சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதி பிடித்தம்
ஏஅய்சிசிடியு எடுத்த விடாப்பிடியான முயற்சிகளுக்கு வெற்றி

தமிழ்நாடு நுகர்பொருள் பொருள் வாணிப கழகத்தில், 6,631 சுமைதூக்கும் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் உள்ள 292 கிட்டங்கிகளில் வேலை செய்கிறார்கள். தமிழ்நாட்டுக்குள் மாதமொன்றில் 3.23 லட்சம் மெட்ரிக் டன் அரிசியை நகர்வு செய்கிறார்கள்.
அவர்கள் எடுத்துச் சென்று சேர்க்கும் அரிசிதான் நுகர்பொருள் வாணிபக் கழக கடைகள் வரை வந்து மக்கள் பெற்றுச் செல்கின்றனர். தமிழக ஆட்சியாளர்கள், அந்த அரிசி மூட்டைகளை தாங்களே சுமந்து சென்று மக்கள் கைகளில் நேராகத் தந்தது போல், எனது ஆட்சியில்தான் 20 கிலோ விலையில்லா அரிசி வழங்கப்படுகிறது என்று தம்பட்டம் அடித்துக் கொள்கின்றனர். தமிழ்நாட்டில் நடக்கிற ஆட்சிகளைத் தாங்குபவர்கள் இந்த சுமை தூக்கும் தொழிலாளர்கள்தான். தமிழ்நாட்டின் அடுத்தடுத்த ஆட்சியாளர்கள் தங்களுக்கு துரோகம் இழைப்பதை போதுமான அளவு பார்த்த பிறகும் அவர்களுக்கு தமிழ்நாட்டின் நகர்ப்புற, நாட்டுப்புற வறிய மக்கள் மீண்டும் வாய்ப்பு அளிக்கிறார்கள் என்றால், அதற்கு தமிழ்நாட்டில் உள்ள பொது விநியோக முறை ஒரு முக்கிய காரணம். அந்த பொது விநியோகத்தில் தொய்வு வராமல் பார்த்துக் கொள்பவர்கள் நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சுமைத் தூக்கும் தொழிலாளர்கள்தான்.
தமிழ்நாட்டின் ஆட்சியாளர்களைத் தாங்குபவர்களுக்கு ஆட்சியாளர்கள் குறைந்தபட்ச உரிமைகளைக் கூட உறுதி செய்யவில்லை. அவர்கள் ஏஅய்சிசிடியுவில் இணைந்து தங்கள் கோரிக்கைகள் மீது போராட்டங்கள் நடத்தத் துவங்கிய பிறகே, அவர்கள் தங்கள் உரிமைகள் ஒவ்வொன்றாக, கேட்கவும் பெறவும் துவங்கியுள்ளனர். 1984 முதல் ஒப்பந்தத் தொழிலாளர்களாக எல்லா தொழிலாளர் உரிமைகளும் மறுக்கப்பட்டு, கடுமையாக சுரண்டப்படும் அவர்களுக்கு ஏஅய்சிசிடியுவில் இணைந்த பிறகே, விடாப்பிடியான போராட்டங்கள் மூலம் 2000 ஆண்டில் வருங்கால வைப்பு நிதி பிடித்தம் செய்யப்பட்டது.
2005க்குப் பிறகு வேலையில் சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு நிர்வாகம் வருங்கால வைப்பு நிதி பிடித்தம் செய்யவில்லை. மொத்தமுள்ள தொழிலாளர்களில் வைப்பு நிதி பிடித்தம் செய்யப்படாத தொழிலாளர்கள் 70% வரை இருந்தனர். இது பற்றிய தொழிலாளர்களின் கோரிக்கைகளை, போராட்டங்களை நுகர்பொருள் பொருள் வாணிப கழக நிர்வாகம் அலட்சியப்படுத்தியது. 2011ல் இவர்கள் பற்றிய விவரங்களை தகவல் அறியும் சட்டம் மூலம் சங்கம் கேட்டும் நிர்வாகம் அந்த விவரங்களை தர மறுத்தது; அது தொடர்பான எந்த விவரமும் தலைமையகத்தில் இல்லை என்று பொய்யான தகவல் தந்தது.
