COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Sunday, June 23, 2013

மாலெ தீப்பொறி 2013, மார்ச் 16-31, தொகுதி 11, இதழ் 16


அஞ்சலி

தோழர் சாவேசுக்கு செவ்வஞ்சலி

அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு எதிரான நவதாராளவாத கொள்கைளுக்கு எதிரான அவருடைய போராட்ட மரபுக்கு செவ்வணக்கம்!

 

கடந்த இரண்டு ஆண்டுகளாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த வெனிசூலா அதிபர் ஹியூகோ சாவேஸ் மார்ச் 6 அன்று மரணமுற்றார். பொலிவேரிய புரட்சியின் சிற்பியான, அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் நவதாராளவாதக் கொள்கைகளுக்கு எதிரா  ுன்னுதாரணமிக்க போராளியான சாவேசின் மறைவுக்கு மாலெ கட்சி ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கிறது. அவருடைய மறைவு வெனிசூலா, லத்தீன் அமெரிக்க நாடுகள் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களுக்கு ஒரு மாபெரும் இழப்பாகும். பாலஸ்தீனம், லெபனான், இந்தியா என எங்கும் தங்கள் உரிமைகளுக்காக போராடுகிற கோடிக்கணக்கான மக்களுக்கு சாவேஸ் நம்பிக்கையின், எதிர்ப்பின் அடையாளமாக இருப்பார்.

1999 முதல் வெனிசூலாவின் அதிபராக உள்ள சாவேஸ், தனது கடைசி பதவிக் காலம் நெடுக, வலதுசாரி சக்திகளின் ஆதரவுடன் நடத்தப்பட்ட ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிகள், தாக்குதல்கள், அவரை பதவி விலகச் செய்யும் மக்கள் வாக்கெடுப்புக்கள் ஆகியவற்றுக்கு எதிராக தொடர்ந்து போராடி, இருபத்தியோராம் நூற்றாண்டு சோசலிசம் பற்றிய தனது கனவை தொடர்ந்து முன்னகர்த்தினார். அவர் அதிபராக இருந்த காலம் நெடுக, வெனிசூலாவின் ஆட்சி முறையில் பல மாற்றங்களை கொண்டு வந்தார். விளிம்புநிலை குழுக்களின் உரிமைகளை கூடுதலாக்க புதிய அரசியல் சாசனத்தை அறிமுகப்படுத்தினார். வெனிசூலா அரசாங்கத்தின் கட்டமைப்பை மாற்றினார். முக்கிய அரசு கொள்கைகளில் முடிவெடுக்க வெகுமக்கள் பங்கேற்புடனான மக்கள் வாக்கெடுப்புக்கு வழிவகுத்தார். பங்கேற்பு ஜனநாயக கவுன்சில்கள் உருவாக்கினார். எண்ணெய் உட்பட கேந்திரமான துறைகளை நாட்டுடைமையாக்கினார். மருத்துவம் கல்வி ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரித்தார். அதன் மூலம் வறுமையை பெருமளவு குறைத்தார்.

மட்டுமின்றி, அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு எதிரான லத்தீன் அமெரிக்க பதில்வினையின் அடையாளமாகவும் அமெரிக்க மேலாதிக்கத்திற்கு எதிரான ஒன்றுபட்ட லத்தீன் அமெரிக்க பதில்வினையின் ஒரு வலுவான தூணாகவும் சாவேஸ் இருந்தார்.  லத்தீன் அமெரிக்க அரசியலில் அய்க்கிய அமெரிக்காவை தனிமைப்படுத்தும் முயற்சியில், வெனிசூலா, கியூபா, பொலிவியா, அர்ஜென்டினா, பிரேசில் மற்றும் பிற லத்தீன் அமெரிக்க நாடுகளை ஒன்றுபடுத்த பெரிதும் முயன்றார். சாவேஸ் துவக்கி வைத்த இந்த ஒற்றுமை, லத்தீன் அமெரிக்காவில் அமெரிக்க சூறையாடல், கார்ப்பரேட் கொள்ளை, அரசு ஒடுக்குமுறை, சிஅய்ஏ ஆதரவுடனான ஆட்சிக் கவிழ்ப்புக்கள் ஆகியவற்றுக்கு மிகப்பெரிய சவால் விடுத்தது. பாலஸ்தீனத்தில் அமெரிக்க - இஸ்ரேல் ஆதரவிலான மனிதப் படுகொலைக்கு எதிராக சாவேஸ் நின்றார். வெனிசூலாவுக்கான இஸ்ரேல் தூதுவரை திருப்பி அனுப்பினார்.

சாவேசின் மரபை, அவருடைய கனவுகளை உயிர்ப்புடன் வைத்திருக்க உறுதி பூண்டிருக்கும் வெனிசூலாமக்களின் துயரத்தில் மாலெ கட்சியும் பங்கேற்கிறது. உலகம் முழுவதும் உள்ள போராடும் மக்களும் இயக்கங்களும் பொலிவேரிய புரட்சியின் இந்த மகத்தான சிற்பிக்கு அஞ்சலி செலுத்துவதில் கரம் கோர்க்க வேண்டும். அவருடைய போராட்டம் உலகமெங்கும் பல்கலைகழகங்களில், ஆலைகளில் சுரங்கங்களில் தொடரும்.

 

கவிதா கிருஷ்ணன்

மத்திய கமிட்டி உறுப்பினர்

**********

தலையங்கம்

துரோகம், வஞ்சகத்தின் அரசியலை மானுட உரிமை, நீதிக்கான உலக மக்கள் குரல் வெற்றி கொள்ளும்!

 

இலங்கையில் மூன்றாண்டுகளுக்கு முன் நடைபெற்ற கொடும் போர்க்குற்றங்களும் தொடர்ந்து இலங்கைத் தமிழர் பட்டுவரும் துயரநிலையும் மீண்டுமொரு முறை உலக கவனத்துக்கு வந்துள்ளது. மாறுபட்ட அரசியல் நலன்கள் கொண்ட நாடுகளும் கட்சிகளும் பிரச்சனையை களத்துக்கு கொண்டு வந்துள்ளன. இங்கிலாந்து நாட்டின் சேனல் 4 வெளிப்படுத்திய புதிய ஆதாரங்கள், பிரபாகரனது 12 வயது மகனை சுட்டுக் கொன்ற சம்பவம் அம்பலமானது, உலகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளையும் கோபத்தையும் உசுப்பி விட்டுள்ளது. அய்நா மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் அமெரிக்கா மீண்டும் ஒரு தீர்மானத்தை கொண்டு வந்துள்ளது. திமுக, அதிமுக உள்ளிட்ட தமிழக கட்சிகள் ஏற்படுத்திய அழுத்தத்தால் இலங்கைப் பிரச்சினை இந்திய நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டிருக்கிறது.

இலங்கையில் நடைபெற்ற 21ம் நூற்றாண்டின் மாபெரும் குற்றத்திற்கு நீதி கிடைக்கச் செய்வது, போருக்குப் பிந்தைய நிலைமைகளில் இலங்கைத் தமிழர் படும் சொல்லொணா துயரங்களைத் துடைப்பது என்பதை விடவும் நாடுகளும் அமைப்புகளும் தங்களின் நலன்கள் அல்லது முன்னுரிமை களை முன்னிறுத்த இலங்கைச் சிக்கலை ஒரு துருப்புச் சீட்டாக பயன் படுத்தவே விரும்புகின்றன. ஆசியாவில் தனது மேலோங்கிய நிலைமை சற்றும் சரிந்து விடக் கூடாது என அமெரிக்கா விரும்புகிறது. அமெரிக் காவுக்கு எதிராக ஆசியாவில் தங்கள் பலத்தை அதிகரித்துக் கொள்ள சீனாவும் ரஷ்யாவும் முயற்சிக்கின்றன. ஆசியாவில் சீனா, ரஷ்யாவின் செல்வாக்கு வளர்ந்துவிடக் கூடாது என்ற அமெரிக்க நலனே, அமெரிக்க தீர்மானத்தின் வாயிலாக முன்நிற்கிறது. குறிப்பாக, சீன செல்வாக்கில் இருந்து இலங்கையை வெளியே கொண்டு வர வேண்டும் என்கிற திட்டம் கொண்டது. அமெரிக்காவின் இந்த திட்டத்துக்கு உதவும் திசையிலேயே இந்தியாவின் அணுகுமுறையும் இருக்கிறது. இந்தத் தீர்மானமும் இலங்கைக்கு இசைவானதே.

கடந்த மூன்றாண்டுகளாக அமைதிகாத்து வந்த இந்திய ஆட்சியாளர் கள், காங்கிரஸ் தலைவர்கள் இப்போது தங்கள் வெளியுறவுக் கொள்கை களைப் பற்றி சவடால் பேசுகிறார்கள். இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிட முடியாது என்றும் இந்தியா உலக போலீஸ்காரன் போல் நடந்து கொள்ள முடியாது என்றெல்லாம் பேசியுள்ளார்கள்! உலக போலீஸ்காரனாக தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் அமெரிக்காவுடன் போர்த்தந்திர உறவு கொண்டுள்ள மன்மோகன்சிங் அரசாங்கத்தின் வெளியுறவு அமைச்சர் தீர்மானத்தைக் கொண்டு வரும் அமெரிக்காவுடன் பேசி தீர்மானம் வராமல் பார்த்துக் கொள்ளுமாறு இலங்கைக்கு ஆலோசனை கூறுகிறார்!

இலங்கை போர்க்குற்றங்கள் குறித்து கண்டிப்பதும் அதற்கு தண்டனை கோருவதும் இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதாக ஆகாது. அவ்வாறு ஆகிவிடும் என்று இந்தியா கவலைப்படுவது, இந்தியாவில் நடைபெறும் மனித உரிமை அத்துமீறல்கள் பற்றி வெளியிலிருந்து குரல் எழும்பும் என்று இந்தியா அச்சப்படுவதே காரணம், அப்படி எழும்பாமலிருக்க ஒரே வழி, இந்தியாவின் - காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள் உள்ளிட்ட - எந்தப் பகுதியிலும் மனித உரிமை மீறல்கள் நிகழாமல் இருப்பதை உறுதி செய்வதுதான். நாடுகளின் இறையாண்மை பற்றி பேசுவது அந்தந்த நாடுகளில் உள்ள அனைத்துப் பிரிவு மக்களின் பாதுகாப்பு, உரிமைகளுக்காகத்தானே ஒழிய அவற்றை ஒழித்துக் கட்டுவதற்காக அல்ல.

நாடாளுமன்ற விவாதத்தை அனுமதிக்கும் முக மாக பேசிய சபாநாயகர் அண்டை நாட்டு விவகாரத்தில் தலையிடும் வகையில் உறுப்பினர்களின் பேச்சு இருந்து விடக் கூடாது என்று எச்சரிக்கை செய்திருக்கிறார். விவாதத்துக்கு பதி லளித்த மன்மோகன், அரசியல் நல்லிணக்கம், தேசிய நல்லிணக்கம் போன்ற தேர்ந்த வார்த்தை விளையாட்டு ஆடியுள்ளாரே தவிர போர்க் குற்றங்கள் விசாரிக்கப்படுவது, தண்டிக்கப்படுவது பற்றிய இந்திய, உலக கோரிக்கை பற்றி அசாத்திய மவுனத்தைக் காட்டியுள்ளார். இலங்கை தொடர்பான இந்திய ஆட்சியாளர்களின் கொள்கையில், சீனா பற்றிய அதீத கவலையும் இந்திய மனித உரிமை மீறல்கள் அம்பலத்துக்கு வந்துவிடக் கூடாது என்ற கவலையுமே முன் நிற்கின்றன. விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய பாஜக தலைவர் யஷ்வந்த் சின்ஹா, இலங்கைக்கு சென்று பலியான இந்திய அமைதிப்படை வீரர்களுக்கு இந்தியாவில் ஒரு நினைவுச் சின்னம் கூட இல்லை என கவலைப்பட்டிருக்கிறார். இலங்கைக்கு ராணுவத்தை அனுப்பிய தவறான சாகச நடவடிக்கை பற்றி வெட்கப் படுவதற்கு மாறாக ராணுவத்தின் பெயரால் பிராந்திய பெரியண்ணன் அரசியலையே காட்டியுள்ளார்.

காங்கிரஸ் வெளியுறவு அமைச்சர், பிரதமர் பேச்சுகளைக் கேட்டு ஏமாற்றமடைந்துள்ள கருணாநிதி, காங்கிரஸ் சரியாகப் பேசுகிறது. அரசாங்கம் வேறு விதமாகப் பேசுகிறது என்று தனது வேதனையை வெளிப்படுத்தியிருக்கிறார். காங்கிரசுடன் கூட்டணியை தொடர்வதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்பதை தனக்குத் தானே தெளிவுபடுத்திக் கொள்கிறார்! இலங்கை தமிழர் நலனை விட அவருக்கு கூட்டணி நலன் முந்திக் கொள்கிறது.

நாடாளுமன்றத்தில் சேர்ந்து வெளிநடப்பு செய்து அதிசயத்தை ஏற்படுத்தியுள்ள திமுகவும் அதிமுகவும் மார்ச் 12 வேலை நிறுத்தத்தில் பிரிந்து நிற்கின்றனர். காவிரிப் பிரச்சினையில் ஜெயலலிதா கை ஓங்கி நிற்கும் நிலையில் திமுக டெசோவின் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தேடி பாவத்தை துடைத்துக் கொள்ளப் பார்க் கிறார் கருணாநிதி. கருணாநிதி ஆதாயம் அடைந்து விடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார் ஜெயல லிதா. வேலை நிறுத்தம் தேவையற்றது எனக் கூறியுள்ள இகக(மா)வின் நிலைப்பாட்டில் ஜெயலிதாவுக்கு எரிச்சல் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதே மேலோங்கி நிற்கிறது. வேலை நிறுத்தத்திற்கு அதிமுக அரசாங்கமே அழைப்பு விட வேண்டுமென்று ராமதாஸ் ஜெவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். முதலமைச்சர் அந்த வேண்டுகோளை ஏற்றுக் கொள்வதற்கும் கூட வாய்ப்பு உள்ளது. எல்லா வற்றிலும் நாடாளுமன்ற தேர்தல் கணக்குகளே முன்நிற்கின்றன.

திமுக, அதிமுக, மதிமுக, பாமக போன்ற கட்சி களின் நலனுக்கு ஆட்படாமல் தமிழக மாணவர்கள் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க் சிஸ்ட்-லெனினிஸ்ட்), அகில இந்திய மாணவர் கழகம், புரட்சிகர இளைஞர் கழகம், நாடுகள், கட்சிகளின் அரசியல் நலன்களிலிருந்து விலகி நின்று சுதந்திரமான முறையில், ராஜபக்சே அண்மை யில் கயா வந்திருந்தபோது போர்க் குற்றவாளி, தமிழ் இன அழிப்பாளன் ராஜபக்சேவே இந்தியாவை விட்டு வெளியேறு என முழங்கி இந்திய மக்களின் எதிர்ப்பை காட்டினர். இந்தப் போராட்டம் பற்றி ராஜபக்சேவிடம் பத்திரிகையாளர்கள் கருத்து கேட்டபோது, இது வழி பாட்டு இடம் இங்கு அரசியல் பேசக் கூடாது என்று கூறினார்! இலங்கை போர்க்குற்றங்களும் தமிழ் இன அழிப்பும் அரசியல் என்று சொல்கிறார். இந்த அரசியல், துரோகத்தின் அரசியல்; வஞ்சகத்தின் அரசியல்! இந்த அரசியலில் இருந்து விலகி உலகம் முழுவதும் உள்ள இடதுசாரிகள், முற்போக்காளர்கள், மனித உரிமை ஆர் வலர்கள், மக்கள் எழுப்பும் குரல் வலுப்பட வேண்டும்.

இலங்கை தமிழர்களுக்காக குரல் கொடுப்பதில் எங்களை விட்டால் வேறு யாரும் இல்லை என்று ஜெய லலிதா, கருணாநிதி, ராமதாஸ், வைகோ போன்றவர்கள் ஆணவ அரசியல் நடத்துகிறார்கள். வேறு யாரும் வந்து விடுவார்களோ என்ற அச்சமும் இவர்களிடம் உள்ளது. இலங்கை தமிழர்களுக்காக இந்தியத் தமிழர் கள் மட்டுமே போராடத் தகுதி பெற்றவர்கள் என்ற குறுகிய அரசியலுக்கு எதிராக, ஜனநாயகக் குரல், உண் மையான ஜனநாயக அரசியல் வலுப்பெற்றாக வேண் டும். இலங்கைப் போர்க் குற்றங்கள் முழுமையாக விசாரிக்கப்பட்டு ராஜபக்சே உள்ளிட்ட குற்றவாளிகள் மிகக் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்ற சர்வதேசக் குரலாக வலுப்பட வேண்டும்.

இலங்கை அரசாங்கத்தின் போர்க் குற்றங்கள் விசாரிக்கப்படவும், குற்றவாளிகள் தண்டிக்கப்படவும் இந்திய அரசாங்கமே அய்நா மன்றத்தில் தீர்மானம் கொண்டு வரச் செய்யும் குரலாக வலுப்பெற வேண்டும். ராஜபக்சே அரசாங்கம் இந்த சர்வதேச குரலுக்கு பதில் சொல்லும் நிர்ப்பந்தத்தை உருவாக்க வேண்டும். அந்தக் குரல் இலங்கை வாழ் தமிழர்களின் பாதுகாப்பு, கவுரவம், சமஉரிமை பெறும் விருப்பத்துக்கும் போராட் டத்துக்கும் உத்வேகம் அளிக்கும். துரோகத்தின், வஞ்சகத்தின் அரசியலை மானுட உரிமைக்கான, நீதிக் கான உலக மக்களின் குரல் வெற்றி கொள்ளும். அந்த நாளில் இலங்கை ஆட்சியாளர்கள் மட்டுமின்றி, இந்திய ஆட்சியாளர்களும் பாடம் பெறுவார்கள்.

இகக மாலெ ஒன்பதாவது காங்கிரசில் முன்வைக்கப்பட உள்ள சர்வதேச சூழல் மீதான நகல் ஆவணம் இலங்கை பிரச்சனை பற்றி பத்தி 27ல் பின்வருமாறு குறிப்பிடுகிறது.

