார்கள். இந்திய வம்சாவழியைச் சேர்ந்த ஜினா மில்லர், உயர்நீதிமன்றத்திலும் உச்சநீதிமன்றத்திலும் பிரதமர் முடிவை கேள்விக்குள்ளாக்கினார்.
தேசிய முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு என்பதால், நீதிமன்றம் விடுமுறையில் இருந்தபோதும், 11 நீதிபதிகள் உடனடியாக லண்டனில் கூடினர். லேடி ஹேல் தலைவராகவும் லார்ட் ரீட் துணைத் தலைவராகவும் இருந்த நீதிமன்றம், உடனடியாக செப்டம்பர் 17, 18, 19 தேதிகளில் வழக்கை விசாரித்தது. செப்டம்பர் 24 அன்று 71 பத்திகள் கொண்ட தீர்ப்பை வெளியிட்டது. பிரெக்சிட் தொடர்பான அரசியல் முடிவு பற்றி தான் தீர்ப்பு வழங்கவில்லை என்று, உச்சநீதிமன்றம் தெரிவித்தது. நாடாளுமன்றம்,விவாதங்கள் மூலம் அரசியல் கடமையை நிறைவேற்ற விடாமலும் அரசை கேள்வி கேட்கிற மேற்பார்வையிடுகிற அதிகாரத்தை அமல்படுத்த விடாமலும் செய்ததால், போரிஸ் ஜான்சன் முன்வைத்த நாடாளுமன்ற ஒத்திவைப்பு முடிவு சட்டவிரோதமானது, துவக்கம் முதலே செல்லாது, எந்த விளைவும் கொண்டதல்ல என்று, அய்க்கிய ராஜ்ஜிய உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஆகஸ்ட் 5 அன்று காஷ்மீர் துண்டாடப்பட்டபோது, அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமாக 370, 35 எ பிரிவுகள் நீக்கப்பட்டதாக, சிறுவர்கள் கடத்தப்பட்டதாக, இளைஞர்கள் பெரும் எண்ணிக்கையில் கைது செய்யப்பட்டதாக, முன்னாள் முதலமைச்சர்கள் சிறை வைக்கப்பட்டதாக, அரசியல் நடவடிக்கைகள் முடக்கப்பட்டதாக, ஊடகங்கள், இணைய சேவை நிறுத்தி வைக்கப்பட்டதாக, வழக்குகள் தாக்கல் செய்யப்பட்ட பிறகும், இந்திய உச்சநீதிமன்றம், அந்த வழக்குகளை உடனே விசாரிக்க வேண்டும் என்று முடிவு செய்யவில்லை.
மார்க்சிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீதாராம் எச்சூரி, நோய்வாய்ப்பட்டிருந்த அவரது கட்சித் தோழர் யூசுப் தாரிகாமியை சந்திக்க அனுமதித்த உச்சநீதிமன்றம், அரசியல் பேசக் கூடாது என்று கறாராக அவருக்கு அறிவுறுத்தியது. முன்னாள் முதலமைச்சர் மெஹ்பூபாவின் மகள் தனது தாயைப் பார்ப்பது மட்டுமின்றி ஸ்ரீநகரில் நான் சுதந்திரமாக நடக்க வேண்டும் என்று கோரியபோது, தாயை சந்திக்க அனுமதி தந்து விட்டு அங்கு கடும் குளிர், வெளியே சென்று ஏன் உடலை கெடுத்துக்கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆலோசனை சொன்னார். அடிப்படை உரிமைகள், உச்சநீதிமன்ற குளிரில் உறைந்து காஷ்மீரில் விரைத்துப் போய்விட்டன.
திரேதா யுகத்து இதிகாச ராமன் பிறந்த இடம், பாப்ரி மசூதி சில நூறாண்டுகளாக இருந்த அதே இடம்தான் என்ற வழக்கை, உச்சநீதிமன்றம் அன்றாட அடிப்படையில் அவசர அவசரமாக விசாரிக்கிறது. வேறுவேறு வழக்குகளை விசாரிக்கிற உச்சநீதிமன்றம், காஷ்மீர் தொடர்பான அரசியலமைப்புச் சட்ட மீறல் வழக்குகளை இதுவரை விசாரிக்காத உச்சநீதிமன்றம், இப்போது அக்டோபர் 1 முதல் காஷ்மீர் தொடர்பான வழக்குகளை 5 நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்புச் சட்ட அமர்வம் ஒன்று விசாரிக்கும் என்று சொல்லியுள்ளது.