நெல்லை, திருப்பூர், கோவை மாவட்டங்களில் அடையாள அட்டை இல்லாத தொழிலாளர்கள் தொடர்பான தகவல்களை சங்கமே சேகரித்தது. அந்தத் தகவல்களை மண்டல மட்ட வைப்பு நிதி அலுவலகத்தில் தாக்கல் செய்து வைப்பு நிதி பிடித்தம் செய்யப்படாதது பற்றி புகார் எழுப்பியது. விளைவாக வைப்பு நிதி அலுவலக அதிகாரிகள் 3 மண்டலங்களிலும் கள ஆய்வு செய்து 2000 ஆண்டு முதல் வைப்பு நிதி பிடித்தம் செய்ய பரிந்துரை செய்தனர்.
அதன் பிறகு, மாநிலம் முழுவதும் வைப்பு நிதி பிடித்தம் செய்யப்படாத தொழிலாளர் பட்டியல் பெற சங்கம் தகவல் அறியும் உரிமை மாநில ஆணையரிடம் மேல்முறையீடு செய்தது. இந்த முறை நுகர்பொருள் பொருள் வாணிப கழகத்தின் நிர்வாகம், அது போன்ற 3,335 தொழிலாளர் பட்டியல் ஒன்று தந்தது.
சங்கம் அந்தப் பட்டியலை மாநில வைப்பு நிதி ஆணையர் முன்பு தாக்கல் செய்தது. அந்தப் பட்டியல் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், 2012ல் சட்டமன்றம் கூடும் போது உணவு மானிய கோரிக்கை நேரத்தில், சென்னையில் வைப்பு நிதி ஆணையர் அலுவலக முற்றுகை போராட்டம் நடத்தப் போவ தாக சங்கம் அறிவித்தது. சட்டம், ஒழுங்கு பிரச் னை ஏற்படும் நிலைமை உள்ளதால் சம்பந்தப்பட்ட துறைகளை அணுகி தீர்வுக்கு முயற்சிப்பதாக சென்னை காவல்துறை ஆணையர் சங்கத்திடம் தொலைபேசி மூலம் உறுதியளித்தார். சங்கம் முற்றுகை போராட்டத்துக்கான தயாரிப்புக்களை, பிரச்சாரத்தைத் தொடர்ந்தது. கோரிக்கையை வலியுறுத்தி மாநிலத்தின் பல பகுதிகளிலும் சுவரொட்டிகள் வெளியிடப்பட்டன. 3,335 தொழிலாளர்களுக்கு வைப்பு நிதி பிடித்தம் செய்யவும், 500 தொழிலாளர்களுக்கு வார விடுப்பு ஊதியம் வழங்கவும் சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.
இந்திய உணவுக் கழகத்தின் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு இணையான ஊதியம் கோரி சங்கம் 2013ல் மாநில அளவில் இயக்கம் மேற்கொண்டபோது, புதிதாக பணியில் சேர்ந்த தொழிலாளர்களுக்கும் துப்புரவு தொழிலாளர்களுக்கும் வைப்பு நிதி பிடித்தம் செய்யப்படவில்லை என்பதை அறிந்து தகவல் அறியும் உரிமை சட்டத்தை பயன்படுத்தி 945 சுமை தூக்கும் தொழிலாளர்கள், 495 துப்புரவு தொழிலாளர்களின் விவரங்கள் பெறப்பட்டது.
அந்தப் பட்டியலில் விடுபட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் 200க்கும் மேற்பட்டோர் பட்டியலையும் சேர்த்து, 2014ல் மாநில வைப்பு நிதி ஆணையர் முன்பு வைப்பு நிதி பிடிக்கப்பட வேண்டும் என புகார் எழுப்பப்பட்டது. இது தொடர்பாக வைப்பு நிதி அலுவலகம் மீண்டும் ஆய்வு மேற்கொள்வதாக சொன்னது. புகார் எழுப்பி பல மாதங்களாகியும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், ஜனவரி 4, 2016 அன்று ஒட்டு மொத்த விடுப்பு போராட்டம் நடத்த சங்கம் முடிவு செய்தது. முடிவு அறிவிக்கப்பட்டவுடன், நிர்வாகம் பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுத்தது. வைப்பு நிதி ஆணையரும் சங்கம் போராட்டத்தை கைவிட வேண்டும் என்றும் வைப்பு நிதி ஆய்வு நீதிமன்றத்தில் கலந்து கொண்டு தொழிலாளர் தரப்பு வாதங்களை முன்வைக்க வேண்டும் எனவும் கடிதம் அனுப்பினார்.