கட்டுக்கடங்காத மனிதப் படுகொலை போர் நட வடிக்கை மூலம் இலங்கையின் ராஜபக்சே அரசாங்கம் விடுதலைப் புலிகளை அழித்துவிட்டது. 2012 நவம்பரில் வெளியிடப்பட்ட அய்நா அவையின் உள்விசாரணை அறிக்கை ஒன்று, சாதாரண மக்கள் 70,000 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று மதிப்பிடுகிறது. உலக வங்கியின் மக்கள் தொகை விவரம் ஒன்று, 2009ல் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இறுதிப் போர் நடந் தது முதல், பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் காண வில்லை என்று கண்டுள்ளது. அய்நா மனித உரிமைக் குழு போர்க் குற்றங்கள் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்று இலங்கையை வலியுறுத்தும் தீர்மா னத்தை நிறைவேற்றியுள்ளது; ஆனால், இலங்கை அர சாங்கத்தால் அமைக்கப்பட்ட ‘கற்ற பாடங்கள் மற்றும் நல்லிணக்கக் குழு, ‘சாதாரண குடிமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்துவதில்லைஎன்ற கொள்கையை இலங்கை ராணுவம் கடைபிடித்ததாகவும் குடிமக்கள் உயிரிழப்பு, உடன்விளைந்த சேதமாகக் கருதப்பட வேண்டும் என்றும் சொல்லி இலங்கை ராணுவம் குற்றமற்றது என்று சொல்கிறது. இலங்கைத் தமிழர்கள் இன்னும் கூட மடிந்து கொண்டிருக்கும்போது, ‘நல்லி ணக்கம்பற்றிய இலங்கை அரசாங்கத்தின் கருத்துரு, இலங்கைத் தமிழர்கள் சிங்கள பேரினவாத ஆதிக் கத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்கிறது. இலங்கைத் தமிழ் சமூகத்தை ஒடுக்குவது என்ற அடிப்ப டையில் இலங்கையில் ‘நல்லிணக்கம்தொடர முடி யாது. இலங்கை தமிழர்களுக்கு எதிரான கொடூரமான போர்க் குற்றங்கள் முழுமையாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படுவதை சர்வதேச சமூகம் உறுதி செய்ய வேண்டும்.

சந்தர்ப்பவாதிகளும் புரட்சியாளர்களும்

அரசியல், தொழிற்சங்கம் உள்ளிட்ட எல்லா தளங்களிலும் சந்தர்ப்பவாதிகளுக்கும் புரட்சியாளர்களுக்கும் உள்ள வேறுபாடு என்ன?

சந்தர்ப்பவாதிகள், எது நடந்து கொண்டிருக்கிறதோ அதுவே சாத்தியமானது எனவும் அதுவே விரும்பத்தக்கது எனவும் அதுவே அவசியமானது எனவும் சொல்வார்கள்.

புரட்சியாளர்கள், எது அவசியமானதோ, அதனையே விரும்பத்தக்கது என முன்வைத்து, அதனைச் சாத்தியமாக்கும் நோக்கத்தில், நடந்து கொண்டிருக்கும் இயக்கத்தில் தலையிடுவார்கள்; மாற்றப் பார்ப்பார்கள்.

ஒரு கடிதம்

தி.க.சி., 21 - இ, சுடலைமாடன் தெரு, நெல்லை - 6, 5.3.2013

அன்புள்ள ஆசிரியர் குழு தோழர் களுக்கு, வணக்கம்.

அண்மையில் சில மாதங்களாக “மாலெ தீப்பொறிஇதழ்களைப் பெறுகிறேன்; மிக்க நன்றி. நானும், நண்பர்களும், அவை குறித்து விவாதிக்கிறோம்; பயன் பெறுகிறோம்.... 89ஆம் வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் என்னால், முதுமை நோய்களின் விளைவுகளால், தங்கள் இதழ்கள் குறித்து விரிவாக எழுத விருப்பம் இருந்தும், எழுத இயல வில்லை.... வருந்துகிறேன்....

     2013 மார்ச்சு 1 - 15 இதழில் வந்துள்ள (விவாதம்) கட்டுரை, “நடுத்தர வர்க்கத்தை எப்படி அணுகுவது?” என்னை மிகவும் ஈர்த்தது. மிக மிக முக்கிய பிரச்சனை ஒன்றைப் பற்றிய இக்கட்டுரையை வெளியிட்டுள்ள ஆசிரியர் குழுவுக்கு, என் இனிய தோழமை வாழ்த்துக்கள்!...

     இன்றைய காலகட்டத்தில், மாணவர் இளைஞர்கள், நடுத்தரப் பிரிவினரை மிக நெருக்கமாக அணுகி அணிதிரட்ட வேண்டியது, மிக அவசியம். “இந்திய சமூகத்தையும் ஆட்சி அமைப்பு முறையையும் ஒரு முழுமையான ஜனநாயகப்படுத்தலுக்கு உட்படுத்துதல் என்ற கடமையை நடுத்தர வர்க்கத்தை உழைக்கும் மக்களோடு நிற்க வைக்காமல் சாத்தியமாக்க முடியாதுஎன்பதே, என் ஆழமான, உறுதியான கருத்து; 70 ஆண்டுகளுக்கும் மேலான, எனது இடதுசாரி வாழ்க்கையும், எழுத்து இயக்க அனுபவமும், இதைத்தான் வலியுறுத்துகின்றன.

     கட்டுரையின் கடைசி 10 வரிகள், மிக முக்கியமானவை; புரட்சிகர சிந்தனையாளர்களால், படைப்பாளிகளால், ஏற்கத்தக்கவை; பிற பின்னர், அல்லது நேரில்!...

என்றும் தோழமையுடன் - தி.க.சி.

**********

சிறப்புக் கட்டுரை

மத்திய நிதிநிலை அறிக்கை 2013 – 2014

மூடுதிரையை விலக்கினால்

காம்ரேட்

மூடுதிரையை விலக்குவதற்கும் மார்க்சியத்திற்கும் என்ன தொடர்பு?

காட்சிப் பிழைகள் தோற்ற மாயைகள் பற்றி பாரதி பாடினான். மாமேதை மார்க்ஸ், நிகழ்வுப் போக்குகளுக்குள் ஊடுருவிப் பார்த் தார். பண்டங்கள் உலகெங்கும் நீக்கமற நிறைந்துள்ளன. மார்க்ஸ், உபரி மதிப்புச் சுரண் டலை நிலைநாட்ட, முதலாளித்துவப் பொருளா தாரத்தின் அடிப்படையை விளக்க, அதன் அடிப்படை அலகான பண்டத்தை ஆராய்ந் தார். ஒவ்வொரு பண்டத்திலும் தாயும் தந்தை யுமாக, இயற்கையும் உழைப்பும் உள்ளன என, தமக்கு முன் வில்லியம் பெட்டி சொன்னதைக் கணக்கில் கொண்டார். பண்டத்தின் மதிப்பு அதில் அடங்கியுள்ள சராசரி சமூக உழைப்பு நேரத்தால் தீர்மானிக்கப்படுகிறது என்று முதலாளித்துவ அறிஞர்கள் நிறுவியதையும் கணக்கில் கொண்டார். ஆனால், அவற்றையும் தாண்டிச் செல்லும்போதுதான், மார்க்சியத்தின் ஓர் ஆதார விதியை நிறுவுகிறார்.

உழைப்பு உருவாக்குகிற புதிய மதிப்பில் (உலகில் எந்த புதிய மதிப்பும் உழைப்பின்றி உருவாகாது) ஒரு பகுதி மட்டுமே உழைப்ப வரின் உழைப்புச் சக்திக்குக் கூலியாகத் தரப் படுகிறது என்றும், மறுபகுதி லாபமாக, உபரி மதிப்பாக முதலாளித்துவத்தால் உறிஞ்சப்படுகி றது என்றும், சமூகமயமாக்கப்பட்ட உற்பத்தி யின் மீது தனியுடைமை கொண்டிருக்கிற கட்டுப்பாட்டை தகர்த்து பொது உடைமையை நிறுவுவதும், வர்க்கங்கள், சுரண்டல், ஒடுக்கு கின்ற அரசு இல்லாத உன்னதமான கம்யூனிச சமூகம் நோக்கி முன்னேறுவதும், பாட்டாளி வர்க்கத்துக்கு வரலாறு விடுத்துள்ள அறைகூவல் என்றும் முன்வைத்தார். நாடாளுமன்ற ஜனநாயகம், அனைவருக்கும் வாக்குரிமை என்ற மூடுதிரைக்குப் பின்னால், எவ்வாறு முதலாளித் துவ சர்வாதிகாரம் கோலோச்சுகிறது என்பதை யும் எடுத்துக் காட்டினார்.

நிதிநிலை அறிக்கை மீது போர்த்தப்பட்டுள்ள மூடுதிரைகள் எவை?

நாட்டின் கஜானாவுக்கு வருகிற ஒரு ரூபாயில், எந்தெந்த வகையில் வரவுகள் வந்தன, ஒரு ரூபாயில் எந்தெந்த வகையில் செலவுகள் செல்கின்றன, வரவுக்கும் செலவுக்கும் இடையில் துண்டு விழுந்தால் அது எவ்வளவு, அது எப்படி சமாளிக்கப்படும் என்பவற்றைச் சொல்வதுதான் நிதிநிலை அறிக்கை என, அச்சு மின்னணு ஊடகங்களும் பள்ளி கல்லூரி பாட நூல்களும் சொல்லித் தருகின்றன. இவை பொதுவாகப் போர்த்தப்பட்டுள்ள திரைகள்.

சிதம்பரம் இந்த நிதிநிலை அறிக்கைக்கு குறிப்பாக போர்த்தியுள்ள திரைகள் எவை?

வளர்ச்சி விகிதம் என்பதே தாரக மந்திரம். வளர்ச்சி அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச் சியாக இருக்க வேண்டும். இந்த நிதிநிலை அறிக்கை, பெண்கள், இளைஞர்கள் மற்றும் பழங்குடியினர், தலித்துகள், வறியவர்கள் நலன்கள் காக்கத் தயாரிக்கப்பட்டது. ஒரு கோடிக்கும் மேல் சம்பாதிப்பவர்களுக்கு, 42,800 பேருக்கு, அசிம் பிரேம்ஜி போன்ற செல்வந்தர் கள் கேட்டுக் கொண்டபடி, 30.90% வரி என்பதன் மீது 10% கூடுதல் வரி, அதாவது 33.99% வரி என உயர்த்தப்பட்டுள்ளது. உணவு மானியம் உண்டு. உர மானியம் உண்டு. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு ரூ.33,000 கோடி ஒதுக்கீடு உண்டு. பெண்கள் பாதுகாப்பிற்கான முன்முயற்சிக்காக ரூ.1000 கோடி ஒதுக்கப்படும். பெண்களுக்கென தனி வங்கிகள் அமைக்கப்படும். இளைஞர்க ளுக்கு திறன் வளர்க்கப் பயிற்சி தந்து பயிற்சி முடிந்ததும் சான்றிதழுடன் ரூ.10,000 தரப்படும். இது 10 லட்சம் பேருக்கு கிடைக்கும். வறிய வர்களுக்கு ‘உங்கள் பணம் உங்கள் கையில்திட்டம் மூலம், பணம் அவர்கள் வீட்டுக் கூரைகளைப் பிய்த்துக் கொண்டு கொட்டும். நாடு கடந்த காலத்தில் மேலான வளர்ச்சி விகிதங்களை சாதித்துள்ளது. இப்போதும் சாதிக்கும் என நம்பிக்கை கொள்வோம்.

மூடுதிரையை விலக்கினால்

உலகமய, தனியார்மய, தாராளமய - நவதாராளவாத நிகழ்ச்சிநிரலைப் பின்பற்றுகிற இந்தியா போன்றதொரு நாட்டில், நிதிநிலை அறிக்கை என்பதும், செல்வத்தை மறுவிநியோ கம் செய்யும் ஒரு கருவியாகவே இருக்கும். செல்வ மறுவிநியோகம், நிதிநிலை அறிக்கை மூல மும் அதற்கப்பாற்பட்ட வழிகளிலும் நடக்கும். வசதி படைத்தவர்களுக்கு வாரி வழங்கி, உழைக் கும் மக்கள் தலையில் கை வைப்பதாகவே, நிதிநிலை அறிக்கை மறுபங்கீடு நடைபெறும்.

இதற்கு நியாயம் கற்பிக்க என்ன வாதங்கள் சொல்கிறார்கள், செல்வக் குவிப்பும் வறுமை பரவலும் எப்படி நடந்தேறுகின்றன என அடுத்தடுத்து பார்க்கலாம்.

சிதம்பரம் வகையறாக்களின் வாதங்கள்

28.02.2013 அன்று தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையிலும் 27.02.2013 அன்று தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வ றிக்கையிலும், நவதாராளவாத நிகழ்ச்சிநிரல் திட்டவட்டமாகச் சொல்லப்படுகிறது.

பொருளாதார ஆய்வறிக்கை, அரசாங்கத் தின் நிதி தொடர்பான, அறம் சார்ந்த, நெஞ்சு நிமிர்ந்த நிலை, பேரத்துக்குரியதல்ல என்று சொல்கிறது. அறம் சார்ந்த, நெஞ்சு நிமிர்ந்த நிலை என்பது என்ன என, அடுத்த வரிகள் விளக்குகின்றன. இந்த பேரத்துக்கிடமில்லாத நிலையை, முழுமையாக இல்லாவிடினும், முதன்மையாக ‘மான்யங்களைகுறைப்பதன் மூலமும், ‘ஊக்குவிப்பவற்றை (இன்சென்டிவ்ஸ்) தக்க வைத்து வலுப்படுத்துவதன் மூலமும் எங்கிருந்து யார் மூலம் மூலதனம் வருகிறது, அது, ‘சூடானதாஅல்லது நீண்ட காலத்துக்கா னதா, என்ன வகைப்பட்டது என்பவை பற்றி யெல்லாம் பார்க்காமல், அசையாத நம்பிக்கை யுடன் இந்தியப் பொருளாதாரத்தை மூலதனத் துக்குத் திறந்து விட வேண்டும் என்கிறது. 1. மக்களுக்கு அளிக்கப்படும் மான்யங்கள் குறைக் கப்பட வேண்டும். 2. பெருநிறுவனங்களுக்கு தரப்படும் ‘ஊக்குவிப்பவற்றை (இன்சென்டிவ்ஸ்) வலுப்படுத்த வேண்டும். 3. மூலதனம், சூடான, அதாவது ஊகவணிக நிதி சூதாட்ட வகைப்பட் டதாக இருந்தாலும் சரி, வரி ஏய்ப்பு சொர்க்கங் களான மொரிஷியஸ், கேமன் தீவுகள் போன்ற இடங்களில் இருந்து வருவதானாலும் சரி, இந்திய பொருளாதாரத்தை அசையாத நம்பிக்கையுடன், மூலதன வருகைக்குத் திறந்து விட வேண்டும்.

வளர்ச்சி என்ற லட்சியத்தை நாடு தயக்க மின்றித் தழுவ வேண்டும் என்றும், அதற்குத் தடையாக நிதிப் பற்றாக்குறை, நடப்புக் கணக்கு பற்றாக்குறை மற்றும் பணவீக்கம் இருப்பதாகவும், அவற்றைத் தாண்டிச் செல்ல இரண்டு ஆண்டுகளில் ரூ.3,75,000 கோடி  முதலீடு, அந்நிய நிதிநிறுவனங்கள், அந்நிய நேரடி முதலீடு மற்றும் அந்நிய வர்த்தகக் கடன்கள் மூலம் வந்தாக வேண்டும் என்றும் சிதம்பரம் நிதிநிலை அறிக்கையில் சொல்கிறார். அந்நிய முதலீடு என்ற விசயத்தில் வேறு தேர்வே கிடையாது, அதனை வரவேற்பதைத் தவிர ஒதுக்கித் தள்ளும் பேச்சுக்கே இடமில்லை என்கிறார். முதலீடு செய்வது என்பது நம்பிக்கை சார்ந்த ஒரு நடவடிக்கை என்றும், முதலீட் டாளர்களின் அச்சம் போக்குவது நம் கடமை என்றும் அடித்துச் சொல்கிறார்.

சிதம்பரத்தின் வாதங்கள் நிதிநிலை அறிக்கையில் எப்படி செயல் வடிவம் எடுத்தன?

அ. மானியங்கள் குறைக்கப்பட வேண்டும்: உணவு மானியம் வெறும் ரூ.5,000 கோடிதான் உயர்த்தப்பட்டுள்ளது. விலை உயர்வு மற்றும் உணவுப் பாதுகாப்புச் சட்ட வாக்குறுதி என்பவற்றோடு சேர்த்துப் பார்த்தால், உணவு மானியம் குறைக்கப்பட்டுள்ளது தெரியும். 2011 - 2012ல் உர மானியம் என வழங்கப்பட்டது ரூ.65,974.10 கோடி. இப்போது ரூ.65,971.50 கோடி. இதுவும் குறைந்துள்ளது. இரண்டாவது பசுமை புரட்சி என்றெல்லாம் சோனியாவால் பேசப்பட்ட தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு சென்ற ஆண்டு செலவான ரூ.33,000 கோடிதான் இப்போதும் ஒதுக்கப் பட்டுள்ளது. பெட்ரோலிய மானியம் ரூ.96,880 கோடியில் இருந்து ரூ.65,000 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.

ஆ. ‘ஊக்குவிப்பவைதொடரப்படுதல் மற்றும் வலுப்படுத்தப்படுதல்: வாரா வங்கிக்கடன் தள்ளுபடிகள் தொடர்வதுடன், முன்னுரிமை பெற்ற வரி செலுத்துவோர் மானியம் என பெருந்தொழில் குழுமங்களிடம் இருந்து கஜானாவிற்கு வர வேண்டிய தொகை 2011 - 2012ல் ரூ.5,33,583 கோடி. 2012 - 2013ல் ரூ.5,73,627 கோடி, இரண்டு ஆண்டுகளுமாகச் பட்டுள்ளது. ‘ஊக்கம் தருவதுஆழமாக வலுப்படுத்தப்பட்டுள்ளது.

இ. மூலதன வருகைக்கு வரவேற்பு: 1) ஜெனரல் ஆன்டி அவாய்டன்ஸ் ரூல்ஸ் என வோடாஃபோன் நிறுவனத்திடம் இருந்து பின் தேதியிட்டு வரி வசூலிக்கத் திட்டமிடப்பட்டது முடிந்த கதை என சிதம்பரம் சொல்லிவிட்டார். வரி தவிர்ப்பு என்ற பெயரால் வரி மோசடி செய்தால், அரசு கண்டுகொள்ளாது என்ற செய்தி, உரத்த குரலிலும் அழுத்தமாகவும் சொல்லப்பட்டுள்ளது.

2) இந்து புராணம் நதிமூலம், ரிஷிமூலம் பார்க்காதே என்று சொல்லும். சிதம்பரம் பகிரங்கமாக மூலதன மூலம் பார்க்கக் கூடாது என்கிறார். சூதாட்ட (ஏர்ற்) மூலதனமா என்றோ, அதன் தோற்றுவாய் (ஞழ்ண்ஞ்ண்ய்) எங்கே என்றோ பார்க்கக் கூடாது என்கிறார்.

செல்வ மறுபங்கீடு எப்படி நடக்கிறது?

