COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Monday, December 17, 2012

3

உறுதிமொழி

2012 டிசம்பர் 18 உறுதிமொழி

வர இருக்கும் கட்சியின் 9ஆவது காங்கிரசை
ஒரு வரலாற்று சிறப்புமிக்க வெற்றியாக்குவோம்!

நாம் ஒரு புயல் வீசிய ஆண்டின் இறுதிக்கு வந்துவிட்டோம். இந்த ஆண்டில் இந்திய ஆளும் வர்க்கங்களின் இரண்டு பெரிய கட்சிகளான காங்கிரசும் பாரதிய ஜனதா கட்சியும், கழுத்து வரை ஊழலில் மூழ்கி இருப்பது அம்பலமாகி உள்ளது. நிலம், கனிமங்கள், எண்ணெய், வாயு, காற்று மற்றும் தண்ணீர் என எல்லா இயற்கை ஆதாரங்களும் மக்களிடமிருந்து பறிக்கப்பட்டு, பெரும்தொழில் குழுமங்களிடம் தாரை வார்க்கப்படுகின்றன. இந்திய ஜனநாயகம் பெரும் தொழில் குழுமங்களால், பெரும் தொழில் குழுமங்களே, பெரும் தொழில் குழுமங்களுக்காக நடத்தும் பெரும் தொழில் குழும ஆட்சியாக வெகுவேகமாகச் சுருக்கப்படுகிறது. பெரும் தொழில்குழும அரசியல் அச்சு, இன்றைய அரசாங்கமாக வேடமிட்டு கொண்டிருப்பது, மிகவும் வெளிப்படையாக ராடியா ஒலிநாடா உரையாடலில் வெளிப்பட்டுள்ளது. அந்த உரையாடலில், இந்தியாவின் ஆகப் பெரிய முதலாளி, இந்தியாவின் மிகப் பழைய மற்றும் தற்போதைய ஆளும் கட்சி தமது சொந்தக் கடைஎன விவரிக்கிறார்.

அதே அளவுக்கு, இந்திய அரசாங்கம், அந்நியப் பன்னாட்டு நிறுவனங்களின் நலன்களுக்குக் கடப்பாடு கொண்டுள்ளது. உலகின் மிகப் பெரிய பன்னாட்டு சில்லறை வர்த்தக நிறுவனமான வால்மார்ட்டை திருப்திப்படுத்த, மன்மோகன் சிங் வெளிப்படை யாகத் தன் அரசாங்கத்தையே பகடைக்காயாக வைத்து ஆட முன் வந்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு, நாடு தழுவிய எதிர்ப்பின் முன்பு அய்முகூ அரசாங்கம், பல இலச்சினை சில்லறை வர்த்தகத்தில், 51 சதவீதம் அந்நிய நேரடி முதலீட்டை அழைக்கும் முடிவைத் தள்ளி வைத்தார். பேரக் ஒபாமா அந்நிய முதலீட்டைக் கட்டுப்படுத்துவதற்காக பகிரங்கமாக இந்தியாவை விமர்சித்தார். இப்போது இந்தியா தன் நிலையை மாற்றிக் கொண்டு, சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அழைப்பது பற்றி அறிவிப்பு செய்த பிறகு, ஒபாமா தனது திட்டங்களில் இந்தியாவிற்கு ஒரு பெரிய பகுதி இருப்பதாகச் சொன்னார். ஏதாவது வருங்கால விக்கி கசிவு, வால் மார்ட் தலைவர் காங்கிரஸ் கட்சியை தமது சொந்தக் கடைஎன விவரிப்பதைச் சொல்லலாம்.

