COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Tuesday, November 14, 2017

நெல்லையில் தொடரும் காவல்துறை அத்துமீறல்கள் 
தடுத்து நிறுத்தப்பட வேண்டும்!

மீண்டும் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை. கந்துவட்டிக் கொடுந்தீ எரித்த இசக்கிமுத்துவின் குடும்பத்தைப் பார்த்து 10 நாட்கள் கூட ஆகவில்லை. இந்த முறை வள்ளியூர் வழக்கறிஞர் செம்மணி(எ) ராஜரெத்தினம், நெல்லை காவல்துறையினரால் தாக்கப்பட்டு இடது கால் எலும்பு முறிந்து சிகிச்சையில் இருக்கிறார்.
துண்டாகி தொங்கும் அவரின் வலது கால் பெருவிரல் நகத்தில் இருந்து இரத்தம் வந்து கொண்டே இருக்கிறது. அவர் சர்க்கரை வியாதிக்காரர். அவரது உடலில் வார்வாராக லத்தி மற்றும் இரும்புத் தடி தாக்குதல்களின் அடையாளங்கள்.
வழக்கறிஞர் தோழர் செம்மணி திருநெல்வேலி மாவட்டம், பழவூர் கிராமம், மாறன் குளம் எனும் குக்கிராமத்தில் குடியிருக்கிறார். ஆதிதிராவிடர் இனத்தைச் சேர்ந்தவர். தனது வழக்கறிஞர் பணி மூலம் அந்தச் சுற்றுவட்டார பகுதி ஏழை, எளிய மக்களுக்காக நீதிமன்றத்தில் வாதாடி வருபவர். மனித உரிமைப் போராளி. காவல்துறையினரின் அராஜகச் செயல்களுக்கு எதிராக வழக்குகள் நடத்தி வருபவர். கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராட்ட மக்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை நடத்தி வரும் வழக்கறிஞர்களுள் ஒருவர். சென்னையில் ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்கம் நடத்திய போராட்டங்களில் கலந்து கொண்டுள்ளார்.
அய்சக் செல்வக்குமார் என்பவர் தன்னை மோசமாக சாதி சொல்லி ஏசி, தாக்க வந்தது தொடர்பாக வழக்கறிஞர் செம்மணி, பழவூர் காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்தார். அந்தப் புகார் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், பணகுடி காவல் ஆய்வாளர் ஸ்டீபன் ஜோஸ், வள்ளியூர் காவல்துறைத் துணைக் கண்காணிப்பாளர் குமார் ஆகியோர் வேண்டுமென்றே இழுத்தடித்து வந்ததால் வழக்கறிஞர் செம்மணி, சட்டப்படி நான்கு நேரி நீதிமன்றத்தில் 03.11.2017 அன்று குற்ற விசாரணை முறைகள் சட்டப் பிரிவு 156(3)ன் கீழ் மனு தாக்கல் செய்தார். அதில் சட்டப்படி ஆய்வாளர் ஸ்டீபன் ஜோஸ் மற்றும் டிஎஸ்பி குமார் இருவரையும் எதிர்மனுதாரர்களாகச் சேர்த்தார். அந்த வழக்கு கோப்புக்கு எடுப்பதற்கு முன் சரி பார்த்து வழக்கு எண் தர 10.11.2017 அன்று வாய்தா போடப்பட்டுள்ளது. 
இந்நிலையில், 03.11.2017 அன்று இரவே, 12.30 மணியளவில், ஏழு, எட்டு போலீஸôர் செம்மணி வீட்டிற்குச் சென்று இன்ஸ்பெக்டர் ஜோஸ÷ம், டிஎஸ்பி குமாரும் வாகனத்தில் இருக்கிறார்கள் உங்களை கூட்டி வரச் சொன் னார்கள் என்று கையைப் பிடித்து இழுத்துள்ளார்கள். நான் சட்டை அணிந்து வருகிறேன் என்று சொல்லி விட்டு வீட்டில் அறைக்குள் சென்றிருந்தபோது, வந்திருந்த போலீஸôர் அவர் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து தூங்கிக் கொண்டிருந்த அவர் மனைவி சரோஜாவின்  சேலையைப் பிடித்து இழுத்து, “உம் புருஷனை எங்கடி” என்று சாதியைச் சொல்லி கெட்ட வார்த்தையில் பேசியுள்ளனர். ஃபோட்டோ எடுத்து விடக்கூடாது, மற்றவர்களுக்கு அவர் தகவல் ஏதும் சொல்லிவிடக் கூடாது என்பதற்காக அவரின் கையைப் பிடித்துத் முறுக்கி அவர் வைத்திருந்த சாம்சங் போனையும் பறித்துக் கொண்டனர்.
