இணைய சம வாய்ப்பு (நெட்
நியுட்ராலிடி) 2.0
வேண்டாம்
ப்ரீ பேசிக்
மே 16
- 31, 2015 தேதிய மாலெ தீப்பொறி இதழில்
‘இணைய சம வாய்ப்பு (நெட்
நியுட்ராலிடி)’ என்ற கட்டுரையில் இணைய
சம வாய்ப்பு பற்றிய அடிப்படையான பார்வை
முன்வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரச்சனையில் சமீபத்தில்
எழுந்துள்ள விவாதம் பற்றி இந்தக்
கட்டுரை விவாதிக்கிறது.
சில மாதங்களுக்கு முன்பு இன்டர்நெட் டாட்
ஆர்க் என்ற சேவையை பேஸ்புக்கும்
ரிலையன்சும் சேர்ந்து அறிமுகப்படுத்தியபோது இணைய சம வாய்ப்பு
பற்றி விவாதம் எழுந்தது. இணைய
சம வாய்ப்புக்கான குரல்கள் வலுவாக இருந்ததால், காசிருந்தால்
இணையதளத்துடன் தொடர்பு என மாற்றிவிடும்
அந்த முயற்சி முறியடிக்கப்பட்டது. இப்போது
அதே முயற்சி ப்ரீ பேசிக்
என்று வேறு பெயரில் வருகிறது.
இந்த முறை சந்தையின் தீவிரம்
அதிகரித்திருக்கிறது. ப்ரீ பேசிக்கின் அருமை
பெருமைகளை விளக்கி பேஸ்புக் நிறுவனர்
மார்க் சகர்பர்க் இந்திய பத்திரிகையில் கட்டுரை
எழுதுகிறார். முழுபக்க விளம்பரங்கள் வெளியிடுகிறார். நேரடி வேண்டுகோள் விடுக்கிறார்.
இலவசமாக வருவதை சிலர் தடுக்கிறார்கள்
என்கிறார். மிகச் சிறிய வயதில்
தனது ‘புத்திசாலித்தனத்தால்‘’ ‘உழைப்பால்’ மிகப்பெரிய பணக்காரராகி, நமது தொலைக்காட்சி ஊடகங்கள்
மொழியில் ‘சாதித்துவிட்ட’ மார்க் சகர்பர்க் என்று
அவரைச் சுற்றி கட்டப்பட்டுள்ள குட்டி
முதலாளித்துவ பிம்பம் கைகொடுக்கும் என
நம்புகிறார்.
பேஸ்புக்
நிறுவனமும் அனில் அம்பானியின் ரிலையன்ஸ்
கம்யூனிகேசன்ஸ் நிறுவனமும் சேர்ந்து ப்ரீ பேசிக் சேவை
தருவதாகவும் அதில் சில இணையதளங்களை
இலவசமாக பயன்படுத்த முடியும் என்றும் இதனால் இணையதளத்
தொடர்புக்கு செலவு செய்ய வசதியற்றவர்களை
இணையதள தொடர்புக்குக் கொண்டு வந்து நாட்டின்
தலையெழுத்தையே மாற்றி விடலாம் என்றும்
மார்க் சகர்பர்க் சொல்கிறார்.
சில மாதங்களுக்கு முன் வர்த்தகத்தன்மை கொண்டதாக
இருந்த ஒரு சேவை, திடீரென
ஏழை எளிய மக்களுக்கு இணைய
வசதி தந்து அவர்களை அதிகாரமுடையவர்களாக்கி
அவர்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது என்ற
சமூக அக்கறை கொண்ட சேவையாக
மாறியது எப்படி? அனில் அம்பானிக்குதான்
அப்படி ஓர் அக்கறை இருக்க
முடியுமா? சொற்பமான எண்ணிக்கையில் நிரந்தரத் தொழிலாளர்களும் பெருமளவில் ஒப்பந்தத் தொழிலாளர்களையும் பயிற்சியாளர்களையும் கொண்ட தொழில் சாம்ராஜ்யம்
நடத்தி அவர்கள் வயிற்றில் அடித்து
லாபம் சேர்க்கும் அம்பானிக்கு நாட்டின் ஏழை மக்கள் மீது
அக்கறையா? இந்தச் சேவையில், இலவசம்
என்ற பெயருக்குப் பின்னால் சந்தை ஏகபோக ஆபத்து
மட்டுமே உள்ளது என்பதை கோக்,
பெப்சி பற்றிய அனுபவங்கள் நமக்கு
உணர்த்தும்.
பேஸ்புக்
தேர்ந்தெடுக்கும் சில இணைய தளங்களை
விலையின்றி தரும் அதே ரிலையன்ஸ்
மற்ற தளங்களை விலையின்றி தராது.
அதாவது வேறு வேறு தளங்களைப்
பார்க்க வேறு வேறு கட்டணம்
நிர்ணயிக்கப்படுகிறது. ப்ரீ பேசிக் சேவையை
பயன்படுத்துபவர்கள் இணைய தளம் என்றாலே
அது பேஸ்புக்கும் ப்ரீ பேசிக் தரும்
இணையதளங்களும்தான் என்று சுருங்கி விட
வாய்ப்புக்கள் அதிகம். இந்தச் சேவைக்குள்
அடுத்து வரும் இணையதளங்கள் அந்த
பயனர்களுக்கு கிடைக்கலாம். ஆக அந்தப் பயனர்கள்
எந்த இணையதளத்தைப் பார்ப்பார்கள், அல்லது பார்க்க மாட்டார்கள்
என்பதை பேஸ்புக் நிறுவனம் தீர்மானிக்கும். இந்தச் சந்தை பெரிதானால்
மிகப்பெரிய விளம்பரச் சந்தையை பேஸ்புக் நிறுவனம்
கட்டுப்படுத்தும். மார்க் இன்னும் பெரிய
பணக்காரர் ஆவார். மோடி சொல்லி
வரும் டிஜிட்டல் இந்தியா, பேஸ்புக் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும். இணைய தளச் சந்தையை
மட்டுமின்றி, இந்தப் பயனர்களின் தனிப்பட்ட
விவரங்களை கட்டுப்படுத்தும்
நிலையில் பேஸ் புக் இருக்கும்.