இந்தக் கடிதத்தின் அடிப்படையில் வைப்பு நிதி ஆய்வு நீதிமன்றத்தில் 8 முறை விசாரணை நடந்துள்ளது. தொழிலாளர்கள் எந்தத் தேதியில் பணியில் அமர்த்தப்பட்டார்கள், எவ்வளவு மாத ஊதியம் வழங்கப்படுகிறது போன்ற விவரங்களை நிர்வாகம் தர மறுப்பதாகவும், அதனால், எவ்வளவு வைப்பு நிதி பிடித்தம் செய்யப்பட வேண்டும் என நிர்வாகத்திற்கு உத்தரவு இட இயலவில்லை என்றும் வைப்பு நிதி அலுவலகம் தெரிவித்தது.
மண்டல அலுவலகங்களில் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு கூலி, கணினியில் பதிவு செய்யப்பட்டு வழங்கப்படுகிறது என்றும் மண்டல வைப்பு நிதி அமலாக்க பிரிவு அதிகாரிகள் மூலம் நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மண்டல அலுவலகங்களில் விவரங்களை பெற முடியும் என்று சங்கத் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
வைப்பு நிதி அலுவலக ஆணையர் சங்கத்தின் முன்வைப்பை ஏற்றுக் கொண்டு மாநில அளவில் அமலாக்க பிரிவு அதிகாரிகள் மூலம் வைப்பு நிதி பிடித்தம் செய்வதற்கு தேவையான விவரங்களை சேகரித்து வந்தனர்.
இந்த நிலையில் ஜ÷ன் 2016ல் நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாகம், வைப்பு நிதி பிடித்தம் செய்வதில் அரசிடமிருந்து எந்த உத்தரவும் பெற முடியவில்லை என சங்கத்திற்கு கடிதம் தந்தது.
சேமநல திட்டம் அமலாக்கம் தொடர்பான சட்டத்தை மதித்து, வைப்பு நிதி பிடித்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி நிர்வாகத்திற்கு சங்கம் ஆட்சேபணை கடிதம் தந்தது. நிர்வாகம் சங்கத்துக்கு தந்த கடிதம், சங்கம் நிர்வாகத்துக்கு அனுப்பிய ஆட்சேபணை கடிதம் ஆகியவற்றை இணைத்து வைப்பு நிதி ஆணையருக்கும் சங்கம் கடிதம் அனுப்பியது. வைப்பு நிதி பிடித்தம் செய்ய கால தாமதம் ஏற்பட்டால் வைப்பு நிதி அலுவலகத்திற்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என சங்கம் அறிவித்தது.
இந்தப் பின்னணியில் ஆகஸ்ட் 1 அன்று உணவு மானிய கோரிக்கையின்போது 1,624 சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு இரண்டாவது முறையாக பிஎஃப் பிடித்தம் செய்யவும், 302 தொழிலாளர்களுக்கும் வாரம் ஒரு நாள் லீவு சம்பளம் வழங்கவும் உணவு அமைச்சர் சட்டமன்றத்தில் அறிவிப்பு செய்தார்.
ஏஅய்சிசிடியுவின் விடாப்பிடியான, பல மட்ட முயற்சிகளால் 5,959 இளம் தொழிலாளர்கள், வருங்கால வைப்பு நிதி பிடித்தம் என்ற எல்லைக்குள் வந்துள்ளனர். நுகர்பொருள் வாணிபக் கழக சுமைதூக்கும் தொழிலாளர்கள் தமிழக அரசின் உண்மை முகத்தையும் அம்பலப்படுத்தியுள்ளனர்.

