COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Thursday, January 14, 2016

தோழர் .பி பர்தனுக்கு செவ்வஞ்சலி

 இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரும் முன்னாள் பொதுச் செயலாளருமான தோழர் .பி.பரதன் மறைவுக்கு இகக மாலெ செவ்வஞ்சலி செலுத்துகிறது.

ஜனவரி 4, அணுஉலைக்கு எதிரான பரப்புரை

அகில இந்திய மக்கள் மேடையில் அங்கம் வகிக்கும் அணுஉலைக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் சுப.உதயகுமார் சென்னையில் அணுஉலைக்கு எதிரான பிரச்சார இயக்கத்தின் பரப்புரையை ஜனவரி 4 அன்று துவக்கினார். சென்னை எழும்பூர் இரயில் நிலையத்தில் அவருடன் இகக (மாலெ) அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் குமாரசாமி, மத்தியக்குழு உறுப்பினர் தோழர் புவனா, அகில இந்திய மக்கள் மேடையின் தமிழ்நாடு பிரச்சாரக் குழு உறுப்பினர் தோழர் வித்யாசாகர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இரண்டு கட்சி கிளைகளில் கட்சி அமைப்புக்கு வெளியே 
50 தீப்பொறி சந்தாக்கள் சேர்க்க முடிவு

நெல்லையில் 43 மற்றும் 44 வார்டு கட்சிக் கிளைகளின் உறுப்பினர் புதுப்பித்தல் மற்றும் உறுதிமொழியேற்பு கூட்டங்கள் ஜனவரி 3 அன்று நடைபெற்றன. 6 பெண் தோழர்கள் உட்பட 27 உறுப்பினர்கள் புதுப்பிக்கப்பட்டனர். கூட்டத்தில் மத்தியக் கமிட்டியின் அறைகூவல் படித்து விளக்கப்பட்டது. மாநிலக் குழு உறுப்பினர் தோழர் ஜி.ரமேஷ், மாவட்டக் குழு உறுப்பினர் தோழர் கே.கணேசன் கலந்து கொண்டனர். புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பது, கட்சியின் மாநில மாநாட்டுப் பிரச்சாரம், நிதி வசூல் பற்றி விவாதிக்கப்பட்டு, மாநாட்டுப் பிரச்சாரத்தையும் புதிய உறுப்பினர்கள் சேர்ப்பதையும் வார்டு பகுதிக்குள் இயக்கமாகக் கொண்டு செல்ல தீர்மானிக்கப்பட்டது. தீப்பொறி பத்திரிகை உறுப்பினர்கள் ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்க வேண்டும், வாசிக்கப்பட வேண்டும், இரண்டு கிளைகளிலும் உள்ள உறுப்பினர்கள் தீப்பொறிக்கு இவ்வாண்டுச் சந்தாவை புதுப்பிப்பது மட்டுமின்றி, கட்சி அமைப்புக்கு வெளியே ஆதரவாளர்கள், நண்பர்களிடத்தில் ஜனவரி மாத இறுதிக்குள் 50 சந்தாக்கள் சேர்ப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. கிளைக் கூட்டங்களில், “இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கபட்ட பிரிக்கால் தொழிலாளர் விடுதலைக்காக நியாயம் கேட்போம்” பிரச்சாரத்தை பொங்கல் விடுமுறை நாட்களில் வார்டு பகுதிகளில் மேற்கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது. அது தொடர்பான ஸ்டிக்கர்களை உறுப்பினர்கள் தங்கள் இரு சக்கர வாகனங்களிலும் சலவைத் தொழிலாளத் தோழர்கள் தங்கள் கடைகளிலும் உடனடியாக ஒட்டினார்கள்.

அவிகிதொச மாநில செயற்குழு கூட்டம், கருத்தரங்கம்

ஜனவரி 4 அன்று அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் மாநில துணைத் தலைவர் தோழர் இளங்கோவன் தலைமையில் மயிலாடுதுறையில் நடைபெற்றது. அவிகிதொச அகில இந்திய துணைத் தலைவர் தோழர் பாலசுந்தரம் கூட்டத்தில் கலந்து கொண்டார். ஜனவரி 20 முதல் 30 வரை கோவை பிரிக்கால் தொழிலாளர் ஒருமைப்பாடு நிகழ்ச்சிகளை தமிழகம் முழுவதும் முன்னெடுத்துச் செல்ல முடிவெடுக்கப்பட்டது.
கிராமப்புற பகுதிகளில் போராட்ட நிதி திரட்ட முடிவு செய்யப்பட்டது. திருவள்ளூர், புதுக்கோட்டை, விழுப்புரம், தஞ்சை - நாகை, கடலூர், மதுரை மாவட்டங்களில் பிரச்சார இயக்கம், நிதி திரட்டுதல், வெளியீடு விநியோகம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. ஜனவரி 5 அன்று தஞ்சையிலும், ஜனவரி 6 அன்று புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டையிலும் ஊழியர் கூட்டங்கள் நடத்தப்பட்டன.
ஜனவரி 7 அன்று கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் இணைந்து விருத்தாசலத்தில்மக்களைக் காப்போம், ஜனநாயகம் காப்போம் இயக்கத்தின்பகுதியாக கருத்தரங்கம் நடத்தின. அன்று காலை 140 பள்ளி மாணவர்களுக்கு வெள்ள நிவாரணப் பொருட்களாக புத்தகம், புத்தகப் பை, பேனா மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

கருத்தரங்கில் கடலூர் மாவட்ட அமைப்பாளர் தோழர் தனவேல் தலைமை வகித்தார். இகக மாலெ மாநிலச் செயலாளர் தோழர் பாலசுந்தரம், புதுச்சேரி மாநிலச் செயலாளர் தோழர் சோ.பாலசுப்பிரமணியன், அகில இந்திய மக்கள் மேடையின் தோழர் சந்திரமோகன், அவிகிதொச மாநிலப் பொதுச் செயலாளர் தோழர் ஜானகிராமன், ஏஅய்சிசிடியு மாநிலச் செயலாளர் தோழர் குருசாமி, இகக (மாலெ) விழுப்புரம் மாவட்டச் செயலாளர் தோழர் வெங்கடேசன் ஆகியோர் கலந்துகொண்டனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் போன்ற நிவாரணப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டன.

Search