காஷ்மீர் மக்கள் மீதான ஒடுக்குமுறையைக் கண்டித்தும் தமிழக வழக்கறிஞர் போராட்டத்துக்கு ஒருமைப்பாடு தெரிவித்தும் ஆர்ப்பாட்டம்
ஜுலை 17 அன்று திருநெல்வேலியில் காஷ்மீர் மக்களுக்கு நீதி வேண்டும். அங்கே குண்டுகளும் தெறி குண்டுகளும் வேண்டாம். காஷ்மீருக்கு அரசியல் தீர்வு வேண்டும்.
ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரங்கள் சட்டம் ரத்து செய்யப்பட வேண்டும் என்ற பதாகைகளை உயர்த்திப் பிடித்தும், தமிழகத்தில் வழக்கறிஞர்களுக்கு எதிரான ஜனநாயக விரோத சட்ட விதிகள் திருத்தம் திரும்பப் பெறப்பட வேண்டும் என வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்ட நிகழ்ச்சிக்கு இகக(மாலெ) மாவட்டச் செயலாளர் தோழர் சங்கரபாண்டியன் தலைமை வகித்தார். இந்திய அரசு, காஷ்மீர் வேண்டும் ஆனால் காஷ்மீர் மக்கள் வேண்டாம் என்கிறது என்று குறிப்பிட்ட இகக(மாலெ) மாநிலச் செயலாளர் தோழர் குமாரசாமி, காஷ்மீர் பூமி இந்தியாவின் ஓர் அங்கம் என்று சொல்லும்போது காஷ்மீர் மக்களை எதிரிகளாக பாவிக்கக் கூடாது என்றார். குண்டுகளுக்கும், தெறி குண்டுகளுக்கும் பதிலாக காஷ்மீர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண வேண்டும் என்றார்.
ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரங்கள் சட்டம் ரத்து செய்யப்பட வேண்டும் என்ற பதாகைகளை உயர்த்திப் பிடித்தும், தமிழகத்தில் வழக்கறிஞர்களுக்கு எதிரான ஜனநாயக விரோத சட்ட விதிகள் திருத்தம் திரும்பப் பெறப்பட வேண்டும் என வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்ட நிகழ்ச்சிக்கு இகக(மாலெ) மாவட்டச் செயலாளர் தோழர் சங்கரபாண்டியன் தலைமை வகித்தார். இந்திய அரசு, காஷ்மீர் வேண்டும் ஆனால் காஷ்மீர் மக்கள் வேண்டாம் என்கிறது என்று குறிப்பிட்ட இகக(மாலெ) மாநிலச் செயலாளர் தோழர் குமாரசாமி, காஷ்மீர் பூமி இந்தியாவின் ஓர் அங்கம் என்று சொல்லும்போது காஷ்மீர் மக்களை எதிரிகளாக பாவிக்கக் கூடாது என்றார். குண்டுகளுக்கும், தெறி குண்டுகளுக்கும் பதிலாக காஷ்மீர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண வேண்டும் என்றார்.
தமிழக வழக்கறிஞர் போராட்டம் பற்றிப் பேசும்போது, பொதுவாக வழக்கறிஞர்கள் மக்களுக்காக நீதி கேட்டு நீதிமன்றக் கதவுகளை தட்டுவது வழக்கம், ஆனால் வழக்கறிஞர்கள் நீதி கேட்டு நீதிமன்றங்களைப் புறக்கணிக்க வேண்டிய நிலை உள்ளது என்றார். ஜனநாயகத்துக்கான வழக்கறிஞர் போராட்டத்துக்கு ஆதரவாக இகக(மாலெ)யும், ஏஅய்சிசிடியுவும் துணை நிற்கும் என்று குறிப்பிட்டார்.
