அறம்
அறம் படத்தில் கதாநாயகன் இல்லை. திரைக்குப் பின்னால் போராட்ட வாழ்க்கை வாழ்கிற பலவிதமான வலி வேதனைகளை சுமந்து கொண்டு அக்கம்பக்கமாக துணை பாத்திரங்களில் நடிக்கிற சாதாரணர்கள்தான் இந்த படத்தின் கதாநாயகர்கள் என படம் பார்த்துவிட்டு திரையரங்க இருக்கையை விட்டு எழும்போது உணர முடிகிறது.
துணை பாத்திரங்களான முதியவர் முதல் காக்கா முட்டை சிறுவர்கள், சிறுமி தன்சிகா அவர்களது பெற்றோர், ஊரார், அனைவரும் கதாநாயகர்கள். காட்டூர் கிராம வாழ்க்கை திரைப்படமாகியுள்ளது.
வழக்கமான திரைப்படங்களில் கதாநாயக னுக்கு எதிரிகள், வில்லன்(கள்) இருப்பார்கள்; அவர்கள் படம் முடியும் நேரம் திருந்துவார்கள் அல்லது செத்துப்போவார்கள். அந்த வில்லன்களும், இந்த படத்தில் இல்லை. அரசு அதிகாரிகள், காவல்துறை, ஆட்சியர், மக்கள் பிரதிநிதிகள் என்ற அனைவரும் மக்களுக்கு எதிரிகளாக வில்லன்களாக படத்தில் காட்டப்படுகின்றனர்.
திருவள்ளுர் மாவட்டத்தின் கடற்கரையை ஒட்டிய, ஆனால் தண்ணீர் இல்லாத வறண்ட பாலைவனமாக மாறிவிட்ட காட்டூர் கிராமத்தின் விறகு வெட்டும் தொழிலாளி சுமதியும் அவரது கணவர் புலவேந்திரனும் அவர்களது மகள் தன்சிகாவின் பிறந்த நாளை கொண்டாட பல கனவுகளோடு திட்டமிடுகிறார்கள். பிறந்த நாளுக்கு இரண்டு நாட்களுக்கு முன் தண்ணீருக்காக போடப்பட்ட ஆழ்துளையில் சிறுமி விழுந்து விடுகிறாள். சிறுமியை மீட்க, தலையாரி முதல் ஆட்சியர் வரை திரண்டும், ஆம்புலன்ஸ் முதல் ஆக்சிஜன் வரை இல்லாமல் மீட்க துப்பில்லாமல் கைவிட்டு விடுகின்றனர். நியாயம் கேட்கும் தலை காய்ந்த மக்கள் ஒடுக்கப்படுகிறார்கள். எதுவும் செய்ய முடியவில்லை. தேனியில் எங்கோ ஒரு கிராமத்தில், மீட்பு எந்திரம் கண்டுபிடித்த பொறியாளரையும் தேடி கண்டுபிடிக்க அரசாங்கத்தால் முடியவில்லை.
அரசு கட்டமைப்பு செத்த பிணமாக நாறுகிறது. நேர்மையான ஆட்சியர் மக்களின் முன் முயற்சிகள் மீது நம்பிக்கை வைக்கிறார். மக்களுடன் இணைந்து, சிறுவனுக்கு உற்சாகம் தந்து நம்பிக்கை தந்து ஆழ்துளைக்குள் அனுப்புகிறார். சிறுவன் முதலில் தயங்குகிறான். சட்டமன்ற உறுப்பினர் நிவாரணம் தந்து வழக்கம் போல பிரச்சனைக்கு முடிவு கட்ட அரசியல் செய்ய முயற்சி செய்கிறார். மக்களும் ஆட்சியரும் அறச் சீற்றத்தை வெளிப்படுத்துகிறார்கள். நம்பிக்கையை விதைக்கிறார்கள். சிறுவன் ஆழ்துளைக்குள் போய் தங்கையை உயிருடன் மீட்டு வருகிறான்.
ஆட்சியர் மக்களுடன் இணைந்து சிறுமியை மீட்டது விதி மீறல் என குற்றம் சுமத்துகின்றனர். நிஜ வாழக்கையில் தொழிலாளிக்கு எதிராக விசாரணை அதிகாரி இருப்பார். ஆனால் நடுநிலையாளர் என நடிப்பார். ஆட்சியர் மீதான விசாரணையில் விசாரணை அதிகாரி அப்பட்டமாக வலுவானவர்கள் பக்கமே நின்றுவிடுகிறார். ஆட்சியர் மக்கள் பணியாற்ற பதவியை உதறி விட்டு மக்களை தேடி வருகிறார்.
