பிரெக்சிட்டும் சில்காட் அறிக்கையும்
எஸ்.குமாரசாமி
(மாலெ தீப்பொறி 2016 ஜுலை 16 – 31 தொகுதி 14 இதழ் 24)
பிரிட்டன்+எக்சிட் (வெளியேறுதல்) என்ற இரண்டு ஆங்கில வார்த்தைகளைச் சேர்த்து பிரெக்சிட் என்ற சொல்லைப் பயன்படுத்துகின்றனர்.
அய்க்கிய ராஜ்ஜியத்தில் (யுனைடெட் கிங்டம்) 4,65,01,241 வாக்காளர்களுக்கு, பிரிட்டன் அய்ரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறலாமா வேண்டாமா என வாக்களிக்கும் உரிமை இருந்தது. 23.06.2016 அன்று நடந்த வாக்கெடுப்பில் 72% பேர் வாக்களித்தனர். அதில் 1,74,10,742 பேர், 52% பிரிட்டன் அய்ரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலக வேண்டும் எனவும், 1,61,41,241 பேர், 48% பிரிட்டன் அய்ரோப்பிய ஒன்றியத்திலேயே இருக்க வேண்டும் எனவும் வாக்களித்தனர்.
பிரிட்டன் அய்ரோப்பிய ஒன்றியத்தில் இருக்க வேண்டும் என்பதற்கு ஆதரவாகவே ஒபாமாவும் நிதி மூலதன அரசுகளும் பிரச்சாரம் செய்தன. பிரிட்டன் அரசியலின் மய்ய நீரோட்டம் வெஸ்ட்மினிஸ்டர் என்றால், அய்ரோப்பிய ஒன்றியத்தின், நேட்டோவின் தலைமையகம் பிரஸ்ஸல்ஸ் ஆகும். பிரஸ்ஸல்சுடன் வெஸ்ட்மினிஸ்டர் அரசியல் நிறுவனங்கள் இணைந்து கொண்டு, பிரிட்டன் அய்ரோப்பிய ஒன்றியத்தை விட்டு நீங்குவது பேரழிவு எனப் பிரச்சாரம் செய்தனர். மேலான ஓர் அய்ரோப்பா, மனிதத் தன்மையுள்ள, நெஞ்சில் ஈரமுள்ள, புகலிடம் தேடி வருபவர்களை அரவணைக்கும் அய்ரோப்பா, சாத்தியம் என நம்பியவர்களும், அத்தகைய அய்ரோப்பாவை விரும்பியவர்களும் வெளியேற வேண்டாம் என்றனர்.
பிரிட்டன் அய்ரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேற வேண்டும் எனச் சொன்னவர்களில் ஏகப் பெரும்பான்மையினர் வலதுசாரி பிற்போக்குவாதிகள் என்பது மறுக்கவோ மறைக்கவோ முடியாத உண்மை. இந்த பிரச்சாரம் அப்பட்டமான இனவாத நிறவெறித் தன்மையும், குடியேறிகள் விரோதத்தன்மையும் கொண்டிருந்தது. இந்தப் பிரச்சாரத்தை, பிரிட்டன் பழமைவாத (கன்சர்வேடிவ்) கட்சியின் முன்னாள் லண்டன் மேயர் போரிஸ் ஜான்சனும், யுனைடெட் கிங்டம் இன்டிபென்டன்ஸ் பார்ட்டியின் நிகல் பாரேஜும் வழிநடத்தினர்.
இவர்கள் கொஞ்சமும் தயங்காமல் பொய்களை, பீதியைப் பரப்பினார்கள். பிரேக்கிங் பாய்ன்ட், அதாவது உடைந்து நொறுங்கும் புள்ளி என்ற தலைப்பில், ஒரு பெரிய அந்நிய கூட்டம் வேலியை உடைத்துக் கொண்டு பிரிட்டனுக்குள் நுழையத் தயராய் இருப்பதாய் ஒரு சுவரொட்டி ஒட்டினார்கள். இந்த வெறுப்பு பிரச்சாரத்துக்கு பிரிட்டனின் தொழிலாளர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜோ காக்ஸ் பலியானார். பிரிட்டன் அய்ரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகினால், தேசிய சுகாதார சேவைக்கு 350 மில்லியன் பவுண்ட் மிச்சமாகும் என்று சொல்லிவிட்டு, பொது வாக்கெடுப்பு நடந்த மறுநாளே அந்தக் கூற்றை போரிஸ் ஜான்சனும் நிகல் பாரேஜும் மறுத்தனர்.