அவரது மகள் சங்கீதா தூங்கிக் கொண்டிருந்த அறைக்குள் சென்று அவளைத் தட்டி எழுப்பியுள்ளனர். கழிவறைக்குச் சென்றிருந்த செம்மணி வந்து, “ நீங்கள் ஏன் இப்படி செய்கி றீர்கள், நான் நாளை வந்து டிஎஸ்பியைப் பார்க்கிறேன்” என்று சொன்னபோது, அவரை அடித்து, கையையும் காலையும் பிடித்துத் தூக்கிச் சென்றுள்ளனர். தடுத்த அவர் மனைவியைப் பிடித்து தள்ளியுள்ளார்கள். செம்மணியை காவல் வாகனத்தில் வீசியுள்ளார்கள். எங்கே கொண்டு செல்கிறீர்கள் என்று கேட்டதற்கு, வள்ளியூர் என்று சொல்லிவிட்டு, இராதாபுரம் காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்றுள்ளார்கள். அங்கு அவரை அடித்து லாக்கப் ரூமில் நிர்வாணமாக அடைத்துள்ளார்கள். பின்னர், மாடிக்குக் கொண்டு சென்று கையையும் காலையும் கட்டி தலைகீழாக வைத்து வாயில் செருப்பைக் கடிக்கக் கொடுத்து லத்தியாலும் இரும்புக் கம்பியாலும் காட்டுமிராண்டித்தனமாக தாக்கியுள்ளார்கள். பூட்ஸ் காலால் வயிற்றில் மிதித்துள்ளார்கள். அடிக்கும்போதே, சாதியைச் சொல்லியும் வக்கீல்னா பெரிய.... என்று அசிங்கமாகப் பேசியும் போலீûஸ பேசுவியா என்றும் அடித்தது மட்டுமில்லாமல், கீழே இன்ஸ்பெக்டரும் டிஎஸ்பியும் இருக்காங்க, உன் சத்தம் அவங்களுக்குக் கேக்கனும் என்று சொல்லி கடுமையாக கொலை வெறி கொண்டு தாக்கியுள்ளார்கள். அதன் பின்னர் அவரை உவரி காவல் நிலைத்திற்குக் கொண்டு சென்று ஒரு கொலை வழக்கில் அவரை எதிரியாகச் சேர்க்க முயற்சித்துள்ளனர்.
செம்மணி மனைவி மூலம் தகவல் கிடைத் ததால் நள்ளிரவிலேயே, செம்மணியை போலீஸ் இழுத்துச் சென்றுள்ளது, டிஜிபி, டிஅய்ஜி யாரிடம் பேசினாலும் அவர் எங்கிருக்கிறார் என்ற தகவல் தெரியவில்லை என்று முகநூலில் அகில இந்திய மக்கள் மேடையின் தேசிய பிரச்சாரக் குழு உறுப்பினர் தோழர் உதயகுமார், பதிவிட்டதால் மாநில முழுவதும் பரபரப்பு தொற்றிக் கொண்டது. இதற்கிடையே செம்மணியை உவரி காவல் நிலையத்தில் வைத்துள்ளார்கள் என்று தகவல் கிடைத்து வள்ளியூர் வழக்கறிஞர்கள் நவம்பர் 4 அன்று காலை அங்கு சென்றனர். அவர்களிடம், மிகச் சாதாரணமாக, செம்மணி மீது வழக்கு ஏதும் போடவில்லை. அவரைக் கூட்டிச் செல்லுங்கள் என்று அவரை கொடூரமாகத் தாக்கிய காவல்துறையினர் சொல்லியுள்ளனர்.
