திருத்திக் கொள்ளாமலே இருப்பதைவிட தாமாக திருத்திக் கொள்வது மேலானது
வரதட்சணை தொடர்பான வழக்குகளில், பெண்கள் தரப்பில் நடக்கும் முறை கேடுகளால் மனித உரிமைகள் மீறப்படுவதாக, தான் கருதுவதால், புகாரை விசாரிக்க ஒரு குழு போட்டு குழு ஒப்புதலுடன் புகாரை பதிவு செய்யுமாறு ஜ÷லை 27 அன்று உச்சநீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வம் தீர்ப்பு சொன்னது. பாதிக்கப்பட்டவர்களையே குற்றம் சாட்டுதல் என்ற விக்டிம் பிளேமிங், விக்டிம் பேஷிங் ( Victim Blaming Victim Bashing) நடந்துள்ளதாக நாட்டின் முற்போக்கு ஜனநாயகக் குரல்கள் கண்டனம் தெரிவித்தன. இப்போது 29.11.2017 அன்று, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் கனிவல்கர், சந்திரசூட் அமர்வம், சட்டப்படி வழக்குகள் பதிவாக வேண்டும், அதற்கு சிக்கல் ஏற்படுத்தும் வழிகாட்டுதல்கள் எப்படிச் சரியாக இருக்கும் எனக் கேள்வி எழுப்பியுள்ளது. அந்தத் தீர்ப்பில் மாறுபடுவதாகச் சொன்ன நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஜனவரி மூன்றாவது வாரத்துக்கு ஒத்திவைத்துள்ளார்.
தவறான தீர்ப்புக்கள் தாமதமாகவேனும் திருத்தப்படுவது நல்லதுதானே.