தலையங்கம்
மதவெறியை, சாதிவெறியை முறியடிப்போம்
கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாப்போம்
கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாப்போம்
(மாலெ தீப்பொறி 2016 ஜுலை 16 – 31 தொகுதி 14 இதழ் 24)
‘அவர் ஆகச் சிறப்பாகச் செய்யக் கூடியதை செய்ய அவர் மீண்டும் உயிர்த்தெழட்டும். எழுதட்டும்’.
அந்தத் தீர்ப்பு இந்த வாசகங்களுடன் முடிகிறது.
பல்வேறு விசயங்களில் சாமான்ய மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை தகர்த்து விடுகிற முதலாளித்துவ நீதிமன்றங்கள் சில சமயங்களில் விதிவிலக்காக முதலாளித்துவ நீதியையாவது பாதுகாத்துவிடுகின்றன. தனது மரணத்தை அறிவித்துவிட்ட பெருமாள்முருகனின் மாதொருபாகன் தமிழ் மற்றும் ஆங்கிலப் பதிப்புகள் மீதான தடையை விலக்கி, அமைதிப் பேச்சுவார்த்தை என்ற பெயரில் எட்டப்பட்ட ஒப்பந்தம் செல்லாது என்று அறிவித்து, பெருமாள்முருகன் மீதோ, பதிப்பாளர் மீதோ காவல்துறை நடவடிக்கை எடுக்கக்கோரும் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள 160 பக்க தீர்ப்பு அத்தகையதொரு தீர்ப்புதான். நிலவுகிற நிலைமைகளுக்கு எதிராகக் கருத்துத் தெரிவிப்பவர்கள் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டுவிடும் இன்றைய சூழலில் இந்தத் தீர்ப்பு சற்று ஆறுதல் தருகிறது. இந்தியாவின், தமிழ்நாட்டின் முற்போக்கு, ஜனநாயக சக்திகள் எஸ்.கே.கவுலின் தீர்ப்பை வரவேற்று எழுதிக் கொண்டிருக்கிறார்கள். தான் கடவுள் அல்ல என்றும் மீண்டும் உயிர்த்தெழப் போவதில்லை என்றும் சொன்ன பெருமாள் முருகனும் மீண்டும் எழுதுவதாகவும் முதலில் இந்தத் தீர்ப்பை அனுபவிக்கப் போவதாகவும் சொல்கிறார்.
ஆனால், மதப்பிரியரும் மனுதாசருமான ஆர்எஸ்எஸ் குருமூர்த்தியும் சாதிப்பிரியர் ராமதாசும் இன்று திடீரென்று பெண் சுதந்திரம் காக்கப் புறப்பட்டுவிட்டார்கள். குழந்தை பெற்றுக் கொள்ள முடியாததால் காளியும் பொன்னாவும் போன்ற ஆண்களும் பெண்களும் காலம்காலமாக தங்கள் உடனடி சமூகத்தில் எதிர்கொள்ளும் அவமானங்கள், கேள்விகள், கடைசியாக நிர்ப்பந்தங்கள், பிறகு துன்பங்கள் பற்றி இவர்கள் இரண்டு பேரும் அக்கறை கொள்ள வாய்ப்பில்லை. இவர்கள் இரண்டு பேரும் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்கிறார்கள் என்றால் ஜனநாயகம் ஒரு நிச்சயமான வெற்றி பெற்றுள்ளது என்று நாம் மகிழ்ச்சியடைய வேண்டும்.
சாதியாதிக்க சக்திகள் வெறியாட்டம் போட்டதற்குப் பின் மாதொருபாகன் நூல் பெரிய அளவில் பிரபலமானது. அந்தப் புத்தகம் தொடர்பான சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பு பரவலான வரவேற்பு பெற்றுள்ள பின்னணியில் குருமூர்த்தியும் ராமதாசும் தீர்ப்புக்கெதிராக வரிந்து கட்டிக்கொண்டு வருவது தீர்ப்பை மேலும் பிரபலமானதாக்குகிறது. மதிப்புடையதாக்குகிறது. ஜனநாயகக் குரல்கள் விழிப்புடன் உள்ள சமூகத்தில் சில சமயங்களில் அடிநீரோட்டமாக இருக்கும் சில ஆபத்தான போக்குகளை மேலே கொண்டு வந்து அவை தொடர்பாக சமூகத்தின் எச்சரிக்கை உணர்வை, தயார் நிலையை மேம்படுத்த உதவும் அவர்களுக்கு ஒரு வகையில் நன்றி சொல்லலாம்.