நாட்டில் மலையெனச் செல்வம் குவிந்துள் ளது. முதலாளிகள் கூலியைக் குறைத்துக் கொடுத்து லாபத்தை அதிமாக்கிக் கொண்டு தமக்குச் சாதகமாக செல்வப் பங்கீட்டைச் செய்வது பார்த்த மாத்திரத்திலேயே தெரியும். சத்தான வேலை வாய்ப்புப் பெருக்கம் நாட்டில் நடைபெறவில்லை. பாதுகாப்பற்ற குறைந்த கூலி பெறும் தொழிலாளர்களே பெரும்பான் மையாய் உள்ளனர். 2ஜி, கோல்கேட், கிருஷ்ணா - கோதாவரி ஆற்றுப்படுகை இயற்கை எரிவாயு ஊழல் போன்றவை பெரும்தொழில் குழுமங்களின் கைகளில் செல்வம் வெகுவாக மறுபங்கீடு செய்யப்படுவ தையே காட்டுகின்றன. நிதிநிலை அறிக்கை அப்பட்டமாக, வருவாய் துறப்பது என்ற பட்டியலிட்டு, பெரும்தொழில் குழுமங்களுக்கு ரூ.11 லட்சம் கோடி வாரி வழங்கியுள்ளது. மறுபுறம், ரயில்வே நிதிநிலை அறிக்கைக்கு முன்பே, கட்டண உயர்வில் துவங்கி, 26.02.2013 தாக்கல் செய்யப்பட்ட ரயில்வே நிதிநிலை அறிக்கையில் இனி சரக்கு மற்றும் பயணிகள் கட்டணம் எரிபொருள் விலையுடன் இணைக்கப்படும் எனச் சொல்லப்பட்டுள்ளது.

பெட்ரோல் பொருட்கள் விலையில் கட்டுப்படுத்தும் முறை அகற்றப்படும் (டிகன்ட் ரோல்) என சொல்லப்பட்டுள்ளது. அடிக்கடி உயரும் பெட்ரோலிய பொருட்கள் விலையால் மற்ற எல்லா பொருட்கள் விலையும் உயரும். மான்யங்கள் மட்டும் உயராது. விளைவு என்ன? ஏகப்பெரும்பான்மை உழைக்கும் மக்களின் வாங்கும் சக்தி சரிந்து கொண்டே போகும். செல்வம், மேலே சிலரிடம் குவிந்துகொண்டே போகும். கீழே உள்ள மிகப் பெரும்பான்மையி னரிடம் இருந்து அடித்துப் பிடுங்கப்படும்.

ராணுவத்துக்கு குறைவற்ற ஒதுக்கீடு

படுகொலை செய்ய, பாலியல் வன்முறை யில் ஈடுபட, தண்டனை பற்றிய அச்சமின்றி குற்றங்கள் புரிய படையினருக்கு சிறப்பு அதிகாரங்கள் உண்டு என்று சொல்லும் ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற குரல்கள் வலுவடைகின்றன; விரிவடைகின்றன. ஆனால், ராணுவம் என்ற ஒடுக்குமுறை கருவியின் எந்த பகுதியையும் கைவிட முடியாது என அரசு பிடிவாதமாக உள்ளது. ராணுவ உயர்நிலையினர் ஊழல் இன்று பெருமளவில் அம்பலமாகியுள்ளது. சவப்பெட்டி, நிலம் என எங்கும் எதிலும் ஊழல். இப்போது முன்னாள் விமானப்படை தளபதி தியாகியை நோக்கி நீளும் அகஸ்டா ஹெலிகாப்டர் ஊழல். ராணுவ ஒதுக்கீடு ரூ.2 லட்சம் கோடிக்கும் அதிகம் எனும்போது, ஊழல் தொகையும் கணிசமாக உயரும். கார்ப்ப ரேட் சூறையாடல், அதற்கு துணைபோகும் முதலாளித்துவ அரசியல், இவை இரண்டோடு, ஊழல் நிறைந்த ராணுவ - தொழில் -அதிகாரத் துவ அச்சு எனச் சேர்ந்து, நாட்டு மக்களை, நாட்டை பிணச் சுமையாக அழுத்துகின்றன.

ஜனநாயகப் பற்றாக்குறை

நிதிப்பற்றாக்குறை, நடப்புக் கணக்குப் பற்றாக்குறை ஆகியவற்றை விட மோசமானது ஜனநாயகப் பற்றாக்குறை. எல்லா அநீதிகளும் சமூக ஏற்றத்தாழ்வுகளும், பொருளாதாரச் சுரண்டலும் பறிகொடுத்தலும், மக்களின் வாக் குகளுடன் முதலாளிகளின் ஆட்சிகள் என்ற அடிப்படையிலேயே நடக்கின்றன. ‘உங்கள் பணம் உங்கள் கையில், ‘ஆம் ஆத்மி, ‘அனைவரை யும் உள்ளடக்கிய வளர்ச்சிஎன்  ுதலாளித் துவ முழக்கங்களை, மக்கள் போராட்டங்கள் மூலம் மக்கள் மாற்றுக்கள் என்ற முழக்கத்துடன் நாம் எதிர்கொண்டாக வேண்டும்.

**********

கட்டுரை

தேசிய மருந்துகள் விலைக் கொள்கை 2012

மருந்து விலைக்குறைப்பு என்கிற மாயை

ஜி.ரமேஷ்

 

அறிவாற்றல், திறமை, குறைவான உற் பத்திச் செலவு, சர்வதேச தரம் ஆகியவற்றின் காரணமாக இந்திய மருந்துத் தொழில் பெரும் வளர்ச்சி கண்டுள்ளது. 1990ல் ரூ.5000 கோடிக்கு இருந்த விற்பனை 2009 -2010ல் 1 லட்சம் கோடி ரூபாய் ஆனது. அதில் ரூ.62,055 கோடி உள் நாட்டு சந்தையின் மூலமும் ரூ.42,154 ஏற்று மதியின் வாயிலாகவும் கிடைத்துள்ளது. உலகளவில் மருந்து தயாரிப்பில் 3ஆவது இடத்தில் இந்தியா உள்ளது. அதற்குக் காரணம் இந்திய மருந்துகள்தான் உலகத்திலேயே குறை வான விலை என்பதுதான்என்று பெருமையுடன் துவங்குகிறது தேசிய மருந்துகள் விலைக் கொள்கை 2012 (National Pharmaceuticals Pricing Policy 2012). மேலும், அடித்தட்டு ஏழை மக்கள் வாங்கக்கூடிய அளவில் அத்தியாவசிய மருந்து களின் விலை இருக்க வேண்டும். அதற்குத் தகுந்த மாதிரி தேசிய மருந்துக் கொள்கையில் அடிப்படையிலேயே மாற்றம் கொண்டுவந்து விலைக் கட்டுப்பாடு செய்யும் வகையில் புதிய மருந்துக் கொள்கை 2012 உருவாக்கப்பட் டுள்ளது என்கிறது.

ஏற்கனவே நடப்பில் உள்ள மருந்துக் கொள்கை 1994 (Pharmaceuticals Policy 1994), மருந்து (விலைக்கட்டுப்பாடு) உத்தரவு 1995ன் மூலம் அமல்படுத்தப்பட்டது. தாராளமயமாக் கம், அந்நிய நேரடி முதலீடு அதிகரித்தபோது 2002ல் புதிய மருந்துக் கொள்கையை உரு வாக்கினார்கள்.  அதில் மருந்து விலைக் கட்டுப் பாடுகளைத் தளர்த்தினார்கள் ரூ.4 கோடி வரை வியாபாரம் செய்யும் மருந்து நிறுவனங்களுக்கு விலைக் கட்டுப்பாடு என்றிருந்ததை ரூ.25 கோடி வரை வியாபாரம் செய்யும் நிறுவனங்க ளுக்குக்கூட விலைக் கட்டுப்பாடு கிடையாது என்று மாற்றம் செய்யப்பட்டது. அதனால், மருந்துக் கொள்கை 2002க்கு எதிராக கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் வழக்குக் தொடுக்கப்பட் டது. கர்நாடகா உயர்நீதிமன்றம் அதை அமல் படுத்தக் கூடாது என 12.11.2002ல் தடைவிதித் தது. அந்தத் தடையை எதிர்த்து மத்திய அரசு, உச்சநீதிமன்றம் போனது. அதேசமயம், ஆல் இந்தியா டிரக் ஆக்ஷன் நெட் ஒர்க் என்கிற அமைப்பும் உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடுத்தது. உச்சநீதிமன்றம் கர்நாடகா நீதிமன்றத்தின் தடைக்கு தடை விதித்தபோதி லும், அத்தியாவசிய மருந்துகள், உயிர் காக்கும் மருந்துகள் எந்தவிதத்திலும் விலைக் கட்டுப் பாட்டுச் சட்டத்திற்கு வெளியில் போய்விடக் கூடாது என்றும் 2.5.2003 வரை அத்தியாவசிய, உயிர் காக்கும் மருந்துகள் எவை எவை என்று பட்டியலை உடன் தயாரிக்கவும் அரசுக்கு உத்த ரவு போட்டது. அதனால் மருந்துக் கொள்கை 2002 கைவிடப்பட்டு 1994ம் ஆண்டின் மருந்துக் கொள்கையே தொடர்ந்தது. தேசிய அத்தியா வசிய மருந்துகள் பட்டியலில் இடம் பெறக் கூடிய அத்தியாவசிய, உயிர் காக்கும் மருந்துகள் எவை எவை என்பது பற்றியும் அவற்றின் விலை குறித்தும் பரிந்துரைக்க திட்டக் கமிஷன் தலைவரின் முதன்மை ஆலோசகர் பிரனோப் சென் தலைமையில் ஒரு கமிட்டி 2004 நவம்பரில் உருவாக்கப்பட்டது. அந்தக் கமிட்டி தன்னுடைய பரிந்துரையை 2005 செப்டம்பரில் சமர்ப்பித்தது.

2003ல் உச்ச நீதிமன்றம் போட்ட உத்தர விற்கு 2012ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் மத்திய விவசாயத் துறை அமைச்சர் சரத்பவார் தலைமையில் அமைச்சர்கள் குழு கூடி  ுடிவு செய்து டிசம்பர் மாதம் புதிய மருந்துக் கொள்கை 2012 அறிவித்தார்கள். மருந்துக் கொள்கை 1994ன் கீழ் 74 மருந்துகள் மட்டுமே தேசிய மருந்து விலைக் கட்டுப்பாட்டு அதிகாரியின் (National Pharmaceutical Pricing Authority) கட்டுப்பாட்டில் இருந்தது. இப்போது அத்தியா வசிய மருந்துகள் என தேசிய அத்தியாவசிய மருந்துகள் பட்டியலுக்குள் (National List of Essential Medicines) 348 மருந்துகள் கொண்டு வரப்பட்டுள்ளன. அடுத்த  மருந்தின் விலை சந்தை அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படும். மருந்து நிறுவனங்கள் பட்டியலில் உள்ள மருந்து களின் விலையை அதிகப்படியாக வைத்து விற்க முடியாது. அதனால் இந்திய மக்களுக்கு குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

உண்மையில், தேசிய மருந்து விலைக் கொள்கை 2012 ஏழைகளின் பெயரைச் சொல்லி ஏமாற்றும் மன்மோகன் அரசின் மற்றுமொரு திட்டம். 1994 மருந்துக் கொள்கையின்படி மருந் துகளின் உற்பத்திச் செலவு மற்றும் உற்பத் திக்குப் பிந்தைய செலவுகளின் (Cost of Production and post production Expenses)  அடிப்படை யில்தான் மருந்துகளுக்கான உச்சபட்ச விலை (இங்ண்ப்ண்ய்ஞ் டழ்ண்ஸ்ரீங்)  நிர்ணயம் செய்து வந்தார்கள். இந்த முறைதான் 1979ல் இருந்தே கடை பிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால், இனி புதிய கொள்கைப்படி ஒரு மருந்துக்கு சந்தையில  நடக்கும் வியாபாரத்தின் அடிப்படையில் (Cost Based Pricing) உச்சபட்ச விலையை நிர்ண யம் செய்யப் போகிறார்கள். உற்பத்திச் செலவு களின் அடிப்படையில் (இர்ள்ற் ஆஹள்ங்க் டழ்ண்ஸ்ரீண்ய்ஞ்)  ிலையை நிர்ணயம் செய்யும்போது அதில் மூலப்பொருள்களுக்கான செலவு (Cost of Raw Materials), மூலப்பொருளை மாத்திரையாக மாற்றுவதற்கான செலவு (Cost of Conversion), அத்துடன் அதிகபட்சமாக அனுமதிக்கப்பட்ட உற்பத்திக்குப் பிந்தைய செலவுகள் (Maximum Allowable Post Manufacturing Expenses MAPE) இதில் உற்பத்தியாளரின் லாபம் (Profit of Manufacturer) மற்றும் பல்வேறு விநியோகச் செல வுகள் (Cost of Various Distributions) அடங்கும். இந்த உற்பத்திக்குப் பிந்தைய செலவுகள் ஆரம் பத்தில் 40% மட்டுமே அனுமதிக்கப்பட்டது. இப்போது 100% அனுமதிக்கப்பட்டுள்ளது. அதனால், இந்த உற்பத்தி செலவு அடிப்படை யிலான விலை நிர்ணயத்திலேயே மருந்து நிறுவனங்கள் குறைந்த பட்சம் 100% லாபம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இனிமேல் புதிய மருந்து விலைக் கொள்கை 2012ன்படி சந்தை அடிப்படையி லான விலை நிர்ணயம் (Market Based Pricing) என்கிறபோது மருந்து நிறுவனங்களுக்கு சர்வ சாதாரணமாக 200% முதல் 4000% லாபம் கிடைக்கும். அதாவது தேசிய அத்தியாவசிய மருந்துப் பட்டியலில் உள்ள மருந்துகளின் எல்லா வணிகப் பெயர் (Brand Name) கொண்ட மாத்திரைகளையும் எடுத்துக் கொள்வார்களாம். (வணிகப் பெயர் என்றால் ஒரே மருந்திற்கு ஒவ்வொரு நிறுவனமும் ஒவ்வொரு பெயர் வைத்திருப்பார்கள். காய்ச்சலுக்குக் கொடுக்கப்ப டும் பாராசிட்டமால் என்கிற மாத்திரைக்கு குரோசின் (Crocin), கால்பால் (Calpol) என்று கிளாஸ்கோ ஸ்மித்கெலின் நிறுவனம் பெயர் வைத்துள்ளது. டோலோ 650 (Dolo 650) என்று மைக்ரோலேப் நிறுவனம் பெயர் வைத்துள்ளது)  பட்டியலில் உள்ள மருந்துகளில் எந்தெந்த  மருந்துகள் (Brands) ஓராண்டில் சந்தையில் நடக்கும் மொத்த வியாபாரத்தில் (Turnover) ஒரு சதவீதமோ அல்லது அதற்குக் கூடுதலா கவோ வியாபாரமாகிறதோ அந்த மருந்துகளின் விலைகளை கூட்டி வரும் தொகையை அந்த மருந்துகளை (Brands) தயாரிக்கும் மொத்த நிறுவனங்களின் எண்ணிக்கையால் வகுத்து சராசரியாக வரும் தொகையே அக்குறிப்பிட்ட மருந்திற்கான உச்சவரம்பு விலை (Celing Price) என நிர்ணயம் செய்யப்படுமாம். இதன் மூலம் எல்லா நிறுவனத்தின் மருந்தின் விலையும் ஒன்று போல் இருக்கும் என்கிறார்கள்

ஆனால், இந்த சந்தை அடிப்படையிலான சராசரி விலை நிர்ணயப்படி ரூ.1.25க்கு விற் கப்பட்ட மாத்திரையின் விலை ரூ.1.00 அல்லது ரூ.1.15 என ஆகலாம். அதேவேளை அந்த குறிப் பிட்ட மாத்திரையை 10 பைசாவிற்கோ 20 பைசாவிற்கோ விற்று வந்த நிறுவனமும் இனி மேல் ரூ.1.00க்கும் ரூ.1.15க்கும் விற்பார்கள். இதனால், சாதாரண மக்களுக்கு, ஏழை நோயா ளிகளுக்கு எந்த பயனும் இல்லை. குறிப்பிட்ட மருந்தை 10 பைசாவுக்கும் 20 பைசாவுக்கும் வாங்கி சாப்பிட்டு வந்தவர்கள் இனி 100 மடங்கு அதிக விலை கொடுத்து வாங்க வேண் டும். இந்த புதிய மருந்துக் கொள்கை 2012 திட்டமிட்டு பன்னாட்டு மருந்து நிறுவனங்க ளின் வருமானத்தை அதிகரிக்கச் செய்யவே உருவாக்கப்பட்டுள்ளது. இந்திய மருந்து நிறுவ னங்கள், குறிப்பாக தமிழ்நாடு அரசு மருந்து நிறுவனம் போன்  ிறுவனங்கள் தயாரிக்கும் மருந்தின் விலை குறைவாகவும் பன்னாட்டு நிறுவனம் தயாரிக்கும் அதே மருந்தின் விலை அதிகமாகவும் இருப்பதால்  பன்னாட்டு நிறுவன மருந்தின் விலைக்கு ஏற்ப எல்லா நிறுவ னங்களின் மருந்து விலையையும் உயர்த்துவ தற்கான திட்டமே இது.

இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் குறைப்பதற்கு கொடுக்கப்படும் மருந்து அட்டர் வாஸ்டாட்டின் 10 மி.கி. (Atorvastatin 10mg). இதை பெரிய நிறுவனங்கள் பழைய உற்பத்தி செலவு அடிப்படையிலேயே 10 மாத்திரைகள் உள்ள ஒரு பட்டையை ரூ.110க்கு விற்கின்றன. ஆனால் அதே 10 மாத்திரைகள் மருந்து விலைக் கட்டுப்பாட்டு உத்தரவு 1995ன் கீழ் வெறும் ரூ.5.60. தமிழ்நாடு அரசின் பொதுக் கொள் முதல் விலை அதே 10 மாத்திரைகளுக்கு ரூ.2.10. இனி புதிய விலைக் கொள்கைப்படி எல்லா நிறுவனங்களும் அடக்க விலையில் இருந்து பல மடங்கு லாபத்துடன் அதே மருந்தை ரூ.75க்கோ அல்லது ரூ.90க்கோ விற்பார்கள். அதேபோல் உயர் இரத்த அழுத்தத்திற்கு (Blood Pressure) கொடுக்கப்படும் அம்லோடிப்பின  5மி.கி.  (Amlodipine 5mg.)  10 மாத்திரைகள் அடங்கிய பட்டையை முன்னணி மருந்து நிறுவனமே ரூ.15.60க்குதான் தற்போது விற்றுக் கொண்டிருக்கிறது. பழைய உற்பத்தி அடிப்படையிலான விலை நிர்ணய முறைப்படி (Cost Based Pricing) 10 மாத்திரைகளுக்கு ரூ.1.77 பைசாதான் ஆகிறது. இதிலேயே மருந்து நிறுவ னங்கள் அடக்க விலையில் இருந்து 100 மடங்கு லாபம் சம்பாதிக்கிறார்கள். ஆனால், புதிய முறைப்படி 10 மாத்திரைகளுக்கு ரூ.25.70. இந்த இரண்டு மாத்திரைகளில் மட்டுமே கிட்டத் தட்ட 1000% லாபத்தை அள்ளிவிடுவார்கள் மருந்து நிறுவன முதலாளிகள். இதுபோன்ற மாத்திரைகளை நோயாளிகள் தங்கள் ஆயுசுக் கும் சாப்பிட்டாக வேண்டும். வலி நிவாரணி டைக்ளோபெனக் 50 மிகி (Diclofenac 50 mg) மாத்திரை ஓவிரான் (Voviran) என்ற வணிகப் பெயரில் கிடைக்கிறது. 10 மாத்திரை 45 ரூபாய். அதே மருந்து தமிழ்நாடு மருந்து சேவை நிறுவனத்தின் விலை 10 மாத்திரைக்கு வெறும் ரூ.1.20தான். புதிய முறையில் உச்சபட்ச விலை 10 மாத்திரைகளுக்கு ரூ.37.50. இதே மருந்திற்கு தமிழ்நாடு அரசு மருந்துச் சேவை நிறுவனத்தின் சாராசரி உச்சவரம்பு விலையும் ரூ.10.16 மாறும். 1 ரூபாய் 20 பைசா என்பதில் இருந்து 10 மடங்கு அதிகரிக்கிறது. அதேபோல் பாராசிட்ட மால் மாத்திரை தமிழ்நாடு அரசின் கொள்முதல் விலை 10 மாத்திரைகளுக்கு ரூ.1.81 என்பதில் இருந்து ரூ.5.85 ஆக மாறும்.

