தமிழ்நாட்டில் 2021 சட்டமன்றத் தேர்தலில் பாஜக கனவு நனவாகுமா?
விருப்பப்படுகிற உரிமையை, முட்டாள்களின் கற்பனை சொர்க்கத்தில் வாழும் உரிமையை பாரதிய ஜனதா கட்சிக்கு எவராவது மறுக்க முடியுமா?
பிரசாந்த் பூஷணை தண்டிப்பது
கருத்துரிமையை, நீதித்துறை சுதந்திரத்தை,
ஜனநாயகத்தை தண்டிப்பதாகும்
எஸ்.குமாரசாமி
பிரசாந்த் பூஷண் நீதிமன்ற அவமதிப்பு குற்றம் புரிந்தார் என ஆகஸ்ட் 14 அன்று முடிவுக்கு வந்த நீதிபதி அருண் மிஷ்ரா தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வம், ஆகஸ்ட் 20, 24, 25 விசாரணை நாட்களில் தண்டனை பற்றி முடிவெடுக்காமல், நாள் குறிப்பிடாமல் வழக்கை ஒத்தி வைத்துள்ளது. அவருக்கு எதிரான வேறு ஒரு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, வேறு ஓர் அமர்வத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. நீதிபதி அருண் மிஷ்ரா செப்டம்பர் 2, 2020ல் ஓய்வு பெறுகிறார்.
கம்யூனிஸ்டுகளும் நாட்டுப்பற்றும்
எஸ்.குமாரசாமி
பகத்சிங்கிற்கு கம்யூனிசத்தில் நம்பிக்கை இருந்தது. அவர் தேசபக்தர். நாட்டு விடுதலைக்காகப் போராடியதற்காகதான், தூக்கில் ஏற்றப்பட்டார். புன்னபுரா வயலாறு, தெபாகா, தெலுங்கானா, நக்சல்பாரி போராளிகள் தேச பக்தர்கள். கம்யூனிஸ்டுகளின் தேசபக்தி நாட்டுப்பற்று, ஏகாதிபத்திய எதிர்ப்பும் மக்கள் சார்பும் கொண்டதாகும்.
இந்து ராஷ்டிரா நோக்கிய பயணம்
தடுக்க முடியாததா?
எஸ்.குமாரசாமி
பட்டப்பகலில் நாடறிய பாப்ரி மசூதியை இடித்தவர்கள் ஒருவர் கூட தண்டிக்கப்படாத பின்னணியில், பாப்ரி மசூதியை இடித்தது கொடும் குற்றம் ஆனாலும் இடித்த தரப்புக்கே கோவில் கட்ட மசூதி இருந்த இடம் தரப்படும் என்று உச்சநீதிமன்றம் வெகுமதியாய் தந்த பின்னணியில், காஷ்மீர் என்ற இசுலாமிய சிறுபான்மையினர் பெரும்பான்மையாய் இருந்த ஒரே மாநிலம் துண்டாடப்பட்ட அதே ஆகஸ்ட் 5 அன்று, இந்தியப் பிரதமர், இந்து பிரதமராய் போய் கோவில் கட்ட அடிக்கல் நாட்டிய பிறகு, இந்து ராஷ்டிரா பயணத்தை இனி எவராலும் தடுக்க முடியாது என இந்துத்துவர்கள் சொல்கிறார்கள்.
பேஸ்புக்கில் பேஸ்புக்குக்கு நடந்த 'சம்பவம்'
(ஊடகவியலாளர், சமூக செயல்பாட்டாளர் கவின்மலர் முகநூல் பதிவு, 17.08.2020)
என்ன நடந்ததென்று எழுதி விடுகிறேன். முகநூலில் என் படத்தின்மீது 'என் விலை 1000 ரூபாய்' என எழுதி சசிகுமார் என்கிற நபர் என் படத்தை போட்டோ கமெண்ட்டாக பா.ஜ.க.வினரின் திடீர் முருக வழிபாடு குறித்து எழுதிய என் பதிவில் போட்டிருந்தார்.
கல்வி உரிமையை மறுக்கும்
தேசிய கல்வி கொள்கை 2020
ஆர்.வித்யாசாகர்
புதிய 'தேசிய கல்வி கொள்கையை' திணிப்பதன் மூலம், வகுப்புவாத பாசிச பாஜக சாதி ஆதிக்க மனுவாத பார்ப்பனீய சமூகத்தை மீண்டும் கட்டமைப்பதற்கு வித்திட்டுள்ளது. வேடுவனாகிய ஏகலைவன் எப்படி வில் வித்தை கற்கலாம் என்று அவனுடைய பெருவிரலை குரு காணிக்கையாகப் பெற்றதாக மஹாபாரத புராணம் நமக்கு கூறுகிறது.