தீர்ப்பின் 83ஆவது பத்தியில், ஆறாவதாக மாதொருபாகன் உட்பட, தமிழில் உள்ள, பாலியல் உறவுகள் தொடர்பான ஆறு படைப்புகள் பற்றி சுட்டிக்காட்டப்படுகிறது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில், பல ஆண்டுகளாக, மக்கள் மத்தியில் நிலவி வந்த மணஉறவுக்கு அப்பாற்பட்ட உறவுகள் பற்றி அந்தக் கதைகள் பேசுகின்றன. அந்தப் புத்தகங்கள் எவையும் தடை செய்யப்படவில்லை. அவை அந்தச் சமூகப் பெண்களை இழிவுபடுத்திவிட்டதாக பெரிய பிரச்சனையும் எழவில்லை. மாதொருபாகன் நடந்தது 2014 இறுதி மற்றும் 2015 துவக்கம். இளவரசன்கள், கோகுல்ராஜ்கள் பலி கொள்ளப்பட்ட காலம். அந்தப் பின்னணயில் எழுத்தாளர் ஒருவரும் கொல்லப்பட்டார். மாதொருபாகன் விசயத்தில் எழுந்து வந்த சாதிவெறி வேகத்தை இந்தத் தீர்ப்பு தண்ணீர் ஊற்றி அணைக்கிறது என்று வெம்பிப் போகிறார் குருமூர்த்தி. ராமதாசுக்கும் அதுவே ஆதங்கம்.
தீர்ப்பு தனது முடிவுகளுக்கு ஆதாரமாக முன்வைக்கும் விசயங்களும் குருமூர்த்தியையும் ராமதாசையும் பெரிதும் ஏமாற்றமடையச் செய்கின்றன. இந்த வழக்கில் முதலில் தண்டனை வழங்கப்பட்டுவிட்ட பிறகு விசாரணை நடத்தப்படுகிறது என்று தீர்ப்பு குறிப்பிடுகிறது. குருமூர்த்தி போன்றவர்களுக்கு சற்றும் பிடிக்காத சல்மான் ருஷ்டி சொன்னதை மொத்தத் தீர்ப்புக்கும் அடிப்படையாக தீர்ப்பு சொல்கிறது: ‘ஒரு புத்தகத்தால் நீங்கள் புண்படாமல் இருப்பது மிகவும் எளிது. அதை மூடிவைத்து விடுங்கள்’.
ஆர்எஸ்எஸ் குருமூர்த்தி அப்படி மூடிவிட முடியாது என்கிறார். அந்தச் சம்பவம் புனைவு என்ற அடிப்படையில் தீர்ப்பு தரப்பட்டுள்ளது என்றும் அதனால் தீர்ப்பு நீதி தவறி விட்டது என்றும் அவர் சொல்கிறார். அது புனைவு என்று பெருமாள்முருகன் சொன்னது பிரச்சனை பெரிதான பிறகுதானே தவிர, அதற்கு ஆதாரம் இருப்பதாகத்தான் முதலில் சொன்னார் என்று தனது வாதத்துக்கு வலுவேற்றுவதாக கருதிக் கொண்டு சொல்கிறார். பாதிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் சமூகத்திடம் மன்னிப்பு கேட்டு, தனது படைப்புகளை திரும்பப் பெற்றுக் கொண்டு தானும் மரணித்துவிட்டதாக அவர் அறிவித்த பிறகு, அவர் முதலில் சொன்னதை பிடித்துக்கொண்டு வாதிடுவதில் பொருளில்லை. ஆனால், குருமூர்த்திக்கு அந்த அவசியம் உள்ளது.