செம்மணியோ, என்னை வலுக்கட்டாயமாகத் தூக்கி வந்து அடித்துத் துன்புறுத்தி காலை உடைத்துள்ளீர்கள், என் மீது வழக்கு போட்டு சிறையில் அடையுங்கள் அல்லது மாஜிஸ்ட்ரேட் முன்பு ஆஜர்படுத்துங்கள் என்று உறுதியாகச் சொல்லியுள்ளார். அதே நேரத்தில், செம்மணியின் தங்கை பாப்பா, வள்ளியூர் நீதிமன்றத்தில், செம்மணியை சட்டவிரோதமாக தூக்கிச் சென்று உவரி காவல் நிலையத்தில் வைத்துள்ளார்கள் அவரை மீட்க வேண்டும் என்று வள்ளியூர் வழக்கறிஞர்கள் உதவியுடன் மனு செய்தார். அந்த மனு மீது நீதிபதி, வழக்கறிஞர் ஒருவரை ஆணையராக நியமித்து, அவரை தன் முன்னால் ஆஜர்படுத்த உத்தரவிட்டார். அந்த உத்தரவைக் கூட காவல்துறையினர் வாங்க மறுத்து இழுத்தடித்துள்ளனர்.
உவரி காவல் நிலையக் குற்ற எண்.224/17ல் தங்கள் மீது பதியப்பட்டுள்ள வழக்கு விசாரணைக்கு 04.11.2017 காலை 10 மணிக்கு ஆஜர் ஆக வேண்டும் என்று 04.11.2017 மதியம் 1 மணிக்கு செம்மணியிடம் அழைப்பாணை கொடுத்து கையொப்பம் கேட்டுள்ளார்கள். அவர் வாங்க மறுத்துவிட்டார். வழக்கறிஞர்கள், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் உவரி காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். செம்மணி மீது எந்த வழக்கும் போட முடிய வில்லை. பின்னர், அவரை நவம்பர் 4 அன்று இரவு வழக்கறிஞர் ஆணையரிடம் ஒப்படைத்துள்ளார்கள். அவர் அன்று இரவு 11 மணிக்கு மேல் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு, வாக்குமூலம் கொடுத்து, நீதிபதியின் உத்தரவின்  பேரில் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எலும்பு முறிவு சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
வழக்கறிஞர் செம்மணி மீது புகாரோ, முதல் தகவல் அறிக்கையோ இல்லாமல், அவர்  சட்டப்படியான நடவடிக்கை கோரி நீதிமன்றத் தில் கொடுத்த புகார் மனுவில் டிஎஸ்பி, இன்ஸ் பெக்டர் பெயரைச் சேர்த்ததற்காக, காவல் துறையினர் ரவுடிகள் போல செம்மணியைத் தூக்கிச் சென்று அடித்து மிரட்டியுள்ளனர். இதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் வழக்க றிஞர்கள் போராட்டத்தில் இறங்கினர்.
நெல்லையில் சமூக நீதிக்கான வழக்கறிஞர்கள் அமைப்பு சார்பாக 04.11.2017 அன்று இகக (மாலெ) மாநிலக்குழு உறுப்பினர் தோழர் ஜி.ரமேஷ், ஏஅய்பிஎப் மாநிலப் பிரச்சாரக்குழு உறுப்பினரும் எழுத்தாளருமான தோழர் பாலமுருகன், சிபிஅய்(எம்) வழக்கறிஞர் தோழர் பழனி, நெல்லை வக்கீல் சங்கச் செயலாளர் தோழர் செந்தில்குமார், தமாஜக மாவட்டச் செயலாளர் தோழர் அப்துல் ஜப்பார் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி, குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும், செம்மணிக்கு உயர் மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் செம்மணியின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும், பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைத்தனர். இகக(மாலெ), ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்கம் உட்பட பல்வேறு அமைப்புகளும் கண்டனக் குரல்கள் எழுப்பின.
