டிசம்பர்
18 உறுதியேற்பு தினக் கூட்டங்கள்
டிசம்பர்
18 தோழர் வினோத் மிஸ்ரா நினைவு
தினத்தன்று மாநிலம் முழுவதும் உறுதியேற்பு
கூட்டங்கள் நடத்தப்பட்டன. கட்சி மாநில மாநாடு
நடத்தத் தயாராகி வரும் திருவள்ளூர்
மாவட்டத்தில் டிசம்பர் 18 அன்று 5 கிளைகள் கூட்டப்பட்டு
மத்தியக் கமிட்டியின் அறைகூவல் விவாதிக்கப்பட்டு உறுப்பினர் புதுப்பித்தல் நடைபெற்றது. இந்தக் கூட்டங்களில் 140 உறுப்பினர்கள்
கலந்து கொண்டனர். கிளைகள் கூட்டுவது, உறுப்பினர்
புதுப்பித்தல் வேலைகள் தொடர்ந்து நடைபெற்று
வருகின்றன. மாநாட்டு பிரச்சாரமாக திருவள்ளூர் மாவட்டத்தில் 10 இடங்களிலும், சென்னையில் 10 இடங்களிலும் சுவரெழுத்து எழுதப்பட்டுளளது. தீப்பொறி சந்தா சேகரிப்பும் நடந்து
வருகிறது.
சென்னையில்,
டிசம்பர் 18 அன்று அம்பத்தூர் மார்க்கெட்
பகுதியில் தோழர்
மோகன் தலைமையில் பொதுக் கூட்டம் நடத்தப்பட்டது.
கூட்டத்தில் முனுசாமி, பசுபதி, தேவகி உள்ளிட்ட
தோழர்கள் உரையாற்றினர். திருபெரும்புதூரில் நடைபெற்ற கூட்டத்தில் தோழர்கள் பாரதி, இரணியப்பன், ராஜேஷ்,
ராஜகுரு உள்ளிட்ட தோழர்கள் உரையாற்றினர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மக்கள் பெருந்திரளாக
கலந்து கொண்டனர். வெள்ள நிவாரணம் வழங்காத
காணாமல் போன எம்எல்ஏ, எம்பி,
அதிகாரிகளைக் கண்டித்து தொடர் போராட்டம் நடத்துவது
என தீர்மானிக்கப்பட்டது. டிசம்பர் 18 அன்று திருபெரும்புதூரில் பொதுக்
கூட்டம் நடைபெற்றது. புரட்சிகர இளைஞர் கழகத்தின் மாநிலத்
தலைவர் தோழர் ராஜகுரு தலைமையில்
நடைபெற்ற கூட்டத்தில் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர்
தோழர் இரணியப்பன், புரட்சிகர இளைஞர் கழக தேசியச்
செயலாளர் தோழர் பாரதி உரையாற்றினர்.
கோவையில்
டிசம்பர் 18 அன்று மக்களைக் காப்போம்,
ஜனநாயகம் காப்போம் இயக்கத்தின் தொடர்ச்சியாக இகக(மாலெ), அகில
இந்திய மக்கள் மேடை இணைந்து
மாபெரும் பொதுக் கூட்டம் நடத்தின.
மாநகரக் குழு உறுப்பினர் தோழர்
வேல்முருகன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்டக் குழு உறுப்பினர் நாராயணன்
வரவேற்புரை நிகழ்த்தினார். கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்
தோழர் குமாரசாமி, ஏஅய்சிசிடியு மாவட்டத் தலைவர் தோழர் சந்திரன்,
சாந்தி கியர்ஸ் சங்க பொதுச்
செயலாளர் தோழர் பாலமுருகன், பகுதிக் கமிட்டிச்
செயலாளர் தோழர் நடராஜன், கட்சியின்
மாநிலக் குழு உறுப்பினர்கள் தோழர்கள்
என்.கே.நடராஜன், தாமோதரன்,
மாவட்டச் செயலாளர் தோழர் பாலசுப்பிரமணியன், ஆதித்
தமிழர் பேரவை பொதுச் செயலாளர்
ரவிக்குமார், தலித் மக்கள் கட்சியின்
பொதுச் செயலாளர் செங்கோட்டையன், மக்கள் சிவில் உரிமைக்
கழக மாவட்டச் செயலாளர் அண்ணாத்துரை, சமூக இயக்கத்தின் பன்னீர்செல்வம்
ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக
துப்புரவுத் தொழிலாளர்களின் பணி நிரந்தரம், குடியிருப்பு,
தீண்டாமை, மனிதக் கழிவுகளை மனிதர்
அகற்றத் தடை உள்ளிட்ட பல்வேறு
கோரிக்கைகள் மீது தொழிலாளர் குடியிருப்புப்
பகுதிகளில் விரிவான பிரச்சாரம் நடத்தப்பட்டது.
