நவம்பர் இறுதியில் இரண்டு நிகழ்ச்சிகள்
பாரதி
‘உயர்நீதிமன்றங்களில் தாய்மொழி’ என்ற தலைப்பில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வழக்கறிஞர்கள் அணியின் முதல் மாநில மாநாடு 25.11.2017 அன்று சென்னையில் நடத்தப்பட்டது. மூத்த வழக்கறிஞர், ஏஅய்சிசிடியு தேசியத் தலைவர் என்ற அடிப்படையில், தோழர் எஸ்.குமாரசாமி அழைக்கப்பட்டார்.
அவருடன், ஜனநாயக வழக்கறிஞர் சங்க தோழர்கள் மற்றும் சட்ட கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி, முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி அரிபரந்தாமன், எவிடன்ஸ் கதிர், தமிழ் இந்து நடுப்பக்க ஆசிரியர் சமஸ், தமிழ்நாடு வழக்கறிஞர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் திருமலைராஜன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் சிறப்புரையாற்றினர். விடுதலை சிறுத்தைகள் வழக்கறிஞர் அணி மாநிலச் செயலாளர் பார்வேந்தன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் மூத்த வழக்கறிஞர் சங்கரசுப்புவுக்கு சட்ட மாமனிதர் விருது வழங்கப்பட்டது.
தோழர் எஸ்.குமாரசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சி சமீபத்தில் நடத்திய மாநில சுயாட்சிக்கான மாநாடு வரவேற்கத்தக்கது என்றும் இந்த மாநாட்டின் கோரிக்கையான உயர்நீதிமன்றங்களில் தாய் மொழி என்ற கோரிக்கை ஜனநாயகக் கோரிக்கை என்றும், டாக்டர் அம்பேத்கரை தலித் மக்களின் தலைவர் என்று சுருக்கிப் பார்ப்பது தவறு என்றும், அவர் இந்தியாவில் ஆகச்சிறந்த தலைவர்களில் ஒருவர் என்றும், அம்பேத்கர் 1938ம் ஆண்டு மகாராஷ்டிராவில் இடதுசாரி தலைவர்களுடன் சேர்ந்து ரஷ்ய புரட்சி நடந்த நவம்பர் 7 அன்று வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தவர் என்றும், அவர் அப்பொழுதே தொழிலாளர்கள் விரும்பும் சங்கம் வைத்து கொள்ள தொழிலாளர்களுக்கு உரிமை உண்டு எனச் சொல்லியுள்ளார் என்றும், வேலை நிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர காவல்துறை ரூ.250 வாங்கிக் கொண்டு, முதலாளிகள் பக்கம் நின்றதாக விமர்சனம் செய்தார் என்றும், வேலை நிறுத்தப் போராட்டத்தை தான் தூண்டிவிட்டதாக அரசால் முடிந்தால் வழக்கு போடுமாறு சவால் விடுத்ததாகவும் குறிப்பிட்டு, அம்பேத்கரின் தொழிலாளர்கள் மீதான அக்கறையைப் பற்றி விளக்கினார். வேலை நிறுத்த உரிமை மறுப்பு, அடிமைத்தன திணிப்பு என்ற அம்பேத்கரின் கருத்து, இன்று தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் வழக்கறிஞர்கள் போராட்டத்துக்கும் பொருந்தும் என்றார்.
இந்தியாவில் பன்மைத்துவத்திற்கு எதிராக ஆர்எஸ்எஸ் பாஜக செயல்படுவதாக, தமிழகத்தில் இரட்டை இலை மீது, தாமரை அமர்ந்து கொண்டு ஆட்சி செய்வதாக, குறிப்பிட்டார்.
