COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Sunday, June 23, 2013

மார்ச்-(1-15)~4

விவாதம்

நடுத்தர வர்க்கத்தினரை எப்படி அணுகுவது?

நடுத்தர வர்க்கம், நாட்டு விடுதலைப் போராட்டத்தில் பங்கு பெற்றது. இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கு பெற்றது. நக்சல்பாரி இயக்கத்தில் பங்கேற்றது. நெருக்கடி நிலை எதிர்ப்பிலும் அதற்கு முன் ஊழல் எதிர்ப்பிலும் பங்கு பெற்றது. கடந்த சில வருடங்களாக ஊழல் எதிர்ப்பில், மிகவும் சமீபத்தில் ஆணா திக்க வன்முறைக்கெதிரான போராட்டங்களில் பங்கு பெற்றது. துனிஷியா, எகிப்து நாடுகளின் அரபு வசந்தத்தில், வால் ஸ்ட்ரீட்டைக் கைப் பற்றுவோம் இயக்கத்தில், நடுத்தர வர்க்கத்தின் பங்கு குறிப்பிடத்தக்கது.

நடுத்தர வர்க்கம் தொடர்பான ஒரு தட்டையான அணுகுமுறையை மேற்கொள்வது உதவாது. கண்மூடித்தனமாக நடுத்தர வர்க் கத்தை எதிர்ப்பதும், விமர்சனமற்ற விதத்தில் நடுத்தர வர்க்கம்பால் மோகம் கொள்வதும் கூட, நல்லதல்ல. மார்க்ஸ் காலத்திய இங்கிலாந் தின் நடுத்தர வர்க்கம், பிரெஞ்சு முதலாளித் துவப் புரட்சி காலத்திய நடுத்தர வர்க்கத்தில் இருந்து, வரலாற்றுப் பாத்திரத்திலேயே மாறுபட்டது. இந்தியாவிலும் கூட, 1947 - 1967 - 1977 - 2012 கால நடுத்தர வர்க்கங்களில், இந்தியாவின் சமூக பொருளாதார அரசியல் வளர்ச்சிகளில் இருந்து, நிறைய மாற்றங்கள் நிச்சயம் நிகழ்ந்துள்ளன.

இகக (மாலெ) தனது ஒன்பதாவது அகில இந்திய மாநாட்டிற்கான நகல் பொதுத் திட்டத் தில் நடுத்தர வர்க்கம் பற்றிப் பின்வருமாறு குறிப்பிடுகிறது:

பெரும்தொழில்குழும சார்பு ஏகாதிபத் திய சார்பு கொள்கை ஆளுகை முறை, பெரும் தொழில்குழும ஊடகத் துறையின் ஆதிக்கப் பிரிவுகளின், மேல்நோக்கி நகரும் நடுத்தர வர்க்கத்தின் செல்வாக்குமிக்க பிரிவினரின், விமர்சனமற்ற ஆதரவைப் பெற்றுள்ளது. அதே நேரம் விரிவடைந்து வரும் மத்திய தர வர்க்கத் தின் ஒரு பரந்த பிரிவினர், பெரும்தொழில் குழும சூறையாடல் மற்றும் ஏகாதிபத்திய ஆதிக்கத்திற்கெதிரான வெகுமக்கள் போராட் டத்தை ஆதரிக்கின்றனர். பல நேரங்களில், மக்களின் ஜனநாயக விருப்பங்கள் மற்றும் உரிமைகளின் அறுதியிடலுக்கான போராட்டத் திற்கு ஒரு கூர்மையான முனையை வழங்கு கின்றனர்.

உலகமயக் கொள்கைகளை விமர்சனமற்ற முறையில் ஆதரிக்கும் மேல் நோக்கி நகரும் மேல் தட்டுப் பிரிவு இருக்கிறது. இவர்கள் உலகமயத்தின் பயனாளிகள். பெருமுதலாளித் துவ வளர்ச்சிப் பாதையை, அதற்காகவே செயல்படுகிற முதலாளித்துவ அரசியலை, அதனைத் தடையின்றிச் செயல்பட வைக்கும் ஊழலை ஆதரிப்பவர்கள். அவற்றால் பயன் பெறுபவர்கள். ஆனால், இவர்கள் மத்திய தர வர்க்கத்தின் ஒரு பகுதியினரே. எல்லாக் காலங் களிலும், ஆளும் வர்க்கங்கள் தமது சமூக அடித் தளத்தைப் பெருக்க முயற்சிக்கும். ஆனால் அதற்கும் ஓர் எல்லை உண்டு.