புதுக்கோட்டையில்
மாவட்டக்குழு மற்றும்
கிளைச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. மத்தியக்
கமிட்டி அறைகூவல் விவாதிக்கப்பட்டது. ரசீது புத்தகம் அச்சடிக்கப்பட்டு
தீப்பொறி சந்தா சேகரிப்பு நடந்து
வருகிறது. கறம்பக்குடி, கந்தர்வக்கோட்டை ஒன்றியத்தில் கிளைகள் கூட்டப்பட்டு புதுப்பித்தல்
நடந்து வருகிறது.
சேலத்தில்
டிசம்பர் 20 அன்று குமரகிரிபேட்டை, வடக்கு
அம்மாபேட்டை, பருத்திக்காடு ஆகிய உள்ளூர் கமிட்டிகளின்
கூட்டம் நடைபெற்றது. இதில் தோழர்கள் வேல்முருகன்,
நடராஜன், அய்யந்துரை, மோகனசுந்தரம், சந்திரமோகன் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். உறுப்பினர்
புதுப்பித்தல் நடைபெற்றது.
நாமக்கல்
மாவட்டத்தில் 8 கிளைக் கூட்டங்களில் உறுப்பினர்
புதுப்பித்தல் நடந்தது. மத்தியக் கமிட்டியின் அறைகூவல் படித்து விவாதிக்கப்பட்டது. 125 பேர் கலந்து
கொண்டனர். புதிதாக 25 உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர்.
திருநெல்வேலியில்
பேட்டை, சுத்தமல்லி கிளை கூட்டப்பட்டு தோழர்கள்
உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். குமரியில் தோழர் வினோத்மிஸ்ரா படத்துடன்
சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. விரிந்த ஊழியர் கூட்டம்
நடத்தப்பட்டது. அறைகூவல் விவாதிக்கப்பட்டு உறுதிமொழி ஏற்றுக் கொள்ளப்பட்டது.
திண்டுக்கல்
மாவட்டம் பழனியில் தோழர் ஜெகதீசன் தலைமையில்
கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது. மதுரையில் மாவட்ட தலைமைக்குழு உறுப்பினர்கள்
கிளைச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
வெண்மணி
நாளில் திருவள்ளூர் மாவட்ட கட்சி அலுவலகத்
திறப்பு நிகழ்ச்சி
டிசம்பர்
25 அன்று வெண்மணி நாளில் காரனோடையில்
புதிய கட்சி அலுவலகம் திறப்பு
விழாவும் மாவட்ட ஊழியர் உறுதியேற்பு
கூட்டமும் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில
மாநாடு நடத்துவது தொடர்பாக விரிவான திட்டமிடலும் நடைபெற்றது.
அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் குமாரசாமி, மாநிலச்
செயலாளர் தோழர் பாலசுந்தரம், மாநிலக்
குழு உறுப்பினர்
தோழர் எ.எஸ்.குமார்,
மாவட்டச் செயலாளர் தோழர் ஜானகிராமன், சென்னை
மாவட்டச் செயலாளர் தோழர் சேகர், புரட்சிகர
இளைஞர் கழக தேசியச் செயலாளர்
தோழர் பாரதி, அகில இந்திய
மாணவர் கழக மாநிலச் செயலாளர்
தோழர் சீதா மற்றும் மாவட்டக்
குழு உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள் உட்பட
பலரும் கலந்து கொண்டனர்.
