தலையங்கம்
தமிழ்நாட்டின் எதிர்காலம் பட்டினி கிடக்கிறது
திருபெரும்புதூரில் அய்க்கிய அமெரிக்க நிறுவனம் ஒன்றில் வேலை செய்து இப்போது வெளியேற்றப்பட்டிருக்கும் பயிற்சி தொழிலாளி ஒருவரை சமீபத்தில் சந்திக்க நேர்ந்தது.
அவர் வேலையில் இருந்து வெளியேற்றப்பட்டவராக இருந்தாலும் அவர் எந்த நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார் என்று வெளிப்படையாகச் சொன்னால், இந்தத் தகவல் எப்படி வெளியில் போனது என்று ஆய்ந்து அதற்குக் காரணமான தொழிலா ளர்களுக்கு வேலை பறிபோகும். எனவே, நிறுவனத்தின் பெயர், தொழிலாளியின் பெயர் என எதையும் குறிப்பிட வாய்ப்பில்லை.
அவருடன் அவரைப் போல் வெளியேற்றப்பட்ட இன்னும் சில பயிற்சித் தொழிலாளர்களும் இருந்தார்கள். அவர்கள் 21 முதல் 23 வயது உள்ளவர்கள். அவர்களுக்கு ரூ.8,000 மாதச் சம்பளம் கிடைத்துக் கொண்டிருந்தது. அனைவரும் வெளி மாவட்டங்களில் இருந்து வந்து வேலை செய்பவர்கள். 10 பேர் சேர்ந்து ஓர் அறை எடுத்துத் தங்கியிருக்கிறார்கள். வீட்டுக்கு மாதம் ரூ.5,000 அனுப்புவதாகச் சொன்னார்கள். ரூ.3,000ல் திருபெரும்புதூரில் வாழ முடியுமா என்று கேட்டபோது, சில வேளைகள் பட்டினி கிடக்க வேண்டியிருக்கும், ஊருக்கு பணம் அனுப்ப வேண்டும் என்றால் வேறு வழியில்லை என்றார்கள். அந்த தொழிலாளர்கள் தங்கியிருக்கும் கட்டிடத்தில், (அதை அவர்கள் அபார்ட்மென்ட் என்று குறிப்பிட்டார்கள். வீட்டில் இப்படிச் சொல்லி பழக்கப்பட்டிருப்பார்கள். அபார்ட்மென்டில் இருப்பதால் பிள்ளை வசதியாக இருப்பதாக பெற்றோர், உற்றார், உறவினர் கருதிக் கொண்டிருப்பார்கள்). அங்கு அபார்ட்மென்டில் அவர்களையும் சேர்த்து அவர்களைப் போல் 80 தொழிலாளர்கள் இருக்கிறார்களாம்.
தொலைக்காட்சி கேமிராக்கள் முன் நின்றுகொண்டு, இன்று இளைஞர்களுக்கு வாசிப்புப் பழக்கம் குறைந்துபோய்விட்டது என்று வருத்தப்படும் மேட்டுக்குடி அறிவாளிகள் இது போன்ற இளைஞர்கள் இருப்பதை அறியாதவர்களாக இருக்க வேண்டும். மூன்று வேளைகளும் வயிறு நிறைய உண்ண முடியாத நிலையில் இருக்கும் இவர்கள் என்ன வாசிக்க வேண்டும்? இந்தத் தொழிலாளர்கள் இரட்டிப்பு அல்லது கூடுதல் ஊதியம் எதுவுமின்றி மிகைநேரப் பணியிலும் ஈடுபடுத்தப்படுகிறார்கள். 12 மணி நேர வேலையில் சக்கையாய் பிழியப்பட்டு வெளியே வரும் அவர்களுக்கு வாசிப்புக்கு ஒதுக்க நேரம் இருக்க முடியாது. மூன்று வேளை உணவைக் கூட சுருக்கி விடும் அந்த இளைஞர்களுக்கு புத்தகங்கள் வாங்க வழி இருக்க வாய்ப்பில்லை.
அன்று சந்தித்த அந்த பயிற்சித் தொழிலாளர்கள் அனைவரும் எலும்பும் தோலுமாகத்தான் இருந்தார்கள். சிக்ஸ் பேக், பிட்னஸ், என்ஜாய், எனர்ஜி போன்ற இன்றைய நவீன தமிழ் சொற்களுக்கும் அந்த இளைஞர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இளமையில் வறுமை கொடிது என்பதன் மனித வடிவங்களாக அவர்கள் இருந்தார்கள். இந்த படுபாதகமான நிலைமைகளைத்தான் ஜெயலலிதா வளம், வசந்தம், அமைதி என்கிறார். மட்டுமின்றி, அவரது 2023 லட்சியப் பார்வையே இது போன்ற, பட்டினி கிடக்கும் தமிழக இளைஞர்களின் எண்ணிக்கையை இன்னும் அதிகரிக்க இருப்பதாகச் சொல்கிறது.
சென்னை மாவட்டத்தில் 3,938 தொழிற்சாலைகளில் 1,69,646 தொழிலாளர்களும் திருவள்ளூர் மாவட்டத்தில் 4,161 தொழிற்சாலைகளில் 2,26,948 தொழிலாளர்களும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1,838 தொழிற்சாலைகளில் 2,02,430 தொழிலாளர்களும் வேலை செய்வதாக தமிழக அரசின் தொழிலாளர் துறை சொல்கிறது. உள்நாட்டு, வெளிநாட்டு மூலதனம் பெருமளவு குவிந்துள்ள இந்த மாவட்டங்களில் 10,000க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளில் கிட்டத்தட்ட 6 லட்சம் தொழிலாளர்கள் பணியில் இருப்பதாகச் சொல்லும் இந்த அறிக்கை, அவர்கள் நிரந்தரத் தொழிலாளர்கள் மட்டுமா, பயிற்சி, ஒப்பந்த மற்றும் தற்காலிகத் தொழிலாளர்களும் சேர்த்தா என்று சொல்லவில்லை.
நிலவுகிற சட்டங்களுக்கு உட்பட்டவையாக பொதுவாக அரசு தரும் விவரங்கள் இருக்கும். அப்படிக் கொண்டால், இந்த எண்ணிக்கை நிரந்தரத் தொழிலாளர்கள் எண்ணிக்கை மட்டும் என்று இருக்க வேண்டும். ஆனால், ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு எல்லா விவரங்களையும் ஒன்றாகச் சேர்த்துக் காட்டி மக்கள் நலன் காத்துவிட்டதாகச் சொல்லும் நடைமுறை கொண்டது என்பதை பல தருணங்களில் பார்த்திருக்கிறோம். நடந்து கொண்டிருக்கும் சட்டமன்றக் கூட்டத் தொடரில் முன்வைக்கப்பட்ட நிதிநிலை அறிக்கை உட்பட இதற்குச் சான்று. ஆக, தொழிலாளர் எண்ணிக்கையைக் கூடுதலாகக் காட்டி பெரிய அளவில் வேலை வாய்ப்பை உருவாக்கியிருப்பதாகச் சொல்லும் உத்தியாகக் கூட இந்த விவரங்கள் சேர்த்துக் சொல்லப்பட்டிருக்கக் கூடும். ஹ÷ண்டாய் போன்ற பகாசுர நிறுவனத்தில் வேலை செய்யும் நிரந்தரத் தொழிலாளர், நிரந்தரமற்ற தொழிலாளர் சேர்க்கை இந்த வாதத்துக்கு துணை நிற்கும். 