அது ஒரு டிஜிட்டல் சாம்ராஜ்யமாக
இருக்கும்.
இந்த சேவையை பயன்படுத்துபவர்கள் தங்கள்
இணையதளத்தையும் பார்க்க வேண்டும் என்று
விரும்புபவர்கள் பேஸ்புக்கின் தயவு கிடைக்குமா, என்ன
விலையில் கிடைக்கும் என்று காத்திருக்க வேண்டும்.
இணைய வசதி உள்ளவர்கள் இப்போது
தாங்கள் விரும்பும் இணையதளங்களை பார்க்கும் நடைமுறையின் இடத்தில், பேஸ்புக் தீர்மானித்து ரிலையன்ஸ் அனுமதிக்கும் இணையதளங்களை மட்டுமே பார்க்க முடியும்
என்ற நடைமுறை வரும். மொத்தத்தில்
இன்று இருக்கிற சுதந்திரமான இணையதள உலாவல் தடுக்கப்பட்டு
பேஸ்புக் நிறுவனம் வாயில் காப்பாளராக இருந்து
யாரை எந்த இணையதளத்தில் எந்த
அளவுக்கு எந்த நேரத்துக்கு எவ்வளவு
நேரத்துக்கு அனுமதிக்கும் என்று முடிவு செய்யும்.
உண்மையில்
இதில் ப்ரீ எதுவும் இல்லை.
ரிலையன்ஸ் நிறுவனம் தனது சிம் கார்டை,
தனது இணையதள சேவையை ப்ரீயாகத்
தரப் போவதில்லை. அந்த சேவையை ஒரு
கட்டணத்துக்கு வாங்கி அதில் சில
இணையதளங்களை டேட்டாவுக்கான கட்டணம் இன்றி பார்த்துக்
கொள்ளலாம். இப்போது உள்ள நடைமுறையில்
டேட்டா கட்டணம் செலுத்தி எல்லா
இணையதளங்களையும் விருப்பப்படி பார்த்துக் கொள்கிறோம். அந்த சுதந்திரம் மறுக்கப்படுவதும்
சில இணையதளங்களுக்கு கட்டணம், சிலவற்றுக்கு கட்டணம் இல்லை என்ற
வேறுபாடும் காலப்போக்கில் பயனரை வெளியேற விடாமல்
சிக்க வைத்துவிடும்.
ப்ரீ பேசிக் சேவை இணைய
சம வாய்ப்புக்கு எதிரானது என்ற குரல்கள் வலுக்கவே,
ட்ராய் தலையிட்டு சேவையை உடனடியாக நிறுத்தும்படி
ரிலையன்ஸ் நிறுவனத்துக்குச் சொன்னது. சேவையும் நிறுத்தப்பட்டது. சேவையை வழங்கலாமா, கூடாதா
என்று முடிவு செய்ய இதனால்
பாதிக்கப்படக் கூடிய அல்லது ஆதாயம்
பெறக் கூடியவர்கள் மத்தியில் கருத்துக்கள் கேட்டு ஒரு தாள்
வெளியிட்டது. அதில் நான்கு கேள்விகளை
முன்வைத்து அவற்றுக்கு விடையளிக்கச் சொன்னது. அந்தத் தாளில், வெவ்வேறு
இணையதளங்களுக்கு வெவ்வேறு கட்டணம் நிர்ணயிக்க அனுமதிக்கலாமா,
என்பது முக்கியமான கேள்வியாக இருந்தது. இது தவிர, அப்படி
அனுமதித்தால் பாகுபாடற்ற சேவை, வெளிப்படைத்தன்மை, கட்டுப்படியாகும்
செலவில் இணைய சேவை பெறுவது,
போட்டி, சந்தை நுழைவு, புதிய
கண்டுபிடிப்பு போன்ற கோட்பாடுகளை உறுதி
செய்ய என்ன நடவடிக்கைகள் மேற்கொள்வது
அனைவருக்கும் இலவச இணைய வசதி
தர வெவ்வேறு கட்டணம் என்பதைத் தவிர
வேறு என்ன நடைமுறைகளை பின்பற்றலாம்,
இந்தப் பிரச்சனையில் இன்னும் கவனத்தில் கொள்ள
வேண்டிய வேறு அம்சங்கள் என்ன
என்ற கேள்விகளும் அந்தத் தாளில் முன்வைக்கப்பட்டன.
ஜனவரி
7 வரை 24 லட்சம் பேர் கருத்து
தெரிவித்துள்ளனர். அவர்களில் 18.94 லட்சம் பேர் நான்
ப்ரீ பேசிக்கை விரும்புகிறேன் என்றும் ப்ரீ பேசிக்கை
ஆதரியுங்கள் என்றும் பேஸ்புக் வடிவமைத்த
வாக்கியங்களையே அப்படியே அனுப்பியுள்ளனர். இவர்களில் 5.44 லட்சம் பேர் பேஸ்புக்
தளத்தில் இருந்தே தங்கள் கருத்துக்களை
தெரிவித்துள்ளனர்.
