மண்ணில் பாதி
பெண்கள் மீதான
வன்முறை
ஆட்சியாளர்கள்
அலட்சியத்துக்கு
பதிலடி தர உறுதியேற்போம்
உலக வங்கி
தரும் விவரங்கள்படி,
புற்று நோய், விபத்துக்கள்,
போர், மலேரியா
ஆகிய வற்றால் பெண்களுக்கு
ஏற்படும் ஆபத்தை
விட கூடுதல் ஆபத்து
பாலியல் வன்முறை
மற்றும் குடும்ப
வன்முறையால் ஏற்படுகிறது.
அய்க்கிய நாடுகள்
தரும் விவரங்கள்படி,
உலகில் உள்ள பெண்களில்
மூன்றில் ஒரு பெண்
தனது வாழ் நாளில்
பாலியல் வல்லுறவுக்கோ,
பாலியல் தாக்குதலுக்கோ
உட்படுத்தப்படுகிறார்.
ஒன் பில்லியன்
ரைசிங் என்று ஆங்கிலத்தில்
சொல்லப்படுவதை,
தமிழில், நூறு
கோடி பெண்களின்
எழுச்சி என்று
சொல்லலாம். காதலர்
தினமான பிப்ரவரி
14 அன்று உலகம் முழுவதும்
இந்த எழுச்சி நாள்
அனுசரிக்கப்பட்
டது. உலகம் முழுவதும்
பாலியல் வன்முறைக்கு
உள்ளாக்கப்பட்டு
இன்னமும் வாழ்ந்து
கொண் டிருக்கும்
பெண்களின் எண்ணிக்கை
நூறு கோடி என்ற
மதிப்பீட்டின்
அடிப்படையில்
இந்த போராட்டத்துக்கு
இப்படி ஒரு பெயர்
உருவானது.
அந்த
பாதிக்கப்பட்ட
பெண்களின் எழுச்சி
தினமாக அனுசரிக்கப்பட்ட
பிப்ரவரி 14 அன்று
உலகம் முழுவதும்
205 நாடுகளில் இந்த
நிகழ்ச்சி நடத்தப்பட்டது. உலகம்
முழுவதும் பாலியல்
வன்முறையால் பாதிக்கப்பட்ட
நூறு கோடி பெண்களுக்கு
ஆதரவாக நடனமாட
வேண்டும் என்று
இந்த அனுசரிப்பின்
அமைப்பாளர் அமெரிக்க
பெண்ணியவாதி ஈவ்
என்ஸ்லர் அழைப்பு
விடுத்தார். குர்கானின்
ஆணாதிக்கத்துக்
கும் பெண்களை வெறுப்பதற்கும்
இறுதிச் சடங்கு
செய்யும் நிகழ்ச்சி
ஒன்று மும்பையில்
நடத்தப்பட்டது.
சிதார் கலைஞர்
ரவிசங்கர் மகள்
அனுஷ்கா சங்கர்
தான் சிறுமியாக
இருந்த போது குடும்ப
நண்பர் ஒருவரால்
பாலியல் ரீதியாக
தவறாக பயன்படுத்தப்பட்டதை
விவரித்தார்.
பிரிட்டிஷ்
நாடாளுமன்றம்
பெண்கள் மீதான
வன்முறை பற்றிய
விவாதம் நடத்தியது.
உலகம் முழுவதும்
இந்த பெண்கள் மீதான
வன்முறைக்கு எதிரான
பிரச்சாரம், ஆண்கள்
பெண்கள் பங்கேற்புடன்
வண்ண வண்ண வடிவங்களில்
மேற்கொள்ளப்பட்டது.
இந்த
கொண்டாட்டம் வடிவிலான
எதிர்ப்பையும்
பெண்ணியவாதிகள்
எதிர்ப்பு, மேற்கத்
திய எதிர்ப்பு
என்று புறந்தள்ளுகிறப்
போக்கும் அக்கம்பக்கமாக
எழுந்தது. அப்படியே
இருந்தா லும் அதில்
என்ன தவறு? உள்நாட்டு கலாச்சா
ரத்தை பாதுகாக்கிறோம்
என்ற பெயரில் பெண்
களை தினம் தினம்
கூடுதல் ஆபத்தில்
தள்ளும் நடவடிக்கைகள்தான்
அதிகரிக்கின்றன.
பெண் கள் பாதுகாப்பு
பற்றி பெண்ணியவாதிகள்
பேசும் அளவுக்கு,
செயல்படும் அளவுக்கு,
கலாச்சாரக் காவலர்கள்
நிச்சயம் பேச முடியாது.
