COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Friday, April 30, 2021

மே தினம் வெல்லட்டும்

மூடத்தனமாகவும் குற்றமய அலட்சியத்தோடும்

மக்களை துன்புறுத்தும் மோடி அரசே பதவி விலகு!

இந்தியா சொல்கிறது: மோடியே பதவி விலகு! இந்திய மக்கள் சொல்கிறார்கள்: மோடியே, நீங்கள் இனியும் பிரதமராகத் தொடர்ந்தால் நாடு தாங்காது.

உயிர் காக்கும் மருந்துகள் கள்ளச் சந்தைக்குச் சென்றுள்ளன. இருநூறு கோடி தடுப்பூசிகள் வேண்டும் என்ற குறைந்தபட்ச அறிவுபூர்வ புரிதலும் அறிவியல் அணுகுமுறையும் ஆட்சியாளரிடம் இல்லை. தலைநகர் டில்லியின் மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லை. உயிர் காக்கும் ஆக்சிஜன் இல்லை. போதுமான மருத்துவர், பணியாளர் இல்லை.

கவலை, அச்சம், கையறுநிலை, இயலாத கோபம், விரட்டும் மரணம், இடமில்லா சுடுகாடுகள், இடுகாடுகள், பிணங்கள் எரிக்கப்படும் புகை மூட்டம் என இந்தியா மூச்சுத் திணறுகிறது.

உயர்நீதிமன்றங்கள் கிடுக்கிப் பிடி போட்டு கேள்வி கேட்கும்போது, மோடி பக்தர்கள், மரம் வளர்த்தால் ஆக்சிஜன் பிரச்சனை தீரும் என்று ஆணவத்துடன் ஆலோசனை சொல்கிறார்கள். அரச நீதிமன்றமாகிவிட்ட உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற விமர்சனங்களை, கேள்விகளை மழுங்கடிக்கப் பார்க்கிறது. உச்சநீதிமன்றமும் ஒன்றிய அரசும் மாநில அரசும், விவரங்கள், தரவுகள் எதுவும் தராமல், கொரோனா, ஆக்சிஜன் என உணர்ச்சிமய வசனம் பேசி, எரிகிற வீட்டில் பிடுங்கிய மட்டும் லாபம் என, ஆட்கொல்லி ஸ்டெர்லைட்டை திறக்கப் பார்க்கிறார்கள். கெடுவாய்ப்பாக, தேசத்தின் பிரச்சனை என்ற ஆளும் கூட்ட கருத்தொற்றுமையில், தமிழ்நாட்டின் எதிர்க்கட்சி கூட்டணியும் சிக்கிக் கொண்டுவிட்டது.

குற்றவாளி கூண்டில் மோடியை நிறுத்துவோம்!

உரிய காலத்துக்கு முன்னரே அரித்துவார் கும்பமேளாவுக்கு அனுமதி, மேற்கு வங்கத் தேர்தல் பரப்புரை கூட்டங்களில் பெரும் கூட்டம் சேர்ப்பது என கொரோனாவைப் பரப்பும் குற்றத்தை செய்தது நீங்கள்தான்.

கொரோனாவை வீழ்த்திவிட்டு, மானுடம் காப்பதில் உலகுக்கு உதவினோம் என்று வசனம் பேசிய மோடியும் கொரோனாவை வெற்றி கொண்ட வீரர் என்று மோடியை பாராட்டி தீர்மானம் போட்ட பாஜகவும்தான், மூடத்தனத்தால், முரட்டுத்தனத்தால், கொரோனா இரண்டாவது அலை மக்களை வேட்டையாட அனுமதித்த குற்றவாளிகள் ஆவீர்கள்.

கோவேக்சின், கோவிஷீல்ட் உற்பத்தியை நாட்டுடைமையாக்காமல், புனாவாலாவும் கிரண் மஜ÷ம்தாரும் ஆயிரம் ஆயிரம் கோடிகள் சம்பாதிக்க அனுமதித்ததும் நீங்கள் செய்த குற்றமே.