பிரெக்சிட் பிரச்சனையில் நிச்சயமாய் எவரும் அய்ரோப்பிய ஒன்றியத்தைப் பற்றி மாயைகள் கொள்ள முடியாது. நிதி மூலதன உலகின் மூன்று முனைகளில், அய்க்கிய அமெரிக்கா ஒரு முனை என்றால், ஜப்பான் இரண்டாம் முனை ஆகும். அய்ரோப்பிய மத்திய வங்கி, அய்ரோப்பிய ஒன்றியம் ஆகிய பொருளாதார அரசியல் அதிகாரக் குவி மய்யங்களுடன், நேட்டோ என்ற இராணுவ அதிகார குவிமய்யமும் பிரஸ்ஸல்ஸில்தான் உள்ளன. அய்ரோப்பிய ஒன்றியத்தில் ஜெர்மனி, பிரான்ஸ், பிரிட்டன், இத்தாலி, நெதர்லாண்ட், நார்வே, ஸ்வீடன், டென்மார்க் போன்ற நாடுகள் பலம் வாய்ந்தவை. கிரீஸ், போர்ச்சுக்கல் ஸ்பெயின் மற்றும் கிழக்கு அய்ரோப்பிய நாடுகள் பலவீனமானவை.
கிரீஸ் மக்கள், பிரஸ்ஸல்ஸ் திணித்த சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக, அய்ரோப்பிய ஒன்றியம் தங்களது இறையாளுமையையே பறித்ததற்கு எதிராக, பொது வாக்கெடுப்பில் துணிந்து முடிவு செய்தனர். அதனைச் சிறிதும் பொருட்படுத்தாமல், கிரீஸ் மீது கடுமையான சுமைகளையும் சிக்கன நடவடிக்கைகளையும், மிகவும் மரியாதைக் குறைவான விதத்தில் அய்ரோப்பிய ஒன்றியம் திணித்தது. அய்ரோப்பிய ஒன்றியம், தனது உறுப்பு நாடுகள் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 3% மேல் நிதிப் பற்றாக்குறை வைக்கக் கூடாது என நிர்ப்பந்தித்தது. பொது முதலீடும் சமூக செலவினங்களும் பாதிக்கப்பட்டன. சிக்கன நடவடிக்கைகள் புகுந்தன. மக்களுக்கான அய்ரோப்பா என்றில்லாமல், லாபங்களுக்கான அய்ரோப்பா, போருக்கான அய்ரோப்பா என்ற நவதாராளவாத ஏகாதிபத்திய வழித்தடத்திலேயே அய்ரோப்பிய ஒன்றியம் பயணம் செய்கிறது. ஆக, பிரெக்சிட் ஆதரவு பிரச்சாரம் செய்த அமைப்புக்களை விமர்சனம் செய்பவர்கள், அய்ரோப்பிய ஒன்றியம் பால் பரிவு கொண்டவர்கள் என்று ஆகிவிடாது.
பிரிட்டன் அய்ரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேற வேண்டும் என வாக்களித்தவர்கள் யார்?
