நீதிபதிகள் நீதி வழங்குவதில்லை
நீதிபதிகள் தீர்ப்புக்காரர்களே
கர்ணன், சிஜேஏஆர், காமினி ஜெய்ஸ்வால், ஹடியா வழக்குகளில்
உச்சநீதிமன்ற நடப்புகளும் நமது கேள்விகளும்
எஸ்.குமாரசாமி
தினமணி நாளிதழ், 15.11.2017 தேதிய தலையங்கத்தில், 10.11.2017 அன்று உச்சநீதிமன்றம் இதுவரை சந்தித்திராத சோதனையைச் சந்தித்தது என்றும் ஏறத்தாழ 75 நிமிடங்கள் அங்கு நிலவிய பதற்றம் அதன் மரியாதையையும் நம்பிக்கையையும் சிதைப்பதாக அமைந்துவிட்டது என்றும் கவலைப்பட்டது.
நீதித்துறை ஊழல் முக்கிய பிரச்சனையென்றும், அதை நீதித்துறை தனக்குத் தானே தீர்த்துக் கொள்ள முடியும் என்று தோன்றவில்லை என்றும் சொல்லி அந்தத் தலையங்கம் முடிகிறது.
தி இந்து ஆங்கில நாளிதழின் 12.11.2017 தலையங்கம், இந்திய உச்சநீதிமன்ற நீதிபதிகள் மத்தியில் பிளவுகள் இருப்பதாகத் தோற்றம் ஏற்பட்டுள்ளது என்றும், தலைமை நீதிபதி அவர் தொடர்பான வழக்கை அவரே விசாரிக்கிறார் என்ற தோற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் எழுதியதோடு, உச்சநீதிமன்ற நடப்புக்கள், நீதிபதிகள் தொடர்பான ஊழல் புகார் மீதான சிபிஅய் விசாரணையைப் பின்னுக்குத் தள்ளிவிடக் கூடாது என்ற கவலையையும் வெளிப்படுத்தியது.
10.11.2017 அன்று உச்சநீதிமன்றத்தில் என்னதான் நடந்தது?
10.11.2017க்குள் நுழையும் முன்பு, கொஞ்சம் பின்னே சென்று (ஃபிளாஷ் பேக்) பார்க்க வேண்டும். லக்னோ பிரசாத் கல்வி அறக்கட்டளை மருத்துவக் கல்லூரி மாணவர்களைச் சேர்க்க, 20.08.2016 அன்று இந்திய மருத்துவ கழகம் (மெடிக்கல் கவுன்சில் ஆஃப் இந்தியா) அனுமதி தந்தது. பிறகு உள்கட்டுமான மற்றும் இதர வசதிகள் இந்த மருத்துவக் கல்லூரியில் இல்லை என்பதால், 2017 - 2018 மற்றும் 2018 - 2019ல் மாணவர்களைச் சேர்க்கக் கூடாது என இந்திய மருத்துவ கழகம் உத்தரவிட்டது. இவ்வாறு 46 மருத்துவக் கல்லூரிகளுக்குத் தடை விதித்தது. கல்லூரி அறக்கட்டளை, தடைக்கெதிராக உச்சநீதிமன்றத்தை அணுகியது. கல்லூரிக்கு ஒரு வாய்ப்பு தருமாறும், கல்லூரியின் முறையீட்டை பரிசீலித்து முடிவெடுக்குமாறும் உச்சநீதிமன்றம் சொன்னது. ஆய்வுக்குப் பின் அரசாங்கம் தன் முடிவை மறுஉறுதி செய்து, மாணவர் நுழைவுக்கு தடை தொடரும் என அறிவித்தது. மீண்டும் நிர்வாகம் ஆகஸ்ட் 25ல் உச்சநீதிமன்றத்தில் மனு செய்தது. அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்காடும் உரிமையைத் தக்கவைத்துக் கொண்டு உச்சநீதிமன்ற மனுவைத் திரும்பப் பெற்றது. ஆகஸ்ட் 25 அன்று அலகாபாத் உயர்நீதிமன்றம் அடுத்த விசாரணை தேதியான ஆகஸ்ட் 31 வரை, கலந்தாய்வுக்கான கல்லூரிகள் பட்டியலில் இருந்து இந்த கல்லூரியின் பெயரை நீக்க வேண்டாம் என உத்தரவிட்டது. செப்டம்பர் 18 அன்று தலைமை நீதிபதி உள்ளிட்ட நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, கனிவல்கர், சந்திரசூட் அமர்வம், 2017 -2018ல் இந்தக் கல்லூரி மாணவர்களைச் சேர்க்கக் கூடாது எனவும், 2018 - 2019 மாணவர் சேர்க்கை தொடர்பாக இந்திய மருத்துவ கழகம் ஆய்வு செய்யலாம் எனவும் உத்தரவிட்டது.
