கம்யூனிஸ்ட் கட்சி, அம்பத்தூர் தொகுதியில் மிகப்பெரிய பொதுக்கூட்டங்கள், இருசக்கர வண்டி பேரணிகள், கவனத்தை ஈர்க்கும் பிரசுரங்கள் உள்ளிட்ட ஆகச்சிறந்த தேர்தல் பரப்புரையை கட்டமைத்தது. தேர்தலுக்கு முன்பும், தேர்தல் நேரத்திலும் நடந்த போராட்டங்கள், கட்சிக்கு நன்மதிப்பை தேடித் தந்தன. ஆனாலும் ஓர் அரசியல் கட்சியாக, கட்சியின் குறுகிய செல்வாக்கு, கிட்டத்தட்ட இல்லாத வேர்க்கால் மட்ட அமைப்பு, சென்னை, திருவள்ளூரில் வீசிய திமுக ஆதரவு அலை என்ற பின்னணியில், கட்சி 807 வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது.