செப்டம்பர் 2 பொது வேலை நிறுத்தம் நோக்கி
இடம்பெயரும் தொழிலாளர் மத்தியில் பிரச்சாரம்

செப்டம்பர் 2 பொது வேலை நிறுத்தம் நோக்கி ஏஅய்சிசிடியு மாநிலம் முழுவதும் மேற்கொண்டு வரும் தீவிரமான பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக அம்பத்தூரில் இடம்பெயரும் தொழிலாளர்கள் வாழும் இடங்களில் தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஆகஸ்ட் 28 அன்று ஏஅய்சிசிடியு மாநிலச் செயலாளர் தோழர் மோகன் தலைமையில் தோழர்கள் ஹீரா பாஸ்வான், சிந்து பாஸ்வான் மற்றும் சில இடம் பெயரும் தொழிலாளர்கள் கொண்ட குழு 200க்கும் மேற்பட்ட இடம்பெயரும் தொழிலாளர்களைச் சந்தித்தது.
அம்பத்தூரின் பல பகுதிகளிலும் கணிசமான எண்ணிக்கையில் குடியிருக்கிற இடம்பெயரும் தொழிலாளர்களை, ஆகஸ்ட் 28 விடுமுறை தினமானதால் வீடுகளில், தெருக்களில் சந்திக்க முடிந்தது. தோழர்கள் தெருக்களில் இந்தியிலும் தமிழிலும் முழக்கமெழுப்பிச் செல்ல, அதைக் கேட்கும் இந்தி பேசும் தொழிலாளர்கள் திரண்டனர். செப்டம்பர் 2க்காக பீகார் மாநிலத் தோழர்கள் இந்தியில் வெளியிட்ட துண்டுப் பிரசுரம் அவர்கள் மத்தியில் விநியோகிக்கப்பட்டது. அவர்கள் ஆர்வமாக அந்தத் துண்டுப் பிரசுரங்களை வாங்கி உடனே படித்தனர். செப்டம்பர் 2 வேலை நிறுத்தப் போராட்டம் பற்றி, இடம்பெயரும் தொழிலாளர்கள் அனைத்து தொழிலாளர் உரிமைகளும் மறுக்கப்பட்டு கடுமையான சுரண்டலுக்கு உள்ளாக்கப்படுவது பற்றி, போராட்டம் ஒன்றே தீர்வு என்பதால் வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்பதன் அவசியம் பற்றி தோழர் ஹீரா பாஸ்வான் அவர்கள் மத்தியில் இந்தியில் உரையாற்றினார்.
14 புள்ளிகளில் இதுபோன்ற சிறுசிறு கூட்டங்கள் இடம்பெயரும் தொழிலாளர்கள் மத்தியில் நடத்தப்பட்டன. செப்டம்பர் 2 அன்று சாலை மறியல் போராட்டத்தில் கலந்துகொள்ள 132 பேர் பட்டியலையும் தோழர்கள் பெற்றுள்ளனர்.

கோவையில் மேற்கு மாவட்ட
தொழிலாளர் முன்னோடிகள் பயிலரங்கு
தொழிலாளர் முன்னோடிகள் பயிலரங்கு
ஆகஸ்ட் 14, 15, 2016 தேதிகளில் கோவையில் மேற்கு மாவட்டத் தொழிலாளர் முன்னோடிகளுக்கான பயிலரங்கு நடைபெற்றது. பயிலரங்குக்குத் தேர்வு செய்யப்பட்ட இடம் மரங்கள், செடிகள், புல்தரைகள் என பயிற்சிக்கு உகந்த இடமாக இருந்தது. பயிலரங்குக்கு தோழர்கள் நாமக்கல் கோவிந்தராஜ், தருமபுரி கோவிந்தராஜ், சேலம் வேல்முருகன், கோவை குருசாமி, திண்டுக்கல் மணிவேல், கரூர் ராமச்சந்திரன், ஆகியோர் கொண்ட குழு தலைமை வகித்தது. பயிலரங்கத்தை ஏஅய்சிசிடியு மாநிலத் தலைவர் தோழர் எ.எஸ்.குமார் துவக்கி வைத்தார்.
பயிற்சியாளர் சட்டத் திருத்த மசோதா ஜனாதிபதி ஒப்புதலைப் பெற்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருப்பது பற்றியும் இது விசயத்தில் தொழிற்சங்க இயக்கம் அடுத்து செய்ய வேண்டியது பற்றியும் தோழர் குமாரசாமி விளக்கவுரையாற்றினார். உரிய விதத்தில் இச்சட்டம் நடைமுறைக்கு வந்தால் நிரந்தரமற்ற தொழிலாளர்களின் காத்திருப்புப் பட்டியல் தயாரிக்கப்பட்டு நிரந்தர வேலைகள் உருவாகும்போது பட்டியல் மூப்பு அடிப்படையில் அவர்களை நியமனம் செய்ய முடியும், நிரந்தரத் தொழிலாளர் எண்ணிக்கையில் நிரந்தரமற்ற தொழிலாளர் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தைத் தாண்டாமல் பார்த்துக் கொள்ள முடியும் என்றார்.