குடிக்க தண்ணீர் கேட்டு போராடியவர்களுக்கு தண்ணீர் இல்லை. கார்ப்பரேட் விடுதிகளுக்கு தண்ணீர் லாரிகளில் செல்கிறது. ஆளும் கட்சி பிரதிநிதி தண்ணீருக்காக போட்ட ஆழ்துளை குழாயை மூடாததால் விபத்து ஏற்படுகிறது. ஆனால் அந்த ஊருக்கு அருகிலேயே ரூ.800 கோடி செலவில் ராக்கெட் ஏவப்படுகிறது. 380 குழந்தைங்க செத்த பிறகும் மீட்கறதுக்கு கொக்கியும் கயிறும் தவிர இந்த அரசாங்கத்துக்கிட்ட ஒரு எந்திரமும் கிடையாது. கண்டுபிடிக்கல. டிரெய்னேஜ் சாக்கடை சுத்தம் செய்ய மனிதர்கள்தான் இறங்கணும்... அதுக்கு ஒரு மிஷின் கண்டுபிடிக்க முடியல... வசனங்கள் அரசியல் பேசுகின்றன. பக்கெட், தெர்மாக்கோல், கயிறு போன்ற மரபு வழி கருவிகள் தாண்டி எந்த பேரிடர் மீட்பு கருவிகளும் அரசிடம் இல்லை என்பதையும், ஆனால் மக்களை ஏமாற்ற, அடக்க, மிரட்ட, கொள்ளையடிக்க ஏராளமான வழிகள் உள்ளன என்பதையும் படம் வெளிப்படுத்துகிறது. சாதாரண கோரிக்கைகளுக்குக் கூட போராடினால்தான் அதிகாரிகள் மக்களைத் திரும்பி பார்ப்பார்கள் என படம் உணர்த்துகிறது.
படத்தில் காட்டப்படும் காட்டூர் கிராமம் நிஜ வாழ்க்கையில் மக்கள் போராட்ட களங்களாக மாறியுள்ள தமிழகத்தை, கண்ணன் கோட்டை, நெடுவாசல், கதிராமங்கலம், நன்னிலம் கிராமங்களை நினைவுபடுத்துகிறது.
காட்டூர் கிராமத்தில் வறட்சியை எப்போதும் பார்த்ததில்லை என்றும், பாட்டில் தண்ணீர் தயாரிப்பு ஆலை வந்த பிறகுதான் தண்ணீர் பிரச்சனை வந்ததாகவும், படத்தில் மக்கள் உண்மையை சொல்கிறார்கள். நிலத்தை நீர் வளத்தை சூறையாடிய கார்ப்பரேட் நிறுவனங்களால், அவர்கள் போட்ட ஆழ்துளை கிணறுகளால் மக்கள் பலவிதங்களிலும் பாதிக்கப்படுவதை அறம் அம்பலப்படுத்துகிறது.
மக்கள் வாழ்க்கையை சூறையாடும் கார்ப்பரேட் வளர்ச்சிக்காக மட்டுமே அதிகாரத்தில் இருப்பவர்கள் செயல்படுவதையும் தோற்றத்திற்காக நடிப்பதையும், அதிகாரிகள், ஆட்சியாளர்கள் இனிமேலும் இப்படித்தான் இருப்பார்கள், புறக்கணிக்கப்படும் மக்கள் போராடினால்தான் அவர்களை பின்னுக்கு தள்ளமுடியும் என்பதையும் படம் சொல்கிறது.
ஆழ்துளை கிணற்றுக்கு போடப்பட்ட துளையை மூடாமல் 380 குழந்தைகள் மாண்டு போனதற்கு இந்த சமூக கட்டமைப்பும் புறக்கணிப்பும் அரசு அதிகாரிகளின் அலட்சியமும்தான் காரணம் என்பதை, அதிகாரிகள் கட்சிகள் பணக்காரர்கள் கூட்டை, அவர்களின் அராஜக கொள்ளையை, மக்கள் ஒன்றுசேர்வதை அவர்கள் தடுப்பதை, உழைக்கும் மக்கள் நேர்மையான அணுகுமுறை உள்ளவர்களை தலைவர்களை முன்னோடிகளை தேடுகிறார்கள் என்பதை படத்தில் பார்க்க முடிகிறது.
தமிழ் திரையுலகம் சாதியரீதியான இறுக்கம் கொண்டது. இங்கு ரஞ்சித் அடுத்து கோபி நயினார் என தலித் இயக்குநர்கள் தாழிடப்பட்ட கதவுகளை தகர்த்து நுழைந்துள்ளனர். படம், போராட்ட அரசியலை பேசுகிறது. காவல்துறை அதிகாரிகளிடம், சட்டமன்ற உறுப்பினர் போன்றவர்கள் கோபப்பட்டால் பொறுத்துக் கொள்கிறீர்கள், மக்கள்தான் உங்கள், நிஜமான எசமானர்கள், அவர்கள் கோபப்படும்போது அக்கறையாய் மதிப்பு தந்து பதில் சொல்லுங்கள் என்று படம் திட்டவட்டமாகச் சொல்கிறது. நயன்தாரா பல பாத்திரங்களில் ஒரு பாத்திரமாக வருகிறார். அவரே எல்லாம் என்று இல்லை. நாடாளுமன்ற நிறுவனங்களில் மக்களோடு நிற்பவர்களுக்கு இடமில்லை, மக்கள் தங்களைத் தாங்களே, நம்பி போராடினால்தான், மாற்றங்கள் வரும் என்று சொல்லும் அறம், விரும்பத்தக்க அவசியமான திரைப்படம்.
(இககமாலெயின் அம்பத்தூர் பகுதிக் குழு உறுப்பினர்கள் 16 பேர் இரண்டு நாட்கள் படம் பார்த்து கருத்து பரிமாறிக் கொண்டதன் அடிப்படையில் எழுதப்பட்டது. தொகுப்பு: எஸ்.சேகர்)