ஆனால் 2012 மகத்தான போராட்ட ஆண்டாகவும் இருந்துள்ளது. ஊழலுக்கெதிராக, விலை உயர்வுக்கெதிராக அந்நிய நேரடி முதலீட்டிற்கெதிராக பெரும் தொழில் குழும நிலப்பறிக்கெதிராக, சமூக அரசு ஒடுக்குமுறைக்கெதிராக, இந்தியாவின் ஜனநாயகம் நாடும் மக்கள் துணிச்சலாக எதிர்த்துப் போராடி உள்ளனர். தற்காலிக வெற்றிகள் பெற்றுள்ளனர். ஆளும் வர்க்க புல்டோசரை பின்னோக்கித் தள்ளியுள்ளனர். இந்த மகத்தான எதிர்ப்பு போராட்டத்தை தீவிரப்படுத்துவதில் முன்னெடுத்துச் செல்வதில் நமது கட்சி ஒரு துடிப்பு மிக்க பாத்திரம் வகித்துள்ளது. 2012ல் கட்சியின் வெகுமக்கள் அணிதிரட்டலில், உற்சாகம் தரும் உச்ச நிகழ்ச்சிகளாக, மாணவ - இளைஞர்களின் ஆகஸ்ட் 9 போர்க்குணமிக்க நாடாளுமன்றம் நோக்கிய பேரணி, ஊழல் மக்கள் விரோத அய்முகூ அரசாங்கம் பதவி விலக வேண்டும் என ஆகஸ்ட் 31 நடத்திய சிறை நிரப்பும் போராட்டம், பாட்னாவில் நவம்பர் 9 அன்று நடந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றத்திற்கான பேரணி ஆகியவை 2012 டிசம்பர் 18 உறுதிமொழி

வர இருக்கும் கட்சியின் 9ஆவது காங்கிரசை ஒரு வரலாற்று சிறப்புமிக்க வெற்றியாக்குவோம்! உறுதிமொழி 7 மா லெ தீப்பொறி 2012 டிசம்பர் அமைந்தன. கட்சியின் துணிச்சலான அறுதியிடல் பரந்த நிறப்பிரிகை இடதுசாரி ஜனநாயக சக்திகளுடனான நமது உறவாடலை விரிவுபடுத்தவும் நமக்கு உதவியது. இதனை, வெற்றிகரமாக செப்டம்பர் 30 டெல்லியில் நடந்த அரசியல் கருத்தரங்கிலும் நவம்பர் 9 மாற்றத்திற்கான பேரணியிலும் காண முடிந்தது.

2013 நமது கட்சியின் 9ஆவது காங்கிரசிற்கான ஆண்டாக இருக்கும். நமது கட்சி வளர்ச்சியின் இந்த மகத்தான மைல்கல் நோக்கி மொத்த கட்சியையும் தயார் செய்ய ஒரு வருடம் முன்பு மத்திய கமிட்டி ஒரு திட்டத்தை முன்வைத்த அடிப்படையில் காங்கிரஸ் தயாரிப்புக்கள் துவங்கின. மத்திய கமிட்டி இரண்டு அடிப்படையான விஷயங்களை வலியுறுத்தியது: (1) கட்சியின் அதிஉயர்ந்த அறிவையும், பலத்தையும் உண்மையில் பிரதிநிதித்துவப்படுத்தும் விதம், ஒவ்வோர் உறுப்பினர் ஒவ்வொரு கிளை வரை அணிதிரட்டப்பட வேண்டும் (2) காங்கிரசிற்கான அமைப்பு மற்றும் கருத்தியல் தயாரிப்பு கடமைகள் எழுகிற சூழலின் தேவைகளைச் சந்திப்பதற்கான கட்சியின் முழுமையான அரசியல் கடமையை நிறைவேற்றுவதுடன் இணைக்கப்பட வேண்டும். நாம் பெருமளவிற்கு இந்த திசையில் பயணிக்கிறோம். தற்போதுள்ள கட்சி உறுப்பினர்கள் மற்றும் கிளைகளின் 80 சதவீதம் ஏற்கனவே 9ஆவது காங்கிரசிற்குப் பங்களிப்பு செய்துள்ளனர். பெரும்பாலான வெகுமக்கள் அமைப்புக்கள் ஒரு பகுதி நிதி அளித்துள்ளனர். நாம் தயாரிப்பின் கடைசி கட்டத்தை நெருங்கும் போது, 9ஆவது காங்கிரசை மகத்தான வெற்றியாக்க, மொத்த தகுதி காண் நிலை உறுப்பினர்களும் அணிதிரட்டப்பட வேண்டும். நம்முடைய எல்லா மாவட்ட கமிட்டிகளும் நகர மற்றும் துறைவாரியான கமிட்டிகளும் விரிந்த இயக்கங்களுக்குச் செல்ல வேண்டும். இந்தக் கட்டத்தில், காங்கிரசுக்காகத் தயாரிக்கப்படும் நகல் ஆவணங்கள் தீவிரமான கூட்டுப்படிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும். காங்கிரசுக்குப் பிரதிநிதிகள் தேர்வு செய்ய உட்கட்சி ஜனநாயக நடவடிக்கையில் ஊக்கமாக ஈடுபட வேண்டும்.