பிறகு ஆரம்பித்தது பிரச்சனை. செப்டம்பர் 19 அன்று சிபிஅய் ஒரு முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்தது. ஒடிஷா முன்னாள் உயர்நீதி மன்ற நீதிபதி அய்.எம்.குதூசி, பிரசாத் கல்வி அறக்கட்டளை உறுப்பினர்கள், ஒடிஷாவின் விஸ்வநாத் அகர்வாலா போன்றோர் நீதிபதிகளுக்கு லஞ்சம் கொடுத்து வழக்கில் சாதக முடிவு பெறலாம் எனப் பேசி சதி செய்ததாக முதல் தகவல் அறிக்கை (எஃப்அய்ஆர்) சொன்னது. கிட்டத்தட்ட ரூ.2 கோடி வரை கைப்பற்றப்பட்டது. முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி அய்.எம்.குதூசி கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டு, பின் பிணையில் வெளியே வந்தார்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அரசியல் அமைப்புச் சட்ட அமர்வத்தில் இருந்ததால், நீதித்துறை பொறுப்பேற்றல் மற்றும் சீர்திருத்தங்களுக்கான இயக்கம், கேம்பைய்ன் ஃபார் ஜ÷டிசியல் அக்கவுண்டப்ளிட்டி அன்ட் ரிஃபார்ம்ஸ் (சிஜேஏஆர்) தனது வழக்கை, 08.11.2017 அன்று உச்சநீதிமன்றத்தின் 2ஆவது நீதிமன்றத்தில் பட்டியலில் எடுக்கக் கோரியது (மென்ஷன்). பிரசாத் அறக்கட்டளை, உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு லஞ்சம் கொடுக்க திட்டமிட்டதாகப் பதிவாகி உள்ள முதல் தகவல் அறிக்கை மீது பாரபட்சமில்லாத சுதந்திரமான விசாரணை கோரியது. உச்சநீதிமன்றத்தின் இரண்டாம் நிலையில் உள்ள நீதிபதி செல்லமேஸ்வர் வழக்கை 10.11.2017ஆம் தேதி தம் முன் பட்டியிலில் சேர்க்க வாய்மொழி உத்தரவு போட்டார். ஆனால் தலைமை நீதிபதி தமது நிர்வாக அதிகாரத்தைப் பயன்படுத்தி, அந்த வழக்கை, நீதிபதிகள் ஏ.எம்.சிக்ரி, அசோக் பூஷன் அமர்வம் முன்பு 10.11.2017ஆம் தேதி பட்டியலில் போட்டிருந்தார். இந்த வழக்கைத் தொடுத்த சிஜேஏஆர் அமைப்பு, வழக்கு தலைமை நீதிபதி தொடர்பில்லாமல் நடக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு, திரும்பவும் தனது உறுப்பிரான மூத்த வழக்கறிஞர் காமினி ஜெய்ஸ்வாலை தனிநபர் மனுதாரராகப் போட்டு, மருத்துவக் கல்லூரி ஊழலில் நீதிபதிகள் பங்கு பற்றிய புகாரை விசாரிக்க புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரிக்க எடுத்துக் கொள்ளுமாறு 09.11.2017 அன்று மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே நீதிபதிகள் செல்லமேஸ்வர் அப்துல் நாசிர் அமர்வம் முன் (மென்ஷன்) குறிப்பிட்டார். நீதிபதிகள் 12.45க்கு வழக்கை விசாரித்தனர். சிபிஅய்யின் முதல் தகவல் அறிக்கை உச்சநீதிமன்றம் தொடர்பாக இருப்பதாலும், புகார்கள் கவலை அளிப்பதாலும், வழக்கில், உச்சநீதிமன்றத்தின் முதல் 5 நீதிபதிகள் அமர்வம் முன்பு நவம்பர் 13 அன்று விசாரணை நடக்கும் என உத்தரவிட்டார்.