பேறுகாலப் பயன்களை உறுதி செய்ய கறாரான நடவடிக்கைகள் வேண்டும்
பேறுகாலப் பயன்கள் திருத்தங்கள் மசோதா 2016 மாநிலங்களவையில் நிறைவேறிவிட்டது. காவி பாசிச நிகழ்ச்சி நிரல் முழுவீச்சில் அமலாக்கப்படும்போது, கண்கட்டு வித்தையாக எதையாவது செய்து நாட்டு மக்களை திசை திருப்ப மோடி அரசு முயற்சி செய்கிறது. இந்தத் திருத்தங்கள் அந்த வகைப்பட்டவை. ஒரு வகையில் பாசிச அரசுக்கும் இப்படி ஏதாவது செய்தாக வேண்டும் என்ற நிர்ப்பந்தம் மக்கள் போராட்டங்களால் ஏற்படுகிறது. செப்டம்பர் 2 பொது வேலைநிறுத்தத்துக்கு இந்தியத் தொழிலாளர்கள் தயாராகும்போது, அவர்களுடைய கோரிக்கைகள் எதையும் நிறைவேற்றாத நிலையில், 44, 45 மற்றும் 46ஆவது இந்திய தொழிலாளர் மாநாட்டு அமர்வுகளில் வலியுறுத்தப்பட்டதற்கேற்ப இந்தத் திருத்தங்கள் செய்யப்படுவதாக மத்திய தொழிலாளர் அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா சொல்கிறார்.
10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி புரியும் நிறுவனங்களுக்கு இந்தத் திருத்தங்கள் பொருந்தும். இதன்படி இதுவரை 12 வாரங்கள் என இருந்த பேறுகால விடுப்பு 26 வாரங்கள் என ஆகிறது. பேறுகாலத்தில் கூடுதல் நாட்கள் விடுமுறை கிடைக்க இருப்பது நல்ல செய்தியே. ஆனால், இது 2 குழந்தைகள் வரைதான். 2 குழந்தைகளுக்கு மேல் இருந்தால் அந்தப் பெண்களுக்கு 12 வார விடுமுறைதான். 26 வாரங்கள் இல்லை. இதில் அந்தக் குழந்தையை ஏன் வஞ்சிக்க வேண்டும் என்றுதான் கேள்வி கள் எழுப்பப்படுகின்றன. இது முக்கியமானதுதான். ஆனால் அதைவிட முக்கியமாக எழுப்பப்பட வேண்டிய கேள்வி, மூன்றாவது பேறு காலம் என்றாலும் அதே பெண்தான், அதே வலிதான், அதே வேதனைதான், எனும்போது, 26 வார கால பேறுகால விடுப்பு உரிமை ஏன் அந்தப் பெண்ணுக்கு மறுக்கப்பட வேண்டும் என்பதுதான்.
வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறுபவர்களுக்கும் 3 மாதத்துக்கும் குறைவான வயது குழந்தையை தத்து எடுப்பவர்களுக்கும் 12 வார கால விடுமுறை மட்டுமே. வாடகைத் தாய் விசயத்தில் விடைகள் தேடும் கேள்விகள் பல எழுகின்றன. வாடகைத் தாய் முறையில் வணிகமயத்துக்கு முடிவு கட்டுவது என்ற பெயரில் மத்திய அமைச்சரவை பல்வேறு மாற்றங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், குழந்தைப் பேறு என்பதையே பணியாகச் செய்த அந்தப் பெண்ணுக்கு என்ன பேறுகாலப் பயன்? அந்தக் குழந்தைக்கு சட்டப்படி சொந்தமாகும் தாய்க்கு அந்தக் குழந்தைக்கான துவக்க கால கவனம் செலுத்தவும் மற்ற குழந்தைகளுக்கு ஆகும் அதே கால அளவு தேவைதானே? இந்தக் கேள்விக்கு மேனகா காந்தி அளித்திருக்கும் பதில் மேலும் கேள்விகளை எழுப்புகிறது. 26 வார கால விடுப்பு குழந்தைக்கு தாய்பால் கொடுத்து குழந்தையுடனான பந்தத்தை உறுதிப் படுத்தவே என்பதால், வாடகைத் தாய் விசயத்தில் அந்தப் பெண் குழந்தையை விட்டுவிட்டுச் சென்றுவிடப் போவதால் பந்தம் உருவாக்கும் தேவை இல்லை, அதனால் 12 வாரங்கள் என்று சொல்கிறார். இப்போது பந்தம் உருவாக்கும் வேலையை அந்த உடல்ரீதியான தாய்தானே செய்ய வேண்டும்? அமைச்சரின் வாதப்படி அந்தப் பெண்ணுக்கும் 26 வார கால விடுப்பு தருவதுதானே சரியாக இருக்கும்? இந்த முயற்சியில் பெண்ணுக்கு இருக்கும் சிரமங்களை குறைப்பதை விட, காலகாலமாக சொல்லப்படும் விதிகளுக்குள் அவர்களை நிறுத்துவது நோக்கமாக இருக்கிறது என்பது அமைச்சர் சொல்வதில் தெளிவாகிறது.
