COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Wednesday, December 16, 2015

2015 மக்கள் தீர்ப்பும் இடதுசாரிகளின் பாத்திரமும்: கருத்தரங்கம்

டிசம்பர் 3 அன்று பாட்னாவில் பீகார் தேர்தல் முடிவுகளின் விளைவுகளும் வருங்காலத்தில் இடதுசாரிகள் முன்னுள்ள சவால்களும் கடமைகளும் என்ற தலைப்பில் இகக (மாலெ) பீகார் மாநிலக் கமிட்டி கருத்தரங்கம் நடத்தியது. பிற இடதுசாரி கட்சிகளும் முற்போக்கு அறிவு ஜீவிகளும் கருத்தரங்கத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். மேடையில் இகக (மாலெ) தோழர்கள் திபங்கர் பட்டாச்சார்யா, ஸ்வதேஷ் பட்டாச்சார்யா, பி.பி.பாண்டே, பிரதீப் ஜா, சந்தீப் சௌரவ், இகக (மா)வின் அருண்குமார் மிஸ்ரா, இககவின் அகிலேஷ்குமார் சிங் ஆகியோர் இருந்தனர். தோழர் பிந்தேஸ்வரி சிங் மற்றும் நன்கு அறியப்பட்ட பத்திரிகையாளர் அருண்குமார் ஆகியோரின் நினைவாக ஹிரவால் இசைக் குழுவினரின் பாடல்களோடு கருத்தரங்கம் துவங்கியது.
புரட்சிகர இளைஞர் கழகம், அகில இந்திய மாணவர் கழகம், ஏஅய்சிசிடியு, முற்போக்கு பெண்கள் கழகம், அவிகிதொச, விவசாய மகாசபை ஆகிய அமைப்புகளின் தலைவர்கள் கருத்தரங்கில் உரையாற்றினர். பீகார் மக்கள் பாசிச பாஜகவை தூக்கியெறிந்ததன் மூலம் தங்களது உயர்ந்த உணர்வு நிலைகளை வெளிப்படுத்தினர், ஏழைகளும், ஓரங்கட்டப்பட்டவர்களும் இடதுசாரிகள் மீது நம்பிக்கை வைத்தனர், இடதுசாரிகளின் ஒன்றுபட்ட போராட்டத்தின் மூலமே வறியவர், தலித்துகள் மற்றும் சிறுபான்மையினருக்கு நீதியைப் பெற்றுத் தர முடியும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். தராரி மற்றும் பல்ராம்பூர் சட்டமன்ற உறுப்பினர்கள் சுதாமா பிரசாத் மற்றும் மகபூப் ஆலம் ஆகியோர், வாக்குகள் அதீத துருவங்களாக பிரிந்த போதும் கூட இகக மாலெ 3 தொகுதிகளில் வெற்றி பெற முடிந்தது என்றும், சட்டமன்றத்துக்குள்ளும், வெளியே வீதிகளிலும், நீர்ப்பாசனம், குத்தகைதாரர் உரிமை, நிலச் சீர்திருத்தம், செயல்வீரர்கள் மீதான பொய் வழக்குகள் மற்றும் முக்கியப் பிரச்சனைகளை எழுப்ப உறுதி பூண்டனர்.