இந்தப் பின்னணியில் நவம்பர் 10 காலை 6ஆவது நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஏ.எம்.சிக்ரி மற்றும் அசோக் பூஷன் அமர்வம் முன்பு சிஜேஏஆர் வழக்கு விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் தம்முன் 10ஆம் தேதி வழக்கில் உள்ள அதே பிரச்சனையை எப்படி 9ஆம் தேதி வேறு ஒரு வழக்கில் திரும்பவும் எழுப்பினீர்கள் என்று கேட்டார்கள். வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், இந்த வழக்கில் தலைமை நீதிபதி நிர்வாக வகைப்பட்ட முடிவு கூட எடுக்கக் கூடாது என்று கருதியதால்தான், இரண்டாவது நீதிமன்றம் சென்றோம் என்றார். நீதிபதிகள் சிக்ரியும் அசோக் பூஷனும் தம் முன் உள்ள சிஜேஏஆர் வழக்கை காமினி ஜெய்ஸ்வால் வழக்குடன் இணைப்பதா என்பதை தலைமை நீதிபதி முடிவெடுக்கட்டும் என்று சொன்னார்கள்.
இந்த நிலையில் திடீரென 10.11.2017 அன்று 2.40க்கு தலைமை நீதிபதி அமரும் முதல் நீதிமன்றத்தில் 7 நீதிபதிகள் அமர்வம் முன்பு 3 மணிக்கு சிஜேஏஆர் வழக்கு விசாரணைக்கு வரும் என பட்டியல் போடப்பட்டது. 7 நாற் காலிகள் போடப்பட்டன. தலைமை நீதிபதி, நீதிபதிகள் சிக்ரி, அகர்வால், அசோக் பூஷன், அருண் மிஷ்ரா, அமிதவ் ராய், கனிவல்கர் கொண்ட அமர்வத்திலிருந்து, நீதிபதிகள் சிக்ரியும் அசோக் பூஷனும் விலகிக் கொண்டனர். சிஜேஏஆர் தொடுத்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அதனோடு காமினி ஜெய்ஸ்வால் வழக்கு சேர்க்கப்படவில்லை. சிஜேஏஆர்ரின் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் தாம் பேச அனுமதிக்கப்படவில்லை என்றும், வழக்கில் சம்பந்தம் இல்லாத வழக்கறிஞர்கள் எல்லாம் நீதிபதி செல்லமேஸ்வர் 5 நீதிபதிகள் அமர்வ விசாரணைக்கு உத்தரவிட்டது தவறு என வாதாட அனுமதிக்கப்பட்டதாகவும், தாம் வெளியேற நேர்ந்தது என்றும் சொல்கிறார். தலைமை நீதிபதி உணர்ச்சிவயமாய் இருந்தார். அவர் நிலைக்கு ஆதரவாக பல வழக்கறிஞர்கள் உணர்ச்சிவயமாய் இருந்தனர். நீதிமன்ற அறையில் பதட்டம் நிறைந்திருந்தது.
இந்த நிலையில் தலைமை நீதிபதி மனுதாரர் வழக்கறிஞர் இல்லாத நிலையில், தாமே மாஸ்டர் ஆஃப் த ரோஸ்டர் என்றும், அமர்வங்களை அமைப்பது, அமர்வங்களுக்கு வழக்குகளை ஒதுக்குவது என்பவை தமது பணி மட்டுமே என்றும், இதை வேறு எவரும் செய்ய முடியாது என்றும் உத்தரவிட்டார். அதாவது, உச்சநீதிமன்றத்தில் இரண்டாவது இடத்தில் உள்ள நீதிபதி செல்லமேஸ்வர், காமினி ஜெய்ஸ்வால் வழக்கில் 5 நீதிபதிகள் அமர்வம் அமைத்து விசாரிக்கச் சொன்னது தவறு என பொருள்படுமாறு தீர்ப்பளித்தார். அமர்வத்தின் முன் பட்டியலிடப்படாத வழக்கு தொடர்பாகவும் தீர்ப்பு வழங்கப்பட்டது. காமினி ஜெய்ஸ்வால் வழக்கை விசாரிக்க 8ஆவது நீதிமன்றத்தில் நீதிபதிகள் அகர்வால், அருண் மிஷ்ரா, கனிவல்கர் அமர்வம் அமைக்கப்பட்டு, நவம்பர் 14 விசாரணை என குறிக்கப்பட்டது. நவம்பர் 14 அன்று சாந்தி பூஷன் ஆஜராகி, வழக்கை நடத்தும் அமர்வத்தை தலைமை நீதிபதி அமைத்திருக்கக் கூடாது என்றும், நீதிபதி கனிவல்கர் அமர்வத்திலிருந்து விலக வேண்டும் என்றும் கோரினார். நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது. ஆனால் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. வழக்கு தொடர்ந்தவர்களுக்கு உள்நோக்கம் இருப்பதாகச் சொல்லி, வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. வழக்காடிகள் சாதகமான அமர்வங்களை தேடுவது ஆபத்தான போக்கு எனக் குறிப்பிடப்பட்டது. ஆனால், எந்த ஒருவரும் அவரது வழக்கில் அவரே தீர்ப்பு சொல்பவராக இருக்கக் கூடாது என்ற கோட்பாடு, உச்சநீதிமன்றத்தால் மீறப்பட்டது என்ற இந்த வழக்கு தொடர்பான விமர்சனம் எப்போதும் இருக்கும்.
உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஃபாலி நாரிமன் ‘நினைவுகள் மறையும் முன்பே’ என ஒரு புத்தகம் எழுதினார். 1964ல் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கஜேந்திர கட்கர் முன்பு நடந்த ஒரு வழக்கைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.
அவர் முன்பு, மும்பை நில ஆர்ஜித சட்ட வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கஜேந்திர கட்கர் மும்பையில் ஒரு வீட்டு வசதி கூட்டுறவு சொசைட்டியில் உறுப்பினராக இருந்தார். அதனால், கஜேந்திர கட்கர் இந்த வழக்கை விசாரிக்கக் கூடாது என, பிரபல வழக்கறிஞர் திரிக்கம் தாஸ் கேட்டுக் கொண்டார். கஜேந்திர கட்கரும் ஒப்புக்கொண்டார். அந்த கால கட்டத்தில் சென்னை நில ஆர்ஜித சட்டம் தொடர்பான வழக்கு ஒன்றும் விசார ணைக்கு வந்தது. கஜேந்திர கட்கர் அதைத் தாம் விசாரித்தால் என்ன எனக் கருதினார். அப்போது அட்டர்னி ஜெனரல் டஃப்தாரி, சென்னை வழக்கை நீங்கள் விசாரித்து தீர்ப்பு வழங்கினால் அது மும்பை வழக்கின் மீதும் தாக்கம் செலுத்தும், அதனால் நீங்கள் அதனையும் விசாரிக்காமல் இருப்பது அறம் சார்ந்த முடிவாக இருக்கும் என்றார். தலைமை நீதிபதி கஜேந்திர கட்கர் அதனை ஏற்றுக் கொண்டார்.
இப்போது தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா நீதிபதி செல்லமேஸ்வர் முடிவை மாற்றாமல் விட்டிருந்தால், அவர் மீதான மதிப்பு கூடி இருக்கும். விவகாரம், சில கருப்பு ஆடுகள் தொடர்பானதல்ல; நீதிபரிபாலன முறை தொடர்பானது. எக்கனாமிக் அண்ட் பொலிடிக்கல் வீக்லியின் நவம்பர் 18, 2017 தலையங்கம், நவம்பர் 10 நடப்புக்களால், ஒரு நீதிமன்றம் என்ற வகையில் உச்சநீதிமன்றம் தனது நம்பகத் தன்மையை இழந்துள்ளதாக எழுதி உள்ளது.
நீதிபதி கர்ணன் வழக்கு
நீதிபதி கர்ணன் வழக்கில், உச்சநீதிமன்றம் கையாண்ட அணுகுமுறை அப்போது பெரிய அளவுக்கு கேள்விகுள்ளாக்கப்படவில்லை. நீதிபதி கர்ணன் பற்றி அவர் செயல்கள் பற்றி அவர் அணுகுமுறை பற்றி பக்கம் பக்கமாய் எழுதியவர்கள், நீதி பரிபாலன முறையின் அடிப்படைகள் உச்சநீதிமன்றத்தால் மீறப்பட்டது பற்றி ஏதும் எழுதவில்லை.