கருத்துக்கள்
தெரிவிக்கப்பட்டுள்ள விதம், தற்போதைய நிலைமைகளில்
பேஸ்புக்கின் செல்வாக்கை காட்டுகிறது. தற்போதைய நிலைமைகளில் பேஸ்புக் லட்சக்கணக்கான தனது பயனர்களை தனது
விருப்பப்படி பதில் சொல்ல வைக்க
முடியும் என்றால், பேஸ்புக் தேர்ந்தெடுத்துத் தரும் இணையதளங்களைத்தான் சிலர்
பார்க்க முடியும் என்ற நிலை என்ன
விளைவுகளை உருவாக்கும் என்று கற்பனை செய்து
கொள்ளலாம். முதலாளித்துவம் மூளைக்கு விலங்கு போடும் உத்திகளில்
மிகவும் நவீன உத்தியாக, இது,
மக்கள் தாமே தேர்ந்தெடுத்து, கட்டணம்
கட்டி அந்த விலங்கை மாட்டிக்
கொள்வதாக அமையும்.
பேஸ்புக்
வடிவமைத்த பதிலை தனது இணையதளத்தில்
இருந்து தனது பயனர்களை சொல்ல
வைத்த பேஸ்புக்கின் உத்தி பயன் தரவில்லை.
ஒரு குறிப்பிட்ட சேவையை நீங்கள் விரும்புகிறீர்களா,
ஆதரிக்கிறீர்களா என்று நாங்கள் கேட்கவில்லை.
இது ஒரு குறிப்பிட்ட சேவை
பற்றிய கருத்துக் கணிப்பு அல்ல என்றும்
இந்தக் கருத்துக்களை கணக்கில் கொள்ள முடியாது என்றும்
ட்ராய் தெரிவித்துள்ளது. ட்ராய் கேள்விகளுக்கு விடையளித்து,
ப்ரீ பேசிக்குக்கு எதிராக 5 லட்சம் பேர் வரை
கருத்து தெரிவித்துள்ளனர். மகாபெரிய மக்கள் சேவை செய்வதாக
பேஸ்புக் நிறுவனர் மார்க் சகர்பர்க் சொல்வது
போல் அல்லாது பிரச்சனையை சந்தையின்
விதிகளுக்கு விட்டு விட வேண்டும்
என்று ரிலையன்ஸ் நிறுவனம் நேரடியாகவே சொல்கிறது. பேஸ்புக் நிறுவனம், இந்த சேவையில் வெவ்வேறு
தளங்களுக்கு வெவ்வேறு கட்டணங்கள்
நிர்ணயிக்கப்படும் நடைமுறை என இருந்தாலும்
இந்த சேவை அனுமதிக்கப்பட வேண்டும்
என்கிறது. வேறு வேறு கட்டணம்
என்று ட்ராய் எதைக் குறிப்
பிடுகிறது என்பது தெளிவாக இல்லை
என்றும் பேஸ்புக் நிறுவனம் சொல்கிறது.
இந்தியாவில்
பேஸ்புக் சொல்லும் கிராமப்புற வறியவர்கள் முதலில் ஸ்மார்ட் போன்
வாங்க முடியாத நிலையில் இருக்கிறார்கள்.
இங்கு உண்ண உணவுக்கு, உடுக்க
உடைக்கு, இருக்க இடத்துக்கு அவர்கள்
நாளும் அல்லாடுகிறார்கள். எனவே அவர்களுக்காக பேஸ்புக்
நிறுவனர் கண்ணீர் சிந்துவதாகச் சொல்வதை
நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. 30.06.2015 நிலவரப்படி நாட்டில் 30 கோடி பேர் கம்பியில்லா
இணையதள சேவையை பயன்படுத்துகிறார்கள். எவ்வளவு பெரிய
சந்தை! வளர்ந்து வருகிற மிகப்பெரிய இந்திய
இணையதளச் சந்தையை கட்டுப்பாட்டுக்குள் வைப்பது
மட்டுமே மார்க்கின் நோக்கம். அதற்கு மிகத் தோதான
கூட்டாளி ரிலையன்ஸ். நிலத்தை வளைத்துப் போடுவது
போல் இணையதளத்தை வளைத்துப் போட்டு முடிவே இல்லாமல்
காசு பார்த்துக் கொண்டே இருக்கும் வழி
அது.
மார்க்
சகர்பர்க்கிடம் கேட்க சில கேள்விகள்
உள்ளன. கல்வி, மருத்துவம் போன்ற
அத்தி யாவசிய அடிப்படை சேவைகளை
இணையத்தில் எப்படி தந்துவிட முடியும்?
பேஸ்புக் இணைய தளம் நாடி
பார்த்து நோயாளியை பரிசோதிக்குமா? அறுவை சிகிச்சை செய்யுமா?
அல்லது இணையதளத்தில் ஒருவர் சொல்லச் சொல்ல
பயனர் தனக்குத் தானே அறுவை சிகிச்சை
செய்துகொள்வாரா?
உண்மையிலேயே
இந்திய வறியவர்கள் பற்றி நீங்கள் அக்கறை
கொண்டவர் என்றால் நீங்கள் ஏன்
ரிலையன்சுடனான உங்கள் கூட்டு முயற்சியில்
எல்லா இணையதளங்களையும் டேட்டா கட்டணமின்றி தரக்
கூடாது? ஆடு நனைவதற்காக ஓநாய்
அழுவதில்லை.