8 பிரிக்கால்
தோழர்களை விடுவிக்க வலியுறுத்தி
ஜனவரி
1 முதல் பிப்ரவரி 15 வரை
ஏஅய்சிசிடியு
ஒருமைப்பாட்டு இயக்கம்
சிறை சென்றுள்ள எட்டு பிரிக்கால் தொழிலாளர்களை
பிணையில் விடுவிக்கவும் அவர்கள் விடுதலைக்காக மேல்முறையீடு
செய்யவும் பிரிக்கால் தொழிலாளர்கள் மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கு ஆதரவாக ஜனவரி 1 முதல்
பிப்ரவரி 15 வரை 45 நாட்கள் ஒருமைப்பாட்டு
இயக்கம் நடத்த ஏஅய்சிசிடியு முடிவு
செய்துள்ளது.
இயக்கத்தின்
ஒரு பகுதியாக ஜனவரி 18 அன்று நாடு முழுவதும்
பிரிக்கால் தொழிலாளர்கள் ஒருமைப்பாட்டு தினம் கடைபிடிக்கப்படும். இந்த
நாளில் ஆர்ப்பாட்டங்கள், பொதுக் கூட்டங்கள், தெருமுனை
கூட்டங்கள், அறைக் கூட்டங்கள் நடத்தப்படும்.
பிப்ரவரியில் நாட்டின் பதினைந்துக்கும் மேற்பட்ட முக்கிய மய்யங்களில் பிரிக்கால்
தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஒருமைப்பாட்டு கருத்தரங்கங்கள்
நடத்தப்படும்.
இயக்கத்தின்போது,
நாடு முழுவதும் உள்ள அமைப்பாக்கப்பட்ட, அமைப்புசாரா
தொழிலாளர்கள் மத்தியில் பிரிக்கால் தொழிலாளர்கள் ஒருமைப்பாட்டு நிதி திரட்டப்படும். நிதியளிக்கும்
தொழிலாளர்களின், தொழிற்சங்கங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அழுத்தமும் கவனமும் செலுத்தப்படும்.
மாருதி
தொழிலாளர்களும், இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக
சிறையில் உள்ள தங்கள் சக
தோழர்களை விடுவிக்கக் கோரியும் 66 தொழிலாளர்களுக்கு தரப்பட்டுள்ள பிடியாணையை திரும்பப் பெறக் கோரியும் போராட்டங்களில்
ஈடுபட்டுள்ளனர். அவர்கள் கோரிக்கைகளும் இந்த
இயக்கத்தில் எழுப்பப்படும்.
கோபம் மற்றும் பழிவாங்கல் உணர்விலிருந்து
கவிதா கிருஷ்ணன்
(சிறார்
நீதி சட்டத் திருத்தம் பற்றிய
விவாதத்தில் அகில இந்திய முற்போக்கு
பெண்கள் கழக தேசியச் செயலாளர்
தோழர் கவிதா கிருஷ்ணன் எழுதி
22.12.2015 அன்று டெக்கான் கிரானிக்கிள் பத்திரிகையில் வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம். தமிழில்: தேசிகன்)
டிசம்பர்
16, 2012 வழக்கில் தண்டனை காலத்தை முடித்த
சிறார் குற்றவாளி விடுதலையை ஒட்டி எழுந்த குரலின்
விளைவாக ‘சிறார் நீதிச் சட்டம்’
திருத்தப்பட்டிருக்கிறது. இது எவ்வாறு துரதிஷ்டவசமானது,
தவறாக வழிநடத்தப்பட்டது என்பதற்கு பல காரணங்கள் உள்ளன.
கோபம் அல்லது பழி வாங்கும்
உணர்வுடன் கொள்கை முடிவுகள் எடுக்கப்படவே
கூடாது. டெல்லி பெண்கள் ஆணையமும்,
நமது அரசியல்வாதிகளும் சட்டத்தை பழைய வழக்கில் பின்
தேதியிட்டு அமல்படுத்த முடியாது என்பதை நன்கு அறிவர்.
டிசம்பர் 16, கூட்டு பாலியல் வன்புணர்ச்சி
வழக் கில் குற்றவாளியை கும்பலாக
சென்று அடித்துக் கொல்வது என்ற குரலை
உருவாக்கியது ஊடகத் தரப்பின் மிகவும்
பொறுப்பற்ற செயலாகும்.
