COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Friday, May 7, 2021

 தலையங்கத்துக்குப் பதிலாக

மூடத்தனமாகவும் குற்றமய அலட்சியத்தோடும்
மக்களை துன்புறுத்தும்
மோடி அரசே பதவி விலகு
!


இந்தியா சொல்கிறது: மோடியே பதவி விலகு!
இந்திய மக்கள் சொல்கிறார்கள்: மோடியே, நீங்கள் இனியும் பிரதமராகத் தொடர்ந்தால் நாடு தாங்காது.

 மோடியால் தண்டிக்கப்படும் மக்கள்
மோடியை தண்டிக்காமல் விட்டுவிடுவார்களா?


எஸ்.குமாரசாமி


கொரோனா பரவ காரணமாக இருந்த மோடி கும்பல், கொரோனா பரவி பாதிப்புக்கு உள்ளாக்கி உயிர்ப்பலி வாங்கியபோது கையைப் பிசைந்து நின்றது. அரசின் கையாலாகாத்தனம் நீதிமன்றத்தால் கேள்விக்குள்ளாக்கப்பட்டு, ஒன்றிய அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்தித்தபோது, உச்சநீதிமன்றம்தான் ஒன்றிய அரசை மீட்க வேண்டியிருந்தது.

 ஊழல் மலிந்த அடிமை அஇஅதிமுக அரசு,
அதன் பிற்போக்கு கூட்டணி முறியடிக்கப்பட்டுள்ளது!


எஸ்.குமாரசாமி


திமுக அணி வெற்றி பெற்றுவிட்டது. 159 இடங்களுடன் ஆட்சி பொறுப்பேற்றுவிட்டது. அலை எதுவும் அடித்து, ஜெயலலிதா தோற்ற காலங்களைபோல், அதிமுகவை துடைத்தெ றிந்துவிடவில்லை.

 கம்யூனிஸ்ட் கட்சி, அம்பத்தூர் தொகுதியில் மிகப்பெரிய பொதுக்கூட்டங்கள், இருசக்கர வண்டி பேரணிகள், கவனத்தை ஈர்க்கும் பிரசுரங்கள் உள்ளிட்ட ஆகச்சிறந்த தேர்தல் பரப்புரையை கட்டமைத்தது. தேர்தலுக்கு முன்பும், தேர்தல் நேரத்திலும் நடந்த போராட்டங்கள், கட்சிக்கு நன்மதிப்பை தேடித் தந்தன. ஆனாலும் ஓர் அரசியல் கட்சியாக, கட்சியின் குறுகிய செல்வாக்கு, கிட்டத்தட்ட இல்லாத வேர்க்கால் மட்ட அமைப்பு, சென்னை, திருவள்ளூரில் வீசிய திமுக ஆதரவு அலை என்ற பின்னணியில், கட்சி 807 வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது.

 கோவை பிரிக்காலில்


தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வியது
மீண்டும் தர்மமே வென்றது
!


ஜெயபிரகாஷ் நாராயணன்


2017ல் தமிழ்நாடு நூற்றாண்டு கால வரலாறு காணாத கடும் வறட்சியை சந்தித்தது. தமிழ்நாட்டு விவசாயிகள் கொத்துக் கொத்தாக செத்து மடிந்தனர். விவசாயத்தையே நம்பி வாழ்ந்த விவசாயத் தொழிலாளர்கள் வேலை, வருமானமின்றி பெரும் துன்பத்திற்கு ஆளாயினர்

 10 பி இல்லனா பத்தாது!
 அய்ந்து முறை பெற்ற கதை!


எஸ்.குமாரசாமி


இந்தியாவில் தொழில் தகராறுகள் சட்டம் 1947லிருந்து, செயல்பட்டு வருகிறது. தொழிலாளர் தொடர்பான சட்டங்கள், அரசியலமைப்புச் சட்டத்தின் பொதுப் பட்டியலுக்கு concurrent list உட்பட்டவையாகும்.

டாக்டர் அம்பேத்கர் பக்கம்


இந்துப் பெண்ணின் எழுச்சியும் வீழ்ச்சியும்
இதற்கு யார் பொறுப்பு?


மகாபோதி சஞ்சிகை,
மே -  ஜுன், 1951
பக்கம் 167 - 177, தொகுதி 36
பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர்
நூல் தொகுப்பு


.....இந்தியாவில் பெண்களின் நிலை ஒரு காலத்தில் இருந்ததிலிருந்து பெரும் வீழ்ச்சியடைந்துள்ளது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

பெரியார் சொல் கேளீர்.....


சீர்திருத்தமா?
அழிவு வேலையா?


13.01.1945 , குடி அரசு
பெரியார் இன்றும் என்றும்
தொகுதி 25, பக்கம் 353 – 354


1944, டிசம்பர் 29 - 31 தேதிகளின் கான்பூரில் நடந்த
அகில இந்திய பிற்படுத்தப்பட்ட பார்ப்பனரல்லாதார் மாநாட்டு தலைமையுரை


தோழர்களே! தாய்மார்களே!
சாதி முறைகள் என்பவையெல்லாம் இந்து மதத்தினுடைய சிருஷ்டியேயாகும். இந்து கடவுள்கள் பேராலும் சாஸ்திரங்கள் பேராலுமேதான் அவை நிலை நிறுத்தப்படுகின்றன.

 

"ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத கதை"

மக்களின் பிரச்சனையை காரணம் காட்டி புறவாசல் வழியே மீண்டும் நுழைய முயற்சிக்கும் ஸ்டெர்லைட் கார்ப்பரேஷன்

ஆர்.வித்யாசாகர்
 

சுற்றுப்புற சூழலை நச்சாக்கி மக்கள் சுவாசிக்கும் ஆக்சிஜனை காணாமல் அடித்து, 13 உயிர்களை துப்பாக்கி சூட்டிற்கு பலியாக்கிய ஸ்டெர்லைட்  ஆலை மக்களின் போராட்டங்களின் காரணமாக 3 ஆண்டுகளாக  மூடப்பட்டு இருக்கிறது.

Search