அடிப்படை உரிமைகள், குறிப்பாக, உயிர் வாழ்வதற்கான மற்றும் சுதந்திரத்துக்கான உரிமை இந்தியாவில்எப்போதுமே ஆபத்துக்குள்ளாகியுள்ளன. அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 22 தடுப்புக் காவலுக்கு வழிவகுக்கிறது. அதே பிரிவு, ஆள்தூக்கி சட்டங்கள் இயற்றப்படும் வாய்ப்பையும் கவனத்தில் கொள்கிறது.
மிசா, தடா, பொடா சட்டங்களை, அவற்றின் கீழ் கைது செய்யப்படுவதை, உச்சநீதிமன்றம் எப்போதும் நியாயப்படுத்தியுள்ளது. ஆட்சிகள் மாறும்போது, இந்தச் சட்டங்களும் மாறியுள்ளன. புதிய நாடாளுமன்றங்கள், புதிய அரசுகள், பழைய ஆள்தூக்கி சட்டங்களை ஒரு புறம் ரத்து செய்கின்றன; இந்தச் சட்டங்கள் தேவையற்றவை, நியாயமற்றவை என்பதையே இது காட்டுகிறது. ஆனபோதும், தேச நலன், தேசப் பாதுகாப்பு என்ற காரணங்களால், நீதித்துறை இந்தச் சட்டங்களை நியாயப்படுத்துவதுதான் நடந்துள்ளது. பழையச் சட்டம் போய் புதிய கருப்புச் சட்டம் வருகிறது. மீண்டும் தேச நலன், தேசப் பாதுகாப்பு என்று நியாயப்படுத்தப்படுகிறது. ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரங்கள் சட்டம் என்ற கொடிய சட்டம், கொலை செய்ய, கொள்ளையடிக்க, படையினருக்கு உரிமம் தருவதாகச் சொல்லி, அந்த சட்டத்தை ரத்து செய்ய உச்சநீதிமன்ற நீதிபதி ஜீவன் ரெட்டி தலைமையிலான ஆணையம் பரிந்துரைத்தது. நீதிபதி மதன் பி லோகுர், படையினர் மேல் மோதல் படுகொலை வழக்கு தொடுக்க, பல நிர்ப்பந்தங்கள் தாண்டி, தீர்ப்பளித்தார். ஆனால் ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரங்கள் சட்டம் இன்னும் கோலோச்சுகிறது. ஏடிஎம் ஜபல்பூர் வழக்கில், உச்சநீதிமன்றம், அவசரநிலை பிரகடன காலத்தில் உயிர் வாழும் உரிமையையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கலாம் என்றது. பின்னர் அந்தத் தீர்ப்பும் ரத்தானது. உள்நாட்டு அவசரநிலை அரசியலமைப்புச் சட்டப் பிரிவும் ரத்தானது. பிரிட்டனின் சர் எட்வர்ட் கோக், ஒரே நேரத்தில் நீதிபதிகளின் இருக்கைகளில், படையினரும் நீதிபதிகளும் அமர்ந்தால், போர்ப் பறை ஒலி நீதியின் குரலை மூழ்கடித்துவிடும் என்றார். இந்திய உச்சநீதிமன்றம் இந்த எச்சரிக்கையை கவனத்தில் கொள்ள வேண்டும்.
நீதித்துறை சுதந்திரம், நீதித்துறை பொறுப்பேற்றல் ஆகியவை பற்றி பேசுவது, நீதிபரிபாலன முறையில் தலையிடுவதாகுமா?
நீதிபதிகள் செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகோய், மதன் பி.லோகுர், குரியன் ஜோசப் ஆகிய நான்கு பேரும் அச்சு, மின்னணு ஊடகங்களைக் கூட்டி, பகிரங்கமாக, முக்கிய வழக்குகளை, அரசு விரும்பும்படி, அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, அப்போது முதுநிலையில் 10ஆம் இடத்தில் இருந்த அருண் மிஸ்ராவுக்கு ஒதுக்குவதாக புகார் எழுப்பினார்கள். நாடு நீதித்துறை சுதந்திரம் பற்றி கவலைப்பட்டதால் நால்வர் நேர்காணலை வரவேற்றது. அந்த நேர்காணல், நீதிபரிபாலன முறையில் தலையீடு என்று நாடு கருதவில்லை.
