COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Friday, December 1, 2017

சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் ஒரு முறை வேலை நிறுத்தத்தை நிறுத்தியுள்ளது

ஸ்ட்ரைக்குக்கு எதிராக நீதிமன்றம் ஸ்ட்ரைக் செய்வது வாடிக்கையாகிவிட்டது. ரூ.7,000 கொத்தடிமை மாதச் சம்பளம் வாங்கும் வாழ்க்கைக்கு எதிராக, தடைகளை எல்லாம் கடந்து போராடிய செவி லியர்களை, விஜயபாஸ்கரும் காவல்துறையும் மருத்துவ துறையும் ஒரு முறை மிரட்டினார்கள். 29.11.2017 அன்று சென்னை உயர்நீதிமன்றம் ‘பொது நல’ வழக்கில் வேலை நிறுத்தம் தொடர தடை விதித்துள்ளது. வழக்கு நேர உடையாடல்கள் பற்றிய பத்திரிகை செய்திகள் அதிர்ச்சி தருகின்றன. ரூ.7,000 சம்பளம் எனத் தெரிந்துதானே வேலைக்கு வந்தீர்கள், கட்டுப்படியாகாவிட்டால் விட்டுவிட்டு போக வேண்டியது தானே, வேலை நிறுத்தம் செய்ய அவசரமாய் ஓடி வந்தவர்கள், வேலைக்குத் திரும்ப மட்டும் அவகாசம் வேண்டுமா என தனியார் முதலாளிகள் போல் நீதிமன்றம் பேசியுள்ளது. மனச்சாட்சிக்கு விரோதமான ஒப்பந்தங்கள், ஊழியர்களைக் கட்டுப்படுத்தாது, வலியவர்கள், எளியவர்களிடம், கண்ணைக் காதை திறந்து வைத்துக்கொண்டுதானே ஒப்பந்தம் போட்டாய், பிறகு மாற்றிப் பேசலாமா என்று கேட்பது ஏற்கத்தக்கதல்ல என உச்சநீதிமன்றம் சென்ட்ரல் இன்லேன்ட் வாட்டர் ட்ரான்ஸ்போர்ட் கார்ப்பரேசன் வழக்கில் சொல்லியுள்ளதையும் அரசியல்சாசனத்தின் சமவேலைக்கு சம ஊதியம் என்ற கோட்பாட்டையும் உயர்நீதிமன்றம் கணக்கில் கொள்ள வேண்டும்.

Search