நாங்கள்
பெண்களின் நீதிபால் ஆர்வமில்லாத எந்த ஒரு முயற்சியையும்
கடுமையாக எதிர்க்கிறோம். அசாதாரண வழக்குகளில் கடுமையான
தண்டனை என்பது எங்களுக்குத் தேவையில்லை.
ஒவ்வொரு வன்புணர்ச்சியாளருக்கும் உரிய நேரத்திலான, உத்தரவாதமான
தண்டனை என்பதுதான் உண்மையான தடுப்பரணாக இருக்கும். சிறார்களை வயது வந்தவர்களோடு சிறையிலடைப்பது
மற்ற நாடுகளில் பலனளிக்கவில்லை, அய்க்கிய அமெரிக்காவின் ஆய்வுகளும் இதே முடிவுகளுக்குத்தான் வந்திருக்கின்றன.
வன்புணர்வு வழக்குகளில் நீதிக் கான போராட்டத்தில்
விவரங்களை, சந்தித்து வரும் பிரச்சனைகளை நாம்
அங்கீகரித்து பரிசீலிக்க வேண்டும். துணை மருத்துவக் கல்லூரி
மாணவியின் வன்புணர்வு மற்றும் கொலையைத் தொடர்ந்து
நீதிக்காக எழுப்பப்பட்ட குரல்களுக்கு பதில்வினையாக அமைக்கப் பட்ட நீதிபதி வர்மா
கமிட்டி, மரண தண்டனையையும், சிறார்களை
வயதுவந்தோர் நீதி மன்றங்களுக்கும், சிறைக்கும்
அனுப்புவதையும் நிராகரித்தது.
இந்தப்
பிரச்சனையில் பெண்கள் அமைப்புகளின் முதிர்ச்சியைப்
பாராட்டிய கமிஷன், சர்வ தேச
ஆய்வுகளிலிருந்து நிறைய விசயங்களை எடுத்தாண்டது.
‘நாட்டின் பல்வேறு சட்டங்கள்படி நீதிமன்றத்தில்
விசாரணை நடத்த சிறார் வயதை
18லிருந்து 16 ஆக குறைப்பது தொடர்பான
கேள்விக்கு நிபுணர்களின் கருத்துக்களை நாங்கள் கேட்டோம். எல்லா
பெண்கள் அமைப்புகள், கல்வியாளர்கள், இந்த சம்பவத்தை குற்றவியல்
நோக்கிலும் சமூக நோக்கிலும் பார்க்கக்
கூடிய சிந்திக்கின்ற மக்களின் பெரும் பிரிவு வெளிப்படுத்திய
முதிர்ச்சியின் அளவு எங்களை நெகிழ்வடைய
வைத்தது. எங்கள் முன்னுள்ள ஆவணங்கள்படி
சிறார் வயதை 16 ஆக குறைக்க
வேண்டியதில்லை என நாங்கள் கருதுகிறோம்.’
சிறார்கள்
வன்புணர்வில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது என தவறான கூக்குரல்
கிளப்பி விடப்பட்டிருக்கிறது. உண்மை என்னவெனில் மிகச்சிறு
சதவீத வன்புணர்வு வழக்குகளில்தான் சிறார்கள் குற்றஞ் சாட்டப்பட்டிருக்கிறார்கள். அந்த சதவீதத்திலும்
பெருமளவு இருவரும் ஒத்துக்கொண்டு நடக்கிற வளரிளம் பருவ
காதல் சம்பந்தப்பட்டதாகும். இது போன்ற சம்பவங்களில்
பெற்றோர்கள் பொய்யாக வன்புணர்வு வழக்கு
பதிவு செய்துவிடுகிறார்கள். இது போன்ற நிறைய
சம்பவங்களில் ஒடுக்கப்பட்ட சமூக சிறுவர்கள் இருப்பார்கள்.
பொதுப்
புத்தியின் தர்க்கம் ‘பாலியல் வன்புணர்வு வயது
வந்தோருக்கான குற்றம்’ என்பதாகும். ஒருவர் வன்புணர்வு கொள்ளும்
அளவுக்கு முதிர்ச்சியடைந்திருக்கிறார் என்றால் அவர் தண்டிக்கப்படும்
அளவுக்கும் முதிர்ச்சியடைந்திருக்கிறார் என்பதாகும்.