புதிய கொள்கைப்படி அரசு மற்றும் பொதுத்துறை மருந்து நிறுவனங்களின் மருந்து களும்கூட அதிக விலைக்கு விற்கப்படும். பொது வாகவே எல்லார் மனதிலும் பன்னாட்டு நிறுவ னங்களின் மருந்துகள் அரசாங்க, உள்நாட்டு நிறுவன மருந்துகளை விடத் தரமாக இருக்கும் என்கிற எண்ணம் உள்ளது. எல்லா நிறுவனங்க ளின் மருந்தும் ஒரே விலைதான் என்கிறபோது மருத்துவர்களும் பன்னாட்டு, பெரிய நிறுவன மருந்தையே எழுதுவார்கள். மக்களும் அதை நோக்கி நகர்வார்கள். குறைந்த விலையில் உள்ள மருந்திற்கு இனி வாய்ப்பில்லாமல் போய் விடும். படிப்படியாக அரசாங்க மருந்து நிறுவ னங்களும், சிறிய இந்திய மருந்து நிறுவனங்க ளும் கடைசியில் காணாமல் போய்விடும். பெப்சியும் கோக்கும் வந்து மாப்பிள்ளைவிநாயகரையும் காளிமார்க்கையும் காணாமல் போனதுபோல.

இந்தியச் சந்தையில் எந்தெந்த மருந்துகள் (Brands) 1%த்திற்கு மேல் வியாபாரம் ஆகிறது என்கிற விவரங்களை அமெரிக்காவின் கனெட் டிக்கட் மாகாணத்தில் உள்ள டன்பரியைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள அய்.எம்.எஸ். ஹெல்த் (IMS Health - Intercontinental Medical Statistics) என்கிற தனியார் நிறுவனத்திடம் இருந்து பெற்றுக் கொள்ளுமாம் இந்திய சுகாதாரத் துறை. இந்த விவரங்களைக் கூட தன்னுடைய துறையின் மூலம் செய்ய முடியாத இந்திய அரசு எப்படி மருந்துக் கம்பெனிகளைக் கட்டுப்படுத்தும் என்று தெரியவில்லை. இதில் வேடிக்கை என்னவென்றால், இந்த அய்எம்எஸ் நிறுவனம் குறிப்பிட்ட மருந்தின் விற்பனை விவரத்தை மொத்த வியாபாரிகளிடமிருந்து (Stockists) சேகரிக்கும். அப்போது மருந்தின் மொத்த விலை மட்டுமே கிடைக்கும். சில்லறை விலை கிடைக்காது. அதனால், மொத்த விலை யோடு 16% சேர்த்து கூட்டி சில்லறை விலை நிர்ணயிக்குமாம் அரசு.

மருந்தின் அத்தியாவசியம், மக்கள் உண் மையிலேயே பயன்படுத்தும் மருந்துகளின் மீது மட்டும் கட்டுப்பாடு, சந்தை அடிப்படை யிலான விலை நிர்ணயம் இந்த மூன்றும்தான் புதிய கொள்கை அடிப்படைக் கோட்பாடாம். தேசிய அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில் உள்ள 348 மருந்துகளில் அதிகமாக உள்ளவை அனாவசிய மருந்துகள். அத்தியாவசிய மருந்து கள் கிடையாது. ஆஸ்த்மா நோயாளிகள் அதிகம் பயன்படுத்தும் தியோபிலின  (Theophylline) டாக்úஸôபிலின்  (Doxofyllin) போன்ற பல மருந்துகள் பட்டியலில் இடம் பெறவேயில்லை. அது மட்டுமல்லாமல் அப்பட்டியலில் உள்ள மருந்துகள் எல்லாம் ஒற்றை மருந்துகள் (Single ingredient formulations). அதாவது சில அத்தியா வசிய மருந்துகளை தனித்தனியாகக் கொடுக்கா மல் அந்த மருந்துகளை இணைத்து ஒரே மாத்திரையாகக் கொடுப்பார்கள். விலையும் குறைவாகும். இரத்தக்குழாயில் அடைப்புக்கு குளோப்பிடாக்ரல் (Clopidogrel) என்ற மருந்தை யும் ஆஸ்ப்பிரின் (Asprin) என்ற மருந்தையும் கொடுப்பார்கள். இவற்றை தனித்தனியாக வாங்கினால கம்பெனியைப் பொறுத்து ரூ.1.50 முதல் 2 ரூபாய் செலவாகும். அதேவேளை, இரண்டையும் ஒன்றாக சேர்த்துத் தயாரிக்கப் பட்ட ஒரே மாத்திரையின் விலை 25 பைசா தான். அம்மாதிரியான மருந்துகள் எதுவும் தேசிய அத்தியாவசிய மருந்துப் பட்டியலில் சேர்க்கப்படவேயில்லை. இந்திய மருந்துச் சந்தையில் ரூ.68,000 கோடிக்கு வியாபாரம் நடக் கிறது. இதில் ரூ.16,000 கோடிக்கு வியாபாரம் நடக்கும் மருந்துகள் மட்டுமே பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. ரூ.42,000 கோடிக்கான மருந்துகள் பட்டியலுக்கு வெளியே உள்ளது. அத்தியாவசிய மருந்துப் பட்டியல் என்பது ஒரு கண் துடைப்பு. இன்னொரு கதையும் சொல் கிறார்கள். அதாவது சந்தை அடிப்படையில் விலை நிர்ணயம் செய்வது குறிப்பிட்ட மருந் தின் உச்சபட்சவிலையாம். அந்த விலைக்கு கீழே மருந்துக் கம்பெனிகள் தங்களின் செலவுக்குத் தகுந்தபடி விலையைக் குறைத்து வைத்துக் கொள்ளலாமாம். தனியார்துறை, சந்தைப் பொருளாதாரம் என்றாலே லாபம் லாபம் மட்டுமே. அப்படியிருக்க பலநூறு மடங்கு விலையை உச்சத்திற்கு உயர்த்திவிட்டு மருந்து நிறுவனங்கள் குறைத்து விற்பார்கள் என்றால், இந்தக் கொடுமையை என்னவென்று சொல்வது?

அடுத்து, மக்கள் உண்மையிலே பயன்படுத் தும் மருந்துகள் மீது மட்டும் கட்டுப்பாடாம். அப்படியென்றால், தலைவலி, காய்ச்சல், சளி. சர்க்கரை வியாதி போன்றவற்றிற்கு மக்கள் தொடர்ந்து சாப்பிடுகிறார்களே அந்த மருந்து கள் மீது கட்டுப்பாடு. (மேலை நாடுகளில் தடை செய்யப்பட்ட மருந்துகள்தான் அதிகம் இந்தி யாவில் பயன்படுத்தப்படுகின்றன. அது தனிக் கதை). சாதாரண மக்கள் பயன்படுத்தும் மருந் துகளுக்கும் உச்சபட்ச விலையை நிர்ணயித்துக  ொள்ளையடிக்கத் திட்டமிட்டுள்ளார்கள்.

தேசிய மருந்து விலைக் கொள்கை 2012 பிரிவு 3.3 உட்பிரிவுகள் (iii) மற்றும் (iv), உற்பத்திச் செலவுகளின் அடிப்படையில் (Cost Based Pricing) விலையை நிர்ணயிக்கும் போது மருந்து நிறுவனங்கள் சித்து வேலைகள் செய்து, உண்மையை மறைத்து, தங்கள் இஷ்டத்திற்கு மருந்துகளின் விலையை நிர்ணயித்துக் கொள் கிறார்கள். உற்பத்திச் செலவுகள் தொடர்பாக அவர்கள் கொடுக்கும் விவரங்கள் எல்லாம் பல் வேறு குழப்பங்களை ஏற்படுத்துகிறது. மேலும் இந்த முறையில், தீவிரமாகச் செயல்படும் மருந்து உட்பொருளின் (Active Pharmaceutical ingredient) விலையை மீச் சிறு பொது வகுஎண் (Lowest common Denominator) அடிப்படையில் நிர்ணயம் செய்வதால், பரப்பெல்லை குறுக்கப் பட்டு புதியவர்கள் வர வாய்ப்பில்லாமல் போகிறது. இதனால், உற்பத்திச் செயல்பாடும் போட்டியும் தேக்கத்திற்கு வந்துவிடும். இன்று இந்தியப் பொருளாதாரம் சந்தையைச் சார்ந் துள்ளது. குறிப்பாக உற்பத்திப் பொருள்களின் விலை சந்தை நிலவரத்தாலும் சந்தை சக்தி களாலுமே தீர்மானிக்கப்படுகிறது. நிர்ணயிக்கப் பட்ட விலை (Administered Price) என்பது பெட் ரோலியப் பொருட்களுக்கும் உணவு தானியப் பொருள்கள் போன்றவற்றிற்கு மட்டுமே. ஏனென்றால் அவை அரசின் மானியத்துடன் தொடர்புடையவை என விவரித்துக் கொண்டே போகிறது.

உண்மையிலேயே மக்கள் மீது அக்கறை கொண்ட ஒரு மக்கள் நல அரசு என்றால் மருந் துகளின் அடக்க விலைக்கே அந்த மருந்துகள் அனைத்தும் மக்களுக்குக் கிடைக்கச் செய்ய வேண்டும். தயாரிப்புச் செலவு அதிகமாக உள்ள அத்தியாவசிய மருந்துகளை அரசே தயாரிக்க வேண்டும் அல்லது மானியம் கொடுத்து மக்க ளுக்கு அவை குறைந்த விலையில் தடையின்றி கிடைக்கச் செய்ய வேண்டும். மக்கள் மீது அக்கறை உள்ளதுபோல் மருந்துக் கம்பெனி களை கட்டுப்படுத்தப்போவது போல் காட்டிக் கொள்ளும் அரசு எதற்காக சந்தை வியாபா ரத்தைக் கணக்கில் எடுக்கிறது. மக்கள் சர்க்கா ருக்கும் மருந்து சந்தைக்கும் என்ன சம்பந்தம்? நடப்பில் எந்தவொருபொருளின் விலையும் சந்தை அடிப்படையில் நிர்ணயிக்கப் படுவது இல்லை. தயாரிப்புச் செலவுக்கும் சந்தையின் படியான உச்சவரம்பு விலைக்கும் நேரடித் தொடர்பே கிடையாது. தயாரிப்புச் செலவின் அடிப்படையில் விலை என்பதற்குப் பதிலாக சமனற்ற, கோட்பாடற்ற சந்தை அடிப்படையில் விலையைத் தீர்மானித்து வைத்துக் கொண்டு 200% முதல் 4000% வரை சூப்பர் லாபம் பார்ப்பதற்கு வழி செய்யப்பட்டுள்ளது. இதில் இருந்தே யாருக்காக, எந்த நோக்கத்திற்காக இப்புதிய கொள்கை உருவாக்கப்படுகிறது என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.

புற்றுநோய் போன்றவற்றிற்கான அத்தியா வசிய மருந்து, உயிர் காக்கும் மருந்துகளை இந்திய நிறுவனங்கள் குறைந்த விலைக்குக் கொடுக்க முடியும் என்பதை இந்திய காப்பு ரிமைக் கட்டுப்பாட்டுத் தலைவர் பி.எச். குரியன் நிரூபித்துக் காண்பித்தார். அதை இப்போது மாற்றி பன்னாட்டு, இந்நாட்டு பெருங்குழும நிறுவனங்களை கொழுக்கச் செய்யவே இந்தப் புதிய கொள்கையை கொண்டு வருகிறது மன் மோகனின் மத்திய அரசு. மத்திய அரசு எதிர்ப்பாளர்களாக காட்டிக் கொள்பவர்களும் இவை பற்றி பேசுவதில்லை.

**********

நகல் ஆவணம்

சர்வதேச சூழல் மீதான நகல் தீர்மானம்

(2013, ஏப்ரல் 2 - 6 தேதிகளில் ராஞ்சியில் நடக்கவுள்ள இகக மாலெ (விடுதலை) 9ஆவது கட்சி காங்கிரசில் விவாதிக்கப்படவுள்ள நகல் தீர்மானம் தரப்படுகிறது. வாசகர் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன)

1.    உலக முதலாளித்துவம் ஒரு நீடித்த தேக்கத் தில் சிக்கி உள்ளது. 1930களின் மாபெரும் நெருக்க டிக்குப் பிறகு, இதுவே மிகவும் கடுமையான பொருளாதார சரிவாகப் பரவலாக அங்கீகரிக்கப்படுகிறது. அமெரிக் காவில் உள்ள பல பகாசுர நிதிநிறுவனங்களின் கண் கவர் சரிவில் இருந்து அய்ந்து ஆண்டுகளாக, ஒபாமா நிர்வாகம், ஒரு வளரும் மீட்சி பற்றியும், நெருக் கடிகளின் முடிவின் துவக்கம் பற்றியும் பேசி வருகிற போதும், நெருக்கடி தணியும் என எந்த அறிகுறியும் தெரியவில்லை. இன்னமும் உலகில் மிகவும் பெரிய அமெரிக்கப் பொருளாதாரமே நெருக்கடியின் அதிர்வு மய்யமாக உள்ளது; ஆனால் உலக முதலாளித்துவ ஒருங்கிணைப்பு சகாப்தத்தில், நெருக்கடி உலகமெங் கும் உணரப்படுகிறது. துறைவாரியாகப் பார்த்தால், நிதித்துறையில்தான் நெருக்கடி மிகுந்த தீவிரத்துடன் வெடித்தது; ஆனால் சமகால முதலாளித்துவம் மேலோங்கிய நிதி முதலாளித்துவம் என்பதால், நெருக்கடி உலகப் பொருளாதாரத்தின் ஒவ்வொரு முக்கிய அம்சத்தையும் பாதித்துள்ளது. ஒரு நிதி நெருக்கடியாகத் துவங்கியது, ஒரு நீடித்த அனைத்துந் தழுவிய நெருக்கடியாக வளர்ந்துள்ளது.

2.    அமெரிக்காவும், இப்போது அதிகரித்த அளவில் அய்ரோப்பிய ஒன்றியமும், நெருக்கடியை எதிர்கொள்ள, திவாலாகி விளிம்பு நிலைக்குச் சென்ற வங்கிகளையும் நிதி நிறுவனங்களையும் மீட்பது உழைக்கும் மக்கள் மீது மிகக் கடுமையான சிக்கன நடவடிக்கைகளைத் திணிப்பது என்ற முறையையே பின்பற்றுகின்றன. விளைவாக, ஒருபுறம், அரசாங்கங்கள் அதிகரித்த அளவில் பொதுக் கடன்கள் பெற்று, பெரும் தொழில்குழுமங்கள் நிச்சயமான சரிவிலிருந்து காக்கப்பட்டுள்ளபோது, மறுபுறம் உழைக்கும் மக்கள் வேலையின்மை மற்றும் சரியும் ஊதியங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். சர்வதேச தொழிலாளர் அமைப் பின் மிகச்சமீபத்திய உலகளாவிய வேலை வாய்ப்பு போக்குகள் பற்றிய அறிக்கைப்படி, 2013ல் உலகில் வேலை கிடைக்காதவர்கள் எண்ணிக்கை 20 கோடியே 20 லட்சம் ஆகும். 2009ல் 19 கோடியே 80 லட்சம் என்ற மிக உயர்ந்த எண்ணிக்கையைத் தாண்டும். 2017 வரை இது வளர்ந்து கொண்டே போகும். இது மிக மிகக் குறைவான மதிப்பீடே. ஏனெனில், இந்தியா போன்ற நாடுகளில் உள்ள வேலை கிடைக்காதோர் பட்டியலில் அதிகாரபூர்வமாக பதிவு செய்யப்படாத வேலை கிடைக்காதவர்கள் இதில் சேர்க்கப்படவில்லை. சர்வதேச தொழிலாளர் அமைப்பு மதிப்பீடுகள்படி, உலகம் முழுவதும் 15 முதல் 24 வயது வரை உள்ளவர் களில் 12% பேரை, 7.5 கோடி பேரை 2011ல் வேலை இன்மை பாதித்தது.

