தமிழக அரசின் புதிய தொழில் கொள்கைகளில்
தொழிலாளர் நலன்களுக்கு இடமில்லை
புவனா
கோட், சூட் போட்ட விவசாயி பழனிச்சாமி வெளிநாட்டுக்குச் சென்று தொழில், முதலீடு, வேலைவாய்ப்பு பற்றியெல்லாம் பார்த்து வந்தார்.
போய் வந்த பிறகு லாஸ்ஏஞ்சல்ஸ் என்ற நகரின் பெயரைச் சொல்ல படாத பாடு பட்டார். (அது நமக்கும் பெரிய பிரச்சனையில்லை). வெளிநாடு போவதற்கு முன்பு விவசாயி பழனிச்சாமி அரசாங்கம் வான்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில் கொள்கை 2019அய் அறிவித்தது. தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் வெளியிட்டுள்ள தமிழ்நாடு வான்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில் கொள்கை 2019 தனியார் முதலீட்டை ஈர்ப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அந்தக் கொள்கையில் சொல்லப்பட்டுள்ள அம்சங்கள் தனியார் முதலீட்டை ஈர்ப்பதில் கவனம் செலுத்துவதை விட தனியாருக்கு மக்கள் செல்வங்களை எப்படி வாரித் தருவது என்பதில்தான் கவனம் செலுத்துகிறது.
இந்தத் தொழில் அய்ந்து ஆண்டுகளில் 5 பில்லியன் டாலர் (ரூ.36,000 கோடி) பத்து ஆண்டுகளில் 10 பில்லியன் டாலர்(ரூ.72,000 கோடி) முதலீட்டை ஈர்க்கும். நல்லது.ஈர்க்கட்டும்.அந்த முதலீடு யார் அப்பன் வீட்டு சொத்தாகவும் இருக்கப் போவதில்லை.ஒப்புக்கு ஏதோ பணத்தை சொந்த முதலீடு என்று காட்டிவிட்டு வங்கிகளில் இருந்து கடன் வாங்குவார்கள். வங்கிகளில் இருக்கும் மக்கள் பணம் தனியார் கைகளுக்குச் செல்வதற்குத்தான் முதலீடு என்று ஆட்சியாளர்கள் பெயர் சூட்டியிருக்கிறார்கள். (வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டபோது, அவற்றை நாட்டின் கோயில்கள் என்று சிலர் கொண்டாடியபோது, மக்கள் பணத்தை ஒன்று சேர்த்து சிந்தாமல் சிதறாமல் முதலாளிகளுக்குத் தரும் ஏற்பாடு அது என்று கம்யூனிஸ்டுகள் சொன்னார்கள். நீங்கள் இப்படித்தான் விதண்டாவாதம் பேசுவீர்கள் என்று சொல்லி கடந்து வந்த நாடு, இன்று அதைத் தெளிவாகப் புரிந்துகொள்கிறது).
இந்த முதலீட்டால் பத்து ஆண்டுகளில் ஒரு லட்சம் பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்று கொள்கை சொல்கிறது.
ஆகஸ்ட் 31, 2019 நிலவரப்படி தமிழ்நாட்டின் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளவர்கள் 76,76,907 பேர். இவர்களில் 26,32,231 பேர் 24 வயதில் இருந்து 35 வயதுக்குட்பட்டவர்கள். பொறியியல் இளங்கலை, முதுகலை பட்டம் வாங்கிவிட்டு வேலைக்காக பதிவு செய்திருப்பவர்கள் 4,58,618 பேர். அடுத்த பத்து ஆண்டுகளில் கொஞ்சம் கொஞ்சமாக ஒரு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு என்றால், மீதமுள்ள 79 லட்சம் பேர் என்ன செய்வார்கள்? அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை இன்னும் பல லட்சமாக பெருகும்.வேலை வாய்ப்பு உருவாக்குவது பற்றி பழனிச்சாமி அரசுக்கு எந்தப் பார்வையும் அக்கறையும் இல்லை என்றுதானே தெரிகிறது?
பழனிச்சாமி அரசாங்கத்துக்கு முதலாளிகள் மீது இருக்கும் அக்கறையை இந்த கொள்கையில் தெளிவாகப் பார்க்க முடிகிறது.