உலகம்
முழுவதும் பெண்கள்
மீதான தாக் குதல்களுக்கு
எதிராக பெண்களும்
ஆண்களும் குரல்
எழுப்புகிற நேரத்தில்,
கேரள உயர்நீதிமன்ற
டிவிசன் பெஞ்ச்,
பெண்கள் வீட்டில்
செய்யும் வேலைகளுக்கு
சம்பளம் கேட்கக்
கூடாது என் றும்
கடவுள் நேராக செய்ய
முடியாததை தாய்
மூலம் செய்வதாகவும்,
இதுதான் அது என்றும்
புளித்துப்போன
பழங்கதையைக் கிண்டுகிறார்.
குழந்தையை விட்டுவிட்டு
வேலைக்குச் செல்
லும் பெண்களுக்கு
இனி குற்ற உணர்வு
தேவை யில்லை என்று
சொல்லிவிட்டு
தாய்ப்பாலை பிடித்து
வைத்து பின்னர்
குழந்தைக்குத்
தரும் கருவி ஒன்றை
விற்கும் நிறுவனம்
விளம்பரம் செய்கிறது.
அந்த விளம்பரத்தில்
கோட் சூட் அணிந்த
பெண், அதாவது உயரதிகாரியான
ஒரு பெண், ஒரு கையில்
மடிக்கணினியும்
மறு கையில் குழந்தையையும்
ஏந்தி மகிழ்ச்சியுடன்
கொஞ்சுகிறார்.
அந்தப் பெண்
நிழல் படத்துக்கு
அப்படி நின்றிருக்க
முடியும். யதார்த்தத்தில்
அது சாத்தியமற்றது.
அந்த நேரம்
அந்தப் பெண்ணுக்கு
மடிக்கணினி மீதோ,
குழந்தை மீதோ எரிச்சல்
மண்டும். வேலைக்குப்
போகும் பெண்களுக்கு
ஓராண்டு காலம்
ஊதியத்துடன் கூடிய
மகப்பேறு விடுப்பு
வேண்டும் என்ற
கோரிக்கையுடன்
போராட்டங்கள்
நடக்கும் போது,
குற்ற உணர்வு பற்றி
பேசுகிறது விளம்
பரம். யாருக்கு
வர வேண்டும் குற்ற
உணர்வு? இந்த
குறைந்தபட்ச உரிமை
கூட உயர் பதவி
யில் இருக்கும்
பெண்ணுக்குக்
கூட மறுக்கப்ப
டும் நிலையில்
சமூகமும் ஆட்சியும்
இருப்பதல் லவா
வெட்கக் கேடு?
அப்படி வைத்திருப்பவர்
களுக்குத்தானே
குற்ற உணர்வு வர
வேண்டும்?
மிகச்சரியாக
இதுபோன்ற கருத்துக்களே
பெண்களை பாலியல்
வன்முறை செய்யலாம்,
ஆசிட் வீசலாம்,
பிறகு தப்பித்துக்
கொள்ளலாம், மொத்த
சமூகமும் நமக்காகப்
பேசும் என்ற கருத்தை
ஆண்கள் மத்தியில்
உருவாக்குகின்றன.
அமில
வீச்சுக்கு ஆளாகி
வினோதினி இறந்த
சில நாட்களுக்குள்
அதே போல் அமில
வீச்சுக்கு ஆளாகி
வித்யா இறந்துவிட்டார். மருத்துவமனையில்
போதுமான மருத்துவம்
தராததே காரணம்
என்றும் மருத்துவமனையின்
நிலைமைகள் மிகவும்
மோசமாக உள்ளதாகவும்
வித்யாவின் சகோதரர்
சொல்கிறார். மருத்துவம்
முறையாக இருந்திருந்தால்
தனது சகோதரியை
காப்பாற்றி இருக்க
முடியும் என்கிறார்.
இதே கீழ்ப்பாக்கம்
மருத்துவமனையில்
இருந்துதான் தனியார்
மருத்துவமனைக்குச்
சென்றார் வினோதினி.
டில்லி
போராட்டத்தை அடுத்து,
ஜெயல லிதா மரண
தண்டனை, ஆண்மை
அகற்றம் என்றெல்லாம்
ஆவேசமாகப் பேசினார். 13 அம்சத்
திட்டம் என்றார்.
குண்டர் சட்டம்
பாயும் என்றார்.
வன்முறைக்கு உள்ளான
பெண்ணுக்கு முறையான
மருத்துவம் தர
முடியாத நிலையில்
அரசு மருத்துவமனைகளை
பராமரிக்கும்
அரசுக் கும் அதற்கு
தலைமை தாங்குபவர்களுக்கும்
என்ன தண்டனை? இப்போது பிணத்தை
வீட்டுக்கு எடுத்துச்
செல்லும் செலவை
அரசு ஏற்கும் என்கிறார்கள்.