50 அல்லது அதற்கு மேல் தொழிலாளர்கள் உள்ள நிறுவனங்களில் குழந்தைகள் காப்பகம் கட்டாயம் என்கிறது மசோதா. இந்த நிறுவனங்களில் குழந்தையைப் பார்க்க ஏற்கனவே இருக்கும் இடைவேளைகள் உட்பட நான்கு இடைவேளைகள் அந்தப் பெண்ணுக்கு தரப்படும் என்று சொல்லப்படுகிறது. ஏற்கனவே உணவு இடைவேளை ஒன்று உள்ளது. இதனுடன் சேர்த்தால் கூடுதலாக மூன்று இடைவேளைகள். வேலையளிப்பவர்கள் தேநீர் இடைவேளைகள் இரண்டையும் சேர்த்துக் கொண்டார்கள் என்றால் கடைசியில் கூடுதலாக ஒரே ஓர் இடைவேளை என்பதாகவே இது முடிகிறது. 50 அதற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ள நிறு வனங்கள் குழந்தைகள் காப்பகம் அமைக்காவிட்டால் என்ன நடக்கும் என்பது பற்றி எதுவும் சொல்லப்படவில்லை. தொழிலாளர் சட்டங்கள் பெரும்பாலும் அவற்றின் மீறலில் அமலாவதுதான் நாட்டுநடப்பு.
வீட்டில் இருந்துகொண்டே வேலை (ஜ்ர்ழ்ந் ச்ழ்ர்ம் ட்ர்ம்ங்) என்று புதிய சட்டத்திருத்தம் சொல்கிறது. 26 வாரங்கள் பேறுகால விடுப்பிற்குப் பிறகு, வீட்டில் இருந்து குழந்தை பராமரித்துக் கொண்டே வேலை செய்யலாம், ஆனால், அந்த வேலை வீட்டில் இருந்தே செய்யக் கூடியதாக இருந்தால், முதலாளி அனுமதித்தால் செய்யலாம் என்கிறது. தகவல்தொழில்நுட்பத் துறை யில் வேலை செய்யும் பெண்களுக்கு இந்தத் திருத்தம் பயன் தரலாம். ஆனால், இந்தத் துறையில் வீட்டில் இருந்து வேலை செய்யச் சொல்வது, இப்போதும் ஆண், பெண் இருவருக்கும், அவர்களை வேலையில் இருந்து வெளியேற்றும் தயாரிப்பாக நடைமுறையில் உள்ளது. குழந்தை பெற்ற பெண்ணை இந்த நடைமுறையில் இருந்து பாதுகாக்கவும் சட்டத்தில் இடம் இருக்க வேண்டும்.