ரூ.50 கோடி அல்லது அதற்கு மேல் முதலீடு செய்யும் முதல் பத்து நிறுவனங்களுக்கு தலா ரூ.10 கோடி வரை முதலீட்டு மானியம் தரப்படும். முதல் மூன்று ஆண்டுகளில் இந்த குறைந்தபட்ச முதலீடு செய்யப்பட வேண்டும்.
பயிற்சியளிப்பதற்கான செலவு முழுவதும் திரும்பத் தரப்படும். ஒரு நிறுவனத்தில் 50 பயிற்சியாளர்களுக்கு மாதம் ஒன்றுக்கு அதிகபட்சமாக தலா ரூ.10,000 தரப்படும்.
உற்பத்தி செய்யப்படும் உபகரணங்களுக்கு இந்திய, சர்வதேச தர நிறுவனங்களின் சான்றிதழ் பெறும் செலவுக்கு ஒரு நிறுவனத்துக்கு ரூ.25 லட்சம் தரப்படும்.
மூன்று ஆண்டுகளுக்குள் நிறுவனம் கேட்ட நிலம் தரப்பட்டால் நிலத்துக்கான விலையில் 20% தள்ளுபடி.
மாநிலத்துக்கு செலுத்தப்படும் ஜிஎஸ்டியில் 50% திரும்பத் தரப்படும். ஏனென்றால், இது மிகப்பெரிய அளவில் பொருளாதார நடவடிக்கைகளை உருவாக்குமாம்.
முதல் 10 ஆண்டுகளுக்கு மின்சாரம் முற்றிலும் இலவசம்.விரிவாக்கம் நடந்தால் அதற்கடுத்த பத்தாண்டுக்களுக்கும் மின்சாரம் இலவசம்.
ரூ.300 கோடிக்கு மேல் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு என்ன சலுகைகள், விலக்குகள் வழங்குவதென்று அரசாங்கம் அந்தந்த நிலைமைகளுக்கு ஏற்ப முடிவெடுக்கும்.
தென்மாவட்டங்களில் அமைக்கப்படும் நிறுவனங்களுக்கு நிலம் பதிவு செய்யும்போது, பத்திரக் கட்டணம் 100% விலக்கு. மற்ற இடங்களில் 50% விலக்கு.
இந்தத் தொழில்களில் உருவாகும் கழிவுகளை அகற்ற, கழிவகற்றும் நிலையங்கள் அமைக்க செலவில் 25% அல்லது ரூ.1 கோடி அரசு தரும்.
இதற்கு மேலும் சிறப்பு விலக்குகள், சலுகைகள் தரப்படும்.
நிலம், மின்சாரம், தண்ணீர், முதலீட்டு மானியம், வரிச்சலுகை, கட்டண விலக்கு, பயிற்சியாளருக்கு உதவித் தொகை என்ற பெயரில் உழைப்புச் சக்தி என எல்லாம் தந்தாகிவிட்டது. இதற்கு மேல் இதில் தனியார் முதலீடு என்று என்ன இருக்கிறது?
தமிழ்நாடு ஒருங்கிணைந்த புதிய ஜவுளிக் கொள்கை 2019 என ஒன்றும் மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது. இந்த கொள்கையின் நோக்கங்கள் என்ற தலைப்பில் தரப்பட்டுள்ள ஒன்பது அம்சங்களில் வேலை வாய்ப்பு கடைசி அம்சம். கொள்கை சொல்வதுபடி, ஸ்பின்னிங் மில்களில் 2 லட்சத்து 80 ஆயிரம் பேர், கைத்தறியில் 3 லட்சத்து 19 ஆயிரம் பேர், விசைத்தறியில் 10 லட்சத்து 19 ஆயிரம் பேர் வேலை செய்யும் இந்தத் துறை பற்றிய புதிய கொள்கையின் நோக்கம் என்ற தலைப்பில், தொழிலாளர் நலன் பற்றி எதுவும் இல்லை. இந்தத் துறையில்தான் சுமங்கலித் திட்டம் என்ற பெயரில் லட்சக்கணக்கான சிறுமிகள் வதைக்கப்படுகிறார்கள். சுமங்கலித் திட்டம் கடுமையான விமர்சனத்துக்கு எதிர்ப்புகளுக்கு உள்ளாவதால் இப்போது திட்டத்துக்கு வேறு வேறு பெயர் சூழலுக்கு ஏற்ப வைத்துக் கொள்கிறார்கள். படிக்க வைத்து வேலை தருகிறோம் என்று கூட சொல்லி சிறுமிகளை அழைத்துச் செல்கிறார்கள். தமிழ்நாட்டின் தொழிலாளர் அமைச்சர் அப்படி ஒரு நடைமுறையே தமிழ்நாட்டில் இல்லை என்கிறார்.
