COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Sunday, June 23, 2013

மாலெ தீப்பொறி 2013 - மார்ச் 01-15 - தொகுதி - 11, இதழ் - 15

முன்முயற்சி

மாணவர் போராட்டம் வெற்றி

சென்னை, மேடவாக்கம் காயிதே மில்லத் கலை, அறிவியல் கல்லூரியில் பி.காம்., கூட்டுறவுத் துறையை சேர்ந்த 3ஆவது ஆண்டு படிக்கும் 60 மாணவர்களில் 59 மாணவர்கள், மாணவர்கள் மீது காழ்ப்புணர்ச்சி கொண்ட 3 ஆசிரியர்களால் 5ஆவது பருவத் தேர்வில் செயல்முறை/எழுத்துத் தேர்வு இரண்டிலும் நான்கு பாடங்களில் தோல்வி அடைந்துள்ளனர். மறுதேர்வு நடத்தக் கோரி அகில இந்திய மாணவர் கழகத்தின் வழிகாட்டுதலில் மாணவர்கள் சாலை மறியல் போராட்டம் செய்தனர்…….

மேலும் படிக்க இங்கு அழுத்தவும்……

****************************************************************************

தலையங்கம்

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு தமிழக மக்களுக்குச் சொந்தமானது

பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிகள் கொழுக்க தமிழக மக்கள் தினம் தினம் ரத்தம் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். போக்குவரத்து அமைச்சர் செந்தில் பாலாஜியும் அவர் துறையைச் சேர்ந்தவர்களும் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு ரத்தம் கொடுத்தார்கள். ரத்தம் தருவதை விட, இனிப்பு விநியோகிப்பதை விட காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டதுதான் தனக்கு சிறந்த பிறந்தநாள் பரிசு என்றார் ஜெயலலிதா. அதன் தனது வாழ்நாள் சாதனை என்றும் சொல்லிக்கொண்டார். தனது 22 ஆண்டு காலப் போராட்டத்துக்கு, சமீபத்தில் எடுத்த விடாப்பிடியான முயற்சிகளுக்கு, தனது அறிவுரையின் பேரில் தொடுக்கப்பட்ட வழக்குகளுக்கு கிடைத்த வெற்றி என்று அறிவித்தார். மத்திய அரசாங்கத்துக்கு நன்றி தெரிவித்தும், தீர்ப்பின் அமலாக்கத்திற்கான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட வேண்டும் எனக் வலியுறுத்தியும் கடிதம் எழுதினார்……

மேலும் படிக்க இங்கு அழுத்தவும்……

****************************************************************************

சிறப்புக் கட்டுரை

ஆணாதிக்கமும் பாலியல் வல்லுறவும்

தேவை ஒரு விடாப்பிடியான, அனைத்தும் தழுவிய ஜனநாயக நிலைப்பாடு

காம்ரேட்

கடந்த முப்பதாண்டுகளில், பாலியல் வல்லுறவு பிரச்சனையில் இந்தியா மூன்று பெரிய வெடிப்புக்களைக் கண்டது. அவற்றில் இரண்டு, காவல் துறையினர், படையினர் தொடர்பானவை. மகாராஷ்டிராவில் மதுரா என்ற பெண் காவலர்களால் பாலியல் வல்லுற வுக்கு ஆளாக்கப்பட்டார். உச்சநீதிமன்றம் குற்றம் புரிந்த காவலரைக் தண்டனையிலிருந்து விடுவித்து, குற்றத்திற்கு ஆளான மதுராவையும் அவரது ஒழுக்கத்தையும், குற்றவாளிக் கூண்டில் ஏற்றியது. கீழ்மட்டக் காவலர் முதல் உச்சநீதி மன்றம் வரை, ஆணாதிக்கம் கோலோச்சுவது அம்பலமானது. மாற்றங்கள் வேண்டும் எனப் போராட்டங்கள் வெடிக்க, 1983ல் கடுமையான பாலியல் வல்லுறவு எதிர்ப்புப் சட்டங்கள் இயற்றப்பட்டன…….

மேலும் படிக்க இங்கு அழுத்தவும்……

****************************************************************************

விவாதம்

நடுத்தர வர்க்கத்தினரை எப்படி அணுகுவது?

நடுத்தர வர்க்கம், நாட்டு விடுதலைப் போராட்டத்தில் பங்கு பெற்றது. இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கு பெற்றது. நக்சல்பாரி இயக்கத்தில் பங்கேற்றது. நெருக்கடி நிலை எதிர்ப்பிலும் அதற்கு முன் ஊழல் எதிர்ப்பிலும் பங்கு பெற்றது. கடந்த சில வருடங்களாக ஊழல் எதிர்ப்பில், மிகவும் சமீபத்தில் ஆணா திக்க வன்முறைக்கெதிரான போராட்டங்களில் பங்கு பெற்றது. துனிஷியா, எகிப்து நாடுகளின் அரபு வசந்தத்தில், வால் ஸ்ட்ரீட்டைக் கைப் பற்றுவோம் இயக்கத்தில், நடுத்தர வர்க்கத்தின் பங்கு குறிப்பிடத்தக்கது…….

மேலும் படிக்க இங்கு அழுத்தவும்……

****************************************************************************

மண்ணில் பாதி

பெண்கள் மீதான வன்முறை

ஆட்சியாளர்கள் அலட்சியத்துக்கு பதிலடி தர உறுதியேற்போம்

உலக வங்கி தரும் விவரங்கள்படி, புற்று நோய், விபத்துக்கள், போர், மலேரியா ஆகிய வற்றால் பெண்களுக்கு ஏற்படும் ஆபத்தை விட கூடுதல் ஆபத்து பாலியல் வன்முறை மற்றும் குடும்ப வன்முறையால் ஏற்படுகிறது. அய்க்கிய நாடுகள் தரும் விவரங்கள்படி, உலகில் உள்ள பெண்களில் மூன்றில் ஒரு பெண் தனது வாழ் நாளில் பாலியல் வல்லுறவுக்கோ, பாலியல் தாக்குதலுக்கோ உட்படுத்தப்படுகிறார்…….

மேலும் படிக்க இங்கு அழுத்தவும்……

****************************************************************************

நகல் ஆவணம்

விவசாய மற்றும் பிற கிராமப்புற போராட்டங்கள்

(2013, ஏப்ரல் 2 - 6 தேதிகளில் ராஞ்சியில் நடக்கவுள்ள இகக மாலெ (விடுதலை) 9ஆவது கட்சி காங்கிரசில் விவாதிக்கப்படவுள்ள நகல் தீர்மானம் தரப்படுகிறது. வாசகர் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன)…….

மேலும் படிக்க இங்கு அழுத்தவும்……

****************************************************************************

களம்

திருட்டைக் கட்டுப்படுத்தக் கோரி மாலெ கட்சி தலைமையில் சாலை மறியல்

பிப்ரவரி 20, 21 வேலை நிறுத்தத்தில் வெகுமக்கள் அமைப்புக்கள் ஊக்கமான பங்கேற்பு

நகர்ப்புற தொழிலாளர் பங்கேற்பு

நாட்டுப்புற தொழிலாளர் பங்கேற்பு

அணுசக்திக்கெதிரான மக்கள் இயக்கம் ஆதரவு ஆர்ப்பாட்டம்

கல்லூரி மாணவர்கள் வேலை நிறுத்தம்……

மேலும் படிக்க இங்கு அழுத்தவும்……

****************************************************************************

Search