20,000 பேர் வேலை செய்கிற அந்த ஆலையில் 2,000 பேர் கூட நிரந்தரத் தொழிலாளர்கள் இல்லை. இன்னும் சில துணை நிறுவனங்கள், சிறிய நிறுவனங்கள், மேற்கு மாவட்ட சுமங்கலித் திட்டம் போல், பயிற்சியாளர்களையும் ஒப்பந்தத் தொழிலாளர்கûயும் கொண்டு மட்டுமே உற்பத்தியில் ஈடுபடுகின்றன. தமிழ்நாட்டில் உள்ள தொழிலகங்கள் எண்ணிக்கையில் கூட தொழில் துறை அமைச்சர் தரும் விவரமும் தொழிலாளர் அமைச்சர் தரும் விவரமும் வேறு வேறாக உள்ளன. தொழில் துறை அமைச்சர் இந்த எண்ணிக்கை 36,869 என்கிறார். தொழிலாளர் அமைச்சர் 43,576 என்கிறார். தமிழ்நாட்டின் தொழிலாளர் எண்ணிக்கையிலும் தொழில் துறை அமைச்சர் சொல்லும் விவரங்கள் 28,000 தொழிலாளர்கள் கூடுதலாகக் காட்டுகின்றன. தொழிற்சாலைகள் எண்ணிக்கையைக் கூடுதலாகக் காட்டும் தொழிலாளர் அமைச்சர் தொழிலாளர் எண்ணிக்கையைக் குறைவாகவும், தொழிற்சாலைகள் எண்ணிக்கையைக் குறைவாகக் காட்டும் தொழில் துறை அமைச்சர் தொழிலாளர் எண்ணிக்கையைக் கூடுதலாகவும் காட்டுகின்றனர். இந்த முரண்பாடுகள் வெறும் விவரம் தொடர்பானவை அல்ல. தமிழக அரசு தமிழக இளைஞர்கள்பால், தமிழகத் தொழிலாளர்கள்பால் வெளிப்படுத்துகிற குற்றமய அலட்சியத்தின் வெளிப்பாடுகள்.
இந்த மூன்று மாவட்டங்களில் மட்டும் போனால் போகிறது என்று தமிழக அரசுக்கு சற்று இடம் கொடுத்து 50,000 நிரந்தரத் தொழிலாளர்கள் இருப்பதாகக் கொண்டாலும் 5 லட் சத்துக்கும் மேற்பட்டவர்கள் நிரந்தரமற்றவர்கள். பட்டினி கிடப்பவர்கள். அன்று சந்தித்த தொழி லாளர்களிடம் அவர்கள் பயிற்சியாளர்கள் என்பதற்கான சான்றுகள் எதுவும் இல்லை. ஆக, தமிழக அரசு சொல்லும் 5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கும் மேல் இன்னும் கூடுதல் எண்ணிக்கையில் உரிமைகள் பறிக்கப்பட்டு, ஒட்டச் சுரண்டப்படும் தொழிலாளர்கள் இந்த மூன்று மாவட்டங்களில் மட்டும் உள்ளனர்.
தனியொரு மனிதனுக்கு உணவில்லை என்றால் ஜெகத்தை அழித்திடுவோம் என்றான் பாரதி என்றெல்லாம் ஆட்சியாளர்கள் சமயத்தில் அள்ளி விடுகிறார்கள். தமிழக அரசு தரும் விவரங்கள்படியே, லட்சக்கணக்கான இளைஞர்கள் பட்டினி கிடக்கிறார்கள். தமிழ்நாட்டின் எதிர்காலம் பட்டினி கிடக்கிறது. இந்த நிலை மைகளில் ஓரளவேனும் மாற்றம் வர, நிலையாணைகள் திருத்தச் சட்ட விதிகளை தமிழக அரசு உடனடியாக முன்வைக்க வேண்டும் என்ற கோரிக்கை செப்டம்பர் 2 பொது வேலை நிறுத்தத்தில் வலுவாக எழுப்பப்பட வேண்டும்.