ஏஅய்சிசிடியு மாநிலக்குழு கூட்டத்திற்கு இடையே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநிலம் முழுவதும் இருந்து வந்திருந்த மாநிலக்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
திருநெல்வேலியில் அணு உலைக்கு எதிராக அகில இந்திய மக்கள் மேடையும் அணு சக்திக்கெதிரான மக்கள் இயக்கமும் இணைந்து ஆர்ப்பாட்டம்
ஜுலை 16 அன்று திருநெல்வேலியில் அகில இந்திய மக்கள் மேடையின் தேசியக் கவுன்சில் உறுப்பினர் தோழர் ரமேஷ் தலைமையில் கூடங்குளத்தில் அனைத்து அணு உலைகளையும் மூட வேண்டும், அரசு, அணு உலை பற்றிய வெள்ளையறிக்கை வெளியிட வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்ட முதலாவது அணு உலையே இயங்காதபோது இரண்டாவது அணு உலை வெற்றிகரமாக செயல்பாட்டுக்கு வந்து விட்டதாக அரசு சொல்வது கேலிக் கூத்தானது என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறினார்கள். இகக(மாலெ) மாநிலச் செயலாளர் தோழர் குமாரசாமி, அணு சக்திக்கெதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் சுப.உதயகுமார் உரையாற்றினர். தோழர் குமாரசாமி பேசும்போது நாங்கள் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் அல்ல என்றும் யாருக்கான வளர்ச்சி என்ன விலை கொடுத்து வளர்ச்சி என்பது முக்கியமானது என்றும் குறிப்பிட்டார். அணு உலைகள் மூடப்படும் வரை மக்கள் போராட்டம் தொடரும் என்றார். தோழர் சுப.உதயகுமார் அணு உலைக்கு எதிரான போராட்டக்காரர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட ஒடுக்குமுறையை குறிப்பிட்டு, நடந்த போராட்டங்களை ஆவணமாக்கி ஒரு பேழையில் வைத்து புதைக்கும் போராட்டம் நடத்தப்பட உள்ளதாகவும் செப்டம்பர் 2 அகில இந்திய வேலை நிறுத்தப் போராட்டத்தில் அணு ச்கதிக்கு எதிரான மக்கள் இயக்கமும் கலந்து கொள்ளும் என்றும் அறிவித்தார். ஆர்ப்பாட்டத்தில் ஆதித் தமிழர் கட்சியின் கலைக்கண்ணன், தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியின் அப்துல் ஜப்பார், இகக(மாலெ) மாவட்டச் செயலாளர் தோழர் சங்கர பாண்டியன், அகில இந்திய மக்கள் மேடையின் மாநில பிரச்சாரக்குழு உறுப்பினர் தோழர் தேசிகன், ஏஅய்சிசிடியு மாவட்டச் செயலாளர் தோழர் கணேசன், புரட்சிகர இளைஞர் கழகத்தின் தோழர் சுந்தர்ராஜன், கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தில் சிறை சென்ற தோழர் சுந்தரி உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
ஜனநாயக விரோத வழக்கறிஞர் சட்ட விதிகள் திருத்தத்தை உடனடியாக திரும்பப் பெறு!
வழக்கறிஞர்கள் இடைநீக்க உத்தரவுகள் அனைத்தையும் ரத்து செய்!!
இந்தியாவிலேயே முதல்முறையாக, தமிழ்நாட்டில், வழக்கறிஞர்களை அச்சுறுத்தும், சுதந்திரமாக வழக்காடும் உரிமையை பறிக்கும் வழக்கறிஞர்கள் சட்ட விதிகள் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஜனநாயக விரோத எதேச்சதிகார சட்டத் திருத்தத்திற்கு எதிராக கிட்டத்தட்ட 2 மாத காலமாக வருமானம் இழந்து வழக்கறிஞர்கள் தமிழகம் முழுவதும் போராடி வருகிறார்கள்.