சாமான்ய மக்களை
அலட்சியத்தால்
சாகடிக்கிறது
தமிழக அரசு.
இந்தச்
சூழலில் நாடு மற்றுமொரு
சர்வதேச உழைக்கும்
பெண்கள் தினத்தை
கடந்துவிடும். சோனியா
முதல் ஜெயலலிதா
வரை, பெண்களை வன்முறையில்
இருந்து பாதுகாக்க
தற்போது இருக்கிற
சட்டங்களை அமலாக்குவதில்
அக்கறை காட்டாத
ஆட்சியாளர்கள்
எல்லாம், பெண்க
ளுக்கு வாழ்த்து
தெரிவிப்பார்கள்.
ஒப்புக்கு
சில அறிவிப்புக்கள்
செய்துவிட்டு
வாக்களியுங்கள்
என்பார்கள். தாய்ப்பாலை
பிடித்து வைக்கும்
விளம்பரம் போல்
இன்னும் பல விளம்பரங்கள்
பெண்களுக்கு வாழ்த்துச்
சொல்லும். உங்கள் விடுதலைக்கு
எங்கள் பொருட்களை
வாங்குங் கள் என்று
பசப்பும். ஆங்காங்கே இனிப்பு
வழங் குவார்கள்.
பாதுகாப்பாக
இருக்க வீட்டுக்குள்
இரு என்று இன்னொரு
கும்பல் அறிவுரை
வழங்கும். பிறகு ஆசிட்
வீச்சு, பாலியல்
வன்முறை எல்லாம்
நடக்க, வாழ்த்துச்
சொன்னவர்கள், விளம்பரம்
செய்தவர்கள், அறிவுரை
சொன்னவர் கள் எல்லாம்
சேர்ந்து வேடிக்கைப்
பார்ப்பார்கள்.
இந்த
அலட்சியப் போக்கு,
மெத்தன உணர்வு
ஆட்சியாளர்களுக்கு
இருப்பதை இனியும்
அனுமதிக்கக் கூடாது. சர்வதேச
உழைக்கும் பெண்கள்
தினத்தன்று நடந்த
ரஷ்ய உழைக்கும்
பெண்களின் எழுச்சிதான்
ரஷ்யா வில் ஜார்
ஆட்சியை தூக்கியெறிவதில்
முக்கிய பங்காற்றியது.
இந்திய ஆட்சியாளர்களின்
அலட்சியப் போக்குக்கு
தக்க பதிலடி தர
வருகிற மார்ச்
8 அன்று இந்திய
உழைக்கும் பெண்கள்
உறுதியேற்க வேண்டும்.
மாலெ
கட்சி முன்முயற்சியால்
அம்பத்தூரில்
கடத்தப்பட்ட சிறுமி
மீட்பு
20.02.2013 அன்று
அம்பத்தூர் உப்புகார
மேடு பகுதியில்
6ஆம் வகுப்பு மாணவி
பவானி மாலையில்
தனது வீட்டருகில் விளையாடிக்
கொண்டிருந்தார்.
அதன் பிறகு
அந்தக் குழந்தையைக்
காணவில்லை. 20.02.2013 அன்று மாலையே
அம்பத்தூர் காவல்
நிலையத்தில் தோழர்கள்
மோகன், ஸ்ரீதர்,
முத்துக்குமார்
ஆகியோர் புகார்
கொடுத்தனர். காவல் நிலையத்தில்
சிஎஸ்ஆர் காப்பி
தரவில்லை. காவல்துறையினர்
நடவடிக்கை ஏதும்
எடுக்காததால்
22.02.2013 அன்று தோழர்கள்
தேவகி, மோகன் ஆகியோர்
காவல் நிலையம்
சென்று கேள்வி
எழுப்பினர்.
23.02.2013 அன்று தோழர்கள்
தேன்மொழி, தேவகி
ஆகியோர் ஆய்வாளரைச்
சந்தித்து புகாரின்
மீது துரித நடவடிக்கை
உடனே தேவை என்று
வலியுறுத்தினர்.
குழந்தைகளை
கடத்தும் கும்பல்கள்
உள்ளூர் புரோக்கர்
மூலம், சிறுமி
பவானியை கடத்தியதை
காவல்துறையினர்
கண்டுபிடித்து
6 நாட்களுக்குப்
பிறகு அந்தக் குழந்தையை
மதுரையில் இருந்து
மீட்டு அம்பத்தூருக்கு
அழைத்து வந்தனர்.
மாலெ கட்சியின்
முன்னணி தோழர்களிடம்
சாட்சி கையெழுத்து
வாங்கிய பிறகு
காவல் துறை புகார்
கொடுத்த பவானியின்
பாட்டி சகுந்தலாவிடம்
பவானியை ஒப்படைத்துள்ளது.
*********************************************************************************************