தொழிலாளர் கட்சியின் தலைவர் ஜெரிமி கோர்பின் மிகச் சரியாகவே, மார்க்ரெட் தாட்சர் காலத்திலிருந்து இன்றைய உலகமயக் காலம் வரை, பாதிப்புக்கு உள்ளானவர்கள், வறியவர்கள், முதியோர் அய்ரோப்பிய ஒன்றியத்திற்கும் வெஸ்ட்மினிஸ்டர் நிறுவனங்களுக்கும் எதிராக வாக்களித்ததாகக் குறிப்பிடு கிறார். சுரங்கத் தொழில் துவங்கி தொழில்மயம் அகற்றப்பட்ட பகுதிகள், தனியார்மயம் நடந்த தொழில்கள், சங்கங்கள் வேட்டையாடப்பட்ட இடங்கள், வேலைகள் ஒழித்துக் கட்டப்பட்ட இடங்கள், குறைகூலி வேலைகள் புகுத்தப்பட்ட பகுதிகள், பொது முதலீடு சமூக செலவினங்கள் குறைப்பால் பாதிக்கப்பட்ட பகுதிகள், பிரிட்டன் ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும் என வாக்களித்தன. 18 வயது முதல் 24 வயது உள்ளவர்களில் 72% பேர், பல கலாச்சாரத்தினர் வாழும் பெருநகரங்கள், தொழில்முறையாளர்கள், உயர் தொழில்நுட்ப மேல் பதவியினர், ஆக்ஸ்ஃபோர்ட் கேம்பிரிட்ஜ் வட்டாரங்கள், பிரிட்டன் அய்ரோப்பிய ஒன்றியத்தில் நீடிக்கலாம் என்றனர். கலாச்சாரப் பன்மை நிலை இல்லாத, சரியும் அழியும் தொழிலாளி வர்க்கப் பகுதிகள் வெளி யேற வேண்டும் என்றனர். ஓய்வூதியதாரர்கள் வெளியேற வாக்களித்தனர். ஸ்காட்லாண்ட், லண்டன், வடக்கு அயர்லாண்ட் ஒன்றியத்தில் தொடர வாக்களித்தனர். ஆக பூகோளரீதியாக, வயதுரீதியாக, வர்க்கரீதியாக பிரிட்டிஷ் மக்கள் பிளவுண்டு வாக்களித்தனர்.
வாக்கெடுப்பு நடந்த காலத்தில் அய்ரோப்பா எப்படி இருந்தது?
2015ல் மட்டும், மத்தியதரைக் கடல் வழியாக, அய்ரோப்பாவுக்குள் 3 லட்சம் அகதிகள் நுழைந்தனர். தலாய் லாமா, ஒரு ஜெர்மன் பத்திரிகையிடம், ஜெர்மனி ஓர் அரபு நாடாக முடியாது என்றார். ஜெர்மனியில் ஆகக் கூடுதல் எண்ணிக்கையில் அந்நிய நாட்டவர் நுழைந்துள் ளனர் என்றார். அய்ரோப்பா நெடுக, இனவாத, நிறவெறி, இசுலாமிய எதிர்ப்புக் கருத்துக்கள் நஞ்சாய்ப் பரவின. ஹங்கேரி, ஸ்லோவேகியா போன்ற முன்னாள் சோசலிச நாடுகள், வலதுசாரி நிகழ்ச்சிநிரலில் முதல் இடம் பெற்றன.
பிரிட்டனில் இசுலாமிய எதிர்ப்பு இனவாத கருத்துக்கள் மிகவும் திறமையாக பரப்பப்பட்டன. அய்ரோப்பிய ஒன்றியத்தில் 7ணீ கோடி இசுலாமிய மக்கள் தொகை கொண்ட துருக்கி சேர வாய்ப்பு உள்ளது, கிறிஸ்தவ அய்ரோப்பா இசுலாமிய அய்ரோப்பா ஆகிவிடும் என மிரட்டினார்கள். தொழிலாளர் கட்சியில் ஜெரிமி கோர்பினை எதிர்ப்பவரும், பிரிட்டன் அய்ரோப்பிய ஒன்றியத்தில் நீடிக்க வேண்டும் என வலியுறுத்துபவருமான ஹிலாரி பென், பிரிட் டன் அய்ரோப்பிய ஒன்றியத்தில் இருப்பது, துருக்கி அய்ரோப்பிய ஒன்றியத்துக்குள் நுழைவதைத் தடுக்கும் என்றார். இரண்டு முகாம்களுமே இசுலாமிய பூச்சாண்டி காட்டினர். இரண்டு முகாம்களுக்கும் ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட கிறிஸ்துவ அய்ரோப்பா, இன்று இசுலாமிய துருக்கியை அய்ரோப்பிய ஒன்றியத்தில் அனுமதிக்காது என்று நன்கு தெரியும்.
பிரிட்டனுக்கு, நீண்ட, பலகலாச்சார பாரம்பரியம் உண்டு. இப்போதைய லண்டன் மாநகர மேயர் பாகிஸ்தான் வம்சாவழியினரான சாகித் கான் ஆவார். பிரிட்டனின் காலனிகளில் இருந்து ஆசியர்கள், கருப்பினத்தவர்கள் 50 ஆண்டுகளுக்கும் முன்பிருந்தே பிரிட்டனில் குடியேறி வருகிறார்கள். சோவியத் யூனியன் சரிவிற்குப் பிறகு நேட்டோவின் நாசகர பால்கன் போர்களுக்குப் பிறகு, கடைசி அலை கிழக்கு அய்ரோப்பிய குடியேற்றம் நடந்தது.
