தலையங்கத்துக்குப் பதிலாக
ஒருமைப்பாடு மன்றத்தின் தொழிலாளர் ஒற்றுமை மாநாடு
தலைநகர் மண்டலமான சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில், தமிழ்நாட்டில் போடப்பட்டுள்ள முதலீட்டின் பெரும்பகுதி இருக்கின்றது.
மக்கள் விரோத, தேசவிரோத மோடி அரசே, பதவி விலகு!
தமிழக அரசே,தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்று!
செப்டம்பர் 17 முதல் செப்டம்பர் 28 வரை கோவை முதல் திருபெரும்புதூர் வரை
பரப்புரை பயணம்
தலைமை: எஸ்.குமாரசாமி
தொகுப்பு: ஜெயபிரகாஷ்நாராயணன்
மோடி அரசே பதவி விலகு, தமிழ்நாடு அரசே தேர்தல் வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்று என்ற முழக்கங்களோடு கம்யூனிஸ்ட் கட்சியும் அதன் வெகுமக்கள் அமைப்புகளான இடது தொழிற்சங்க மய்யம், மக்களுக்கான இளைஞர்கள், மக்களுக்கான மாணவர்கள், பெண்கள் அதிகாரம், ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்கம் ஆகிய அமைப்புகள் பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17 முதல் பகத்சிங் பிறந்த நாளான செப்டம்பர் 28 வரை கோயமுத்தூர் முதல் திருபெரும்புதூர் வரை பரப்புரை பயணம் மேற்கொண்டன.
பரப்புரை வாகனத்தில் பரப்புரை பயணம் வந்த தோழர்கள்
தோழர் எஸ். குமாரசாமி, கம்யூனிஸ்ட் கட்சி, ஆலோசனைக்குழு தலைவர், தோழர் கூடம்.
தோழர் ஏ.கோவிந்தராஜ், பொதுச் செயலாளர், எல்டியுசி, நாமக்கல்.
தோழர் ஆர். மோகன், மாநில துணைத் தலைவர், எல்டியுசி, தோழர்கூடம்.
தோழர் எம்.குருசாமி, கம்யூனிஸ்ட் கட்சி ஆலோசனைக் குழு, கோவை.
தோழர் ஜெயபிரகாஷ் நாராயணன், மாநிலச் செயலாளர், எல்டியுசி, கோவை.
தோழர் புகழேந்தி, மாவட்டச் செயலாளர், எல்டியுசி, நாமக்கல்.
பரப்புரை இயக்கத்தின் துவக்கநாள் முதல் நிறைவுநாள் வரை கலந்து கொண்ட தோழர்களின் பார்வையில்...
தோழர் சக்திவேல்: கல்வி, வேலை வாய்ப்பில், தொழிலாளர் நலனில், மக்கள் நலனில் அக்கறையற்றதாக இருக்கும், நாட்டின் முதுகெலும்பாக உள்ள விவசாயிகளுக்கும் விவசாயத்திற்கும் எதிரான சட்டங்களை உருவாக்கும், மக்களை பிளவுபடுத்தும், நாட்டின் செல்வங்களை கார்ப்பரேட்களுக்கு விற்கும், அனைத்து தரப்பு மக்களுக்கும் நாட்டு நலனுக்கும் எதிராக செயல்படும் ஒன்றிய அரசு ஆட்சி செய்ய தகுதியற்றதாகிவிட்டது.
டாக்டர் அம்பேத்கர் பக்கம்
தொழிலாளர்களும் நாடாளுமன்ற ஜனநாயகமும்
(இந்திய தொழிலாளர் சம்மேளனத்தின் சார்பில் 1943 செப்டம்பர் 8 முதல் 17 வரை டில்லியில் நடைபெற்ற அகில இந்திய தொழிற்சங்க பயிற்சி முகாமின் இறுதி கூட்டத் தொடரில் நிகழ்த்தப்பட்ட உரை)
பக்கம் 151 - 161, தொகுதி 1,பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு
இன்று மாலை உங்களிடையே வந்து உரையாற்றுமாறு எனக்கு அன்பான அழைப்பு விடுத்தமைக்காக உங்கள் செயலாளருக்கு என் பாராட்டுகள். இந்த அழைப்பை ஏற்க முதலில் நான் தயங்கினேன். அதற்கு இரண்டு காரணங்கள் உண்டு.