3.    பொருளாதார நெருக்கடி, ஆளும் கொள்கை களுக்கு எதிராக சக்திவாய்ந்த வெகுமக்கள் எதிர்ப்புக்களை உலகமெங்கும் உருவாக்கி உள்ளது. இந்த எதிர்ப்புக்கள் நவதாராளவாதக் கோட்பாடு களுக்குச் சவால் விடுகின்றன, ஆட்சிகளைய  கவிழ்க்கின்றன. குறிப்பாக, அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட்டை ஆக்கிரமிப்போம் இயக்கம், அரபு வசந்தம், அய்ரோப்பாவில் நடந்த சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டம் ஆகிய மூன்று இயக்கங்கள் உலகளாவிய கவனத்தை ஈர்த்தன. டிசம்பர் 2012ல் இந்தியாவில் பாலியல் வன்முறைக்கு எதிராக வெடித்த இயக்கம், சமீபத்தில் உலகெங்கும் ஒரு தாக்கம் ஏற்படுத்தியது; பெண்கள் இயக்கம் அதிகரித்த அளவில் தொண்டு நிறுவனங்களால் கையகப்படுத்தப் படும் போக்கிலிருந்து நகர்ந்து பெண்கள் அரசியல் அறுதியிடலின் வாய்ப்பு தெரிகிறது. அரபு வசந்தம் விசயத்தில், பொருளாதார நெருக்கடி பின்புலத்தில் இருந்தது. எதேச்சாதிகார ஆட்சியலிருந்து விடுதலைக் கான மிகவும் தாமதமாகவே துவங்கியுள்ள தேடல், மிகவும் சக்திவாய்ந்த உந்து விசையாக இருந்தது. எதிர்ப்புக்கள் 2011ல் சிகரத்தைத் தொட்டன. மாறிய சூழலில் இப்போதும் தொடர்கின்றன. அமெரிக்காவில், குடியரசு கட்சியினர் தலைமையில் ஒரு வெறி பிடித்த வலதுசாரி மீட்சி சாத்தியப்பாட்டை முறியடித்து, ஒபாமா இரண்டாம் முறை வெற்றி பெற்று, வால் ஸ்ட்ரீட்டை ஆக்கிரமிப்போம் இயக்கத்தின் குறுகியகால பலனை அறுவடை செய்தார். அரபு உலகில் நான்கு அரசாட்சி கள் கவிழ்க்கப்பட்டன. பல நாடுகளில் உள்நாட்டுப் போரே பற்றி எரிகிறது. அரபு உலகம் நெடுக, இசுலா மிய கட்சிகள் மிகவும் சக்திவாய்ந்த அரசியல் போக் காக எழுந்துள்ளதாகத் தெரிகிற போதும், இந்த கொந் தளிப்பான சூழலைப் பயன்படுத்திக் கொண்டு, இந்த பிராந்தியத்தில் அமெரிக்கா தனது அரசியல் - ராணுவ தலையீட்டை ஆழப்படுத்தியுள்ளது. உலகில் பல்வேறு பகுதிகளிலுமுள்ள கம்யூனிஸ்ட்களுக்கும் மற்ற முற் போக்கு சக்திகளுக்கும் உலக முதலாளித்துவத்தின் தற் போதைய நெருக்கடி, நிச்சயமாய், எதேச்சதிகாரம், போர், முதலாளித்துவ பேரழிவு ஆகியவற்றுக்கு எதிராக எழு கிற முன்னேறுகிற சாத்தியப்பாட்டை உருவாக்கியுள்ளது

4.    செப்டம்பர் 11அய் அடுத்து அமெரிக்கா தொடுத்த, ‘பயங்கரவாதத்துக்கு எதிரான போர்என அழைக்கப்படுவது (அதற்குப் பயங்கரவாத போர் என மாற்றி பெயர் சூட்ட வேண்டும்) ஆசியாவிலும் ஆப்பி ரிக்காவிலும் பல புதிய பகுதிகளுக்குத் தொடர்ந்து பரவுகிறது. பயங்கரவாதத்தை எதிர்கொள்வதாகவும், ஜனநாயகத்திற்கு உதவுவதாகவும் சொல்லி, அமெரிக் காவும் அதன் நேட்டோ கூட்டாளிகளும் இதனை புதிய புதிய சாக்குகளுடன் புதிய புதிய இலக்குகளுடன் ஒரு நிரந்தர போராக்கி விட்டன. சதாம் உசேனை கொன்று விட்டு ஈராக்கை ஆக்கிரமித்த பிறகு, அமெரிக்கா-நேட்டோ அச்சு லிபியாவை குறி வைத்து பலமான தலைவராக இருந்த மும்மார் கடாபியை தீர்த்துக் கட்டியது. இப்போது சிரியாவில் ஆட்சி மாற்றம் கொண்டு வருவதில் மும்முரமாக உள்ளது. அதே போல் அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனை பாகிஸ்தானில் கொன்ற பிறகு அமெரிக்காவும் அதன் பிரிட்டிஷ், பிரெஞ்ச் கூட்டாளிகளும் ஆப்பிரிக்கா எங்கும் அல்கொய்தா ஆவிகளை கண்டுபிடிப்பதில் மும்முரமாய் உள்ளனர். ஏற்கனவே மேற்கத்திய ராணுவம், ஆட்சியாளர்களை காக்க சுரங்கங்களை எண்ணை வளங்களை பாதுகாக்க எனச் சொல்லி, மாலியில், நைஜீரியாவில் நுழைந்துள்ளன. அமெரிக்க பென்டகன் ஏற்கனவே ஓர் ஆப்பிரிக்க தலைமையகம் (ஆப்ரிகாம்) கொண்டுள்ளது. ஆப்பிரிக்காவில் 35 நாடுகளில் அமெரிக்க ராணுவ நடமாட்டம் உள்ளது. ஆப்பிரிக்காவில் கொழிக்கும் மூல வளங்களைஅபகரிப்பது, ஆப்பிரிக்க நாடுகளுடனான சீனாவின் வளர்ந்து வரும் பொருளாதார உறவுகளை எதிர்கொள் வது என்பவையே அமெரிக்க மற்றும் ஒரு காலத்தில் ஆப்பிரிக்காவின் பல பகுதிகளை தங்களது காலனிய ஆதிக்கத்தில் வைத்திருந்த பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளின் போர்த்தந்திரத்தின் பின்னால் உள்ள காரணங்களாகும்.

5.    பேரழிவுமிக்க புஷ் சகாப்தத்திற்குப் பிறகு கருப்பு அமெரிக்கரான ஒபாமா குடியரசுத் தலைவர் ஆவதற்கு போர் விரைவில் முடிவுக்குக் கொண்டு வரப் படும் என வெகு மக்கள் எதிர்பார்த்தது காரணமாக இருந்தது. ஆனால், அதற்கு மாறாக ஒபாமா குடியரசுத் தலைவராய் உள்ள போது போர் மேலும் மேலும் பரவிக் கொண்டிருக்கிறது. நிச்சயமாய் ஒபாமா வாசிங்டனின் போர்த்தந்திரத்தில் சில மாற்றங்களைச் செய்துள்ளார். அவர் நேரடி ஆக்கிரமிப்பில் குறைவாக முதலீடு செய்யப்பார்க்கிறார். அவப்புகழ் கொண்ட டிரோன் தாக்குதல்கள் எனப்படுகிற, ஆளில்லா விமானங்கள் மூலம் குண்டு வீசி  இலக்கு வைக்கப் பட்ட கொலைகள் செய்வது என்று சொல்லப்படுவதற் கும், ஆட்சிமாற்றம் என்ற அமெரிக்க திட்டத்திற்கு ஏற்ப வெவ்வேறு அரபு உலக குழுக்களுக்கு உதவு வதற்கும் அழுத்தம் வைக்கிறார். இந்த டிரோன் தாக்குதல்கள் உச்சபட்ச ரகசியத்துடன் பாகிஸ்தான் போன்ற நீண்டகால அமெரிக்க கூட்டாளி நாடுகள் உள்ளிட்ட நாடுகளின் இறையாண்மை உரிமைகளை அப்பட்டமாக மீறி நடத்தப்படுகின்றன. பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட சாதாரண குடிமக்களில் ஆயிரக்கணக்கானவர்களை பாகிஸ்தான், ஏமன், சோமாலியா நாடுகளில் டிரோன் தாக்குதல்களில் கொன்றுள்ளனர். குறி வைக்கப்பட்ட பயங்கரவாதிகள் பட்டியல்களில் இவர்கள் பெயர்களை எங்கும் காண முடியாது. ஒபாமா இப்போது, அமெரிக்க குடிமக்களை யும், எந்த வெளிப்படை தன்மையின்றியும் சட்ட இயக்கப்போக்குக்கு தொடர்பில்லாமலும், கொல்ல உத்தரவிடும் அதிகாரத்தை தனக்கு வழங்கிக் கொண்டுள்ளார்.

6.    உலகம் முழுவதும் போர் மற்றும் தாக்குதலின் மற்றுமொரு மிகப்பெரிய தோற்றுவாய், அமெரிக்கா வுக்கு அடுத்து, அதனால் முழுவதுமாக ஆதரிக்கப் படும் இஸ்ரேல். ஆசியாவில், அமெரிக்காவின் மிகவும் நம்பகமான ராணுவத் தளமாக இஸ்ரேல் செயல் படுகிறது. தனது முதன்மை எதிரியாக இசுலாத்தைக் கட்டமைப்பதில், குறிப்பாக அரபு உலகை கண்காணிப் பதில் அமெரிக்காவின் மிகவும் உறுதியான கருத்தியல் கூட்டாளியா  இஸ்ரேலே செயல்படுகிறது. எல்லா அமைதி ஒப்பந்தங்களுக்கும் அய்நா தீர்மானங்களுக் கும் புறம்பாக, இஸ்ரேல் பாலஸ்தீனத்தைத் தொடர்ந்து ஆக்கிரமிக்கிறது. முடிவற்ற போர்க்குற்றங்களை நிகழ்த்துகிறது. உண்மையில் ஈராக்கும் லிபியாவும் அமெரிக்க கட்டுப்பாட்டில் இருக்கும் போது, சிரியா அமெரிக்கா தலைமையிலான மற்றும் ஒரு ஆட்சி மாற்ற முயற்சியில் சரிவின் விளிம்பில் இருக்கும்போது ஈரான் அமெரிக்கா மற்றும் அதன் நேட்டோ கூட்டாளிகளால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளபோது, தற்போதைய கட்டத்தை, பாலஸ்தீன பூமியில் தனது ஆக்கிரமிப்பை விரிவுபடுத்த ஒரு மகத்தான ராணுவ அரசியல் வாய்ப்பாக இஸ்ரேல் பார்க்கிறது. காசா மீதான சமீபத்திய தாக்குதல், சாதாரண பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டது, அத்தியாவசிய சேவைகள் பெரு மளவில் முறைப்படுத்தப்பட்ட விதத்தில் அழிக்கப்பட் டது ஆகியவை, காசாவை தரைமட்டமாக்கி, அவர்கள் மண்ணில் தனிப்பட்ட யூதர்கள் குடியிருப்புக்களை விரிவாக்குவதன் மூலம், பாலஸ்தீன மக்களை விரட்டி யடிக்கும் இஸ்ரேலின் நோக்கத்தை தெளிவுபடுத்து கிறது. பாலஸ்தீனம் உண்மையில் ஒரு பெரிய வதை முகாமாக மாற்றப்பட்டுள்ளது. பாலஸ்தீன மண்ணில், பாலஸ்தீன மக்கள் மீது, நாஜி காலத்து மனிதப் படுகொலையை விந்தை முரணான விதத்தில் மீண்டும் நிகழ்த்துவதாக உள்ளது. இந்தப் பின்னணியில், 138 நாடுகள் ஆதரவாகவும், அமெரிக்கா, இஸ்ரேல், கனடா உள்ளிட்ட 9 நாடுகள் எதிராகவும், பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்ட 41 நாடுகள் வாக்களிக்காமலும் நிறைவேற்றப் பட்ட சமீபத்திய அய்நா தீர்மானம், பாலஸ்தீனத்துக்கு ‘உறுப்பினரல்லாத பார்வையாளர் நாடுஎன்ற அந்தஸ்தை வழங்கி பாலஸ்தீன நாட்டின் இறையாண் மையை மறைமுகமாக அங்கீரித்திருப்பது, பாலஸ்தீன மக்களுக்கு ஒரு தார்மீக, மனரீதியான வெற்றியாகும். அமைதியின், சுதந்திரத்தின் மிகப்பெரிய உலகளாவிய எதிரியாக, அமெரிக்க - இஸ்ரேல் கூட்டு உள்ளது. எனவே, இந்தக் கூட்டுக்கு எதிராக உலகெங்கும் உள்ள ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்திகள் தங்கள் போராட்டங் களை கூர்மைப்படுத்த வேண்டியுள்ளது. இந்தப் பின்ன ணியில், ஈரானை தனிமைப்படுத்த, நிர்ப்பந்தப்படுத்த அமெரிக்கா எடுக்கும் வெறித்தனமான முயற்சிகளுக்கு பதிலடியாக, ஈரான், 2012 ஆகஸ்ட்டில், டெஹ்ரானில் அணிசேரா நாடுகளின் 16ஆவது உச்சிமாநாட்டை வெற்றிகரமாக நடத்தியது நெகிழச் செய்கிறது.

7.    பொருளாதார நெருக்கடி மற்றும் அமெரிக்கா தலைமையிலான நிரந்தர உலகளாவிய போர் இயக்கம் ஆகியவற்றோடு, இன்று உலகம் முதலாளித்துவ பேரழிவின் மூன்றாவது பரிமாணமான, எரிசக்தி நெருக்கடி, சுற்றுச்சூழல் பேரிடரையும் தீவிரமாக எதிர்கொள்கிறது.  அமெரிக்காவும் அதன் மேற்கத்திய கூட்டாளிகளும் எண்ணை, எரிவாயு, நிலக்கரி போன்ற கேந்திரமான எரிசக்தி ஆதாரங்கள் மீதான தமது கட்டுப்பாட்டை இறுக்க மூர்க்கமாக முயற்சிக்கின்றன. அதிகரித்த அளவில் மூன்றாம் உலக நாடுகளின் நிலங் களைப் பறித்து, தங்கள் சொந்த எரிசக்தி தேவைக ளுக்காக தாவர எரிபொருள் விவசாயத்தை முன்தள்ளு கின்றன. வளர்கிற நாடுகளின் விவசாய பொருளாதா ரத்தை, உணவுப் பாதுகாப்பை, இறையாண்மையை அழிக்கின்றன. பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என அழைக்கப்படுவது செல்வாதாரங்களை கைப்பற்றுவதற் கான, உலக எரிசக்தி பொருளாதாரம் மீது ஓர் ஏகபோக கட்டுப்பாடு செலுத்துவதற்கான போரே ஆகும். இதற்கிடையில், முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில் அணு ஆற்றலின் உள்ளார்ந்த ஆபத்து பரவலாக ஏற்கப்படும்போது, கிட்டத்தட்ட அந்த நாடுகள் அனைத்துமே பாதுகாப்பான மலிவான எரிசக்தி ஆதாரங்களை நோக்கி நகரும்போது, செர்னோபில் புகுஷிமா போன்ற ஆபத்தான அனுபவங்களுக்குப் பிறகும், அமெரிக்காவும் பிற பெரிய அணுசக்தி நாடு களும், தங்களது காலாவதியான அணுசக்தி தொழில் நுட்பத்தை இந்தியா போன்ற நாடுகளுக்கு விற்பதில் மும்முரமாய் உள்ளன.

8.    புவி வெப்பமடைதல் அல்லது தட்பவெட்ப நிலை மாற்றம் இனியும் எதிர்காலத்திற்கான ஓர் அச்சுறுத்தல் மட்டுமல்ல. அது இந்த பூமி கோளத்தில் உள்ள எல்லா உயிரினங்களுக்கும் மிகவும் ஆபத்தா னதாகி உள்ளது. 1997 கியோட்டோ ஒப்பந்தம், கரியமில வாயு மற்றும் பசுமை குடில் வாயுக்களின் தனிநபர் வெளியேற்றத்தைக் குறைக்க, அதிகரித்து வருகிற சூழல் பேரிடருக்கு முதன்மை பொறுப்பான முன்னே றிய நாடுகளுக்கு இலக்குகள் நிர்ணயித்தது. ஆனால் அமெரிக்காவும் மற்ற சில வளர்ந்த நாடுகளும் கியோட்டோ இயக்கப்போக்கை தடம் புரள வைத்தன. நாசப்படுத்தின. இறுதியாக, 2011ல் டர்பனில் நடந்த மாநாட்டில், தனி நபர் வெளியேற்ற அளவுகோளை வீசியெறிந்து, சீனா, இந்தியா போன்ற நாடுகள் மீது பொருந்தாத சுமையை மாற்றிஏற்றி, தட்பவெட்ப நிலை நெருக்கடியை எதிர்கொள்வதில் சமத்துவம், நியாயம் என்ற கருத்தாக்கங்களை பலி கொடுத்தன. வளர்ந்த நாடுகள் தங்கள் விஷக்கழிவுகளை கொட்டும் குப்பைக் கூடங்களாக மூன்றாம் உலகை பயன்படுத்தப் பார்க்கின் றன. ஆகவே சுற்றுச்சூழல்ரீதியான நிலைக்கத்தக்க ஒரு வளர்ச்சி மாதிரிக்கான போராட்டம், முன்னேறிய நாடுகள் தொடர்ந்து இழைக்கும் அநீதிகளுக்கு நேரடி யாக சவால் விட வேண்டும்.

9.    தகவல் தொழில்நுட்பத்தில் குறிப்பிடத்தக்க எழுச்சி, குறிப்பாக, செய்தித் தொடர்பு ஊடகமாக, வெகு மக்கள் தகவல் பரப்பும் ஊடகமாக,  இணையதளத்தின் பிரும்மாண்டமான வளர்ச்சி ஆகியவை, பெருந் தொழில்குழும எதிர்ப்புக்கு, ஏகாதிபத்திய எதிர்ப்புக்கு மிகப்பெரிய சாத்தியப்பாடுகளைத் திறந்துவிட்டுள்ளது. இந்த புதிய ஊடகத்தின் பிரம்மாண்டமான உள்ளாற்றல், பெருநிறுவன - ஏகாதிபத்திய ரகசியங்களை அம்பலப் படுத்தும் ஆயுதமாக, உடல்ரீதியாகவும் கருத்தியல்ரீதி யாகவும் சமூக மற்றும் அரசியல் அணிதிரட்டலுக்கான கருவியாக, அறிவு மற்றும் தகவல் தளத்தில் முதலாளித்துவ ஏகபோகத்தின் அடிப்படையையே எதிர்க்கும் ஒரு முறையாக உணரப்பட துவங்கிவிட்டது. அதனால்தான் மூலதனம் மற்றும் அரசின் அதிகாரம், இணையதள சுதந்திரத்தை கட்டுப்படுத்த சீர்குலைக்க மூர்க்கத்தனமாக வழிதேடுகிறது. மூலதனம் மற்றும் பெருந்தொழில் குழும - ஏகாதிபத்திய அரசின் தாக்குதல்களுக்கு மிகவும் பலத்த அடி தர, இந்தச் சதியை முறியடிப்பதும், தகவல் தொழில்நுட்பம் மற்றும் இணையதள சுதந்திரத்தின் எல்லைகளை விரிவுபடுத்து வதும் உலகத்தில் உள்ள மக்கள் போராட்டங்களின் கேந்திரமான சவாலாக எழுந்துள்ளது.