பாஜகவின் மும்பை தலைவரும் மேற்கு பந்த்ராவின் சட்டமன்ற உறுப்பினருமான அஸிஸ் சேலர், இந்தச் சட்டத் திருத்தத்தை தான் வரவேற்பதாகவும் இது பெண்களை வேலையில் இருந்து தள்ளி வைக்கும் என்று தான் நம்புவதாகவும் கூறுகிறார். சம்பளத்துடன் ஆறு மாதங்கள் பேறுகால விடுப்பு என்றால் பல நிறுவனங்கள் பெண்களை, திருமணமான பெண்களை வேலைக்கமர்த்துவதை தவிர்க்கப் பார்ப்பார்கள். தவிர்த்துக் கொண்டும் வருகிறார்கள். பேறுகால விடுப்பு தந்தைக்கும் வேண்டும் என்றும் குரல்கள் எழுகின்றன. இந்தத் திருத் தங்களின் பல அம்சங்கள் தொடர்பாகவும் இந்தக் கோணத்தில் விமர்சனங்கள் எழுகின்றன. குழந்தை பராமரிப்பு பெண்கள் பணி என்ற பழைமைவாதக் கருத்தை மறுஉறுதி செய்வதாக திருத்தங்கள் இருப்பதாகவும், ஆண்களுக்கும் இதில் இருக்கும் பொறுப்பை உறுதி செய்யும் விதம் திருத்தங்கள் வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுப்பப்படுகின்றன.
குழந்தை பராமரிப்பில் ஆண்களின் பங்கை உறுதி செய்ய வேண்டும் என்ற கோணத்தில் இருந்து வந்திருக்கிற சாதகமான திருத்தங்களை புறந்தள்ளுவதை விட இன்னும் காத்திரமான கேள்விகளை எழுப்புவது அவசியமாகிறது. அவை இந்தத் திருத்தங்களின் அமலாக்கம் பற்றியவை.
பேறுகாலப் பயன்கள் சட்டம் இப்போதும் அமலில் இருக்கிறது. தனியார் துறையில் அதன் அமலாக்கம் மிக அரிதாகவே நடக்கிறது. இந்தத் திருத்தங்களால் நாட்டில் 18 லட்சம் பெண்கள் பயன் பெறுவார்கள் என்று தொழிலாளர் அமைச்சர் சொல்கிறார். இந்த எண்ணிக்கை, இந்தத் திருத்தங்களின் மிகக்குறுகிய எல்லையை போதுமான அளவுக்கு அம்பலப்படுத்துகிறது.
மத்திய தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சகம் தரும் விவரங்கள்படி மார்ச் 31, 2011 அன்று, பொதுத்துறையில் 31.71 லட்சம் பெண்களும் தனியார் துறையில் 27.83 லட்சம் பெண்களும் உள்ளனர். அமைச்சர் சொல்வதுபடியே, தனியார் துறையின் 9 லட்சம் பெண்களுக்கு திருத்தங்களால் பயனில்லை.
2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்புப்படி, நாட்டில் 12,72,20,000 பெண் தொழிலாளர்கள் உள்ளனர். மொத்தமுள்ள தொழிலாளர்களை பிரதானமாக தொழிலாளர்கள், ஓரஞ்சார (மார்ஜினல்) தொழிலாளர்கள் என்று மக்கள் தொகைக் கணக்கெடுப்பு பிரிக்கிறது. அதாவது, கணக்கெடுப்பு நடத்தியதற்கு முந்தைய ஆண்டில் 6 மாதங்களுக்கும் குறைவாக வேலை வாய்ப்புப் பெற்றவர்களை ஓரஞ்சார தொழிலாளர்கள் என்கிறது. அதன்படி 7,28,57,000 பெண் தொழிலாளர்கள் பிரதானமாக தொழிலாளர்கள். மீதமுள்ள 5,43,63,000 பேர் ஓரஞ்சார தொழிலாளர்கள். அமைச்சர் கணக்கில் இந்தக் கோடிக்கணக்கான பெண் தொழிலாளர்கள் வரவில்லை.