ரிலையன்ஸ்
நிறுவனம் இணைய சேவைக்கு இணைப்பு
தரப் போகிறது. வாங்குகிற இந்தியர் கட்டணம் செலுத்திவிட்டு தமக்கு
விருப்பமான தளத்தை அதில் பார்க்கப்
போகிறார். இதில் உங்களுக்கு என்ன
வேலை? இந்த இரண்டு பேருக்கு
இடையில், சம்பந்தமே இல்லாமல் நீங்கள் ஏன் நுழைகிறீர்கள்?
பேஸ்புக்
சேவை உண்மையில் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவே
அமைகிறது. மழை வெள்ளம் சென்னையை
புரட்டிப் போட்ட போது கூட
நாங்கள் பேஸ்புக்கை பெருமளவு பயன்படுத்தினோம். இந்திய வறிய மக்கள்
மீது அக்கறை கொண்ட நீங்கள்,
இந்திய, மாநில அரசுகளின் மக்கள்
நலன் தொடர்பான செய்திகள், விளம்பரங்கள், சேவைகள் ஆகியவற்றுக்கு நீங்கள்
ஏன் பேஸ்புக்கில் எந்த கட்டணமும் இன்றி
இடம் தரக் கூடாது? அவை
இந்திய மக்களுக்கு என்றுதான் எங்கள் ஆட்சியாளர்கள் சொல்கிறார்கள்.
நாங்களும் பல்வேறு சேவைகளை பயன்படுத்துகிறோம்.
இப்போது நாங்கள் அந்தச் சேவைகளை
பயன்படுத்த டேட்டா கட்டணம் செலுத்த
வேண்டியுள்ளது. நாங்கள் அவற்றை ப்ரீயாக
செய்ய ரிலையன்சுடன் ஒப்பந்தம் போடுவீர்களா?
ப்ரீ பேசிக்கை பயன்படுத்துபவர்கள் நாளடைவில் முழுமையான இணையதளத்துக்குச் சென்று விடுவார்கள் என்று
சொல்கிறீர்கள். எப்படி? அதுவும் இலவசமாக
நடக்கும் என்றா சொல்கிறீர்கள்? அனில்
அம்பானி அவ்வளவு தாராள மனம்
கொண்டவரா? அது எங்கள் தலையில்
எந்த அளவுக்கு சுமையை ஏற்றிவிடும் என்று
எங்களுக்குத் தெரியும்.
ஒருவர்
இணையதளத்தை பார்க்கும் விதம் நாளை மாறலாம்.
அப்போதும் அவர் நீங்கள் தரும்
அந்தத் தளங்களை மட்டும் பார்ப்பாரா?
அல்லது வேறு தளம் பார்க்க
வேண்டும் என்ற தேவை ஏற்படும்போது
உங்களுக்கு இன்னும் கூடுதல் கட்டணம்
அழ வேண்டுமா?
குழந்தையைப்
பார்த்துக் கொள்ள பேறு கால
விடுப்பில் நீங்கள் இருப்பதாக பரபரப்புச்
செய்திகள் வெளியாயின. உங்கள் நிறுவனத்தில் எல்லா
மட்டங்களிலும் இருக்கும் ஆண் ஊழியர்களும் அந்த
விடுப்பை ஊதியத்துடன் பெற வாய்ப்பு உள்ளதா?
எங்களது
உலகம் சுற்றும் பிரதமர் நரேந்திர மோடி
அய்க்கிய அமெரிக்கா வந்து உங்களை சந்தித்தபோது,
ப்ரீ பேசிக் பற்றி உங்களுக்கு
என்ன வாக்குறுதியளித்தார்?
ஜனநாயகம்
காக்க, ஆட்சியாளர்களுக்கு எதிராக கருத்துக்கள் திரட்ட,
பரப்ப, நாங்கள் பேஸ்புக் பயன்படுத்துகிறோம்.
இனியும் பயன்படுத்துவோம். இந்தியாவின் வறிய மக்கள் மீது
அக்கறை கொண்ட நீங்கள், உங்கள்
இணைய தளத்தை பார்க்க டேட்டா
கட்டணம் வாங்க வேண்டாம் என்று,
இணைய சேவை வழங்கும் எல்லா
நிறுவனங்களுடனும் ஏன் ஓர் ஒப்பந்தம்
செய்து கொள்ளக் கூடாது? (‘இட்
ஈஸ் தி மார்க்கெட், ஸ்டுப்பிட்!’
என்று நீங்கள் சொல்வது எங்களுக்குக்
கேட்கிறது).
குப்பைகள்
போல் அகற்றப்படும் குடிசைவாழ்
மக்கள்
வித்யா
பெருமழைக்குப்
பிறகு வெள்ளம் வடிந்து இயல்பு
வாழ்க்கை எப்போது திரும்பும் என்று
காத்துக் கொண்டிருந்த சென்னைக் குடிசைப் பகுதி மக்களுக்கு காலுக்கடியிலிருந்து
பூமியைப் பிடுங்கியது போன்ற மற்றொரு அதிர்ச்சி.
இவர்களில் பெரும்பாலானோர் மிகுந்த துன்ப துயரங்களுக்கிடையே
தங்கள் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருப்பவர்கள்.
