நகல்
தீர்மானம்
பெண்கள்
இயக்கம்:
சவால்கள்
மற்றும்
கடமைகள்
(2013, ஏப்ரல் 2
- 6
தேதிகளில்
ராஞ்சியில்
நடக்கவுள்ள
இகக மாலெ
(விடுதலை) 9ஆவது
கட்சி
காங்கிரசில் விவாதிக்கப்படவுள்ள
நகல்
தீர்மானம்
தரப்படுகிறது.
வாசகர்
கருத்துக்கள்
வரவேற்கப்படுகின்றன)
1. இன்றைய
இந்தியாவில்,
பெண்களின் வளரும்
அறுதியிடலையும்
சமத்துவத்திற்கான அதிகரித்த
விருப்பங்களையும்,
வேறூன்றிய ஆணாதிக்கத்திற்கு
சவால்
விடுவதையும்,
எல்லா அரங்குகளிலும்
காணவும், உணரவும்
முடியும். இந்த
அறுதியிடல்
மற்றும் பொது
வாழ்க்கையில் பெண்களின்
வளரும்
பங்களிப்பு
என்பதற்கு நேரெதிராகவும்
அதே
நேரத்தில், பெண்கள் மீதான
பாலியல்
மற்றும்
ஆணாதிக்க
வன்முறை நிற்காமல்
தொடர்வதையும்,
தீவிரமடைவதையும்
நாம் காண
முடியும்.
கடினப்பட்டு
பெண்கள்
வென்ற
உரிமைகள்
மற்றும் சுதந்திரங்கள் மீது
பகிரங்கமான
மற்றும்
கட்டமைக்கப்பட்ட ஆணாதிக்க
தாக்குதல்கள்
(உடல்ரீதியான,
கருத்தியல்ரீதியான)
தொடர்கின்றன;
உலகத்திலேயே
படுமோசமான
பெண்களின்
ஊட்டச்சத்தின்மை,
பசி, மகப்பேறின்போது
இறத்தல் ஆகியவை
இந்தியாவில்
நிலவுகின்றன.
இந்த முரண்பாடு
அல்லது
புதிர் நவீன
இந்தியாவில் ஒரு
வரையறுக்கும்
குணஇயல்பாக
எழுந்துள்ளது.
2. மூலதனம்,
ஊராட்சிகள்
போன்ற அரசு நிறுவனங்கள்,
சர்வதேச
மூலதனத்தோடும் இந்திய
அரசோடும்
நெருக்கமாகப்
பிணைந்துள்ள
தொண்டு
நிறுவனங்களின்
வலைப்பின்னல்
ஆகியவை
கிராமப்புறங்களில்
தமது
ஊடுருவலை அதிகரித்துள்ளன
என்பதும், ஒரு
கணிசமான
பெண்களை
அவர்கள்
வீடுகளிலிருந்து வெளியே
கொண்டு வந்து
உழைப்புப்
பட்டாளத்திலும்
அரசியல் அரங்கிலும்
சேர்த்துள்ளன என்பதும்
உண்மைதான்.
ஆனால், இந்த
அறுதியிடலைத்
தடுக்க
வர்க்க, சாதி
மற்றும் பால் ஆதிக்கச்
சக்திகள்
ஒன்று
திரள்வதும்
அதற்கு மிகவும்
காட்டுமிராண்டித்தனமான
வழிகள் உட்பட
அனைத்து
வழிகளையும்
பயன்படுத்துவதும்
நடக்கின்றன.
அரசும்
மூலதனமும் உழைப்புப்
பட்டாளத்தில்
பெண்களை
இழுக்கும்
போதே
உண்மையில்
அவர்களை
சுரண்டுகின்றன,
பெண்களின்
பாலியல்
மற்றும்
குடும்ப அடிமைத்தனம்
மற்றும்
சமூகரீதியான
கீழ்ப்படுத்துதல்
ஆகியவற்றுக்கான,
நிலவுகின்ற ஆணாதிக்க
கட்டமைப்புக்களையும்
கருத்தியல்களையும்
பலப்படுத்தி
நீடிக்க
வைக்கின்றன. இந்தியப்
பெண்கள்
நிலப்பிரபுத்துவ
ஒடுக்குமுறை
மற்றும் நவீன
முதலாளித்துவச்
சுரண்டல்
மற்றும்
மானுடத்
தன்மை
அகற்றுதல்
என்ற இரண்டு
உலகங்களின்
மிகவும்
மோசமானவற்றைச்
சந்திக்கின்றனர்.
ஏனெனில்
நவதாராளவாத வளர்ச்சி
மாதிரி, நிலப்பிரபுத்துவ
மிச்சசொச்சங்களை,
மாற்றியமைக்கப்பட்ட
வடிவங்களில் சமூகப்
பொருளாதாரக்
கட்டமைப்புகளில் மரபுகளில்
மதிப்பீடு
முறைகளில்
மறுஉற்பத்தி செய்கிறது,
இந்த
மிச்சசொச்சங்களை
தொடர வைக்கிறது.
அதிலிருந்து
ஆதாயமடைகிறது.
3. நிலப்பிரபுத்துவ
ஆணாதிக்க
எதிர்ப்பைச் சந்திக்கும்
போதும், பெண்கள்
மேலும்
கூடுதலான
சமூக அரசியல்
பாத்திரங்கள்
வகிக்க பள்ளிக்
கல்வி, வேறு வேறு
வேலை
வாய்ப்புக்கள்,
உள்ளாட்சி
அமைப்புக்களில்
50 சத
இட ஒதுக்கீடு
என்ற புதிய
வாய்ப்புக்களைப்
பயன்படுத்த
முயற்சிக்கிறார்கள்.
இந்தப் புதிய
வாய்ப்புக்களும்,
அனுபவங்களும்
பெண்களுக்கு
கூடுதலான
தன்னம்பிக்கையையும்
ஆர்வம்
நிறைந்த அரசியல்
உணர்வையும்
தருகின்றன.
பெண்களின் அதிகரித்த
நடமாட்டம்
மற்றும் வேலை
வாய்ப்பிலும்
அரசியல்
வாழ்க்கையிலுமான
பொதுப் பாத்திரம்
வீடுகளிலும்
சமூகத்திலும்
நிலவுகிற மரபார்ந்த
ஆணாதிக்க
ஏற்பாடுகளையும்,
அணுகுமுறைகளையும்
ஆட்டம் காண
வைக்கின்றன. இவை, பால்
தொடர்பான
பாத்திரங்கள் மற்றும்
கருத்தியலில்
முற்போக்கு
மாற்றங்களைக்
கொண்டு
வருவதோடு
கூடவே புதிய ஆணாதிக்க
கவலைகளையும்
பதட்டங்களையும்
வன்முறையையும்
கொண்டு
வருகின்றன.
4. இந்த
மாற்றங்களின்
முன்பாக, மரபார்ந்த
சாதீய
ஆணாதிக்க
சக்திகள்
புதுப்பிக்கப்பட்ட
தாக்கும்
தன்மையுடன்
தம்மை அறுதியிட்டுக்
கொள்கின்றன.
பெண்களின் பாலியல்
தன்மை, நடமாட்டம், மறுஉற்பத்தி ஆற்றல்
ஆகியவற்றின்
மீது
கட்டுப்பாட்டை தக்கவைக்கப்
பார்க்கின்றன.
பெண்களின் புதிதாகக்
கண்டறியப்பட்ட
உரிமைகளாலும்,
சுதந்திரத்தாலும்
அச்சுறுத்தப்படும்
நிலம் மற்றும்
சொத்துக்கள்
மீதான
ஆணாதிக்க நிலப்பிரபுத்துவ
ஏற்பாடுகளைப்
பாதுகாக்க முயல்கின்றன.
இந்த
சக்திகள் ஏதோ
ஒரு நிலப்பிரபுத்துவ
கடந்த
காலத்தைச்
சேர்ந்தவை அல்ல, இவை நவீன
காலங்களுக்கு
ஏற்ப தமக்கு மறுவடிவம்
தந்து
கொள்கின்றன.
பல
நேரங்களில்
ஆளும்
வர்க்கக்
கட்சிகளின்
நிறப்பிரிகை நெடுக
இவர்களுக்கு
அரசியல்
ஆதரவு கிடைக்கிறது.
இந்த
ஆணாதிக்க
பிற்போக்கு சக்திகள்
தம்மை
நிலவும்
கட்டமைக்கப்பட்ட வடிவத்திலும்
மூர்க்கமாகவும்
பசுமைப்புரட்சி நடந்த
விவசாயத்தில்
முதலாளித்துவ
வளர்ச்சி நன்கு தெரிகிற
பஞ்சாப், ஹரியானா
மற்றும் மேற்கு
உத்தரபிரதேசத்தில்
வெளிப்படுகின்றன என்பது
மிகவும்
கவனிக்கத்
தக்கதாகும்.
5. பல
நேரங்களில்
சாதி மற்றும்
மத மீட்பு வாதம்
ஆகியவற்றுடன்
சேர்ந்து
வரும் ஆணாதிக்கப்
போக்குகள்
நகரப்
பின்புலத்திலும் தொழில்முறை
மத்திய தர
வர்க்கத்திலும்
கூட வலுவாக
உள்ளதைக்
கண்டாக
வேண்டும். பெண்களுக்கெதிரான
வன்முறை
தொடர்பான சட்டங்களைக்
குறி
வைக்கும்
குடும்பத்தைக் காப்போம்
வகைப்பட்ட
அமைப்புக்களும்
கூட, பெண்கள்
அறுதியிடலுக்கு
எதிரான
அப்பட்டமான
ஆணாதிக்க
எதிர்வினையாக
உள்ளன. நகர்மய்யங்களிலும்
தொழில் துறை
மத்திய தர வர்க்கத்திலும்
பரவலாகக்
காணப்படும்
தீவிரமான
ஆணாதிக்க
அறுதியிடலை, மேலோட்டமான
நவீனத்துவ
பளபளப்பு
மறைத்துவிட முடியாது.
6. இன்றைய இந்தியாவில் ஜனநாயகம் மற்றும் புரட்சிகர சமூக மாற்றத்திற்கான போராட்டத்தில், குடும்பம் வீடு, சமூகம் பொது நிறுவனங்கள் மற்றும் அரசு ஆகியவற்றில் வெளிப்படும் ஆணாதிக்கத்திற்கு எதிரான பெண்களின் அறுதியிடலும் எதிர்ப்பும், ஒரு கேந்திரமான அரங்கங்களாகும். ஒட்டுமொத்த கம்யூனிச இயக்கமும் இதனை ஒரு கேந்திரமான புரட்சிகர கடமையாக இறுகப் பற்றிக்கொள்ள வேண்டும்.
பெண்களுக்கெதிரான
வன்முறை
7. நாடெங்கும்
பெண்களுக்கெதிரான வன்முறை
ஒரு மய்ய
விவகாரமாக
எழுந்துள்ளது.
குறிப்பாக
உ.பி., பீகார், அரியானா,
மேற்கு வங்கம்,
டெல்லி,
ஆந்திரா,
அஸ்ஸôம்
மாநிலங்கள்
இவ்விசயத்தில்
கவனம் ஈர்க்கின்றன. தேசிய
குற்றப்பதிவுகள்
அமைப்பின்
விவரங்கள் படி 1971ல்
இருந்து 2010 வரை
பாலியல்
வன்முறை
நிகழ்ச்சிகள்
791
சதம்
உயர்ந்துள்ளன. இதே
காலத்தில்
அதற்கான
தண்டனை
விகிதம் 41
சதத்திலிருந்து
27
சதமாக
குறைந்துள்ளது.
8. பெண்கள்
இயக்கம்
நீண்ட காலமாக நடத்துகிற
இயக்கங்கள்
மூலமாக
அரசாங்கம் பெண்கள்
மீதான
வன்முறை
தொடர்பான புதிய
சட்டங்களை
இயற்றுமாறு
நிர்பந்திக்கப்பட்டுள்ளது.