10.   ஒரு புதிய உலகில் முழுமுற்றூடான நிரந்தர ஆதிக்கம் செலுத்துவது என்ற அமெரிக்க கனவு பொரு ளாதார அரங்கில் மிகவும் கடுமையான சவாலுக்கு உள்ளாகி உள்ளது. தற்போதைய நெருக்கடியால் அமெரிக்கா கடுமையாக தாக்கப்பட்டுள்ளது. அதே நேரம் இன்று உலகின் இரண்டாவது பெரிய பொருளா தாரமாக மாறியுள்ள சீனா, குறைவாகவே பாதிக்கப்பட் டுள்ளது. வாங்கும் திறன் சமத்துவம் என்ற விதத்தில் 2020ல் உலகத்தின் மிகப்பெரிய பொருளாதாரமாக சீனம் அமெரிக்காவைத் தாண்டிச் செல்லும் என கருதப்படுகிறது. ஒரு மிகஉயர்ந்த அளவு பரஸ்பர சார்பு என்பதையும் தாண்டி, புரிந்து கொள்ளத்தக்க விதத்தில் இந்த இரு சக்திகளுக்கிடையிலான பொருளாதாரப் போட்டி கூர்மையடைகிறது. உலக வர்த்தக அமைப்பு போல் அய்ரோப்பிய ஒன்றியத்தை ஒரு சந்தை அமைப்பாக அங்கீகரித்தால், அதன் பொருளாதாரம் ஏற்கனவே அமெரிக்க பொருளாதாரத்தை விட பெரியது. சீனாவினால் செலுத்தப்படும் பிரிக்ஸ் (பிரேசில், ரஷ்யா, சீனா, இந்தியா, தென்ஆப்பிரிக்கா - சீனாவில் ஏப்ரல் 2011ல் நடந்த இக்குழுவின் உச்சி மாநாட்டில் தென்ஆப்பிக்கா சேர்த்துக் கொள்ளப்பட் டது) ஒரு பலம் வாய்ந்த பொருளாதார சக்தியாக எழுந்துள்ளது. ஆனால் அதன் துவக்க கால பளபளப்பு, நெருக்கடியால் சற்று குறைந்துள்ளது. வளரும் பொரு ளாதாரங்கள் எனப் பட்டியலிடப்பட்ட நாடுகள், (வேறு வேறு நிறுவனங்கள் வேறு வேறு பட்டியல்கள் கொண்டுள்ளன. உலக வங்கி, பிரேசில், ரஷ்யா, சீனா, இந்தியா போல தென்கொரியாவையும் இந்தோனேஷி யாவையும் ஆறு பெரிய எழுகிற பொருளாதாரங் களாகப் பட்டியலிடுகிறது). பழைய மகத்தான 7 நாடுகளான அமெரிக்கா பிரிட்டன், பிரான்ஸ் ஜெர்மனி இதாலி கனடா ஜப்பான் ஆகியவற்றோடு போட்டி யிடுபவைகளாக பரவலாக ஏற்கப்படுகின்றன. அதனால் மகத்தான ஏழு நாடுகள், மகத்தான இருபது நாடுகள் என்ற பட்டியலில் பல வளரும் பொருளாதாரங்களை கொண்டுவர முன்முயற்சி எடுத்துள்ளன. அமெரிக்கா வின் கையில் இருக்கிற மிகப்பெரிய பொருளாதார ஆயுதம் அதன் நாணயம் (டாலர்). சர்வதேச பரிவர்த் தனை தர அளவையாக தனித்த உலகளாவிய அங்கீ காரம் பெற்றுள்ள விசயமாக டாலர் உள்ளது. இந்த முதன்மை நிலையிலிருந்து என்று டாலர் கீழே இறக்கப்படுகிறதோ, அன்று உலகப் பொருளாதார சமநிலை வெகுவாக மாறும். டாலர் ஆதிக்கத்திற்கு முடிவு கட்டுவதும் அதற்குப் பதிலாக ஒரு மாற்று ஏற்பாடு கொண்டுவருவதும், உலகத்திற்குத் தேவை யான அவசரப் பொருளாதார சீர்திருத்த மாதிரி.

11.   இராணுவ அரசியல் அரங்கில் அமெரிக்கா இன்னமும் தனது முதன்மை நிலையைத் தக்க வைத்துள்ளது. ஆயினும் பல்துருவம் நோக்கிய ஒரு புறநிலைரீதியான போக்கும் தென்படுகிறது. சீனா, ரஷ்யா, மற்றும் சோவியத் சோசலிச குடியரசு ஒன்றிய சிதைவிலிருந்து எழுந்த நான்கு நாடுகளுமாகச் சேர்ந்து உருவாக்கிய ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வருகை, அய்ரோப்பிய ஒன்றியத்தின் விரிவாக்கம் மற்றும் உறுதிப்படுதல் ஆகியவற்றில் முதன்மையாகக் காணப்பட்ட பல்துருவம் நோக்கிய போக்கின் வேகம், பயங்கரவாதத்திற்கு எதிரான அமெரிக்கா தலைமை யிலான உலகளாவிய கூட்டணியின் எழுச்சியை அடுத்து, குறைந்துள்ளது. அமெரிக்கா, ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் சிக்கிக் கொணடுள்ளபோது, இப்போதைய நெருக்கடியில் அதன் பொருளாதாரத் திற்கு கடுமையான அடி விழுந்துள்ளபோது, அமெரிக்கப் பிடி தளரத் துவங்கி உள்ளது. ரஷ்யா மற்றும் சீனாவிடமிருந்து வந்த ஒன்றிணைந்த விடாப்பிடியான எதிர்ப்பு, அமெரிக்கா தான் நினைத்ததை ஈரான் விசயத்திலும் இப்போது சிரியா விசயத்திலும் செய்ய முடியாமல் ஆக்கி உள்ளது. பொருளாதார இராணுவ ஒத்துழைப்புடன் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு ஒரு சக்தி வாய்ந்த அணியாக எழுகிறது. இது இந்தியா பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் ஆகியவற்றை பார்வையாளர்களாக சேர்த்துக் கொண்டதன் மூலம் தனது செல்வாக்கை விரிவுபடுத்தி யுள்ளது. ஒரு நேட்டோ நாடான துருக்கி, ஒரு பேச்சுவார்த்தை கூட்டணியாக ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 2012 உச்சிமாநாட்டில் கலந்து கொண்டுள்ளது.

12.   பல்துருவம் நோக்கிய போக்கு சர்வதேச உறவுகள் என்ற சிக்கலான வலையின் மூலம் செயல் படுகிறது; ஒரே நேரத்தில் வளர்ந்த முதலாளித்துவ நாடுகளில் கூலி உழைப்புக்கும் மூலதனத்திற்கும் இடையிலான முரண்பாடு மற்றும் ஏகாதிபத்தியத்திற் கும் மூன்றாம் உலக நாடுகளுக்கும் இடையிலான முரண்பாடு என்ற இரண்டு அடிப்படை முரண்பாடுகள் தீவிரமாவதை பிரதிபலிக்கும், உலகம் முழுவதும் நடைபெறும் வெகுமக்கள் வெடிப்புக்கள் மற்றும் எதிர்ப்புக்களின் ஓர் புதுப்பிக்கப்பட்ட எழுச்சி, பயங்கரவாதம் மற்றும் ஏகாதிபத்திய தலையீடு என்ற சுழலேணியை வெல்லும், உள்ளாற்றல் கொண்டிருக்கி றது; கடுமையான பொருளாதார நெருக்கடி, நிரந்தரமான உலகளாவிய போர், வளரும் சுற்றுச்சூழல் பேரிடர் என்ற பேரழிவுமிக்க பயணப்பாதை கொண்ட அமெரிக்கா தலைமையிலான நவதாராளவாத ஒழுங்குக்கு எதிராக அரசியல் சமநிலையை மாற்றும் உள்ளாற்றல் கொண்டுள்ளது.

13.   1978லிருந்து சீனா அதிகரித்த அளவில், வலுவான அரசு தலையீட்டுடன் ஒரு கட்டுப்படுத்தப் பட்ட சந்தைப் பொருளாதாரம் என்ற திசையில் நடந்துள்ளது. சீனா இதனை சீன இயல்புகளுடன் கூடிய சோசலிசத்தை கட்டுவது என அழைக்கிறது. சீனா உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார மய்யமாக எழுந்துள்ளபோதே சந்தைப் பொருளாதாரத்தைப் பெருமளவில் ஏற்றுக்கொண்டது, சமூக மற்றும் பிராந்திய ஏற்றத்தாழ்வுகளை கணிசமாக அதிகப்படுத்தி யுள்ளது. நமது எட்டாவது காங்கிரஸ் ஆவணத்தில், சந்தைசார்ந்த தனியார்மய சார்பு சீர்திருத்தங்களின் போக்கில் சீனா, ‘சோசலிசம் நோக்கிய எந்தப் பொருளுள்ள முன்னேற்றத்திலிருந்தும் நகர்ந்து சென்றுவிட்டதுஎன்றும், ‘அடித்தளத்தில் துரிதமாக வளரும் முதலாளித்துவ உறவு - இயல்பாக மேல் கட்டுமானம் மீது - ஆளும் கட்சியின் அரசியல் கொள்கைகள் மற்றும் முன்னுரிமைகள் மீது, கட்சி உறுப்பினர்கள் நடத்தையின் மீது தாக்கம் செலுத்து கிறதுஎன்று குறிப்பிட்டிருந்தோம். இந்த திசை மாற்றக் கட்டம் தொடர்கிறது. அது, அதிகரிக்கும் கூடா நட்பு மற்றும் ஊழல், கட்டாய நிலப்பறி, பன்னாட்டு நிறுவனங் கள் உள்ளிட்ட தனியார் தொழிற்சாலைகள் மற்றும் சுரங்கங்களில் படுமோசமான வேலை நிலைமைகள், குறைந்த கூலி, இவற்றால் அடிக்கடி நடக்கும் கிராமப்புற கலகங்கள், தொழிலாளர் வேலை நிறுத்தம், அவை ஒரு விதியாகக் கடுமையாகக் கையாளப்பட்டு ரகசியமாக வைக்கப்படுதல், 2009ல் நடந்த ஷின்சியாங் மோதல் சம்பவங்களில் முடிந்த தேசிய சிறுபான்மை யினர் ஓரம் தள்ளப்படுவது, முதலாளித்துவ நுகர்வு வாதம், சமூக மற்றும் அரசு நிறுவனங்களில் நிலப்பிர புத்துவ ஆணாதிக்க போக்குகள் பரவுதல் மற்றும் அது போன்ற தீமைகளால் குறிக்கப்பட்டுள்ளது.

14.   மிகச்சமீபத்தில் நடந்த 18ஆவது கட்சி காங்கிரசில் முன்வைக்கப்பட்ட ‘வளர்ச்சி தொடர்பான விஞ்ஞானபூர்வமான பார்வை, அதற்கு முன்பு முன்வைக்கப்பட்ட ‘சோசலிச கருவான விழுமிய முறை ‘சோசலிச நல்லிணக்கச் சமூகம்என்ற ஒரு தொடர்வரிசை வழிகாட்டுதல்கள் மூலம், சீன கம்யூனிஸ்ட் கட்சி இந்தப் பிரச்சினைகளை எதிர் கொள்ள முயற்சி செய்கிறது.  ஆனால் ஒரு முழுமை யான கருத்தியல் - அரசியல் திசைமாற்றம் இல்லாத போது, சீனாவின் கண்கவர் பொருளாதார வளர்ச்சி ஜனநாயகத்திற்கோ, சமத்துவத்திற்கோ, அல்லது பழைய முழக்கமான ‘சோசலிச உணர்வுள்ள நாகரிகத்திற்கோபங்களிப்பு செய்வதாக எந்தச் சான்றுமில்லை. 20ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட சோசலிச வடிவங்களி லிருந்து சீனா விலகிச் செல்கிறது என்பதோ, ஒரு கடுமையான சர்வதேச பின்புலத்தில் புதிய சவால் களைச் சந்திக்க புதுமையான முயற்சிகள் எடுக்கிறது என்பதோ சீனம் பற்றிய கவலையை உருவாக்க வில்லை; ஆனால், சமூக ஏற்றத்தாழ்வுகளை குறைக்கிற, தமக்கு மேல் நிற்கும் அரசு அதிகாரத்திடமிருந்து ஆதாயம் பெறும் பயனாளிகள் என்ற நிலையிலிருந்து அடிப்படை மக்களை நாட்டின் உண்மையான ஆட்சியாளர்களாக உயர்த்தும், ஒரு புரட்சிகர சமூக மாற்றத்திற்கான சாரமான விடுதலைப் பார்வை, தெளிவாகத் தெரியும் விதம் இல்லாமல் போவதுதான் கவலைக்குரியது. ஆனபோதும், உலக முதலாளித்துவ பொருளாதாரத்துடன் அதிகரித்த அளவில் ஒருங்கி ணைவதை நடைமுறைப்படுத்தும்போதும், தற்போ தைய நெருக்கடியின் தவிர்க்கமுடியாத பாதகமான விளைவுகளை, பின்பற்றத் தக்கவை என பிற நாடுக ளால் பரவலாக அங்கீகரிக்கப்பட்ட, மிகப்பொருத்த மான கொள்கை முடிவுகள் மூலம், அமெரிக்கா அய்ரோப்பிய ஒன்றியம், ஜப்பான் ஆகிய நாடுகளை விட மேலான விதத்தில் சீனா கையாண்டது முக்கியத் துவம் வாய்ந்தது.  நாம் சீனாவில் நடக்கும் மாற்றங் களைத் தொடர்ந்து படிக்க வேண்டும்; சீனாவைச் சுற்றி வளைத்துக் கட்டுப்படுத்தும் அமெரிக்க சதியில் இந்தியாவை ஒரு காயாகப் பயன்படுத்தும் அமெரிக்கக் கொள்கையை உறுதியாக எதிர்க்கும் அதேநேரம், பிரிக்ஸ், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு போன்ற பல்தள மேடைகள் மூலமும், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்காக நாம் நிற்க வேண்டும்.

15.   உலகளாவிய ஏகாதிபத்திய எதிர்ப்பு சோசலிச கற்பனையை சீனா இன்று உற்சாகப்படுத்தவும் இல்லை, பிரதிநிதித்துவப்படுத்தவும் இல்லை. உலக அரங்கில், இடதுசாரி இயக்கத்தில் ஒரு துடிப்பான கோட்டையாக லத்தீன் அமெரிக்கா எழுகிறது. சமீபத்திய கடந்த காலத்தில், லத்தீன் அமெரிக்க மக்கள், நவதாராளவாத நிகழ்ச்சிநிரலை துணிச்சலாக எதிர்க்கிற, ஏகாதிபத்திய எதிர்ப்பு சாய்வு கொண்ட பல அரசாங்கங்களை தேர்வு செய்துள்ளனர். பொலிவியாவும் வெனிசுலாவும் கேந்திரமான தொழில்களை நாட்டுமையாக்கி உள்ளன. ஈக்வடார் ஓர் அமெரிக்க ராணுவ தளத்தை மூடியுள் ளது. சில பத்தாண்டுகள் முன்பு வரை, சிலி முதல் அர்ஜன்டினா வரை, அமெரிக்க ஆதரவு சர்வாதிகாரங் களின் கீழ் நவதாராளவாதக் கொள்கைகளை பலவந்தமாக அமல்படுத்துவதில் இந்தப் பிராந்தியம் பெயர் பெற்றிருந்தது. கியூபாவும் வெனிசுலாவுமாகக் கூட்டாகச் சேர்ந்து நமது அமெரிக்காவின் பொலி வேரிய கூட்டணியை (அல்பா) நிறுவி உள்ளன. அதில் பொலிவியா, ஈக்வடார் மற்றும் நிகாரகுவா உள்ளிட்ட எட்டு நாடுகள் உள்ளன. அல்பா, பரஸ்பர சமூக நலன், பண்ட மாற்று, பொருளாதார உதவி ஆகியவற்றின் அடிப்படையிலான பிராந்திய பொருளாதார ஒருங்கிணைப்பு என்ற குறிக்கோளுடன், அமெரிக்க ஆதிக்கத்திலான வர்த்தகத்திற்கு, ஒரு மாற்றைக் கட்டுகிறது. லத்தீன் அமெரிக்க ஒருங்கிணைப்பை ஆழப்படுத்த, அமெரிக்க ஆதிக்கத்திற்கு சவால் விட, அல்பாவுக்கு அடுத்து, அமெரிக்கா கனடா நீங்கலாக அமெரிக்காவின் இறை ஆளுமை கொண்ட 33 நாடு களோடு, லத்தீன் அமெரிக்க மற்றும் கரீபிய மாகாணங் களின் சமூகம் என்ற செலாக் உருவாக்கப்பட்டுள்ளது.

16. ஏகாதிபத்தியத்துக்கு எதிராகப் போராடுகிற, பிராந்தியத்தில் ஒருமைப்பாட்டைக் கட்டியெழுப்புகிற லத்தீன் அமெரிக்க மக்களுக்கு கியூபா தொடர்ந்து மகத்தான ஆதர்ஷ நாடாக இருக்கிறது. கியூப அரசு மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் ஃபிடல் காஸ்ட்ரோ இருந்தது அய்ம்பது ஆண்டுகளுக்குப் பிறகு முடிவுற்றது. ஃபிடல் இடத்தில் தற்போதைய கியூப அதிபரும் கியூப கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் செயலாளருமான ரால் காஸ்ட்ரோ வந்தார். 1991ல் சோவியத் யூனியன் வீழ்ந்தபிறகு, குறிப்பாக கியூப விவசாயம் ஆழமான பாதிப்புக்கு உள்ளானது. 1990 முதல், கியூபா விவசாயத்தில் உயிரின முறைகளை வளர்த்தெடுத்து, உணவு இறையாண்மை பாதை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. கியூபா சமீபத்தில், வரம்புக் குட்பட்ட தனியார் தொழில் முனைவோர் உட்பட சில பொருளாதார சீர்திருத்தங்களை அமல்படுத்தியது. இது கவலைக்குரியது என்றாலும் அதன் தாக்கத்தை மதிப்பிடுவதற்கு இன்னும் பொறுத்திருக்க வேண்டும். அது சீனாவுடன் வர்த்தக உறவுகளை அதிகரித்துள்ளது. வெனிசூலாவுக்குப் பிறகு கியூபாதான் சீனாவின் இரண்டாவது பெரிய வர்த்தகக் கூட்டாளி.

17. வெனிசூலா அதிபர் ஹியூகோ சாவேஸ், 80% பேர் வாக்களித்த தேர்தலில், 10% வாக்குகள் வித்தியாசத்தில், மற்றுமொரு அழுத்தமான வெற்றி பெற்றுள்ளார். 22 மாகாணங்களில் நடந்த தேர்தலில் 20 மாகாணங்களில் பெருவெற்றி பெற்றுள்ளார். சாவேசின் முதல் பதவிக் காலத்தில் துவக்கப்பட்ட சமூகப் பொருளாதார சீர்திருத்தங்கள், விளைவுகள் தரத் துவங்கியுள்ளன. அந்த பிராந்தியத்தில் ஏற்றத்தாழ்வு மட்டம் வெனிசூலாவில்தான் மிகவும் குறைவு. 1996ல் 70.8% இருந்த வறுமை 2010ல் 21% என குறைக்கப்பட்டுவிட்டது. ஆரம்ப சுகாதாரத் திட்டமான பாரியோ அடென்ட்ரோ திட்டம் 7000 மருத்துவமனை களில் 8300 கியூப மருத்துவர்களைக் கொண்டுள்ளது. 14 லட்சம் உயிர்களைக் காப்பாற்றியுள்ளது. 21ஆவது நூற்றாண்டு சோசலிசத்தை உருவாக்குவது என்ற அறிவிக்கப்பட்ட இலக்குடன், வெனிசூலாவில் பொலிவேரிய புரட்சிகர இயக்கப்போக்கு, உள்ளுக்குள் இருந்து முதலாளித்துவ அமைப்பை சீர்திருத்த, அதற்கு சவால்விட துவங்கியுள்ளது. அதிபர் சாவேசின் சமீபத் திய உடல்நலக் குறைவு, ஏகாதிபத்திய சக்திகளுடன் கூட்டு சேர்ந்து வெனிசூலாவின் எதேச்சதிகார சக்திகள், நாட்டை ஸ்திரமின்மைக்குத் தள்ளும் வாய்ப்பை தந்துள்ளது. ஆனால், 1998ல் இருந்து, ஜனநாயகம் ஆழமடைந்து வருவது, வெனிசூலா மக்களின் அரசியல் பங்கேற்பை தீவிரப்படுத்தி, ஸ்திரமின்மை முயற்சிகளுக்கு எதிரான சக்திவாய்ந்த முறிவாக செயல்படுகிறது. உதாரணமாக, 30000க்கும் மேற்பட்ட உள்ளூர் கவுன்சில்களில், அவர்களுடைய உள்ளூர் சமூகத் தேவைகளுக்கு ஏற்றாற்போல், விவாதிக்க, நிதிஒதுக்கீடு செய்ய, அந்த சமூகங்களுக்கு அதிகாரம் தரப்பட்டுள்ளது.