காவல்துறையினர், டிஎஸ்பி குமார், இன்ஸ்பெக்டர் ஜோஸ் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யாமலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமலும் இருந்ததால் 10.11.2017 அன்று  திருநெல்வேலி மாவட்டக் காவல்துறை கண்கா ணிப்பாளர் அலுவலகத்தை வழக்கறிஞர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதில் மாநிலம் முழுவதும் இருந்து வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இல்லை என்று சொல்லப்பட்டது. நெல்லை சரக காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் வழக்கறிஞர்களிடம் பேசினார். வழக்கறிஞர்கள் தரப்பில், இரண்டு நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், நவம்பர் 12 அன்று திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத் திற்கு எதிராக உள்ள திடலில் நடக்கவிருக்கும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவிற்கு தமிழக முதல்வர் பழனிச்சாமி வரும்போது அவரது கவனத்தை ஈர்க்கும் வகையில் போராட்டம் நடத்தப்படும் என வழக்கறிஞர்கள் தரப்பில் அறிவிக்கப்பட்டது.
அன்று மாலை, சம்பந்தப்பட்ட குற்றவாளி காவலர்கள் சிலரை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து நாடகம் ஆடினர். நெல்லை சரக டிஐஜி அழைத்துப் பேசினார். குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும், அவர்களைப் பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று உறுதியாக வழக்கறிஞர்கள் சொல்லிவிட்டனர்.
எடப்பாடியின் நிகழ்ச்சியில் ஏதும் நடந்து விடக்கூடாது என்பதிலேயே காவல்துறையினர் அக்கறையாக இருந்தனர். தோழர் செம்மணியை மருத்துவனையில் இருந்து வெளியேற்ற நிர்ப்பந்தம் கொடுத்தனர். அவரை வேண்டு மென்றே, துர்நாற்றம் மிக்க, கழிவறைக்குப் பக்கத்தில் உள்ள படுக்கையில் போட்டுவிட்டு வேண்டுமென்றால் இரு, இல்லாவிட்டால் வெளியேறு என்று கட்டாயப்படுத்தினர். திரும்பத்திரும்ப மருத்துவக் கல்லூரி முதல்வர், மருத்துவமனை உயர் அதிகாரிகளைப் பார்த்து பேசிய பின்னர் வேறு வார்டுக்கு மாற்றினர்.
ஏழு நாட்களாக இந்தப் பிரச்சனையை கண்டு கொள்ளாமல் இருந்த, ஆளும் கட்சியில் ஏவல் ஆட்கள் பிறகு வந்தனர். மாவட்ட ஆட்சியர் அழைத்துப் பேசினார். கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் விசாரணை அறிக்கையின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் தற்போது டிஎஸ்பி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 7 பேர் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் சொன்னார். அதைத் தொடர்ந்து  முதலமைச்சர் நிகழ்ச்சியின்போது அவரது கவனத்தை ஈர்க்க திட்டமிடப்பட்ட போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. 
டிஎஸ்பி இடமாற்றமும் 7 பேர் தற்காலிகப் பணி நீக்கமும் கண்துடைப்புதான். டிஎஸ்பி இடமாற்றம் கூட பல காவல் அதிகாரிகள் இடமாற்றத்தில் ஒன்றுதான். என்றாலும் இது வழக்கறிஞர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களின் ஒருமித்த குரலுக்கு கிடைத்துள்ள ஒரு தற்காலிக வெற்றி. வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படும் வரை போராட்டங்கள் தொடர வேண்டும். இவ்வளவுக்குப் பிறகும் செம்மணிக்கு முழுமை யான சிகிச்சை தராமல் அவரை மருத்துவமனை யில் இருந்து வெளியே போக வைப்பதிலேயே குறியாக உள்ளன அரசும் காவல்துறையும்.
ஒரு வழக்கறிஞராக முறைப்படி சட்ட நடவடிக்கை மேற்கொண்டார் என்பதற்காக, தோழர் செம்மணி மீது தாக்குதல் நடத்திய நெல்லை காவல்துறையினர், குழந்தைகள் பற்றி எரிந்தது கண்டு பொறுக்க முடியாமல், தனது கருத்தை கேலிச் சித்திரமாக வரைந்த கார்ட்டூனிஸ்ட் பாலாவை, அவர் வீடு புகுந்து அராஜகமாக கைது செய்து இழுத்து வந்தது.
கந்துவட்டிக் கொடுமையால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தனது குடும்பத்தையே எரித்துக் கொண்டு உயிர் விடக் காரணமாக இருந்த, அக்கறையற்ற தமிழக அரசு, மாவட்ட நிர்வாகம், காவல்துறையின் நடவடிக்கையைக் கண்டிக்கும் வகையில் கேலி சித்திரம் வரைந்தார் பாலா. இதனால், ஆத்திரம் கொண்ட தமிழக அரசு, நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியின் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து அவரைக் கொண்டு வந்து, வழக்கறிஞர்களைக் கூட சந்திக்க விடாமல் பாளையங்கோட்டை நீதித்துறை நடுவர் நீதீமன்றத்தில் ஆஜர்படுத்தியது. நீதிபதி ராமதாஸ், அவரை உடனடியாக, எவ்வித நிபந்தனையும் இன்றி பிணையில் விட உத்தரவிட்டு, ஜாமீன் தாரர்களை பார்ப்பதற்காக, பாலாவை சிறிது நேரம் வெளியே இருக்கச் சொன்னார். நீதிமன்ற அறைக்கு வெளியே, தாழ்வாரத்தில் பாலாவுடன் வழக்கறிஞர்கள் நின்று பேசிக் கொண்டிருந்த போது, மாவட்டக் குற்றப்பிரிவு ஆய்வாளர் அனிதா வேகமாக வந்து பாலாவை பிடித்து வேகமாக இழுத்தார். எங்கே இழுக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, அவரை ரிமாண்ட் செய்ய வேண்டும் என்றார். ஏற்கனவே பிணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுவிட்டது, அவரை விடுங்கள் என்று சொன்னதற்கு அதெல்லாம் முடியாது என பாலாவை இழுத்தார். மற்ற போலீஸôரும் அவரை இழுத்தார்கள். வக்கீல்கள் அவரைக் காப்பாற்றி நீதிமன்ற அறைக்குள் கொண்டு சென்றோம். நீதிபதி தன் இடத்தில் இருந்து இறங்கி வந்து, போலீûஸ வெளியே போகச் சொன்னார். அதன்பின் உடனடியாக, ஜாமீன்தாரர்களை நீதிபதி பார்வையிட்டு, காவல் ஆய்வாளரிடம் அவருக்கு பிணை தரப்பட்டுவிட்டது அவரை நீங்கள் அழைத்துச் செல்லக்கூடாது என்றார். அதற்கு ஆய்வாளர், அவரை விசாரணைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்றார். விசாரணைக்கு அவர் வர வேண்டும் என்றால், தனியாக அழைப்பாணை அனுப்புங்கள் என்றார் நீதிபதி. அதற்கும் ஆய்வாளர், அவர் சென்னையில் இருக்கிறார். அதனால், இப்போது என்னோடு கூட்டிச் சென்று அழைப்பாணையை தந்து அனுப்பி விடுகிறேன் என்றார். நீதிபதியும் வக்கீல்களும் அழைப்பாணையை பின்னர் அனுப்புங்கள் அவர் வருவார், இப்போது நீங்கள் போகலாம் என்று விரட்டிய பிறகு காவல் ஆய்வாளரும் மற்ற போலீசாரும் வெளியேற, பாலாவை வழக்கறிஞர்கள் சங்க அறையில் பாதுகாப்பாக வைத்துவிட்டு, ஊடகங்களுக்கு நீதிமன்றத்தில் காவல்துறையினர் அத்துமீறி செயல்பட்டது தொடர்பாக சொல்லப்பட்டது. பின்னர், சில மணி நேரங்கள் கழித்து, பாலா, வழக்கறிஞர்கள் சிலரின் பாதுகாப்பில் நீதிமன்றத்தில் இருந்து சென்னைக்கு பயணப்பட்டார்.
கார்ட்டூனிஸ்ட் பாலாவின் கேலிச் சித்திரத்திற்காக அவரைக் கைது செய்ததே தவறு. மனித உரிமை மீறல். பத்திரிகையாளர் சுதந்திரம் பறிப்பு நடவடிக்கை. அதன்பின், அவரை நீதிபதி பிணையில் விட உத்தரவிட்ட பின்னர், அடாவடியாக நீதிமன்றத்திற்குள்ளேயே வந்து இழுத்துச் சென்று ரிமாண்ட் செய்வதற்கு முயற்சி செய்தது, வேறு வழக்கு போட்டு அவரை சிறிது நேரமாவாது சிறையில் அடைத்து விட வேண்டும் என்ற வெறியுடன் காவல்துறையினர் செயல்பட்டது திருநெல்வேலி காவல் துறையின், தமிழக காவல்துறையின் அராஜகத்தின் அத்துமீறலின் உச்சம்.
காக்கிச் சட்டையும் கைது செய்யும் அதிகாரமும் ஆட்சியாளர்களின் ஆசியும் உயர் அதிகாரிகளின்  ஆதரவும் இருக்கும் துணிச்சலில் காவல்துறையினரின் மனித உரிமை மீறல்கள் எல்லை தாண்டிப் போய்க் கொண்டிருக்கின்றன. ஆங்கிலேயர் ஆட்சியில் இல்லாத கொடுமைகள் இப்போது அரங்கேறுகின்றன. மத்தியில் மோடியும் மாநிலத்தில் அவர் எடுபிடி பழனிச்சாமியும் ஆட்சி செய்யும்போது, சீருடை அணிந்த அடியாட்களாக காவல்துறையினர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
சில நாட்களுக்கு முன்னர், அய்எஸ்ஆர்ஓ அதிகாரிகளின் ஊழல் நடவடிக்கைகளை வெளிக் கொண்டு வந்தனர் என்பதற்காக பத்திரிகையாளர்கள் இதே பணகுடி காவல் ஆய்வாளர் ஸ்டீபன் ஜோஸ்ஸôல் கைது செய் யப்பட்டனர். அதற்கு எதிராகப் போராடிய நெல்லை பத்திரிகையாளர்கள் மீது நெல்லை காவல்துறையினர் தாக்குல் நடத்தினர். அதனால் பத்திரிகையாளர்கள் முதலமைச்சர் நிகழ்ச்சியை பதிவு செய்ய கருப்பு பாட்ஜ் அணிந்து வருவோம் என்று அறிவித்தார்கள். அவர்களிடமும் காவல்துறையினர் சமாதானம் பேசியுள்ளனர்.
தமிழகத்தில், குறிப்பாக, நெல்லையில், காவல்துறையின் அராஜகமும் அத்துமீறலும் தொடர்கதையாகிக் கொண்டிருக்கிறது. நெல்லை காவல்துறையினர் கடமையைச் செய்திருந்தால் இசக்கிமுத்து குடும்பம் நெருப்புக்கு இரையாகியிருக்காது. வழக்கறிஞர் செம்மணி மீது நெல்லை காவல்துறை நடத்தியுள்ள கொலைவெறி தாக்குதல் அதிகார ஆணவத்துடன் சாதிவெறியும் சேர்ந்து கொண்டு ஆட்டம் போடுவதை, இதற்கு போதுமான அரசியல் பாதுகாப்பு இருப்பதை காட்டுகிறது. சரியாக நடக்கிறது என்று ஒரு விசயத்தைக் கூட தமிழ்நாட்டில் காட்ட முடியாத நிலை நாளும் முற்றி மோசமடைந்து வருகிறது.
வழக்கறிஞர் செம்மணியை தாக்கிய குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். வழக்கறிஞர் செம்மணிக்கு உயர்மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும். செம்மணியின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும். பாதுகாப்பு வழங்க வேண்டும்.

Search