இகக (மா)வின் அருண்குமார் மிஸ்ரா, இககவின் அகிலேஷ்குமார் சிங் ஆகியோர் பீகார் தேர்தல் முடிவுகள் இந்திய அரசியலில் இடதுசாரிகளை மூன்றாவது அணியாக கொண்டுவந்து நிறுத்தியிருக்கின்றன என்றும், பாசிச சக்திகளை தடுத்து நிறுத்த நிதிஷ÷ம், லல்லுவும் நம்பத்தக்க கூட்டாளிகளாக இருக்க மாட்டார்கள் என்றும், ஒன்றுபட்ட இடதுசாரிகளின் விடாப்பிடியான முயற்சிகளால் மட்டுமே இது சாத்தியம் என்றும் குறிப்பிட்டனர். பொது சுகாதார செயற்பாட்டாளரும் நன்கு அறியப்பட்ட மருத்துவருமான டாக்டர்.பி.என்.பி.பால், ஓய்வு பெற்ற  இராணுவ துணைத் தலைவர் சின்ஹா ஆகியோர் வறியவர்கள், தலித்துகள், விவசாயிகள் மற்றும் சிறுபான்மையினர் உரிமைகளுக்காகவும், தொழிலாளர், விவசாயம் கல்வி மற்றும் சுகாதாரத்தில் செய்யப்படும் சீர்திருத்தங்களுக்கு எதிராகவும் ஒன்றுபட்டுப் போராட அழைப்பு விடுத்தனர்.
இகக (மாலெ) பொதுச் செயலாளர் தோழர் திபங்கர் பட்டாச்சார்யா, நாட்டின் ஜனநாயக மற்றும் பன்மைத்துவ அமைப்பை அழிக்க கனவு கண்ட பாஜகவின் நிகழ்ச்சிநிரலை தகர்த்ததற்காக பீகார் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். இது ஏதோ ஒரு நாளில் வந்த முடிவல்ல, கடந்த 10 ஆண்டுகளாக பாஜகவின் வளர்ச்சிக்கு உத்வேகம் அளிப்பவராக நிதிஷ் இருந்து வந்தார், வறியவர்கள், தலித்துகள், உழைக்கும் மக்கள், மாணவர்கள், பெண்கள் மற்றும் பீகாரின் சிறுபான்மையினர் இதனால் மகிழ்ச்சியாக இல்லை, அவர்கள் எப்போதுமே தொடர்ந்து எதிர்த்து வந்ததன் மூலம் இப்போது இந்த சூழலை உருவாக்கியிருக்கிறார்கள், நாட்டில் அறிவிக்கப்படாத அவசர நிலைக்கு எதிராக அறிவுஜீவிகள் முதலில் தங்கள் விருதுகளை திருப்பிக் கொடுத்து எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள், இப்போது பீகார் மக்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள், மகா கூட்டணியின்மண்டல் 2', ‘வளர்ச்சிஆகியவை போலியான வாக்குறுதிகள், படுகொலை செய்த குற்றவாளிகளுக்கு எதிராக ஏராளமான சாட்சியங்கள் இருந்தும் அவர்கள் விடுவிக்கப்படுகிறார்கள், செயல் வீரர்கள் மீது பொய் வழக்குகள் போடப்பட்டு அவர்கள் சிறையில் தள்ளப்படுகிறார்கள், கல்வியும் நிலச் சீர்திருத்தமும் கிடப்பில் போடப்பட்டுள்ளது, தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருகின்றன, கல்வி, மருத்துவம் மற்றும் பிற துறைகளிலும் தனியார்மயம் பெருகி வருகிறது, இடதுசாரிகள் இந்த பிரச்சனைகளில் ஒன்றுபட்டுப் போராட வேண்டும் என்றார்.