இது முதிர்ச்சியடைதல் பற்றிய கோட்பாட்டின் தவறுதலான
புரிதல். பாலியல் தூண்டுதலும், கொலையிலோ,
வன்புணர்விலோ ஈடுபடுவதற்கான ஆற்றலும் சிறார்களுக்கு 10 வயதாகும் போது வளர்ச்சியடைந்து விடுகின்றன.
ஆனால் இந்த ஆற்றல் ‘முதிர்ச்சியை’
அடையாளப்படுத்துவதாக ஆகாது. திட்டமிடும், ஆற்றலை
வழிநடத்தும், முடிவுகள் எடுக்கும், அபாயத்தைக்
கணிக்கும், நீண்டகால இலட்சியங்களை முடிவு செய்யும் மூளையின்
முதன்மை செயல் அதிகாரி என
அழைக்கப்படும் மூளையின் முன்பகுதி வளரிளம் பருவத்தினருக்கு முழுமையாக
வளர்ச்சியடைந்திருக்காது என்ற அறிவியல் ஆய்வுகள்
சர்வதேச அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.
வன்புணர்ச்சிக்கு
ஆளாக்கப்பட்டவரோ அல்லது அவருடைய நண்பரோ
தங்களது குற்ற அறிக்கையில் இந்த
சிறார்தான் மிகவும் கொடுமையாக மிருகத்தனமாக
நடந்து கொண்டார் என்று எதுவும் குறிப்பிடவில்லை.
இந்தப் பொய் போலீசாரால் உருவாக்கப்பட்டு
ஊடகங்களுக்கு தீனியாக்கப்பட்டது.
எப்படியிருப்பினும்,
எந்த திருத்தப்பட்ட சட்டத்தûயும் பின்தேதியிட்டு
பழைய வழக்குகளுக்கு அமல்படுத்த முடியாது.
கவலை அளிக்கும் விதம் ஊடகக் கவனம்
பெறும், தேர்ந்தெடுத்த வன்முறைச் சம்பவங்களில் தண்டனை வழங்குவதற்கு ஏதுவாக
சட்டங்களைத் திருத்த வேண்டும் என்ற
வாதம் கட்டமைக்கப்பட்டு வருகிறது. ஆனால் உண்மை நிலவரம்
என்னவென்றால் ‘சில வன்புணர்வு வழக்குகளை
அசாதாரணமானது என்று ஏற்றுக்கொள்ளும்போது மற்ற
எல்லா வன்புணர்வு வழக்குகளும் சாதாரணமானதாக எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்படும்.’
நாம் சமூகத்தில் இளம் வயது பையன்களிடம்
உண்மையான வன்புணர்வு ‘மிருகங்களால்’
செய்யப்படுகிறது என்றும் அதற்கு கொடிய
மிருகத்தனமான தண்டனை வேண்டுமென்றும் பயிற்றுவித்து
வருகிறாம்.
ஆனால்,
அதே நேரம் அந்தச் சிறுவர்கள் வன்புணர்வு
ஒன்றும் அவ்வளவு பெரிய காரியமல்ல
என்று வயது வந்தோரிடமிருந்து கற்றுக்
கொள்கிறார்கள். பஸ்தாரில் 14 வயது சிறுமியை காவல்துறையினர்
வன்புணர்வு செய்தபோது அது பற்றி ஊடகங்களிலோ,
அரசியல்ரீதியாகவோ குரல் எதுவும் எழவில்லை.
பஹானாவில் தலித் பெண்ணை பாலியல்
வன்புணர்வு செய்தவர்கள் தப்பிச் சென்றதை அவர்கள்
பார்க்கிறார்கள். முசாபர்நகரில் வன்புணர்வில் ஈடுபட்டவர்கள் எப்படி கதாநாயகர்களாக கருதப்படுகிறார்கள்
என்பதையும் மோடி அரசாங்கத்தின் அமைச்சர்
(சஞ்சீவ் பால்யன்) வெளிப்படையாகவே அவர்களை பாதுகாத்ததையும் பார்க்கிறார்கள்.