பாஜகவின் முந்தைய ஆட்சியிலேயே பிப்ரவரி, மார்ச் மாதங்களிலேயே இந்தக் கொள்கைகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. அங்கே அனில் அம்பானி ராணுவ தளவாட உற்பத்தியில் கவனம் செலுத்தப் போவதாக சமிக்கைகள் வந்ததும் அப்போது ராணுவ அமைச்சராக இருந்த நிர்மலா உடனே புறப்பட்டு நேரே சென்னை வந்து அடிமைகள் புடை சூழ தமிழ்நாடு வான்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில் கொள்கை 2019அய் வெளியிட்டார்.
இப்போது, அடிமை முதலமைச்சர் பழனிச்சாமி வெளிநாடு போய் திரும்பிய போது, ஆட்டோ கார்ப்பரேட்டுகளுக்கு நிர்மலா சீதாராமன் சலுகைகள் அறிவித்திருப்பதை அறிந்து கொண்டதும் துரிதமாக செயல்பட்டார். தமிழ்நாடு மின்வாகனங்கள் கொள்கை 2019அய் வெளியிட்டார். வாகன உற்பத்தியை முடக்கிவிட்டால் சரிந்து கிடக்கும் பொருளாதாரம் தூக்கி நிறுத்தப்பட்டுவிடும் என்று நிர்மலா சீதாராமன் நம்பும்போது பழனிச்சாமி மட்டும் நம்பாமலா போய்விடுவார்? சலுகைகள், விலக்குகள் என அந்தக் கொள்கை அள்ளி அள்ளித் தருகிறது. பெட்ரோல் கார் வைத்திருப்பவர்கள், மின்சாரக் கார் வாங்குவார்களாம். பழனிச்சாமி வகையினர் சொல்கின்றனர். எத்தனை பேர் வாங்குவார்கள்? ஒரு ஒரு லட்சம் பேர்? பிறகு மற்ற வாகனங்கள் என்ன ஆகும்?
அடிமை பழனிச்சாமி அரசின் தாராள குணமும் மணமும் இந்தக் கொள்கையிலும் வெளிப்படுகிறது. இந்தத் தொழிலில் ரூ.50,000 கோடி முதலீடு ஈர்த்து, 1.5 லட்சம் வேலை வாய்ப்பு உருவாக்கப் போகிறார்களாம். அதனால் பின்வரும் சலுகைகள், விலக்குகள் அறிவிக்கப்பட்டுள்ளன:
மின்சார வாகனங்களுக்கு 30.12.2022 வரை 100% சாலை வரி விலக்கு.
தனியார் மற்றும் அரசு மின்னேற்று நிலையங்கள் கொண்ட கட்டமைப்பு உருவாக்கப்படும். அரசு, தனியார் உதவியுடன் இந்த கட்டமைப்பை உருவாக்கும். அரசு - தனியார் பங்கேற்பு முறையும் உண்டு.தனியாருக்கு முதலீட்டு மானியம் உண்டு. சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம், திருநெல்வேலி ஆகிய மய்யங்களில் 3*3 கிரிட் மின்னேற்று நிலையங்களை (சார்ஜிங் ஸ்டேஷன்ஸ்) அரசு அமைக்கும்.
மின்சார வாகனங்கள், அவற்றுக்கான உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு சிறப்புச் சலுகைகள் உண்டு. ரூ.50 கோடி குறைந்தபட்ச முதலீடு 50 நேரடி வேலை வாய்ப்பு உருவாக்கினால் இந்த சிறப்புச் சலுகைள் பெறலாம்.