பிரிட்டனின் சாமான்ய மக்கள், பிரிட்டன் அரசியலில் அதிருப்தி கொண்டுள்ளனர். பிரிட்டனின் பொருளாதாரம் தமக்கு ஏதும் செய்யவில்லை எனக் கருதுகின்றனர். நாம் பின் தங்கி உள்ளோம், அரசியல்வாதிகளுக்கு நம் மீது அக்கறை இல்லை என்று கருதும் மக்களை, குடியேறியவர்களால் வாடகை உயர்ந்தது, சம்பளம் சரிந்தது, வசதிகள் குறைந்தது என வலதுசாரி பிரச்சாரத்தால், நம்பவைக்க முடிந்துள்ளது. மக்கள் வாழ்க்கை, கீழ்நோக்கிய ஓட்டப் பந்தயமாக இருந்ததால், ஆசியர்கள் அதிகம் வாழும், லீய்செஸ்டர், ஷெஃபீல்ட், பர்மிங்ஹாம் பகுதிகள் கூட 30% அளவுக்கு வெளியேற வாக்களித்தன.
பிரிட்டனின் முற்போக்கு இடதுசாரிகள், மக்களின் முடிவுகளுக்குக் கட்டுப்பட வேண் டும். அவற்றை ஏற்க வேண்டும். அய்ரோப்பா முழுவதும் போல் பிரிட்டனிலும், வலதுசாரி ஜனரஞ்சகவாதம் வளர்வதைக் கணக்கில் கொள்ள வேண்டும். வாக்கெடுப்பை மதிக்கவில்லை என்று தோற்றம் தந்தால், அது வலதுசாரி சக்திகள் பலப்பட உதவும்.
குடியேறுபவர்கள் மற்றும் அகதிகள்பால் அரவணைப்புடன் ஒருமைப்பாடு தெரிவிக்கும், நிறவெறி, இனவெறி எதிர்ப்பில் ஊன்றி நின்று, சிக்கன நடவடிக்கைகளுக்கும் நவதாராளவாதத்துக்கும் எதிராகப் போராடும் ஓர் உண்மையான மக்கள் மாற்றின் மூலமே, எழுகிற வலதுசாரி சக்திகளை எதிர்கொள்ள முடியும்.
சில்காட் அறிக்கை
பிரிட்டனில் இனவாத, இசுலாமிய எதிர்ப்புப் பிரச்சாரம் பிரெக்சிட் வாக்குக்கு உதவியது. பல இனவாதக் கட்சிகள் அய்ரோப்பா நெடுக மக்கள்திரள் செல்வாக்கு பெறுகின்றன. ஆப்கன் போர், இராக் போர், லிபியா, ஆப்பிரிக்கா தலையீடு என்ற ஏகாதிபத்திய தலையீடுகள்தான், ஆப்பிரிக்க இசுலா மிய அகதிகளை உருவாக்கின. இந்த எல்லாப் போர்களுக்கும் தளபதி, அய்க்கிய அமெரிக்கா. அய்க்கிய அமெரிக்காவின் முதன்மைக் கூட்டாளியாக பிரிட்டனை மாற்றியவர் டோனி பிளேயர். இந்த எல்லாப் போர்களுக்கும் வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த நாடுகள் (நேட்டோ) அமைப்பில் இடம் பெற்றுள்ள ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி போன்ற நாடுகளும் பொறுப்பாவார்கள்.
வரலாற்றின் ஒரு முக்கிய முந்தைய நிகழ்வு ஒன்றை முதலில் காண்பது நல்லது. உலகில் நடந்த இரண்டு மகாயுத்தங்களில் மிகக் குறைவாக இழப்புக்களைச் சந்தித்து, மிக அதிகமாக ஆதாயங்கள் அடைந்தது அய்க்கிய அமெரிக்கா. இரண்டாம் உலகப் போரில் ஜெர்மானிய - இத்தாலிய - ஜப்பானிய - பாசிச அச்சு, உலகை மறுபங்கீடு செய்ய உருவானது. பிரிட்டன் நீங்கலாக அய்ரோப்பா ஜெர்மனி வசம் வந்தது. ஒரு முனையில் ஆக்கிரமிப்புக்கு வெளியே பிரிட்டன் இருந்தது. மறுமுனையில் மாஸ்கோ வரை சோவியத் யூனியனை ஜெர்மனி ஆக்கிரமித்திருந்தது.