18. லத்தீன் அமெரிக்காவில் நிகழ்ந்துகொண்டிருக் கிற இடதுநோக்கிய நகர்வின் மற்றுமொரு முக்கிய தூணாக பொலிவியா எழுந்துள்ளது. முதலில் 2005 டிசம்பரில் 58% வாக்குகள் பெற்று வெற்றி பெற்று, 2009ல் பொது வாக்கெடுப்பு மூலம் புதிய அரசியல் சாசனத்தை நாடு ஏற்றுக்கொண்ட பிறகு, 64% வாக்கு களுடன் ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டுள்ள அதிபர் ஈவோ மொரேல்ஸ், லத்தீன் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றிருக்கிற இரண்டாவது பழங்குடி இனத்தவர். பொலிவியாவில் பழங்குடி மக்கள் இயக்கம் தொடர்ந்து ஒரு பெரிய பங்காற்றுகிறது.

19. இந்த ஆண்டு பிப்ரவரியில் நடந்த அதிபர் தேர்தலில் பதவியில் இருக்கும் ஈக்வடார் அதிபர் ரஃபேல் கோரியா பெருவெற்றி பெற்று, லத்தீன் அமெரிக்காவில் இடதுசாரிக்கான தொடர்ந்து கொண்டி ருக்கிற பரந்த அடிப்படையிலான வெகுமக்கள் விசையை உறுதிப்படுத்தியுள்ளார்; வலுப்படுத்தியுள்ளார். கியூபாவில் சில வாரங்கள் புற்றுநோய்க்கான மருத்துவம் எடுத்துக்கொண்டு வெனிசூலா திரும்பி யுள்ள வெனிசூலா அதிபர் ஹியூகோ சாவேசுக்கு தனது வெற்றியை அர்ப்பணித்துள்ள கோரியா, ‘மிகவும் கொடூரமான நவதாராளவாத உலகமயத்தை எதிர் கொள்ளஇன்னும் கூடுதல் லத்தீன் அமெரிக்க ஒற்றுமைக்கு அழைப்பு விடுத்துள்ளார்.  உயர்த்தப்பட்ட சமூக செலவினங்கள், சட்ட விரோதமானவை என்று அறிவிக்கப்பட்ட பல லட்சக்கணக்கான மில்லியன் டாலர் அந்நியக் கடனை திருப்பிச் செலுத்தாமல் இருப்பது ஆகியவற்றின் மூலம், முக்கியத்துவம் வாய்ந்த அளவில் வறுமையை குறைத்திருப்பதுடன், கோரியா அரசாங்கம், ஈக்வடாரில் உள்ள விமானத ளத்தை அமெரிக்கப் படைகள் பயன்படுத்துவதற்கு மறுப்பது, ஈக்வடாரின் உள்விவகாரங்களில் தலையிட்ட அமெரிக்க அதிகாரிகளை வெளியேற்றியது மற்றும் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜ÷லியன் அசாங்கேவுக்கு லண்டனில் உள்ள தனது தூதரகத்தில் புகலிடம் அளித் தது போன்ற அதன் முடிவுகளில் பிரதிபலித்துள்ளபடி, அமெரிக்க தலையீட்டுக்கு எதிராக ஒரு துணிச்சலான நிலைப்பாட்டை மேற்கொண்டுள்ளது.

20. லத்தீன் அமெரிக்காவில் நடந்துகொண்டிருக் கிற இடதுநோக்கிய நகர்வு, ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் சோசலிச அணிதிரட்டலின் நீண்டகால மரபில் வேர் கொண்டுள்ளது. ஆயினும் அமெரிக்க ஏகாதி பத்தியத்தின் அச்சுறுத்தல் குறைந்துவிடவில்லை. ஹோண்டுராஸ் அதிபர் மேனுவல் சிலாயாவுக்கு எதிராக ஜ÷ன் 2009ல் நடந்த ராணுவ கவிழ்ப்பு அமெரிக்காவின் வெளிப்படையான மற்றும் மறை முகமான ஆதரவின்றி நடந்திருக்க முடியாது. குறைந்த பட்ச ஊதியத்தை உயர்த்துவது, லத்தீன் அமெரிக்கா வுக்கா  ொலிவேரிய மாற்றுடன் இணைவது போன்ற சில மக்கள் ஆதரவு நடவடிக்கைகளை சிலாயா அமல்படுத்திக் கொண்டிருந்தார். ஆயினும் லத்தீன் அமெரிக்க மக்கள் விழிப்புடன்தான் உள்ளனர். ஆப்பிரிக்க - லத்தீன் அமெரிக்க மற்றும் பழங்குடி மக்களின் தொழிற்சங்கங்கள், விவசாய அமைப்புக்கள், பெண்கள் அமைப்புக்கள் மற்றும் சமூக அமைப்புக்கள் தங்கள் எதேச்சதிகார ஆட்சிகளுக்கு எதிராக, ஏகாதிபத்தியத்துக்கு எதிராக அமைப்பாகிறார்கள்; அணிதிரள்கிறார்கள்.

21. அய்ரோப்பாவின் சில பகுதிகளிலும் இளைஞர் இயக்கத்தின் எழுச்சியைக் காண முடிகிறது; தொழிலா ளர் வர்க்கப் போராட்டங்கள் இடதுசாரிகளின் உள்ளாற் றல்மிக்க மீட்சிக்கு சக்தி தருகின்றன. ஒரு கடுமையான யூரோ பிராந்திய நெருக்கடி, (அய்ரோப்பிய யூனியனின் 17 நாடுகள் யூரோவை தங்கள் பொது நாணயமாக பயன்படுத்துகின்றன. 10 அய்ரோப்பிய யூனியன் உறுப்பு நாடுகள் தங்கள் சொந்த நாணயத்தை பயன்படுத்து கின்றன) இளைஞர்கள் வேலையில்லா விகிதம் 22% என இருக்கும்போது (இத்தாலி, போர்ச்சுகல், ஸ்லோவ கியாவை விட 30%மும், கிரீஸ் மற்றும் ஸ்பெயினை விட 50%மும் கூடுதல்) கடுமையான சிக்கன நடவடிக்கைகளை அரசாங்கங்கள் திணிப்பது என்ற பின்புலத்தில் நடக்கிறது. சமீபத்திய தேர்தல்களில் அய்ரோப்பிய இடதுசாரிகளின் சிறந்த செயல்பாட்டை கிரீசில் காண முடிந்தது. இங்கு 12க்கும் மேற்பட்ட இடதுசாரி குழுக்கள் மற்றும் போக்குகளின் கூட்டணி யான தீவிர இடதுசாரிகள் கூட்டணி என்ற பொருள் கொண்ட சிரிசா, இப்போது ஒரு கட்சியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது முதன்மைக் கட்சியாக எழுவதற்கு நெருக்கமாக வளர்ந்துள்ளது. அதன் வாக்காளர் அடித்தளம் முதன்முதலில் அது பங்கேற்ற 2004 தேர்தல்களில் 3.3% என்று இருந்ததில் இருந்து, 2012 மே மாதத்தில் 16.8% எனவும் 2012 ஜ÷ன் மாதத்தில் 26.9% எனவும் அதிகரித்துள்ளது. 300 உறுப்பினர்கள் கொண்ட கிரேக்க நாடாளுமன்றத்தில் 71 உறுப்பினர்கள் கொண்ட சிரிசாதான் இப்போது முக்கியமான எதிர்க் கட்சி. பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியும் 2012 அதிபர் தேர்தல்களில் குறிப்பிடத்தக்க அளவில் 11.1% வாக்குகள் பெற்றது. 1981ல் இருந்து இதுதான் ஆகக்கூடுதல். அய்ரோப்பாவில் உள்ள இடதுசாரிகளின் மிகப்பெரும் பிரிவினர், அய்ரோப்பிய இடதுசாரிகளின் கட்சி என்று செயல்பட ஒன்றுபட்டுள்ளனர். 2004ல் இது உருவாக்கப் பட்டது. இது வரை மூன்று காங்கிரசுகள் நடத்தியுள்ளது.

22. வரலாற்றுரீதியாக, கடுமையான பொருளாதார நெருக்கடி காலகட்டங்கள், அதிதீவிர வலதுசாரி எழுச்சியை கண்டுள்ளன. அய்ரோப்பிய இடதுசாரிகள், அதிதீவிர வலதுசாரியின், குடிபுகுந்தோருக்கு எதிரான இசுலாமியர்களுக்கு எதிரான இனவாத அரசியலை எதிர்கொள்ள வேண்டும். உதாரணமாக, கிரீஸ் தேர்தல்களும், 7% வாக்குகளும் கிரேக்க நாடாளுமன் றத்தில் 18 இடங்களும் வென்ற, தங்க விடியல் என்ற நவ நாஜி அமைப்பின் எழுச்சியைக் கண்டன.

23. ஆப்பிரிக்காவில், தென்னாப்பிரிக்காவில் உள்ள இனவெறி ஆட்சியை வெற்றிகொள்வதில் இடது சாரிகள் ஒரு முக்கியமான வெற்றி பெற்றுள்ளார்கள். தென்னாப்பிரிக்க கம்யூனிஸ்ட் கட்சி, ஆளுகிற ஆப்ரிக்கன் நேஷனல் காங்கிரஸ் மற்றும் தென்னாப்பி ரிக்க தொழிற்சங்கங்களின் காங்கிரஸ் ஆகிய அமைப்புக்களுடன் ஒரு முத்தரப்பு கூட்டணியில் உள்ளது. ஆனால், தென்னாப்பிரிக்க கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தென்னாப்பிரிக்க தொழிற்சங்கங்களின் காங் கிரஸ் ஆகியவற்றுக்கிடையில் உயிரார்ந்த பிணைப்புக் கள் இருந்தபோதும், ஆப்ரிக்கன் நேஷனல் காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம் நவதாராளவாத அரசியல் வழித்தடத்தை தீவிரமாக அமல்படுத்துகிறது. தொழிலா ளர் போராட்டங்கள் கடுமையான ஒடுக்குமுறையை எதிர்கொள்கின்றன. ஜோஹன்னஸ்பர்க் அருகில் உள்ள மரிக்கானாவில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த 34 பிளாட்டினம் சுரங்கத் தொழிலாளர்கள் அதிர்ச்சிமிக்க விதத்தில் படுகொலை செய்யப்பட்டது, இனவெறி யுக மிருகத்தனத்தின் நினைவுகளை மீண்டும் கொண்டு வருகிறது. ஆப்ரிக்கன் நேஷனல் காங்கிரஸ் அரசாங் கம், வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல, காவல் துறையினருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, 34 சுரங்கத் தொழிலாளர்கள் கொல்லப்பட்ட தற்கு, 78 பேர் படுகாயமுற்றதற்கு காரணமான அரசு மிருகத்தனத்துக்கு, வேலை நிறுத்தம் செய்த தொழிலாளர்கள் மீது குற்றம் சுமத்த இனவெறி யுகத்தின் சட்டம் ஒன்றை பயன்படுத்தியது. தென்னாப்பிரிக்க கம்யூனிஸ்ட் கட்சியும் தென்னாப்பிரிக்க தொழிற்சங்கங் களின் காங்கிரசுடன் இணைக்கப்பட்டுள்ள சுரங்கத் தொழிலாளர்கள் தேசிய சங்கமும் வேலை நிறுத்தம் செய்தவர்களையும் அவர்கள் இணைந்த பிரிந்துபோன சங்கத்தையும் களங்கப்படுத்தின. இந்த நிலையில் தென்னாப்பிரிக்கா, தீவிர தொழிற்சங்கவாதத்தின் ஒரு புதிய கட்ட பிறப்பை சந்திக்கிறது; உண்மையான கம்யூனிஸ்டுகள், பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் மறுகாலனியாக்கத்தின் பெருநிறுவன - ஏகாதிபத்திய உந்துதலை எதிர்ப்பதோடு,  கம்யூனிஸ்டுகளின் ஆதரவுடன் நடக்கிற அரசாங்கத்தையும் எதிர்க்கும் கடமையையும் எதிர்கொள்கின்றனர்.

24. ஆசியாவில், கம்யூனிச இயக்கத்தின் சமீபத் திய ஆகப்பெரிய வெகுமக்கள் முன்னேற்றம் நேபாளத்தில் காணப்பட்டது. அங்கு கம்யூனிஸ்ட் தலைமையிலான வெகுமக்கள் எழுச்சி, முடியாட்சிக்கு முடிவு கட்டுவதில், குடியரசு நோக்கி மாறிச் செல்லும் இயக்கப்போக்கை துவங்குவதில் வெற்றி கண்டது. ஆனால், அரசியல் சாசனத்தை உருவாக்கும் இயக்கப் போக்கு 2008ல் இருந்து ஓரளவே முன்நகர்ந்துள்ளது. இதற்கிடையில் நான்கு பிரதமர்கள் பதவியில் இருந்து விட்டார்கள். கிட்டத்தட்ட சாத்தியமான அனைத்து இணைப்புக்களையும் முயற்சி செய்து பார்த்தாகிவிட் டது. கூட்டணி/கருத்தொற்றுமை அரசியலின் சிக்கல்களுக்கு அப்பால், மாவோயிஸ்ட் ராணுவ ஊழியர்களை உள்வாங்கிக் கொள்ளும் இயக்கப்போக் கும், நேபாள குடியரசில் இருக்கக் கூடிய கூட்ட மைப்பின் முறை மற்றும் அளவு ஆகிய இரண்டு பிரச்சனைகள் உறுத்துகின்றன. முதல் பிரச்சனைக்கு கிட்டத்தட்ட தீர்வு காணப்பட்டுவிட்டது. ஆனால், இரண்டாவது பிரச்சனை, புதிய அமைப்பில் கூடுதல் வாய்ப்புக்கள் எதிர்நோக்கும், இதுவரை உரிமைகள் பறிக்கப்பட்ட, குறைபிரதிநிதித்துவம் கொண்ட பிராந்தியங்கள் மற்றும் சமூக அடையாளங்களால் சூடாக விவாதிக்கப்படுகிறது. இந்த சமயத்தில், அரசிய லமைப்புச் சட்ட அவைக்கான புதிய தேர்தல்களை கண்காணிக்க, பதவியில் இருக்கும் தலைமை நீதிபதியின் தலைமையில் ஓர் இடைக்கால அரசாங்கம் அமைக்க அனைத்து முக்கிய கட்சிகளும் ஒப்புக் கொண்டுள்ள நிலையில், நேபாளத்தில் உள்ள மாவோயிஸ்டுகள் பிளவுக்குள்ளாகியுள்ளனர்.  இந்தியா வுக்கும் நேபாளத்துக்கும் இடையிலான சுமுகமான மற்றும் சமத்துவமான உறவுகள் இருக்க வேண்டும் என்பது நமது நிலைப்பாடு. நேபாள மக்கள், முடியாட்சி எதிர்ப்பு எழுச்சியின் ஆதாயங்களை உறுதிப்படுத்திக் கொள்வதை, நமது நேபாள தோழர்களின் தலைமையில் ஒரு ஜனநாயகக் குடியரசாக முன்செல்வதை காண நாம் விரும்புகிறோம். நேபாள குடியரசை நோக்கி மாறிச் செல்லும் இயக்கப்போக்கை தடுப்பதாகவோ, நேபாளத் தின் மீது எந்தவிதமான இந்திய மேலாதிக்கத்தை திணிப்பதாகவோ இந்திய அரசின் எந்த சாத்தியமான தலையீட்டுக்கு எதிராகவும் நாமும் விழிப்புடனும் உறுதியுடனும் இருக்க வேண்டும்.

25. பாகிஸ்தான் மிகவும் கடுமையான, கொந்த ளிப்பான காலத்தினூடே சென்று கொண்டிருக்கிறது. தீவிரவாதத்தை எதிர்ப்பதில் பாகிஸ்தான் அமெரிக்கா வோடு கூட்டு சேர்ந்துள்ளபோதும் ஆப்கன் நெருக்கடி பாகிஸ்தானுக்குள்ளும் விரவியுள்ளது. அமெரிக்கா தொடர்ந்து பாகிஸ்தானின் இறையாண்மையை மீறுகிறது; நாட்டை நாசகர ஆளில்லா விமானத் தாக்கு தல்கள் மூலம் தூளாக்குகிறது. பாகிஸ்தானில் உள்ள நீதித்துறை கூடுதலான ஆக்கபூர்வ பாத்திரம் ஆற்றுகிறது. சென்ற ஆண்டு அது, ஊழல் வழக்குகள் தொடர்பாக பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி மீது நடவடிக்கை எடுக்காமல் நீதிமன்றத்தை அவ மதித்த குற்றத்துக்காக, பாகிஸ்தான் பிரதமரான பாகிஸ்தான் மக்கள் கட்சியின் யூசுப் ராசா கிலானியை பதவி நீக்கம் செய்தது. தகுதி நீக்கம் செய்தது. இந்த ஜனவரியில், பதவியில் உள்ள பிரதமர் ராசா பெர்வேஸ் அஸ்ரஃப்பை ஊழல் குற்றச்சாட்டுக்களில் கைது செய்ய உத்தரவிட்டது. இதே சமயத்தில், அடுத்த பொதுத் தேர்தல்கள் நெருங்குகின்றன. இது குறித்த காலத்தில் நடத்தப்பட்டால், இதுதான் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசாங்கம், அதற்கு அடுத்த ஆட்சியாளரான, கனடா வில் இருந்து திடீரென்று தோன்றியுள்ள, பாகிஸ்தானை ஓர் ஊழலற்ற மிதவாத அரசாக மாற்றுவதாக வாக்குறுதி அளித்துள்ள, கனடா குடியுரிமை கொண்ட பாகிஸ்தான் ஆலய குரு ஒருவருக்கு வழிவிட்டு, அய்ந்தாண்டு பதவிக் காலத்தை நிறைவு செய்வதில் முதல்முறையாக இருக்கும். இந்தியாவின் அன்னா அசாரே நிகழ்வு போக்கு என்று சிலரால் சொல்லப்படும் தஹீர் உல் கத்ரி நிகழ்வுப்போக்கு, ராணுவத்தின் ஆதரவு கொண்டது என்று பாகிஸ்தானில் பரவலாக நம்பப்படுகிறது.