கோவையில் தொழிற்சங்க உரிமைக்காக போராடிய 27 தொழிலாளர்கள் மீது கொலை வழக்கு போடப்பட்டு 25 பேர் விடுதலையாகி உள்ள பின்னணியில், இரண்டு பேருக்கு ஆயுள் தண்டனையை, மேல்முறையீட்டு வழக்கை விசாரிக்காமலேயே உச்சநீதிமன்றம் காரணங்கள் சொல் லாமல் தள்ளுபடி செய்தததையும், உயர்நீதிமன்றம் வரை விடுதலை செய்யப்பட்ட ஏழு பேருக்கும் உச்சநீதிமன்றம் விடுதலைக்கு எதிரான வழக்கை ஏன் விசாரிக்கக் கூடாது எனக் காரணம் காட்டச் சொல்லி அறிவிக்கை அனுப்பியுள்ளதையும் சுட்டிக்காட்டி, இந்தியா முழுக்க பிரிக்கால் தொழிலாளர்களின் விடுதலைக்கு நியாயம் கேட்டு, இயக்கம் நடத்தப் போவதாகவும், அதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இன்றைய இந்தியாவில் நீலமும் சிவப்பும் இணைந்து செயல்பட அவசியம் வந்துள்ளதையும் குறிப்பிட்டார். நிகழ்ச்சியில் 700க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்துகொண்டனர்.
சான்மினா தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம்
26.11.2017 அன்று, சான்மினா தொழிலாளர்கள் 6ஆவது நாளாக நடத்தும் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு வாழ்த்து தெரிவித்து ஏஅய்சிசிடியு தேசிய தலைவரும் இககமாலெ மாநிலச் செயலாளருமான தோழர் எஸ்.குமாரசாமி உரையாற்றினார். சான்மினா தொழிலாளர்களின் தலைவர் தோழர் கே.பாரதி ஆர்ஒய்ஏ மாநில தலைவர், தோழர் ராஜகுரு ஏஅய்சிசிடியு மாநிலச் செயலாளர் தோழர் இரணியப்பன் மற்றும் அய்சா மாநிலச் செயலாளர் தோழர் சீதா ஆகியோர் கலந்து கொண்டனர்.
கொட்டும் மழையில் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட னர். கூட்டத்தில் பேசிய தோழர் எஸ்.குமாரசாமி சான்மினாவின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள அய்க்கிய அமெரிக்காவில் அதிபர் பதவி வகிக்கும் டிரம்ப் தொழிலாளர்களுக்கு விரோதமானவர் என்றும், அய்க்கிய அமெரிக்கா உருவாகும்போதே, அய்ரோப்பாவிலிருந்து வந்தவர்கள், அய்க்கிய அமெரிக்காவில் வாழ்ந்த பூர்வகுடி இந்தியர்களை அழித்துவிட்டு, தங்களது வேலைகளை செய்வதற்கு ஆப்பிரிக்காவிலிருந்து கருப்பின மக்களை அடிமைகளாக கொண்டு வந்தார்கள் என்றும் குறிப்பிட்டார். இதே அய்க்கிய அமெரிக்கா சின்னஞ்சிறு கியூபாவால், வியட்நாமால் முறியடிக்கப்பட்டது என்பதையும் கவனப்படுத்தினார்.
எந்த ஒரு போராட்டமும், எப்போது முடிகிறது என்பதை விட, எப்படி முடியப் போகிறது என்று பார்க்க வேண்டுமென்றும், சான்மினா தொழிலாளர்கள் 10 ஆண்டுகளாக போராடி, நிமிர்ந்து நின்ற பின்னணியில்தான், ஏஅய்சிசிடியுவில் இணைந்தார்கள் என்றும், தற்போது நடைபெறுகிற போராட்டத்தில் தலைநிமிர்ந்து கவுரவத்துடன் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு முடிவு காண வேண்டுமெனவும், போராடத் தயார் சிறை செல்லத் தயார் இரத்தம் சிந்தத் தயார் என்ற முழக்கங்களுக்கு, சான்மினா தோழர்கள் உயிர் தர வேண்டும் எனவும் அழைப்பு விடுத்தார்.
கூட்டம், அதில் கலந்துகொண்ட வழக்கறிஞர்களுக்கும் புரட்சிகர இளைஞர் கழக தோழர்களுக்கும் சான்மினா தொழிலாளர்களுக்கும் எழுச்சியும் நம்பிக்கையும் தருவதாக அமைந்தது.