1941ல் பிரிட்டன், சோவியத் யூனியன் ஒப்பந்தம் உருவானது. சோவியத் யூனியன் என்ற ஒரு போர்முனை தாண்டி, இரண்டாவது போர்முனையை நிறுவ, 1942ல் பிரிட்டன் சோவியத் யூனியனுடன் கூட்டறிக்கை வெளியிட்டது. ஆனால் 2.7 கோடி பேரின் உயிரிழப்பும் வீரமும் தியாகமும் பேரிழப்பும் நிறைந்த போரில், ஸ்டாலின்கிராடில், ஜெர்மனியின் கதையை சோவியத் யூனியன் முடித்த பிறகுதான், ஜ÷ன் 1944ல் அய்ரோப்பாவின் நார் மன்டியில், இங்கிலாந்தும் அய்க்கிய அமெரிக்காவும் இரண்டாவது போர் முனையை நிறுவின. அய்க்கிய அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து பிறகு அய்க்கிய அமெரிக்காவின் அதிபரான ஹாரி ட்ரூமன் அப்போது சொன்னார்: ‘ஜெர்மனி வெற்றி பெறுவது போல் தோன்றினால் நாம் ரஷ்யாவுக்கு உதவ வேண்டும். ரஷ்யா வெற்றி பெறுவது போல் தோன்றினால் ஜெர்மனிக்கு உதவ வேண்டும். இந்த வழியில் இரண்டு நாடுகளும் எவ்வளவு அதிகம் சாகிறார்களோ, அவ்வளவு சாகட்டும்.’
ஜ÷லை 1941ல் பிரிட்டன் விமான தயாரிப்பு அமைச்சர் கர்னல் மூர், ‘ஜெர்மனியும் சோவியத் யூனியனும் ஓய்ந்து போகட்டும், அதற்குப் பிறகு நாம் அய்ரோப்பாவில் ஆதிக்கம் செலுத்தலாம்’ என்றார். ஜனநாயகத்தின் பாது காவலனாக நடிக்கும் ஆங்கிலோ - அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கொலைகார நயவஞ்சக முகம் 1941லிருந்தே, அம்பலமாகி வருகிறது.
இப்போதைய அய்ரோப்பாவும் உலகமும் சந்திக்கிற அகதிகள் பிரச்சனைகள் அனைத்தும் ஏகாதிபத்தியப் போர்களால் உருவானவை. பின் லேடன், முல்லா ஓமர் ஆகிய இருவரும்தான் இரட்டைக் கோபுரத் தாக்குதல்களுக்கு பொறுப்பு, அவர்களைப் பிடிக்கப் போகிறேன் என்றும் சொல்லித்தான் ஆப்கானிஸ்தான் மீது அய்க்கிய அமெரிக்கா படையெடுத்தது. கடைசி வரை அந்த இருவரையும் பிடிக்கவில்லை. இராக்கில் பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாகப் பொய் சொல்லி, இராக் மீது அய்க்கிய அமெரிக்கா படையெடுத்தது. பிரிட்டன் கூடவே நின்றது. 11.09.2001 இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்கெதிராகத்தான் அய்க்கிய அமெரிக்கா இசுலாமிய பயங்கரவாதத்திற்கெதிரான போரை தொடுத்துள்ளதாகவும், தன்னோடு நிற்காதவர்கள் எல்லாம் பயங்கரவாதத்திற்கு துணை நிற்பவர்கள் எனவும் சொன்னது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உண்மை நோக்கம், எண்ணெய் எரிசக்தி வளங்களைக் கைப்பற்றுவது, மேற்கு ஆசிய ஆக்கிரமிப்பாளரான இஸ்ரேலை முட்டுக் கொடுத்து நிறுத்துவது, புவி அரசியல் சம நிலையைத் தனக்குச் சாதகமாக மாற்றிக் கொள்வது என்பதாகவே இருந்தது. 1941 முதல் 1944 வரை ஹிட்லர் சோவியத் யூனியன் மீது பேரழிவைத் திணித்தபோது, தனது ஒப்பந்தத்தை மீறி வேடிக்கை பார்த்த அய்க்கிய அமெரிக்காவும் அதனுடன் நின்ற பிரிட்டனும், அய்நா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் இல்லாமலே, இப்போது தமது நலன்களுக்காக இராக்கை ஆக்கிரமித்தன.