உலகமயத்தால் பாதிப்படைந்த மத்திய தர வர்க்கத்தினரே பெரும்பான்மையினர். வளர்ச்சி முன்னேற்றம் தமக்கானதல்ல என்பதை இந்த முப்பதாண்டுகளில் தமது சொந்த அனுபவங் கள் மூலம் அவர்கள் புரிந்துகொண்டுள்ளார்கள். பாட்டாளி வர்க்கமும், பாட்டாளி வர்க்கக் கட்சியும் இவர்களை எப்படி அணுக வேண்டும்?

மத்தியதர வர்க்கத்திற்கு ஊசலாட்டக் குணம் உண்டு. வர்க்கங்களாகப் பிளவுண்ட சமூகத்தில், மேலோங்கிய நிலையில் முதலாளித் துவ அரசியல் உள்ளது. ஆனால் முதலாளித் துவப் பொருளாதாரமும் அமைப்பு முறையும், இதுவரை கண்டிராத ஆழமான அனைத்தும் தழுவிய நெருக்கடியைச் சந்திக்கின்றன. அவை மக்கள் மீது தொடுக்கும் தாக்குதல்களும், அவற்றின் பலவீனங்களால் தொடுக்கப் படுபவையே. பலங்களால் தொடுக்கப்படுபவை அல்ல. பாட்டாளி வர்க்கப் போராட்டங்களும், பாட்டாளி வர்க்க அரசியலும் பலப்பட பலப்பட, மத்தியதர வர்க்கம் அவற்றை நோக்கி நகரும்.

நடுத்தர வர்க்கம் பிற்படுத்தப்பட்ட சாதிகள் தொடர்பு என்ற பிரச்சனையும் கூட கவனிக்கத்தக்க ஒன்றாகும். இந்தியாவில் ஒரு ஜனநாயகப் புரட்சியை, இந்திய சமூகத்தையும் ஆட்சி அமைப்பு முறையையும் ஒரு முழுமை யான ஜனநாயகப்படுத்தலுக்கு உட்படுத்துதல் என்ற கடமையை நடுத்தர வர்க்கத்தை உழைக்கும் மக்களோடு நிற்க வைக்காமல் சாத்தியமாக்க முடியுமா? ஜனநாயகப் புரட்சியில் விவசாயப் புரட்சி அச்சாணி எனும் போது, நடுத்தர விவசாயிகளோடு ஒற்றுமை இல்லாமல் ஜனநாயகப் புரட்சி எப்படி நிறைவு பெறும்? பரந்த விவசாயிகளின் ஒற்றுமை என்பதன் சாரமே, ஏழை மற்றும் நடுத்தர விவசாயிகளின் ஒற்றுமைதானே? “ஏழை விவசாயிகளைச் சார்ந்திரு, நடுத்தர விவசாயி களுடன் அய்க்கியப்படு, பணக்கார விவசாயி களைக் கட்டுப்படுத்து, நிலப்பிரபுக்களை ஒழித்துக்கட்டுஎனச் சீனப்புரட்சியின் போது தோழர் மாவோ தலைமையில் பின்பற்றப்பட்ட வர்க்க வழி, அதன் சாரமான அடிப்படையில் இந்தியாவிற்குப் பொருந்தும்தானே?

நடுத்தர விவசாயிகள் தமது உழைப்பு சக்தியை விற்கத் தேவை இல்லை. இவர்களது மேல்தட்டு பிரிவினர் உட்பட, தமது வருமா னத்தில் 50 சதவீதத்திற்கும் மேல் உழைப்புச் சுரண்டலிலிருந்து பெறுவதில்லை. நிஜ வாழ்க்கையில், வர்க்கங்கள் பரிசுத்தமான தாகவோ லட்சிய வகையினங்களாகவோ இருப்பதில்லை. புறநிலைரீதியான வர்க்க நிலை காரணமாக, நிலப்பிரபுக்கள் மற்றும் பாட்டாளி களுக்கிடையில் ஊசலாடுகின்றனர். ஒரு பக்கம் எந்த நிலப்பிரபுக்கள், குலக்குகளால் துன்பப் படுகின்றரோ, மறுபக்கம் அவர்கள் மீது ஒரு புறநிலைரீதியான சார்புத்தன்மை கொண்டுள்ள னர். சாதியரீதியாகவும், முதலாளித்துவ, குலக் கட்சித் தலைமைகளைப் பின்பற்றுகின்றனர். புறநிலை வளர்ச்சி நிர்ப்பந்தங்களால் ஓர் அரசி யல் முறிவு வரும் வரை, இது தொடர்கிறது. ஊசலாட்டம், ஸ்திரமற்ற தன்மை என்பது ஒரு நிலை. மறுபுறம் சமீப காலங்களில், நிலப்பறி எதிர்ப்பு, ஊழல் எதிர்ப்பு, போன்ற பல்வேறு விஷயங்களில் களம் காண்கிறார்கள் என்பது மற்றுமொரு நிலை. இந்த இரண்டாவது அம்சத்தை அடையாளம் கண்டு உறவாடி வளர்த்தெடுப்பதுதான் நமது நிலைப்பாடாக இருக்க முடியும்.