நீதிபதி கர்ணனுக்கு உச்சநீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் மே 9 அன்று 6 மாத சிறை தண்டனை அளித்தார்கள். முதலில் தண்டனை தருவோம், காரணங்களுடன் கூடிய தீர்ப்பு பின்னர் வரும் என்றனர். உச்சநீதிமன்றம் கோடை விடுமுறை துவங்கும் முன் தண்டனை வழங்கிவிட்டது. விசாரித்த நீதிபதிகளில் ஒருவரான பினாகி சந்திரகோஸ் மே 27 ஓய்வு பெற்றார். திறந்த நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கும் நடைமுறைக்கு மாறாக, ஊடகங்களுக்கு வாய்ப்பூட்டு போடப்பட்ட கர்ணன் வழக்கில், உச்சநீதிமன்றம் மே 9 அன்று கையொப்பமிடப்பட்டதாகக் குறிப்பிட்டு, காரணங்கள் அடங்கிய தனது தீர்ப்பை ஜ÷லை 5 அன்றுதான் தனது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தது. நீதிபதிகள் செல்லமேஸ்வர் மற்றும் ரஞ்சன் கோகாயின் உடன்பட்ட, ஆனால் தனித் தீர்ப்பு ஜ÷லை 4 அன்று பதிவேற்றம் செய்யப்பட்டது. காரணங்களுடன் தீர்ப்பு என்று வரும் முன்பே, ஒரு நீதிபதி விஷயத்தில், நீதிபதிகளால் தேர்வு செய்யப்பட்ட ஒரு நீதிபதி விஷயத்தில், ஏன் அவசர அவசரமாய் ஆறு மாத தண்டனை என்பது இதுவரை புதிராகவே உள்ளது. புதிருக்கான பதில் என்றாவது ஒரு நாள் பிற்பாடு பதிவேற்றம் செய்யப்படலாம் போலும்!
மனநிலை பாதிக்கப்பட்டவருக்கு, குற்ற மனம் (மென்ஸ் ரியா) இல்லாததால் தண்டனை வழங்க முடியாது என்பது இந்திய தண்டனைச் சட்ட பாலபாடம். ஆனால் மாட்சிமை மிகுந்த உச்சநீதிமன்றம், கர்ணனின் மனநலத்தை சோதனை செய்ய உத்தரவிட்டு, சோதனை முடியாமலே, அவரது மனநலம் பற்றி தான் எழுப்பிய சந்தேகத்தைத் தான் தீர்த்துக் கொள்ளாமலே, அவருக்கு எவ்வாறு தண்டனை வழங்கியது?
நீதிபதி செல்லமேஸ்வர் தம் தீர்ப்பில் நீதிபதிகள் நியமன முறை பரிசீலிக்கப்பட வேண்டும் என்று சொன்னதோடு, நீதித்துறைக்கு சங்கடமேற்படுத்தும் பல நீதிபதிகளின் நடத்தை பற்றி நல்ல வேளையாகப் பொது மக்களுக்குத் தெரியவில்லை என்று வேறு சொல்லி உள்ளார். கர்ணன், சாதிக்கேற்ற நீதியா எனக் கேட்டால் என்ன பதில் சொல்வது? உயர்நீதிமன்ற நீதிபதியின் கதியே இதுதான் என்றால், நீதித்துறை பற்றி விமர்சிப்பவர்களுக்கு தீர்ப்பு ஓர் எச்சரிக்கை விடுவதாக ஆகாதா? கர்ணனிடம் உச்சநீதிமன்றம் கையாண்ட அணுகுமுறையை, உயர்நீதிமன்றங்கள் மற்ற கீழமை நீதிமன்றங்கள் கையாண்டால், உச்சநீதிமன்றம் அப்போது அறச் சீற்றத்தை வெளிப்படுத்தி உபதேசங்களை வாரி வழங்காதா?