26. ஆப்கானிஸ்தானில் நடக்கிற அமெரிக்க - நேட்டோ ராணுவ நடவடிக்கை 11 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்துகொண்டிருக்கிறது. அமெரிக்க - நேட்டோ படைகள், வெளியேறும் திட்டம் பற்றியும் 2014க்குள் படைகளை திரும்பப் பெறுவது பற்றியும் இப்போது பேசும்போது, அமெரிக்கா ஆப்கன் தளங்களை சென்றடைய, பயன்படுத்திக் கொள்ள அமெரிக்காவை அனுமதிக்கும், 2014க்குப் பிறகும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகளை நிறுத்தும் சாத்தியப்பாட்டையும் தரும், நீடித்த போர்த்தந்திர கூட்டு ஒப்பந்தம் ஒன்றை அமெரிக்கா ஏற்கனவே ஆப்கா னிஸ்தானுடன் கையொப்பமிட்டுவிட்டது. அமெரிக்கா வின் கூட்டாளி என்ற விதத்தில், இந்தியா, ஏற்கனவே ஆப்கானிஸ்தானில் கூடுதலாக தலை கொடுத்துள்ளது. ஆப்கனிஸ்தானில் மேற்கத்திய தலையீடு குறைவது, ஆப்கானிஸ்தான் தொடர்பாக, இந்தியா - பாகிஸ்தான் இடையிலான அதிகரித்த போட்டிக்கு இட்டுச் செல்லக் கூடும். காஷ்மீர் பிரச்சனையில் இந்தியாவும் பாகிஸ்தானும் ஏற்கனவே ஒரு நிரந்தரமான மோதலில் பூட்டப்பட்டிருக்கும்போது, ஆப்கன் முனையிலான எந்தப் போட்டியும் தீவிரமடைவது, இந்தியா - பாகிஸ்தான் உறவுகளை மேலும் பாழ்படுத்தும். அமெரிக்கத் தலையீட்டை மேலும் ஆழப்படுத்தும். மொத்த பிராந்தியத்தையும் எளிதில் பற்றியெரியக் கூடியதாக மாற்றிவிடும். ஆப்கானிஸ்தானில் இருந்தும் பாகிஸ்தானில் இருந்தும் அமெரிக்க - நேட்டோ ராணுவ நடவடிக்கை முழுமையாக திரும்பப் பெறப் படுவதும், தங்கள் எதிர்காலத்தை தாங்களே தீர்மானித்துக் கொள்ள, இந்த இரண்டு நாடுகளின் இறையாண்மையும் உரிமையும் முழுவதுமாக மீட்கப் படுவதும் இந்த பிராந்தியத்தில் நீடித்த அமைதிக்கான ஓர் அடிப்படை முன்நிபந்தனையாகும். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அமைதியும் நட்பும் ஆகக் கூடுதல் முக்கியமானது என்று நாம் கருதுகிறோம்; இந்தியாவில் தேசவெறிவாத சக்திகளின் பாகிஸ்தானுக்கு எதிரான பிரச்சாரத்துக்கு எதிராக நாம் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும்.

27. கட்டுக்கடங்காத மனிதப் படுகொலை போர் நடவடிக்கை மூலம் இலங்கையின் ராஜபக்சே அரசாங்கம் விடுதலைப் புலிகளை அழித்துவிட்டது. 2012 நவம்பரில் வெளியிடப்பட்ட அய்நா அவையின் உள்விசாரணை அறிக்கை ஒன்று, சாதாரண மக்கள் 70,000 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று மதிப்பிடுகிறது. உலக வங்கியின் மக்கள் தொகை விவரம் ஒன்று, 2009ல் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இறுதிப் போர் நடந்தது முதல், பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் காணவில்லை என்று கண்டுள்ளது. அய்நா மனித உரிமைக் குழு போர்க் குற்றங்கள் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்று இலங்கையை வலியுறுத் தும் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது; ஆனால், இலங்கை அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட ‘கற்ற பாடங்கள் மற்றும் நல்லிணக்கக் குழு, ‘சாதாரண குடிமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்துவதில்லைஎன்ற கொள்கையை இலங்கை ராணுவம் கடைபிடித்த தாகவும் குடிமக்கள் உயிரிழப்பு, உடன்விளைந்த சேதமாகக் கருதப்பட வேண்டும் என்றும் சொல்லி இலங்கை ராணுவம் குற்றமற்றது என்று சொல்கிறது. இலங்கைத் தமிழர்கள் இன்னும் கூட மடிந்து கொண்டி ருக்கும்போது, ‘நல்லிணக்கம்பற்றிய இலங்கை அரசாங்கத்தின் கருத்துரு, இலங்கைத் தமிழர்கள் சிங்கள பேரினவாத ஆதிக்கத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்கிறது. இலங்கைத் தமிழ் சமூகத்தை ஒடுக்குவது என்ற அடிப்படையில் இலங்கையில் ‘நல்லிணக்கம்தொடர முடியாது. இலங்கை தமிழர்களுக்கு எதிரான கொடூரமான போர்க் குற்றங்கள் முழுமையாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப் படுவதை சர்வதேச சமூகம் உறுதி செய்ய வேண்டும்.

28. தனது கிழக்கு அண்டை நாடுகளான பங்களா தேஷ் மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளுடனான இந்தியாவின் உறவுகள் மிகவும் மய்யமான முக்கியத்து வம் வாய்ந்தவை. கடந்த இருபது ஆண்டுகளாக இந்தியா கடைபிடிக்கிற ‘கிழக்கு நோக்கிய பார்வைகொள்கை, இந்தியாவின் அயலுறவுக் கொள்கையின் முக்கிய அம்சமாக எழுந்துள்ளது. ஏசியன் நாடுகளுடன் உறவாட, கூடுதல் பொருளாதார முனைப்பைப் பெற, பங்களாதேஷ், மியான்மர் போன்ற நாடுகளில் கலகக் குழுக்கள் தஞ்சம் பெறுவதைத் தடுப்பதன் மூலம் வடகிழக்கில் உள்ள பதட்டத்தைக் கட்டுப்படுத்த இந்தியா இந்தக் கொள்கையை பயன்படுத்தும் அதே நேரம், அமெரிக்கக் கொள்கையுடனும் சீனாவைக் கட்டுப்படுத்துவது என்ற அதன் போர்த்தந்திர இலக்குடனும் நிச்சயமான ஒன்றுபடுதலும் உள்ளது. கிழக்கத்திய அண்டை நாடுகளுடனான இந்தியாவின் உறவுகள், அமெரிக்கக் கொள்கைகளில் இருந்தும் முன்னுரிமைகளில் இருந்தும் சுதந்திரமானதாகவும் சமத்துவமான பிணைப்புக்கள் மற்றும் பரஸ்பர ஒத்துழைப்பு ஆகியவற்றை அடிப்படைகளாகக் கொண்டும் இருக்க வேண்டும். மியான்மருடன் ஒரு சிறிய அளவிலான எல்லையை பங்களாதேஷ் பகிர்ந்து கொள்வது நீங்கலாக, பங்களாதேஷின் ஒரே அண்டை நாடான இந்தியா, பங்களாதேஷின் கவலைகளை சாதகமாக அணுக வேண்டும்.

29. ‘கிழக்கு நோக்கிய பார்வைஎன்ற கொள்கையை கடைபிடிக்கத் துவங்கியதில் இருந்து, மியான்மரில் ஜனநாயகம் மீட்கப்படுவதற்கான இயக்கத்தை துவக்கத்தில் ஆதரித்த இந்தியா, அங்குள்ள ராணுவ ஆட்சியாளர்களுடன் நெருக்கமான பிணைப்புக்களை ஏற்படுத்தத் துவங்கியது. ஜனநாயக ஆதரவு இயக்கத்தின் தலைவர் ஆங் சூ கி வீட்டுக் காவலில் இருந்து 2010ல் விடுதலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நியாயமான தேர்தல் நடப்பதற்கான வாய்ப்புக்கள் மியான்மரில் முன்னேறியுள்ளன. ஆயினும் நாடு கணிசமான அளவு தொடர்ந்து இன வன்முறையை எதிர்கொள்கிறது. பல்லாயிரக்கணக்கான ரோஹின்யா இசுலாமியர்கள், மியான்மரில் இருந்து வெளியேறி, தாய்லாந்து, பங்களாதேஷ், இந்தியா அல்லது மலேசியா போன்ற அண்டை நாடுகளில் தஞ்சம் புக நிர்ப்பந்தக்கப்படுகிறார்கள்.

30. நாற்பது ஆண்டுகளுக்கு முன் பங்களாதேஷ் விடுதலைப் போராட்டத்தின்போது நடந்த போர்க் குற்றங்களை நிகழ்த்திய குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற சக்திவாய்ந்த வெகு மக்கள் எழுச்சியை பங்களாதேஷில் காண முடிகிறது. இன்றைய சூழலில் விடுதலைப் போரின் உணர்வு மீண்டும் உயிர்த்தெழுவது, வலதுசாரி மற்றும் மத அடிப்படைவாத சக்திகளை திறன்வாய்ந்த விதத்தில் தனிமைப்படுத்துவதோடு, மொத்த பங்களாதேஷையும் மலிவு உழைப்புக்கான வியர்வைக் கூடமாக, பெரு நிறுவனக் கொள்ளையின் பரிசோதனைக் கூடமாக சுருக்கிவிட அச்சுறுத்தும் நவதாராளவாத பொருளாதார வரையறையையும் எதிர்கொள்ளும் உள்ளாற்றல் கொண்டது.

31. தெற்காசிய நாடுகள் மத்தியில் இன்னும் கூடுதல் ஒத்துழைப்பை ஆதரிக்கும் அதே நேரம், தெற்காசிய இடதுசாரிகளுடன் நெருக்கமான உறவுகள் ஏற்படுத்தவும், ஏகாதிபத்திய தலையீடு மற்றும் பெரு நிறுவனக் கொள்ளைக்கு எதிரான மக்கள் போராட்டங்களுடன் ஒருமைப்பாடு உருவாக்கவும் நாம் முயற்சி செய்ய வேண்டும். நேபாளம் மற்றும் பங்களாதேஷ் தோழர்களுடனான சமீபத்திய இருதரப்பு உறவுகள் நமது பரஸ்பர புரிதலை வலுப்படுத்தியுள்ளன. பாகிஸ்தானில் உள்ள இடதுசாரி இயக்கம், உழைக்கும் மக்களின் உடனடி மற்றும் அடிப்படை நலன்கள் மற்றும் விருப்பங்களை பாதுகாக்கும் அதே நேரம், ஏகாதிபத்திய மற்றும் ராணுவ ஆதிக்கம் கொண்ட எதேச்சதிகார அரசின் சதிக்கு எதிராகவும் பயங்கர வாதத்தின் விளைவால் ஏற்படும் சீர்குலைவுகளுக்கு எதிராகவும் போராடும் சவாலை எதிர்கொள்கிறது. இந்தக் கடுமையான போராட்டத்தில் அனைத்து வெற்றிகளும் பெற வேண்டும் என பாகிஸ்தானில் உள்ள இடது மற்றும் ஜனநாயக சக்திகளுக்கு நாம் வாழ்த்து தெரிவிக்கிறோம். சர்வதேச அரசியலில் இடதுசாரி புத்தெழுச்சிக்கான இயக்கப்போக்கு மற்றும் வாய்ப்புக்கு இந்தியாவிலும் தெற்காசியா முழுவதும் இருக்கிற கம்யூனிச இயக்கம் அதன் முழுமையான பங்களிப்பைச் செலுத்த வேண்டும்.

**********

களம்

உழைக்கும் பெண்கள் தின நிகழ்ச்சிகள்

மார்ச் 8 மற்றும் 9 தேதிகளில் உழைக்கும் பெண்கள் தினத்தை ஒட்டி முற்போக்கு பெண்கள் கழகம் நடத்திய அனைத்து நிகழ்ச்சிகளிலும் வெனிசூலா அதிபர் சாவேசுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மாலெ கட்சியின் ஒன்பதாவது காங்கிரசை வெற்றிபெறச் செய்ய அழைப்பு விடுக்கப்பட்டது. அனைத்து நிகழ்ச்சிகளிலும் பெண்கள் மீதான பாலியல் வன்முறைக்கு எதிரான, அச்சமற்ற சுதந்திரத்துக்கான போராட்டங்களை வலுப்படுத்த வேண்டும், தீவிரப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

சென்னை மற்றும் விழுப்புரத்தில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டன. கோவையிலும் குமரியிலும் அறைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. சென்னை மற்றும் விழுப்புரத்தில் நடந்த பொதுக் கூட்டங்களில் முற்போக்கு பெண்கள் கழக மாநிலத் தலைவர் தோழர் தேன்மொழி கலந்துகொண்டார்.

சென்னையில் மார்ச் 8 கூட்டத்தை ஒட்டி பெண்கள் கழக வேலைப் பகுதிகளில் வீடு வீடாக சென்று பெண்களை சந்தித்து துண்டு பிரசுரத்துடன் விரிவான பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. பெண்கள் கழக மாவட்ட முன்னணி தோழர்கள் தேவகி, குப்பாபாய், லில்லி, விஜயகுமாரி ஆகியோர் இந்தப் பிரச்சார வேலைகளில் முக்கிய பங்காற்றினர்.

தோழர் சாவேசுக்கு செவ்வஞ்சல

வெனிசூலா அதிபர் தோழர் சாவேஸ் 06.03.2013 அன்று மறைந்தார். சாவேஸ் மறைவுக்கு மாலெ கட்சியும் அதன் வெகுமக்கள் அமைப்புக்களும் அஞ்சலி செலுத்தின.

சென்னையில் 07.03.2013 அன்று ஏஅய்சிசிடியுவில் இணைக்கப்பட்ட சங்கங்களில் ஆலை வாயில்களில் அஞ்சலிக் கூட்டங்களில் தொழிலாளர்கள் அஞ்சலி செலுத்தினர். அனைத்து ஆலை சங்கக் கொடிகளும் உழைப்போர் உரிமை இயக்கம் மற்றும் கட்டுமான தொழிலாளர் சங்கக் கொடிகளும் ஒருவார காலத்துக்கு அரை கம்பத்தில் பறக்கவிடப்பட்டன. கட்சி கிளைகளிலும் இரங்கல் கூட்டங்கள் நடத்தப்பட்டன. 09.03.2013 அன்று அம்பத்தூர் எஸ்டேட் பேருந்து நிலையம் அருகில் நடந்த அஞ்சலிக் கூட்டம் தோழர் ஜி.முனுசாமி தலைமை தாங்கினார். கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் எஸ்.குமாரசாமி உரையாற்றினார். கூட்டத்தில் புரட்சிகர இளைஞர் கழக தேசிய செயலாளர் தோழர் பாரதி, கட்சி மாவட்ட செயலாளர் எஸ்.சேகர் ஆகியோர் உரையாற்றினர்.

கோவை, பள்ளிபாளையம் மற்றும் குமாரபாளையம், சேலம், திண்டுக்கல் ஆகிய இடங்களிலும் அஞ்சலி கூட்டங்கள் நடத்தப்பட்டன. நெல்லையில் இகக மாலெ நடத்திய அஞ்சலி கூட்டத்தில் இகக மற்றும் இககமா கட்சிகளின் மாவட்டச் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

ஒன்பதாவது காங்கிரசுக்கான நிதி திரட்டும் இயக்கம்

மாலெ கட்சியின் ஒன்பதாவது காங்கிரஸ் செய்தியை மாநிலம் முழுவதும் மக்களிடம் எடுத்துச் சென்று நிதிதிரட்டும் இயக்கம் 11.03.2013 அன்று மாநிலம் முழுவதும் நடத்தப்பட்டது.

கோவை, சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், நாமக்கல், நெல்லை, சேலம், நாகை -தஞ்சை மற்றும் கூடுவாஞ்சேரி ஆகிய இடங்களில் நிதி திரட்டும் இயக்கம் மேற்கொள்ளப்பட்டது. குமரியில் 12.03.2013 அன்று நிதி திரட்டும் இயக்கம் நடத்தப்பட்டது.

ஆலைகளில், வீதிகளில், குடியிருப்புப் பகுதிகளில், லட்சக்கணக்கான உழைக்கும் மக்கள் மத்தியில் ஒன்பதாவது காங்கிரஸ் செய்தி எடுத்துச் செல்லப்பட்டது. ரூபாய் அய்ந்து, பத்து, இருபது, அய்ம்பது என உழைக்கும் மக்கள் மகிழ்ச்சியுடன் அளித்த நிதி பல பத்தாயிரங்கள் என திரண்டது. டிஅய்டிசி ஆலை வாயிலில் மட்டும் தொழிலாளர்கள் ஒரு மணி நேரத்தில் ரூ.11,000 நிதியளித்தனர்.

மாநிலம் முழுவதும் நூற்றுக்கணக்கான தோழர்கள் இயக்கத்தில் ஈடுபடுத்தப்பட்டனர். கட்சி மாநிலக் கமிட்டி உறுப்பினர்களும் ஏஅய்சிசிடியு மாநிலத் தலைவர்களும் இயக்கத்தில் நேரடியாக பங்கேற்றனர் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் எஸ்.குமாரசாமி சென்னையில் டிஅய்டிசி ஆலை வாயிலில் நிதிதிரட்டும் இயக்கத்தில் கலந்துகொண்டார்.

 

சமையல் எரிவாயு உருளை விநியோக முறைகேட்டுக்கு எதிராக

 

திருநாவலூர் ஒன்றியத்தில் இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சமையல் எரிவாயு உருளை விநியோகிக்கும் ஜெயா கேஸ் ஏஜென்சி மற்றும் உளுந்தூர்பேட்டையில் அறுபதுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சமையல் எரிவாயு உருளை விநியோகிக்கும் கலா ஏஜென்சி ஆகிய நிறுவனங்கள், இலவச இணைப்பு உள்ளிட்ட சமையல் எரிவாயு உருளை விநியோகம் செய்வதில் முறைகேடுகளில் ஈடுபடுவதைக் கண்டித்தும் இந்த முறைகேடுகள் தொடர்பாக புகார் கொடுப்பவர்கள் மீது காவல்துறையினர் உதவியுடன் பொய் புகார்கள் பதிவு செய்யப்படுவதைக் கண்டித்தும் மாலெ கட்சி, அவிதொச, முற்போக்கு பெண்கள் கழகம் இணைந்து, பிப்ரவரி 23 அன்று உளுந்தூர்பேட்டையில் காலி சமையல் எரிவாயு உருளைகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்தின. ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து இந்த நிறுவனங்களின் சமையல் எரிவாயு உருளை விநியோகம் முறைப்படுத்தப்பட்டுள்ளது.

**********

 

Search