நடுத்தர வர்க்கங்கள் பற்றிப் பேசும் போது, நாம் நிச்சயம் மாணவர் இளைஞர்களைப் பற்றிப் பார்த்தாக வேண்டும். மாணவர் இளைஞர்களின் பருவம் கருதி அவர்களது சமூக நிலை கருதி, நாம் அவர்களை ஒரு வர்க்கத் தட்டாகக் (ஸ்ட்ராட்டா) கருதுகி றோம். வர்க்கமாக அல்ல. இவர்களில் ஏகப் பெரும்பான்மையினர் அடிப்படை வர்க்க வேர் கொண்டவர்கள், அடிப்படை வர்க்க வாழ் நிலைக்கே திரும்புகின்றனர் என்ற போதும், ஒரு பருவத்தில், வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் மத்தியதர வர்க்க சமூக கலாச்சார நிலைக ளையே எடுக்கின்றனர். இவர்களது விருப்பங் களும் தேடல்களும் மத்தியத்தர வர்க்கத்தினரு டையதாகவே உள்ளன. இந்திய மக்கள் தொகையில் 65% பேர் 35 வயதுக்குக் கீழான வர்கள் என்பதும், 50% பேர் 25 வயதுக்குக் கீழானவர்கள் என்பதும் கவனிக்கத்தக்கது. ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தை எடுத்துக் கொள்வோம். காங்கிரசின் என்எஸ்யுஅய் பாஜகவின் ஏபிவிபி, இடஒதுக்கீடு எதிர்ப்பு அமைப்பு ஆகியவற்றிற்குச் செல்லவும் மாணவர் களுக்கு வாய்ப்பு உண்டு. அய்சா உள்ளிட்ட இடதுசாரி மாணவர் அமைப்புகளுக்குச் செல்லவும் மாணவர்களுக்கு வாய்ப்பு உண்டு. சிங்களப் பேரினவாத எதிர்ப்பு, அமெரிக்க எதிர்ப்பு, ஊழல் எதிர்ப்பு, சிறுபான்மையினர் தலித் பழங்குடியினர் உரிமைகளுக்காக நிற்பது, ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தைச் சமரசமின்றி எதிர்ப்பது, கூடங் குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு ஆகியவற்றில் அய்சாவின் பங்கு, இப்போது டிசம்பர் டெல்லி சீற்றத்திற்கு முகமும் திசையும் தருவதில் ஜேஎன்யூ அய்சா முன்னாள் இந்நாள் மாணவர்கள் பங்கு, இன்று நாடறிந்ததாகும். மாணவர் இளைஞர்கள் நடுத்தரப் பிரிவினரை ஏன் இப்படி அணுகி இந்தத் திசையில் திரட்டக் கூடாது?

இந்தியாவில் பெருமுதலாளிகள், பெரும் தொழில்குழும நிலப்பிரபுத்துவ ஏகாதிபத்திய சக்திகளின் அச்சுக்குத் தலைமை தாங்குகின் றனர். பாட்டாளி வர்க்கம் அனைத்து உழைக் கும் மக்களின் போராடும் கூட்டணிக்குத் தலைமை தாங்க வேண்டும். பாட்டாளி வர்க் கம் தனது ஒரு கையை போராடும் விவசாயிகள் நோக்கியும், மறுகையை மக்களின் அனைத்து பிரிவினரின் ஜனநாயகப் போராட்டங்கள் நோக்கியும் நீட்ட வேண்டும்.

*********************************************************************************************

Search