குடும்ப
வன்முறை மற்றும் பாலியல்
துன்புறுத்தல்
ஆகியவை
குற்றங்களாக சட்ட
அங்கீகாரம்
பெற்றுவருகின்றன.
பலவிதமான
பாலியல்
தாக்குதல்களையும்
பாலியல் வன்முறை
என்ற
விவரிப்புக்குள்
கொண்டு வருவதன்
மூலம்
பாலியல்
வன்முறை
தொடர்பான சட்டங்கள்
திருத்தங்கள்
செய்யப்பட்டுள்ளன. ஆனபோதும்,
இந்த பல
சட்டங்களும்
ஆணாதிக்க
அனுமானங்களைத்
தொடர்ந்து
தக்க வைத்துக்
கொண்டுள்ளன.
குற்றவியல்
நடைமுறை (திருத்தம்)
மசோதா 2011 குறிப்பாக தன்னுடைய
வரம்பிலிருந்து
திருமண
உறவிற்குள்
பாலியல்
வன்முறை
என்பதை
விலக்கி வைத்துள்ளது.
அதுபோல
கட்டமைக்கப்பட்ட மதவெறி
சாதீய
வன்முறையின்
போது இராணுவக்
காவலின்போது
நிகழும்
பாலியல் வன்முறை
நிகழ்வுகளை, இது
குறிப்பாக கணக்கில்
கொள்ளவில்லை.
ஆனபோதும் இது,
காவல்
அதிகாரிகள், அரசு
ஊழியர்கள், காவலில் மேற்கொள்ளும்
பாலியல்
வன்முறை, சிறைகள் மருத்துவமனைகள்
ரிமாண்ட்
நிலையங்களின் நிர்வாகத்தினர்
ஊழியர்கள்
மேற்கொள்ளும் பாலியல்
வன்முறை
மற்றும்
கூட்டு
பாலியல் தாக்குதலுக்கு,
மேலும்
கடுமையான
தண்ட னைக்கு
வழி
செய்கிறது.
பணியிடத்தில்
பெண்கள்
மீதான
பாலியல்
துன்புறுத்தல்
தொடர்பான மசோதா
பொய்யான
புகார்களுக்காகப் பெண்களைத்
தண்டிக்க
முனைகிறது.
இந்நடவடிக்கை
பெண்களைப்
புகார்
செய்யவிடாமல் தடுக்கும்.
இம்மசோதா
இன்னமும்
மாணவர் கள், ஆயுதப்
படைகளில்
உள்ள பெண்கள்,
விவசாயத்
தொழிலாளர்கள்
உள்ளிட்ட, பணியிடங்களில்
பணியாற்றும்
அனைத்துப் பெண்களையும்
உள்ளடக்கவில்லை.
குடும்ப
வன்முறைச்
சட்டத்தைத்
தொடர்ந்து
பெண்களுக்கான
திறன்வாய்ந்த
பாதுகாப்பு
இடங்களை அரசாங்கம்
இன்னமும்
உருவாக்கவில்லை.
மேலும், பல
நிகழ்வுகளில்
கட்டமைக்கப் பட்ட
பெண்கள்
விரோத
சக்திகளின்
நிர்ப்பந் தத்திற்கு
அடிபணியும்
தங்கள்
தயார்நிலையை அரசாங்கங்கள்
காட்டியுள்ளன.
உதாரணமாய், கடுமையான
குடும்ப
வன்முறை
மற்றும்
வரதட் சணை
கொடுமை
பற்றிய
பிரிவு 498 எக்கு திருத்தம்
முன்வைப்பதன்
மூலம், வரதட்சணை சட்டங்களுக்கு
எதிரான
கட்டமைக்கப்பட்ட இயக்கத்திற்கு
மத்திய
அரசாங்கம்
அடிபணிகிறது.
9. பால்சார்ந்த
வன்முறை எந்த
அளவுக்கு பரவலாக
இருக்கிறதோ
அதே அளவுக்கு தனிநபர்கள்
குழுக்கள்
மட்டுமல்லாமல்
காவல்
அதிகாரிகள்
அரசியல்வாதிகள்,
நீதித்துறையினர் ஆகியோர்
பாதிக்கப்பட்ட
பெண்ணை
குற்றம் சொல்வதன்
மூலம்
வன்முறையை
நியாயப்படுத்தும்
போக்கும்
உள்ளது.
இதற்கு
அவர்கள் ஆடை, நடத்தை, குடும்ப
மாண்புகள்
ஆகிய ஆணாதிக்க
விதிகளை
பயன்படுத்துகிறார்கள். இத்தகைய
ஆணாதிக்க
பொதுபுத்திக்கு
சவால் விடுவது
பெண்கள்
மீதான
வன்முறையை எதிர்ப்பதில்
ஒரு
கேந்திரமான
விசயமாகும்.
10. பாலியல்
வன்முறை
எப்போதும்
மக்கள் இயக்கங்கள்
மீதான அரசு
ஒடுக்குமுறை
மற்றும் பிற்போக்கு
தாக்குதலின்
ஒரு கருவியாக தொடர்கிறது.
பழங்குடியின
பள்ளி
ஆசிரியரான சோனிசோரி
சட்டிஸ்கர்
மாநிலத்தில்
காவலில் பாலியல்
வன்முறைக்கும்,
சித்ரவதைக்கும் ஆளானது,
வடகிழக்கு
மற்றும்
காஷ்மீரில்
ஆயுதப் படைகளால்
பெண்கள்
பாலியல்
வன்முறைக்கும்
படுகொலைக்கும்
ஆளானது, பெரும் தொழில்குழும
நில
அபகரிப்பை
எதிர்த்த
தபசி மாலிக்
போன்ற பெண்கள்
பாலியல்
வன்முறைக்கு ஆளானது
போன்ற
விசயங்கள்
இன்று, பெண்கள்
இயக்க
போராட்டத்தின்
அணிதிரட்டும் பிரச்சனைகளாக
உள்ளன. 2004ல்
ஆயுதப்படைகள்
சிறப்பு
அதிகாரச்
சட்டத்திற்கெதிரான மணிப்பூர்
பெண்களின்
போராடட்டம்,
2010ல் காஷ்மீர்
வீதிகளில்
அரசு
ஒடுக்குமுறைக்கெதிராக
நடந்த
போராட்டங்களில்
பெண்களின் போக்குணமிக்க
பங்கேற்பு
ஆகியவை
மிகவும் குறிப்பாக
உற்சாகம்
தருபவையாக
அமைந்துள்ளன.
11. மதரீதியான
மற்றும், சாதிய
வெறியாட்டங்களில்
பாலியல்
வன்முறை ஒரு
மய்ய இடத்தைப்
பெறுகிறது. 2002ல்
குஜராத், 2006ல் கயர்லாஞ்சி,
2008ல்
கந்தமால் ஆகிய
இடங்களில்
நடந்த
மிகப்பெரிய
படுகொலைகளோடு சேர்ந்து
நடந்த
பாலியல்
வன்முறை
சம்பவங்கள் முக்கிய
நிகழ்ச்சிகளாகும்.
நாடெங்கும் தலித்துகள்
மற்றும்
பிற்படுத்தப்பட்ட
சாதியினரின்
அரசியல்
அறுதியிடல்
வன்முறையுடனான
நிலப்பிரபுத்துவ
பிற்போக்கால்
எதிர்கொள்ளப்படுகிறது.
குறிப்பாக
இந்த
ஒடுக்கப்பட்ட
சமூகப் பெண்கள்,
நிலப்பிரபுத்துவ
சக்தி களால்
பொது
இடங்களில்
சிறுமைப்படுத்தப் படுகின்றனர்.
பாலியல்
வன்முறைக்கு
ஆளாக்கப்படுகின்றனர்.
மத
நிறுவனங்களில்
அல்லது போலிச்
சாமியார்களால்
பெண்கள்
பாலியல்ரீதி யாகச்
சுரண்டப்படுவதும்
தவறாகப் பயன்படுத்தப்படுவதும்
பொதுவாக
நடக்கிறது.
12. பெண்கள்
அறுதியிடல், குறிப்பாக,
இளம்பெண்கள்,
கல்வி, வேலைவாய்ப்பு,
சொத்தில்
பங்கு, தனிவாழ்க்கையில்
இணையர் தேர்வு
உள்ளிட்ட
கூடுதல்
சுதந்திரம், ஆகியவை,
சாதிய
கட்டமைப்பை, சொத்து
மாற்றம் தொடர்பான
நிலப்பிரபுத்துவ
விதிகளை அச்சுறுத்துகிறது.
வெளிப்படையான
ஆணாதிக்க தாக்குதல்களை
எதிர்கொள்கிறது.
பல சம்பவங்களில்,
இந்தத்
தாக்குதல்
ஆணாதிக்க, அல்லது
குடும்ப
ஆளுமையாக, மென்மையாக வெளிப்படும்
வடிவம்
எடுத்து
பெண்களின் மகள்
என்ற
விசுவாசத்திற்கும்,
இந்திய
தாய்கள் மற்றும்
மனைவியரின்
புனிதமான கடமைகளுக்கும்
நற்குணங்களுக்கும்
அழைப்பு
விடுக்கி றது.
வேறு சில
நிகழ்வுகளில்
இது
குடும்பத்திற்குள்
‘கவுரவ’
குற்றங்கள்
என்ற வடிவம் எடுக்கிறது.
அதிகரித்த
அளவில், கவுரவ
குற்றங்களும்
தார்மீகக்
காவலும் கட்டமைக்கப்பட்ட சமூக
அரசியல்
வடிவெடுக்கின்றன.
சங்பரிவார் அமைப்புக்கள்,
காப்
பஞ்சாயத்துக்கள்
மற்றும் எல்லா
மதங்களிலும்
இதர
பிற்போக்கு
அமைப் புக்கள்
சாதிய மதவாத
மற்றும்
ஆணாதிக்க கட்டளைகளை
நிறைவேற்ற
கட்டமைக்கப் பட்ட
தாக்குதல்களை
கட்டவிழ்த்துவிடுகின்றன.
13. தார்மீகக்
காவலிலும் ‘கவுரவ’ குற்றங்களிலும்
ஈடுபடும்
இத்தகைய கட்டமைக்கப் பட்ட
சக்திகளை
எதிர்கொள்வதில்
அரசாங்கங்கள்
எந்த மன
உறுதியையும்
காட்டுவதில்லை. மாறாக
அரசியல்
சக்திகளுக்கும்
அரசு எந்திரத்திற்கும்
இடையே ஓர்
உயர்ந்த அளவு
கூட்டு நிலவுகிறது.
‘கவுரவ’
குற்றங்கள்
தொடர்பான பல
நிகழ்வுகளில்
மேல்சாதியினரே
திருமணத்தில்
சாதி எல்லைகளை
மீறியதற்காக
தங்கள் சொந்த
சாதி அல்லது
ஒடுக்கப்பட்ட
சாதி பெண்கள்
மீது
வன்முறையை
கட்டவிழ்த்து விடுகின்றனர்.
ஆனால் ‘கவுரவ’ குற்றங்கள் ஆதிக்க
சாதியினர்
மட்டுமே
ஈடுபடுபவையாக இல்லை.
ஆதிக்க
சாதியினரால்
கவுரவத்திற்கு தகுதியில்லாதவர்கள்
என முத்திரை
குத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட
சாதிகள்
மற்றும்
பழங்குடி சமூகங்களைச்
சேர்ந்தவர்களும்
தங்கள் சமூக பெண்களின்
பாலுணர்வு
மற்றும்
சுதந்திரத்தை
கட்டுப்படுத்துவதன்
மூலமாக
ஆணாதிக்க கவுரவத்திற்கு
சொந்தம்
கொண்டாட
விரும்புகின்றனர்.
14. அனைத்து
சாதிகளிலும்
வர்க்கங்களி லும்
பெண்களுக்கு
எதிரான
குடும்ப
வன்முறை பரவியுள்ளது.
இது ஆணாதிக்க
சமூகத்தில், ஆண்களுக்கும்
பெண்களுக்கும்
இடையிலான உறவுகள்
திருமணம், குடும்பம்
போன்வற்றில் அடிநாதமாக
இருந்தன.
அடிப்படையிலான ஜனநாயகமின்மையும்
சமத்துவமின்மையையும்
மிருகத்தனமான
விதத்தில்
குறித்துக்
காட்டும் ஒரு
விசயமாகும்.
பாதுகாப்பற்ற
வேலைகளும் வேலையின்மையும்
மோசமான
திருமண உறவுகளில்
சிக்கியுள்ள
பெண்களை
மேலும் பாதுகாப்பற்றவர்களாக்கும்.
15. பால்
தேர்வு, கருச்சிதைவு,
பெண்
சிசுக் கொலை
போன்றவை, கிராமங்களிலும்
நகரங்களிலும்
செழிக்கின்றன.
குழந்தை
பிறப்புக்கு முன்பே,
பால்
அறியும்
தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த
கூடுதல்
வாய்ப்புக்கள்
கொண்ட வசதி
படைத்தவர்கள்
மத்தியில்
இது கூடுதலாக நிகழ்கிறது.
சமீபத்திய
மக்கள் தொகை
கணக் கெடுப்பில்
0 - 6
வயது
எல்லையில் 1000 ஆண் குழந்தைகளுக்கு
914
பெண்
குழந்தைகளே உள்ளனர்.
இந்திய
சுதந்திரத்துக்குப்
பிறகு இதுவே, ஆகக்குறைந்த
பெண்களுக்குப்
பாதகமான விகிதாச்சாரமாகும்.
கரு
உருவாவதற்கு முந்தைய,
குழந்தை
பிறப்புக்கு
முந்தைய, கண்டறியும்
தொழில்நுட்பங்கள்
தொடர்பான சட்டங்கள்
அமலாக்கத்தில்
அரசாங்கங்கள் வேண்டுமென்றே
கணக்குக்
கொள்ளாமல் உள்ளன.
அதனால்தான்
குழந்தை பிறப்புக்கு முன்
பால் அறியும்,
பால்
தெரிவு, கருச்சிதைவு என்ற,
அறங்களுக்கு
விரோதமான
மருத்துவ தொழில்
தடையின்றி
செழித்திருக்க
அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஆண் குழந்தை
தேர்வு, பால் தேர்வு,
கருச்சிதைவு
போன்றவற்றை
எதிர்ப் பதில்
மேலே
குறிப்பிடப்பட்டுள்ள
சட்டங் களை
அமலாக்குவதோடு,
ஆணாதிக்கத்தோடு மோதுகின்ற,
சமூகத்தில்
பெண்களின்
மதிப்பையும்
கவுரவத்தையும்
உயர்த்துகிற
பலப்பல நடவடிக்கைகள்
தேவை.
16. பெண்கள்
சார்பு
சட்டம்
கோரும் இயக்கம்,
பெண்களின்
உரிமைகளையும்
பாதுகாப்பையும்
காக்கத்
தவறும்
அரசாங்கங்கள் மற்றும்
அரசியல்
கட்சிகளுக்கு
எதிர்ப்பு, பெண்களின்
அண்மைப்
பகுதி
கண்காணிப்பு
போன்ற இயக்கங்கள்,
பலியானவர்
மீது பழி
போடுவது, ஆண்பிள்ளை
தேர்வு, குடும்ப
வன்முறை, கவுரவ
குற்றங்களுக்கு
எதிரான
படைப்பாற்றல் மிக்க
இயக்கங்கள், கல்வி, காதல், உடைகள்,
வாழ்முறை
ஆகிய அனைத்து
அரங்கங்களிலும் சுதந்திரமாக
முடிவெடுக்கும்
பெண்களின்
உரிமையை ஆதரிப்பது
என்பவற்றைக்
கொண்ட, வன்முறைக்கு
எதிரான ஒரு
சக்திவாய்ந்த
பல அடுக்கு
எதிர்ப்பு
கட்டப்பட
வேண்டும்.
பெண்கள்,
வேலை
மற்றும்
ஆணாதிக்கம்:
17. பொருளாதார
தாராளமயமாக்கம்,
ஆபத்தான,
பாதுகாப்பற்ற
துறைகளில்
பெண்களுக்கு
பெரும்
எண்ணிக்கையில்
வேலை
வழங்கியிருக்கிறது.
இந்தத்
துறைகளில்
சுரண்டல் பொருளாதாரரீதியானது
மட்டும் அல்ல.
இந்தச் சுரண்டலில்
பாலியல்தன்மை
ஒரு
முக்கியமான கருவி.
உதாரணத்திற்கு
தமிழக ஜவுளி
ஆலை களில்
இளம் பெண்கள்
கடுமையான
ஜனநாயக மற்ற
சுரண்டல்
சூழலில் வேலை
செய்யும்படி ஆளாக்கப்படுகிறார்கள்.
ஆனால் இது “சுமங் கலித்
திட்டம்” என்ற
பெயரால்
சாத்தியமாகிறது.
சமூகத்தில் இளம்
பெண்களின்
திரும ணம்
மற்றும்
வரதட்சனை
பற்றிய
பரவலான கவலை
இருப்பதால், இளம்பெண்கள்
தங்களுக்கான
வரதட்சணையை
சம்பாதித்துக்கொள்வது
என்ற பெயரால்
இத்திட்டம்
ஊக்கு விக்கப்படுகிறது.
மத்திய
அரசாங்கத்தில்
ஆஷா, மதிய
உணவு
(பள்ளிகளில்)
அங்கன்வாடி
திட்டங்களும்
கூட
பெண்களின்
தன்னலமில்லாத,
ஊதியமில்லாத,
குடும்பத்துக்கும்,
சமூகத்துக்குமான
“சேவை”
என்ற
தந்தைவழிச்
சமூக
கருத்துக்களின்படி
அரசு
ஊழியர்களுக்கான
முழுச் சம்பளம்
மற்றும்
சலுகைகளைத்
தருவதற்கு மாறாக
“கவுரவ
ஊதியம்” என்று
மிகக்
குறைவான
ஊதியம்
கொடுப்பதை
நியாயப்படுத்தி சுரண்டுகின்றன.
18. பெண்கள்
வேலையிடத்துக்கு
நுழையும்போது,
பாலினப்
பாகுபாட்டை
அங்கு எதிர் கொள்ள
வேண்டியுள்ளது.
பெண்களுக்கு தொடர்ந்து
ஒரே வேலைக்கு
ஆண்களை விட குறைவான
ஊதியமே
வழங்கப்படுகிறது. அவர்கள்
பாரபட்சமான
விதிகளுக்கும்
ஆளாக்கப்படுகிறார்கள்
(ஆடை விதிகள்,
தோற்றம் பற்றிய
பாலுணர்வு
விதிகள், இன்ன பிற). கவுரவமிக்க
அதிக சம்பளம்
தரும்
வேலைகளிலும்
பாலின
பாகுபாடு
வியாபித்திருக்கிறது. ஏர்
இந்தியா
நிறுவனத்தில்
விமான ஓட்டி அறையில்
வேலை
செய்யும்
பெண்கள், மேற் பார்வையாளர்களாக
தங்களைப்
பணிக்கமர்த்தும்
உரிமையை
நீண்ட
போராட்டத்திற்கு பிறகு
சமீபத்தில்தான்
பெற்றிருக்கிறார்கள். ராணுவத்தில்,
ஜவான்கள்
பெண்களிடமிருந்து உத்தரவு
பெறுவதை
எதிர்பார்க்க
முடியாது என்ற
காரணம்
காட்டி
பெண்கள்
அதிகாரிகளாக
நியமிக்கப்படுவது
மறுக்கப்பட்டு வருகிறது.
பெண்களின்
தோற்றம்
போன்ற ஒடுக்குமுறை
விதிகள்
பொதுவாக
பெண்களைப் பாகுபடுத்துவதோடு,
குறிப்பாக
தலித் மற்றும்
ஆதிவாசி
பெண்களுக்கு
எதிரானது மாகும்.
சமீபத்தில், மகாராஷ்ட்ராவில்
விமான ஓட்டி
பயிற்சி
பெற்ற
ஆதிவாசி பெண்,
அவரின்
உடல்வாகு
ஈர்ப்புடையதாக
இல்லை என்ற காரணத்தால்,
விமானத்
துறையில்
அவருக்கான வேலை
நிராகரிக்கப்பட்டது.
19. வீட்டிலும்,
குடும்பத்திலும்
பெண்களின்
உழைப்பு “கண்ணுக்கு
புலப்படாமலே”
வைக்கப்பட்டுள்ளது.
“இயற்கையான”
அல்லது “முதன்மையான”
கடமை
என்பதாக
பெண்கள் உழைப்பின்
குணாம்சம்
கருத்தியல்ரீதியான போர்வைகளில்
மூடிமறைக்கப்பட்டுள்ளது. மக்கள்
தொகை
கணக்கெடுப்பும்
“சமையல்,
பாத்திரம்
கழுவுதல், குழந்தைகள்
பராமரிப்பு, தண்ணீர்
எடுப்பது, விறகு
சேமித்தல்” ஆகிய வற்றில்
ஈடுபடும்
பெண்களை
உற்பத்தி விளைவு
தராத
தொழிலாளர்
அல்லாதவர்கள் என்கிறது.
அதே நேரம்
வீட்டிற்குள்
பெண்களின் உழைப்பு
என்பது
சமூகத்தில்
முதன்மையான
பணி என்று
சொல்வதன்
மூலம், ஆண்கள்
ஈட்டும்
வருமானத்துக்கு
“இது கூடுதல்”
மட்டுமே
என்ற
முகாந்திரத்தில்,
பெண்களுக்கு
பணியிடத்தில்
குறைவான ஊதியம்
வழங்கப்படுவதற்கான
காரணமாக்கப்படுகிறது.
நவதாராளவாத
கொள்கைகளும்,
அதன்
விளைவாக சமூக
கடமைகளான
கல்வி, மருத்துவம்
மற்றும்
சுகாதாரமளித்தல்
ஆகிய வற்றிலிருந்து
அரசு
பின்வாங்குவதும்
வீட்டிலும், சமூகத்திலும்
பெண்களின்
ஊதியமில்லாத வேலையின்
சுமையை
அதிகரிக்கச்
செய்தி ருக்கிறது.
20. வீட்டு
வேலையை
வேலையல்ல
என்று வகைப்படுத்தியதை
அடுத்து
உச்சநீதிமன்றம் விமர்சனம்
செய்த
பின்னணியில்
வீட்டு வேலைக்கான
அரசின்
பொருளாதார
மதிப்பின் அடிப்படையில்
பெண்கள்
மற்றும்
குழந்தைகள் மேம்பாட்டு
அமைச்சகம், கணவன்மார் மனைவிகளுக்கு
கவுரவ ஊதியம்
வழங்க வேண் டும்
என்ற முன்வைப்பை
வைத்தது. இந்த முன்வைப்பு
மிகவும்
தவறானது.
ஓட்டைகள் உடையது.
உண்மை
என்னவென்றால் பெண்களின்
ஊதியமில்லாத
வீட்டு வேலை முதலாளித்துவத்திற்கு
மானியமாக
அமைந்து தொழிலாளர்களின்
ஊதியத்தை
குறைக்க உதவுகிறது.
கணவன்மார்
மனைவிக்கு
அளிக்கும்
ஊதியம் எந்த
வகையிலும்
குடும்ப
வருமானத்தைக்
கூட்டுவதில்லை.
ஆகையால், கணவன்மார்
மனைவிக்கு
ஊதியம் வழங்க
வேண்டும்
என்பதில்
எவ்வித
அர்த்தமும்
இல்லை. மேலும்
அம்மாதிரி
ஊதியத்தை
கணவர்
வழங்குவது
பாலின
அடிப்படையிலான
வேலைப்பிரிவினையை
சட்டபூர்வமானதாக்கி,
வீட்டு
வேலைகளை
கணவர்
பகிர்ந்து
கொள்வது என்ற
கடமையிலிருந்தும்
அவரை
விடுவிக்கிறது. குடும்பத்தின்
மொத்த நிதி
விவகாரங்களிலும் சமமான
கட்டுப்பாட்டுக்கான
பெண்களின்
உரி மையை
மறுதலிப்பதன்
மூலம், குடும்பத்துக்குள் சமனற்ற
கட்டுப்பாட்டை
நியாயப்படுத்தக் கூடும்.
மட்டுமின்றி,
பெண்கள்
கவுரவ
ஊதியத்தின்
மீது மட்டுமே
உரிமையுடையவர்கள் என்பதையும்
மறைமுகமாக
அர்த்தப்படுத்துவதாகிவிடும்.
வீட்டுக்குள்
பெண்கள்
உழைப்பின் சமூக,
பொருளாதார
பங்களிப்பை
அங்கீகரிப்பதென்பது,
மூச்சுத்
திணறும் அந்த
வீட்டு வேலையின்
பணிச்
சுமையிலிருந்து
பெண்களின் சுதந்திரத்துக்கு
வழிவகை
செய்வதன்
மூலமே அர்த்தமுடையாகும்.
பெண்களுக்கு
வேலை என்பதோடு,
அரசு
குழந்தைகள், முதியோர் இலவச
பராமரிப்பு, இலவச
மருத்துவம், மற்றும் பல்வேறு
வடிவங்களிலான
சமூக ஆதரவு
ஆகிய வற்றையும்
செய்தால்
மட்டுமே
சாத்தியம்.
21. உலகமயமாக்கலின்
விளைவாக உழைப்பு
பெண்
மயமாக்கப்பட்டுள்ளது
என்ற உரத்த
கூப்பாடு
நிலவுகிறது.
ஆனால், “பெண்களின்
பொருளாதார
பங்களிப்பு
மற்றும் வாய்ப்பு”
என்ற
கேள்வியில், ஒரு
சர்வதேச ஆய்வு, மொத்த 134
நாடுகளில்
இந்தியாவிற்கு 131ம்
இடத்தை
தருகிறது. 15
வயதிற்கு மேற்பட்ட
பெண்களில் 85 சதம்
ஆண்களோடு ஒப்பிடும்போது
35%
பேர் மட்டுமே
பொருளாதார
நடவடிக்கைகளில்
ஈடுபடுகிறார்கள். (அதாவது
வேலை
பார்ப்பவர்கள்
அல்லது வேலை
தேடுபவர்கள்).
பெண்களின்
வேலை வாய்ப்பின்மை
மிகவும்
அதிகமாக, சில
சந்தர்ப்பங்களில்
ஆண்களைவிடக்
கூட அதிகமாக உள்ளது.
உதராணத்துக்கு
2004 - 2005ம் ஆண்டு
61ஆவதுச்
சுற்று தேசிய
புள்ளிவிவர அமைப்பின்
கணக்கெடுப்புப்படி,
20 - 24 வயதுக்குட்பட்டோரில்
12%
கிராமப்புற ஆண்களும்,
15%
கிராமப்புற
பெண்களும் அதே
போல் 16% நகர்ப்புற
ஆண்களும், 27% நகர்ப்புற
பெண்களும்
(வேலை
கிடைக்காமல் வேலை
தேடிக்
கொண்டிருப்பவர்கள்) என்பதாக
வேலையின்மை
விகிதம்
உள்ளது.
22. ஆண்களுக்குத்
தருவதை விடக் குறைவாக
பெண்களுக்கு
சம்பளம்
தரமுடியும் என்ற
விதத்தில் “கூடுதல்/துணை”
தொழிலாளர்கள்
என்று
பெண்கள்
பார்க்கப்படுவதால்,
சில
வேலைகளுக்கு
பெண்கள்
மிகவும்
பொருத்தமானவர்கள்
என்று
பார்க்கும்
ஆணாதிக்கக் கருத்துக்களால்
சில
குறிப்பான
துறைகளில் பெண்கள்
உழைப்புக்கு
உண்மையில்
முன்னுரி மையளிக்கப்படுகிறது.
ஆகவே பெண்கள் முறைசாரா
வேலைகளில் 3 ஈ என்று
அழைக்கப் படுகிற - dirty, dangerous,
demeaning அழுக்கான,
அபாயகரமான,
தரக்குறைவான
வேலைகளில்
தங்கள்
எண்ணிக்கையை
விட அதிகமாக பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறார்கள்.
பெண்கள்
சங்கத்தில் அமைப்பாகுவதோ
அல்லது போராட்டத்தில்
ஈடுபடுவதோ
(இக்கருத்துக்கு எதிராக
பல முன்
மாதிரிகள்
இருந்த
போதும்) குறைவு
என்ற
காரணத்தாலும்,
சமமற்ற
பாலின உறவுகள்
நிலவுவதால்
பெண்களை
இலகுவாக நிர்ப்பந்தப்படுத்த
முடியும்
என்பதாலும்
சில நேரங்களில்
வேலைக்கமர்த்துவதில்
பெண்களுக்கு
முன்னுரிமை
இருக்கிறது.
23. சுய
உதவிக்
குழுக்கள் “பெண்கள் அதிகாரத்துக்கான”
முக்கியமான
வாகனமாக அரசாங்கத்தால்
அவ்வப்போது
முன்னிறுத்தப்படுகிறது.
ஆனால் நுண்
நிதி
நிறுவனங்களும் சுரண்டலில்
ஈடுபடுவதோடு
ஆணாதிக்கக் கட்டமைப்பை
பலப்படுத்துகின்றன.
பெண்கள் இடம்
பெயர்வது
குறைவு
என்பதாலும், சமூக நிர்ப்பந்தங்களுக்கு
எளிதில்
ஆளாகக் கூடியவர்கள்
என்பதாலும்
அவர்களை “மேலான கடனாளிகளாக”
(Better borrowers)
பார்க்கும் பார்வை
உள்ளது. நுண்
நிதி
நிறுவனங்கள் பெண்களுக்கு
அதிகாரமளிப்பதற்குப்
பதிலாக அவர்களை
கடன்
பொறியில்தான்
தள்ளியிருக்கிறது.
நுண் நிதி
நிறுவனங்களின்
சுரண்டும் வட்டி
விகிதங்களும்,
கடனை
திருப்பிச்
செலுத் தாதவர்கள்
இழிவுபடுத்தப்படுவதும்,
கடனைத் திருப்பிச்
செலுத்த
வேண்டி
பெண்களை பாலியல்
தொழிலுக்கு
தள்ளியிருக்கிறது.
சமீபத் தில்
ஆந்திரப்
பிரதேசத்தில்
50
பெண்களை தற்கொலைக்கும்
தள்ளியிருக்கிறது.
வங்கி கடன்
பெறவோ அல்லது
நிறுவனக்
கடன் பெறவோ
ஆண்களை விட
பெண்களுக்கு சாத்தியப்பாடு
குறைவாகவே
உள்ளது.
பெண்களுக்கான
இந்த
சாத்தியப்பாட்டை
அதிகரிப்ப தற்கு
பதிலாக
அரசாங்கங்கள்
நுண் நிதி நிறுவனங்களிலேயே
கவனம்
குவிக்கிறது. ஆனால்
நுண் நிதி
நிறுவனங்கள்,
கந்து
வட்டிக்காரர்களின்
சுரண்டலில்
இருந்து
பெண்களை விடுவிக்கவில்லை.
பல
சம்பவங்களில்
நுண் நிதி நிறுவனக்
கடனை
அடைப்பதற்காக
கந்து வட்டிக்காரர்களிடம்
கடன்
வாங்கும்படி
பெண்கள்
நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள்.
இன்னும் கூடுதலான
அளவில், வங்கிகளும்,
பெருந்தொழில்
குழுமங்களும்
நுண் நிதி
நிறுவனங்களின்
வலைப்
பின்னலைப்
பயன்படுத்தி கிராமப்புற
ஏழைப்
பெண்களை, உலக
அளவிலான
சுரண்டல்
மற்றும்
லாபம் என்ற சுற்றுக்குள்
இழுத்துவிடுகின்றன.
24. உலகப்
பொருளாதார
நெருக்கடி, இந்தியா
போன்ற
வளர்ந்துவரும்
ஆசிய நாட்டு பெண்களின்
வேலை
வாய்ப்பிலும்
வாழ்க்கையிலும்,
குறிப்பாக
எதிர்மறைத்
தாக்கத்தை
ஏற்படுத்தியுள்ளது.
ஏனென்றால்
ஜவுளி, ஆயத்த ஆடை, காலணிகள்
மற்றும் தோல்,
மின்னணு நிறுவனங்கள்,
உணவு
மற்றும்
தங்கும்
விடுதிகள் மற்றும்
கட்டுமானம்
போன்ற
பெண்களுக்கு அதிகரித்த
அளவில் வேலை
வாய்ப்பளிக்கும் துறைகள்தான்
நெருக்கடியால்
கடுமையான பாதிப்புக்குள்ளாகியிருக்கின்றன.
2008ல்
உலக நெருக்கடி
ஏற்பட்டபோது
இந்தியாவில் வேலையிழந்த
7,00,000
துணி மற்றும்
ஜவுளித் தொழிலாளர்களில்
பெரும்பான்மையினர் பெண்கள்.
25. பெரும்
தொழில்
குழுமங்கள்
சில்லறை வர்த்தகத்தில்
நுழைவு
என்பதும் பெண்களின் வேலை
வாய்ப்பின்
மீதான அடியாக
இருக்கிறது. வேறு
துறைகளில்
வேலை
வாய்ப்பு
எதுவும் கிடைக்காத
பெண்கள்
பொதுவாக அடைக்கலம்
நாடுவது சிறு
சில்லறை
வர்த்தகத்தில்தான்
(சிறு கடைகள்
அல்லது
தெருவோர வியாபாரம்).
ஆனால் பெரும்
தொழில் குழும ஆட்டக்காரர்கள்
இத்துறையில்
நுழைந்த பிறகும்,
முறைசாரா
தொழிலாளர்களை அப்புறப்படுத்தும்
நகர
மேம்பாட்டுக் கொள்கைகள்
காரணமாகவும்
இத்துறைகளில்
பெண்களின்
வேலை
வாய்ப்பு
கணிசமாக
குறைந்து விட்டது.
பல்இலச்சினையில்
அந்நிய நேரடி முதலீடு
சந்தேகத்திற்கிடமில்லாமல்
இத்துறையில்
இன்னும்
பலமான
அடியைக் கொடுக்கும்.
26. உலகமயமாக்கத்தின்
விளைவாக, இந்தியாவிலுள்ள
பெண்களை
பாலியல்
வர்த்தகத்தில்
ஈடுபடுத்துவதற்கான
அபாயம்
கூடுதலாக
இருக்கிறது.
காதல் என்றோ
அல்லது வேலை
வாய்ப்பு
என்றோ ஆசை
காட்டி
உள்நாட்டுக்குள்ளும்,
வெளிநாட்டிற்கும்
பெண்களை
வர்த்தகம்
செய்வது
மூர்க்கத்தனமாக நடைபெறுகிறது.
இந்தியாவில்
உள்ள பெரும் பாலான
பாலியல்
தொழிலாளர்கள்
வற்புறுத்தப்பட்டோ,
கடத்தப்பட்டோ
அல்லது வன்முறையின்
மூலமோதான்
இத்தொழிலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளனர்.
சில
ஒடுக்கப்பட்ட சாதி
பெண்கள்
கொத்தடிமை
என்ற வடிவத்தின்
காரணமாக
இந்தப்
பாலியல்
தொழிலுக்கு தள்ளப்படுகின்றனர்.
தேவதாசி முறை
போன்ற வடிவங்களை
மத
நிறுவனங்கள்
ஊக்குவிக்கின்றன.
மேலும், பல
பெண்கள்
முறையான
சம்பளம்
பெறும்
பாதுகாப்பான
வேலைகள் இல்லாதபோது
பிழைப்பதற்கான
ஒரு வழியாக பாலியல்
தொழிலுக்கு
வலுக்கட்டாயமாக தள்ளப்படுகிறார்கள்.
ஏழை எளிய
பெண்களுக்கு
பாதுகாப்பான
மற்றும்
முறையான ஊதியமளிக்கும்
வேலை
மறுக்கப்படும்
போது பலரும்
சுரண்டும், அபாயகரமான
பாலியல் தொழிலில்
தஞ்சம்
புகும்படி
வலுக்கட்டாய மாக
தள்ளப்படுகின்றனர்.
நாம் சாதி, மத மரபு என்று
சொல்லி
நடைபெறும்
பாலியல் வர்த்தகம்
மற்றும்
அடிமை
முறைக்கு
முடிவு கட்டவும்,
பாலியல்
தொழிலாளர்களை
வற்புறுத்துவது,
சுரண்டுவது,
வன்முறை,
கொடுமைப்படுத்துவது
ஆகியவற்றிலிருந்து
பாதுகாக்கும்
நடவடிக்கைக்காகவும்,
பாலியல்
தொழி லாளர்கள்
மற்றும்
அவர்களைச்
சார்ந்திருப்பவர்களின்
முழுமையான
குடியுரிமை
மற்றும் சமூக சேவைகளை
வழங்கவும், அதுபோல
சூழ்நிலை காரணமாக
பாலியல்
தொழிலுக்கு
தள்ளப்படுவதற்கு
மாறாக
பெண்களுக்கு
பாதுகாப்பான கவுரவமான
வேலை
வாய்ப்புக்காகவும்
நாம் போராட
வேண்டும்.
அரசியல்
தளத்தில்
பாகுபாடு
27. நாடாளுமன்றத்திலும்,
சட்டமன்றத் திலும்
மோசமான
வகையில் பெண்கள் தொடர்ந்து
குறை
பிரதிநிதித்துவம்
பெற்றே வருகின்றனர்.
பெண்களின்
சுதந்திரம்
மற்றும் அறுதியிடலுக்கு
எதிராக
பீதியைப்
பரப்பி விடுவது
அரசியல்
மூலதனத்தை
அறுவடை செய்து
கொள்வதற்கான
வழியாக
அதிகரித்த அளவில்
முன்
வந்திருக்கிறது.
பெண்களுக்கான 33
சதம் இட
ஒதுக்கீடு
சிறந்த
உதாரணமாகும். இந்த
மசோதாவுக்கான
எதிர்ப்பு
இதர பிற்படுத் தப்பட்ட
பெண்களுக்கான
இட ஒதுக்கீடு என்ற
கோரிக்கை
மீது நிலை
நிறுத்தி
வைக்கப்பட்டுள்ளது.
மசோதாவை
எதிர்ப்பவர்கள்,
பெண்கள்
நாடாளுமன்றத்தில்
நுழைவதற்கு எதிரான
பால்பாகு
பாட்டு
வெற்றுக்
கூச்சல்களில்
வெளிப்படையாகவே
ஈடுபடுகிறார்கள். ஆளும்
அய்முகூ, (முன்னாள்
தேஜமு) பாலின பாகுபாட்டு
சக்திகள்
நாடாளுமன்றத்தில் மசேதா
கொண்டு
வரப்பட்ட
நாளை தங்கள் கையில்
எடுத்துக்
கொண்டு மசோதா
நிறை வேறவிடாமல்
தடுப்பதற்கு
வழி விட்டதன் மூலம்
தனது
உண்மையான
நிறத்தைக் காட்டியிருக்கிறது.
இதர
பிற்படுத்தப்பட்ட
பிரிவினர்
மற்றும்
சிறுபான்மையினருக்கான ஒதுக்கீடு
கோரிக்கை
மசோதாவை
நிறுத்தி வைக்கவோ
அல்லது
நீர்த்துப்
போகச் செய்யவோ
முன்நிபந்தனையாக
இருக்கக்கூடாது.
கால
தாமதமில்லாமல்
இந்த மசோதா ஏற்றுக்
கொள்ளப்படும்
போது, பெண்களுக்கான
33%
இடங்களுக்குள்
இக்கோரிக்கையை இணைத்துக் கொள்ள
முடியும்.
28. பஞ்சாயத்துக்களில்
50
சதம்
பெண்களுக்கான
இட ஒதுக்கீடு
உள்ளது. தேர்ந் தெடுக்கப்பட்ட
பெண்
பிரதிநிதிகள்
ஆணா திக்க
சக்திகளுக்கு
சவால்
விட்டுக்
கொண்டி ருக்கின்றனர்.
இருந்தபோதிலும்,
தேர்ந்தெடுக் கப்பட்ட
பெண்களுக்கு
பதிலாக
கணவன்மார்கள்
செயல்படுவது
என்கிற ஊராட்சிக் கணவர்
(பஞ்ச்பதி)
என்ற நோய் (syndrome) மற்றும்
பல்வேறு
வடிவங்களிலான
சாதிய மற்றும்
பால்பாகுபாடு
போன்ற
விதங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட
பெண்
பிரதிநிதி
சார்பாக கணவர்
செயல்படுவது,
வேறு
வடிவங்களிலான சாதி
மற்றும் பால்
பாகுபாடுகள்
போன்றவை தேர்ந்தெடுக்கப்பட்ட
பெண்
பிரதிநிதிகளுக்கு எதிரான
பாகுபாடு
தொடரவே
செய்கிறது. அனைத்து
மட்டங்களிலும்
அரசியலிலும்
பொது வாழ்விலும்,
பஞ்சாயத்து
மட்டத்திலிருந்து நாடாளுமன்றம்
மற்றும்
பெண்களின்
இயக்கங்கள்
வரை பெண்கள்
ஈடுபடுவது, எதிர்ப்பாளர்களின்
பாலியல்
மற்றும் பால்
சார்ந்த
பழிந்துரைகளை
எதிர்கொள்ள
வேண்டியிருக்கிறது.
29. இடஒதுக்கீட்டை
அடையாளவாதத்துக்கு
அப்பால்
எடுத்துச்
சென்று, பெண்களின் தேவைகள்
மற்றும்
கரிசனங்களுக்கு
ஆதரவான அரசியல்
மற்றும்
சமூகக்
கலாச்சார
சூழலை உருவாக்குவது
ஆகியவற்றுக்கு
நாடாளுமன்றம் மற்றும்
ஊராட்சிக்கு
அப்பால், பெண்களின் துடிப்பான
மற்றும்
சக்திவாய்ந்த
பங்களிப்பு அவசியமானதாகும்.
பெண்கள்
இயக்கமும்
தாராளமயமாக்கமும்
– சில கரிசனங்கள்:
30. தாராளமயமாக்கம்
பெண்கள்
இயக்கத்துக்கு
புதிய
சவால்களை
ஏற்படுத்தியதோடு,
பெண்கள்
இயக்கத்தின்
சில தொந்தரவு
தரும் போக்குகளையும்
உருவாக்கியிருக்கிறது. பெண்கள்
குழுக்கள்
பெருமளவில்
தன்னார்வ தொண்டு
நிறுவனமயமாக்கப்படுவதும்
அது போன்ற
குழுக்களுக்கு
அரசாங்கத்திடமிருந்தும்,
நிதி
முகவர்களிடமிருந்தும்
நிதி பாய்வதும் பெண்கள்
இயக்கத்தின்
சுயாட்சியை
கடுமை யாக
முடக்கி விடுகின்றன.
அரசாங்கங்கள்,
பல
சமயங்களில், தங்கள்
பொறுப்புகளை
தன்னார்வ
தொண்டு நிறுவனங்களுக்கு
அளிப்பதன் மூலம்
அதற்கான
நியாயத்தைப்
பெற்றுவிடுகின்றன.
கொள்கை
உருவாக்குவதிலும்,
அமல் படுத்துவதிலும்
தொண்டு
நிறுவனங்களை ஈடுபடுத்துவதென்பது
“பங்கெடுப்புடன்
கூடிய வளர்ச்சி”
என்று
சொல்லப்படுகிறது.
திட்ட அடிப்படையிலான
நிதி
ஒதுக்கீடு
என்பது பெண்கள்
அமைப்புகளை “ஒரு
பிரச்சினை அடிப்படையிலான
அமைப்பு” என்று
துண்டு துண்டாக்கி,
நிதி
அளிப்பவர்களை
அவர்கள் நிதி அளிக்கும்
குழுவுக்கான
நிகழ்ச்சி
நிரலைத் தீர்மானிக்க
வழி
விட்டுவிடுகிறது.
நிதியும், தொண்டு
நிறுவனமயமாக்கமும்
அரசு மற்றும் நவதாராளவாதப்
பொருளாதார
கொள்கைகளை
எதிர்கொள்ளும்
பெண்கள்
குழுக்களின் ஆற்றலை
வலுவாக
தடுத்தும்
உற்சாகமிழக் கவும்
செய்துவிடுகின்றன.
சுதந்திரமான
குடிமக்கள்
என்ற
விதத்தில் பெண்களின்
உரிமைகள்
31. இந்திய
அரசு பெண்களை
அவர்கள் குடிமக்கள்
என்ற
அவர்களுடைய
சொந்த உரிமை
அடிப்படையில்
அல்லாமல், அவர்களின் குடும்ப
மற்றும் மறு
உற்பத்தியில்
அவர்களின் பாத்திரம்
என்ற
பொருளிலேயே
வரையறுக் கிறது.
பெண்களின்
பிரிக்க
முடியாத
உரிமை களை
அங்கீகரித்துப்
பாதுகாக்க
கடமைப்பட் டிருக்கிறது
என்பதற்குப்
பதில் அரசு
பெண்கள் பால்
ஆணாதிக்க
அணுகுமுறையையே
கைகொள்கிறது.
மாநில
அரசாங்கங்கள்
“குழுவாரி திருமணங்கள்”
அல்லது
பெண்
பிள்ளைகளுக்கான
திருமணத் திட்டங்கள்
அறிவிப்பது ஆகியவற்றில்
இந்தப்
போக்கு
தென்படுகிறது. இது
போன்ற
திட்டங்கள்
மூலம் அரசு பெண்ணின்
திருமணத்தைப்
பெற்றோர்களின் கடமை
என்று
பார்ப்பதோடு
திருமண விவகாரங்களில்
தாங்கள்
சொந்தமாக
தேர்வு செய்யும்
பெண்களின்
உரிமையை
மறுப்பதாக வும்
இருக்கிறது.
பெண்கள் சமூக
பொருளாதார சுயாட்சி
அடைய உதவும்
கொள்கைகளை அமலாக்குவதற்குப்
பதிலாக, இந்தத்
திட்டங்கள், இது
போன்ற
திருமணங்களை சமூகம் அல்லது
பெற்றோர்கள்
சார்பில்
அரசு ஏற்பாடு செய்யும்
திருமணமாக
முன்னிறுத்தி,
பெண்களின்
பாதுகாப்பு
மற்றும் நலனை
உத்தரவாதம் செய்வது
போதுமானது
என்றாக்கிவிடுகிறது. பெண்
குழந்தைகளைப்
பாதுகாப்பது
என்ற பெயரில்
பெண்
பிள்ளைகள்
வயதுக்கு
வரும்போது, குறிப்பிட்ட
தொகையை
உத்தரவாதமாக
வழங்கும்
திட்டங்கள்
(டெல்லி லட்லி திட்டம்)
போன்றவையும்
வேறு சில
உதாரணங்கள். திருமண
வயதை அடைந்த
பெண் பிள்ளைகளுக்கு
ஒரு தொகையை
வழங்குவதன் மூலம்
அரசாங்கம்
உண்மையிலேயே
மறைமுக மாக
வரதட்சிணைக்கு
மானியம்
வழங்குகிறது.
32. பெண்கள்,
குடிமக்கள்
என்ற விதத்தில்,
பொது
விநியோக முறை
பொருட்களுக்காக,
சுகாதாரத்திற்காக,
மற்றும்
கல்விக்காக
பல்வேறு உரிமைகளுக்கான
போராட்டங்களை
நடத்த வேண்டியிருக்கிறது.
முன்னோர்
சொத்தில் பெண்களின்
உரிமை
சட்டரீதியாக
அங்கீகரிக் கப்பட்டிருந்தாலும்,
நீண்ட
சட்டப்
போராட் டத்தில்
ஈடுபடாமல்
அதைப் பெற
முடிவதில்லை.
சில
பெண்களால்
மட்டுமே
இப்போ ராட்டத்தை
நடத்த
முடிகிறது.
கிராமப்புறத்தில் வேலையளிப்பவருக்கு
சொந்தமான
இடத்தில் அரை-கொத்தடிமை
வாழ்க்கையில்
மோசமான பாதிப்புக்குள்ளாகி
இருக்கும்
பெண்கள் குடிமனைக்கான
போராட்டத்தில்
குறிப்பாக முன்னணி
பாத்திரம்
வகிக்கின்றனர்.
நகர்ப்புற குடியிருப்புக்களுக்கான
போராட்டங்கள்,
வாழுமிடங்களில்
இருந்து
அப்புறப்படுத்தப் படுவது,
பெரும்
தொழில் குழும
நிலப்பறி, விலை
உயர்வு, அணுத்திட்டங்கள்
மற்றும் சுற்றுச்
சூழலை
அழித்தொழிக்கும்
பல்வேறு திட்டங்களுக்கு
எதிரான
போராட்டங்களில் பெண்கள்
தீவிரமாக
செயல்படுகின்றனர்.
இந்த அனைத்துப்
போராட்டங்களிலும்
பெண்களின் பங்கை
உறுதிப்படுத்தும்போது,
கல்வி, வேலைவாய்ப்பு,
மருத்துவம்
ஆகியவற்றைப்
பெறுவ தில்
(உதாரணமாக, பெண்
மாணவர்களுக்கு,
பெண்
தொழிலாளர்களுக்கு
தங்கும்
விடுதி, அமைப்பாக்கப்பட்ட,
அமைப்பாக்கப்படாத துறைகளில்
உள்ள
பெண்களுக்கு
குழந்தைகள் காப்பக
வசதி, பள்ளிச்
சிறுமிகளுக்கு
இலவசக் கல்வி
மற்றும்
புத்தகங்கள்,
மடிக்கணிணி,
சைக்கிள்கள்,
கூடுதல்
மகப்பேறு
விடுப்பு, பெண்களுக்கான
சிறப்பு
மருத்துவ
வசதிகளுடனான
செயல்படுகிற,
தேவையான மருத்துவ
உபகரணங்கள்
கொண்ட ஆரம்ப சுகாதார
மருத்துவமனைகள்,
பெண்கள் வார்டுகள்
மற்றும்
போதுமான
இடங்கள் கொண்ட
மாவட்ட
மற்றும்
துணைக் கோட்ட மட்ட
மருத்துவமனைகள்)
உத்தரவாதமான நிலையை
பெறுவதில்
மய்யமான
ஒட்டு மொத்தமான
கோரிக்கைகளில்
இளம்பெண்களை
அணிதிரட்டுவதில்
நாம் கூடுதல் அழுத்தம்
வைக்க
வேண்டும்.
33. பல
மாநிலங்களில்,
குறிப்பாக,
ஆந்திரப்பிரதேசம்
மற்றும்
உத்திரகாண்ட்,
மிகச் சமீபத்தில்
பீகார், சாராய
எதிர்ப்பு
போராட் டங்களிலும்
பெண்களே
முன்னணிப்
பங்காற்று கின்றனர்.
ஆண்களின்
குடிப்பழக்கம்
ஏழைப் பெண்கள்
வாழ்வில்
துன்பகரமான
தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
அரிதான
வருவாயை
சாராயம் வீண்
செலவு செய்ய
வைக்கிறது; சட்டத்திற்குப் புறம்பான
கலப்பட
சாராயத்தினால்
சாவுகள், வீட்டில்
பெண்கள்
மீதும், குழந்தைகள்
மீதும் குடும்ப
வன்முறை
ஆகியவற்றுக்குக்
காரணமாகிறது.
குழந்தைகள்
மற்றும்
பெண்களின்
அவர்களது
குடும்பங்களின்
நலத்தை விலையாக்கி,
அரசாங்கத்துக்கு
வருவாயைப்
பெருக்கும் நோக்குடன்
சாராயத்தை
ஊக்குவிக்கும் அரசின்
கொள்கைகளை
அது போன்ற இயக்கங்களில்
பெண்கள்
எதிர்க்கின்றனர்.
34. பெண்களின்
ஆரோக்கியம்
மற்றும் ஆயுளில்
இந்தியாவின்
செயல்பாடு
அடிபாதா ளத்தில்
(மொத்தம் 135
நாடுகளில் 134 வது இடத்தில்)
இருப்பதாக
சர்வதேச
ஆய்வொன்று சொல்கிறது.
பிரசவத்தின்
போது பெண்கள் இறப்பு
என்பதில்
உலகத்தின்
மோசமான விகிதாச்சாரம்
கொண்ட
நாடுகளில்
ஒன்றாக இந்தியா
இருக்கிறது. 57.9 சதம்
கர்ப்பிணி பெண்களும்,
56.2 சதம்
திருமணமான
பெண்களும்
இரத்தச் சோகை
நோயால்
பீடிக்கப்பட் டுள்ளனர்.
இது தெள்ளத்
தெளிவாக
வறுமை, நீண்டகாலமாக
சத்துணவு
இல்லாமை
மற்றும், இந்தியப்
பெண்களில்
பெரும்பான்மையினர் பாலின
பாகுபாட்டால்
பாதிக்கப்பட்டிருப்பது ஆகியவற்றைக்
குறிக்கிறது.
35. குடும்பக்கட்டுப்பாடு
என்ற பெயரில்,
வெளிநாட்டு
நிறுவனங்களின்
நிதிபெறும் மகப்பேறு
தடுப்புப்
பிரச்சாரம்
பெண்களைக் குறிவைத்து,
அவர்கள்
உடலை
அபாயத்துக்கு இலக்காக்குகிறது.
சமீபத்தில்
பீகாரில் டிஎஃப்அய்டி என்ற
இங்கிலாந்து
நிறுவனத்தின்
நிதி உதவியுடன்
அவசரகதியில்,
சுகாதாரமற்ற
சூழலில் பெண்களின்
விருப்பத்திற்கு
மாறாக நடத்தப் பட்ட
அறுவை சிகிச்சைகளின்
விளைவாக பலர் இறக்க
நேரிட்டது, பல
பெண்கள் உடல்
கிழிக் கப்பட்டது
என பல
சம்பவங்கள்
நடந்துள்ளன.
36. அரசாங்கமும்,
மருந்து
கம்பெனிகளும் சந்தேகத்திற்கிடமான,
அபாயகரமான
ஊசி மூலம்
உட்செலுத்தப்படும்
மகப்பேறு
தடுப்பு மருந்துகளான
டேபோ -
புரோவிரா
மற்றும் நெட்-என்
ஆகியவற்றை
அறிமுகப்படுத்தி அதன்
இயக்கப்
போக்கில்
பெண்களின்
ஆரோக்கியத்தோடு
விளையாடுகிறார்கள். இந்தியாவின்
ஏழைப்
பெண்கள்
மருந்து
கம்பெனிகளின்
பல்வேறு
விதமான
பரிசோதனைகளுக்கு
பரிசோதனைப்
பன்றிகளாக
பயன் படுத்தப்படுகிறார்கள்.
பெண்கள், குறிப்பாக,
வறிய
மற்றும் தலித்,
பழங்குடி
பின்புலத்தைக் கொண்டவர்கள்
தடுப்பு
மருந்து
ஆய்வுகள் மற்றும்
மருத்துவ
பரிசோதனைகளுக்கு அவர்களின்
அறிவார்ந்த
ஒப்புதல்
இல்லாமலே உட்படுத்தப்படுகிறார்கள்.
உதாரணமாக, சமீபத்தில்,
ஆந்திராவிலும்
குஜராத்திலும்
10 முதல்
14
வயதுள்ள 7 பெண்
குழந்தைகள், ஹுயூமன்
பாப்பிலோமா
தடுப்பு
மருந்து பரிசோதனைக்கு
உட்படுத்தப்பட்ட
பிறகு இறந்துவிட்டார்கள்.
37. அபாயகரமாக,
வர்த்தகரீதியான வாடகைத்
தாயின் இடமாக
இந்தியா
எழுந்து வந்துள்ளது.
இந்திய ஏழைப்
பெண்கள் பணக்கார
இந்திய
மற்றும்
வெளிநாட்டுப் பெற்றோர்களுக்கு
தங்கள்
கருப்பையை பணத்துக்காக
வாடகைக்கு
கொடுக்கிறார்கள். இந்த
ஒப்பந்தத்தில்
ஈடுபடும்
பெற்றோர்கள் (commissioning parents) வாடகைத்
தாய்மார்கள் நல்ல
நிறத்தில்
இருக்க
வேண்டுமென்றும்,
உயர்சாதியைச்
சேர்ந்தவர்களாக
இருக்க வேண்டுமென்றும்
கோருகிறார்கள்.
தங்கள் ஏழ்மை
மற்றும்
நம்பிக்கையற்ற
வாழ்நிலையின் காரணமாக,
தங்களை
சுரண்டும்
இந்த தொழில்துறைக்கு
சேவை செய்ய, இப்போது,
வாடகைத்
தாய்மார்கள்
தங்கள்
உடலையும், ஆரோக்கியத்தையும்
அதீத
அபாயத்திற்கு ஆட்படுத்துகிறார்கள்.
நீதிநெறி
என்ற கோணத்திலிருந்து
வாடகைத்தாய்
சம்பந்தமான
விரிந்த விவாதத்தை
பல்வேறு
பெண்கள்
குழுக்களை யும்
இணைத்து
நடத்தும் வரை
இத்தகைய முறையை
தள்ளி
வைப்பதற்கு
மாறாக, இந்திய அரசாங்கம்
இதை
ஊக்குவிப்பதோடு,
இம்முறையை
சட்டபூர்வமாக்கவும்,
முறைப்படுத்தவும்
மசோதாவை
முன்வைக்கிறது.
38. ஓரின
சேர்க்கையில்
ஈடுபடுவோர், ஹிஜ்ராக்கள்,
பாலின
சிறுபான்மையினோர் ஆகியோர்
தங்கள்
உரிமைகளுக்காகவும்,
கவுரவத்திற்காகவும்,
பாகுபாட்டுக்கு
எதிராகவும்
சமீப
காலங்களில்
தங்களை
அறுதியிட்டுக் கொண்டுள்ளனர்.
2009ல்
டெல்லி
உயர்நீதி மன்றம்
ஓரின
சேர்க்கை
குற்றவியல்
தன்மை கொண்டதல்ல
என்று
சிறப்புமிக்க
தீர்ப்பளித்த பின்பும்,
ஓரின
பால் உறவுகளை
பாகுபடுத்தும் சட்டத்தின்
377வது
பிரிவை நீக்க
அரசாங்கம்
நடவடிக்கை
எடுக்கவில்லை.
பிரிவு 377 ரத்து
செய்யப்படுவது,
இப்பிரிவினர்
(லெஸ்பியன், கே, அரவாணிகள்,
ஹிஜ்ராக்கள்
உள்ளிட்டோர்)
தங்களது
கூடுதல்
பாதுகாப்பு, உரிமைகள்
மற்றும்
கவுரவம் ஆகிய
கோரிக்கைகளை எழுப்ப
புதிய
வாய்ப்புகளை
திறந்துவிடும்.
39. மாநில
மட்டத்திலும்,
தேசிய அளவிலும்
பெண்களின்
போராட்டத்தால் பெண்கள்
ஆணையம்
அமைக்கப்பட்டிருக்கிறது.
ஆனால்
அரசியல்
நியமனங்களால் நிரப்பப்பட்டும்,
நிதி, ஆட்கள்
மற்றும்
அதிகாரமில்லாமலும்
அதன்
நோக்கத்தை
நிறைவேற்ற முடியாமல்
இருக்கிறது.
பெண்கள்
ஆணையத்தின்
தலைவர்களும்,
உறுப்பினர்களும்
அரசியல் செல்வாக்கை
அடிப்படையாகக்
கொண்டில்லாமல்,
பெண்கள்
இயக்கத்தில்
அவர்கள் அனுபவத்தின்
அடிப்படையிலும்
பெண்களின் அமைப்புகளோடு
கலந்தாலோசித்தும்
தேர்ந்தெடுக்கப்பட
வேண்டியது
அவசர அவசிய மானதாகும்.
பெண்கள்
இயக்கத்துக்கு
பெண்கள்
ஆணையம் பதில்
சொல்வதாக
இருக்க வேண்டும்.
ஆணையம்
பெண்கள்
அமைப்பு களோடு
முறையாக
கலந்தாலோசனை
கூட்டங்கள்
நடத்துவது
கட்டாயமாக்கப்பட
வேண்டும்.
கட்சி
மற்றும்
பெண்கள்
அமைப்பின் முன்முயற்சிகள்:
40. நாட்டுப்புற
மற்றும்
நகர்ப்புற
மக்களை முக்கிய
அடித்தளமாகக்
கொண்டு, வரலாற்று ரீதியாக,
ஒடுக்குமுறை,
பாகுபாடு,
இழிவுபடுத் தப்படுவது
ஆகியவற்றுக்கு
எதிரான, சமத்துவம்,
சுதந்திரம்
மற்றும்
கவுரவத்திற்கான போராட்டம்
என்பது நமது
கட்சி
மற்றும் பெண்கள்
அமைப்பின்
முக்கிய
தளமாக இருக்கிறது.
இந்த இயக்கம்
ஆயிரக்கணக்கான வறிய
விவசாய
மற்றும்
உழைக்கும்
பெண்களை (பெருவாரியாக
ஒடுக்கப்பட்ட
சாதிகளிலிருந்து) நிலப்பிரபுத்துவ
ஒடுக்குமுறை
மற்றும் சுரண்டலுக்கு
எதிரான
போர்க்குணமிக்கப்
போராட்டங்களில்
அணிதிரட்டி, அதனை
அரசியல் தளத்திற்கு
உயர்த்தி, நிலப்பிரபுத்துவ
மற்றும் குலக்
அதிகார
நிறுவனங்களுக்கு
புரட்சிகர விவசாய
இயக்கம் என்ற
வகையில்
மட்டுமல்லாது
கம்யூனிஸ்ட்
பெண்கள்
இயக்கம் என்ற தனக்கே
உரித்த
வகையிலும்
பலத்த அடி கொடுத்து
வருகிறது.
இந்தியாவிலுள்ள
மற்ற பெண்கள்
அமைப்புகளிலிருந்து
இதுதான் நம்மை
வித்தியாசப்படுத்தும்
அம்சமாகும்.
இந்த அழுத்தம்
பின்பற்றப்பட
வேண்டும்
மேலும் வளர்க்கப்பட
வேண்டும்.
41. அனைத்து
விதமான
வன்முறை
மற்றும் சுரண்டல்
ஆகியவற்றுக்கு
எதிராக, கிராமப்புற விவசாயிகள்
மற்றும்
நகர்ப்புற
உழைக்கும் வர்க்க
பெண்களின்
போராட்டங்கள்
அய்ப்வா வேலைகளின்
முக்கிய
நிகழ்ச்சிநிரலாக
உள்ளன. அரசு
ஒடுக்குமுறை
மற்றும்
காவல் நிலைய வன்முறை
ஆகியவற்றுக்கு
எதிராக
குறிப்பாக ஆயுதப்படை
சிறப்பு
அதிகாரச்
சட்டம் மற்றும் பசுமை
வேட்டை
ஆகியவற்றுக்கு
எதிரான போராட்டத்தில்
ஊக்கமான
செயல்பாடும்,
பெண்களுக்கு
சம ஊதியம்
மற்றும் சம
கவுரவத் திற்கான
போராட்டத்தை
பரந்து
விரிந்து எடுத்துச்
செல்வதும், ஊரக வேலை
உறுதித் திட்ட
தொழிலாளர்கள்
மற்றும்
விவசாயத் தொழிலாளர்களை
அணி
திரட்டுவதிலும் அய்ப்வா
முக்கிய
பங்காற்றும்.
42. சமீபத்திய
பல
நிகழ்வுகளில்
அய்ப்வாவின்
தலையீடு
அரசியல்
முக்கியத்துவம் வாய்ந்ததாக
நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
பீகாரின் ரூபம்
பதக் சம்பவம்
குறிப்பிட்டு
சொல்லப்பட வேண்டியதாகும்.
அதில்
அய்க்கிய
ஜனதா தளம்-பாஜக
அரசாங்கம், ஆளும்
வர்க்க
எதிர்க்கட்சிகள்
மற்றும்
ஊடகங்கள்
ஆகியவை
முதலில் ஒன்றிணைந்து
பாஜக
எம்எல்ஏவை
கொன்ற அந்த
பள்ளி ஆசிரியைக்கு
எதிராக
மூர்க்கத்தனமாக
ஆணாதிக்க
கருத்துக்களை
வெளிப்படையாக
வைத்தனர்.
அய்ப்வாவின்
துணிச்சலான, உரிய
நேரத்திலான
தலையீடு, ரூபம் பதக்
தன்னைப்
பாலியல்
பலாத்காரம்
செய்த எம்எல்ஏ
மற்றும் அவர்
உதவியாளருக்கு
எதிராக
புகார்
செய்தும்
அந்த புகார்
மனுவை காவல்
நிலையத்தில்
ஏற்க வில்லை
என்பதையும் அம்பலப்படுத்தியது.
வெகுசீக்கிரமே,
ரூபம் பதக்குக்கு
நீதி கோரும்
போராட்டத்துக்கு ஆதரவாகவும்,
கறைபடிந்த
பீகார்
எம்எல்ஏவை பாதுகாத்து,
ஆணாதிக்க
தீர்ப்புகளை
சொல்லிக் கொண்டிருந்த
பீகார்
அரசாங்க
மூத்த தலைவர்களுக்கு
எதிராகவும் வெகுஜன
கருத்தின் அலையை
அய்ப்வா
திருப்ப
முடிந்தது.
ரூபம் பதக்கின்
சிறைத்
தண்டனை
சிபிஅய்
மற்றும் நீதித்
துறையின்
ஆணாதிக்க
ஒருதலைப்பட்ச அணுகுமுறையை
அம்பலப்படுத்தியது.
ரூபம் பதக்குக்கு
நீதிக்கான
பெண்கள்
இயக்கம் தொடர்கிறது.
மிகச்
சமீபத்தில்
பீகார், கயாவில் நிலபிரபுத்துவ
லும்பன்களால்
பள்ளி மாணவி கூட்டு
பாலியல்
வன்முறைக்கு
ஆளாக்கப்பட்டதை
எதிர்த்து
கட்சியும்
அய்ப்வாவும்
தலைமையேற்று
நடத்திய
போராட்டம்
போலீஸ் துப்பாக்கிச்
சூட்டையும், கடுமையான
ஒடுக்குமுறையையும்
சந்தித்தது. அரசு
ஒடுக்குமுறை மற்றும்
பாலியல்
வன்முறை ஆகிய
முக்கிய பிரச்சினைகள்
மீது மாநிலம்
தழுவிய “பந்த்” போராட்டம்
நடத்துவதற்கான
தீயை பற்றவைத்த
முக்கிய
சம்பவங்களில்
ஒன்றாக இந்த
போராட்டம்
அமைந்தது.
43. பெண்
தொழிற்சாலைத்
தொழிலாளர்கள்,
தேயிலைத்
தோட்டத்
தொழிலாளர்கள்,
கட்டுமானத்
தொழிலாளர்கள்,
பீடித்
தொழிலாளர்கள்,
வங்கி
மற்றும்
அலுவலக
ஊழியர்கள் இன்னபிற...
ஆகியோர்
பொதுவாக நமது தொழிற்சங்கத்தின்
அடித்தளமாக
இருக்கிறார்கள்.
சாத்தியப்படும்
இடங்களிலெல்லாம்
பெண்கள்
அமைப்பு
இப்பிரிவினரிடம்
தொடர்ந்து வேலை
செய்து
முக்கியமான
துணை அடித்தளமாக
இதை
வளர்த்தெடுக்க
வேண்டும். கிராமப்புற
வறியவர்
மத்தியிலான
வேலை எப்படி அயாலா
மற்றும்
ஏஅய்கேஎம்மின்
உள்ளூர் அமைப்புகளுடன்
இணைந்து
செய்யப்படுகிறதோ
அதைப் போல்
இந்த
வேலையும் சம்பந்தப்பட்ட
தொழிற்சங்கத்துடன்
ஒருங்கி ணைப்பை
ஏற்படுத்தி
செய்யப்பட
வேண்டும்.
44. அய்ப்வா
நேரடியாக
உழைக்கும் பெண்களை
அமைப்பாக்க
சாத்தியமான இடங்களும்
உண்டு.
உதாரணத்துக்கு
பெண்கள் மத்தியிலான
நம்
வெகுமக்கள்
அடித்தளத்தில் கணிசமானவர்களாக
இருக்கும்
குடிசை வாழ் பகுதி
மக்கள்.
அய்ப்வா
தோழர்கள் சில
பெருநகரங்களிலும்,
நகரங்களிலும்
வீட்டு வேலை செய்யும்
பெண்களுக்கான
உள்ளூர் மட்ட அமைப்புகளை
கட்டியிருக்கிறார்கள்.
45. கிராமப்புறப்
பொருளாதாரத்தில் பல்வேறு
மாற்றங்கள்
நடைபெறுவதால்,
வறிய மற்றும்
நடுத்தர
விவசாய
பின்புலமுள்ள பெண்கள்
வேறுவேறு
வேலைகளில்
அதிகரித்த அளவில்
இணைந்து
வருகின்றனர்.
மிகவும் முக்கியமாக
கவுரவ ஊதியம்
அல்லது ஊக்க ஊதியம்
பெறும்
வேலைகளில்
தேசிய அளவில் 30
லட்சம் பேர்
உள்ளனர். இந்த
எண்ணிக்கை இன்னும்
அதிகரிக்கிறது.
நவதாராளவாத தொழிலாளர்
கொள்கைகளான
நிரந்தர வேலைகளை
தற்காலிகமயமாக்குவது,
கடுமையான
சுரண்டல்
நடக்கும், குறைந்த
ஊதியம் கொடுக்கும்
வேலைகளை
பெண்மயமாக்குவது,
100 சத அரசு
திட்டங்களில்
அரசு ஊழியர் என்ற
அந்தஸ்தைக்
கொடுப்பது
இருக்கட்டும்,
குறைந்தபட்ச
ஊதியம் கூட
வழங்க
மறுப்பது ஆகியவற்றால்
பாதிக்கப்பட்ட
பெண்கள் தங்களை
அமைப்பாக்கிக்
கொள்வதிலும்,
பொருளாதார
நீதி மற்றும்
சமூக
கவுரவத்திற்காக
போராடவும்
அதிகரித்த
அளவில் முனைப்பு
காட்டி வருகிறார்கள்.
விவசாயக் குடும்பங்களின்
உறுப்பினர்
என்ற வகையில் விவசாயிகளின்
வாழ்க்கையோடும்,
போராட் டத்தோடும்
உயிரார்ந்த
உறவு
வைத்திருக்கிறார்கள்.
அதே வேளையில்
தொழிலாளர்
என்ற வகையில்
பொருளாதார
இழப்புகளுக்கு எதிரான
போராட்டத்திலும்,
ஒரு
பெண்ணாக கொடுமை
படுத்துதல்
மற்றும்
கவுரவக் குறைச்சலாக
நடத்தப்படுவதற்கு
எதிராகவும் ஊக்கமாக
போராடுகிறார்கள்.
46. வர்க்க
மற்றும்
பாலின குணாம்சங்களும்,
அபிலாசைகளும்
நிஜ
வாழ்க்கையில் ஒன்றோடொன்று
பின்னிப்
பிணைந்திருக்கின்ற காரணத்தால்,
இயல்பாகவே
நமது தொழிற்சங்க
மய்யமும், பெண்கள்
அமைப்பும்
இந்தத் துறை
வேலைகளில்
பாராட்டத்தக்க
விரிவாக்கத்திற்கு
பங்களிப்பு
செய்திருக்கின்றன.
ஆஷா தொழிற்சங்கங்களை
அகில இந்திய
அளவில் கூட்டமைப்பாக
உருவாக்கி
செப்டம்பர் 2011ல் தேசிய
தலைநகரில்
கூட்டமைப்பின்
சிறப்பான தர்ணா
போராட்டத்தை
நடத்தியது.
இதுவரையிலான
நமது
முக்கியமான
வெற்றியாகும். முக்கியமான
கோரிக்கைகள்,
மத்திய
அரசையும், ஒரு
குறிப்பிட்ட
அளவுக்கு
மாநில அரசாங்கங்களையும்
குறி வைத்து
இருக்கிறபடியால்,
சக
போட்டியாளர்களை
சமாளித்து
ஏதாவது கொஞ்சம்
சாதிக்க
வேண்டுமென்றால்,
நாம் உள்ளூர்
மட்ட
இருத்தலைத்
தாண்டி விரைவான
விரிவாக்கத்துக்கு
செல்ல
வேண்டும். மாவட்ட
மற்றும்
மாநில
மட்டத்தில்
மதிய உணவு
சமையலர்களுக்கான
அமைப்புகளும் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
உத்தரபிரதேசம்
தேவரியாவில்
மாவட்ட அளவில்
மதிய உணவு
சமையலர்களை அய்ப்வா
அமைப்பாக்கி,
அவர்களை
வேலையை விட்டு
அனுப்பும்
முயற்சிகளை
மாவட்ட நீதிபதியை
நிர்பந்தித்து
தடுத்து
நிறுத்திய போராட்டத்தை
தலைமையேற்று
நடத்தியது. இது
போன்ற
போராட்டங்களை
பரந்த அளவில்
நடத்தவும், அமைப்பை
விரிவாக்கம் செய்யவும்
மிகப் பெரிய
ஆற்றல்
உள்ளது.
47. பெண்கள்
இயக்கத்தின்
ஊழியர்கள், உழைக்கும்
பெண்களை
அவர்களது அவசர அதாவது
பொருளாதார
கோரிக்கைகளுக்காக அமைப்பாக்கும்போது
பெண்கள்
இயக்கத்தின் நோக்கத்தை
விட்டுவிட்டு
பொருளாதாரப் போராட்டங்களாகவோ
அல்லது
பொருளாதார
வாதமாகவோ அது
வழிவிலகி
செல்லக்
கூடாது. அதற்குப்
பதிலாக
உழைக்கும்
பெண்கள்
அய்ப்வாவுக்கு
சொந்த
சுதந்திர
அடித்தளமாகவும்,
வளர்ந்து
வரும்
துடிப்புமிக்க
அடித்தளமாகவும் அமைந்து,
அதற்கு
சரியான
திசைவழி
கொடுக்கப்படுமானால்
பரந்த
பெண்கள்
இயக்கத்துக்கு அமைப்பாக்கப்பட்ட
படையாகவும்
அது திக ழும்.
பெண்
தொழிலாளர்கள்
மத்தியில்
வேலை செய்யும்
தொழிற்சங்க
செயல்வீரர்களை
ஒப்பிடுகையில்
உண்மையிலேயே
அய்ப்வா
செயல் வீரர்கள்
பெண்கள்
பிரச்சினைகளின்
மய்யமான போராட்டங்கள்
சம்பந்தமாக
உணர்ந்து, செயல்பட
மற்றும்
வளர்த்தெடுக்க
மேலான சூழ்நிலையில்
இருப்பதாக
உணர்கிறார்கள். இடம்
பெயர்ந்து
சென்று
கொண்டிருக்கக் கூடிய,
சமூக
நீதியாக
துடிப்பான, ஒப்பீட்டளவில்
கல்வி
பெற்றுள்ள
(ஆஷா மற்றும்
அங்கன் வாடி
தொழிலாளர்கள்)
மற்றும்
உழைக்கும் பெண்களில்
போர்க்குணமிக்க
படையாக உள்ள
இவர்கள்
மத்தியில்
இன்னும்
கூடுதலாக திட்டமிட்ட
வகையில் வேலை
செய்து அவர்களுக்குள்
பொதிந்துள்ள
மிகப் பெரிய
உள்ளாற்றலை
வெளிக்கொண்டுவர
வேண்டும்.
எனவே அதற்கான
நடைமுறை
ஊக்கப்படுத்தப்பட வேண்டும்.
இயல்பாகவே, இது
தொழிற்சங்க மய்யத்துக்கும்
பெண்கள்
அமைப்புக்கும்
இடையிலான
நெருங்கிய
அரசியல்
புரிதலையும்,
அமைப்பு
ஒருங்கிணைப்பையும்
கோருகிறது.
48. பரந்த
அடிப்படையிலான
பெண்கள் இயக்கத்தை
வளர்த்தெடுக்க
வேண்டுமானால்,
கல்லூரி
மாணவர்கள்
மற்றும்
ஆசிரியர்கள்,
ஊடக
பெண்கள்
மற்றும்
பொதுவான
அறிவு ஜீவிகள்
ஆகியோரிடம்
நம் வேலை
விரிவடைய வேண்டியது
முழு முற்றான
தேவையாகும். கிராமப்புற
வறியவர்களை
முக்கிய
அடித்தளமாகக்
கொண்ட
நம்மைப்
போன்ற அமைப்புகளுக்கு
இது உண்மையான
சவாலாகும். இந்தி,
ஆங்கிலம்,
அஸ்ஸாம், வங்காள
மொழிகளில்
வெளிவரும்
பெண்கள்
பத்திரிகைகள் இந்த
நோக்கத்திற்காக
மேலான
வகையில் பயன்படுத்தப்பட
வேண்டும்.
49. இந்த
வர்க்கங்கள்
மற்றும்
பிரிவினரோடு
கூட இன்னொரு
பிரிவும்
நமது சிறப்பு கவனத்தைக்
கோருகிறது:
ஊராட்சிகளில் பெண்
மக்கள்
பிரதிநிதிகள்.
வேர்க்கால் மட்டத்தில்
சமூகரீதியாகவும்,
அரசியல்
ரீதியாகவும் துடிப்பாக
இருக்கிற
அவர்கள்
வெகுமக்கள் மத்தியில்
செல்வதற்கும்,
வெகுஜனங்களின் கருத்துக்களை
சேகரிப்பதற்கும்
சிறந்த வாகனமாக
இருப்பார்கள்.
பெண்கள்
அமைப்புகள், கிராம
மட்டத்தில், வெகு
மக்கள் கூட்டங்கள் நடத்தி,
பெண்
பிரதிநிதிகளையும்,
வேட்பாளர்களையும்
அழைத்து
பெண்கள்
தொடர்ந்து சந்திக்கும்
பிரச்சனைகளை,
உதாரணத்துக்கு குடிநீர்,
சுகாதார
சேவை ஆகியவை
சம்பந்தப்பட்ட
பிரச்சனைகளையும்,
பஞ்சாயத்துகளில் 50 சத
இட
ஒதுக்கீட்டை
தொடர்ந்து
நிலவுகிற மற்றும்
எதிர்பார்க்கப்படுகிற
அவர்கள் பணி போன்ற
அரசியல்
தலைப்புகளையும்
விவாதிக் கலாம்.
தேர்தலுக்கு
பின்னால், சாதி, பாலின பாகுபாடுகளுக்கு
எதிராகவும், பழமையான மரபுகளை
எதிர்த்து
பெண்
பிரதிநிதிகள்
போராடவும், ஆண் “பாதுகாவலர்கள்”
இல்லாமல் தாங்கள்
சுதந்திரமாக
செயல்படவும்,
சாமான்ய மக்களின்
பொதுவான
கோரிக்கைகளோடு பெண்கள்
பிரச்சினைகளை
வலுவாக
எழுப்பவும், பெண்கள்
இயக்கம்
அவர்களுக்கு
உதவி ஊக்குவிக்க
வேண்டும்.
50. பெண் கட்சி உறுப்பினர் எண்ணிக்கையை கணிசமாக உயர்த்த, அவர்களுடைய கருத்தியல்-அரசியல் மட்டத்தை வளர்த்தெடுத்து, பெண் கட்சி ஊழியர்கள் மற்றும் தலைவர்கள் எண்ணிக்கை உயர்த்தப்படுவதை உறுதி செய்ய கட்சி நீண்ட காலமாகவே அக்கறை கொண்டுள்ளது. பலதரப்பட்ட அமைப்பு மற்றும் கல்வி நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் இந்த சவால் மிக்க பணியை தொடர்ந்து நாம் செய்திட வேண்டும். ஆணாதிக்கத்துக்கு எதிரான போராட்டத்தில் ஒரு கம்யூனிஸ்ட் கட்சி (நமது பெண்கள் அமைப்பு மாத்திரமல்ல) என்ற வகையில் நாம் உயர்ந்த அழுத்தம் கொடுத்திட வேண்டும். ஆணாதிக்கப் பொதுப் புத்தி சமூகத்தின் மீது-அதனால் கட்சி அணிகள் மீதும், சொல்லப் போனால் கட்சியின் அரசியல் தலைமை மீது இறுக்கமான பிடி கொண்டுள்ளது என்பதை நாம் அங்கீகரிக்க வேண்டும். எனவே நமது அரசியல் நடைமுறை என்பது ஈவிரக்கமில்லாமல், விடாப்பிடியாக சுயபரிசோதனை செய்வது மற்றும் ஆணாதிக்கக் கருத்தியல் மற்றும் நடைமுறையை பகுப்பாய்வு செய்து அதை எதிர்கொள்ள முயற்சிப்பது என்பதோடு இணைந்ததாக இருக்க வேண்டும். அப்போது மட்டுமே முற்போக்கு மற்றும் ஜனநாயக ஆணாதிக்க எதிர்ப்புக் கருத்துக்களுக்கு உயிர் தந்து, நமது ஒட்டுமொத்த இயக்கத்துக்கும் பரந்த சமூகத்துக்கும் ஆற்றல் தரும் பொருளாயதச் சக்தியாக அதை மாற்ற முடியும்.