அதிகாரிகள்,
ஆளும் கட்சிகள், ஆண்ட கட்சிகள் யாருக்கும்
இவர்கள் பிரச்சனைகள் கண்ணுக்குத் தெரிவதில்லை. இவர்கள் வசிக்கும் பகுதிகள்
குப்பை மேடுகளாகவே கருதப்படுகின்றன. இவர்களுக்கு மின்சாரம் தடைபட்டால் சரி செய்யவோ, இவர்கள்
வாழும் பகுதிகளில் உள்ள குப்பைகளை அகற்றவோ,
இவர்களுக்கு கழிப்பிடம் வழங்கவோ, கொசுமருந்து அடிக்கவோ யாரும் முன்வரவில்லை. இவர்கள்
இருப்பிடம் அரசாள்வோர் கண்களுக்கு குளிர்ச்சியானதாக இல்லை. வாழத்தகாத மனிதர்கள்
எப்படி இங்கு வாழலாம் என்ற
கேள்வியைத்தான் மாறிமாறி எழுப்பிக் கொண்டிருந்தனர். திமுகவும் அதிமுகவும் மாறிமாறி ஆட்சிக்கு வந்தபோதும் இந்த மக்கள் மீது
ஒரே மாதிரியான பார்வைதான் கொண்டிருந்தனர்.
2011 மக்கள்
தொகை கணக்கெடுப்பின்படி சென்னையில் ஒவ்வொரு நான்காவது நபரும்
குடிசைப் பகுதியில் வசிப்பவராகத்தான் இருந்தனர். (30% குடிசைவாழ் மக்கள்). இவர்களில் 90% தலித் மற்றும் பழங்குடியினர்
என்று ஓர் அறிக்கை தெரிவிக்கிறது.
நகர்ப்புற
ஏழை மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக ஜவகர்லால்
நேரு நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கோடிக்கணக்கான நிதி
ஒதுக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ்
நகர்ப்புற குடிசைவாழ் மக்களுக்கு அவர்களுடைய பங்களிப்புடன் அவர்கள் வாழும் இடங்களிலேயே
எப்படி அவர்கள் வாழ்க்கையையும் குடியிருப்புகளையும்
முன்னேற்றுவது என்று திட்டமிட வேண்டும்.
இந்த மக்களின் கட்டாய வெளியேற்றத்திற்கெதிராக ஏற்கனவே உச்சநீதிமன்றம்
தீர்ப்பளித்திருக்கிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டம்
21 விதியின் வாழ்வதற்கான உரிமை என்பது இருப்பிடம்
மற்றும் வாழ்வாதாரம் ஆகியவற்றை உள்ளடக்கியது என்று அந்த தீர்ப்பில்
கூறப்பட்டுள்ளது. இவர்களுக்கு சென்னை நகருக்குள்ளேயே மாற்று
ஏற்பாடுகள் செய்து கொடுப்பது என்பதற்கு
மாறாக அதற்காகப் பெறப்பட்ட நிதியைப் பயன்படுத்தி இவர்களை நாடு கடத்துவது
போல் இரண்டு மூன்று தலைமுறையாக
வாழ்ந்த மக்களை அடித்துத் துரத்தும்
பணியில் திமுகவும் அதிமுகவும் மாறி மாறி செயல்பட்டு
வந்துள்ளன. மக்களின் எதிர்ப்புகளை சற்றும் பொருட்படுத்தாது நகரத்திற்கு
வெளியே 20 முதல் 30 கிமீ தூரத்தில் துரைப்பாக்கம்
(கண்ணகி நகர்), செம்மஞ்சேரி, பெரும்பாக்கம்
போன்ற காஞ்சிபுரம் மாவட்ட தலங்களில் வீடு
கட்டி இவர்களைக் குடி அமர்த்துகின்றன. திமுக
ஆட்சியில் துவங்கியது அதிமுக ஆட்சியிலும் தொடர்கிறது.
சென்னையிலுள்ள
கீழ்ப்பாக்கம், சேத்துபட்டு, புதுப்பேட்டை, ஜோதிமாநகர், அயனாவரம், பாரிமுனை, சூளைமேடு பாலத்தின் இரு மருங்கிலும் இருந்த
எம்.கே. ஸ்டாலின் நகர்
குடிசைவாழ் மக்கள் கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.
மதுரவாயலிலிருந்து துறைமுகத்திற்கு மேம்பால எக்ஸ்பிரஸ் சாலைக்காகவும்,
கூவத்தை அழகுபடுத்துகிறோம் என்ற பெயரிலும், பறக்கும்
ரயில் திட்டத்திற்காகவும் பல்லாயிரக்கணக்கானோர் இதுவரை கட்டாயமாக வெளியேற்றப்பட்டு
துரைப்பாக்கம், செம்மஞ்சேரி போன்ற பகுதிகளில் இவர்களுக்காக
கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் குடி அமர்த்தப்பட்டனர். குடிசையிலிருந்து
அடுக்குமாடி என்பது கேட்பதற்கு நன்றாகத்தான்
இருக்கிறது. அங்கு குடியமர்த்தப்பட்டு 7, 8 ஆண்டுகளாக வாழ்ந்து
கொண்டிருக்கும் மக்கள் படும் அல்லல்களைக்
கேட்டால்தான் அவர்களின் குடியிருப்புகளின் உண்மை முகம் புரியும்.
குடிசைப்
பகுதிகளை எப்படியாவது அகற்றி அங்குள்ள மக்களை
வெளியேற்ற வேண்டும் என்று காத்துக் கொண்டிருந்த
அரசாங்கத்திற்கு, வரலாறு காணாத வெள்ளமும்
மழையும் நல்ல வாய்ப்பாக அமைந்தது.
வெள்ள பாதிப்பிற்கு நீர்நிலை, ஆற்றங்கரைகள் ஆக்கிரமிப்புகள்தான் காரணம் என்ற கருத்து
மறுபடியும் மறுபடியும் கூறப்பட்டது.