மதவெறிக்கு எதிராக இடதுசாரி கட்சிகளின் கூட்டடியக்கம்

வளர்ந்து வரும் சகிப்பின்மை மற்றும் மதவெறி கூச்சலுக்கு எதிரான டிசம்பர் 1 - 6 பிரச்சார இயக்கத்தின் பகுதியாக 6 இடதுசாரி கட்சிகளான இகக(மாலெ), இகக, இகக(மா), எஸ்யுசிஅய்(சி), எம்எஸ்எஸ் மற்றும் ஆர்எஸ்பி ஆகிய கட்சிகள் டிசம்பர் 2, 2015 அன்று ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் சமத்துவ பேரணியும், பொதுக் கூட்டமும் நடத்தின.
பொதுச் கூட்டத்தில் இகக( மாலெ) மத்திய கமிட்டி உறுப்பினர் தோழர் தோழர் சுவேந்து சென் பேசும்போது நாட்டில் இந்து தேசியவாதம் என்ற சங்பரிவாரின் நிகழ்ச்சி நிரலை அமல்படுத்த மோடி அரசாங்கம் முயற்சித்து வருவதால்தான் சூழல் சீர் கெட்டுப் போயிருக்கிறது என்றார். பாஜகவின் தலைவர்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், ஆளுனர்கள் என வகுப்புவாத அறிக்கைகளை விட்டுக் கொண்டிருக்கும்போது, இன்னொரு பக்கம் காவிப்படைகள் கலவரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன என்றும் இதைத் தடுத்து நிறுத்த வேண்டியது இடதுசாரிகளின் கடமை என்றும் குறிப்பிட்டார்.
ஜாம்செட்பூர் மற்றும் ராஞ்சியில் நடைபெற்ற கலவரங்களில் ஈடுபட்டவர்களை ஒடுக்க ஜார்கண்ட் அரசு தவறியதன் விளைவுதான் இன்றைய பதட்டத்துக்கு காரணம் என இகக(மாசெயலாளர் கோடாகாந்த் பக்ஷி கூறினார். கங்கை - யமுனை கலாச்சாரத்தை அழிக்கவோ அல்லது பலவீனப்படுத்தவோ இடதுசாரிகள் அனுமதிக்க மாட்டார்கள் என்று இககவின் தலைவர் கே.டி.சிங் கூறினார். ‘நல்ல காலம்என்ற முழக்கத்தின் தோல்வியை திசை திருப்பவே மதவெறியை மோடி அரசு பரப்பி வருகிறது என எஸ்யுசிஅய்(சி)யின் சித்தேஸ்வர் குறிப்பிட்டார். இன்று நாடு சந்திக்கும் அபாயத்தை மக்கள் இயக்கத்தின் கூட்டு முயற்சியால் மட்டுமே தடுக்க முடியும் என பேராயர் ஸ்டேன் சுவாமி கூறினார்.
நாட்டின் சுதந்திரத்திற்கோ, நாட்டை கட்டியெழுப்பவோ எவ்வித பங்களிப்பையும் செய்யாத கருத்தியல் இன்றைக்கு தேசப்பற்றுக்கான பாதுகாவலனாக தன்னை நிறுவிக் கொண்டுள்ளது என்று ஜேஎஸ்எம்மின் தோழர் அனில் அன்சுமான் தனது உரையில் குறிப்பிட்டார். பல்வேறு மக்கள் இயக்கங்களைச் சேர்ந்தவர்களும் நூற்றுக்கணக்கான கட்டுமானத் தொழிலாளர்களும் இதில் பங்கெடுத்தனர்.

அஸ்ஸாமில் மதவெறி எதிர்ப்புக் கருத்தரங்கம்

அஸ்ஸாமின் நகயானில் இகக, இகக(மா), இகக(மாலெ) எஸ்யுசிஅய்(சி) ஆகிய 4 கட்சிகள் இணைந்து மதவெறி மற்றும் வளர்ந்து வரும் சகிப்பின்மைக்கு எதிராக கருத்தரங்கம் நடத்தின. கருத்தரங்கம் முடிந்து நகயான் நகரத்தில் பேரணி நடைபெற்றது. இகக(மாலெ) சார்பில் தோழர் ரூபுள் சர்மா உட்பட பிற இடதுசாரி கட்சித் தலைவர்கள் கருத்தரங்கில் உரையாற்றினர்.

ண்டிகரில் மதவெறிக்கும், குடியிருப்புகள் இடிக்கப்படுவதற்கும் எதிராக போராட்டம்

டிசம்பர் 6, 2015 அன்று மதவாத சகிப்பின்மை மற்றும் இந்தக் கடும் குளிரிலும் குடியிருப்புகள் இடிக்கப்படுவது ஆகியவற்றுக்கு எதிராக இகக, இகக(மா), இகக(மாலெ), இகக(மா) (பஞ்சாப்) ஆகிய கட்சிகள் இணைந்து பேரணிக்கு அறைகூவல் விடுத்திருந்தன. நடை பயணமாகவும், இரு சக்கர வாகனங்களில், ஆட்டோக்களிலும் என்று நூற்றுக்கணக்கான மக்கள் அணி வகுத்தனர். குடியிருப்புகள் இடிக்கப்படுவதை சண்டிகர் நிர்வாகம் உடனடியாக நிறுத்த வேண்டும் என இடதுசாரி கட்சிகள் கோரிக்கை விடுத்தனர்.
(சென்னையில் டிசம்பர் 6 அன்று நடத்தப்படவிருந்த இடதுசாரி கட்சிகளின் கருத்தரங்கம் மழை காரணமாக தள்ளிவைக்கப்பட்டது)