நூறு கோடி பேரை துன்பத்தில் தள்ளி, அம்பானியும் அதானியும் 3.75 லட்சம் கோடி கூடுதல் சொத்து சேர்க்க வழி செய்த குற்றத்துக்கும் நீங்களே பொறுப்பு.

மக்களை நிம்மதியாக வாழவிடாத 

விவசாயிகளை வாட்டி வதைக்கிற 

தொழிலாளர்களை தாக்குகிற

ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கிற

இளையோர் எதிர்காலத்தை இருட்டில் தள்ளுகிற

தலித்துகள், பெண்கள், சிறுபான்மையினரை அச்சமூட்டுகிற

அவர்கள் சுதந்திரத்தைப் பறிக்கிற

மாநில உரிமைகளை விழுங்குகிற

பெரும்பஞ்சத்தில் உயிரிழந்தவர்களை விட

அதிக எண்ணிக்கையிலான மக்களை

கொரோனாவால் சாகவிட்டுள்ள

செயற்கைப் பேரிடரான முதலாளித்துவத்தை

இயற்கைப் பேரிடரில் வேட்டையாடவிட்ட

மோடி அரசை

மே நாளில் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவோம்!

மக்கள் நீதிமன்றத்தில் ஏற்கனவே குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதால்

மோடி அரசு உடனடியாக பதவி விலக வேண்டும் என்று

தண்டனை வழங்குவோம்!

கம்யூனிஸ்ட் கட்சி (CP)

இடது தொழிற்சங்க மய்யம் (LTUC)

தோழர் கூடம், 23 , மாரியம்மன் கோயில் தெரு, கல்யாணபுரம், அம்பத்தூர், சென்னை - 600053.   7358214170

 

 

Tuesday, April 13, 2021

தலையங்கம்

 சாதிவெறிப் படுகொலைச் சங்கிலி
உடைத்தெறியப்பட வேண்டும்


அரக்கோணம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சோகனூரைச் சேர்ந்த அர்ஜுனும் சூர்யாவும் தலித்துகள். ஒருவருக்கு எட்டு மாதங்களுக்கு முன் ஒரு குழந்தை பிறந்தது.  இன்னொருவருக்குஆறு மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது.

சாதியற்றவனின் மரணம்
 

சுகிர்த ராணி
09.04.2021


நீங்கள் யாவற்றையும் எழுதுங்கள்

ஒரு ரயில் நிலையத்தில் அமர்ந்துகொண்டு
அதன் நடைபாதையில்
கொட்டிக் கிடக்கும் மஞ்சள் பூக்களை

தூரத்தில்
தாய்ப்பால் புகட்டியபடி
வேர்க்கடலையைப் படி நிறைய
அளந்து விற்கும் பெண்ணொருத்தியின்
தாய்மை பூத்திருக்கும் முகத்தை

சிதிலமடைந்த கற்கோவிலின்
படியிலமர்ந்து
உங்கள் முகத்தை நீங்களே ஏந்தி
தொல்பொருளாய்க் காத்திருக்கும்
அந்த ஏகாந்தத்தை

நீங்கள் யாவற்றையும் எழுதுங்கள்
உங்கள் பண்ணைநிலம் ஊடாக
நடக்கும்போது
நடவு நடும் பெண்ணின்
ரவிக்கைக் கிழிசலை மறைக்க
நீங்கள் வீசி எறிந்த
துண்டின் பெருமையை

வீட்டு முற்றத்தில்
காலைநேர தேநீரை
நீங்கள் அருந்தும்போது
நேநீர்க் கோப்பையின் நிழலில்
இளைப்பாறும் சிட்டுக்குருவியை

