நாட்டு
நடப்பு
சில்லறை
வர்த்தகத்தில்
அந்நிய நேரடி
முதலீடு
அமெரிக்க
ஆதரவுடன் கலவையாக
உருவாக்கப்பட்ட
(கன்காக்டட்) நாடாளுமன்ற
பெரும்பான்மையுடன் இந்தியாவுக்குள்
நுழைகிறது
நாடாளுமன்றத்தில்
சில்லறை
வர்த்தகத்தில் அந்நிய
நேரடி
முதலீடு
மீதான
விவாதமும்
வாக்கெடுப்பும்
அரசாங்கத்துக்கு
ஒரு
சந்தேகத்துக் குரிய
வெற்றியுடன்
நிறைவுற்றது.
இது, அணு ஒப்பந்தம்
மீதான
வாக்கெடுப்பை
நினைவூட்டுகிறது.
பல்இலச்சினை
சில்லறை
வர்த்தகத்தில் அந்நிய
நேரடி
முதலீட்டை
நுழைக்கும்
கொள்கைக்கு
எதிராக
அவையில்
பெரும்பான்மை கருத்து
இருந்ததை
விவாதம் தெளிவாக்குகிறது. ஆனால்
வாக்கெடுப்பில்
காணப்பட்ட
சந்தர்ப்பவாதமே
மேலோங்கியதாக
இருந்தது.
சில்லறை
வர்த்தகத்தில்
அந்நிய நேரடி முதலீட்டுக்கு
ஆதரவாக
அரசாங்கம்
முன்வைத்த
வாதங்கள் ஏற்றுக்கொள்பவையாக இல்லை.
அவை
பொய்யானவை.
சில்லறை
வர்த்தகத்தில்
அந்நிய நேரடி
முதலீடு
விவசாயிகளுக்கும்
நுகர்வோருக்கும்
நன்மை பயக்கும்
என்கிற வாதம்
ஒவ்வொரு
நாட்டிலும்
பொய்யென மெய்ப்பிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் வெங்காய
விவசாயிகள், அவர்களிடம்
இருந்து வாங்கப்படுகிற
விலை போல்
ஒன்பது
மடங்கு விலையில்
விற்கும்
வால்
மார்ட்டால்
துன்பப்படுவது
பற்றி, அமெரிக்க
நாளிதழ்
ஒன்றில் சென்ற
வாரம்தான்
செய்தி
வெளியானது.
வால்மார்ட்டும்
பிற கடை
தொடர்களும்
வெங்காயத்தின்
அளவு பற்றி
மனம்போன
போக்கிலான தர
அளவைகளை
விதிப்பதால்
அந்தத் தர அளவைகளை
எட்ட
முடியாமல்
போன பயிர்கள்
பெருமளவில்
அழுகிப்
போயின.
சர்வதேச
அளவில், பன்னாட்டு
சில்லறை வர்த்தக
பகாசுர
நிறுவனங்கள்,
உற்பத்தியாளர் களுக்கு
கூடுதல்
விலையையோ, நுகர்வோருக்கு குறைந்த
விலையையோ
உத்தரவாதப்படுத்தி யதற்காக
அறியப்படவில்லை.
இது தலைகீழாகத்தான்
நடந்துள்ளது.
அய்முகூ
அரசாங்கம் சொல்வது
போல், ‘இடைத்தரகர்களை
ஒழித்து விடுவதற்கு’
மாறாக, உண்மையில்,
இந்த பன்னாட்டு
சில்லறை
வர்த்தக
பகாசுர
நிறுவனங்கள்,
- விவசாயியோ,
உற்பத்தியாளரோ
- எந்த
உள்நாட்டு
உற்பத்தியாளரை
விடவும்
சக்தி வாய்ந்த
அயல்நாட்டு
இடைத்தரகர்களாக
எழுவார்கள்.
விலைகள்
நிர்ணயிப்பதில்
விளையாடுவார்கள்.
பிறகு
கிட்டத்தட்ட
ஏகபோகமாகிவிடுவார்கள்.
மேலான
தொழில்நுட்பத்தை,
குறிப்பாக,
பொருட்கள்
வீணாவதைத்
தடுக்க
குளிர்பதன வசதி
போன்றவற்றை
கொண்டு வர, சில்லறை வர்த்தகத்தில்
அந்நிய நேரடி
முதலீடு அவசியம் என்பது,
சில்லறை
வர்த்தகத்தில்
அந்நிய நேரடி முதலீட்டுக்கு
ஆதரவான, அதிர்ச்சி
தரும் மற்றுமொரு
வாதம். குளிர்பதன
வசதி போன்ற அடிப்படையான
ஒரு வசதிக்கு
ஏன் அந்நிய முதலீடு
வேண்டும்? நாம்
ஏற்கனவே
காட்டியுள்ளதுபோல்,
பொருட்கள்
வீணாவதைத் தடுப்பது
பற்றி
பன்னாட்டு
சில்லறை
வர்த்தக பகாசுர
நிறுவனங்கள்
அக்கறை
கொள்ளப்போவது
இல்லை.
மனம்போன
போக்கில் நிர்ணயிக்கப்பட்ட
தர அளவைகளை
எட்ட முடியாத
விளைபொருட்கள்
நிராகரிக்கப்பட்டு வீணாவது
மட்டுமின்றி,
பன்னாட்டு
சில்லறை வர்த்தக
பகாசுர
நிறுவனங்களால்
கட்டுப்படுத்தப்படும்
சர்வதேச
உணவுப்
பொருள்
தொழில், அது
கொள்முதல்
செய்கிற
உணவுப்
பொருளில் கிட்டத்தட்ட
பாதியை
வீணாக்குவதற்கே அறியப்படுகிறது.
இந்திய
நாடாளுமன்றத்தில்
விவாதம் நடந்துகொண்டிருக்கும்போதே,
மெக்சிகோ,
இந்தியா,
சீனா, பிரேசில்
உள்ளிட்ட பல
நாடுகளில்
வால் மார்ட்
கையூட்டு
தந்தது
பற்றிய குற்றச்சாட்டுகள்
மீது
அமெரிக்காவில் விசாரணை
நடந்துகொண்டிருப்பது
தெரிய வந்தது. வால்
மார்ட்டும்
அதன் துணை
நிறுவனங்களும்,
இந்த
நாடுகளில்
தங்கள்
கடைகளின் வலைப்பின்னலை
விரிவாக்க
கையூட்டு
கொடுத்ததற்கான
அறிகுறிகள்
உள்ளன. மேலும்,
இந்திய
சில்லறை
வர்த்தகத்
தொழிலில்
அந்நிய நிறுவனங்கள்
நுழைவு தடை
செய்யப்பட்டிருந்த
2010ல், வால்
மார்ட் அதன்
மொத்த
வியாபார
கூட்டாளியான
பார்தி
என்டர்பிரைசஸ்
நிறுவனத்தில்
100
மில்லியன்
டாலருக்கும்
மேல் (ரூ.550 கோடி)
ரகசியமாகவும் சட்டவிரோதமாகவும்
முதலீடு
செய்தது
பற்றி இந்திய
அமலாக்கப்
பிரிவு
விசாரித்து
வருகிறது.
அதே நேரம்,
‘இந்தியாவில்
முதலீடு
செய்ய கூடுதல்
வழித்துறைகள்’
உட்பட்ட
பல்வேறு பிரச்சனைகளில்,
அமெரிக்க
நாடாளுமன்ற மேலவை
உறுப்பினர்கள்
தனக்கு
ஆதரவாக நடந்து
கொள்ள, 2008 முதல், ரூ.125 கோடி செலவிட்டுள்ளதாக
வால் மார்ட்
நிறுவனமே தகவல்
வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் நுழைவதற்கான
‘ஆதரவைப்
பெற’ அந்தப் பணம்
உண்மையில்
எப்படி
செலவிடப்பட்டது?
நடந்து
கொண்டிருக்கும்
விசாரணைப்படி,
இந்தியாவில்
வால்
மார்ட்டின்
கையூட்டை பெற்றதாக
சொல்லப்படுவர்கள்
யார்? விடையில்லாத
இந்தக்
கேள்விகள், சில்லறை
வர்த்த கத்தில்
அந்நிய நேரடி
முதலீடு
கொள்கை பின்பற்றப்படும்
நிகழ்வுப்போக்கே
இருளார்ந்தது
என்பதைக்
காட்டுகின்றன.
சிறுகடைகள் நலிந்துபோவதற்கு
எதிராக, தொழிலாளர்களுக்கு
மிகக்
குறைவான கூலி
தரப்படுவதற்கு எதிராக,
அமெரிக்காவில்
சில்லறை
வர்த்தக பகாசுர
நிறுவனங்கள்
எதிர்ப்பை
சந்தித்துக் கொண்டிருக்கும்
இந்த
நேரத்தில், இந்திய அரசாங்கம்,
அமெரிக்காவால்
மூர்க்கத்தனமாக முன்தள்ளப்பட்டு,
சில்லறை
வர்த்தகத்தில் அந்நிய
நேரடி
முதலீட்டை
வலுவாக முன் தள்ளுவது
விந்தை
முரணாக
உள்ளது. ‘சாமானிய’
சிறுகடைகளுக்கு
ஆதரவு தரும் நோக்கம்
கொண்ட ‘சனிக்கிழமை
சிறு சந்தை’ என்ற
திட்டத்தை
முன்னேற்றுபவராக தோற்றம்
தர, அமெரிக்க
அதிபர் ஒபாமா,
சமீபத்தில்,
கிறிஸ்துமஸ்
பொருட்கள்
வாங்கு வதற்காக,
ஒரு
சிறிய
புத்தகக்
கடைக்கு தனது மகள்களை
அழைத்துச்
சென்றார்.
மக்களவையில்
சமாஜ்வாடி
கட்சியும் பகுஜன்
சமாஜ்
கட்சியும்
சில்லறை
வர்த்தகத்தில்
அந்நிய நேரடி
முதலீட்டு
கொள்கைக்கு எதிர்ப்பு
தெரிவித்த
பிறகு
வெளிநடப்பு செய்தன.
இதன் மூலம் இந்தக்
கொள்கை பாதுகாப்பாக
நிறைவேறுவதை
உறுதி செய்தன. மாநிலங்களவையில்
சில்லறை
வர்த்தகத்தில் அந்நிய
நேரடி
முதலீட்டுக்கு
ஆதரவாக பகுஜன் சமாஜ்
கட்சி
வாக்களித்தது.
அதன் மூலம் அரசாங்கத்துக்கு
ஒரு சொகுசான
வெற்றியை உறுதி
செய்தது.
அரசாங்கத்துக்கு
உதவி செய்யும்
அதே நேரம், சில்லறை
வர்த்தகத்தில்
அந்நிய நேரடி
முதலீட்டுக்கு
ஆதரவாக வாக்களிப்பது
தெரிந்துவிடுவதை
தவிர்க்க, வாக்கெடுப்பு
நடந்த அன்று
பல
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
நாடாளுமன்றத்துக்கு
வருவதை போர்த்தந்திரரீதியாக
தவிர்த்தனர்.
மக்களவையில்,
ஜார்க்கண்ட்
முக்தி
மோர்ச்சா தலைவர் சிபு
சோரன், ஜார்க்கண்ட்
விகாஸ்
மோர்ச்சா தலைவர்
பாபுலால்
மாரண்டி, இருவருமே அன்று
வரவில்லை.
ஜார்க்கண்ட்
முக்தி மோர்ச்சா நாடாளுமன்ற
உறுப்பினர்
காமேஷ்வர்
பாய்தா, சில்லறை
வர்த்தகத்தில்
அந்நிய நேரடி
முதலீட்டுக்கு
ஆதரவாக
வாக்களித்தார்.
மாநிலங்கள வையில்
உள்ள ஒரே ஒரு
ஜார்க்கண்ட்
முக்திமோர்ச்சா
உறுப்பினர்
வாக்கெடுப்பு
நேரத்தில் வெளிநடப்பு
செய்துவிட்டார்.
மதவாத பாஜக ஆதாயமடைந்து
விடக்கூடாது
என்பதற்காக சில்லறை
வர்த்தகத்தில்
அந்நிய நேரடி
முதலீட்டுக்கு
எதிராக
வாக்களிக்கவில்லை
என்று சமாஜ்வாடி
கட்சியும்
பகுஜன் சமாஜ்
கட்சியும் சொல்வது
நகைப்புக்குரியது.
உத்தரபிரதேசத்தில்
பகுஜன் சமாஜ்
கட்சி
பாஜகவுடன்
ஆட்சியை
பகிர்ந்துகொண்டது.
உத்தரபிரதேச
முதலமைச்சராக,
பாபர்
மசூதி
இடிப்புக்கு
தலைமை தாங்கிய, பாஜகவைச்
சேர்ந்த, கல்யாண் சிங்குடன்
சமாஜ்வாடி
கட்சி
உறவாடியுள்ளது.
சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு மீதான வாக்கெடுப்பின் முடிவு, மக்களின் விருப்பத்தை ஏளனம் செய்வதாக அமைந்துள்ளது. திரைமறைவு உடன்பாடுகள் மற்றும் அமெரிக்க நிர்ப்பந்தம் ஆகியவற்றால் கோர்க்கப்பட்ட, சந்தர்ப்பவாதத்தில் உருவாக்கப்பட்ட பெரும்பான்மையை அது பிரதிபலிக்கிறது. சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டுக்கு எதிரான வெகுமக்கள் எதிர்ப்புக்களை, ‘நாடாளுமன்றத்தை, நாட்டில் உள்ள சட்டங்களை மீறுவது’ என்று சொல்லி, அதுபோன்ற எதிர்ப்புக்கள் பொருளற்றவை என்று சொல்ல, இப்போது அய்முகூ அரசாங்கம் முனைவதில் வியப்படைய ஏதுமில்லை. ஜனநாயக உணர்வு மற்றும் அரசியல் அறம் ஆகியவற்றை நாடாளுமன்ற வாக்கெடுப்பு கேலிக்குரியதாக்கியுள்ளது. சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு என்கிற தற்கொலை கொள்கைக்கு, கோடிக்கணக்கான மக்களின் வாழ்வுரிமையை, நலன்களை ஆபத்தில் தள்ளுகிற இந்தக் கொள்கைக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிப்பதன் மூலம் இந்திய மக்கள், ஜனநாயகத்தின் உண்மை யான உணர்வை உயர்த்திப் பிடிப்பார்கள்.
(எம்எல்
அப்டேட், டிசம்பர்
11 - 17)