பெருமாள்முருகன் ‘மரணித்த’ பிறகு ஏப்ரல் 2015ல், மாதொருபாகன் நாவலுக்கு ஆதரவாக லாவண்யா மனோகரன் எழுதி காலச்சுவடு இதழில் வெளியான கட்டுரையின் வாதங்களை தீர்ப்பு போதுமான அளவு எடுத்துச் சொல்கிறது. இந்துத்துவா போற்றும் மகாபாரதத்தில் சொல்லப்படுகிற மணஉறவுக்கு அப்பாற்பட்ட கருத்தரிப்புகள் முதல், நவீன செயற்கைக் கருத்தரிப்பு முறையில் பெண்கள் கருவுறுவது வரையிலும், நவீன முறையில் அந்தப் பெண்கள் சந்திக்க நேரிடும் அவமானங்கள் பற்றியும் பல்வேறு சான்றுகளை அவரது கட்டுரையில் இருந்து மேற்கோள் காட்டுகிறது. பாண்டுவுக்கு அன்றி வேற்று ஆணுக்கு குந்தி கர்ணனைப் பெற்றதாகச் சொல்வதால் அந்த குலத்துப் பெண்கள் இழிவுபடுத்தப்பட்டார்கள் என்று சொல்ல முடியுமா, அதற்காக மகாபாரதத்தைத் தடை செய்துவிட முடியுமா என்று லாவண்யா எழுப்பிய கேள்விகளை சுட்டிக்காட்டுகிறது.
மகாபாரதம் கேள்விக்குள்ளாக்கப்படும்போது குருமூர்த்தி, தீர்ப்பின் மய்யக் கருவில் இருந்து கவனத்தை திசைதிருப்பப் பார்க்கிறார். கொங்கு வேளாளர் பெண்களை இழிவுபடுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் பெருமாள் முருகன் அந்தப் புத்தகத்தை எழுதியுள்ளார் என்று நிறுவ படாதபாடு படுகிறார். விசாக சடங்கு செய்து குழந்தை பெற்றுக்கொண்ட அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண், தான் கதையில் சொல்வதுபோல்தான் குழந்தை பெற்றதாக மற்றவர்கள் கருதுவார்கள் என்று தன்னிடம் வருத்தப்பட்டுச் சொன்ன பெண்ணின் வலியை தானும் உணர்ந்ததாகச் சொல்கிறார்.
அப்படி இருந்தால் அதற்காகக் கவலைப்பட வேண்டியதில்லை என்று அந்தப் பெண்ணுக்கு தைரியம் ஊட்டும் காலகட்டத்துக்கு நாம் வந்துவிட்டோம். இறைவி திரைப்படத்தில் திருமணமாகி, குழந்தை பெற்ற ஓர் இளம் பெண், தன்னை காதலிப்பதாகச் சொல்லும் வேற்று ஆணிடம், எனக்குத் திருமணமாகிவிட்டது, குழந்தை இருக்கிறது, ஆனால், என்னை யாரும் காதலித்ததில்லை, நீதான் முதல் என்று சொல்கிறார். இந்த வசனமும் அதில் உள்ள விசனமும் பெண்கள் தங்கள் தனிப்பட்ட உறவுகளில் எதிர்கொள்கிற பிரச்சனைகளை எடுத்துச் சொல்லிவிடுகிறது. இதுதான் யதார்த்தம்.
ஆனால், குருமூர்த்திக்கு பெண்கள் சந்திக்கிற பிரச்சனைகள் பற்றி அக்கறை இல்லை. அதை பயன்படுத்தி வன்முறையைத் தூண்டுவதுதான் அவரது நோக்கம். அமைதிப் பேச்சு வார்த்தை நடந்துவிட்டதே, வன்முறை வெடிக்காமல் போய்விட்டதே என்ற தவிப்பு அவரது கட்டுரையில் வெளிப்படுகிறது. அன்று நடந்தது அமைதிப் பேச்சும் அல்ல. வன்முறை நடக்காமலும் இல்லை. பெருமாள்முருகன் உடல்ரீதியாக தாக்கப்படவில்லை. ஆனால் தீயினாற் சுட்ட புண் உள்ளாறும், நாவினாற் சுட்ட வடு ஆறாது. அவர் தாக்கப்படுவார் என்பதற்கான அனைத்து நிலைமைகளும் அன்று இருந்தன. பெருமாள் முருகன் அனைத்தையும் தவிர்த்தார்.