ஏஅய்சிசிடியு மாநிலச் செயலாளர் தோழர் தேசிகன் நடத்திய வினாடி வினா நிகழ்ச்சியில் வரலாறு, சமூகம், தொழிற்சங்க இயக்கம், இடதுசாரி இயக்கம் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விகள் பயிலரங்கில் பங்கேற்ற தோழர்களை உற்சாகப்படுத்துவதாக இருந்தன.
அடுத்து சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கே.எம்.ரமேஷ், உயர்நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள இரட்டை ஆயுள் தண்டனை வழக்கில் 8 தொழிலாளர்களின் மேல்முறையீட்டு வழக்கு நிலவரம் பற்றிக் கூறினார். அதன் பிறகு தொழிலாளர்களின் சட்ட உரிமைகள் தொடர்பாக தோழர்கள் எழுப்பிய கேள்விகள் மீது உரையாற்றினார்.
அடுத்த அமர்வில் 1848 ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் இன்றையப் பொருத்தப்பாடு பற்றி பேராசிரியர் முருகன் கிட்டத்தட்ட 5 மணி நேரம், கலந்துகொண்ட வர்களின் பங்கேற்புடன் வகுப்பு நடத்தினார். தொழிலாளர் முன்னோடிகள் கம்யூனிஸ்ட் லட்சியத்துடன் நெருங்கி உறவாட, களம் காண, அவரது வகுப்பு உற்சாகம் தருவதாக அமைந்தது.
செப்டம்பர் 2 பொது வேலை நிறுத்த தயாரிப்புகள், ஏஅய்சிசிடியு நடத்த இருக்கிற தொழிலாளர்கள் கோரிக்கை மீதான கையெழுத்து இயக்கம், அதற்கான கோரிக்கைகள், நிதி திரட்டல், உறுப்பினர் சேர்ப்பு, மய்ய சங்க உறுப்பினர் சரிபார்ப்பு போன்ற விசயங்களில் கருத்துக்களை திரட்டிக் கொண்டது.
பிரிக்கால் போராட்டம் பற்றிய தங்களது பார்வைகளை இகக(மாலெ) கோவை மாவட்டச் செயலாளர் தோழர் பாலசுப்பிரமணியன், இகக(மாலெ) மாநிலக் குழு உறுப்பினர் தோழர் என்.கே.நடராஜன், ஏஅய்சிசிடியு மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் தோழர் புவனா, இகக (மாலெ) மத்தியக்குழு உறுப்பினர் தோழர் பாலசுந்தரம் ஆகியோர் முன்வைத்தனர்.
இரண்டாம் நாள் அமர்வில் இறுதியாக தோழர் குமாரசாமி உரையாற்றினார். காஷ்மீர், உனா, கார்ப்பரேட் கொள்ளை என பல விசயங்கள் மீது விரிவான உரை நிகழ்த்திய அவர் தொழிலாளர்களுக்கு மார்க்சியம் கருத்தாயுதம் என்றும் மார்க்சியத்துக்கு உழைக்கும் மக்கள் தான் பொருளாயத சக்தி என்றும் குறிப்பிட்டார். தாராளவாத இடதுசாரி தற்காப்புக் கூக்குரல் ஒலிக்கின்ற இந்த நேரத்தில் ஒன்றுபட்ட இடதுசாரி அறுதியிடலின் தேவையை, சுட்டிக் காட்டினார். கையெழுத்து இயக்கத்தை பல லட்சக்கணக்கான உழைக்கும் மக்களிடம் எடுத்துச் செல்ல அழைப்பு விடுத்தார். இறுதியாக கருத்தரங்கின் உத்வேகமூட்டிய அனுபவங்களை கலந்து கொண்டவர்கள் பகிர்ந்து கொண்டனர்.

விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் வட்டத்தில்
வீட்டுமனைப் பட்டா கேட்டு ஆர்ப்பாட்டம்
வீட்டுமனைப் பட்டா கேட்டு ஆர்ப்பாட்டம்
அனைத்திந்திய விவசாய மற்றும் கிராமப்புறத் தொழிலாளர் சங்கம் மற்றும் புரட்சிகர இளைஞர் கழகத்தின் சார்பாக சின்னசேலம் வட்டத்திலுள்ள பரிகம், வடக்க நந்தல், கச்சிராபாளையம் பகுதியில் வாடகை வீட்டில் குடியிருக்கும் வறியவர்களுக்கு இலவச வீட்டுமனையும் வீடும் வழங்கிடக் கோரியும், உதவித் தொகை கோரி விண்ணப்பித்த முதியோர், விதவை மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகை வழங்கிடக் கோரியும் சின்னசேலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனுக்களுடன் 24.8.2016 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் முடிவில் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனுக்கள் அளிக்கப்பட்டு உரிய ரசீதுகள் பெறப்பட்டன. இகக(மாலெ) மாவட்டச் செயலாளர் தோழர் வெங்கடேசன், புரட்சிகர இளைஞர் கழக தோழர்கள் கஜேந்திரன், தனவேல், வெற்றிவேல், கொளஞ்சிநாதன் மற்றும் பழனிச்சாமி ஆகியோருடன் ஊர் பொது மக்களும் கலந்துகொண்டனர்.
பரிகம் கிராமத்தில் சோதனைச் சாவடி அகற்றக் கோரி
வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை
வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை
சின்னசேலம் வட்டம் பரிகம் கிராமத்திலுள்ள வன இலாகா சோதனைச் சாவடியில் பணியிலிருக்கும் காவலர்கள் கிராம மக்களுக்கு தொடர்ந்து இடையூறு கொடுத்தும் பணத்தை வழிப்பறி செய்தும் வந்தனர். அந்தப் பகுதியில் செல்லும் பெண்களிடம் பாலியல் சீண்டல் செய்வது, காதலர்களை கொச்சைப்படுத்திப் பேசுவது என மக்கள் விரோத செயல்களில் ஈடுபட்டு வந்தனர். இதைக் கண்டித்து வட்டாட்சியர் முதல் முதலமைச்சர் தனிப் பிரிவு வரை ஊர் மக்கள் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத பின்னணியில் கோட்டாட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்த அனைத்திந்திய விவசாய மற்றும் கிராமப்புறத் தொழிலாளர் சங்கமும், புரட்சிகர இளைஞர் கழகமும் அனுமதி கோரின. காவல்துறை ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி மறுத்தது. இந்தப் பின்னணியில் ஆகஸ்ட் 26 அன்று அவிகிதொச, அகில இந்திய மாணவர் கழகம், புரட்சிகர இளைஞர் கழகம் ஆகிய அமைப்புகள் இணைந்து கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டன. காவல்துறை துணைக் கண்காணிப்பாளரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. புரட்சிகர இளைஞர் கழகத்தின் தோழர் கஜேந்திரன் தலைமையில் 5 பெண்கள் கொண்ட குழு கோட்டாட்சியரை சந்தித்து மனு அளித்தது. புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், இனி இதுபோல் நடக்காமல் பார்த்துக் கொள்ளப்படும் என உறுதி அளித்ததின் பேரில் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
எழு என் தேசமே தமிழாக்கம் வெளியீடு
பகத்சிங் அம்பேத்கார் வழிமரபை உயர்த்திப் பிடித்து நாடெங்கும் நடந்து வரும் இயக்கத்தின் ஒரு பகுதியாக எழு என் தேசமே குறுநூலின் தமிழாக்கம் ஆகஸ்ட் 13 அன்று உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற திறந்தவெளிக் கருத்தரங்கில் வெளியிடப்பட்டது. இகக (மாலெ) மாவட்டச் செயலாளர் தோழர் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில் புரட்சிகர இளைஞர் கழக மாநிலச் செயலாளர் தோழர் தனவேல் பிரசுரத்தை வெளியிட அகில இந்திய மாணவர் கழக தேசிய செயற்குழு உறுப்பினர் தோழர் பாண்டியராஜன் பெற்றுக் கொண்டார். கூட்டத்தில் சிறுபான்மையினர், தலித்துகள் மீதான தாக்குதலைக் கண்டித்தும், புதிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற வலியுறுத்தியும், மாணவர்களின் கல்விக் கடன் அனைத்தையும் தள்ளுபடி செய்யக் கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. அகில இந்திய மாணவர் கழக மாநிலச் செயலாளர் தோழர் சீதா, மதுரை மாவட்ட அமைப்பாளர் தோழர் திவ்யா, புரட்சிகர இளைஞர் கழக மாநிலத் தலைவர் தோழர் ராஜகுரு, துணைத் தலைவர் தோழர் ராஜசங்கர், மற்றும் தோழர்கள் கஜேந்திரன், கலியமூர்த்தி, வெற்றிவேல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
(2016 செப்டம்பர்
01 – 15 மாலெ தீப்பொறி தொகுதி 15 இதழ் 3)