அசாராம் வன்புணர்ச்சி வழக்கில் சாட்சியங்கள் கொலை செய்யப்பட்டதையும், வன்புணர்வு
சட்டங்கள் ‘சமூகத்தை பிளவுபடுத்துகின்றன’ என்று பிரச்சாரம் செய்யப்படுவதையும்
அவர்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
தருண் தேஜ்பால் அல்லது ஆர்.கே.பசூரி மீது புகார்
தர முன்வந்தவர்கள் மீது பழி போடப்பட்டதையும்
அவர்கள் அவமானப்பட்டதையும் அதே சமயம் குற்றம்
சாட்டப்பட்ட அந்த ஆண்களை சட்டம்
தொட்டுவிடாமல் இருப்பதையும் அவர்கள் பார்க்கிறார்கள்.
ஆகவே, நமது சிறுவர்கள், வன்புணர்வு
தார்மீகரீதியாக தவறு என்றோ, இந்தக்
குற்றத்திற்கு கண்டிப்பாக தண்டனை கிடைத்தே தீருமென்றோ
கற்றுக் கொள்ள மாட்டார்கள். அதற்குப்
பதிலாக, ‘வன்புணர்ச்சியாளர்கள் மிருகங்கள்’ என்றும் அவர்கள் தண்டிக்கப்பட
வேண்டும் என்றும், அதே சமயம், அநேகமாக
எல்லா வன்புணர்ச்சி பற்றிய புகார்தாரர்களும் பொய்
சொல்கிறார்கள் என்றும் வன்புணர்வைத் தடுப்பதன்
பெரும் பங்கு ஆண்களிடத்தில் இருப்பதற்கு
பதிலாக பெண்களிடத்தில்தான் இருப்பதாகவுமே அவர்கள் கற்றுக் கொள்கிறார்கள்.
நமது அமைப்பும், நமது சமூகமும் இது
போன்ற பாடங்களை கற்றுக் கொடுக்கும் வரை
நம்மால் வன்புணர்ச்சியையும், பாலியல் துன்புறுத்தலையும் தடுத்துவிட
முடியாது.
புதிய வன்புணர்வு சட்டத்தின்படி நீதி கேட்டு புகார்
தர வரும் புகார்தாரர்களில் ஆகப்
பெரும்பான்மையோருக்கு இந்த அமைப்பு நீதி
வழங்க தவறிவிட்டது. இருக்கிற சட்டங்களை அமல்படுத்துதற்கும், ஒவ்வொரு வழக்கிலும் நீதியை
உத்தரவாதப்படுத்துவதற்கும்
பதிலாக, இந்த நிறுவனத்தை ஆளுகின்றவர்கள்
இன்னொரு ‘கடுமையான சட்டம்’ என்று சொல்லி
கவனத்தை திசை திருப்புகிறார்கள். இளம்
வயதினர், வயது வந்தோருக்கான குற்றவியல்
நீதி முறைக்கு செல்வதைத் தடுக்க 2005லிருந்து 2010க்குள் அய்க்கிய அமெரிக்காவின்
15 மாநிலங்கள் சட்டம் இயற்றியிருக்கின்றன.
இப்போது
நிலவுகின்ற சிறார் நீதி (குழந்தைகள்
பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம்
2010, ‘இளம் குற்றவாளிகளை தப்பிவிட அனுமதிப்பதில்லை.’ டிசம்பர் 16, வழக்கின் அந்த இளம் வன்புணர்வாளர்
மேலே குறிப்பிட்டுள்ள அந்த வயது வந்த
குற்றவாளிகளைப் போல் தப்பித்துவிடவில்லை. அவர்
தண்டிக்கப்பட்டு, சிறார் சட்டப்படி சிறார்
சிறையில் தண்டனை அனுபவித்திருக்கிறார். தேவை, சிறார்
மற்றும் வயது வந்தோருக்குமான இன்னும்
கூடுதல் சீர்திருத்தமும் மறுவாழ்வு நடவடிக்கைகளும்தான். அது போன்ற நடவடிக்கைகள்
மட்டுமே நம் சமூகத்தை பாதுகாப்பானதாக
வைத்திருக்கும். சிறார் குற்றவாளிகளின் வயதை
18ல் இருந்து 16 ஆக குறைப்பது அல்ல.