COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Saturday, July 16, 2016

வழக்கறிஞர்களுக்கு எதிரான கருப்புச் சட்டத் திருத்தத்தைத் திரும்பப் பெறு
அய்சா, ஆர்ஒய்ஏ உயர்நீதிமன்றம் முன்பு போராட்டம்
வழக்கறிஞர்களுக்கெதிரான கருப்புச் சட்டத் திருத்தத்தை திரும்பப் பெறக் கோரியும் ஒரு மாதத்துக்கும் மேல் தமிழ்நாட்டின் பலபகுதிகளிலும் போராடி வரும் வழக்கறிஞர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் அகில இந்திய மாணவர் கழகமும் புரட்சிகர இளைஞர் கழகமும் ஜுலை  13 அன்று சென்னை உயர்நீதிமன்றம் முன்பு போராட்டம் நடத்தின.

அகில இந்திய மாணவர் கழக மாநிலச் செயலாளர் தோழர் சீதா, புரட்சிகர இளைஞர் கழகத்தின் மாவட்டச் செயலாளர் தோழர் கண்ணன் ஆகியோர் தலைமையில் நடந்த போராட்டத்தில் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். 120 பேர் கைது செய்யப்பட்டு அன்று மாலை விடுவிக்கப்பட்டனர்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வழக்கறிஞர் அணியின் மாநிலச் செயலாளர் பார்வேந்தன், மக்கள் உரிமை பாதுகாப்பு மய்யத்தின் மில்டன், இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் ஜான் செல்வராஜ் ஆகியோர் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும் கருப்புச் சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும் உரையாற்றினார்கள்.
ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்க மாநிலப் பொறுப்பாளரும் புரட்சிகர இளைஞர் கழகத்தின் தேசியச் செயலாளருமான தோழர் பாரதி போராட்டக்காரர்கள் மத்தியில் உரையாற்றினார்.
எழு என் தேசமே இயக்கம்
அகில இந்திய மாணவர் கழக, புரட்சிகர இளைஞர் கழக கூட்டங்கள்
சென்னையில் ஜுலை 7 அன்று மாநிலத்தின் புரட்சிகர இளைஞர் கழக முன்னணி தோழர்கள் கலந்துகொண்ட கூட்டம் நடந்தது. எழு என் தேசமே இயக்கத்தை வெற்றிகரமாக்குவது, செப்டம்பர் 28 டில்லி பேரணியில் 100 பேர் கலந்துகொள்வதை உறுதிப்படுத்துவது ஆகியவை நோக்கி விவாதங்கள் நடந்தன. புரட்சிகர இளைஞர் கழகத்தின் தேசியச் செயலாளர் தோழர் பாரதி கூட்டத்தில் கலந்துகொண்டார்.
ஜுலை 3 அன்று மாணவர், இளைஞருக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றது. அகில இந்திய மாணவர் கழக மாநிலச் செயலாளர் தோழர் சீதா, இகக(மாலெ) மாவட்டச் செயலாளர் தோழர் ஜானகிராமன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.
கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் புரட்சிகர இளைஞர் கழக மாவட்டப் பொறுப்பாளர் தோழர் ரத்தீஷ் தலைமையில் ஜுலை 10 அன்று புரட்சிகர இளைஞர் கழக கூட்டம் நடைபெற்றது. இகக (மாலெ) மாவட்டச் செயலாளர் தோழர் பாலசுப்பிரமணியன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் தோழர்கள் வேல்முருகன், நாராயணன் கலந்து கொண்டனர். ஜுலை 24 அன்று பகத்சிங் அம்பேத்கர் படிப்பு வட்டக் கூட்டம் நடத்துவதென்றும், செப்டம்பர் 28 டெல்லியில் நடைபெறும் மாணவர் இளைஞர் பேரணிக்கு குறைந்தபட்சம் 10 இளைஞர்கள் செல்வது என்றும் முடிவெடுக்கப்பட்டது.
ஜுலை 10 அன்று விழுப்புரத்தில் புரட்சிகர இளைஞர் கழக, அகில இந்திய மாணவர் கழக தோழர்கள் கலந்துகொண்ட பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. இகக மாலெ மத்திய கமிட்டி உறுப்பினர் தோழர் பாலசுந்தரம், மாவட்டச் செயலாளர் தோழர் எம்.வெங்கடேசன் ஆகியோர் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
(மாலெ தீப்பொறி 2016 ஜுலை 16 – 31 தொகுதி 14 இதழ் 24)

Search