இவர்களுக்கும் அப்பால் இன்னும் கோடிக்கணக்கான உழைக்கும் பெண்கள் இருக்கிறார்கள். மத்திய, மாநில அரசுகளின் மக்கள் நலத் திட்டங்கள் என்று சொல்லப்படுபவற்றை நிறைவேற்றும் ஆஷா, அங்கன்வாடி, தொகுப்பூதிய, மதிப்பூதிய ஆசிரியர்கள் என பல லட்சக்கணக்கான பெண் தொழிலாளர்கள் இப்போதும் இந்தச் சட்டத்துக்கு வெளியில் இருக்கிறார்கள். இவர்களுக்கு அடுத்த பெரிய வளையத்தில் பல கோடிக்கணக்கான அமைப்புசாரா தொழிலாளர்கள் இருக்கிறார்கள். இவர்களும் இந்தச் சட்டத்துக்கு வெளியில்தான் இருக்கிறார்கள்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 2006 முதல் 180 நாட்கள் பேறு கால விடுப்பும் 730 நாட்கள் குழந்தை பராமரிப்பு விடுப்பும் ஆண்களுக்கு 15 நாட்கள் குழந்தை பராமரிப்பு விடுப்பும் உள்ளது. பெண் ஊழியர்கள் 730 நாட்கள் விடுப்பை குழந்தைக்கு 18 வயது ஆகும் வரை எடுக்கலாம். மத்திய அரசு ஊழியர் கணக்கெடுப்புப்படி மார்ச் 31, 2011 அன்று மத்திய அரசு பெண் ஊழியர்கள் 3.37 லட்சம் பேர். இவர்களுக்கு ஏற்கனவே பாதுகாப்பு இருக்கிறது. 2011 முதல் தமிழ்நாட்டில் மாநில அரசு ஊழியர்களுக்கும் 180 நாட்கள் பேறுகால விடுப்பு உள்ளது. இப் போது அறிவிக்கப்பட்டுள்ள திருத்தங்களில் பாஜக ஆட்சியின் சாதனை, அக்கறை என்று சொல்ல புதிதாக எதுவும் இல்லை.
அமலே ஆகாத ஒரு சட்டத்துக்கு திருத்தங்கள் கொண்டுவந்துவிட்டு, அது உழைக்கும் பெண்களின் மிகச்சிறு பிரிவுக்கு மட்டும் என்று சொல்லி மோடி அரசு ஏமாற்றப் பார்க்கிறது.
தனியார் துறையில் மகப்பேறு பயன்கள் சட்டம் கறாராக அமலாக்கப்படுவதை உறுதி செய்ய பொறியமைவு உருவாக்கப்பட வேண்டும் என்றும், சட்டத்தை மீறும் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும், தற்போதைய திருத்தங்கள் பாரபட்சமின்றி குழந்தை பராமரிப்பில் ஈடுபட வேண்டிய பெண்கள் அனைவருக்கும் தரப்பட வேண்டும் என்றும், குழந்தை பராமரிப்பில் ஆண்களின் பங்கை உறுதி செய்யும்விதம், ஆண்களுக்கும் விடுப்பு அளிக்கப்பட வேண்டும் என்றும், தனியார் துறை மட்டுமின்றி, அரசின் திட்டத் தொழிலாளர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள், பல்வேறு வகை அமைப்புசாரா தொழிலாளர்கள் என உழைக்கும் பெண்கள் அனைவருக்கும் மகப்பேறு கால விடுப்பும் பிற பயன்களும் சென்று சேர்வதை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலுவான கோரிக்கைகள் எழுப்பப்பட வேண்டும். குழந்தையுடனான பந்தத்தை உருவாக்குவதைவிட, குழந்தை பெற்று நொந்து போயிருக்கும் பெண்ணின் உடல்நலம் பேண ஆட்சியாளர்கள் கூடுதல் கவனம் செலுத்துவதை உறுதி செய்ய வேண்டும். செப்டம்பர் 2 வேலை நிறுத்தப் போராட்டத்தில் இருந்து பெண் தொழிலாளர்களை விலக்கி வைக்க மோடி அரசு இந்த ஒப்பனைத் திருத்தங்களை முன்வைக்குமானால், அந்த ஒப்பனைத் திருத்தங்கள் யதார்த்தமாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன் பெருமளவில் பெண் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு அடுத்து வீதிகளில் இறங்க வேண்டும்.

(2016 செப்டம்பர்
01 – 15 மாலெ தீப்பொறி தொகுதி 15 இதழ் 3)