பல தனியார் கல்வி நிறுவனங்களும்,
மருத்துவமனைகளும், ரியல் எஸ்டேட் திமிங்கலங்களும்
ஆக்கிரமித்த நீர்நிலைகளும், ஆற்றங்கரைகளும், சதுப்பு நிலங்களும், நஞ்சை
நிலங்களும் அரசாங்கத்தின் கண்களுக்கு தெரியவில்லை. 1920 பதிவேடுகளின்படி மாம்பலம் முதல் நுங்கம்பாக்கம் வரை
6 கிலோ மீட்டர் நீளத்திற்கும் 4 கி.மீ. அகலத்திற்கும் நீண்ட
ஏரி ஒன்று இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்தப் பகுதி முழுவதும் தற்போது
பெருவணிக நிறுவனங்கள் மற்றும் பணக்காரர்கள் கைகளில்
உள்ளன. இவற்றை அகற்ற முற்படாத
அரசு குடிசைப் பகுதிகளையே குறிவைக்கிறது.
தற்போது
சைதாப்பேட்டை மல்லிப்பூ நகர் போன்ற பகுதிகளில்
அடையாறு ஆற்றங்கரையில் வசிக்கும் குடிசைப்பகுதி மக்களை அகற்றுவதில் அரசு
அதிக கவனம் செலுத்துகிறது. இது
தொடர்பாக டிசம்பர் 31, 2015ல்
அமைப்பாக்கப்படாத தொழிலாளர் சங்கம், பெண்ணுரிமை இயக்கம்
மற்றும் தேசிய மக்கள் இயக்கங்களின்
கூட்டமைப்பு ஆகிய அமைப்புகள் சேர்ந்து
ஒரு பொது விசாரணைக்கு ஏற்பாடு
செய்திருந்தன. அந்த பொது விசாரணையில்,
ராதாகிருஷ்ணாபுரம் பக்ஸ் சாலை (அடையாறு)
கோட்டூர் ஏரிக்கரை சாலை, கிரீம்ஸ் சாலை
திடீர் நகர், மன்னார் சேரபெருமாள்
நகர் (மதுரவாயல்), மயிலாப்பூர் பாரிமுனை எஸ்பிளனேட் சாலை, கோயம்பேடு சந்தை,
தி.நகர் ராஜாபிள்ளை தோட்டம்,
கங்கைகரைபுரம், எழில்நகர், சோளிங்கநல்லூர் காந்தி நகர், அன்னை
சத்யா நகர், செம்மஞ்சேரி, கொரட்டூர்
போன்ற பகுதிகளிலிருந்து பல அமைப்புகளும், 2,000க்கும்
மேற்பட்ட பெண்களும் ஆண்களும் தங்களுடைய
பிரச்சனைகளை முன் வைத்தனர்.
அதன் அடிப்படையில் பொது விசாரணையில் நீதிபதிகள்
கீழ்கண்ட பரிந்துரைகளை வழங்கியுள்ளனர். இந்த பொது விசாரணையில்
எஸ்.எம் அரசு, ஓய்வு
பெற்ற முதன்மைப் பொறியாளர், பொதுப் பணித்துறை, பேராசியர்
சரசுவதி, பியுசிஎல் மாநிலத் தலைவர், வழக்குரைஞர்
பாதர் சையித், கல்வியாளர் சரவணராஜா,
நகர் சேனாவின் ஆறுமுகம் வினாயகம், பத்திரிகையாளர் ஞானி ஆகியோர் நீதிபதிகளாக
பங்கேற்றனர்.
சம கல்வி இயக்கம், தோழமை,
நுகர்வோர் செயற்குழு, பெண்ணுரிமை இயக்கம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி, அகில
இந்திய மக்கள் மேடை மற்றும்
சில அமைப்புகளும் கலந்து கொண்டன.
சில முக்கிய பரிந்துரைகள்
1. கட்டாய
வெளியேற்றம் உடனடியாக நிறுத்தப்பட்டு, மக்களின் கருத்துக்களை கேட்க அரசு பொது
விசாரணைகளை கட்டமைக்க வேண்டும். ஆற்றங்கரை அல்லாத பகுதிகளில் அந்த
இடங்களிலேயே வீடு கட்டித்தர வேண்டும்.
மற்றவர்களுக்கு அவர்கள் வசிக்கும் இடங்களிலிருந்து
இரண்டு கிலோ மீட்டருக்குள் வீட்டு
வசதி செய்து தரப்பட வேண்டும்.
2. நில
உச்சவரம்பு சட்டத்தின் கீழ் கையகப்படுத்தப்பட்ட, நகரில்
உள்ள நிலங்கள், பஞ்சமி நிலம், பூதான்
நிலம் ஆகியவற்றிலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக ஒதுக்கப்பட்ட நிலங்கள் எங்கெங்கு இருக்கின்றன என்று வரைபடமாக்கப்பட்டு அந்த
நிலங்களிலும் உள்ள, ஆக்கிரமிப்பாளர்கள் அகற்றப்பட வேண்டும்.
3. நீர்
நிலைகள் ஆக்கிரமிப்பு குறித்து பொது விசாரணை நடத்தப்பட்டு
ஏழை மக்கள் மறுவாழ்விற்கு வழிவகை
செய்ய வேண்டும்.