18 டிசம்பர் அன்று தோழர் வினோத் மிஸ்ராவின் சோகமான மறைவை அனுசரிக்கும் போது, 9ஆவது காங்கிரசின் வெற்றிக்கு ஆகச் சிறந்த முயற்சிகள் எடுக்க உறுதி ஏற்போம். தோழர் வினோத் மிஸ்ரா கட்சியை அதன் 2ஆவது காங்கிரஸ் முதல் 6ஆவது காங்கிரஸ் வரை வழிநடத்தினார். நமது கட்சி வளர்ச்சியில் இந்த காங்கிரஸ்கள் முக்கிய மைல்கற்களாக இருந்துள்ளன. இவை தீவிரமான கருத்தியல் அரசியல் கடைசலாலும் மொத்த கட்சியும் திரட்டப்படுவதாலும் குறிக்கப்பட்டன. கட்சி அவருடைய தலைமையில், மார்க்சிய இயங்கியலை மேலாகப் பற்றிக் கொள்ளவும், நமது நடைமுறையில் கூடுதல் அரசியல் இயங்காற்றலைக் கட்டவிழ்த்துவிடவும் வறட்டுவாதக் கருத்துக்களுக்கும் இயக்க மறுப்பியல் கண்ணோட்டத்திற்கும் எதிராக உறுதியான போராட்டம் நடத்தியது. அதேபோல், அழிவுவாதத் கருத்துக்களை எதிர்த்தும் எந்த வகையில் சந்தர்ப்பவாதம் வந்தாலும் அதனை எதிர்த்தும் விடாப்பிடியாகவும் உறுதியாகவும் கட்சி போராடி வந்துள்ளது. இப்படித்தான் கட்சி, தனது மனதை விடுதலை செய்து கொண்டது. மாறும் புறநிலை நிலைமைகள் புரட்சியின் கடமைகளை பற்றிய புரிதலைச் செழுமைப்படுத்திக் கொண்டது. தனது அரசியல் கருத்தியல் மன உறுதியையும் அமைப்பு ஆற்றலையும் பலப்படுத்திக் கொண்டது. நாம் 9ஆவது காங்கிரசுக்குத் தயாராகும் போது, கட்சியின் இந்தச் சிறந்த புரட்சிகர மரபை உயர்த்திப் பிடிப்போம். கட்சியின் 9ஆவது காங்கிரசை கட்சியையும் புரட்சிகர இயக்கத்தையும் அனைத்தும் தழுவிய வகையில் முன்னேற்றுவதற்கான மேடையாக்குவோம்.

தோழர் வினோத் மிஸ்ராவின் புரட்சிகர மரபுக்கு செவ்வணக்கம்!

இந்தியப் புரட்சியின் மகத்தான தியாகிகளுக்கு செவ்வணக்கம்!

அனைத்தும் 9ஆவது காங்கிரஸ் வெற்றி நோக்கி!

Search