17.03.2003 அன்று பிரிட்டனின் அமைச்சரவை, இராக் மீது போர் தொடுக்க முடிவெடுத்தது. 18.03.2003ல் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் ஆக்கிரமிப்புப் போருக்கு ஆதரவாக 412 பேரும் எதிராக 139 பேரும் வாக்களித்தனர். பிரிட்டன், அமெரிக்காவோடு சேர்ந்து ஆக்கிரமிப்புப் போரில் இறங்கியது. பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் போர் வேண்டாம் என்றனர். பிரிட்டனில் 10 லட்சம் பேர் திரண்டு போர் வேண்டவே வேண்டாம் என்றனர். சர்வதேசக் கருத்தையும், சொந்த நாட்டு மக்கள் ஆணையையும் மீறி டோனி பிளேர் தலைமையிலான பிரிட்டிஷ் அரசு போரில் ஈடுபட்டது. இந்தப் போரில் 1ணீ லட்சத்துக்கும் மேலான ஈராக்கியர்கள் கொல்லப்பட்டனர். 10 லட்சத்திற்கும் மேலான ஈராக்கியர்கள் வீடிழந்து வெளியேறினார்கள். பிரிட்டிஷ் வீரர்கள் இந்த அநீதியான போரில் உயிரையும் உடல் உறுப்புக்களையும் இழந்தனர். புராதன மெசபடோமிய நாகரிக சுவடுகள் தரைமட்டமாக்கப்பட்டன. இந்த ஏகாதிபத்திய வழித்தடத்தில் ஆங்கிலோ அமெரிக்க ஏகாதிபத்தியம், இதர அய்ரோப்பிய நாடுகளையும் சேர்த்துக் கொண்டு லிபியாவில் கடாஃபியைக் கொன்றது. வந்தேன், கண்டேன், கொன்றேன் என்றார் ஹிலாரி கிளிண்டன். (கடாஃபி காலம் வரை அய்ரோப்பாவிற்குச் செல்லும் ஆப்பிரிக்கர்கள் எண்ணிக்கை கட்டுக்குள் இருந்தது. கடாஃபியின் கொலைக்குப் பிறகு லிபியாவில் தோன்றிய நிச்சயமற்ற நிலைமைகள்தான் அகதிகள் போக்குவரத்தை அதிகரித்துள்ளது).
இதே ஏகாதிபத்திய நாடுகள்தான், சிரியாவில் ஜனநாயகத்தின் காவலர்கள் என நாடகமாடி, அசத் ஆட்சியை அகற்றப் பார்க்கின்றன. ஆட்சி மாற்றம் என்று சொல்லி அகற்றப்பட்ட அரசுகளால் ஏற்பட்ட வெற்றிடத்தைக் கைப்பற்ற, ஏகாதிபத்தியம் வழங்கிய ஆயுதங்களுடன், அய்எஸ்அய்எஸ் பூதம் புறப்பட்டுள்ளது.
சர்வதேசக் கருத்துக்கும் மக்கள் உணர்விற்கும் மாறாக டோனி பிளேர் நாட்டைப் பேரழிவுப் போர் என்ற பாதையில் வழிநடத்தியதற்குக் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. சர் ஜான் சில்காட் தலைமையில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. சில்காட் விசாரணையில் மார்ச் 2003ல் ஈராக் மீது படையெடுத்தது சரிதானா, அவசியம்தானா என்ற கேள்வியும், படையெடுப்புக்கு அடுத்து எழுந்த விளைவுகளுக்கு பிரிட்டன் மேலும் சிறப்பான விதத்தில் தயாராய் இருந்திருக்க வேண்டாமா, என்ற கேள்வியும் விவாதிக்கப்பட்டன. சர் ஜான் சில்காட் தமது அறிக்கையை 06.07.2006 அன்று வெளியிட்டார்.