4. நீர்
நிலைகளை ஆக்கிரமித்துள்ள பெரும் நிறுவனங்கள், கல்வி
நிறுவனங்கள், மத்திய மாநில அரசுகளின்
கட்டுமானங்கள் கண்டறியப்பட்டு அவை அகற்றப்பட வேண்டும்.
இது ஒரு குறிப்பிட்ட காலவரையறைக்குள்
செய்து முடிக்கப்பட வேண்டும்.
5. சாலையோரங்களில்
நடைமேடைகளில் வசிக்கிற மக்களுக்கு இரவு நேர தங்கும்
விடுதிகள் உடனடியாக ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.
குடிசைப்
பகுதி மக்களை மறு குடியமர்வு
செய்திருக்கக் கூடிய பெரும்பாக்கம், செம்மஞ்சேரி,
எழில் நகர், கண்ணகி நகர்
போன்ற பகுதிகளில் உள்ள வீடுகள்
வாழ்வதற்கு தகுதியற்றவை என அறிவிக்கப்பட்டு அங்குள்ள
மக்கள், அவர்கள் ஏற்கனவே சென்னைக்குள்
வசித்த பகுதியில் இரண்டு கி.மீ.க்குள் மறு குடியமர்வு
செய்யப்பட வேண்டும்.
மேற்கூறிய
பகுதிகள் சதுப்பு நிலம், நஞ்சை
நிலம் கொண்ட பகுதிகளானதால் வெள்ள
அபாயம் எப்பொழுதுமே இருக்கிறது. அங்கு கட்டப்பட்ட வீடுகள்
தேசிய கட்டுமான விதிகள் (2005)க்கு புறம்பாக கட்டப்பட்டுள்ளன.
இவர்களின் குடியிருப்புகளில் போதுமான வசதிகள் ஏதுமில்லாததால்
அது அவர்களை மேலும் வறுமையில்
தள்ளும்.
பொது விசாரணையில் திரு.சுதிர் அளித்த
அறிக்கையின் சுருக்கம்
நகர்ப்புற
மற்றும் கிராமப்புற ஏழை மக்களின் வீட்டுவசதி
பற்றி 32 ஆண்டுகளாக பணியாற்றி வரும், சென்னையில் வசிக்கும்
திரு.கே.சுதிர், பெரும்பாக்கம்,
எழில்நகர், ஒக்கியம் துரைப்பாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள
குடிசை மாற்று வாரிய புதிய
கட்டிடங்களைப் பற்றி, அதன் தொழில்நுட்ப
தன்மைகள் பற்றி டிசம்பர் 2015ல்
ஓர் ஆழமான ஆய்வை மேற்கொண்டார்.
அவருடைய ஆய்வறிக்கையின் முடிவுகள் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குகின்றன.
திரு.கே.சுதிர் நடத்திய
ஆய்வின் முடிவுகள்
1. காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள பெரும்பாக்கம் கிராமத்தில்
அமைந்துள்ள தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின்
குடியிருப்புகள் 188 பல அடுக்கு (தரைத்தளம்
+ 7 தளங்கள்) பிளாக்குகளைக் கொண்டுள்ளது. ஒரு லட்சம் குடிசைவாழ்
மக்களை சென்னையிலிருந்து பெயர்த்து இங்கு குடியமர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.
இவர்கள் பெரும்பாலும் ஆற்றங்கரை, ஆற்றுப்படுகை மற்றும் ஆட்சேபணைக் குரிய
இடங்களில் குடியிருப்பவர்களாக கருதப்படுகிறது.
பெரும்பாக்கத்தில்
கட்டிடம் கட்டியிருக்கும் இடம் முழுவதும் சதுப்பு
நிலமும், நஞ்சை நிலமும் ஆகும்.
வெள்ளம் வரும் சமயங்களில் மிகவும்
பயன்படக்கூடிய வடிகால் நிலங்களை
வீடுகளாக மாற்றி இந்த மக்களை
கொதிக்கும் எண்ணைக் கடாயிலிருந்து நெருப்பிலேயே
தள்ளுவது போல் தள்ளியிருக்கிறது தமிழ்நாடு
குடிசை மாற்று வாரியம்.
2. நகர்ப்புற ஏழை மக்களின் வாழ்க்கைத்
தரத்தை மேம்படுத்துவதற்காக ஜவகர்லால் நேரு நகர்ப்புற மேம்பாட்டு
திட்டத்திற்காக ஒதுக்கிய நிதியிலிருந்து 60% வரை சதுப்பு நிலங்களை
2 மீட்டர் அளவுக்கு கான்கிரீட்டால் நிரப்புவதற்கே செலவிட்டு விட்டது அரசாங்கம். இதனால் வீட்டின்
தரம் மற்ற வசதிகள் போன்றவை
முற்றிலுமாக சமரசம் செய்யப்பட்டுவிட்டன.
3. சுமார் 35 சதுர மீட்டர் பரப்பைக்
கொண்ட ஒவ்வொரு வீட்டிற்கும் (21120 குடியிருப்புகள்)
பொதுவாக புழங்குவதற்கான இடம் மிகவும் குறைவு.
ஒரு மீட்டருக்கும் குறைவான படிக்கட்டுகள் நடுவில்
உள்ள மின் தூக்கியை சுற்றிச்
செல்கிறது. தீ ஆபத்து அவசரம்
என்றால் மக்கள் அங்கிருந்து வெளியேறுவது
கடினம்.
4. அடுக்குமாடி குடியிருப்புகளில் போதுமான காற்றோட்டமோ, வெளிச்சமோ
கிடையாது. பகல் நேரத்தில் கூட
இருள் சூழ்ந்திருக்கிறது.
