களம்
சென்னையில்
கடவுச் சீட்டு
அலுவலகம் சிதம்பரம்
வீடு முற்றுகை
இலங்கை
தமிழர் படுகொலைக்கு
எதிராக, அய்நா
சபையில் அமெரிக்கா
கொண்டு வரும் தீர்மானத்தை
ரத்து செய்து,
சுதந்திரமான பாரபட்சமற்ற
விசாரணை நடத்த
இந்தியா தீர்மானம்
கொண்டு வர தமிழகம்
முழுக்க மாணவர்கள்
பள்ளி, கல்லூரிகளில்
வேலை நிறுத்தம்
செய்து, பல்வேறு
கட்ட போராட்டங்களை
மத்திய, மாநில
அரசுகளை நிர்ப்பந்தப்படுத்தும்
விதத்தில் நடத்திக்
காட்டினர்.
இந்த
பின்னணியில் ஜெனிவாவில்
அமெரிக்க தீர்மானத்தின்
மீது வாக்கெடுப்பு
நடந்த 21.03.2013 அன்று
கொடுங்கோலன் ராஜபக்சேவை
சர்வதேச நீதிமன்றத்தில்
போர்க் குற்றவாளியாக்கி
தண்டிக்க வேண்டுமென்றும்,
இலங்கை தமிழர்
படுகொலை மீது சுதந்திரமான,
பாரபட்சமற்ற விசாரணை
நடத்த இந்தியா
தீர்மானம் கொண்டு
வர வேண்டுமென்றும்,
அமெரிக்க தீர்மானம்
ரத்து செய்யப்பட
வேண்டுமென்றும்,
இலங்கை தமிழர்கள்
மீள்குடியேற்றம்,
சம உரிமை, ராணுவ
ஆக்கிரமிப்பு
அகற்றுதல் உறுதி
செய்யப்பட வேண்டுமென்றும்,
தமிழகத்தில் உள்ள
இலங்கை தமிழ் அகதிகளை
மத்திய, மாநில
அரசுகள் இரண்டாம்
தர குடிமக்களாக
நடத்தாமல், இந்திய
மக்களுக்கு இருப்பதுபோல்
சம உரிமை வழங்கப்பட
வேண்டுமென்றும்,
தமிழக மீனவர்கள்
மீது இலங்கை ராணுவம்
தொடர்ந்து தாக்குவதை
தடுத்து நிறுத்த
வேண்டு என்றும்
கேரள மீனவர்களை
சுட்டுக் கொன்ற
இத்தாலி ராணுவர்
வீரர்களை திரும்ப
இந்தியா கொண்டு
வந்து சிறையிலடைக்க
வேண்டுமென்றும்
வலியுறுத்தி அகில
இந்திய மாணவர்
கழகமும் புரட்சிகர
இளைஞர் கழகமும்
சென்னையில் உள்ள
பல மத்திய அலுவலகங்களை
உள்ளடக்கிய சாஸ்திரி
பவனை பூட்டுப்
போடும் போராட்டம்
நடத்தின.
மாணவர்களும்
இளைஞர்களும் போராட்டத்தை
துவங்கி சாஸ்திரி
பவன் உள்ளே நுழைய
முயற்சித்தபோது
காவல் துறையினர்
தடுத்தனர். காவல்
துறையினரை தள்ளிவிட்டு
உள்ளே நுழைந்த
தோழர்கள் 5 தளங்களுக்கு
மேல் உள்ள அலுவலகத்தை
ஆக்கிரமித்தனர்.
தோழர்களை காவல்
துறையினர் கைது
செய்ய பெரிய கயிறு
கொண்டு வந்தனர்.
ஒவ்வொரு தோழரையும்
இழுத்துப் பிடித்து
வாகனத்தில் ஏற்றினர்.
வாகனம்
சாலைக்கு வந்தபோது
இன்னொரு மாணவர்
பிரிவினர் போராட்டம்
நடத்திக் கொண்டிருந்ததால்
வேனில் இருந்து
குதித்து கீழே
இறங்கி மத்திய
நிதியமைச்சர்
ப.சிதம்பரம் வீட்டை
நோக்கி பேரணியாக
முற்றுகையிட முயன்றனர்.
மாணவர்கள்
இளைஞர்களின் போராட்டத்தால்
காவல்துறையே சாஸ்திரி
பவன் அலுவலகத்துக்கு
பூட்டு போட்டது. உள்ளே
இருந்தவர்கள்
வெளியே வராதவாறு
காவல்துறை பார்த்துக்
கொண்டது. பூட்டு
சங்கிலி உடைத்து
உள்ளே நுழைய முயற்சித்தபோது
மாணவர்களும் இளைஞர்களும்
காவல் துறையினரால்
குண்டுகட்டாக
தூக்கப்பட்டு,
தரதரவென இழுக்கப்பட்டு
வேனில் ஏற்றப்பட்டு
கைது செய்யப்பட்டனர்.
இந்த
போராட்டத்தில்
அகில இந்திய மாணவர்
கழகத்தை சேர்ந்த
தோழர்கள் மலர்விழி,
சீதா, கண்ணன், முன்னணி
பங்காற்றினர். புரட்சிகர
இளைஞர் கழகத்தை
சேர்ந்த தோழர்கள்
ராஜகுரு, சுஜாதா,
ஜான்பால், உமாசங்கர்,
ராஜலட்சுமி, அகில
இந்திய முற்போக்கு
பெண்கள் கழகத்தை
சேர்ந்த தோழர்
லில்லி, உழைப்போர்
உரிமை இயக்கத்தை
சேர்ந்த தோழர்கள்
மோகன், பசுபதி,
முனுசாமி, வேணுகோபால்,
ஸ்ரீதர், எல்லப்பன்,
கணேசன், ஏஅய்சிசிடியுவில்
இருந்து தோழர்கள்
கதிரேசன், ஜேம்ஸ்
மற்றும் பல மாணவர்,
இளைஞர், தொழிலாளர்
அரங்கத் தோழர்கள்
கலந்து கொண்டனர்.
போராட்டத்தில்
இந்திய கம்யூனிஸ்ட்
கட்சி (மார்க்சிஸ்ட்
- லெனினிஸ்ட்) மாநிலக்
குழு உறுப்பினர்
தோழர் எ.எஸ்.குமார்
கலந்து கொண்டார்.
புரட்சிகர
இளைஞர் கழக தேசிய
செயலாளர் தோழர்
பாரதி தலைமை வகித்தார்.
- மலர்விழி
******************
தலையங்கம்
போட்டி அரசியலுக்கு
மாற்று போராட்ட
அரசியலே
முதலாளித்துவ
அரசியல் நடவடிக்கைகளின்
மிகவும் தாழ்ந்த
மட்டங்களை தமிழ்நாட்டு
மக்கள் கடந்த சில
வாரங்களாக பார்க்க
நேரிட்டுள்ளது. திராவிடக்
கட்சிகளுக்குள்
நடக்கும் போட்டி
அரசியலில் அது
வெளிப்படுகிறது.
ஆட்சி, அதனால்
கிடைக்கும் அதிகாரம்,
அதன் மூலம் தானாகச்
சேரும் செல்வம்,
பிற வசதிகள் என்பவற்றுக்கு
அப்பால் அரசியல்
என்று ஏதும் இல்லை
என்று தமிழ்நாட்டின்
இரண்டு பெரிய திராவிடக்
கட்சிகள் சுருக்கி,
குறுக்கிவிட்டதை
அது காட்டுகிறது.
இலங்கை
தமிழர்கள் பிணத்தின்
மீது அரசியல் நடத்துவதில்
கேவலமான போட்டி
நடக்கிறது. நவம்பர்
மாதம் நடக்கவுள்ள காமன்வெல்த்
நாடுகள் உச்சிமாநாட்டில்
இந்தியா கலந்து
கொள்ளக் கூடாது
என்று ஜெயலலிதாவும்
கருணாநிதியும்
இப்போதே சொல்கிறார்கள்.
அதிமுக
- திமுக போட்டியில்
இலங்கைத் தமிழர்
நலனை விட 2014 தேர்தல்
நலனே முன்னிற்கிறது
என்பதை அவர்களால்
மறைக்க முடியவும்
இல்லை. போகிற
போக்கில், இலங்கை
தமிழர்களை அஇஅதிமுகவிடம்
இருந்தும் திமுகவிடம்
இருந்தும் பாதுகாக்க
வேண்டிய நிலை கூட
ஏற்பட்டுவிடலாம்.
போர் என்றால் பொதுமக்கள்
கொல்லப்படுவது
சகஜம் என்று சொன்ன
ஜெயலலிதாவும்,
போர் நிறுத்தம்
கோரி 2 மணி நேரத்துக்கு
உண்ணாவிரதம் இருந்த
கருணாநிதியும்
சொல்வதை கேட்டுக்
கொள்ளும் மனநிலையில்
மக்களும் இல்லை.
இலங்கை
தமிழர்கள் பற்றி
மாறி மாறி இவ்வளவு
அக்கறை காட்டுகிற
ஜெயலலிதாவும்
கருணாநிதியும்
தமிழ்நாட்டில்
உள்ள தமிழர்களைப்
பற்றி இத்தனை ஆண்டுகளாக
கொஞ்சம் கூட அக்கறை
காட்டியவர்கள்
இல்லை. தமிழக மீனவர்
பற்றி ஜெய லலிதாவும்
கருணாநிதியும்
பேசுவது கூட அது
இலங்கை அரசுடன்
தொடர்புடைய பிரச்சனை
என்பதாலேயே தவிர
தமிழக மீனவர்கள்
இலங்கை கடற்படையினரால்,
சுட்டுக் கொல்லப்படுவதாலோ,
அரிவாள் வெட்டுக்கு
ஆளாவதாலோ இல்லை.
ஜெயலலிதாவைப்
பொறுத்தவரை அதில்
மத்திய அரசையும்
கருணாநிதியையும்
தனித்தனியாகவும்
ஒன்று சேர்த்தும்
விமர்சிக்க முடியும்.
கருணாநிதியைப்
பொறுத்தவரை மத்திய
அரசை எதிர்ப்பதுதான்
சங்கடமே தவிர ராஜபக்சேயை
இன்றைய நிலைமைகளில்
பகைத்துக் கொள்வதில்
பிரச்சனை ஏதும்
இல்லை. இப்போதும்
எங்களுக்கு ஆட்சியை
கவிழ்க்கும் நோக்கம்
இல்லை என்றுதான்
கருணாநிதி சொல்கிறார்.
ராமேஸ் வரம் மீனவர்களுக்கு
மீன்பிடிக்க மீன்வளம்
நிறைந்த கடல் பகுதியை
குத்தகைக்கு எடுத்துத்
தர வேண்டும் என்று
கேட்கி றார்களே,
செய்வார்களா ஜெயலலிதாவும்
கருணாநிதியும்?
இந்தப்
போட்டியின் கெடுவிளைவுகள்
இப்போதே தெரிய
துவங்கிவிட்டன. கலங்கிய
குட்டையில் மீன்பிடிக்க
இலங்கை அரசுக்கு
இடம் கொடுப்பது
வரை இந்தப் போட்டி
இட்டுச் சென்றுவிட்டது.
இலங்கை தூதர் தங்களை
இந்திய பூர்வகுடிகள்
என்று சொல்ல, இலங்கை
அரசு, கிரிக்கெட்
போட்டியில் இலங்கை
வீரர்கள் விளையாடுவதற்கு
எதிர்ப்பு எழுந்துள்ள
விசயத்தில் தமிழக
அரசின் அணுகுமுறையை
சாடியுள்ளது. தமிழர்களின்
ரத்தக் கறையைக்
கழுவ முடியாத பேரினவாத
அரசாங்கம், இந்தப்
போட்டியை பயன்படுத்திக்
கொண்டு, தான் பாதிக்கப்பட்டுவிட்டதாக,
பழிவாங்கப்படுவதாகக்
காட்டப் பார்க்கிறது.
தமிழகம் நோக்கி
கண்டனக்குரல்
எழுப்புகிறது.
உண்மையில்,
இலங்கை தமிழர்
உரிமைப் பிரச்சனையை
ஜெயலலிதாவும்
கருணாநிதி யுமாகச்
சேர்ந்து கேலிக்கூத்தாக்கி
விடுவதை தமிழக
மாணவர் போராட்டம்
தடுத்துள்ளது. ஜெயலலிதா,
கருணாநிதி இருவரையும்,
அவர் கள் நோக்கத்தையும்
அம்பலப்படுத்தியுள்ளது.
கல்வி
கெட்டுப்போகுமே
என்று ஜெய லலிதா
கவலைப்பட்டபோது,
அது கெடாமல் நாங்கள்
பார்த்துக் கொள்கிறோம்
என்று மாண வர்கள் சொல்லிவிட்டார்கள்.
ஜெயலலிதாவின்
உண்மையான கவலை
மாணவர் போராட்
டத்தை கட்டுப்படுத்த
முடியாமல் போய்விடுமே
என்பதல்ல. கூடங்குளம்,
பரமக்குடி என தனது
அதிகார தாகத்தை
தணித்துக் கொண்ட
ஜெய லலிதாவின்
காவல்துறையைக்
கட்டுப்படுத்த
முடியாமல் போய்விடுமே
என்பதுதான்.
மாணவர்
போராட்டம் தீவிரமடைந்த
போது, இலங்கை தமிழர்
உரிமை காக்கும்
போராட்டம் ஜெயலலிதா
தலைமையில் நடக்க
வேண்டும் என்று
தா.பாண்டியன் சொன்னார். தேசிய
தீவிரவாத கட்டுப்பாடு
மய்யம் அமைக் கும்
பிரச்சனையில்
ஜெயலலிதா தலைமையில்
முதலமைச்சர்கள்
மாநாடு நடத்தப்பட
வேண் டும் என்று
அ.சவுந்தரராசன்
சொல்கிறார். மெரீனா கடற்கரையில்
போராட்டத்தில்
ஈடு பட்டிருந்த
மாணவர்களை சந்திக்க,
அவர்கள் மத்தியில்
பேச தா.பாண்டியன்
சென்றபோது, மாணவர்கள்
அவரை அனுமதிக்கவில்லை.
இது செய்திகள்
பல சொல்கிறது.
ஜெயலலிதாவோ
கருணாநிதியோதான்
எப்போதும் எல்லாவற்
றுக்கும் தலைமை
தாங்க வேண்டும்
என்றால், நாங்களே
பார்த்துக்கொள்கிறோம்
என்று அவர் கள்
சொல்வதுபோல் தெரிகிறது.
மாணவர்
போராட்டம் அரசியலற்ற
போராட்டம் என்று
ஜெயலலிதா ஆசுவாசப்
படுகிறார். போட்டி
அரசியல் நடத்துகிற
சீரழிந் துபோன
திராவிடக் கட்சிகளுக்கு
போராட்ட அரசியல்
அச்சுறுத்தலாகவே
இருக்கும். உண்மை யில் இந்த
சீரழிந்த போட்டி
அரசியலுக்கு மாணவர்
போராட்டம் போன்ற
போராட்ட அரசியல்தான்
பதிலாக இருக்க
முடியும்.
மாணவர்
போராட்டம் பற்றி
அக்கறை உள்ளவர்கள்,
காழ்ப்பு கொண்டவர்கள்
என வெவ்வேறு தரப்பில்
இருந்தும் விமர்சனங்கள்,
அறிவுரைகள் வந்த
வண்ணம் இருக்கின்றன. இனஉணர்வில்
தங்கள் முன்னிடத்தைப்
பிடிக்க முயற்சி
செய்யும் ஜெயலலிதாவும்,
கருணாநிதி யும்
ஜனநாயகம் என்ற
பிரச்சனையில்
எங்கு நிற்பார்கள்?
இலங்கை தமிழர்
பிரச்சனையை முன்னிறுத்துவதில்
இதுவே உரைகல்.
இலங்கை தமிழர்
பிரச்சனை இனப்பிரச்சனை
மட்டுமல்ல. ஜனநாயகப்
பிரச்சனையும்
கூட. ஜனநாயக விருப்பமும்,
அதற்கான பார்வையும்
போராட் டமும் இருந்தால்
மட்டுமே, இலங்கை
தமிழர் பிரச்சனையை
அதன் உண்மையான
பொருளில் அரசியலின்
மய்யத்துக்கு
கொண்டு வர முடியும்.
மாணவர் போராட்டம்
தனது ஓட்டத்தில்
இதை பார்த்துக்
கொள்ளும். இலங்கை தமிழர்
உரிமை காப்பது
மட்டுமின்றி, இந்திய,
தமிழகத் தமிழர்
உரிமை காப்பதும்
போராட்ட அரசியலால்
மட்டுமே சாத்தியம்.
பிரிக்கால்
தொழிலாளர்கள்
ஆர்ப்பாட்டம்
இலங்கை
தமிழர்கள் மீதான
கொடூரமான போர்க்குற்றங்கள்
முழுமையாக விசாரணைக்கு
உட்படுத்தப்பட்டு,
குற்றவாளிகளுக்கு
கடுமையான தண்டனை
வழங்கப்படுவதை
சர்வதேச சமூகம்
உறுதி செய்யக்கோரி
21.03.2013 அன்று பிரிக்கால்
தொழிலாளர்கள்
கோவை பிரிக்கால்
பிளாண்ட்1, பிளாண்ட்3
வாயில்களில் ஆர்ப்பாட்டங்கள்
நடத்தினர். பிளாண்ட்
1 முன்பு நடைபெற்ற
ஆர்ப்பாட்டத்தில்
மாலெ கட்சி மாவட்ட
செயலாளர் தோழர்
பாலசுப்ரமணியம்,
புரட்சிகர இளைஞர்
கழக மாநில அமைப்பாளர்
தோழர் வெங்கடாசலம்,
கோவை மாவட்ட பிரிக்கால்
தொழிலாளர் ஒற்றுமை
சங்கத்தின் தலைவர்
தோழர் ஜான் சுந்தரம்,
செயலாளர் சாமிநாதன்,
மற்றும் சங்க நிர்வாகிகள்,
மாவட்ட ஏஅய்சிசிடியு
நிர்வாகிகள் ரவிச்சந்திரன்,
கோட்டை பாலசுப்பிரமணியன்
ஆகியோர் உரையாற்றினர்.
பிளாண்ட் 3ல்
நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு
தோழர் மு.ஜெயப்பிரகாஷ்
நாராயணன் தலைமை
தாங்கினார். ஏஅய்சிசிடியு
மாநிலத் தலைவர்
தோழர் என்.கே நடராஜன்
உரையாற்றினார்.
இந்த ஆர்ப்பாட்டங்களில்
நூற்றுக்கணக்கான
தொழிலாளர்கள்
கலந்து கொண்டனர்.
வண்டலூர் பெரிய
ஏரி விவசாயத்திற்கு
ஆபத்து கண்டன பிரசுரம்
விநியோகித்த மாலெ
கட்சியினர் கைது
வண்டலூர்
பெரிய ஏரி விவசாயத்திற்கு
ஆபத்து வந்துள்ளது. கடந்த
ஆண்டு சரியாக மழை
பெய்யாததாலும்,
400 அடி வெளிவட்ட
சாலைக்காக ஏரியில்
பெரிய அளவு பள்ளங்கள்
எடுத்ததாலும்
ஏரிக்கு நீர் வரத்து
குறைவாகி 100 ஏக்கரில்
விவசாயம் செய்தவர்கள்
இன்று 60 ஏக்கர்
நிலப்பரப்பில்
பாசன கிணறுகள்
மூலம் விவசாயம்
செய்து வருகிறார்கள்.
சென்னை தவிர அனைத்து
மாவட்டங்களும்
வறட்சி மாவட்டங்களாக
தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில்
சென்னை பெருநகர
வளர்ச்சி குழுமம்
(சிஎம்டிஎ) வண்டலூர்
பெரிய ஏரி 65 ஏக்கர்
நஞ்சை நிலத்தில்
புறநகர் பேருந்து
நிலையம் அமைக்க
அரசுக்கு பரிந்துரை
செய்துள்ள விவரம்
வெளியாகியுள்ளது.
இது, சிறு விவசாயிகளை
பெரிதும் மன வேதனைக்கு
உள்ளாக்கியுள்ளது.
வண்டலூர்
வாலாஜாபாத் சாலை
விரிவாக்கத்திற்காக
வீடுகளையும், வீட்டுமனைகளையும்
இழந்த மக்கள் வண்டலூர்
பெரிய ஏரி விவசாயத்தை
மட்டுமே நம்பி
வாழ்ந்து கொண்டு
இருக்கிறார்கள்.
ஏற்கனவே வண்டலூர்
ஊராட்சியில் உயிரியல்
பூங்கா அமைப்பதற்காக
தமிழக அரசு ஓட்டேரி
ஏரியையும், விவசாய
நிலங்களையும்
கையகப்படுத்தியது.
400 அடி வெளிவட்ட
சாலைக்காகவும்,
தேசிய நெடுஞ்சாலை
விரிவாக்கத்திற்காகவும்
மக்கள் வீடுகளையும்,
வீட்டு மனைகளையும்
இழந்துள்ளனர்.
சிற்றேரி விவசாய
நிலங்களும் ரியல்
எஸ்டேட்டாக மாற்றப்பட்டு
விட்டன. மோனோ
இரயில், மெட்ரோ
ரயில் என்று அவற்றுக்காகவும்
நிலங்களை ஆர்ஜிதம்
செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.
ஒட்டுமொத்தத்தில்
வண்டலூர் ஊராட்சியில்
பெரிய அளவிற்கு
தமிழக அரசு நில
ஆர்ஜிதம் செய்துள்ள
சூழ்நிலையில்
வண்டலூர் பெரிய
ஏரி விவசாயத்தையும்
அழிக்க சிஎம்டிஎ
பரிந்துரை எந்த
வகையில் நியாயம்?
சிஎம்டிஎ வரையறைக்குள்
வராத வண்டலூர்
கிராமப்புற ஊராட்சியில்
உள்ள விவசாய நிலத்தை
ஆர்ஜிதம் செய்ய
பரிந்துரைப்பது
எந்த வகையில் நியாயம்?
மழைநீர்
சேகரிப்பு திட்டம்,
நீர் நிலைகளை பாதுகாக்கும்
திட்டம், நிலங்களை
ரியல் எஸ்டேட்
ஆக்க கூடாது என
விவசாயிகளை பாதுகாக்கும்
திட்டங்கள் இருப்பதாக
தமிழக அரசாங்கம்
சொல்கிறது. மேற்கு மாவட்டங்களில்
கெயில் நிறுவனம்
எரிவாயு குழாய்
பதிப்பதற்கு எதிர்ப்பு
தெரிவிக்கும்
விவசாயிகளின்
கருத்து கேட்பு
கூட்டம் நடத்தியது.
காவிரி பாசன விவசாயிகளை
பாதுகாப்பதாக
சொல்லிக் கொள்ளும்
தமிழக அரசின் கீழ்
இயங்கும் சென்னை
பெருநகர வளர்ச்சி
குழுமம் புறநகர்
பேருந்து நிலையத்திற்கு
வண்டலூர் பெரிய
ஏரி விவசாய நிலம்தான்
உகந்தது என்று
பரிந்துரை செய்வது
விவசாயத்தையும்,
சிறுவிவசாயிகளையும்
அழிக்கும் செயலாகும்.
தேசிய நெடுஞ்சாலைக்கு
மிக அருகில் அரசு
நிலங்களும், தரிசு
நிலங்களும் இருக்கும்
போது அவற்றை கையகப்படுத்தாமல்
ஏழை சிறு விவசாயிகள்
வயிற்றில் அடிப்பது
அநியாயம்.
வண்டலூர்
பெரிய ஏரி விவசாய
நிலத்தை ஆர்ஜிதம்
செய்வதால் சிறு
விவசாயிகள் மட்டும்
அல்லாமல் இந்த
விவசாயத்தை நம்பி
கூலி வேலை செய்யும்
நிலமற்ற விவசாய
தொழிலாளர்களின்
குடும்பங்களும்
அவர்களின் வாழ்வாதாரமும்
கடுமையாக பாதிக்கப்படும்.
சுற்றுச்சூழல்
கெடுவதுடன் மக்களின்
பொது சுகாதாரம்
பெரிதும் பாதிக்கப்படும்.
இது சிறு விவசாயிகளுக்கு
மட்டும் ஏற்பட
போகிற பாதிப்பல்ல.
வண்டலூர் ஊராட்சியில்
குடியிருக்கும்
அனைத்து மக்களுக்கும்
வரப்போகும் ஆபத்து.
வண்டலூர் பெரிய
ஏரியையும, விவசாயத்தையும்
பாதுகாப்பது அவசர
அவசிய கடமையாக
முன்னிற்கிறது.
வண்டலூர்
சிறு விவசாயிகள்,
விவசாயத் தொழிலாளர்கள்
நலன் காக்க, ஊராட்சி
மக்களின் நலன்
காக்க சிஎம்டிஎ
பரிந்துரையை ரத்து
செய்ய, மாற்று
இடத்தில் பேருந்து
நிலையம் அமைக்க
உத்தரவிட கோரி
இருவாகன பிரச்சாரம்
மேற்கொள்ள மாலெ
கட்சி திட்டமிட்டது.
காவல்துறை அனுமதி
மறுத்ததால்,
24.03.2013 அன்று மாலெ கட்சி
மாநிலக் குழு உறுப்பினரும்,
ஏஅய்சிசிடியு
மாநிலச் செயலாளருமான
தோழர் இரணியப்பன்
தலைமையில் துண்டுப்பிரசுரம்
விநியோகித்து
பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
துண்டுப் பிரசுர
விநியோகத்தில்
ஈடுபட்டிருந்த
தோழர் இரணியப்பன்
மற்றும் மாலெ கட்சி
மற்றும் ஏஅய்சிசிடியு
தோழர்களை காவல்துறையினர்
கைது செய்து அன்று
மாலை விடுவித்தனர்.
- சேகர்
******************
கட்டுரை
மறைமுக வரிக்குள்
மறைந்து கிடக்கும்
கொள்ளை
வசதி
படைத்தவர்களிடம்
இருந்து வாங்கி
வறியவர்களுக்கு
தருவது வரி விதிப்பின்
அய்தீகம் என்று
சொல்லப்படுகிறது. ஜனநாயக
நாட்டில் அனைவரும்
சமம் என்று சொல்லப்படு
வதால், நாட்டின்
முதல் பணக்காரரான
அம்பானி வரி கட்ட
வேண்டும். அய்டி நிறுவ
னத்தில் வேலை செய்யும்
அஸ்வின் வரி கட்ட
வேண்டும். அரசு அலுவலகத்தில்
கடைநிலை ஊழியராக
இருக்கும் ஆறுமுகம்
வரி கட்ட வேண்டும்.
இந்த வரி நேரடி
வரி. அவர்கள்
வருமானத்திற்கு
ஏற்ப வசூலிக்கப்படுவது.
சொத்துள்ளவர்கள்
சொத்து வரியும்,
சொத்து தொடர்பான
பிற வரிகளும் வருமானம்
உள்ள வர்கள் வருமான
வரியும் கட்டுகிறார்கள்.
இது தவிர மறைமுக
வரியும் வசூலிக்கப்படுகிறது.
இந்த வரிகளில்
இருந்துதான் அன்றாடக்
காய்ச்சிகளுக்கு
நலத்திட்டங்கள்
அமலாகின் றன.
மக்கள் நல அரசு
என்று ஒன்று இருந்தால்
அது இப்படிச் செய்யும்
என்று சொல்லப்படு
கிறது. இந்தியாவும்
மக்கள் நல அரசு
என்று சொல்லப்படுகிறது.
வரி விலக்குகள்
பெரும்பணக்காரர்களுக்கு
மட்டுமே தரப்படுகின்றன. இதுவும்
ஜனநாயகத் தின்
பெயராலேயே செய்யப்படுகிறது.
பி.சாய்நாத்
சில தகவல்கள் சொல்கிறார்.
2005 - 2006 முதல் கார்ப்பரேட்
நிறுவனங்களுக்கு
வரிகள், தீர்வைகள்
என சராசரியாக ஒரு
நிமி டத்துக்கு
ரூ.70 லட்சம் தள்ளுபடி
செய்யப்பட் டுள்ளது.
தங்கத்துக்கும்
வைரத்துக்கும்
தள்ளு படி செய்யப்பட்ட
தீர்வை கடந்த மூன்று
ஆண்டுகளில் ரூ.1.76
லட்சம் கோடி.
அலைக் கற்றை
ஊழலில் நாட்டின்
கருவூலம் இழந்த
அதே அளவு தொகை.
விலக்கு
அளிக்கப்பட்ட
இந்த வரிகளும்
தீர்வைகளும் மறைமுக
வரி வகைப்பட்டவை. மறைமுக
வரியே எப்படிப்பட்டது
என்று ‘நாட்டுப்புற
ஏழைகளுக்கு’ கட்டுரையில்
லெனின் பின்வருமாறு
விளக்குகிறார்.
‘மறைமுக
வரிகள் என்பவை
நிலத்தின் மீதோ,
ஒரு பண்ணை மீதோ
நேரே போடப் படும்
வரிகள் அல்ல; ஆனால்
அவை, பண்டங் களை
அதிக விலைகள் கொடுத்து
வாங்குவதன் மூலம்
மக்களால் மறைமுகமாகச்
செலுத்தப்படு
கின்றன. சர்க்கரை,
வோத்கா, மண்ணெண்
ணெய், தீப்பெட்டிகள்,
மற்ற எல்லாவகையான
உபயோகப் பொருட்கள்
மீதும் அரசாங்கம்
வரி விதிக்கிறது;
வியாபாரியாலோ,
ஆலைச் சொந்தக்காரனாலோ
திறைசேரியில்
இந்த வரி கட்டப்படுகிறது;
ஆனால் தன் கையிலிருந்து
அவன் வரி செலுத்தவில்லை;
தன்னிடம் வாடிக்
கையாக வாங்குவோர்
கொடுக்கும் தொகையில்
இருந்தே இந்த வரியை
அவன் கட்டுகிறான்.
வோத்கா, சர்க்கரை,
மண்ணெண்ணெய், தீப்பெட்டிகள்,
ஆகியவற்றின் விலை
உயர்த்தப் படுகிறது.
ஒரு புட்டி வோத்காவோ,
ஒரு பவுண்டு சர்க்கரையோ
வாஙகுகின்ற ஒவ்வொ
ருவனும் அப்பொருட்களின்
விலையைத் தவிர
அதன் மீது போடப்பட்டுள்ள வரித்தொகை
யையும் செலுத்த
வேண்டியுள்ளது.
எடுத்துக் காட்டாக,
ஒரு பவுண்டு சர்க்கரைக்கு
நீங்கள் பதினான்கு
கொபெக்குகள் செலுத்துவதாக
வைத்துக்கொண்டால்
அதில் (ஏறக்குறைய)
நான்கு கொபெக்குகள்
வரியாக அமைகிறது;
சர்க்கரையை உற்பத்தி
செய்பவர் முன்ன
மேயே அரசாங்கத்
திறைசேரிக்கு
இந்த வரி செலுத்திவிட்டார்;
அவர் செலுத்திய
தொகை யினை இப்போது
வாடிக்கையாளர்
ஒவ்வொரு வரிடமிருந்தும்
வாங்குகிறார்.
ஆகவே, உபயோகப்
பண்டங்கள் மீது
போடப்படும் வரிகள்
மறைமுக வரிகள்
ஆகும். பண்டங்களை
வாங்குபவர் அதிக
விலை கொடுப்பதன்
மூலம் அவற்றைச்
செலுத்துகிறார்.
மறைமுக வரிவசூல்
மிகவும் நியாயமான
முறை என்று சில
சமயங் களில் சொல்லப்படுகிறது.
ஒருவன் வாங்கும்
அளவிற்கேற்பத்
தானே வரி செலுத்துகிறான்
என்கின்றனர்.
ஆனால் இது உண்மை
அல்ல. மறைமுக வரிகள்
மிகவும் அநியாயமானவை
யாகும்; ஏனென்றால்,
பணக்காரர்களைக்
காட்டிலும் ஏழைகளுக்கு
அவற்றைச் செலுத்து
வது மிக மிகக்
கஷ்டமானது. பணக்காரனு டைய
வருமானம், விவசாயி
அல்லது தொழிலா
ளியின் வருமானத்தைவிடப்
பத்து மடங்கு,
ஏன், சில வேளைகளில்
நுறு மடங்கு கூட
அதிகமாக இருக்கிறது.
ஆனால் நூறு
மடங்கு அதிகமாக
சர்க்கரை ஒரு பணக்காரனுக்குத்
தேவையா? மேலும்,
வோத்காவோ, தீப்பெட்
டியோ அல்லது மண்ணெண்ணெய்யோ
பத்து மடங்கு அதிகமாகத்
தேவையா? நிச்சயமாக
இல்லை. பணம்
படைத்த ஒரு குடும்பம்,
ஓர் ஏழைக் குடும்பத்தை
விட இரண்டு மடங்கு,
அல்லது அதிகமாகப்
போனால், மூன்று
மடங்கு, அதிகமாக
மண்ணென்ணெய், வோத்கா,
அல்லது சர்க்கரையை
வாங்கும். அப்படி என்றால்,
ஏழை தன் வருமானத்திலிருந்து
வரி யாகச் செலுத்தும்
பங்கை விடப் பணக்காரன்
தன்னுடைய வருமானத்திலிருந்து
குறைந்த பங்குதான்
வரியாகச் செலுத்துகிறான்.
ஓர் ஆண்டுக்கு
ஓர் ஏழை விவசாயியின்
வருவாய் இருநூறு
ரூபிள்கள் என்று வைத்துக்
கொள் வோம்; வரி
போடப்பட்டு, அதனால்
விலை உயர்ந்துள்ள
பொருட்களை அவன்
அறுபது
ரூபிள்களுக்கு
வாங்குகிறான்
என வைத்துக் கொள்வோம்.
(சர்க்கரை, தீப்பெட்டி
எக்சைஸ் வரி ஆகும்;
அதாவது சந்தையில்
பொருட்களை விற்பனைக்கு
வைப்பதற்கு முன்னரே
உற்பத்தி யாளன்
தீர்வையைச் செலுத்துகிறான்;
வோத்காவைப் பொறுத்தமட்டில்,
அது அர சாங்கத்தின்
ஏகபோகமாக உள்ளதால்
அரசாங் கம் நேராகவே
விலையை உயர்த்துகிறது;
பருத்தித் துணிகள்,
இரும்பு, பிற பொருட்கள்
ஆகியவற்றின் விலைகளும்
உயர்ந்து விட்டன,
ஏனெனில் அதிகமான
தீர்வை கட்டாமல்
அயல்நாடுகளிலிருந்து
மலிவான பொருட்களை
ருஷ்யாவினுள்
வர அனுமதிப்பதில்லை).
இந்த அறுபது
ரூபிள்களுள் இருபது
ரூபிள்கள் வரியாகின்றன.
ஆகவே, ஒவ்வொரு
ரூபிள் வருமானத்திலும்
ஏழை உழவன் மறைமுக
வரியாக (நேர்முக
வரிகள், நிலமீட்புச்
செலவு கள், பணியீட்டு
வாரம், நில வரி,
ùஸம்ஸ் துவோ, வோல்ஸ்த்,
மீர் ஆகியவற்றினால்
விதிக் கப்படும்
வரிகள் இவற்றைக்
கணக்கிடாமல் பத்து
கொபெக்குகள் செலுத்த
வேண்டியுள் ளது.
பணக்கார விவசாயிக்கு
ஆயிரம் ரூபிள்கள்
வருமானம் இருக்கிறது;
தீர்வை விதிக்கப்பட்ட
பொருள்களை நூற்று
அய்ம்பது ரூபிள்கள்
வரையில் அவன் வாங்குவான்;
வரியாக அய்ம் பது
ரூபிள்கள் செலுத்துவான்.
(இந்த நூற்று
அய்ம்பது ரூபிள்களுக்குள்
இதுவும் உட்படும்).
ஆகவே, ஒவ்வொரு
ரூபிள் வருமானத்திலும்
ஐந்து கொபெக்குகளை
மட்டுமே மறைமுக
வரிகளாகப் பணக்கார
விவசாயி செலுத்துகி
றான். ஒரு மனிதன்
எவ்வளவுக்கெவ்வளவு
அதிகப் பணக்காரனாக
இருக்கிறானோ, அவ்வளவுக்கவ்வளவு
அவனுடைய வருமானத்
தில் குறைந்த பங்கையே
மறைமுக வரிகளாகச்
செலுத்துகிறான்.
ஆகவேதான் மறைமுக
வரிகள் எல்லா வரிகளையும்
விட நியாயமற்ற
வையாகும். மறைமுக வரிகள்
ஏழைகளின் மேல்
போடப்படும் வரிகள்.
விவசாயிகளுக்கும்
தொழிலாளிகளுக்கும்
சேர்ந்து மக்கள்
தொகை யில் பத்தில்
ஒன்பது பகுதியாக
இருக்கின்றனர்;
மறைமுக வரிகளில்
பத்தில் ஒன்பது
பகுதி அல்லது
பத்தில் எட்டு
பகுதியைச் செலுத்துகின்
றனர். ஆனால்
விவசாயிகள், தொழிலாளிகள்
ஆகியோரின் வருமானம்
மொத்த பங்குக்கு
மேல் இராது. எனவே மறைமுக
வரிவிதிப்பை ஒழிக்க
வேண்டுமென சமூக
- ஜனநாயகவாதிகள்
கோருகின்றனர்.’
இந்தியாவின்
முதல் 55 பணக்காரர்களிடம்
உள்ள சொத்தின்
நிகர மதிப்பு ரூ.10
லட்சம் கோடி. இவர்கள்
சொத்து மதிப்பில்
பத்தில் ஒரு பகுதி
அளவுதான் 2012 - 2013 ஆண்டில்
மறைமுக வரி எதிர்ப்பார்க்கப்பட்டது.
லெனின் சொல்வதுபடி
பார்த்தால், இந்த
வரியில், இந்த
55 பேரை விட கூடுதல்
வரியை 120 கோடிக்கும்
மேற்பட்டவர்கள்
கட்டுகிறார்கள்.
இவர்கள் கட்டும்
மறைமுக வரியில்
இருந்து பெரும்பகுதி
வளர்ச்சித் திட்டங்களுக்கான
நிதி என்றும்,
ராணுவத்துக்கு
ஒதுக்கீடு என்றும்
மீண்டும் பெரும்பணக்காரர்களுக்கே
சென்று சேர்கிறது.
அதிலும் பெரும்பகுதியை
இந்த 55 பேர் பெற்று
விடுவார்கள்.
வெளிநாட்டு
பணக்காரர்களுக்கும்
முதலாளிகளுக்கும்
இதில் நல்ல பங்கு
உண்டு. மக்கள்
நலத் திட்டங்கள்
பெயரில் நிதி நிலை
அறிக்கைகளில்
ஒதுக்கப்படும்
நிதியில் அரசியல்
வாதிகளும் உயர்அதிகாரிகளும்
அவர்கள் ஆசியும்
ஆதரவும் பெற்ற
இடைத் தரகர்களும்
ஒப்பந்தக்காரர்களும்
தங்கள் பங்கை பெறுவதில்
விழிப்புடன் இருப்பார்கள்.
நிதியமைச்சர்
ப.சிதம்பரம், வரிக்கு
வரி விதித்திருப்பதாகச்
சொல்லும், ஆண்டுக்கு
ரூ.1 கோடிக்கும்
மேல் ஊதியம் பெறும்
அந்த 42,800 பேரில் பெரும்
பகுதியினரும்
இந்த வகையினங்களில்
அடங்கி விடுவார்கள்.
மறைமுக வரியின்
ஒரு பகுதியை பெற்றுவிடுவார்கள்.
உண்மையில்,
முதலாளித்துவ
சமூகத்தில் வரிவிதிப்பு,
வறியவர்களிடம்
இருந்து வசூலித்து
வசதி படைத்தவர்களுக்குத்
தருவதே. இதைத்
தான் தலைகீழாக
மாற்ற வேண்டும்
என்று புரட்சிகர
கம்யூனிஸ்டுகள்
கோருகின்றனர்.
******************
மண்ணில் பாதி
நாடாளுமன்றத்துக்குள்
ஆணாதிக்கம் நீண்ட
நாட்கள் நீடிக்காது
அட்லாண்டிக்
பெருங்கடலுக்கு,
எப்படி நடந்துகொள்ள
வேண்டும் என்று
சொல்லாதே. பெண்கள்
உணர்ச்சிமயமானவர்கள்,
அவர்கள் இப்படி
அப்படி நடந்துகொள்ள
வேண்டும் என்ற
ஆணாதிக்க அறிவுரைகளுக்கு,
பாலியல் வன்முறையால்
பாதிக்கப்பட்ட
ஒரு கோடி பெண்கள்
எழுச்சி இயக்கத்தை
கட்டமைத்த ஈவ்
என்ஸ்லர் இப்படி
பதில் சொன்னார்.
இன்னும்
கூட பெண்கள் விரோத
பழமை கருத்துக்கள்
இருந்தாலும் வெளிப்படையாகப்
பேசத் தயங்குகிறார்கள். 2012 இறுதியில்
டில்லி மாணவர்களும்
இளைஞர்களும் பெண்களுமாக
இதை உறுதி செய்திருக்கிறார்கள்.
இத்தனை ஆண்டுகளாக
சட்டங்கள் உறுதி
செய்யாததை அந்தப்
போராட்டங்கள்
உறுதி செய்தன.
இப்போது
புதிய குப்பியில்
பழைய சரக்கை ஊற்றி
விற்கப் பார்க்கிறார்கள். துரதிர்ஷ்டவச
மாக இந்த முறை
ஒரு பெண் அரசியல்வாதி,
மம்தா பானர்ஜி
அதை துவக்கி வைத்துள்ளார்.
மக்கள் தொகை
அதிகரிப்பால்
பாலியல் வன் முறை
சம்பவங்கள் அதிகரிக்கின்றன
என்பது அவரது கண்டுபிடிப்பு.
கூடவே, நாகரிகம்
அதிகரித்து விட்டதால்
கூடுதல் புகார்கள்
பதிவு செய்யப்படுவதும்
காரணம் என்றும்
சொல்லி உள்ளார்.
உத்தரபிரதேசம்,
தேவ்ராவில் காவல்
துறை உயர்அதிகாரி,
பாலியல் வல்லுறவு
புகார் தந்த நான்கு
குழந்தைகளின்
தாயான ஒரு பெண்ணிடம்,
வயதான பெண்ணுடன்
யார் பாலியல் வல்லுறவு
கொள்வார் கள் என்று
கேட்டார்.
அதிகாரத்தில்
இருப்பவர் கள்,
பாலியல் வல்லுறவு
அதிக ரிப்பை கட்டுப்படுத்த
வேண்டி யவர்கள்,
கட்டுப்படுத்த
தவறு பவர்கள்,
தங்கள் ஆணாதிக்கக்
கருத்துக்கள்
ஒரு பக்கம் உந்தித்
தள்ள, பொறுப்பை
தட்டிக் கழிக்க,
பொறுப்பை நிறை
வேற்றத் தவறும்போது,
பிடித்துக் கொள்ள
ஆதாரம் எதுவும்
கிடைக்காதா என்று
தேடுகி றார்கள்.
அப்படி ஏதும்
இனி அவர்களுக்கு
அவ்வளவு எளிதாக
கிடைக்கப் போவதில்லை.
கிடைத்தாலும்
எதிர்ப்பின்றி
அதை அவர்கள் பயன்படுத்துவது
எளிதில்லை. பெண்கள் மத்தியில்
இருந்து வலுவாக
எழுகிற கேள்விகளுக்கு
அவர்கள் பதில்
சொல்லியே ஆக வேண்டும்.
வரலாற்றுச்
சிறப்புமிக்க
டில்லி போராட்டம்
கண்காணிப்பை உறுதி
செய்திருக்கிறது.
பெண்களுக்கும்,
ஆணாதிக்க எதிர்ப்புக்
கருத்துக்களுக்கும்
கூட அனைத்தும்
விரும்பிய படி
நடக்கவில்லை. முதல்
சுற்று போராட்டம்
எட்டிய வெற்றியை
வெட்டிச் சுருக்க
நாடாளு மன்றமே
முன்னின்று முயற்சி
செய்கிறது.
பாலியல்
வல்லுறவு எதிர்ப்பு
மசோதா நாடாளுமன்றத்தில்
நிறைவேற்றப்பட்டது. அது
பற்றிய விவாதம்
நடந்தபோது, அவையில்
200 உறுப்பினர்கள்
மட்டுமே இருந்தனர்.
மன்மோ கன், சோனியா,
ராகுல் யாரும்
அவையில் இல்லை.
நீதிபதி வர்மா
குழு எடுத்த கடுமை
யான முயற்சிகளுக்கு
நேர்மாறாக, பாலியல்
பாகுபாடு, பெண்கள்
மீதான வெறுப்பு,
விவரக் குறைவு
அனைத்தும் விவாதத்தில்
ஆட்டம் போட்டன.
பாஜக
உறுப்பினர் போலா
சிங் பெண்கள் என்றால்,
தியாகம், அழகு
என்றார். மேற்கத்திய
கலாச்சாரம்தான்
பாலியல் வல்லுறவுக்குக்
கார ணம் என்றார்.
சமாஜ்வாடிக்
கட்சி உறுப்பினர்
ஷைலேந்திர குமார்,
திரைப்படங்க ளில்
பெண்கள் அணியும்
உடைகள் மீது பழி
சுமத்தினார்.
கூடவே சக உறுப்பினரான
ஜெயப் பிரதா பற்றியும்
தவறாகப் பேசினார்.
அய்க்கிய ஜனதாதள
உறுப்பினர் சரத்
யாதவ், பெண்களை
பின் தொடர்ந்தால்தான்
அவர்கள் திரும்பிப்
பார்ப்பார்கள்
என்றும், பின்தொடர்ந்து
செல்பவர்கள் சிறையில்
என்றால், காதலர்கள்
சிறையில் இருப்
பார்கள் என்றும்
சொல்லி சக உறுப்பினர்களை
சிரிக்க வைத்தார்.
பெண்களை வேலைக்கு
அமர்த்த முடியாமல்
போகும் என்று கவலை
தெரிவித்தார்.
பின்தொடர்வது
பற்றி கருத்து
தெரிவித்த முலாயம்
சிங், அவையில்
இல்லை என்றாலும்,
அவைக்கு வெளியில்,
இரு பாலர் பள்ளிகளை
இழுத்து மூட வேண்டியிருக்
கும் என்றார்.
வாய்ப்பை பயன்படுத்திக்
கொண்ட லல்லு ஓரினச்
சேர்க்கை குற்றமல்ல
என்ற டில்லி நீதிமன்ற
தீர்ப்புக்கு
எதிராக நாடாளுமன்றம்
வழக்கு தொடர்ந்திருக்க
வேண்டும் என்றார்.
சட்ட அமைச்சர்
பொய் புகார் பூதம்
பற்றி பேசினார்.
இந்த
ஆணாதிக்க வாதங்களின்
விளைவாக, பாலுறவு
ஒப்புதல் வயது
18 என ஆனது; பின் தொடர்வது
முதல்முறை என்றால்
அது பிணை கிடைக்காத
குற்றம் இல்லை
என்று முடிவா னது;
அமில வீச்சுக்கு
முன்வைக்கப்பட்ட
தண்டனைக் காலம்
குறைக்கப்பட்டது;
திரு மண உறவுக்குள்
நடக்கும் பாலியல்
வல்லுறவு சட்டத்துக்கு
வெளியில் நிறுத்தப்பட்டது.
ஆயுதப் படை
சிறப்பு அதிகாரங்கள்
சட்டம் பரிசீலிக்கப்
படுவது இல்லை என்றானது.
பாலியல்ரீதியாக
தொல்லை தருவது
பெண்களின் கண்ணியத்தை
மீறுவது அல்ல என
சொல்லப்பட்டுவிட்டது.
1983ல் இருந்து
பாலுறவு ஒப்புதல்
வயது 16 என்று உள்ளது. எந்த
காத்திரமான கலந்தா
லோசனையோ விவாதமோ
இல்லாமல், சிறார்
பாலியல் குற்றத்
தடுப்புச் சட்டத்தில்
அதை 18 என அரசாங்கம்
மாற்றியது. பெண்கள்
இயக் கம் இந்த
மாற்றத்துக்கு
எதிர்ப்பு தெரிவித்த
துடன் சமீபத்திய
இரண்டு தீர்ப்புக்களில்
பாலுறவு ஒப்புதல்
வயது 16 என்றே இருக்க
வேண்டும் என்றும்
இந்த வயதில் பாலியல்
வல்லுறவு குற்றங்களில்
ஈடுபடுபவர்களுக்கு
அப் போதுதான் தண்டனை
தர முடியும் என்றும்
சொல்கின்றன. ஆனால்
இந்தக் கருத்துக்களுக்கு
எதிராக உற்பத்தி
செய்யப்பட்ட ஊடகப்
புயல் பாலுறவு
ஒப்புதல் வயது
16 என்று தொடர்ந்
தால் அது பதின்பருவ
பாலுறவுக்கு உரிமம்
அளித்ததாகி விடும்
என்று கவலைப்பட்டது.
இந்தத் தார்மீகக்
காவல் இறுதியில்
வெற்றியும் பெற்றுவிட்டது.
அமில
வீச்சு, படுகொலை,
பாலியல் வல்லு
றவு போன்ற குற்றங்கள்
சில கால பின்தொடர்
தலுக்குப் பிறகுதான்
நடக்கின்றன. முதல்முறை
இந்தக் குற்றம்
தடுக்கப்படவில்லை
என்றால் பின்தொடர்வது
அடுத்த கட்ட ஆபத்தான
குற்றங்களுக்கு
இட்டுச் செல்கிறது.
பிரச்சனை யின்
இந்த பக்கம் பற்றி
நாடாளுமன்றம்
சற்றும் அக்கறை
காட்டாமல் பெண்களை
பின்தொட ராத ஆண்கள்
உண்டா என்று அரட்டைக்
கச்சேரி நடத்தி
பின்தொடரும் ஆபத்து
பெண் களை பின்தொடர்வதை
உறுதி செய்தது.
இத்தனைக்கும்
பிறகும், புதிய
சட்டத்தில் ஆக்கபூர்வமான
முற்போக்கான பாதுகாப்புகள்
சிலவும் உறுதி
செய்யப்பட்டுள்ளன. பாலியல்
வன்முறை வழக்குகளில்
முதல் தகவல் அறிக்கை
பதிவு செய்ய மறுக்கும்
காவல்துறை அதிகாரி
களுக்கு 6 மாதம்
முதல் ஓராண்டு
வரை சிறை, பாலியல்
வல்லுறவு குற்றம்
சுமத்தப்பட்ட
காவல்துறை அதிகாரிகள்,
நாடாளுமன்ற, சட்ட
மன்ற உறுப்பினர்கள்
ஆகியோர் முன்கூட்டியே
விலக்கு பெறுவதற்கு
விலக்கு, மதவெறி
அல்லது பிரிவுவாத
வன்முறைச் சம்பவங்களில்
பாலியல் வன்முறை
மற்றும் சீருடையில்
இருப்பவர் ஈடு
படும் பாலியல்
வன்முறைக்கு ஆயுள்
தண்டனை, பின்தொடர்வது,
பார்வைரீதியான
வன்முறை, ஆடைகள்
அகற்றுவது, அமில
வீச்சு ஆகியவை
குற்றங்கள் என
வரையறுக்கப்படுவது
போன்ற அம்சங்கள்,
அரசாங்கத்திடமும்
நாடாளுமன்றத்
திடமும் நிலவுகிற
ஆணாதிக்கக் கருத்துக்க
ளுக்கு சவால் விடுக்கும்
பாலியல் வல்லுறவு
எதிர்ப்பு இயக்கத்தாலேயே
சாத்தியமாயின.
பொய் புகார்களுக்கு
தண்டனை என்று புகுத்
தப்பட்ட மாற்றமும்
அந்தப் போராட்டத்தால்
தான் முறியடிக்கப்பட்டது.
பாலியல்
வன்முறைக்கு எதிரான
மக்கள் இயக்கம்
தொடரும்; வளரும். திருமணத்துக்குள்
நடக்கும் பாலியல்
வல்லுறவு நியாயப்படுத்தப்
படுவது, ஆயுதப்
படை சீருடையில்
இருக்கும் பாலியல்
வல்லுறவு குற்றவாளிகள்
பாதுகாக்கப் படுவது,
ஓரினச் சேர்க்கை
குற்றமயமாக்கப்படு
வது, பாலியல் வல்லுறவு
குற்றம் சுமத்தப்பட்ட
வர்கள் தேர்தல்களில்
போட்டியிடுவது
ஆகிய வற்றை அனுமதிக்கும்
சட்டங்களை மாற்றும்
வரை ஓயாது. நாடாளுமன்றத்துக்குள்
ஆணா திக்கம் நீண்ட
நாட்கள் நீடிக்காது.
******************
கட்டுரை
இணையதள சுதந்திரம்
இணையதள வர்த்தகத்துக்கு
கீழ்படியாது
இறந்தவன்
ஒரு போதும் கீழ்படிவதில்லை
என்பதை அவரும்
படித்திருக்கக்
கூடும். அபராதம்,
சில பத்தாண்டுகள்
நீடிக்கக் கூடிய
சிறை தண்டனை ஆகியவற்றை
விட மரணம் மேலானது
என்று முடிவு செய்தார்.
தற்கொலை செய்து
கொண்டார்.
தற்கொலை
செய்துகொண்டு
செத்தபோது அவருக்கு
26 வயது. ஆரோன் ஸ்வார்ட்ஸ்
அவரது பெயர்.
அவர் மிகச்
சிறந்த அறிவாளி.
அவர் கண்டுபிடித்த
ஆர்எஸ்எஸ் என்ற
படிவ மென்பொருள்தான்
இணையத்தில் தேடுகிற
செய்திகளை கொண்டு
வந்து முன்னிறுத்துகிறது.
14 வயதில் இருந்தே
கணிணி உலகில் கண்டு
பிடிப்புக்கள்
செய்யத் துவங்கியவர்.
திறமைகளுக்கு
இங்கு மதிப்புண்டு,
இங்கு வாருங்கள்
என்று சமீபத்தில்
ஒபாமா அழைப்பு
விடுத்தார். அய்க்கிய
அமெரிக்கா திறமைகளின்
சுரங்கம் என்று
கூட பொதுக்கருத்து
நிலவுகிறது. ஆனால், அந்தத்
திறமை ஏகாதிபத்தியத்தின்,
சந்தையின் கட்டுக்குள்
இல்லாவிட்டால்
சிறை, சித்திரவதை,
வழக்கு, தண்டனை,
அச்சுறுத்தல்
என பலவற்றையும்
சந்திக்க நேரிடும்.
அய்க்கிய அமெரிக்கா
உலகமெல்லாம் நிறுவிக்
கொண்டி ருப்பதாகச்
சொல்லும் ஜனநாயகத்துக்கு
அந்த நேரத்தில்
இடம் இருக்காது.
இந்த
சர்வவல்லமை வாய்ந்த
சந்தை சுதந்திரத்தில்
குறுக்கிட்டதுதான்
ஸ்வார்ட்ஸ் செய்த
குற்றம். காசு
கொடுத்தால்தான்
அறிவு கிடைக்கும்
என்ற விதி அவருக்கு
தவறாகத் தெரிந்தது.
அறிவு தனியார்மயத்துக்கு
எதிராக செயல்பட்டார்.
இணையதளத்தில்
உள்ள விவரங்கள்,
காசு தந்தாலும்
தராவிட்டாலும்
அனைவருக்கும்
எளிதில் கிடைக்க
வேண்டும் என விரும்பினார்.
உடைந்துபோன
உலகத்தை சரி செய்வது
அவரது நோக்கமாக
இருந்தது.
டிமான்ட்
புரோகிரஸ், முன்னேற்றம்
கோரு வோம் என்ற
அமைப்பை நிறுவினார். அய்க்கிய
அமெரிக்காவின்
சோபா (இணையதள திருட்டு
தடுப்புச் சட்டம்),
பிபா (இணையதள நெறி
முறை பாதுகாப்பு
சட்டம்) ஆகிய இணையதள
தணிக்கை சட்டங்களுக்கு
எதிராக உருவாக்கப்
பட்ட இந்த அமைப்பில்
இப்போது 10 லட்சம்
உறுப்பினர்கள்
உள்ளனர். ஊடகங்கள்,
பொதுக் கருத்து,
அரசியல் ஆகியவற்றின்
மீது, பெரும் பணம்
செலுத்தும் தீய
தாக்கத்துக்கு
எதிராக குரல் எழுப்பினார்.
எம்அய்டி
போன்ற நிறுவனங்களில்,
அரசு நிதியில்
நடக்கிற ஆய்வுகளை
இணையதளத்தில்
அனைவராலும் இலவசமாக
தெரிந்துகொள்ள
முடிவதில்லை. அவை பொதுவில்
வைக்கப்பட வேண்டும்
என்று ஸ்வார்ட்ஸ்
தொடர்ந்து குரல்
எழுப்பி வந்ததால்,
ஜேஸ்டர் என்ற மின்னணு
நூலகத்தில் இருந்து
அனைவரும் படிக்கும்படி
செய்யும் நோக்கத்துடன்
கோப்புக்களை பதிவிறக்கம்
செய்தார் என்பது
அவர் மீதான குற்றச்சாட்டு.
(நூலகத்தில்
இருந்து நூல்களை
எடுத்துச் சென்றதற்காக
குற்றம் சுமத்துவது
போன்றது இது).
ஜேஸ்டரே அனுமதித்துள்ள
விருந்தினர் என்ற
முறையில் ஸ்வார்ட்ஸ்
அந்தக் கோப்புக்களை
எடுத்ததும் தவறில்லை
என்ற வாதமும் நிலவுகிறது.
பதிவிறக்கம்
செய்யப்பட் டதாகச்
சொல்லப்படும்
கோப்புகள் திருப்பித்தரப்
பட்டதால் ஜேஸ்டர்
நிறுவனம் புகார்
தரவில்லை.
ஆனால்,
அய்க்கிய அமெரிக்க
அட்டர்னி அலுவலகம்
வழக்கை தொடர்ந்தது. துவக்கத்
தில் நான்காக இருந்த
குற்றச்சாட்டுக்களை
பதின்மூன்றாக
மாற்றியது. 35 ஆண்டுகள் சிறை
தண்டனை, மிகப்பெரிய
தொகை அபராதம் என
தீர்ப்பு வந்திருக்கக்
கூடும்.
அவர்களைப்
பொறுத்தவரை, ஜேஸ்டரில்
இருந்து கட்டுரைகளை
பதிவிறக்கம் செய்வதை
போல், இணையதளத்தின்
மூலம் ஜனநாயகக்
கருத்துக்களை
பரப்புவதும் திரட்டுவதும்
பெரிய ஆபத்து. பெருங்குற்றம்.
எம்அய்டி நிறுவனமும்
அய்க்கிய அமெரிக்க
எஃப்பிஅய்யும்
அவரைச் சிக்க வைக்கப்
பார்த்தன. சில வாரங்களில்
விசாரணை துவங்க
இருந்த நிலையில்,
தனது மரணத்தின்
மூலம் அவர்களுக்கு
ஏமாற்றத்தைத்
தந்தார் ஸ்வார்ட்ஸ்.
அனைவருக்கும்
அறிவு வேண்டும்
என்று அன்று சாக்ரடீஸ்
சொன்னது போல்,
இணையதள அறிவு அனைவருக்கும்
சென்று சேர வேண்டும்
என்று சொன்னதால்,
இருபத்தியோராம்
நூற்றாண்டில்,
தற்கொலை செய்துகொள்ள
நிர்ப்பந்திக்கப்பட்டார்.
சதாம்
உசேனைக் கொல்ல
ஒரு வழி; பின் லேடனுக்கு
வேறு ஒரு பொறி;
சாவேசுக்கு ஒரு
ரகசிய செயல்முறை
(சாவேசுக்கு வந்த
புற்று நோய்க்குப்
பின்னால் அமெரிக்க
சதி இருக்கக் கூடும்
என்ற கருத்து வெனிசூலாவில்
உள்ளது); சொந்த
நாட்டு குடிமக்களானாலும்
ஸ்வார்ட்ஸ் போன்றவர்கள்
தானே சாக ஒரு மிரட்டல்....
இசுலாமிய
பயங்கரவாதத்தைக்
காட்டி உள்நாட்டிலும்
சர்வதேச அரங்கிலும்
அனைத்து விதமான
எதிர்ப்புக்களையும்
நசுக்கும் அய்க்கிய
அமெரிக்காவின்
உலகளாவிய திட்டத்தில்
கொல்லேட்டரல்
டேமேஜ், உடன்விளையும்
சேதம் போல, ஸ்வார்ட்சுகள்
பலியாகிறார்கள்.
ஸ்வார்ட்ஸ்
உயிருடன் இருந்திருந்தால்
அவருக்கு நேர்ந்திருக்கக்
கூடிய விசாரணை
மற்றும் தண்டனை
போன்ற ஒன்றை, ஈராக்
போரில் ஈடுபடுத்தப்பட்ட
அமெரிக்க போர்
வீரரான பிராட்லி
மேன்னிங் இப்போது
சந்திக்கிறார்.
லண்டனில் உள்ள
ஈராக் பாடி கவுண்ட்
என்ற அமைப்பு தரும்
விவரங்கள் படி,
பத்தாண்டுகளை
கடந்துவிட்ட ஈராக்
போரில், அமெரிக்க
ராணுவத் தாக்குதல்களில்
கொல்லப் பட்ட ஈராக்கிய
சாதாரண குடிமக்கள்
எண்ணிக்கை 1,22,438. காயமடைந்தவர்கள்
1,35,089 பேர். இது
தொடர்பான விவரங்களும்,
ஆப்கானிஸ்தானில்
அமெரிக்க ராணுவத்
தாக்குதல்களில்
கொல்லப்பட்டவர்கள்
பற்றிய விவரங்களும்
பதிவிறக்கம் செய்யப்பட்டு
எதிரியிடம் தரப்பட்டன
என்பது அவர் மீதான
குற்றச்சாட்டு.
அந்த எதிரி
விக்கிலீக்ஸ்.
பிராட்லி மேன்னிங்
விசாரணை இல்லாமலேயே
1000 நாட்களுக்கு
மேல் சிறையில்
கழித்துவிட்டார்.
ஈராக்கிலும்
ஆப்கானிஸ்தானிலும்
அய்க்கிய அமெரிக்க
படைகள் நிகழ்த்திய
படுகொலைகள் பற்றிய
விவரங்கள் விக்கிலீக்ஸ்
மூலம் அய்க்கிய
அமெரிக்க மக்களுக்கு,
உலகத்துக்கு தெரிய
வந்தன. போரின்
உண்மையான விலை
என்ன என்று வெளிப்படுத்தும்
அவற்றை அய்க்கிய
அமெரிக்க மக்கள்
தெரிந்து கொள்வது
அவசியம் என தாம்
கருதியதாக மேன்னிங்
சொன்னார். தன் மீது சுமத்தப்பட்ட
22 குற்றங்களில்
10 குற்றங்களை ஒப்புக்கொண்டார்.
வெளிப்படை
சமூகம் என்பதாக
அறியப் படும் அய்க்கிய
அமெரிக்காவில்
விவரங்களை வெளியிட்டதற்காக
மேன்னிங் சில பத்தாண்டு
கள் சிறை தண்டனை
எதிர்கொள்கிறார். அவர்
அமெரிக்க சிறையில்
இருந்து வெளியே
வர இனி கிட்டத்தட்ட
வாய்ப்பில்லை.
மேன்னிங்
தந்த அமெரிக்க
போர்க் குற்றங்கள்
உட்பட, அமெரிக்காவுக்கு
சங்கடம் தரும்
விவரங்களை விக்கிலீக்சில்
அடுத்தடுத்து
வெளியிட்டதால்,
அசாஞ்சே, சுதந்திரமாக
நட மாட முடியாமல்
லண்டனில் உள்ள
ஈக்வடார் தூதரகத்தில்
தஞ்சம் புகுந்துள்ளார்.
எனது வாழ்க்கையே
வீட்டுச் சிறையில்
இருக்கிறது என்கிறார்
அசாஞ்சே.
இசுலாமியர்கள்
அனைவரும் தீவிரவாதி
கள் என்று சொல்லும்
அமெரிக்க நீதி,
இணைய தளத்தை அம்பலப்படுத்துதலுக்கு,
ஜனநாயகக் கருத்துப்
பரப்பலுக்கு, ஜனநாயக
அணிதிரட்ட லுக்கு
பயன்படுத்துவோரை
குற்றவாளிகள்
என்கிறது. விண்வெளியில்
சுதந்திரமாகத்
திரிவது போல் தெரிகிற,
காற்று போல் உருவமற்றதாக
தெரிகிற இணையதள
ஊடாடல்களை சட்ட
பூர்வமான மற்றும்
சட்டத்துக்குப்
புறம்பான கண்காணிப்புக்கு
உட்படுத்தி, கட்டுப்பாட்டுக்குள்
இருத்தி, அந்தச்
சுதந்திரம் வெறும்
தோற்ற மாயை என்கிறது.
பால்
தாக்கரே மறைவுக்கு
மும்பை ஏன் நிற்க
வேண்டும் என்று
தனது முகநூலில்
கேட்டதற்காக ஒரு
பெண்ணையும் அந்தக்
கேள்வி தனக்கு
பிடித்திருக்கிறது
என்று சொன் னதற்காக
இன்னொரு இளம்பெண்ணையும்
கைது செய்த நாடு
இது. இணையதளத்தில்
கேலிச் சித்திரம்
வெளியிடுவது கூட
தேசத் துரோகம்
என்று சொல்கிற
கூட்டம் இந்தியா
வில் ஆள்கிறது.
கூகுள் வலைதளத்தில்
பயன் பாட்டாளர்கள்
விவரங்களை கேட்கிற
நாடு களில் இந்தியாதான்
முதலிடத்தில்
இருக்கிறது.
சொந்த
நாட்டு மக்களை
தீவிரவாதிகளாக,
பயங்கரவாதிகளாக,
கலகக்காரர்களாக
நடத்து வது, அதற்கான
கருப்புச் சட்டங்கள்,
நட்சத்திர நடவடிக்கைகள்....
இதுதான் சுதந்திர
இந்தியாவின் ஜனநாயக
வரலாறு. இப்போது
இணைய தள உலகத்தில்
அதன் புதிய பரிமாணமும்
சேர்ந்து கொண்டுள்ளது.
இந்தியாவில் கைது
செய்யப்பட்டவர்களும்
ஸ்வார்ட்ஸ் போலவோ,
மேன்னிங் போலவோ,
அவர்கள் உள்ளே
நுழைய அனுமதியில்லாத
எந்த வலைதளத்திலும்
அனு மதி இன்றி
நுழைந்து, ஹாக்கிங்
செய்து தகவல் கள்
எடுக்கவில்லை.
தங்கள் கருத்தை
தங்கள் பெயரில்
பதிவு செய்யப்பட்டுள்ள,
அனைவரும் சாதாரணமாக
பயன்படுத்தும்
வலைதளத்தின் ஒரு
பக்கத்தில் தெரிவித்தார்கள்.
அதையே இந்திய
ஆட்சியாளர்கள்
தாங்கவில்லை.
அமெரிக்காவுக்கும்
சீனாவுக்கும்
இடையே அறிவிக்கப்படாத
இணையதள போர் ஒன்று
நடந்துகொண்டே
இருக்கிறது. சீனர்கள்
தங்கள் பிரத்தியேக
வலைதளங்களில்
நுழைந்து ஹாக்கிங்
செய்து, தகவல்கள்
எடுக்கிறார்கள்
என்று அமெரிக்காவும்,
அமெரிக்கா இப்படிச்
செய்வதாக சீனாவும்
ஒருவர் மீது ஒருவர்
குற்றம் சுமத்துகிறார்கள்.
தங்கள் மீது
சுமத்தப் படும்
குற்றத்தை மறுக்கிறார்கள்.
ஆனால், இரண்டு
நாடுகளிலுமே ஹாக்கிங்
போட்டிகள் அதிகாரபூர்வமாக
நடக்கின்றன. போட்டியில்
வெற்றி பெறுபவர்கள்
அந்தந்த நாட்டின்
பாது காப்பு துறையில்
முக்கியமான பணிகளில்
அமர்த்தப்படுகிறார்கள்.
பிற நாட்டு
வலைதளங் களுக்குள்
அனுமதியின்றி,
அதாவது, சட்டத்
துக்கு புறம்பாக
நுழைவதே இவர்களுக்கு
வேலையாக பணிக்கப்படுகிறது.
இந்தப் பின்னணியில்
தனிநபர்களின்
இணையதள சுதந்திரம்
மட்டுமின்றி நாடுகளின்
இணையதள சுதந்திரமும்
விவாதத்துக்குரிய
பிரச்சனையாக மாறி
வருகிறது.
இணையதள
சுதந்திரம் மற்றும்
கட்டுப்பாடு தொடர்பாக
தங்கள் நாட்டின்
இணையதள தொடர்புகள்
மீது கட்டுப்பாடு
மற்றும் கண்காணிப்பும்,
தங்கள் நாட்டின்
இணையதள தொடர்புகளுக்குள்
ஊடுருவல் நடக்கும்
பட்சத் தில் ஊடுருவும்
எல்லைக்குள் செல்லவுமான
உரிமை பற்றி சீனா,
ரஷ்யா போன்ற நாடுகள்
பேசுகின்றன. ஆனால், அமெரிக்காவும்
அதன் மேற்கத்திய
கூட்டாளிகளும்
எல்லா நாடுகளுக்
கும் ஒரே குடையின்
கீழான கட்டுப்பாடு
மற்றும் கண்காணிப்பு
என்கின்றன. இந்தியா,
பிரேசில், எகிப்து,
தென்ஆப்பிரிக்கா
போன்ற நாடுகள்
இணையதள தணிக்கை
கூடாது என்று சொல்கிற
அதே நேரம், அமெரிக்க
ஆதிக்கம் அதில்
மேலோங்குவதையும்
ஏற்றுக்கொள்ள
தயாராக இல்லை.
இணையதள
சுதந்திரம் மற்றும்
கட்டுப்பாடு பற்றிய
இதுபோன்ற விவாதங்கள்
இன்னும் முழுமையான
வடிவத்தையோ முடிவையோ
எடுத்துவிடவில்லை. நாடுகளுக்கு
இடையில் விவாதங்கள்
நடந்து கொண்டிருக்கும்போதே
நாடுகளுக்குள்
கைதுகள், தற்கொலை
தூண்டு தல்கள்,
சிறை தண்டனைகள்
என இணையதள வர்த்தகத்தின்
இன்னொரு பக்கம்
தன் ருசியும் விளைவும்
என்ன என்பதை வெளிப்படுத்திக்
கொண்டிருக்கிறது.
அக்கம்பக்கமாக
இன்னொரு யதார்த்தமும்
நம்பிக்கை தருகிறது. அமெரிக்காவின்
வால் ஸ்ட்ரீட்
முதல் பங்களாதேஷின்
ஷாபாக் வரை நவதாராளவாத
கொள்கை எதிர்ப்பு
முதல் போர்க்குற்றங்களுக்கு
நீதி கேட்பது வரை,
அமெரிக்காவோ அல்லது
வேறு எந்த சக்தியோ
முயன்றாலும் கட்டுப்படுத்த
முடியாத, ஒரு வகையில்
கையில் பிடிக்க
முடியாத இணைய தள
தொடர்பாடல், எங்கும்
யாரையும் எளிதில்
விரைவில் சென்று
சேரும் தனது பண்பால்,
யூசர் ஃபிரன்ட்லியாக,
பயன்படுத்துவோருக்கு
உற்றதாக வினையாற்றுகிறது.
இணையதளத்தின்
பொருத்தமற்ற அதீத
பயன்பாடு, பயன்படுத்துவோரை,
மற்றவர்களிடம்
இருந்து பிரித்துவிடுகிறது,
மனிதர்களுக்கு
இடையிலான ஊடாடலை
துகளாக்கிவிடுகிறது
என்ற கவலையை நோம்
சோம்ஸ்கி வெளிப்படுத்
துகிறார். ஒரு
வகையில் அவருடைய
வாதம் ஏற்றுக்கொள்ளத்தக்கது,
அவர் வெளிப்படுத்தும்
கவலை பரிசீலனைக்கு
உரியது என்றாலும்,
உலகமெங்கும் உள்ள
ஸ்வார்ட்சுகள்,
மேன்னிங் குகள்,
அசாஞ்சேக்கள்
ஒடுக்குமுறையாளர்க்கு
எதிராக திருப்பப்படும்
அதன் உள்ளாற்றலை
வெளிப்படுத்த
ஆனதெல்லாம் செய்வார்கள்.
பயங்கரவாதத்துக்கு
எதிரான அய்க்கிய
அமெரிக்காவின்
போர் என்று சொல்லப்படும்
பயங்க ரவாதப் போரை,
உள்நாட்டு பாதுகாப்பு
என்ற பெயரில் நடக்கும்
உள்நாட்டு ஒடுக்குமுறையை,
இணையதள தொடர்பாடல்
மூலம் அம்பலப்
படுத்துவார்கள்.
ஜனநாயகத்துக்கான
தங்கள் சமரை இணைய
வெளியிலும் தொடுப்பார்கள்.
தான் உருவாக்கிய அபரித உற்பத்தி என்ற பூதத்தை அடக்க முடியாமல் முதலாளித்துவம் தவிக்கிறது என்று கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை சொன்னது. முதலாளித்துவ பொருளுற்பத்தியின் சாதனைகளில் ஒன்றான இணையதளத்தின் ஜனநாயகரீதியிலான பயன்பாட்டை அடக்க முடியாமல் அமெரிக்காவும் அதன் ஏவலாளர்களும் தவிப்பார்கள்.
****************************************
நகல் ஆவணம்
நகல் தீர்மானம்
தேசிய சூழலும்
நமது கடமைகளும்
(2013, ஏப்ரல் 2 - 6 தேதிகளில்
ராஞ்சியில் நடக்கவுள்ள
இகக மாலெ (விடுதலை)
9ஆவது கட்சி காங்கிரசில்
விவாதிக்கப்படவுள்ள
நகல் தீர்மானம்
தரப்படுகிறது.
வாசகர் கருத்துக்கள்
வரவேற்கப்படுகின்றன)
1. இந்தியா
கொந்தளிப்பான
காலங்களைக் கடந்துகொண்டிருக்கிறது.
ஒருபுறம் நவதாராள
வாத கொள்கை ஆட்சி
முறையின் வளரும்
நெருக்கடியும்,
நெருக்கடியின்
சுமையை மக்கள்
தோள்களில் மாற்றப்
பார்க்கும் மூர்க்கமான
பெரும்தொழில்
குழும/அரசு தாக்குதலும்
நிகழும்போது, மறுபுறம்
நாம் மக்கள் சீற்றத்தின்
பிரும்மாண்டமான
வெடிப்புகளையும்
காண் கிறோம். பெரும்தொழில்
குழும நிலப்பறி,
ஊழல், பாலியல்
வன்முறை ஆகியவற்றுக்கு
எதிரான, அல்லது
தொழிலாளர்களின்
உரிமை களுக்கான
போராட்டங்களை
நாம் காணும் போது,
வெகுமக்களின்
அறுதியிடலின்
ஓர் உற்சாகமான
எழுச்சி புலப்படுகிறது.
டிசம்பர் 16 கூட்டுப்பாலியல்
வல்லுறவுக்கு
எதிராக டில்லியில்
நிகழ்ந்த வரலாற்றுச்
சிறப்புமிக்க
இளைஞர்களின் எழுச்சி,
நாடு தழுவிய அளவில்
பெண்கள் மற்றும்
பரந்த சமூகம் மத்தியில்
பெண்கள் உரிமைகள்
தொடர்பான விழிப்புணர்ச்சியை
உந்தித் தூண்டியுள்ளது.
இதுவரை நடந்திராத
பிப்ரவரி 20, 21 இரண்டு
நாட்கள் அகில இந்திய
பொது வேலை நிறுத்தத்தில்,
தொழிலாளர் வர்க்கத்தின்
சக்தி வாய்ந்த
அறுதியிடலைக்
காண முடிந்தது.
பொருளாதாரத் துன்பங்கள்
அரசின் ஒடுக்கு
முறைத் தாக்குதல்
ஆகியவற்றைத் தாண்டி
தற்போதைய தருணம்
இந்திய மக்களின்
ஜனநாயக இயக்கத்திற்கான
மகத்தான சாத்தி
யப்பாடுகளை தன்னகத்தே
கொண்டுள்ளது.
2. தாறுமாறான
தாராளமயம், தனியார்
மயம், உலகமயம்
ஆகியவற்றின் பொருளா
தாரக் கொள்கை ஆட்சி
முறையை இரண்டு
பத்தாண்டுகளாக
தடையின்றி பின்பற்றியது,
இந்தியாவை ஒரு
ஆழமான பொருளாதார
நெருக்கடிக்குள்
தள்ளியுள்ளது.
இந்த வருடங் கள்
நெடுக இந்திய ஆளும்
வர்க்கங்கள் அதிகரித்த
பொருளாதார வளர்ச்சி
விகிதத்தை சுட்டிக்காட்டுவதன்
மூலம் இந்த கொள்கை
களை நியாயப்படுத்த
முயன்றன; இந்தப்
பத்தாண்டில் இந்த
ஆண்டு வளர்ச்சி
விகிதம் ஆகக் குறைவானதாக
ஆனதில் வளர்ச்சி
பலூனில் காற்று
இறங்கிவிட்டது.
விவசாயம் மற்றும்
தொழில் துறை ஆழமான
தேக்கத்தில் உள்ளன.
மிகவும் கொண்டாடப்பட்ட
சேவைத் துறையும்
மந்தமாகத் துவங்கிவிட்டது.
3. அமெரிக்க
அய்க்கிய நாடுகள்
மற்றும் நெருக்கடியால்
பீடிக்கப்பட்டுள்ள
நாடுகளில் இருந்து
படிப்பினைப் பெற்று,
இந்திய ஆளும் வர்க்கங்களும்,
நெருக்கடிக்கு
ஆளாகி உள்ள பெரும்
நிறுவனங்களை மீட்பது,
சிக்கன நடவடிக்கை
மற்றும் நிதி பற்றாக்குறையை
எதிர்கொள்வது
என்ற பெயரால் பொது
மக்கள் மீது பெரும்துன்பங்களை
ஏவுவது என்ற இருமுனை
அணுகுமுறையை எடுக்கின்றன.
இந்திய பொருளாதாரத்தை
காப்பது என்ற பெயரால்
இருபது ஆண்டுகளுக்கு
முன்பு மன் மோகன்சிங்
நவதாராளவாத கொள்கைகளை
அறிமுகப்படுத்தினார்.
இப்போது இந்த கொள்கைப்
பயணவழி இந்தியாவை
ஓர் ஆழ்ந்த புதைச்
சேற்றுக்குள்
தள்ளியுள்ளபோது,
பிரதமர் என்ற முறையில்
மன்மோகன்சிங்
தாராளமயம், தனியார்மயம்,
உலகமயத்தின் நவதாராளவாத
நிகழ்ச்சிநிரலை
மேலும் தாறுமாறாக
திணிப்பதற்கு,
நெருக்கடியை ஒரு
வாய்ப்பாக பயன்படுத்தப்
பார்க்கிறார்.
4. அந்நிய மூலதனத்தின்
மீது இந்தியாவின்
சார்பைக் குறைப்பது
சர்வதேச நிதியின்
தாக்குதல்களிலிருந்து
இந்திய பொருளாதா
ரத்தை காத்திட
பாதுகாப்புகளை
எழுப்புவது, ஆகியவற்றுக்கு
பதிலாக, அய்முகூ
அரசாங்கம் அந்நிய
மூலதனத்தின் அதிகரித்த
அளவிலான கட்டற்ற
நடவடிக்கைகளுக்கு
இந்திய பொருளாதாரத்தின்
ஒவ்வோர் அரங்கத்தையும்
மூர்க்கத்தனமாக
திறந்து விடுகிறது.
மிகவும் பரந்த
எதிர்ப்பை மீறி,
அரசாங்கம், பல்இலச்
சினை சில்லறை வர்த்தகத்
துறையிலும் ஓய்வூ
திய நிதியத்திலும்,
அந்நிய நேரடி முதலீட்டை
அனுமதிக்க முடிவெடுத்தது.
மொரீஷியஸ் கேமன்
தீவுகள் போன்ற
புகலிடங்களிலிருந்து
இயங்குகின்ற அந்நிய
முதலீட்டாளர்கள்
சட்டப்படி வரி
செலுத்துவதை தவிர்க்கின்ற
னர்; சட்டத்தில்
இதற்குள்ள ஓட்டைகளை
அடைக்க, இந்தியா
முதல் முறையாக
பொது வான வரி தவிர்ப்பு
எதிர்ப்பு விதிகளை
அறிமுகப்படுத்துவது
பற்றிப் பேசியது.
ஆனால் அரசாங்கம்
இதனை முதலில் ஓராண்டிற்கும்
பிறகு மூன்றாண்டுகளுக்கும்
ஒத்தி வைத்துள்
ளது. இப்போது
நிதியமைச்சர்
நாட்டிற்கு அந்நிய
முதலீட்டை வரழைப்பதைத்
தவிர வேறு மாற்றுத்
தேர்வு இல்லை என்று
சொல் லும்போது,
இந்த ஆண்டின் நிதிநிலை
அறிக்கையை அந்நிய
முதலீட்டாளர்களுக்கு
அர்ப்பணித்து
விடுகிறார்.
5. பெரும்தொழில்
குழுமத் துறைக்கு
அரசு முன்னின்று
மான்யம் அளிக்கும்
நிகழ்வுப் போக்கு
இந்தியாவில் பல
வடிவங்களில் செயல்
பட்டுக் கொண்டிருக்கிறது.
வருடாந்திர
நிதி நிலை அறிக்கைகளில்
பெரும்தொழில்
குழுமத் துறைக்கு
அளிக்கப்படும்
விலக்குகள், இவ்விச
யத்தை அப்பட்டமாக
புலப்படுத்தும்.
எட்டு ஆண்டுகளில்
இந்தத் தொகை ரூ.5
லட்சம் கோடியைத்
தாண்டும். இந்திய
பொதுத்துறை வங்கிகள்
தருகிற கடன்களை
ஆகப்பெரிய அளவில்
பெறுவதும் பின்னர்
கடனை திரும்பத்
தராமல் இருப்பதும்
பெரும்தொழில்
குழுமத் துறைதான்
என்பது நன்கறியப்பட்ட
விசயம். உலகளாவிய
நிதி நெருக்கடி
இருந்தபோதும்
வங்கிகள் தமது
பெரும்தொழில்
குழும வாடிக் கையாளர்களுக்கு
பிரும்மாண்டமான
தொகை களை கடனாகத்
தருகின்றன. மிகவும் ஆபத்தான
பெரும்தொழில்
குழுமக் கடன்கள்
ரூ.3.6 லட்சம் கோடி
அளவில் இருக்கும்.
6. மிகச் சமீபத்திய
பிரும்மாண்டமான
ஊழல்களான 2ஜி, கோல்கேட்,
கிருஷ்ணா கோதாவரி
படுகை போன்றவை
பெரும் தொழில்
குழும நலனில் தேசிய
கருவூலத்துக்கு
ஏற்படுத்தப்பட்ட
இழப்புகளுக்கான
உதார ணங்களாகும்.
(அரசின் ஓஎன்ஜிசி
நிறுவனம் கிருஷ்ணா
கோதாவரி படுகையில்
இயற்கை எரிவாயு
இருப்புக்கள்
இருப்பதைக் கண்டறிந்த
பின்னர் அவற்றை
ரிலையன்ஸ் இன்டஸ்டரிக்கு
ஒப்படைத்தது).
பெரும்தொழில்
குழுமத் துறைக்கு
அரசு சலுகைகளைத்
தருவதும் பெரும்தொழில்
குழுமச் சூறையாடலில்
கூடா உறவும் தீய
கூட்டும் கொண்டிருப்பதும்,
அப்பட்டமான பெரும்தொழில்
குழும ஆதரவு சிறப்பு
பொருளாதார மண்டலச்
சட்டம் 2005 அல்லது
அய்முகூ அமைச்சரவையால்
ஒப்புதல் தரப்பட்ட
நிலம் கையகப்படுத்துதல்
மசோதா அல்லது அரசு
- தனியார் கூட்டு
மாதிரியை முன்னேற்ற
தற்போதைய சட்டங்களையும்
நாடாளுமன்ற முறைகளையும்
முறைசார்ந்த விதத்தில்
சீர்குலைப்பது
என்ற வடிவங்களை
எடுக்கிறது.
7. சமீப வருடங்களில்
ஊழலின் பிரும்
மாண்டமான வளர்ச்சி,
வளரும் அரசு - பெரும்
தொழில் குழும அச்சின்
கட்டமைக்கப்பட்ட
தன்மை அல்லது விளைவு
என காணப்பட வேண்டும்.
மத்திய தணிக்கையாளர்
(சிஏஜி), வெளியே
கொண்டுவந்த பிரும்மாண்டமான
ஊழல்கள், தெளிவாக,
ஊழல் பெரும்தொழில்
குழும மான்யம்
அல்லது சூறையாடலின்
ஒரு வெளிப்பாடு
என்பதை காட்டும்.
பெரும்தொ ழில்
குழும சூறையாடல்
என்பது தேச கருவூலத்தை
மோசடி செய்து ஏமாற்றும்
ஒரு செயலாகவும்
தேச வளங்களை கொள்ளையடிக்
கும் ஒரு செயலாகவும்,
மக்களின் உரிமைகளை
கொள்ளையடிக்கும்
ஒரு செயலாகவும்
உள்ளது.
ஆளும் வர்க்கங்களும்
அவர்களது கருத்தியலா
ளர்களும் வளர்ச்சி
என்ற திரைபோட்டு,
இந்தச் சூறையாடலை
மூடிமறைக்க, நியாயப்படுத்த
முயற்சிக்கும்போது,
உலகெங்கும் உள்ள
மார்க்சிய அறிஞர்களும்,
மக்கள் இயக்கங்களும்,
மாமூலான முதலாளித்துவ
சுரண்டல் இயக்கப்
போக்கிற்கும்
மேலதிகமான பறித்தெடுத்தலின்
மூலமான திரட்சி
என இதனை, மிகச்
சரியாகவே, அடையாளம்
காண்கிறார்கள்;
இதன் மூலம் மக்கள்
தொகையின் ஒரு மிகப்
பெரும் பகுதியிடமிருந்து
பறித்தெடுக்கப்பட்டு
பிரும்மாண்டமான
அளவிலான செல்வம்
சிலர் கைகளில்
குவிக்கப்படுகிறது.
8. ஊழல் போல
ஒரு மிகப் பெரிய
பற்றியெரியும்
பிரச்சனையாக எழுந்துள்ள
விலை உயர்வும்,
அரசாங்கத்தின்
பொருளா தாரக் கொள்கையின்
நேரடி விளைவே ஆகும்.
பெட்ரோல் டீசல்
சமையல் எரிவாயு
விலைகள் மீது இருந்த
கட்டுப்பாடு அகற்றப்பட்டு
விட்டது. மிகச்
சமீபத்திய ரயில்வே
நிதி நிலை அறிக்கையும்,
மாறும் எரிபொருள்
விலையுடன் பயணிகள்
கட்டணத்தை இணைப்பதன்
மூலம் பயணிகள்
கட்டணத்தின் மீதான
கட்டுப் பாட்டை
அகற்ற வேண்டும்
என முன்வைத்துள்
ளது. கல்வி மருத்துவம்
இதர குடிமை வசதிகள்
போன்ற அடிப்படை
சேவைகளை அதிகரித்த
அளவில் வர்த்தகமயப்படுத்துவதோடு
அடிப் படை பண்டங்கள்
மற்றும் சேவைகளின்
விலை உயர்வும்
சேரும்போது, அவை,
இடையறாமல் உழைக்கும்
மக்களின் வாங்கும்
சக்தியை குறைக்கின்றன;
மேலும்மேலும்
கூடுதலான மக்களை
வறுமையிலும் பட்டினியிலும்
தள்ளுகின்றன. விலைவாசியைக்
குறைப்பது வறியவர்களுக்கு
திறன் வாய்ந்த
விதத்திலான மானியங்கள்
மூலம் பாதுகாப்பு
தருவது போன்ற அவசர
நடவடிக்கைகளை
எடுப்பதற்கு பதிலாக,
அரசாங்கம் புள்ளிவிவரங்களில்
தில்லு முல்லு
செய்கிறது; கேலிக்குரிய
விதத்தில் வறுமைக்
கோட்டுப் பட்டியலையே
மிகவும் தாழ்வான
மட்டத்திற்கு
மாற்றியுள்ளது;
இப்போது, மிகப்
பெரும்பான்மை
உழைக்கும் மக்களை
சந்தையின் போக்கிற்கு
பலியாக்குகிற
நேரடி பண மாற்றல்
முறைகள் மூலம்,
மான்யங் களை மேலும்
குறைக்கவும் அவற்றை
ஒரு சில பயனாளிகளுக்கே
சென்று சேர்க்கவும்
உத்தேசித்துள்ளது.
9. இந்தப் பெரும்தொழில்
குழும - சந்தைத்
தாக்குதலோடு கூடவே
ஜனநாயக வெளி ஓயாமல்
வெட்டிச் சுருக்கப்படுவதும்
நடைபெறுகிறது.
பெரும்தொழில்
குழுமச் சூறையாடலை
எப்படி வளர்ச்சி
என்ற பெயரால் மூடி
மறைக்கிறார்களோ,
அதே போல் ஜனநாயகத்தின்
மீதான முறைசார்ந்த
தாக்குதலை தேசிய
பாதுகாப்பு என்ற
பெயரால் நியாயப்படுத்த
முயற்சிக்கிறார்கள்.
இந்திய அரசின்
தேசிய பாதுகாப்பு
தொடர் பான நடப்பு
கோட்பாடு உலக மேலாதிக்கம்
தொடர்பான அமெரிக்க
கோட்பாட்டின்
இந்திய விரிவாக்கமே
தவிர வேறல்ல. இது
‘தேசிய பாதுகாப்பு’ என மூடி
மறைக்கப்படு கிறது;
இசுலாம் எதிர்ப்பு
‘பயங்கரவாதத்திற்கு
எதிரான போர்’ என மறைக்கப்படுகிறது.
இது அமெரிக்க தப்பெண்ணங்களையும்
முன்னுரி மைகளையும்
உள்வயப்படுத்துகிறது.;
இவை, பாகிஸ்தான்
மற்றும் சீனாவோடு
இந்தியாவின் சொந்த
மரபார்ந்த போட்டியோடு,
காஷ்மீ ரையும்
வடகிழக்குப் பகுதியையும்
துப்பாக்கி முனையில்
நிர்வகிக்கும்
வழக்கத்தோடு, உள்நாட்டு
பாதுகாப்புக்கு
மாவோயிஸ்டுகள்
தான் மிகப் பெரிய
அச்சுறுத்தல்
என்ற மதிப்பீட்டோடு
இணைக்கப்படுகிறது.
இது இப்போது
பயங்கரவாதமும்
அரசு பயங்கரவாத
மும் ஒன்றை ஒன்று
மறு உறுதி செய்து
கொள்ளும் தன்னைத்
தானே தொடரச் செய்கிற
சுழற்சியாகி உள்ளது.
10. ‘வலுவான
அரசு’ என்ற கோட்பாடு
குடிமை நிர்வாகத்தில்
அதிகரித்த ராணுவ
ஈடுபாட்டோடு இந்தியாவை
ஒரு போலீஸ் ராஜ்ஜியமாக்குவதே
ஆகும். இந்தக்
கோட் பாட்டில்
ஆளும் வர்க்கங்கங்களின்
பெரிய கட்சிகள்
அனைத்துமே, தேசிய
கட்சிகளில் குறிப்பாக
காங்கிரஸ் மற்றும்
பாஜக, பிராந்திய
கட்சிகளில் சிவசேனா
ஆகியவை கருத்தொற்
றுமை கொண்டுள்ளன.
மக்களின் வளரும்
எதிர்ப்பின் முன்பு
கொடூரமான பொடா
சட்டத்தை அரசாங்கம்
திரும்பப் பெற
நேர்ந்த போதும்,
ஆயுதப்படைகள்
சிறப்பு அதிகாரங்
கள் சட்டம், சட்ட
விரோத நடவடிக்கைகள்
தடுப்புச் சட்டம்,
பிரிட்டிஷ் காலனியவாதிகள்
விட்டுச் சென்ற
தேசத் துரோகச்
சட்டம் போன்ற கொடூரமான
சட்டங்களால் முறை
சார்ந்த விதத்தில்
ஜனநாயகம் தேய்த்து
மிதிக்கப்படுகிறது.
ஆயுதப் படைகள்
சிறப்பு அதிகாரங்கள்
சட்டத்தை நீக்க
வேண்டும், திருத்த
வேண்டும் என்ற
எந்த ஆலோசனை யையும்,
அதனை ராணுவம் விரும்பவில்லை
எனச் சொல்லி அரசாங்கம்
நிராகரிக்கிறது;
ஆயுத படைகள் சிறப்பு
அதிகாரங்கள் சட்டம்
வழங்கும் தண்டனையில்
இருந்து பாதுகாப்பு
என்ற சிறப்பு அதிகாரங்கள்
இல்லாமல், தம்மால்
எந்த உள்ளூர்மட்ட
கிளர்ச்சியையும்
கட்டுபடுத்த முடியாது
எனச் சொல்லி ராணுவம்
நிராகரிக்கிறது.
சட்டவிரோத நடவடிக்கைகள்
தடுப்புச் சட்டம்,
பசுமை வேட்டை போன்ற
ஒடுக்குமுறை இயக்கங்களுக்கு
சட்டபூர்வ ஆயுதங்களை
வழங்குகிறது; இவை
விசாரணை யின்றி
கைது செய்ய அரசாங்கங்களுக்கு
உதவுகின்றன; இந்திய
தண்டனைச் சட்டம்
124ஏ, தேசத் துரோக
சட்டம் தொடர்ந்து,
மாற்றுக் கருத்தின்
மீது குற்றம் சுமத்துவதற்கும்,
கருத்து சுதந்திரத்தை
படுகொலை செய்வதற்
கும் உதவுகின்றன.
சமீபத்திய அய்தராபாத்
குண்டு வெடிப்புகளை
அடுத்து அய்முகூ
அரசாங்கம் மீண்டும்
ஒரு முறை அமெரிக்க
தேசிய பயங்கரவாத
எதிர்ப்பு மய்யத்தை
போன்ற ஒரு மய்யத்தை
இந்தியாவிலும்
கொண்டுவரும் கருத்தை
முன்நகர்த்துகிறது.
இத்தகைய ஒரு முகாமைக்கு
சட்டவிரோத நடவடிக்கைகள்
தடுப்புச் சட்டத்தின்
மனம் போன போக்கிலான
பிரிவுகள் வலு சேர்ப்ப
தால், இவை எந்த
வெளிப்படை தன்மையோ
அல்லது பொறுப்பேற்றலோ
இல்லாமல் எவரையும்
கைது செய்யும்
துன்புறுத்தும்
புலனாய்வு அமைப்பிற்கும்
(இன்டெலிஜென்ஸ்
பீரோ) அதன் மூலமாக
அந்த வகைப்பட்ட
அமெரிக்க அமைப்பான
எஃப்பிஅய்க்கும்
அசாதாரணமான அதிகாரங்களை
வழங்கும். இன்று
இந்தியாவில் ஜனநாயகத்தைக்
காக்க வேண்டும்
என்றால், எல்லாவற்றுக்கும்
மேலாக இத்தகைய
எல்லா கொடூரமான
சட்டங்களை யும்
அதிகரித்த அளவிலான
நீதிமுறைகளுக்கு
புறம்பான ஒடுக்குமுறை
நடவடிக்கைகளையும்
ரத்து செய்யக்
கோருவது அவசர அவசியமாகிறது.
11. ஊழல்
கறை படிந்துள்ள
முழுமையாக அவப்புகழுக்கு
ஆளாகியுள்ள அய்முகூ
அரசாங் கம் வளர்ந்து
வரும் வெகுமக்கள்
எதிர்ப்பை எதிர்கொள்வதால்,
தனது நெருக்கடியைச்
சமாளிக்க பாஜகவை
சாந்தப்படுத்தப்
பார்க்கி றது;
அப்சல்குருவை
ரகசியமாகவும்
அவரது குடும்பத்திற்கு
தகவல் சொல்லாமலும்
அவரது கருணை மனு
நிராகரிக்கப்பட்டதற்கு
எதிராக மேல் முறையீடு
செய்ய உரிய வாய்ப்பு
தராமலும் தூக்கிலிட்டது
அப்பட்டமான ஓர்
உதாரணமாகும். காஷ்மீர்
பின்புலத்தில்
காணும் போது, காஷ்மீரத்
தலைவர் மக்பூல்
பட் தூக்கிலிடப்பட்ட
29வது ஆண்டு நினைவு
தினத் திற்கு இரு
தினங்கள் முன்பாக
நிறைவேற்றப் பட்ட
இந்த அநியாயமான
தூக்கு தண்டனை,
தாம் தனிமைப்பட்டிருக்கிறோம்
என்ற காஷ்மீர மக்களின்
உணர்வை அளவிட முடியாத
அளவிற்கு ஆழப்படுத்தியுள்ளது.
ஒட்டுமொத்த
இந்திய அரசியல்
என்ற பின்புலத்தில்,
இந்த சாந்தப்படுத்தும்
நடவடிக் கையை,
பாஜகவின் அயோத்தியா
இயக்கத் திற்கு
காங்கிரஸ் சரணடைந்ததோடுதான்
ஒப்பிட முடியும்.
இவ்வாறு சரணடைந்ததால்
தான் பாப்ரி மசூதியை
இடித்த பிறகு சங்பரிவார்
தப்பிக்க முடிந்தது.
12. அப்சல்
குரு தூக்கிலிடப்பட்டதன்
மீது ஒரு கொண்டாட்ட
வெறியை உசுப்பிவிடுவதற்
கான காங்கிரஸ்
- பாஜகவின், மேலோங்கிய
ஊடகத்தினரின்
ஒன்றிணைந்த பிரச்சாரத்தை
மீறி, இந்த தூக்கிலிடுதலுக்குப்
பின்னால் உள்ள
ஆபத்தான அரசியல்
குறிப்பொருளை,
நாட் டின் புரட்சிகர
ஜனநாயக கருத்து
துணிச்ச லுடன்
அம்பலப்படுத்தியது.
பாதிக்கப்பட்ட
காஷ்மீர் மக்கள்,
சீற்றத்தோடும் வலியோடும்
இருக்கிற இந்த
நேரத்தில் நாம்
அவர்களோடு நிற்கவேண்டும்.
ஆயுதப்படைகள்
சிறப்பு அதிகாரங்கள்
சட்டத்தை திரும்பப்
பெறக் கோரும்,
ஜனநாயகம் மற்றும்
நீதிக்கான அவர்கள்
போராட்டத்தை ஆதரிக்க
வேண்டும். இந்த
நிகழ்ச்சி, இந்தியா
மரண தண்டனையை நீக்க
வேண்டும் அல்லது
இறுதியில் மரண
தண்டனையை நீக்குவது,
அதுவரை மரண தண்டனைக்கு
தற்காலிக தடை என்ற
அய்நா தீர்மானத்தை
குறைந்தபட்சம்
மதித்து நடப்பது
என்ற சரியான கோரிக்கையை
வலுப்படுத்தி
யுள்ளது.
13. ஆளும்
வர்க்கங்கள் நாட்டை
ஓர் எங்கும் நிறைந்த
நெருக்கடியில்
தள்ளி, சாமான்ய
மக்களின் வாழ்வுரிமை
மற்றும் இதர உரிமைகள்
மீது ஒரு போரே
தொடுத்துள்ள போது,
எல்லா இடங்களிலுமுள்ள
மக்கள், அரசாங்கங்கள்
மற்றும் அவற்றின்
கொள்கைக ளுக்கு
எதிராக ஆர்த்தெழுகின்றனர்.
இந்திய வரலாற்றிலேயே
ஆகக்கூடுதலான
ஊழல்கறை படிந்த
அரசாங்கத்திற்கு
தலைமை தாங்குகிற
காங்கிரஸ் சீராக
செல்வாக்கு இழந்து
வருகிறது. சம அளவுக்கு
ஊழல் பிடித்தது
என பாஜகவும் அம்பலமாகி
உள்ளது. அதன்
விளைவாக காங்கிரசின்
இழப்பு பாஜகவின்
ஆதாயமாகி விடவில்லை.
ஆனபோதும் வேறு
மூன்றாவது சக்தியின்
பெரிய இருத்தல்
இல்லாத மாநிலங்
களில் தேர்தல்
அரசியல் முதன்மையாக
காங்கிரஸ் மற்றும்
பாஜகவைச் சுற்றியே
சுழன்று வருகிறது;
மிகவும் கவனிக்கதக்க
விதத்தில் குஜராத்தில்
பாஜக அதிகாரத்தை
தக்க வைத் துள்ளது.
அல்லது வேறு
விதத்தில் காங்கிரசின்
செல்வாக்கு சுருங்கி
வரும்போதும் அது
சமீபத்திய உத்தர்கண்ட்,
ஹிமாச்சல பிரதேச
தேர்தல்களில்
திரும்ப வெற்றி
பெற்றுள்ளது.
14. கர்நாடகாவில்
மூன்றாவது கட்சியான
மதச்சார்பற்ற
ஜனதாதளத்தை நசுக்கித்
தள்ளி, கடந்த சட்டமன்ற
தேர்தலில் காங்கிரசும்
பாஜகவும் ஒரே நேரத்தில்
ஆதாயமடைந்தன. 2004ல் அங்கு பாஜக
சட்டமன்றத்தில்
ஆகப்பெரிய கட்சியாக
எழுந்தது. நான்கு வருடங்களுக்கு
பிறகு தென் இந்தியாவில்
கர்நாடகா பாஜக
தலைமையிலான அரசாங்
கத்தைக் கொண்டிருந்த
முதல் மாநிலமாகியது.
ஆனால் பாஜகவின்
ஆட்சி பிரும்மாண்டமான
நில மற்றும் சுரங்க
ஊழல்களில் சுரங்க
குற்றக் கும்பல்களின்
எழுச்சி, பெண்கள்
மற்றும் மதச் சிறுபான்மையினர்
குறிப்பாக கிறித்து
வர்களின் மீது
தாக்குதல் ஆகியவற்றால்
அவப் புகழ் பெற்றது.
கர்நாடகா லோக்
ஆயுக்தாவால் ஊழல்
குற்றம் சுமத்தப்பட்டு
பாஜகவில் பலம்
பொருந்தியவராக
இருந்த எடியூரப்பா
2011ல் ராஜினாமா செய்ய
நேர்ந்தது. திரும்பத் திரும்ப
கலகங்கள் செய்த
பிறகு, இறுதியில்
பாஜகவை விட்டு
வெளியேறி தமது
சொந்தக் கட்சியை
அவர் நிறுவினார்.
எடியூரப்பா
வெளியேற்றத் திற்கு
பிறகு பாஜக எப்படி
இருக்கிறது என்பதை
இனி காண வேண்டியுள்ளது.
காங்கிரஸ்
ஆளுகிற ஆந்திரபிரதேசம்,
பல வழிக ளில், பாஜக
ஆளுகிற கர்நாடகாவின்
கண்ணாடி பிம்பமாக
எழுந்துள்ளது.
ஏட்டள வில்
இன்னமும் அரசாங்கத்தை
காங்கிரஸ்தான்
நடத்துகிறது.
வெளியேறிச்
சென்ற ஒய்எஸ்ஆர்
காங்கிரஸ் நிஜ
காங்கிரசாக உருவெடுத்துள்ளது.
இந்த இழப்பை
ஈடுகட்ட திரைப்பட
நட்சத்திரமான
சிரஞ்சீவி தலைமை
தாங்கிய பிரஜா
ராஜ்ஜியம் கட்சியை
எடுத்துக் கொண்ட
காங்கிரஸ் இழப்பை
ஈடுகட்டுவதில்
வெற்றி பெறவில்லை.
இப்போது தெலுங்கானா
ராஷ்ட்ரிய சமிதியோடு
ஓர் இணைப்பு மற்றும்
கையகப்படுத்துதல்
ஒப்பந்தத்துக்கான
சாத்தி யப்பாட்டை
ஆராய்ந்து வருகிறது.
15. சமீப
வருடங்களில், கர்நாடகாவை
அடுத்து, பாஜக
தனது வலிமையை அதிகரித்துக்
கொண்டு கூடுதல்
முக்கியத்துவத்தை
அடைந்த இன்னொரு
மாநிலம் பீகார்
ஆகும். நவம்பர்
2005ல் இருந்து நவம்பர்
2010க்குள் பாஜக பீகார்
சட்டமன்றத்தில்
தன் எண்ணிக்கையை
55ல் இருந்து 91 ஆக,
கிட்டத்தட்ட இரு
மடங்கு உயர்த்திக்
கொண்டுள்ளது.
பாஜகவுக்கு
அய்க்கிய ஜனதாதளத்தை
விட 24 இடங்களே குறைவு.
ராஷ்ட்ரிய ஜனதா
தளத்தின் முறை
கேடான ஆட்சி, பாஜகவுக்கு
பீகாரில் முதல்
பெரிய தகர்வை சாதிக்கவும்
அதிகாரத்துக்கு
சென்றமரவும் உதவியது
என்றாலும், நிதிஷ்
குமாரோடு அதற்குள்ள
கூட்டணிதான் உண்மையில்
ஒரு பெரிய விதத்தில்
பாஜக பீகாரில்
தனது செல்வாக்கை
விரிவுபடுத்தி
உறுதிபடுத்திக்
கொள்ள உதவியது.
நிதிஷ் குமார்,
நரேந்திர மோடி
விவகாரத்தில்
ஒரு பிரித்து நிறுத்தும்
கோட்டை போடுவதன்
மூலம் தனது மதச்சார்பற்ற
தோற்றத்தை தக்கவைக்கப்
பார்க்கிறார்;
ஆனால் பீகாருக்குள்
பாஜக சுதந்திரமாக
மதவெறி ஆட்டத்தில்
ஈடுபடுகிறது. கிடைத்த
முதல் வாய்ப்பில்
நிலச் சீர்திருத்தங்கள்
தொடர்பான பந்தோபாத்தி
யாயா ஆணைய அறிக்கையை
குப்பைத் தொட்டியில்
போடுவதைத் தொடர்ந்து
ரன்வீர் சேனாவை
சாந்தப்படுத்துவது
என நிதிஷ் ஆட்சி
முழுமையாக நிலப்பிரபுத்துவ
சக்தி களிடம் சரணடைந்துவிட்டதாலும்
பாஜக துணிச்சல்
பெற்றுள்ளது. இதற்கு மாறாக
பாஜக வுக்கு அதன்
மரபார்ந்த வலுவான
இடமான ஜார்க்கண்டில்
நிலைமைகள் கடுமையாக
உள்ளன. அங்கு
அது அதனிடமிருந்து
பிரிந்து போன ஜார்க்கண்ட்
விகாஸ் மோர்ச்சா
மற்றும் இதர பிராந்திய
சக்திகளின் கடுமையான
போட்டியை சந்திக்க
வேண்டியுள்ளது.
16. இந்திய
அரசியலில் பிராந்தியக்
கட்சிகள் ஒரு வளரும்
நிகழ்வுப் போக்காக
உள்ளன. அவற்றில்
சில, சக்திவாய்ந்த
பிராந்திய அல்லது
சமூக அடையாளங்களில்,
அல்லது தனி மாநிலம்
அல்லது கூடுதல்
சுயாட்சி கோருகிற
நீண்ட காலப் போராட்டங்களில்
வேர் கொண்டுள்ளன;
அவற்றில் பல காங்கிரஸ்
பாஜக அல்லது இதற்கு
முன் இருந்த ஜனதா
தளம் பிளவுபடுவதன்
மூலம் உருவாயின.
கடந்த இருபது ஆண்டுகளில்
பிராந்தியக் கட்சிகள்
பரவலானதையும்
உறுதிப்பட்டதை
யும், தாராளமய
மற்றும் தனியார்மய
கொள்கை ஆட்சிமுறை
மற்றும் பெருந்தொழில்
குழும நிறுவனங்களும்
சர்வதேச மூலதனமும்
செழுமையான செல்வாதார
பகுதிகளில் வலுவாக
காலூன்றும் பகுதிகளை
அடைய முயல்வதால்
உருவான சக்திவாய்ந்த
பிராந் தியப் பொருளாதார
நலன்கள் ஆகியவற்றின்
அரசியல் விளைவாகவே
கருத வேண்டும்.
இந்தப் பிராந்தியக்
கட்சிகள் மாநிலங்களில்
காங்கிரசுக்கும்
பாஜகவுக்கும்
கடுமையான போட்டியாக
இருக்கின்றன; ஆனால்
மத்திய அரசோடு
கடுமையான பேரம்
செய்து பிராந்திய
அளவில் ஆதாயங்கள்
பெறுவதற்காக அகில
இந்திய அரசியலில்
துணையான பாத்திரத்தையே
வகிக்கின்றன. அய்க்கிய முற்போக்குக்
கூட்டணி அரசாங்கம்
சக்தி வாய்ந்த
பிராந்தியக் கட்சிகளை
கையாள்வதற்கு
அணைப்பது மற்றும்
அடிப்பது என்ற
அணுகுமுறையை எடுக்கிறது.
மத்திய புல
னாய்வு துறை போன்ற
மத்திய முகாமைகளை
முழுமையாகப் பயன்படுத்துகிறது;
மாநிலங்களை மத்திய
அரசின் நிதி பலத்தின்
மூலம் அணுகுகிறது.
சில்லறை வர்த்தகத்தில்
அந்நிய நேரடி முதலீடு
பிரச்சனையில்
சமாஜ்வாதி கட்சியும்
பகுஜன் சமாஜ்கட்சியும்
அய்முகூ அரசாங்கத்தை
காப்பாற்றியதையும்,
குடியரசுத் தலைவர்
தேர்தலில் அய்க்கிய
ஜனதாதளம், சிவசேனா
போன்ற தேஜமு கூட்டணி
கட்சிகள் காங்கிரஸ்
வேட்பாளருக்கு
வாக்களித்ததையும்
நம்மால் காண முடிந்தது.
17. இந்தியக்
கம்யூனிஸ்ட் கட்சி
மார்க் சிஸ்ட்
தலைமை தாங்குகிற
இடது அணி அதன்
மிகவும் பலமான
கோட்டையான மேற்கு
வங்கத்தில் ஒரு
பெரிய தோல்வியைச்
சந்தித் தது. இகக(மா) அதன்
மற்ற இரண்டு வலுவான
பகுதிகளான கேரளா
மற்றும் திரிபுராவில்
தனது பலத்தை கிட்டத்தட்ட
தக்கவைத்துக்
கொண் டுள்ளது.
இகக(மா) கேரளாவில்
மிகவும் குறைவான
வித்தியாசத்தில்
தோல்வியடைந் தது;
அய்ந்தாவது முறையாக
திரிபுராவில்
அதிகாரத்தை தக்க
வைத்துக் கொண்டுள்ளது.
மேற்கு வங்கத்தில்
இகக(மா)வின்
சரிவு, அதன் தேசிய
அளவிலான தோற்றத்தை
கணிசமாகப் பலவீனப்படுத்தியுள்ளது.
இகக மற்றும்
அதன் கூட்டாளிகள்
2001ல் 60க்கும் மேல்
நாடாளு மன்ற உறுப்பினர்கள்
எனக் கொண்டிருந்த
ஆகக் கூடுதலான
எண்ணிக்கை, இப்போது
ஆகக் குறைவாக
24 என ஆகியுள்ளது.
தலையை மணலுக்குள்
புதைத்துக் கொண்ட
நெருப்புக் கோழி
போல் இகக(மா)
மேற்கு வங்கத்தில்
தனது தோல்விக்குப்
பின்னால் உள்ள
உண்மையான காரணத்தை
ஒப்புக் கொள்ளவோ
சரிசெய்யவோ மறுக்கிறது.
மேற்கு வங்கத்தின்
அரசியல் யதார்த்தத்தோடு
தொடர்புடைய எவரும்,
இகக(மா) மேற்கு
வங்கத்தில் நவதாராளவாத
நிகழ்ச்சிநிரலை
தழுவவும், அமல்படுத்தவும்
எடுத்த முயற்சியும்,
அதன் அதிகரித்த
அதிகார மமதையுமே
காரணம் என்கிறார்கள்;
ஆனால், இகக(மா) இந்திய
அமெரிக்க அணு ஆற்றல்
ஒப்பந்தத்தை அடுத்து,
அது அய்முகூ அரசாங்கத்திற்கு
அளித்த ஆதரவை தாமதமாக
திரும்பப் பெற்றதைத்
தொடர்ந்து ஏற்பட்ட
அரசியல் மறு சேர்க்கை
யின் ஒரு விளைவு
என்றே இதனை முதன்மையாகக்
காண்கிறது. இகக(மா) மிகவும்
முக்கியமாக மேற்குவங்கத்திலும்
தேசிய அளவிலும்
ஓர் எதிர்க்கட்சிப்
பாத்திரத்திற்கு
திரும்புமாறு
நிர்ப்பந்திக்கப்
பட்ட பிறகும்,
அது காங்கிரஸ்
தொடர்பாக ஒரு மென்மையான
அணுகுமுறையையே
மேற்கொள்கிறது;
தனது நீண்டகால
கூட்டாளிகளான
இகக மற்றும் புரட்சிகர
சோசலிஸ்ட் கட்சி
ஆகியவற்றுடன்
இருந்த அய்க்கியத்தை
மீறி, குடியரசுத்
தலைவர் தேர்தலில்
காங்கிரஸ் வேட்பாளருக்கு
வாக்களித்தது.
18. மேற்கு
வங்கத்தில் இகக(மா)வின்
அழுத்தந்திருத்தமான
தோல்வி, முதலாளித்
துவக் கருத்தியலாளர்களுக்கும்
பெரும்தொழில்
குழும ஊடகத்தினருக்கும்
தமது இடதுசாரி
எதிர்ப்புப் பிரச்சாரத்தை
மேலும் ஒருபடி
உயர்த்த துணிச்சல்
தந்துள்ளது. ஆனால்,
இகக(மா) அதிகாரபூர்வமாக
தன்னை சுய விசாரணைக்குட்படுத்திக்
கொண்டு படிப்பினை
எடுத்துக் கொள்ளாவிட்டாலும்,
இது இடது முகாமுக்குள்
கணிசமான விவாதத்தையும்
மறு சிந்தனையையும்
உற்சாகப்படுத்தியுள்ளது.
நாம் திரிணாமுல்
காங்கிரஸ் ஆட்சி,
மேற்கு வங்கத்தில்
தொடுத்துள்ள இடதுசாரி
எதிர்ப்பு இயக்கம்
மற்றும் இடதுசாரி
செயல்வீரர்கள்
மற்றும் தலைவர்கள்
மீது கட்டவிழ்த்து
விட்டுள்ள உடல்ரீதியான
வன்முறை மற்றும்
அரசு ஒடுக்குமுறையை
எதிர்க்கிற அதே
நேரம், இகக(மா)வின்
சந்தர்ப்பவாத
வழிக்கு எதிரான
போராட்டத்தை கூர்மைப்படுத்த
வேண்டும். கேரளாவில்
முன்னாள் இகக(மா)
செயல்வீரரும்
புரட்சிகர மார்க்சிஸ்ட்
கட்சியின் தலைவரு
மான தோழர் டி.பி.சந்திரசேகரனை
படு கொலை செய்தது,
மற்றும் குடியரசுத்
தலைவர் தேர்தலில்
பிரணாப் முகர்ஜிக்கு
ஆதரவு தந்தது என்ற
மேற்கு வங்கத்திற்கு
வெளியில் நடந்த இரண்டு
சமீபத்திய சம்பவங்களும்
இகக(மா) தலைமையின்
சந்தர்ப்பவாதத்திற்கு
எதிரான போராட்டம்
கூர்மையடைய பங்களிப்பு
செய்துள்ளன. மேற்கு
வங்கம், அதிகாரத்திற்
கான தமது முயற்சியில்,
திரிணாமுல் காங்கிரஸ்
தம்மை பயன்படுத்திக்
கொண்டு ஏமாற்ற
அனுமதித்த மாவோயிஸ்டுகளின்
அரசியல் திவாலாதன்மையையும்
அம்பலப்படுத்தியது.
அதிகாரத்திற்கு
வருவதற்கு முன்பு
மமதா பேனர்ஜி ஆந்திராவில்
மாவோயிஸ்ட் தலைவர்
ஆசாத் கொல்லப்பட்ட
விசயத்தில் நீதி
விசாரணை கோரினார்;
அரசியல் கைதிகளை
விடுதலை செய்வதாக
வாக்குறுதியளித்தார்;
ஆனால் இன்று அவரது
அரசாங்கம் அதே
விதத்தில் மாவோயிஸ்ட்
தலைவர் கிஷன்ஜியை
படுகொலை செய்தது.
அரசியல் காரணங்களுக்
காக சிறையில் அடைக்கப்பட்டுள்ள
500க்கும் மேற்பட்டவர்களை
விடுதலை செய்ய
மறுக்கிறது. சந்தர்ப்பவாதத்திற்கு
எதிரான கூர்மையான
போராட்டத்திலும்,
ஆளும் திரிணாமுல்
காங்கிரஸ் கட்சியின்
ஜனரஞ்சக முகமூடிக்கு
பின்னால் அதிகரித்த
அளவில் எழுந்துவருகிற
எதேச்சாதிகார
இயல்பை துணிச்சலுடன்
எதிர்ப்பதிலும்,
மேற்கு வங்கத்
தில் இடதுசாரி
இயக்கத்தை மீட்பதற்கான
திறவுகோல், அடங்கியுள்ளது.
19. நாடாளுமன்ற
தேர்தல் நெருங்கும்
போது, பாஜகவிற்குள்
அடுத்த பிரதமர்
வேட் பாளராக நரேந்திர
மோடியை முன்னிறுத்த
வேண்டும் என்ற
ஒரு கூக்குரல்
வளர்ந்து வருவதைக்
காண முடிகிறது.
குஜராத்தில் உள்ள
கட்டற்ற பெருந்தொழில்
குழும சுதந்திரம்,
அகில இந்திய அளவிலும்
திரும்ப நடக்க
வேண்டும் என நம்பிக்கையோடு
எதிர்பார்க்கிற
பெரும்தொழில்
குழும வட்டாரங்களின்
விறுவிறுப்பான
ஆதரவை மோடி பெற்றுள்ளார்.
மறுபக்கம் காங்கிரஸ்
ஒரு பெரிய மோடி
எதிர்ப்பு துருவச்
சேர்க்கை யால்
தான் ஆதாயமடைய
முடியும் என நம்புகிறது;
மோடியை பிரதமர்
வேட்பாளராக முன்னிறுத்தும்
பிரச்சினையில்
தேஜமுவிற்குள்
பிளவு வரும் எனக்
காத்திருக்கிறது;
அதே நேரம் அய்முகூ
அரசாங்கத்தின்
முதல் கட்டத் தில்
தன்னோடு இருந்து
பின்னர் பிரிந்த
கூட்டாளிகள் திரும்புவதற்கான
சாத்தியப் பாட்டிற்கும்
காத்திருக்கிறது.
20. நம்
எல்லா சக்திகளைக்
கொண்டும் மோடி
ஆதரவு இயக்கத்தை
எதிர்க்கிற அதே
வேளை, இன்று மோடி,
தாக்குதல்தன்மை
வாய்ந்த மதவாதத்தின்
திருவுருவாக இருப்பது
டன், ஒரு போலீஸ்
ராஜ்ஜியத்தில்
கடிவாள மிடப்படாத
பெரும்தொழில்
குழும ஆட்சியின்
திருவுருவாகவும்
உள்ளார் என்பதை
தெளி வாகப் புரிந்து
கொண்டாக வேண்டும்.
உண்மையில்,
அமெரிக்கா தலைமை
தாங்குகிற இஸ்லாம்
எதிர்ப்பு இயக்கத்தை
அடுத்து, மத வாதம்
ஒரு புதிய பரிமாணத்தைப்
பெற்றுள் ளது.
இந்தியாவில்
உள்ள இசுலாமியர்களை
விரட்டும் பாதுகாப்பின்மை
உணர்வு மறை யவே
இல்லை. அது,
ராம்ஜென்ம பூமி
என்ற பெயரால் மதவாத
அணிதிரட்டலுக்கான
ஒரு தாக்குதல்
தன்மை வாய்ந்த
இயக்கத்தை 1980களின்
பின் பகுதிகளில்
சங்பரிவார் துவங்கிய
பிறகு தீவிரமடைந்தது.
இப்போது இஸ்லாமிய
எதிர்ப்பு மனித
வேட்டை, அரசு ஆதரவுடன்
ஓர் ஓயாத இயக்கமாக
நடக்கும் போது,
இந்தப் பாதுகாப்பின்மை
உணர்வு மேலும்
உறுதி செய்யப்படுகிறது.
மோடியின் தலைமையில்
2002ல் குஜராத், ஒரு
கொடூர மான மனிதப்
படுகொலையைச் சந்தித்தது.
அத்துடன் பயங்கரவாதத்தை
எதிர்க்கிறோம்
என்ற பெயரால் நிகழ்த்தப்பட்ட
தொடர் போலி மோதல்
படுகொலைகளையும்
குஜராத் கண்டது.
முன் எப்போதையும்
விடக் கூடுதலாக
இப்போது, மதச்சார்பின்மைக்கான
போராட்டம் என்பதை,
ஜனநாயகத்திற்கான
பெரிய போராட்டத்தின்
ஒரு பிரிக்க முடியாத
பகுதியாகத்தான்
நடத்த முடியும்
என நாம் புரிந்து
கொள்வது மிகவும்
முக்கியமானது.
21. நாம்,
சங்பரிவாரின்
மதவெறி அரசியலில்
இருந்து மட்டுமின்றி,
கட்டற்ற அதி காரம்
மற்றும் சூறையாடலுக்காக
பசியுடன் காத்திருக்கிற
பெரும்தொழில்
குழும உலகில் இருந்தும்
இன்று மோடி தமது
சக்தியை பெறுகிறார்
எனப் புரிந்து
கொள்ளும்போது,
மோடி மாதிரிக்கெதிரான
போராட்டத்தை வெறுமனே
மதவெறி எதிர் மதச்சார்பின்மை
வழிகளில் தொடர
முடியாது என்பதை
அங்கீகரித்தாக
வேண்டும்; மாறாக
அது உழைக்கும்
மக்களின் பெரும்தொழில்
குழும எதிர்ப்பு
மற்றும் ஜனநாயகத்திற்கான
தொடர் போராட்டங்களில்
இருந்து பலம் பெற
வேண்டும். மோடி
முத்திரை அரசியலோடு
பிரிக்க முடியாதபடி
பிணைந்துள்ள மதவாத
பயங்கரம், பெரும்தொழில்
குழும மூலதனம்,
அரசு ஒடுக்குமுறை,
ஏகாதிபத்தியத்தின்
பயங்கரவாதத்திற்கெதிரான
போரின் ஒரு பகுதியாக
இஸ்லாமியர்களை
குற்றவாளிக ளாகக்
காட்டுவது ஆகியவற்றிற்கு
எதிரான போராட்டங்களை
திறம்பட இணைப்பதன்
மூலம்தான் மோடி
மாதிரியை எதிர்கொள்ள
முடியும். மக்களின் ஓர்
அதிஉயர்ந்தபட்ச
அறுதி யிடலும்
இடதுசாரி ஜனநாயக
சக்திகளின் சக்திவாய்ந்த
தலையீடும் மட்டுமே
நாடு ஒட்டுமொத்தமாக
பெரும் தொழில்
குழும - பாசிச கையகப்படுத்தல்
ஆபத்துக்கு ஆளாவதில்
இருந்து காப்பாற்ற
முடியும்.
22. பெரும்தொழில்
குழும - பாசிச தாக்குதலை
எதிர்ப்பது, காங்கிரஸ்
மற்றும் பாஜகவை
எதிர்கொள்வது
என்ற மய்ய அரசியல்
கடமை, வெவ்வேறு
மாநிலங்களில்
நிலவுகிற வேறுவேறு
வகைப்பட்ட அரசியல்
சூழல்கள் மற்றும்
நிலைமைகளைச் சார்ந்து
எழுகிற அந்தந்த
மாநிலங்களுக்கு
குறிப்பான அரசியல்
இலக்குகள் மற்றும்
முன்னுரிமை களோடு
இணைக்கப்பட வேண்டும்.
பெரும் பாலான
மாநில அரசாங்கங்கள்
பாஜக/தேஜமு அல்லது
காங்கிரஸ்/அய்முகூ
ஆகியவற்றால் நடத்தப்படுகின்றன.
ஆக இந்த இரண்டு
கூட்டணிகளுமே
தேசிய அளவில் நமது
பிரதான இலக்குகளாகும்.
இந்த இரண்டு கூட்டணிகளோடும்
நேரடியாகத் தொடர்பில்
லாத கட்சிகளால்
நடத்தப்படுகிற
மேற்கு வங்கத்தின்
திரிணாமுல் காங்கிரஸ்,
ஒடிசாவின் பிஜூ
ஜனதா தளம், உத்தரப்பிரதேசத்தின்
சமாஜ்வாதி கட்சி
தமிழ்நாட்டின்
அஇஅதிமுக போன்ற
அரசாங்கங்கள்
சம அளவுக்கு மோச
மான மக்கள் விரோத,
ஜனநாயக விரோத வரலாறு
உடையவர்கள். ஆகவே நாம் இவர்
களையும் ஊக்கத்துடன்
எதிர்த்திட வேண்டும்.
23. மக்கள்
விரோத, பெருந்தொழில்
குழும சார்பு,
ஏகாதிபத்திய சார்பு
கொள்கை களுக்கெதிரான
வெகுமக்கள் போராட்டங்
களை வர்க்கப் போராட்டங்களை
பலப்படுத் திட
சமூக ஒடுக்குமுறை
அரசு ஒடுக்குமுறை
மற்றும் மதவாத,
நிலப்பிரபுத்துவ,
ஆணாதிக்க சக்திகளை
எதிர்க்க, இதர
போராடும் சக்தி
களோடு செயலில்
ஒற்றுமையை முன்னேற்று
வது அத்தியாவசியமானதாகும்.
இந்தப் பின்புலத்தில்
அகில இந்திய இடதுசாரி
ஒருங்கிணைப்பின்
உருவாக்கம், ஒரு
முக்கிய முன்னோக்கிய
அடி வைப்பை குறிப்பதாகும்.
பகிர்ந்து கொள்கிற
ஒரு நிகழ்ச்சிநிரல்
ஒரு பொதுவான அரசியல்
அணுகுமுறை மற்றும்
செயல்தந்திர புரிதல்
ஆகியவற்றின் அடிப்படை
யில், திட்ட வகைப்பட்ட
மற்றும் செயல்தந்திர
வகைப்பட்ட விவாதங்களை
அடுத்து இகக(மா)வை
விட்டு வெளியே
வருகிற அமைப்புக்களையும்
உள்ளடக்கிய வெவ்வேறு
இடதுசாரி அமைப்புக்களை,
அகில இந்திய இடதுசாரி
ஒருங்கிணைப்பு
ஒன்று கூட்டியுள்
ளது. நாம் அகில
இந்திய இடதுசாரி
ஒருங்கிணைப்பை
பலப்படுத்துகிற
அதே நேரம் மற்ற
இடதுசாரி சக்திகளுடனும்
உறவாடு வதை, அரசியல்
ஒத்துழைப்பு மற்றும்
ஒன்றுபட்ட போராட்டத்துக்கான
சாத்தியப் பாடுகளை
ஆராய்வதைத் தொடர
வேண்டும். மேற்கு
வங்கத்திலும்
தேசிய அரசியலிலும்
கூட இகக(மா)
ஓர் எதிர்க்கட்சிப்
பாத்திரத்திற்குத்
தள்ளப்பட்டுள்ளதால்,
புறநிலைரீதியாக
பிரச்சினை அடிப்படையிலான
பரந்த இடது சாரி
ஒற்றுமைக்கான
வாய்ப்பு முன்னேறி
யுள்ளது. ஆனால்,
சமீபத்திய காங்கிரஸ்,
திரிணாமுல் காங்கிரஸ்
பிரிவை அடுத்து
இகக(மா)விற்கு
காங்கிரசோடு ஏற்பட்டுள்ள
புதுப்பிக்கப்பட்டுள்ள
செயல்தந்திர நெருக்கம்
மற்றும் இகக(மா),
இகக கட்சிகளின்
இடதுசாரி ஒற்றுமையைக்
காட்டிலும் முதலாளித்துவக்
கட்சிகளோடு ஒற்றுமைக்கு
முன்னுரிமை தரும்
தொடரும் வரலாறு
ஆகியவை இத்தகைய
ஒற்றுமைக்கு முக்கிய
தடைகளாகும்.
24. எல்லா
முதலாளித்துவக்
கட்சிகள் மற்றும்
அவர்களின் அரசாங்கங்கள்
தமக்கிடை யில்
ஒரு கொள்கைக் கருத்தொற்றுமையை
வெளிப்படுத்தும்போது,
ஒரு முழுவரிசைப்
பிரச்சனைகள் மீது
வெகுமக்கள் எதிர்ப்புக்கள்
வேகம் பெறுதல்
உற்சாகம் தருவதாகும்.
ஒடிசாவில் போஸ்கோவிற்கான
நிலப்பறிக்கு
எதிரான போராட்டம்,
ஜெய்தாப்பூர்
கூடங் குளம் அணுமின்
நிலையங்களுக்கு
எதிரான எதிர்ப்பு,
தமிழகத்தின் பரமக்குடி
துப்பாக்கிச்
சூட்டில் 7 தலித்துகள்
படுகொலை செய்யப்
பட்டது மற்றும்,
பதானிதோலா படுகொலை
செய்தவர்களை பீகாரில்
விடுதலை செய்தது
ஆகியவற்றிற்கு
எதிரான எதிர்ப்புக்கள்
குர்கானில் மாருதி
தொழிலாளர்கள்
போராட் டம் போன்ற
சமீபத்திய கிளர்ச்சிகள்
நாடெங்கும் உள்ள
ஜனநாயக கருத்தோட்டங்
களை கிளர்ச்சியுற
வைத்துள்ளன. இப்போ தைய கட்டத்தில்
இத்தகைய எல்லாப்
போராட்டங்களையும்
எல்லா விதங்களிலும்
அமைப்பாக்குவதும்,
பலப்படுத்துவதும்
மிகுந்த முக்கியத்துவம்
வாய்ந்த கடமையாகும்.
25. தீராத
மாநில அந்தஸ்து
கோரிக்கைக ளும்
தொடர்ந்து சக்திவாய்ந்த
வெகுமக்கள் கிளர்ச்சிகளை
உருவாக்குகின்றன.
தெலுங்கா னாவுக்கான
போராட்டம் பிரும்மாண்டமான
மாணவர்கள் இளைஞர்கள்
பங்கேற்பைக் கண்டது.
ஒரு வெகுமக்கள்
எதிர்ப்பின் முன்னி
லையில் கோரிக்கையை
ஏற்பதாக வாக்குறுதி
தந்த அய்முகூ அரசாங்கம்,
பின்னர் அந்த வாக்குறுதியில்
இருந்து பின்சென்றது.
தெலுங் கானா மாநிலப்
பிரச்சினை மீதான
நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா
தலைமையிலான 5 உறுப்பினர்
கள் குழு முன்வைத்துள்ள
அறிக்கை எல்லா
வாய்ப்புக்களையும்
திறந்தே விட்டு
வைத்துள் ளது.
இன்னும் இரண்டு
தனி மாநிலக் கோரிக்கைகள்,
மேற்கு வங்க மற்றும்
அஸ்ஸôம் குன்றுகளில்,
ஆண்டுகள் பலவாக
இன்னமும் தீர்க்கப்படாமல்
உள்ளன. முன்பிருந்த
டார்ஜி லிங் கோர்க்கா
குன்று கவுன்சிலுக்குப்
பதிலாக கூர்க்காலேண்ட்
பகுதி நிர்வாகம்
என மாற்றி உருவாக்கப்பட்ட
முத்தரப்பு ஒப்பந்தம்
கோர்க்கா மக்களை
திருப்திப்படுத்தவில்லை.
கோர்க்கா மக்களின்
அடையாள நெருக்கடியை
தீர்ப்பதற்கான
கூர்க்காலேண்ட்
மாநிலக் கோரிக்கை
உயிரோட்டமாகவே
இருக்கிறது. டார்ஜிலிங்
குன்றுகளில் தனி
கூர்க்காலேண்ட்
மாநில இயக்கத்தின்
மத்தியில் செங்கொடியை
உயர்த்திப் பறக்க
வைத்துள்ள, அகில
இந்திய இடதுசாரி
ஒருங்கிணைப்பின்
ஓர் அங்கமான, கோர்க்காலேண்ட்
பிரச்சனையில்
1990களில் இகக(மா)வில்
இருந்து வெளியேறி
உருவான சிபிஆர்எம்மின்
முயற்சிகளை, நாம்
ஆதரிக்கிறோம்.
26. இந்திய
அரசியலமைப்புச்
சட்டத்தின் 244ஏ
பிரிவின் கீழ்
வழங்குவதாக வாக்குறுதி
யளிக்கப்பட்ட
சுயாட்சி மாநிலத்தை
உருவாக்க வேண்டும்
என்பதற்கான ஒரு
நீண்ட கால மக்கள்
இயக்கம் கர்பி
யாங்லாங், திமா
அசா என இப்போது
அழைக்கப்படும்
வடக்குக் கச்சார்
குன்றுகள் என்ற
அசாமின் மலை மாவட்டங்களில்
இப்போதும் தொடர்கிறது.
அடுத்தடுத்த
அரசாங்கங்கள்
ஜனநாயகத்தின்
குரலுக்கு செவி
சாய்க்காததால்,
அமைதியான இயக்கம்
ஆயுதக் கிளர்ச்சியை
நோக்கி நகர்ந்துள்ளது.
பிரிவு 3ன் கீழ்
ஒரு தனி மாநிலத்
திற்கான கோரிக்கை
வலுவடைந்துள்ளது.
அரசாங்கம்
திமா அசாவில் டிஎச்டியின்
இரண்டு போட்டி
அமைப்புக்களுடனும்,
கர்பியாங்லாங்
கில் யுபிடிஎஸ்ஸ÷டனும் தனித்தனி
முத்தரப்பு ஒப்பந்தங்களில்
கையொப்பமிட்டுள்ளது.
ஆனபோதும் இந்த
ஒப்பந்தங்கள்
கொஞ்சம் கூடப்
போதாதவையாக ஏமாற்றுத்
தன்மை வாய்ந்தவையாக
உள்ளன; கீழே உள்ள
சூழல் கொஞ்சம்
கூட முன்னேறவில்லை.
மக்களு டைய
ஜனநாயகம் மற்றும்
வளர்ச்சிக்கான
விருப்பங்கள்
பூர்த்தியாகவில்லை.
ஒரு சுயாட்சி
மாநிலம் அல்லது
ஒரு தனி மலை மாநிலத்
திற்கான இயக்கம்
தொடர்கிறது. இந்தப்
பிராந்தியத்தின்
இணக்கம் மற்றும்
ஜனநாயகத் தின்
நலன்களில் இந்த
மக்களின் உரிமைகள்
மற்றும் நல்வாழ்வு
கருதி, இகக(மாலெ),
தனி மாநிலம் அல்லது
சுயாட்சி இயக்கத்திற்கான
சக்திகளோடு ஒத்துழைக்கத்
தயாராக உள்ளது.
27. விதர்பா
மற்றும் பண்டல்கண்டில்
கூட தனி மாநிலக்
கோரிக்கைகளுக்கு
ஒரு நீண்ட வரலாறும்
கணிசமான வெகுமக்கள்
ஆதரவும் உள்ளது.
மேலான நிர்வாகம்
என்ற பெயரால் சிறிய
மாநிலங்கள் வேண்டுமென
வழக்கமாக முன்வைக்கப்படுகிற
கருத்துருக்களை
நாம் நிராகரிக்கும்
போதே, நீண்ட காலமாக
நிலவுகிற மக்கள்
கோரிக்கைகளை நிறைவேற்று
வதற்காக புதிய
மாநிலங்களை உருவாக்குவது
உட்பட கூட்டாட்சி
முறையை மறுகட்ட
மைப்பு செய்வது
என்ற லட்சியத்தை
நாம் ஆதரிக்கிறோம்.
ஒரு கால வரையறைக்குட்
பட்ட அனைத்துந்தழுவிய
விதத்தில் இந்தக்
கோரிக்கைகளை தீர்ப்பதற்கு
ஆகச்சிறந்த வழி
இரண்டாவது மாநிலங்கள்
மறுசீரமைப்பு
ஆணையம் அமைப்பதாகவே
இருக்கும். வளரும்
பிராந்திய ஏற்றத்தாழ்வு
பின்தங்கிய மாநிலங்கள்
மற்றும் பிராந்தியங்களில்
வேலை வாய்ப்பை
முன்னேற்றுவது
விவசாய தொழில்
வளர்ச்சியை உருவாக்குவது
ஆகியவற்றுக்காக
சிறப்பு அவசர நடவடிக்கைகள்
வேண்டுமென நாம்
கோருகிறோம்.
28. ஊழல்
எல்லா எல்லைகளையும்
தாண்டியுள்ள போது,
ஊழல் இல்லாத சமூகம்
என்ற முழக்கம்
ஒரு ஜனரஞ்சகமான
போர் முழக்கமாக
எழுந்துள்ளது.
2011ல் அன்னா ஹசாரே
தலைமையிலான ஜன்லோக்பால்
சட்டத்திற்கான
கிளர்ச்சி பரந்த
ஆதரவைப் பெற்றது.
இயக்கம் இறுதியில்
இரண்டு திசை களில்
கிளை பிரிந்தது.
அன்னா குழுவினரின்
ஒரு பிரிவினர்
அர்விந்த் கெஜ்ரிவால்
தலைமை யில் அம்
ஆத்மி கட்சி என்ற
ஒரு புதிய கட்
சியை உருவாக்கினார்கள்.
இவர்கள் காங்கிரசா
லும் பாஜகவாலும்
ஆதரிக்கப்படும்
கூடா நட்பு முதலாளித்துவத்தை
குறி வைத்தார்கள்.
இது கட்சி சாராமல்
இருக்கிற தேர்தல்
பங்கேற்பில் இருந்து
விலகி நிற்கிற
நிறுவப்பட்ட வகை
மாதிரியான தொண்டு
நிறுவன அரசியலில்
இருந்து ஒரு வேறுபாட்டைக்
குறிக்கிறது. ஆனால்,
அன்னா அசாரே, அர்விந்த்
கேஜ்ரிவால் இருவருமே,
ஊழலை, பிரதானமாக
ஓர் ஆட்சிமுறை
பிரச்சனை என்று
பார்க்கிறார்கள்;
ஊழலையும் பெருநிறுவனச்
சூறையாடலையும்
உந்தித் தள்ளும்
கொள்கைகளை எதிர்க்கத்
தவறுகிறார்கள்.
இதற்கு மாறாக,
நாம், ஊழல் எதிர்ப்பு
இயக்கத்தின் மய்யத்
தளமாக, பெரும்தொழில்
குழும ஆதரவு கொள்கைகள்
திரும்பப் பெறப்படுவது,
விவசாய, வன மற்றும்
கடலோர நிலங்கள்
பாதுகாக்கப்படுவது,
கிராம சபைகளின்
உரிமைகள் பாதுகாக்கப்படுவது,
கருப்புப் பணத்தையும்
முறைகேடாக சேர்த்த
செல்வத்தையும்
பறிமுதல் செய்வது,
கனிம வளங்கள் தேசவுடமையாக்கப்படுவது
என்ற முழக்கங்கள்
அமைய வேண்டும்
என்கிறோம். அத்துடன், பரந்த
ஜனநாயக இயக்கத்தின்
ஒருங்கிணைந்த
பகுதியாக ஊழல்
எதிர்ப்பு இயக்கம்
கருதப்பட வேண்டும்
எனவும் நாம் வலியுறுத்துகிறோம்.
29. பல்வேறு
அரங்கங்களில்,
பிரச்சனைக ளில்,
வளரும் வெகுமக்கள்
இயக்கங்களை முன்னேற்ற,
நமது கட்சி, துடிப்பான
பாத்திரம் வகிக்கிறது.
நீடித்த, பல
பரிமாண முன்முயற்சி
கள் எடுக்கிறது.
பல பெரிய போராட்டங்களில்,
நமது தலைவர்களால்
தலைமை தாங்கப்படும்
வெகுமக்கள் அமைப்புக்கள்
முன்னணியில் இருந்துள்ளன.
ஜார்க்கண்டில்
உள்ள நமது ஒரே
சட்டமன்ற உறுப்பினர்,
சட்டமன்றத்தையும்
அதனோடு தொடர்புடைய
மேடைகளையும், மக்களின்
குரலை எழுப்பவும்,
பழங்குடியினர்
மற்றும் பிற உழைக்கும்
மக்களின் போராட்டங்
களுக்கு உதவிடவும்,
குறிப்பிடத்தக்க
அளவில் பயன்படுத்தியுள்ளார்.
பீகாரில் 2010
தேர்தல் களில்,
நாம் பெரிய தோல்வியை
சந்தித்தோம்.
கட்சி, தேர்தல்
தோல்வியால் துவண்டு
போகாமல், தனது
அரசியல் பாத்திரத்தையும்
முன்முயற்சிகளையும்
விரிவுபடுத்தியது.
நிதிஷ் குமாரின்
நிலப்பிரபுத்துவ,
மதவாத ஆட்சிக்கு
எதிரான, இயங்காற்றல்மிக்க
விடாப்பிடியான
எதிரணியாக எழுந்துள்ளது.
30. பெரும்தொழில்
குழும - அரசு அச்சைச்
சுற்றிப் பின்னப்பட்டுள்ள
ஊழல் வலை, அமைப்பு
முறை நிலவுவதற்கான
நியாயத்துக்கே
அடி கொடுத்துள்ளது.
அமைப்பு முறையை
பாதுகாக்க நீதித்துறை
தன் பாத்திரத்தை
உயர்த்தியுள்ளது.
அமைப்பு முறை
மேலும் ஆழமான நெருக்கடியில்
சிக்காமல் பாதுகாக்க,
பல சீர்திருத்தங்கள்
முன்வைக்கப் படுகின்றன.
ஆளும் வர்க்கங்கள்
பொருளாதார சீர்திருத்தங்கள்
என்ற பெயரால்,
பெரும்தொ ழில்
குழுமச் சூறையாடல்
மற்றும் ஆழமான
பொருளாதார நெருக்கடிக்குள்
நாட்டை தள்ளி யுள்ளனர்.
இப்போது அரசியல்
சீர்திருத்தங்கள்
என்ற பெயரால்,
மக்கள் உரிமைகளை
எப்படி யாவது முடக்கவும்
வெகுமக்கள் பங்கேற்பை
குறுக்கவும் பார்க்கின்றனர்.
அவர்கள் விரும்பும்
படி நடக்க விட்டுவிட்டால்,
இந்தியா, பெரும்
தொழில் குழும
- பாசிச கையகப்படுத்து
தலுக்கு பலியாகிவிடும்.
மக்கள் மத்தியில்
ஏற்பட்டுள்ள அதிருப்தியின்
ஆழத்தைப் பற்றிக்
கொண்டு, மக்கள்
சீற்றத்தை ஒரு
முற்போக்கு திசையில்
செலுத்த, ஒவ்வொரு
வாய்ப்பையும்
கைப்பற்றினால்,
நீதி, ஜனநாயகம்
மற்றும் சமூக மாற்றத்துக்கான
போராட்டத்தில்,
தற்போ தைய தருணம்
பல வெற்றிகளை ஈட்டித்
தரும். உருவெடுத்து
எழுகிற இந்தச்
சூழலை முழுமை யாகக்
கைப்பற்றி, துணிச்சலான
அடிகள் எடுத்து
முன்னேறிச் செல்ல,
கட்சியின் ஒன்பதாவது
காங்கிரஸ் உறுதியேற்க
வேண்டும்.
******************
களம்
பகத்சிங் நினைவுதினக்
கூட்டங்கள்
23.03.2013 அன்று
பகத்சிங் நினைவு
தினத்தில் அகில
இந்திய மாணவர்
கழகமும், புரட்சிகர
இளைஞர் கழகமும்
நடத்திய கூட்டங்களில்
இலங்கை தமிழர்
உரிமைகளுக்கான
கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு
முழக்கங்கள்
எழுப்பப்பட்டன.
திருவள்ளூர்
மாவட்டம் ஊத்துக்கோட்டை
தாலுகா, செஞ்ஜங்கரணையில்
புரட்சிகர இளைஞர்
கழக கொடியேற்று
நிகழ்ச்சி மற்றும்
பெயர் பலகை திறப்பு
நிகழ்ச்சி நடைபெற்றது. புரட்சிகர
இளைஞர் கழக தோழர்
துளசி தலைமை தாங்கினார்.
புரட்சிகர இளைஞர்
கழகத்தின் தேசிய
செயலாளர் தோழர்
பாரதி, மாலெ கட்சியின்
திருவள்ளூர் மாவட்ட
செயலாளர் தோழர்
ஜானகிராமன், மாநிலக்குழு
உறுப்பினர் தோழர்
எ.எஸ்.குமார், அகில
இந்திய முற்போக்கு
பெண்கள் கழக சென்னை
மாவட்டத் தலைவர்
தோழர் தேவகி, புரட்சிகர
இளைஞர் கழகத்தின்
திருவள்ளூர் மாவட்டப்
பொறுப்பாளர் தோழர்
அன்பு உரையாற்றினர்.
மாணவர், இளைஞர்
கழக தோழர்கள் சீதா,
சரவணன், உமா, சீனிவாசன்
ஆகியோர் கலந்து
கொண்டனர்.
அதே தினத்தில்
திருபெரும்புதூரில்
பகத்சிங் நினைவு
நாள் கூட்டம் நடைபெற்றது. புரட்சிகர
இளைஞர் கழக காஞ்சிபுர
மாவட்ட அமைப்பாளர்
தோழர் ராஜகுரு
தலைமை தாங்கினார்.
மாலெ கட்சி காஞ்சிபுர
மாவட்ட பொறுப்பாளர்
தோழர் இரணியப்பன்,
சென்னை மாவட்டச்
செயலாளர் தோழர்
சேகர், அகில இந்திய
முற்போக்கு பெண்கள்
கழக மாநிலத் தலைவர்
தோழர் தேன்மொழி
மற்றும் தோழர்
குப்பாபாய், அகில
இந்திய மாணவர்
கழக மாநிலத் தலைவர்
தோழர் மலர்விழி,
உழைப்போர் உரிமை
இயக்க மாவட்ட தலைவர்
தோழர் மோகன், கட்டுமான
தொழிலாளர் சங்க
மாவட்டத் தலைவர்
முனுசாமி ஆகியோர்
உரையாற்றினர்.
ஹ÷ண்டாய்
ஆலை தொழிலாளர்கள்
கலந்துகொண்டனர்.
இலங்கை தமிழர்
உரிமைக்கான போராட்டத்தில்
அகில இந்திய மாணவர் கழகம், புரட்சிகர இளைஞர் கழகம், ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்கம்
இலங்கை
தமிழர்கள் உரிமைக்கான
போராட்டத்தில்
தமிழ்நாடு முழுவதும்
மாணவர்கள் எழுச்சி
பெற்ற பின்னணியில்
அகில இந்திய மாணவர்
கழகம், புரட்சிகர
இளைஞர் கழகம் மற்றும்
ஜனநாயக வழக்கறிஞர்
சங்கம் ஆகிய அமைப்புக்களை
சேர்ந்த தோழர்களும்
மாணவர் போராட்டத்துக்கு
ஆதரவு தெரிவித்தும்
சுதந்திரமாகவும்
முன்முயற்சிகள்
மேற்கொண்டனர்.
12.03.2013, 13.03.2013 தேதிகளில்
கும்பகோணம் அரசு
கலைக்கல்லூரியில்
நடந்த பட்டினிப்
போராட்டத்தில்
அகில இந்திய மாணவர்
கழக மாநில பொதுச்
செயலாளர் ரமேஷ்வர்
பிரசாத், பீமாராவ்
ராம்ஜி, திலீப்
கலந்துகொண்டு
ஆதரவு தெரிவித்தனர்.
சுவரொட்டி
பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
12.03.2013 அன்று கோவை
சட்டக் கல்லூரி
மாணவர்கள் போராட்டத்தில்
புரட்சிகர இளைஞர்
கழக தோழர்கள் தோழர்
வெங்கடாசலம் தலைமையில்
கலந்துகொண்டனர்.
14.03.2013 அன்று
சென்னை அம்பேத்கார்
சட்ட பல்கலை கழகத்தில்
போராடும் மாணவர்களை
ஜனநாயக வழக்கறிஞர்கள்
சங்கத்தின் தோழர்கள்
சந்தித்து ஆதரவு
தெரிவித்தனர். தோழர்கள்
பாரதி, சுரேஷ்,
விஜய், சதீஷ் மற்றும்
யோகேஸ்வரன் இதில்
பங்குபெற்றனர்.
15.03.2013 அன்று
சென்னை உயர்நீதிமன்ற
வளாகத்தில் உண்ணாவிரதம்
இருந்தவர்களை
புரட்சிகர இளைஞர்
கழக காஞ்சிபுர
மாவட்ட அமைப்பாளர்
ராஜகுரு, திருவள்ளூர்
மாவட்ட அமைப்பாளர்
அன்பு, பாரதி, யோகேஸ்வரன்,
சுரேஷ், விஜய்,
அகில இந்திய மாணவர்
கழக மாநிலத் தலைவர்
மலர்விழி மற்றும்
சீனிவாசன் ஆகியோர்
சந்தித்து போராட்ட
ஒருமைப்பாடு தெரிவித்தனர்.
சென்னை சட்டக்கல்லூரி
வளாகத்தில் உண்ணாவிரதம்
இருந்தவர்களை,
சட்டக் கல்லூரி
விடுதி மாணவர்களை
சந்தித்து ஆதரவு
தெரிவித்தனர்.
ராஜகுரு, மலர்விழி,
பாரதி உரையாற்றினர்.
கோவை அண்ணா
பல்கலைக் கழக மாணவர்
பட்டினிப் போராட்டத்தில்
அகில இந்திய மாணவர்
கழக தோழர்கள் கலந்துகொண்டனர்.
கடலூர் மாவட்டம்
காட்டுமன்னார்கோவிலில்
நடந்த ஆர்ப்பாட்டத்தில்
இளைஞர் கழக மாநில
அமைப்புக் குழு
உறுப்பினர் தோழர்
ராஜசங்கர், விமல்ராஜ்,
மாணவர் அமைப்பைச்
சேர்ந்த அஜித்,
தீபன், செவிச்செல்வன்,
பாரத் குமார் கலந்து
கொண்டனர்.
18.03.2013 அன்று
சென்னை உயர்நீதிமன்ற
வழக்கறிஞர்கள்
சங்கம் அழைப்பு
விடுத்த சுங்க
இலாகா அலுவலக முற்றுகை
போராட்டத்தில்
ஜனநாயக வழக்கறிஞர்கள்
சங்கம் சார்பில்
பாரதி, சுரேஷ்,
விஜய், யோகேஸ்வரன்,
தமிழ்செல்வன்
மற்றும் ஆதரவாளர்கள்
கலந்து கொண்டனர்.
கோவையில் அண்ணா
பல்கலைக் கழக மாணவர்
பட்டினிப் போராட்டத்தில்
அகில இந்திய மாணவர்
கழக தோழர்கள் கலந்துகொண்டனர்.
19.03.2013 அன்று
சென்னை உயர்நீதிமன்ற
வழக்கறிஞர் சங்கத்தின்
உண்ணாவிரதப் போராட்டத்தில்
ஜனநாயக வழக்கறிஞர்
சங்கம் சார்பில்
பங்கேற்றனர். சென்னை
பல்கலைக்கழக வளாகத்தில்
நடந்த உண்ணாவிரதத்தில்
அகில இந்திய மாணவர்
கழக மாநிலத் தலைவர்
தோழர் மலர்விழி
கலந்து கொண்டு
உரையாற்றினார்.
கோவையில் மாணவர்
கூட்டமைப்பு நடத்திய
பேரணியில் அகில
இந்திய மாணவர்
கழக தோழர்கள் கலந்துகொண்டனர்.
சேலத்தில் சுவரொட்டி
பிரச்சாரம் மேற்கொண்டு
புரட்சிகர இளைஞர்
கழக மாநில அமைப்புக்
குழு உறுப்பினர்
தோழர் வேல்முருகன்
தலைமையில் சேலம்
சட்டக் கல்லூரி
மாணவர்களுக்கு
ஆதரவு தெரிவிக்கப்பட்டது.
20.03.2013 அன்று
சென்னை பல்கலைக்கழக
வளாகத்தில் நடந்த
உண்ணாவிரதப் போராட்டத்தில்
தோழர் மலர்விழி
கலந்து கொண்டார். சென்னை
உயர்நீதிமன்ற
வழக்கறிஞர்கள்
சங்கம் ஆளுநர்
மாளிகையை முற்றுகையிட்டது.
தோழர்கள் ரமேஷ்,
விஜய், சுரேஷ்,
ரகுநாதன், தமிழ்
செல்வன், யோகேஸ்வரன்
மற்றும் ஆதரவாளர்கள்
கலந்து கொண்டனர்.
21.03.2013 அன்று
அகில இந்திய மாணவர்
கழகம், புரட்சிகர
இளைஞர் கழகம் சார்பில்
சாஸ்திரி பவன்
மத்திய அலுவலகம்,
ப.சிதம்பரம் வீடு
முற்றுகை போராட்டம்
நடைபெற்றது.
22.03.2013 சென்னை
உயர்நீதிமன்ற
வழக்கறிஞர்கள்
சங்கம் சார்பில்
மத்திய ரிசர்வ்
வங்கி முன்பு ஆர்ப்பாட்டம்
நடைபெற்றது. இதில்
ஜனநாயக வழக்கறிஞர்
சங்கம் சார்பில்
தோழர்கள் கலந்து
கொண்டனர்.
- மலர்விழி
******************