சல்மான் ருஷ்டியின் புத்தகம் தடை செய்யப்பட்டிருக்காவிட்டால் கலவரம் வெடித்திருக்கும் என்று சொல்லும் குருமூர்த்தி மாதொருபாகன் நூலுக்கு தடை விலக்கப்பட்டால் வன்முறை வெடிக்க வேண்டும் என்று சொல்கிறார் என்றுதான் பொருள். இந்த விசயத்தில் நீதிமன்றத்தில் எதிர்முறையீடு செய்ததே ஆர்எஸ்எஸ் குருமூர்த்தியால் பொறுத்துக் கொள்ள முடியாத யதார்த்தமாக இருக்கிறது. தீர்ப்பு தனது முடிவுக்கு ஆதாரமாக பல வழக்குகளைச் சுட்டிக் காட்டியிருப்பதால், சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் தடை செய்யப்பட்ட பல புத்தகங் களை பட்டியலிட்டு அந்தப் புத்தகங்கள் விசயத்தில் நீதிமன்றக் கதவுகளைத் தட்டாதவர்கள் இதற்கு ஏன் நீதிமன்றத்துக்குப் போனார்கள் என்று கேட்கிறார். அவற்றுக்கெல்லாம் போகவில்லை என்பதால், இதற்கும் போகக் கூடாது என்று கட்டளையிடும் அதிகாரம் படைத்த இடத்தில் குருமூர்த்தி நேரடியாக இல்லை.
திருச்செங்கோடு மக்கள் அமைதிப் பேச்சு வார்த்தை நடத்தியது தவறா? பல பிரச்சனை களில் காவல்துறையினர் அமைதிப் பேச்சுக்கு முற்படுகிறார்கள், பிரச்சனையைத் தீர்க்கிறார்கள், அதுவும் கட்டப்பஞ்சாயத்துதானா? இந்த கட்டத்தில் குருமூர்த்தி எழுப்பும் இந்தக் கேள்விகள் மிகவும் ஆபத்தானவை. யுவராஜ் நடத்திய கட்டப்பஞ்சாயத்துகள் விளைவாகத்தான் கோகுல்ராஜ் கொலை நடந்தது. ராமதாஸ், காடு வெட்டி குரு போன்றவர்கள் நடத்திய கட்டப் பஞ்சாயத்துகளுக்குப் பிறகுதான் நாயக்கன்கொட்டாயும் மரக்காணமும் நடந்தன. பெருமாள்முருகன் அறிவித்த மரணத்துக்கு யுவராஜ் நடவடிக்கைகள் முக்கிய காரணம். ஜாட்டுகள் நடத்திய மகாபஞ்சாயத்துக்குப் பிறகுதான் முசாபர்நகர் பற்றியெரிந்தது. இதுபோன்ற கட்டப் பஞ்சாயத்துகளுக்கு நீதித்துறை வழிகாட்டுதல்கள் தர வேண்டும் என குருமூர்த்தி சொல்வது சட்டத்துக்கு அப்பாற்பட்ட சமூகரீதியிலான அதிகார மய்யங்களுக்கு, அவற்றின் ஜனநாயக விரோத செயல்பாடுகளுக்கு அங்கீகாரம் வழங்குவதாகவே இருக்கும்.
குருமூர்த்தி சுதந்திர இந்தியாவில் தடை விதிக்கப்பட்ட புத்தகங்களைப் பட்டியலிடுவது போல், சுதந்திர இந்தியாவில் தலித் மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களையும் பட்டியலிட முடியும். தமிழ்நாட்டில் வெண்மணி முதல் சங்கர் வரை தலித் மக்கள் மீது நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதல்களில் இன்னும் அவர்களுக்கு நீதி வழங்கப்படவில்லை.
அரசமைப்புச் சட்டத்தின் கருத்துச் சுதந்திரம் யாருடைய கண்ணியத்தையும் பாதிப்பதாக, யாரையும் களங்கப்படுத்துவதாக, வன்முறையைத் தூண்டுவதாக இருக்கக் கூடாது என்று அரசமைப்புச் சட்டம் வரையறுத்துள்ளதாக குருமூர்த்தி சொல்கிறார். மாதொருபாகன் நூல் தொடர்பான பிரச்சனைகள் ஜனநாயகரீதியாக முடிவுக்கு வரும்போது, குருமூர்த்தியின் கருத்துச் சுதந்திரம் திட்டமிட்டு வன்முறையை தூண்டுகிறது. வன்முறையை தூண்டும்படி செயல்பட்டதற்காக, எழுதியிருப்பதற்காக இப்போது கைது செய்யப்பட வேண்டியவர் குருமூர்த்திதான்.