5. தேசிய கட்டுமான விதிகள்
(2005)படி தீ விபத்திலிருந்து பாதுகாப்பு
அல்லது வெளியேற்றம் போன்ற ஏற்பாடுகள் போதுமானதாக
இல்லை.
6. தேசிய கட்டுமான விதிகள்படி
தேவையான குடிநீர் வசதி செய்து தரப்படவில்லை.
ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு 135 லிட்டர்
தண்ணீர் என்பதற்குப் பதிலாக அதில் மூன்றில்
ஒரு பங்குதான் ஏற்பாடு செய்யப் பட்டிருக்கிறது.
போதுமான கழிவுநீர் வசதி இல்லை.
7. பெரும்பாக்கம் ஊராட்சி, இந்தக் குடியிருப்பு களை
பராமரிப்பதற்கான செலவினங்களுக்கு நிதி ஒதுக்காததால் பராமரிப்புப்
பணி நடைபெறவில்லை. மின்தூக்கி, டீசல் ஜெனரேட்டர் போன்றவை
தற்போது போதுமான அளவு கவனிக்கப்படவில்லை.
ஒவ்வொரு வீட்டிலிருந்தும் மாதத்திற்கு ரூ.750 வசூலிக்கப்படுகிறது. குடியிருப்புக்குள்ளேயே
துவக்கப்பள்ளி வகுப்பறைகள் துவங்கப்பட்டிருக்கின்றன.
28.12.2015 வரை 4 மாணவர்களே சேர்க்கப்பட்டுள்ளனர்.
8. எழில் நகர், பெரும்பாக்கம்
போன்ற பகுதிகள் ஏற்கனவே சதுப்பு நிலப்பகுதிகளாக
இருந்ததால் வெள்ளம் வடியும் தன்மை
மிகக் குறைவு. இந்த மக்கள்
தொடர்ந்து வெள்ள அபாயத்திலேயே வசிக்க
வேண்டும். இது 1972 குடிசைப்பகுதி (முன்னேற்றம் மற்றும் மாற்றியமைப்பு) சட்டத்திற்கு
முரணானது.
9. இந்தக் குடியிருப்புகளில் உள்ள
குறைந்த வசதிகள் மக்களின் நலவாழ்விற்கு,
ஆரோக்கியத்திற்கு உகந்ததல்ல.
சென்னை
வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தைச் சார்ந்த வெங்கட் அவர்கள்
பொது விசாரணைக்கு அளித்த அறிக்கையின் சுருக்கம்.
1. கட்டாய வெளியேற்றம் செய்யப்பட்ட
குடிசைப் பகுதிகளில் மக்களுக்கு போதுமான அளவு முன்
கூட்டியே எச்சரிக்கை அளிக்கப்படவில்லை. வெளியேற்றுவதற்கு சற்று முன்புதான் அவர்களுக்குத்
தெரிவிக்கப்பட்டது. அவர்களுக்கான சட்டபூர்வமான நடவடிக்கைகளுக்கான உரிமையை இது தட்டிப்
பறித்துவிட்டது.
2. அரசிற்கு மறு குடியமர்வு குறித்து
தெளிவான கொள்கைகள் இல்லை. இவர்கள் செயல்படுத்தும்
மறு குடியமர்த்தல்களில் பல வேறுபாடுகளும் பாகுபாடுகளும்
உள்ளன.
அ. அரசு
உள்கட்டுமான திட்டங்களுக்காக வெளியேற்றப்பட்ட குடிசைப் பகுதி மக்களுக்கு இலவசமான
வீடுகளும், கூலி இழப்பிற்கு நட்ட
ஈடுகளும் வழங்கப்பட்டன. அவ்வாறு நிதி ஆதாரங்கள்
இல்லாத திட்டங்களால், வெளியேற்றப்படும் மக்களிடம் தலா ரூ.19,000 வசூல்
செய்யப்பட்டது.
ஆ.குடிசைப்பகுதிகளில் குடியிருக்கும் வாடகை தாரர்களுக்கும், சொந்த
குடிசை உள்ளவர்களுக்கும் என்ன செய்ய வேண்டும்
என்ற தெளிவு இல்லை. வாடகை
வீட்டில் இருந்த ஏழை மக்கள்
பெரும்பாலும் நடுத்தெருவில் விடப்பட்டனர்.
3. புதுக் குடியமர்வுகள் குறித்த
மக்களுக்கு எந்தவிதமான விருப்பத் தேர்வுக்கான வாய்ப்பு வழங்கப்படவில்லை.
4. கண்ணகி நகர் போன்ற
மறு குடியமர்வு செய்யப்பட்ட இடங்களில்
அ. மக்களுக்கு
வேலை வாய்ப்பு, கூலி கிடைக்க வழியில்லாமல்
போனது.
ஆ.மற்றவர்களுக்கு இவர்கள் மீது தவறான
பார்வை இருப்பதால் இவர்களுக்கு வேலை வாய்ப்பு மறுக்கின்றனர்.
இ. தொடர்ச்சியான
வேலை வாய்ப்புகளை பெறுவது மிகக் கடினமாக
இருக்கிறது.
ஈ. அதிக
போக்குவரத்து செலவின் காணமாக, கட்டுப்படியாகாத
கூலி நிலைமைகளில் பல பெண்களால் வேலைக்குச்
செல்ல முடியவில்லை.
இந்த காரணங்களால், மறு குடியமர்த்தும் திட்டங்கள்
உடனே கைவிடப்பட்டு சீரிய திட்டத்தின் மூலம்
அவர்களின் வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும்.