தாமரை ரத்தக்
கறையுடன் மலர்ந்தது
புறப்பட்டு
விட்டது திரிசூலம்
ஸ்வஸ்திகாவும்
வெளியில் வந்துவிட்டது
எல்லாம் மூலதன
சேவைக்காக
எஸ்.குமாரசாமி
‘தேசப் பிரிவினை
இந்துக்களுக்கு மிகவும் நல்ல விஷயம். இந்துஸ்தானம் ஓர் இந்து நாடு என்றும் அதன்
அதிகாரபூர்வ மதம் இந்து மதம் என்றும் அறிவிக்க நேரம் வந்துவிட்டதுதானே?’
(05.06.1947 அன்று தொழில் அதிபர் பி.எம்.பிர்லா படேலுக்கு
எழுதிய கடிதத்தில் இருந்து)
‘இந்துஸ்தானத்தை
இந்து நாடு என்றும் இந்து மதத்தை அதன் அதிகாரபூர்வ மதம் என்றும் கருத முடியாது என
நான் நினைக்கிறேன். நாட்டில் இதர மதச் சிறுபான்மையினர் இருக்கின்றனர் என்பதையும்,
அவர்களைப் பாதுகாப்பது
நமது முதன்மைப் பொறுப்பு என்பதையும், நாம் மறந்துவிட முடியாது. அரசு, சாதி மத நம்பிக்கை வேறுபாடுகள் கடந்து அனைவருக்குமானதாக, இருக்க வேண்டும்’.
(பிர்லா
கடிதத்திற்கு படேல் 10.06.1947 அன்று எழுதிய
பதிலில் இருந்து)