மக்களைக் காப்போம் ஜனநாயகம் காப்போம் இயக்கம்

வெள்ளத்தால் வாழ்க்கை இழந்து பரிதவிக்கும் மக்களைப் பாதுகாப்பதில் அக்கறையற்று இருக்கும் அரசாங்கத்தைக் கண்டித்தும், பிரிக்கால் தொழிலாளர்கள் 8 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி தொழிலாளர்கள் உரிமைகளைப் பறிக்கப்படுவதை கண்டித்தும் டிசம்பர் 8 அன்று மாநிலம் முழுவதும் நடந்த மக்களைக் காப்போம், ஜனநாயகம் காப்போம் இயக்கத்தின் பகுதியாக டிசம்பர் 8 அன்று அம்பத்தூரில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஏஅய்சிசிடியு மாவட்டச் செயலாளர் தோழர் முனுசாமி தலைமை வகித்தார். உழைப்போர் உரிமை இயக்கத்தின் தோழர் மோகன், அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தின் தோழர் தேவகி, ஏஅய்சிசிடியு மாநிலச் செயலாளர் தோழர் பழனிவேல், இகக மாலெ மாவட்டச் செயலாளர் தோழர் சேகர், ஜனநாயக வழக்கறிஞர் சங்கத் தோழர் சங்கர், புரட்சிகர இளைஞர் கழகத்தின் தோழர் பாரதி ஆகியோர் உரையாற்றினர்.
பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களையும், வழக்கில் சிறை சென்ற பிரிக்கால் தொழிலாளர்களையும் பாதுகாப்போம் என ஆர்ப்பாட்டக்ôரர்கள் முழங்கினர்.
மக்களை அணி திரளவிடாமல் அதிமுககாரர்கள் பல்வேறு முயற்சிகளை எடுத்தனர். தடுத்து நிறுத்தினர். அதையும் மீறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னையில் அடாத மழையிலும் தோழர்கள் குழுக்களாக சென்று வெள்ள நிவாரணப் பொருட்களும், நிதியும் திரட்டி வருகின்றனர். சேகரிக்கப்பட்ட பொருட்கள் உடனுக்குடன் தேவையான பகுதிகளில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.  500க்கும் மேற்பட்ட தோழர்கள் வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மருந்து, போர்வை, துணி, உணவுப் பொருட்கள் சேகரிக்கப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படுகின்றன. கிட்டத்தட்ட ரூ.1 லட்சத்துக்கும் மேல் நிதியும் திரட்டப்பட்டுள்ளது. மக்களைக் காப்போம் ஜனநாயகம் காப்போம் இயக்கத்தின் பகுதியாக வெள்ள நிவாரணப் பணிகள் தொடர்கின்றன.
வண்டலூரில் உள்ளூர் கமிட்டி பொறுப்பாளர் தோழர் கோபால் தலைமையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இந்திரா நகர் பகுதி மக்கள் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். உடனடியாக அவர்களுக்கு வேட்டி, சேலை வழங்கப்பட்டது. இதில் தோழர் விஜயா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
திருபெரும்புதூரில் ஏரிகள் உடைப்பு ஏற்பட்டு பாதிப்புக்குள்ளான பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வேலைக்குச் செல்ல முடியாமல் வருமானம் இழந்து நிற்கும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ஒரு மாத ஊதியம் நிவாரணமாக வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தி, புரட்சிகர இளைஞர் கழக மாநிலத் தலைவர் தோழர் ராஜகுரு, ஏஅய்சிசிடியு மாவட்டத் தலைவர் தோழர் ராஜேஷ் ஆகியோர் வட்டாட்சியரிடம் மனு அளித்தனர்
கோயம்புத்தூரில் சாந்தி கியர்ஸ் ஆலை வாயிலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏஅய்சிசிடியு தேசிய தலைவர் தோழர் குமாரசாமி, கட்சியின் மாவட்டச் செயலாளர் தோழர் பாலசுப்பிரமணியன், மாநகரக் குழு உறுப்பினர் தோழர் வேல்முருகன் ஆகியோர் உரையாற்றினர்.