அண்ணாச்சின்னு கூப்பிட்டாலே அவமானமாம். இதை மாத்தனும் -
இகக (மாலெ)யின் புதிய உறுப்பினர் தோழர் இசக்கியம்மாள் (எ) நித்யா

“எப்போ எனக்கு கல்யாணம் ஆனதோ அப்போ இருந்தே நான் கட்சியோடதான் இருக்கேன். எட்டு ஒன்பது வருசத்துக்கு முந்தி நான் எட்டாவது படிக்கும்போது எங்க தாத்தா ஊருக்கு, பழவூருக்கு போயிருந்தேன். அங்கு ஒரு டீ கடை. தேவர் சமூகத்தைச் சேர்ந்தவங்களோடது. நான் அந்தக் கடைக்குப் போயி அண்ணாச்சி எனக்கு ஒரு டீ தாங்கன்னு கேட்டேன். அவருக்குக் கோபம் வந்து விட்டது. நீ என்ன சாதி, என்னை எப்படி அண்ணாச்சின்னு சொல்லுவேன்னு சண்டைக்கு வந்துட்டாரு. என்னை ஓரமா உக்கார வச்சுட்டாங்க. என் தாத்தா வந்து, அவா ஊருல உள்ள பழக் கத்துல இங்கய்யும் வந்து அப்படி உங்களக் கூப்பிட்டுட்டா. மன்னிச்சுக்குங்க என்று சொல்லி என்னை அழைச்சுட்டுப் போனாரு. அண்ணாச்சி என்று கூப்பிட்டதே தப்பாம். வண்ணார் சாதிக்காரங்க அவங்கள அண்ணாச்சின்னு கூப்பிட்டா அவங்களுக்கு அவமானமாம். இது மாதிரி நிலைமை இன்னும் பல இடங்களில் இப்பவும் இருந்துட்டுதான் இருக்கு. இங்க பாட்டப்பத்துல, வண்ணாப்பய வெள்ளையும் சொள்ளையுமா போறதைப் பாருன்னுச் சொல்லித்தான் என் கணவரை அந்த ரவுடிங்க கொன்னு போட்டாங்க. இங்க தண்ணி புடிக்கிற இடத்தில கூட சாதி பாக்கிறாங்க. இதெல்லாம் மாறனும். மாத்தனும். அதுக்கு என்ன பண்ணனுமோ அதை நாம் செய்யனும். எங்களுக்கு நீதி கிடைக்கனும். நாங்க யாரும் பயப்படல. பதுங்றோம். பாயறதுக்கு. இப்போ கட்சி உறுப்பினராகி உங்களோட சேர்ந்து நானும் வேலை செய்யறேன்.”
இது தோழர் இசக்கியம்மாள் (எ) நித்யா, சமீபத்தில் படுகொலைக்குள்ளான தோழர் மாரியப்பனின் மனைவி ஆகஸ்ட் 3 அன்று நடைபெற்ற நெல்லை பாட்டப்பத்து கட்சிக் கிளைக் கூட்டத்தில் பேசியது. தன்னை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்)ன் உறுப்பினராக இணைத்துக் கொண்டார்.
தோழர் மாரியப்பன் சமூக விரோத, சாதியாதிக்க, மதவெறி கும்பல்களால் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டு 15 நாட்கள் கூட ஆகாத நிலையில், இன்னும் இரண்டு வாரங்களில் ஒரு குழந்தைக்குத் தாயாகப் போகிற சூழ்நிலையில் எந்தப் பதட்டமும் இன்றி, தெளிவாகப் பேசினார். அவரது பேச்சு பிற தோழர்களுக்கு ஊக்கம் தருவதாக இருந்தது. பாட்டப்பத்து கிளைச் செயலாளர் தோழர் சங்கர் (படுகொலை செய்யப்பட்ட தோழர் மாரியப்பன் தந்தை) தலைமையில் நடைபெற்ற கிளைக் கூட்டத்தில், கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் தோழர் ஜி.ரமேஷ், மாவட்டக்குழு உறுப்பினர்கள் தோழர் கணேசன், தோழர் சுந்தர்ராஜ், 43ஆவது வார்டு கிளைச் செயலாளர் தோழர் ஆவுடையப்பன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
நெல்லை சாதியாதிக்க, மதவெறி சக்திகளின் கொடூர தாக்குதலுக்கு பலியான தோழர் மாரியப்பன் குடும்ப நிதியாக கோவை பிரிக்கால் மற்றும் சாந்தி கியர்ஸ் தொழிலாளர்களிடம் ரூ.12,000 வசூல் செய்யப்பட்டது.
(மாலெ தீப்பொறி தொகுதி 15 இதழ் 2 2016 ஆகஸ்ட் 16 – 31இது தோழர் இசக்கியம்மாள் (எ) நித்யா, சமீபத்தில் படுகொலைக்குள்ளான தோழர் மாரியப்பனின் மனைவி ஆகஸ்ட் 3 அன்று நடைபெற்ற நெல்லை பாட்டப்பத்து கட்சிக் கிளைக் கூட்டத்தில் பேசியது. தன்னை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்)ன் உறுப்பினராக இணைத்துக் கொண்டார்.