உச்சநீதிமன்றம் இப்போதுதான் மூத்த வழக்கறிஞர் அந்தஸ்து வழங்குதலில் சில வரையறைகளைக் கொண்டு வந்துள்ளது. இது வரை வரைமுறை இல்லாமல் மூத்த வழக்கறிஞர் அந்தஸ்து வழங்கப்பட்டது, சமத்துவக் கோட்பாடு மீறல்தானே? உச்சநீதிமன்றத்தில் இன்று வரை ஏன் பெண்கள், தலித்துகள் அடையாள அளவில் கூட நியமனம் செய்யப்படவில்லை? மனு தர்மமும் அரசியல் அமைப்புச் சட்ட அறமும் போட்டியிடுகின்றனவா? நீதிபதிகள் நியமனத்திற்கு இன்னமும் ஏன் வெளிப்படைத்தன்மை கொண்டு வரப்படவில்லை? இப்போது சமீபத்தில் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் அலகாபாத் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். டெல்லி கீழமை நீதிமன்ற நீதிபதியாக இருந்த அவர் மகன் வருமானத்துக்கு புறம்பாக சொத்து குவித்ததாக வேலை நீக்கம் செய்யப்பட்டார். அமித் ஷாவுக்கு எதிரான தீர்ப்பு சொன்ன நீதிபதி ஜெயந்த் படேல், தலைமை நீதிபதியாக ஓய்வு பெறும் வாய்ப்பு வேண்டுமென்றே மறுக்கப்பட்டு, பணியிட மாற்றம் செய்யப்பட்டதில் என்ன வெளிப்படைத் தன்மை இருந்தது? நீதிபதிகள் நியமனம் வேண்டும் என்றால், வேண்டாத ஜெயந்த் படேல் பழிவாங்கப்பட வேண்டும் என்ற பேசப்படாத உடன்பாடு வந்திருக்குமா என்ற சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளதே! இந்தியா எங்கும் உள்ள நீதிமன்றத் தாழ்வாரங்கள் அடுக்கடுக்கான ஊழல் கதைகளை கேவலங்களைப் பேசுகின்றனவே!
ஹடியா வழக்கு
இந்துத்துவா ஆளும்போது இந்துத்துவா ஆணாதிக்க தீர்ப்புகள் வேறு அச்சுறுத்துகின்றன. கேரளப் பெண் அகிலா ஹடியாவாக மாறிய பிறகும், அகிலா அகிலாதான், அகிலா ஹடியா ஆனதும், காதல் போரில் இசுலாமியர் கட்டாய மதமாற்றம் செய்து நடந்த திருமணமும் செல்லாது என கேரள உயர்நீதிமன்றம், ஓர் ஆட்கொணர்வு மனுவில் தீர்ப்பளித்தது. திருமணத்தை ரத்து செய்தது. ஹடியாவை அவர் விருப்பத்துக்கு மாறாக, அவர் தந்தையுடன் அனுப்பியது. 24 வயது ஹடியா, மத போதனையால், சுயசிந்தனையை இழந்துவிட்டார் என்ற இந்துத்துவர்களின் வாதத்தை உயர்நீதிமன்றம் அப்படியே சொன்னது. நீதிமன்றம் அப்பட்டமாக சட்டத்தைக் காலில் போட்டு மிதித்தது. வயது வந்தவர் சுயவிருப்பத் திருமணத்தில் தலையிட, ரத்து செய்ய, நீதிமன்றத்திற்கு எங்கிருந்து வந்தது அதிகாரம்? சட்டம் தராத அதிகாரத்தை, பாசிச சூழல் தந்து விட்டதா?
காதல் போர், மூளைச் சலவை என்றெல் லாம் வழக்கில் துவக்கத்தில் பேசப்பட்டது. கேரள பெண்கள் ஆணைய வழக்கறிஞர் தினேஷ் வலியுறுத்திய பிறகுதான், ஹடியாவின் கருத்துக்கள் கேட்கப்பட்டதாகத் தெரிகிறது.
ஹடியாவின் வழக்கில் உச்சநீதிமன்றம் நடந்து கொண்டது சரியா? வயது வந்த ஹடியாவின் விருப்பத்தில் எவரும் தலையிடுவது, ஹடியாவின் உயிர் வாழும் உரிமையை, அந்தரங்க உரிமையை, வழிபாட்டு நம்பிக்கை சுதந்திரத்தைப் பறிப்பது என்று எப்போதோ முடிவெடுத்திருக்க வேண்டிய உச்சநீதிமன்றம், ஏன் காதல் போர் கோணத்தில் ஹடியா பிரச்சனையை தேசிய புலனாய்வு முகாமைக்கு விசாரணைக்கு அனுப்பியது? நவம்பர் 27 அன்று ஹடியா உச்சநீதிமன்றத்தில் ஆஜரானார். அவர் இசுலாமிய பெண் உடைகளுடன் நீதிமன்றம் வந்தார். அவருக்கு சுதந்திரமும் விடுதலையும் வழிபாட்டு உரிமையும் வேண்டும் என்று அழுத்தம் திருத்தமாய் அடித்துச் சொன்னார். அந்த 25 வயது பெண்ணுக்கு கார்டியன் (காப்பாளர்) போடுவது பற்றி உச்சநீதிமன்றம் யோசிக்க வேண்டிய அவசியம் என்ன?