நீங்கள் யாவற்றையும் எழுதுங்கள்

இராக்கால மொட்டைமாடி பொழுதுகளில்
எரிந்து விழும் நட்சத்திரங்களுக்கிடையே
குளிர்ந்து வீசும் தென்றலை

உங்களுக்கான மர அலமாரியில் ஒளித்து வைத்திருக்கும்
உங்கள் காதலியுடையதோ காதலனுடையதோ
பழந்துணியின் வாசத்தை

நீங்கள் யாவற்றையும் எழுதுங்கள்

ஆனால் ஒருபொழுதும்
எழுதி விடாதீர்கள்

அரிவாளால் வெட்டுண்டு
ஈ மொய்த்தபடி
வாய் பிளந்து கிடக்கும்
ஒரு சாதியற்றவனின் மரணத்தை.

டாக்டர் அம்பேத்கர் பக்கம்


தீண்டப்படாதவர்கள் மனித மாண்பைத் திரும்பப் பெறுகிற வரையில் ஓயமாட்டோம்


(ஜெய்பீம் வாசகர்களுக்கு
டாக்டர்  அம்பேத்கரின் செய்தி)
ஜெய்பீம், சென்னை,
டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் சிறப்பு மலர்
ஏப்ரல் 13, 1947
பக்கம் 113 - 116, தொகுதி 36
பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர்
நூல் தொகுப்பு


என்னுடைய 55வது பிறந்தநாளை முன்னிட்டு உங்களுடைய சிறப்பு மலருக்கு ஒரு செய்தி அனுப்புமாறு என்னை நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.

பெரியார் சொல் கேளீர்.....

வரி குறைப்பு எங்கே?

19.09.1937 , குடி அரசு, தலையங்கம்


பெரியாரின் எழுத்தும் பேச்சும் - தொகுதி 25, பக்கம் 149 - 151
குடி அரசு, 1937  (2)


புரோகிதக்  கூட்டத்தார்  தேசாபிமானம்  என்னும்  போர்வையைப் போர்த்துக்கொண்டு  பாமர மக்களை ஏமாற்றி பதவியடைவதற்குச்  செய்த சூழ்ச்சிகளில் பெரியது சகல துறைகளிலும் வரிகளைக் குறைத்து விடுவதாகக் கூப்பாடு  போட்டு  மக்களை ஏமாற்றினதாகும்.

வுட்ராதீங்க யப்போவ்! வுட்ராதீங்க யம்மோவ்!
வுட்ராதீங்க யண்ணோவ்! வுட்றாதீங்க யக்கோவ்!
வுட்ராதீங்க! வுட்ராதீங்க! வுட்ராதீங்க!


எஸ்.குமாரசாமி


கர்ணன் படம் எடுத்துள்ள மாரி செல்வராஜ் 2018 இறுதியில் தென் தமிழ்நாட்டு தலித் வாழ்க்கையை, அது சந்திக்கும் ஒடுக்குமுறையை, அதன் வலியை, தவிப்பை, அதன் வேட்கையை 'பரியேறும் பெருமாளின்' பரியன் மூலம் உயிர்ப்போடு காட்சிப்படுத்தினார்.

 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021
அம்பத்தூர் 008 தொகுதி


தயாரிப்புகள், நடந்த வேலைகள், காத்திருக்கும் கடமைகள்


எஸ்.குமாரசாமி


11.10.2019 அன்று கம்யூனிஸ்ட் கட்சியை நாம் நிறுவினோம். அதற்கு பிறகு விறுவிறுப் பாகவும் தொடர்ச்சியாகவும் வேலைகள் நடந்து வந்தன.

 தமிழக தொழிலாளர் வர்க்கத்திற்கு மேலும் ஒரு வெற்றி


10பி என்ற சட்டப் பிரிவு   தமிழ்நாடு சட்டமன்றத்தால் 15.08.1982 முதல் மத்திய தொழில் தகராறு சட்டம், 1947ல் கொண்டு வரப்பட்டது.

Search