சில்காட் அறிக்கை, பிரிட்டன் பிரதமர் டோனி பிளேர், ஜ÷லை 2002லேயே ஜார்ஜ் புஷ்ஷ÷க்கு ‘எது நடந்தாலும் நான் உங்களோடு இருப்பேன்’ எனக் கடிதம் எழுதியதை அம்பலப்படுத்தியது. இந்தக் கடிதம் அப்போதைய அயல்உறவுத் துறை அமைச்சர் ஜாக்ஸ்ட்ராவுக்கு பாதுகாப்பு அமைச்சர் ஜியாப் ஹுனுக்கு, இராணுவத் தலைமைக்குக் காட்டப்படவில்லை. சில்காட் அறிக்கை, ஈராக்கிடம் பேரழிவு ஆயுதங்கள் இருந்ததாக நிச்சயத் தன்மையுடன் சொல்லப்பட்டது நியாயம் அல்ல என்றது. வெளிப்படையான எச்சரிக்கைக்குப் பிறகும், படையெடுப்புக்குப் பிந்தைய விளைவுகள் பற்றிக் குறைத்து மதிப்பிடப்பட்டது என்றும் சதாம் இல்லாத ஈராக் தொடர்பான திட்டமிடலும் தயாரிப்புக்களும் எவ்விதத்திலும் போதாதவை என்றும் குறிப்பிட்டது. அரசாங்கம், தான் முன்வைத்த குறிக்கோள்களில் தோல்வி கண்டது என சில்காட் அறிக்கை திட்டவட்டமாகச் சொன்னது. 18.03.2003 அன்று டோனி பிளேர், பிரிட்டிஷ் நாடா ளுமன்றத்தில், பெருந்திரள் மக்களைக் கொல்லக் கூடிய பேரழிவு ஆயுதங்கள் பயங்கரவாதிகளிடம் இருப்பதாகவும், அவற்றால் பிரிட்டனின் தேசப் பாதுகாப்புக்கு ஆபத்து என்றும் சதாம் உசேனின் ஆயுதங்கள் பிரிட்டிஷ் குடி மக்களுக்கு பேராபத்து என்றும் துணிந்து பொய் சொன்னார்.
ஈராக் மக்கள் இந்தப் போருக்கும் பயங்கரவாதத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், இந்தப் போர் அநியாயமாக ஏகாதிபத்திய நாடுகளின் அரசுகளால் தொடுக்கப்பட்டது என்றும் கருதுகிறார்கள். பிரிட்டன் ஈராக் மக்களிடம் மன்னிப்பு கேட்டு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் டோனி பிளேரும் புஷ்ஷும் போர்க் குற்றவாளிகளாக விசாரணைக்கு உள்ளாக்கப்பட வேண்டும் என்றும் விரும்புகிறார்கள்.
இப்போதும் அய்க்கிய அமெரிக்கா, நேட்டோவை வைத்துக் கொண்டு ரஷ்யாவை அச்சுறுத்துகிறது. இது போர் வெறி நடவடிக்கை என ஜெர்மனி குற்றம் சுமத்துகிறது. சில்காட் அறிக்கை, அய்க்கிய அமெரிக்காவுக்கும் அதன் கூட்டாளிகளுக்கும் எச்சரிக்கையாக அமைய வேண்டும். பிரிட்டனின் லேபர் கட்சிக்கு தலைமை தாங்கும், போர் எதிர்ப்பு, சிக்கன நடவடிக்கைகள் எதிர்ப்பு, மக்கள் சார்பு போராளியான ஜெரிமி கார்பின், மார்ச் 2003ல் ஈராக் மீது போர் தொடுத்த பேரழிவுமிக்க முடிவுக்காக, ஈராக் மக்களிடம், போரில் உயிரிழந்த, காயமுற்ற, வாழ்விழந்த மக்களிடம், தவறான போருக்கு அனுப்பப்பட்டு கொல்லப்பட்ட ஊனமுற்ற பிரிட்டிஷ் இராணுவ வீரர் குடும்பங்களிடம், தம் கட்சி சார்பாக மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார். ‘எது நடந்தாலும் உங்களோடு நிற்பேன்’ என இரகசியமாக புஷ்ஷ÷க்கு வாக்கு தந்து, போரில் இறங்கி, ஜனநாயகத்தை சிறுமைப்படுத்தி சீரழித்ததற்காக, பிரிட்டிஷ் மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
அய்ரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறிய பிரிட்டன், போர் மற்றும் நவதாராளவாதத்திடம் இருந்தும் வெளியேற வேண்டும்.