கடத்தல்காரர்களிடம் கடத்தப்பட்டவர் அனுதாபமும் இணக்கமும் கொள்ளும் ஸ்டாக்ஹோம் சிண்ட்ரோம் பற்றி உச்சநீதிமன்றம் ஹடியா வழக்கில் பேச வேண்டிய அவசியம் என்ன? ஹடியா, தான் 11 மாதங்கள் சட்ட விரோதக் காவலில் வைக்கப்பட்டதாக நேரடி யாகச் சொன்ன புகார் பற்றி உச்சநீதிமன்றம் ஒன்றுமே சொல்லவில்லை. ஹடியாவின் திருமணம் பற்றி, தேசிய புலனாய்வு முகாமை விசாரணை பற்றி ஜனவரி 2018ல் விசாரணை என்று நீடிப்பதற்கு என்ன அடிப்படை உள்ளது? சேலத்துக்கு அனுப்பி படிக்க ஏற்பாடு செய்வது பாவமன்னிப்பு பரிகாரமா? கேரள உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ஹடியாவை சட்டவிரோத வீட்டுக் காவலில் வைத்திருந்த அவர் தந்தை அசோகன், ஹடியாவின் திரும ணம் பற்றி நீதிமன்றம் ஏதும் சொல்லாததும் ஹடியா, சிரியா சென்று அய்எஸ்அய்எஸ் தீவிர வாதியாகாமல் காப்பாற்றப்பட்டதும் தமக்கு மகிழ்ச்சி என்கிறார். ஹடியா விரும்பியபடி அவர் கணவருடன் செல்ல அனுமதிப்பது அவர் திருமணத்தை ரத்து செய்த உத்தரவை ரத்து செய்வது ஆகியவற்றை உச்சநீதிமன்றம் மிகவும் இயல்பாகச் செய்திருக்க வேண்டும்.
சேலத்தில் ஊடகவியலாளர்களிடம் பேசிய ஹடியா, தான் தனது அடிப்படை உரிமைகளையும் சுதந்திரத்தையும் உச்சநீதிமன்றத்தில் வலியுறுத்தியதாகவும், சேலம் கல்லூரிப் படிப்பும் விடுதி வாசமும் மற்றொரு சிறைவாசமாக இருக்குமோ என கவலைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
நீதித்துறை ஒரு விசயத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும். நீதிபதிகள் நீதி வழங்குவதில்லை. உயிர் வாழும் உரிமை இயல்பாய் அனைவருக்கும் இருக்கிறது. அதனை எவரும் எவர்க்கும் வழங்க முடியாது. நீதியையும் எவரும் எவர்க்கும் வழங்க முடியாது. நீதிபதிகள் தீர்ப்புக்காரர்களே.
அவர்கள் பைபிளின் இரண்டு வசனங்களை மனதில் நிறுத்த வேண்டும். ஜட்ஜ் நாட் தட் யி பி நாட் ஜட்ஜ்ட். ஒன்க்ஞ்ங் ய்ர்ற் ற்ட்ஹற் ஹ்ங் க்ஷங் ய்ர்ற் த்ன்க்ஞ்ங்க். தீர்ப்புக்காரர்களே, உங்களைப் பற்றியும் தீர்ப்பு எழுதப்படுகிறது. ஹ÷ இஸ் டு கார்ட் த கார்டியன்ஸ் தெம்செல்வ்ஸ்? ரட்ர் ண்ள் ற்ர் ஞ்ன்ஹழ்க் ற்ட்ங் ஞ்ன்ஹழ்க்ண்ஹய்ள் ற்ட்ங்ம்ள்ங்ப்ஸ்ங்ள்? காக்க வேண்டியவர்களை யார் கண்காணிப்பது?
உண்மையான மக்களாட்சி வரும்போது, வெளிப்படைத் தன்மையுடன் மக்கள் சார்பும் சமூக அக்கறையும் உள்ள நீதிபதிகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அவர்கள் சரி இல்லை என்றால் மக்களால் திரும்ப அழைக்கப்படுவார்கள். நீதிபதிகள் மக்களின் எசமானர்கள் அல்ல. மக்களே நீதிபதிகளுக்கு எசமானர்கள்.