ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் பேசியது சரியா?
எஸ்.குமாரசாமி
இந்தியாவின் இன்றைய ராணுவ தளபதி போகிற போக்கில் பேசுகிற பழக்கம் உடையவர். கடந்த சில தினங்களில் காஷ்மீர் பற்றி அவர் பேசிய விசயங்களும் எழுகிற கேள்விகளும்
பிபின் ராவத்: இந்தியாவிற்குள் காஷ்மீருக்குள் நுழைய தற்போது பாகிஸ்தானின் பாலகோட்டில் தீவிரவாதிகள் 500 பேர் காத்திருக்கிறார்கள்.
எழுகிற கேள்விகள்
1. மாபெரும் தேசபக்தரே, மாவீர தளபதியே, எதிரியை எச்சரித்து விட்டீர்களே, இந்திய ராணுவ தலைமை தளபதிக்கு தெரியும் என்பதால், பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இடம் மாறிவிட மாட்டார்களா?
2. இந்திய விமானப்படை தாக்குதலால் பாலகோட் ராணுவ முகாம் முழுமையாக தகர்க்கப்பட்டுவிட்டது என்று பிப்ரவரி மாதம் நீங்களும் மோடியும் சொன்னீர்களே. ஏழு மாதங்களுக்குள் மீண்டும் பெரும் எண்ணிக்கையில் பாகிஸ்தானின் பாலகோட்டில் பயங்கரவாதிகள் முகாம் அமைத்து விட்டார்களா? உங்களையும் மோடியையும் பார்த்து பயங்கரவாதிகள் பயந்து விடவில்லையா? ஏழு மாதங்களுக்குள் முகாமை மீண்டும் புதுப்பிக்கும்ஆற்றல் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளுக்கு உள்ளதா? பாலகோட் போன்ற தாக்குதல்கள் மூலம் பயங்கரவாதிகளை ஒழிக்க முடியாது என்று நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள்தானே?
பிபின் ராவத்: காஷ்மீரில் சகஜ நிலை திரும்பி விட்டது. ஆப்பிள்கள் பறிக்கப்படுகின்றன .அட்டைப் பெட்டிகளில் போடப்படுகின்றன. ட்ரக்குகளில் ஏற்றப்படுகின்றன. ட்ரக்குகள் இந்தியாவின் வேறுவேறு பகுதிகளுக்குச் செல்கின்றன.
செங்கல் சூளைகள் இயங்குகின்றன. பயங்கரவாதிகளுக்குப் பயந்து கடைகள் முன்பக்கம் மூடப்பட்டுள்ளன. பின்பக்கம் திறந்துள்ளன. மக்கள் பின்பக்கம் வழியாக அத்தியாவசியப் பொருட்களை வாங்கிச் செல்கிறார்கள்.
தகவல் தொடர்பு முழுமையாக உள்ளது. பயங்கரவாதிகளுக்கும் அவர்களை இயக்கும் பாகிஸ்தான் ராணுவத்தினருக்கும் இடையிலான தொடர்புதான் துண்டிக்கப்பட்டுள்ளது. நாங்கள் பயங்கரவாதிகளை அடக்கி வைத்துள்ளோம்.
எழுகிற கேள்விகள்
1. நீங்கள் இந்திய ராணுவ தளபதியா? அல்லது மோடி அரசின் பிரச்சார பீரங்கியா?
2. பயங்கரவாதிகளே இல்லை என்று நீங்கள் சொல்லும்போது கடைகள் ஏன் பயங்கரவாதிகளுக்குப் பயந்து முன்பக்கம் மூடப்பட வேண்டும்? பயங்கரவாதிகள் இல்லாமலே பயங்கரவாதிகளுக்கு பயப்படுவார்களா?
3. காஷ்மீரில் சகஜ நிலை திரும்பிவிட்டது என்றால், அதனை ஊரறிய, நாடறிய, உலகறிய காட்ட ஏன் தயங்குகிறீர்கள்?
4. சகஜ நிலை இருக்கும்போது, காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர்கள் ஏன் சிறையில் உள்ளனர்? ஊடகங்கள் ஏன் முடக்கப்பட்டுள்ளன? அரசியல் நடவடிக்கைகள் ஏன் தடைசெய்யப்பட்டுள்ளன?
5. காஷ்மீர் வீதிகளில் மக்கள் நடமாட்டம்இல்லை, ராணுவ நடமாட்டம்தான் உள்ளது, ராணுவத்தினர் சிறுவர்களை கடத்துகிறார்கள், விடுவிக்க பணம் வாங்குகிறார்கள், மக்களை அச்சுறுத்தி கட்டுக்குள் வைக்கிறார்கள்என்ற புகார்கள் பற்றிச்சொல்ல, மறுக்க, உங்களிடம் விசயங்கள் எவையும் இல்லையா?
பிபின் ராவத்: இஸ்லாம்மதத்துக்கு தவறான விளக்கம் சொல்கிறார்கள். அது பெரிய பிரிவு மக்களிடம்சென்று சேரும் செய்தியாகிறது. இசுலாத்தை சரியாக எடு த்துச் செல்லும் போதகர்கள் தேவை.
எழுகிற கேள்விகள்
காஷ்மீர் பிரச்சனை, பாகிஸ்தானில் இருந்து வரும் பயங்கரவாதத்தால் மட்டுமல்ல, இசுலாமிய பயங்கரவாதத்தாலும்தான் என்று சொல்கிறீர்களா? தீயவர் அல்லாத, கொடியவர் அல்லாத (இந்திய தரக்கட்டுப்பாட்டு சான்றுப்படி) நல்ல இசுலாமிய மதபோதகர்களை எப்படி தயார் செய்து காஷ்மீருக்கு அனுப்பப் போகிறீர்கள்?
கடைசி கேள்வி
நீங்கள் இந்திய ராணுவ தலைமை தளபதியா? அல்லது இந்துத்துவாவின் தளபதியா?
உங்களுக்கு முன், ஒரு ராணுவ தலைமை தளபதி வி.கே.சிங், மத்திய அமைச்சராகிவிட்டார்.
மோடிக்கு, சங் பரிவாருக்கு பதில் சொல்லிவிட்டீர்கள்;
ஓய்வு பெற்ற பிறகு உங்களுக்கு நல்ல காலம் காத்திருக்கிறது.