உற்பத்தி செய்யப்பட்ட, விற்கப்பட்ட, பதிவு செய்யப்பட்ட மின்வாகனங்களுக்கு 31.12.2030 வரை 100% மாநில ஜிஎஸ்டி விலக்கு. மின்வரி 100% விலக்கு.31.12.2022 வரை 100% பத்திர கட்டணம் விலக்கு.நில விலையில் 15% மானியம்.தென்மாவட்டங்களில் என்றால் 50% மானியம்.
31.12.2025 வரை உருவாக்கப்படும் வேலை வாய்ப்புகளில் முதலாளி செலுத்த வேண்டிய இபிஎஃப் தொகையை அரசு செலுத்தும்.இது ஒரு வருடத்துக்கு ஒரு தொழிலாளிக்கு ரூ.48000க்கு மிகாமல். (மலிவு உழைப்பு தொழிலாளியைக் கொடுத்து, அந்தத் தொழிலாளிக்கு முதலாளி தர வேண்டிய சம்பளத்தையும் தந்து.... அரசனை விட அரசனுக்கு விசுவாசம்...)
உதிரிபாக உற்பத்திக்கு 10 ஆண்டுகளுக்கு 15% முதலீட்டு மானியம்.31.12.2025 வரையிலான முதலீடுகளுக்கு இந்தச் சலுகை உண்டு.மொத்த முதலீட்டில் நிலத்தின் விலை 20% மிகாது.
இதற்கு பெயர் தனியார் முதலீட்டை ஈர்ப்பது அல்ல.மக்கள் பணத்தை தனியாருக்குத் தருவது. தனியார் ஏதாவது முதலீடு போடுவார் என்றால் வங்கியில் இருந்து வாங்கிய கடனாக இருக்கும். ஆக, எல்லாம் மக்கள் பணம். அதில் தனியார் தின்ன அரசாங்கம் கொள்கை உருவாக்குகிறது. கார்ப்பரேட்டுகள்தான் செல்வம் உருவாக்குபவர்கள் என்று மோடி அரசு சொல்லிவிட்டதால், அந்தக் கருத்தைக் கச்சிதமாகப் பிடித்துக் கொண்டது பழனிச்சாமி அரசு.
மின்வாகனங்கள் வேண்டுமென்று யார் கேட்டார்கள்? யார் வாங்கக் காத்திருக்கிறார்கள்?சோறும் துணியும் வீடும் முதலில் வேண்டும். அது பற்றி பேச மறுக்கிற அரசாங்கம் மின்சார வாகன உற்பத்தி பற்றி இந்த அளவுக்கு அக்கறை காட்டும்போது, அதானி பவர் உற்பத்தி செய்யும் மின்சாரத்துக்கு சந்தை வேண்டும் என்பதுதான் மத்திய மாநில அரசுகளின் திடீர் அக்கறைக்கு காரணம் என்று சொன்னால் நாம் உடனே தேசவிரோதிகள் ஆகிவிடுவோம்.
இப்போது அய்க்கிய அமெரிக்கா, இங்கிலாந்து, துபாயில் இருந்தெல்லாம் வேறு தமிழ்நாட்டுக்கு முதலீடு வருகிறது என்று பழனிச்சாமி சொல்கிறார். தமிழ்நாட்டின் மீதம் உள்ள வளங்களை முதலாளிகளுக்குப் பிரித்துத் தந்துவிட, அவர்களது லாபவெறிக்கு தமிழ்நாட்டு தொழிலாளர்களை, வேலை வாய்ப்புக்காக காத்திருக்கும் இளைஞர்களை பலி தந்துவிட என்ன செய்ய வேண்டுமோ அதையே செய்கிறது பழனிச்சாமி அரசு. உழைப்பவர் எவரானாலும் ரூ.26,000 மாதச் சம்பளம், பாதுகாப்பான கவுரவமான நிரந்தரமான வேலைவாய்ப்பு, 8 மணி நேர வேலை நாள், 5 நாட்கள் வேலை வாரம் என்று தொழிலாளர்கள் கேட்கும்போது, இந்த குறைந்தபட்ச கோரிக்கைகள் பற்றி எதுவும் பேசாத பழனிச்சாமி அரசின் தொழில் கொள்கைகளால் எந்தப் பயனும் இல்லை.