பேரணி, ஆர்ப்பாட்டம் உண்ணாவிரதம் மனிதச் சங்கிலி, அரசாணை எரிப்பு என்ற போராட்டங்களின் தொடர்ச்சியாக சென்னை உயர்நீதிமன்ற முற்றுகை போராட்டம் ஜுலை 25 அன்று நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்ட பின்னணியில் ஜுலை 24 அன்று தமிழகம் முழுவதும் 126 வழக்கறிஞர்கள் அகில இந்திய பார் கவுன்சிலால் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்க மாநில அமைப்பாளர் தோழர் பாரதியும் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். உயர்நீதிமன்றத்தின், கீழமை நீதிமன்றங்களின் பல்வேறு நிர்வாகிகள் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.
இந்தப் பின்னணியில் தமிழகம் முழுவதுமிருந்து வந்திருந்த பல்லாயிரக்கணக்கான வழக்கறிஞர்கள் ஜுலை 25 அன்று சென்னை உயர்நநீதிமன்ற முற்றுகை போராட்டத்தில் கூடியபோது ஆக்ரோசமும் ஆவேசமும் வெளிப்பட்டது. உயர்நீதிமன்றத்துக்கு 5 அடுக்கு பாதுகாப்புப் போடப்பட்டு தடுப்பரண்கள் அமைக்கப்பட்டிருந்தன.
அன்று காலையிலிருந்தே தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் ஆண்களும், பெண்களுமாக வழக்கறிஞர்கள் உயர்நீதிமன்றம் முன்பு குவியத் துவங்கினர். கோரிக்கை அட்டைகளுடனும் கேலிச் சித்திரங்களுடனும் பதாகை தாங்கி வந்தார்கள். அன்று இரவு 7 மணிக்குப் பிறகும் முற்றுகையை கைவிட மறுத்தனர். வழக்கறிஞர் மீதான வரலாறு காணாத ஒடுக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள பின்னணியில் ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்க மாநில அமைப்பாளர் தோழர் பாரதி உட்பட பலரும் எழுச்சி மிகு உரையாற்றினர். முற்றுகைப் போராட்டத்தை மூத்த வழக்கறிஞர்கள் ஆர்.வைகை, என்.ஜிஆர்.பிரசாத், பியுசிஎல் சுரேஷ், ஆகியோர் வாழ்த்திப் பேசினர். போராட்டத்தால் சென்னையில் அசாதாரண சூழல் இருந்தது. இப்போராட்டத்தில் இகக(மாலெ) மாநிலக்குழு உறுப்பினர்கள் வழக்கறிஞர்கள் ரமேஷ், தேசிகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
காவல்துறை தடுப்பரண்களை மீறிச் செல்ல முயன்றபோது தள்ளுமுள்ளு சூழலும் ஏற்பட்டது. இரவு 7 மணிக்கு மேல் அங்கேயே முற்றுகையைத் தொடர ஆயத்தமானபோது காவல்துறை கைது செய்யப் போவதாக அறிவித்தது. ஆயிரக்கணக்கான வழக்கறிஞர்கள் கைதாகினர். பின்னர் இரவு விடுவிக்கப்பட்டனர். அன்று இரவே தோழர் பாரதி உட்பட சென்னை வழக்கறிஞர்கள் பலர் மீது, சட்டவிரோதமாக கூடியது, அரசு ஊழியரை வேலை செய்ய விடாமல் தடுத்தது, கலகம் செய்தது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்கத் தோழர்களின் முன்முயற்சிகளும் முற்றுகைப் போராட்ட வெற்றிக்கு உந்துதலைக் கொடுத்தன. வழக்கறிஞர்கள் அரசின் தாக்குதலையும் சந்தித்து வருகின்றனர்.
சட்டத் திருத்தம் திரும்பப் பெறும்வரையும், இடைநீக்க உத்தரவுகள் ரத்து செய்யப்படும் வரையும் போராட்டம் ஓயாது என்று வழக்கறிஞர்கள் உறுதியுடன் இருக்கின்றனர்.