நீதித்துறை தன் முடிவுகளுக்கு பொறுப்பேற்காவிட்டால், நீதித்துறை அரசிடம் அச்சப்பட்டால், சலுகைக் காட்டினால் (Fear or favor), நீதித்துறை அரசியலமைப்புச் சட்டத்தை மீறினால், நீதித்துறை சுதந்திரத்துக்கு ஆபத்து என உச்சநீதிமன்றம் திரும்பத் திரும்பச் சொல்லியுள்ளது.
நீதித்துறை தனது செயல்களுக்கு பொறுப்பேற்கிறதா? உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் மீது, பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் என்ற குற்றச்சாட்டு சொல்லப்பட்டது. அப்போது, ஒருவர் தம் வழக்கில் தாமே நீதிபதியாக இருக்கக் கூடாது என்ற இயற்கை நீதிக் கோட்பாட்டை தலைமை நீதிபதி மீறினார் என்ற புகார் எழுந்தது. அப்போது, உத்சவ் சிங் பெயின்ஸ் என்பவர் உச்சநீதிமன்றத்தை வழிக்குக் கொண்டுவர ஊழல் வலை பின்னப்படுகிறது என்ற பரப்பரப்பான குற்றச்சாட்டை எழுப்பினார். நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையில் அமைக்கப்பட்ட அமர்வம், குறிப்பாக நீதிபதி அருண் மிஸ்ரா, பணமும் அதிகாரமும் படைத்தவர்கள் உச்சநீதிமன்றத்தை வளைத்துப் போட முயற்சி செய்கிறார்கள், வழிக்கு வராதவர்களை கொலை செய்யவும் அவதூறு செய்யவும் தயங்க மாட்டார்கள் என்று வெகுண்டு சீறியதாக தி இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டது. (அப்போதே நீதிபதி அருண் மிஸ்ரா, தற்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் எல்லா முறைகேடுகளையும் ஊழல்களையும் களைவதையே நோக்கமாகக் கொண்டவர் என்று புகழ்ந்து தள்ளினார்). முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி எ.பி.பட்நாயக் கொண்ட ஒரு நபர் விசாரணைக் குழு வேறு அமைக்கப்பட்டது.அந்த நேரத்தில், தலைமை நீதிபதி மீது புகார் சுமத்திய உச்சநீதிமன்ற பெண் ஊழியர் மேல் மோசடி வழக்கு ஒன்று போடப்பட்டது. அந்த வழக்கை தொடுத்தவர், அதை திரும்பப் பெற்றுவிட்டார். தலைமை நீதிபதியும் நீதிபதி அருண் மிஸ்ராவும் சொன்ன, நீதித்துறைக்கு எதிராகப் பின்னப்படும் சதிவலை என்ன ஆனது என்று இதுவரை எதுவும் தெரியவில்லை. தேசநலன், தேசப் பாதுகாப்பு கருதி, சதிகளை கண்டறிந்து சதிகாரர்கள் மேல், ஒரு வேளை ரகசிய நடவடிக்கைகள் எடுத்திருப்பார்களா?
நியமனங்கள், மாற்றல்களில் வெளிப்படைத் தன்மை உள்ளதா?
சூரிய வெளிச்சத்துக்கு இணையான கிருமி நாசினி எதுவும் இல்லை என்று வெளிப்படைத் தன்மை போற்றப்படுகிறது. எட்டு வழிச்சாலை, ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு, ஹைட்ரோகார்பன் போன்ற வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்றம், மத்திய அரசு எதிர்ப்பு, கார்ப்பரேட் எதிர்ப்பு தீர்ப்புகள் வழங்கியது. தலைமை நீதிபதி தஹில்ரமானி மேகாலயாவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டது ஓர் எச்சரிக்கையா என்ற கேள்வி சென்னை உயர்நீதிமன்ற தாழ்வாரங்களில் உலவியது. இப்போது அவர் மீதான முறைகேடு புகார் பற்றி விசாரணையை நடத்துங்கள் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சொன்னதாகடைம்ஸ் ஆஃப் இந்தியா முதல் பக்கச் செய்தி வெளியிடுகிறது. இந்தியாவில் பல உயர்நீதிமன்ற உச்சநீதிமன்ற நீதிபதிகள் மீது ஊழல் புகார் உள்ளது என்று பரபரப்பாக பல உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகளே சொல்லியுள்ளனர். எல்லோர் மீதும் விசாரணை நடந்ததாக இது வரை தெரியவில்லை.