பிரிக்கால் பிளாண்ட் 1ல் எழுச்சிமிகு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. பிரிக்கால் தொழிலாளர் சங்க நிர்வாகிகள் ராஜேந்திரன், அரவிந்த், நடராஜ், கிருஷ்ணமூர்த்தி, சாமிநாதன், ஜான் சுந்தரம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பிளாண்ட் 3ல் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏஅய்சிசிடியு மாநிலத் தலைவர் தோழர் என்.கே.நடராஜன், கட்சியின் மாவட்டச் செயலாளர் பாலசுப்பிரமணியன், மாவட்டக் குழு உறுப்பினர் தோழர் ஜெயப்பிரகாஷ்நாராயணன், மற்றும் ஜெயராஜ் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.
அன்றைய தினமே கோவை காரையம்பாளையம் தலித் குடியிருப்புப் பகுதியில் தோழர்கள் குமாரசாமி, பாலசுப்பிரமணியன், வேல்முருகன், சாந்தி கியர்ஸ் சங்க தோழர்கள் குழுவாக சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். பகுதியில் கூட்டமும் நடத்தப்பட்டது. கணபதியில் உள்ள காமராஜபுரத்தில் தோழர்கள் தாமோதரன், நடராஜ் ஆகியோர் பிரச்சாரத்திலும், வெள்ள நிவாரணப் பொருள் சேர்ப்பு இயக்கத்திலும் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் காரனோடை வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மக்களிடம் பெறப்பட்ட 2000 மனுக்கள் வழங்கப்பட்டன. அணி திரட்டலை தடுக்க அதிமுககாரர்கள் எடுத்த முயற்சியையும் தாண்டி 650 பேர் ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுத்தனர். ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். தோழர் ஜானகிராமன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் தோழர் .எஸ்.குமார், மாவட்டக் குழு உறுப்பினர்கள் அன்புராஜ், மணி, சீதா, திருநாவுக்கரசு, சாந்தி, வேணி, பாலாஜி, ஜெயராஜ் ஆகியோர் உரையாற்றினர்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் தோழர் வீரச்செல்வன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் தோழர் இளங்கோவன், சண்முகம், ராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
திருநெல்வேலியில் டிசம்பர் 8 அன்று டவுணில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்டச் செயலாளர் தோழர் சங்கரபாண்டியன் தலைமை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினர் தோழர் ரமேஷ், ஏஅய்சிசிடியு மாநிலச் செயலாளர் தோழர் அந்தோணிராஜ், கணேசன், கருப்பசாமி, திலகவதி மற்றும் ஜானகிராமன் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.
சேலத்தில் ஏஅய்சிசிடியு மாவட்டச் செயலாளர் தோழர் வேல்முருகன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாநிலக் குழு உறுப்பினர் தோழர் சந்திரமோகன், ஏஅய்சிசிடியு மாநில துணைப் பொதுச் செயலாளர் தோழர் விமலன், ஹெச்எம்எஸ் மாநிலத் துணைத் தலைவர் கணேசன், பாட்டாளி தொழிற் சங்கத்தின் சதாசிவம், கோஆப்டெக்ஸ் சங்கப் பொதுச் செயலாளர் தோழர் விஸ்வநாதன், கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் தோழர் மோகனசுந்தரம், தோழர் அய்யந்துரை ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில், மீனாட்சிபுரத்தில் ஏஅய்சிசிடியு மாவட்டத் தலைவர் தோழர் சூசைமரியான் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தோழர்கள் சுசீலா, மேரிஸ்டெல்லா, கணபதி, செல்வராஜ், சரோஜா, விஜிலா மற்றும் தோழர் அந்தோணிமுத்து உட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
விழுப்புரம் மாவட்டம் திருநாவலூரில் உள்ளூர் கமிட்டிச் செயலாளர் தோழர் பாபு தலைமையில் வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் பாலசுந்தரம், மாவட்டச் செயலாளர் தோழர் வெங்கடேசன், மற்றும் தோழர்கள் கலியமூர்த்தி, செண்பகவள்ளி, ஏழுமலை உட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தருமபுரியில் தோழர் சரவணன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஏஅய்சிசிடியு மாநிலச் செயலாளர் தோழர் கே.கோவிந்தராஜ், தோழர் முருகன் உரையாற்றினர்.

