COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Tuesday, November 14, 2017

தமிழக அரசு அறிவிக்கிற திட்டங்கள் அமலாக்கம் பற்றி
வெள்ளையறிக்கை வேண்டும்!

குன்றுகள் காணாமல் போயின என்று சகாயம் ஆய்வு செய்தபோது தெரிய வந்ததுபோல், தமிழ்நாடு மொத்தமாக காணாமல் போனால், அல்லது தனுஷ்கோடி கடலில் மூழ்கியது போல் தமிழ்நாடே மழை வெள்ளத்தில் மூழ்கிப் போனால், வறட்சியால் கருகிப் போய்விட்டால்.... எந்தத் தமிழ்நாட்டை ஆள பாஜகவும் மற்றவர்களும் துடியாய் துடிக்கிறார்கள்?
உயர்நீதிமன்ற வளாகத்தில் நடந்த பாலியல் துன்புறுத்தல்
பாதிக்கப்பட்டவர்களை வேட்டையாடலாமா?  
SAY NO TO VICTIM BLAMING VICTIM BASHING

ஹாலிவுட். உலகில் மிகப்பெரிய கனவுத் தொழிற்சாலை. இன்று அங்கு ஙங் பர்ர், என்னையும் கூட என்ற ஓர் இயக்கம் வேர் கொண்டு, உலகம் எங்கும் உள்ள பெண்களை தமக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்களைப் பற்றி பேச வைத்துள்ளது.
இளம்தொழிலாளர்கள் மீதான அடக்குமுறை, ஒடுக்குமுறைக்கு முடிவு கட்ட 
இளைஞர்கள் தயாராக வேண்டும் என்று அறைகூவல் விடுத்த
புரட்சிகர இளைஞர் கழக காஞ்சிபுரம் மாவட்ட இரண்டாவது மாநாடு

புரட்சிகர இளைஞர் கழகத்தின் காஞ்சிபுரம் மாவட்ட இரண்டாவது மாநாடு நவம்பர் 12 அன்று திருபெரும்புதூரில் நடத்தப்பட்டது.
இகக மாலெ தோழர்கள் மீது தாக்குதல் முயற்சி நடத்திய
கந்துவட்டி ரவுடிகள் மீது நடவடிக்கை எடு!

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் விசைத்தறி தொழிலாளர்கள் நிறைந்த பகுதி. இந்த தொழிலாளர்கள் பாக்கி என்னும் கொத்தடிமை முறையில் முதலாளிகளிடம் வேலை செய்து வருகிறார்கள்.
நெல்லையில் தொடரும் காவல்துறை அத்துமீறல்கள் 
தடுத்து நிறுத்தப்பட வேண்டும்!

மீண்டும் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை. கந்துவட்டிக் கொடுந்தீ எரித்த இசக்கிமுத்துவின் குடும்பத்தைப் பார்த்து 10 நாட்கள் கூட ஆகவில்லை. இந்த முறை வள்ளியூர் வழக்கறிஞர் செம்மணி(எ) ராஜரெத்தினம், நெல்லை காவல்துறையினரால் தாக்கப்பட்டு இடது கால் எலும்பு முறிந்து சிகிச்சையில் இருக்கிறார்.
அய்க்கிய அமெரிக்காவின் இந்த நூற்றாண்டு இளைஞர்கள் 
சோசலிசத்தில் புகலிடம் தேடுகிறார்கள்

சமீபத்தில் அய்க்கிய அமெரிக்காவின் விர்ஜினியா பிரதிநிதிகள் அவைத் தேர்தலில் ஜனநாயக சோசலிஸ்ட் அமைப்பைச் சேர்ந்தவர்கள் பலர் வெற்றி பெற்றிருக்கிறார்கள்

Search