பாஜக ஆட்சிக்கு எதிராக தீர்ப்பு சொன்ன நீதிபதி கே.எம்.ஜோசப்பை அலைகழித்து, இழுத்தடித்து, பணிமூப்பைப் பறித்து தாமதமாய் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்தார்கள். மே 10 அன்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் குரேஷி, ராமசுப்ரமணியம், படேல், சவுகான் ஆகியோரை, வேறு வேறு மாநில நீதிமன்றங்களில் தலைமை நீதிபதிகளாக நியமிக்க உச்சநீதிமன்றம் பரிந்துரை செய்தது. நீதிபதி ராமசுப்ரமணியம் தலைமை நீதிபதியாகி, பிறகு உச்சநீதிமன்ற நீதிபதியாகவும் ஆகிவிட்டார். படேல், சவுகான் தலைமை நீதிபதிகளாகிவிட்டனர். சோரபுதீன் மோதல் படுகொலை வழக்கில், அமித் ஷா 10 நாட்கள் போலீஸ் காவலில் இருக்க வழி செய்த நீதிபதி குரேஷியை, கொலிஜியம் சொன்னபடி மத்தியபிரதேச உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக்க மத்திய அரசு மறுத்துவிட்டது. இப்போது உச்சநீதிமன்றமும் பின்வாங்கி, அவரை திரிபுராவின் தலைமை நீதிபதியாக நியமிக்கப் பார்க்கிறது. குரேஷி விசயத்தில் நியாயம் கேட்டுப் போடப்பட்ட வழக்கில், நீதித்துறை செயல்பாட்டில் தலையிடுவது சரியில்லை என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கடுமையுடன் சொல்லியுள்ளார்.
நீதித்துறை சுதந்திரமாக இருக்க, நீதிபதிகள் மட்டுமின்றி, வழக்கறிஞர்களும் அஞ்சாமல் வழக்கு நடத்தும் சூழல் வேண்டும். கிறித்துவ கல்வி நிறுவனங்கள் மதம் மாற்றுகிறார்கள், பெண்கள் சட்டத்தை தவறாகப் பயன்படுத்துகிறார்கள் என்றெல்லாம், வழக்கோடு சம்பந்தமில்லாத விசயங்களை நீதிபதி வைத்தியநாதன் ஒரு தீர்ப்பில் எழுதினார். மூத்த வழக்கறிஞர் வைகை உள்ளிட்ட பல வழக்கறிஞர்கள் இந்தத் தீர்ப்புக்கெதிராக தலைமை நீதிபதியிடம் புகார் செய்தார்கள். பின்னர் நீதிபதி வைத்தியநாதன் புகாருக்குள்ளான நான்கு பத்திகளை தீர்ப்பில் இருந்து நீக்கினார். ஆனால் புகார் கொடுத்தவர்கள் மீது குற்றவகைப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு, அவர்களுக்கு அதற்கான தக்க தண்டனை தரப்பட நடவடிக்கை வேண்டும் என்று, அட்வகேட் ஜெனரலிடம் விண்ணப்பிக்கப்பட்டு, அந்த வழக்கறிஞர்களிடம் இப்போது விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அதிகாரத்திடம் உண்மை பேச துணியக் கூடாது, குற்றம் குற்றமே என அஞ்சாமல் சொல்லக் கூடாது என நிர்ப்பந்திப்பவர்கள், அரசுகளாக, அவர்களது ஊதுகுழல்களாக, நீதிபதிகளாகவே இருந்தாலும், அவர்களாலேயே நீதித்துறை சுதந்திரத்துக்கு ஆபத்து என்பதை உணர்ந்தாக வேண்டும்.