விலையில்லாப் பொருட்கள் வழங்கக் கோரி சாலை மறியல்

நெல்லையில், பேட்டை 48ஆவது வார்டு மக்களுக்கு விலையில்லாப் பொருட்கள் வழங்கக் கோரி நவம்பர் 20 அன்று சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்துக்கு வார்டு பகுதி கமிட்டிச் செயலாளர் தோழர் மாரிமுத்து தலைமை தாங்கினார். இகக மாலெ மாவட்டச் செயலாளர் தோழர் .சங்கரபாண்டியன் போராட்டத்தை துவக்கி வைத்து உரையாற்றினார். இகக மாலெ மாவட்டக் குழு உறுப்பினர்கள் தோழர்கள் கணேசன், கருப்பசாமி, ரவி டேனியல், சுந்தரராஜன், சபாபதி, ராமையா, முற்போக்கு பெண்கள் கழக மாவட்டத் தலைவர்கள் தோழர்கள் அன்புச்செல்வி மற்றும் திலகவதி மற்றும் ஏஅய்சிசிடியு முன்னணி தோழர்கள் கலந்துகொண்டனர்.

கோவை பிரிக்கால் கொலைச் சதி வழக்கில் தொழிலாளர் முன்னோடிகள் 8 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை
நீதி கேட்டு மாநிலம் முழுவதும் எதிர்ப்பியக்கம்

2005க்குப் பிறகு தமிழகத்தில் ஆட்டோமொபைல் தொழிற்சாலைகளில் தொழிற்சங்கம் அமைக்க எதிர்ப்பு, அங்கீகாரம் மறுப்பு என்ற பின்னணியில் பல்வேறு போராட்டங்கள் பல்வேறு சங்கத் தலைமைகளின் கீழ் நடைபெற்று வந்தன. உரிமைகள் மறுக்கப்பட்டுக் கிடந்த கோவை பிரிக்கால் தொழிலாளர்கள் போராடும் புரட்சிகர தொழிற்சங்கமான ஏஅய்சிசிடியுவை துவக்குகிறார்கள். நிர்வாகத்தின் பாட்டுக்கு ஆடும் தொழிற்சங்கங்களையே பார்த்துப் பழகிய தொழிலாளர்கள், தொழிலாளர்களின் குரலை ஒலிக்கின்ற ஏஅய்சிசிடியுவைக் கண்டார்கள். நிர்வாகத்தின் எவ்வித தாக்குதலைûயும் முறியடித்து முன்னேற உறுதி பூண்டார்கள். பல்வேறு பெயர்களில் நிரந்தரம், யூனிட் தொழிலாளி, ஒப்பந்த தொழிலாளி என பிரிந்து கிடந்த தொழிலாளர்கள் 4,000  பேர் ஒரே சங்கம் எனத் திரண்டது நிர்வாகத்துக்கு அதிர்ச்சி  அளித்தது. ஆயிரக்கணக்கான வெண்டார் யூனிட் தொழிலாளர்கள் வெளியேற்றம், சம்பள வெட்டு, தற்காலிக பணி நீக்கம், கிரிமினல் வழக்குகள் மாதக் கணக்கில் சிறை, விசாரணைகள் என சகலத்தையும் தொழிற்சங்க இயக்கத்தை முடக்கிப் போட பயன்படுத்தியது. எல்லாவற்றையும் எதிர்கொண்டு 1,000 நாட்களுக்கும் மேலாக உறுதியாக பயணம் தொடர்ந்தது. சங்கம் பல்வேறு போராட்ட உத்திகளைக் கையாண்டது. தொழிற்சங்க எல்லைகளைத் தாண்டி பகுதி மக்களோடு இணைந்து நின்றது. தமிழக தொழிலாளர் வர்க்கத்துக்கு ஆதர்சமாக இருந்தது.
இந்தப் பின்னணியில் 2009 செப்டம்பரில் பிரிக்கால் நிறுவனத்தின் மனித வளமேம்பாட்டுத் துறையின் தலைவர் திரு.ராய் ஜார்ஜின் மரணம் நிகழ்கிறது. இதை பயன்படுத்திக் கொண்ட நிர்வாகம் கொலைச் சதி வழக்கைப் பின்னியது. இகக (மாலெ) அரசியல் தலைமைக் குழு உறுப்பினரும் ஏஅய்சிசிடியு அகில இந்திய தலைவருமான தோழர் எஸ்.குமாரசாமி உட்பட சதித் திட்டம், கொலை என 27 தொழிலாளர்கள் மீது பழி சுமத்தியது. அதை ஒட்டி காவல்துறை ஒடுக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டது. காவல்துறை முதல் மத்திய அமைச்சர்கள் வரை தங்களது முதலாளித்துவ விசுவாசத்தைக் காட்டினர். ஆனால் எத்தகைய சூழலிலும் போராட்ட உணர்வுத் தீ அணையாமல் பாதுகாக்கப்பட்டது.
இப்போது டிசம்பர் 3, 2015 அன்று கோவை குண்டுவெடிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் கொலைச் சதி வழக்கின் தீர்ப்பு பகிரப்பட்டது. மொத்தம் 27 பேரில் 8 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியும், மற்றவர்களை விடுதலை செய்தும் தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த அதிர்ச்சி தரும், சாட்சியங்களுக்கு புறம்பான, முதலாளித்துவ வர்க்க நலனிலிருந்து வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக டிசம்பர் 3 அன்றே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. தீர்ப்பு பற்றி அறிந்த பிரிக்கால் பிளான்ட் 3 தொழிலாளர்கள் தீர்ப்பு பற்றி விவரம் தெரிந்து கொள்ள ஆலைக்குள் ஒரு மணி நேரம் கூடி நின்றனர்.
தீர்ப்பு அன்று காலை முதலே பிரிக்கால், சாந்தி கியர்ஸ் ஆலைகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்களும் இகக மாலெ. ஏஅய்சிசிடியு தலைவர்களும் நீதிமன்ற வாயிலில் கூடியிருந்தனர். நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
8 தொழிலாளர்களும் மாலை சிறைச் சாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோதுபிரிக்கால் போராட்ட வீரர்களே, உங்களை நாங்கள் விடமாட்டோம், உங்களை நாங்கள் பாதுகாப்போம்என காலையிலிருந்து காத்துக் கிடந்த தொழிலாளர்கள் முழுக்கமிட்டனர். தெற்குத் தாலுகா அலுவலகம் முன் நடைபெற இருந்த ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி மறுத்து காவல்துறை கடிதம் கொடுத்திருந்தது. ஆனாலும், தடையை மீறி ஆண்களும் பெண்களுமான 500க்கும் மேற்பட்டோர் அணி திரண்டனர். ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தோழர் குமாரசாமி உரையாற்றினார். “தீர்ப்புக்கு எதிராக உயர்நீதிமன்றத்துக்கு செல்கிற அதே வேளை, இந்த மக்கள் மன்றத்திலும் எடுத்துச் செல்வோம். அஞ்ச வேண்டாம் நமக்கு புரட்சிகர தொழிற்சங்கமும் செங்கொடியும் என்றென்றும் பாதுகாப்பாக இருக்கும்என்று எழுச்சிமிகு உரையாற்றினார். ஏஅய்சிசிடியு அகில இந்திய துணைத் தலைவர் தோழர் ஸ்வப்பன் முகர்ஜி, இகக (மாலெ) மத்திய கமிட்டி உறுப்பினர் தோழர் வீ.சங்கர், இகக மாலெ மாநிலச் செயலாளர் தோழர் பாலசுந்தரம் ஆகியோர் கோவையில் முகாமிட்டிருந்தனர். டிசம்பர் 4 அன்று கோவையில்  பத்திரிகையாளர்களையும் சந்தித்தனர்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் ஏஅய்சிசிடியு மாநிலச் செயலாளர் தோழர் கோவிந்தராஜ் தலைமையில் டிசம்பர் 3 அன்றே தோழர்கள் கே.ஆர்.குமாரசாமி, சுப்பிரமணி, மேகநாதன், மாரியப்பன், தண்டபாணி உட்பட மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 17 பேரை கைது செய்த காவல்துறை பின்னர் விடுதலை செய்தது.
சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் வெள்ளச் சேதம், பாதிப்பு, கொட்டும் மழைக்கிடையில் ஏஅய்சிசிடியு மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் முனுசாமி தலைமையில் எழுச்சிமிகு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை முழுவதும் கண்டன சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் தோழர்கள் சேகர், மோகன், தேவகி, வழக்குரைஞர்கள் சங்கர், புகழ்வேந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தீர்ப்பு வெளியான அன்று மாலையே திருநெல்வேலியில் ஏஅய்சிசிடியு மாநிலப் பொதுச் செயலாளர் தோழர் சங்கரபாண்டியன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தோழர்கள் கணேசன், சுந்தர்ராஜன், கருப்பசாமி, தமிழ்ச்செல்வி, திலகவதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
டிசம்பர் 4 அன்று செங்குன்றத்தில் ஏஅய்சிசிடியு மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் அன்புராஜ் தலைமையில் 75 பேர் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இகக மாலெ திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் தோழர் ஜானகிராமன், அகில இந்திய மாணவர் கழக மாநிலச் செயலாளர் தோழர் சீதா மற்றும் கார்க்கி வேலன் உரையாற்றினர்.
டிசம்பர் 3, பிரிக்கால் தீர்ப்பு அன்று புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையில் இகக மாலெ மாவட்டக் குழு உறுப்பினர் தோழர் தங்கராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் தோழர் பழ.ஆசைத்தம்பி, மாநிலக் குழு உறுப்பினர் தோழர் வளத்தான் உட்பட பலர் கலந்து கொண்டனர்
கரூரில் தோழர் இராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தோழர்கள் பால்ராஜ், சந்திரசேகர், ரகுமான் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை, திருச்சி, சேலம், கரூர் ஆகிய மய்யங்களில் உடனடியாக சுவரொட்டி வெளியிடப்பட்டது.
மாநிலத்தின் பல பகுதிகளிலும் இரட்டை ஆயுள் தண்டனையில் சிறைக்கு அனுப்பப்பட்ட எட்டு பிரிக்கால் தொழிலாளர்களுக்கு நியாயம் கேட்டு சுவரொட்டிகள், துண்டுப் பிரசுரங்கள் மூலம் மக்கள் மன்றத்தில் பிரச்சாரம் எடுத்துச் செல்லப்படுகிறது.
பிரிக்கால் தொழிலாளர்களுக்கு ஒருமைப்பாடு தெரிவித்து டெல்லியில் ஆர்ப்பாட்டம்
சிறை சென்ற பிரிக்கால் தொழிலாளர்களுக்கு ஒருமைப்பாடு தெரிவித்து
தலைநகர் டெல்லியில் டிசம்பர் 8 அன்று ஏஅய்சிசிடியு ஆர்ப்பாட்டம் நடத்தியது.
பிரிக்கால், மாருதி, கிராசியானோ, ரீஜெண்ட் செராமிக் சம்பவங்கள்
தொழிற்சாலை ஜனநாயகம் மறுக்கப்பட்டதன் விளைவுகளே எனவும்,
பிரிக்கால் தொழிலாளர்களுக்கு ஒருமைப்பாடு தெரிவித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஏஅய்சிசிடியு தேசியச் செயலாளர் தோழர் சந்தோஷ்ராய் உட்பட பலரும் கலந்து கொண்டனர்

Search