முன்முயற்சி
மாணவர் போராட்டம் வெற்றி
சென்னை, மேடவாக்கம் காயிதே மில்லத் கலை, அறிவியல் கல்லூரியில் பி.காம்., கூட்டுறவுத் துறையை சேர்ந்த 3ஆவது ஆண்டு படிக்கும் 60 மாணவர்களில் 59 மாணவர்கள், மாணவர்கள் மீது காழ்ப்புணர்ச்சி கொண்ட 3 ஆசிரியர்களால் 5ஆவது பருவத் தேர்வில் செயல்முறை/எழுத்துத் தேர்வு இரண்டிலும் நான்கு பாடங்களில் தோல்வி அடைந்துள்ளனர். மறுதேர்வு நடத்தக் கோரி அகில இந்திய மாணவர் கழகத்தின் வழிகாட்டுதலில் மாணவர்கள் சாலை மறியல் போராட்டம் செய்தனர்.
இந்த சம்பவத்திற்கு முன்பு, காழ்ப்புணர்ச்சி கொண்ட ஓர் ஆசிரியரால் 3 மாணவர்கள் வேண்டுமென்றே தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டனர். அதற்கு எதிராக குரல் எழுப்பிய வகுப்பில் உள்ள அனைத்து மாணவர்களையும் தற்காலிக இடைநீக்கம் செய்தனர். மாணவர்கள் அகில இந்திய மாணவர் கழகத்தை அணுகினர். தோழர் பாரதி கல்லூரி முதல்வரிடம் பேச்சு வார்த்தை நடத்தியதில் ஒட்டுமொத்த மாணவர்களின் இடைநீக்கம் ரத்து செய்யப்பட்டது.
இந்த பின்னணியிலேயே மாணவர்கள் தேர்வில் தோல்வியடைந்துள்ளனர். சம்பவத்திற்கு காரணமான 3 ஆசிரியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மாணவர்களுக்கு மறுதிருத்தம் செய்வதற்கு கல்லூரி நிர்வாகமே ரூ.2 லட்சத்திற்கு மேல் செலுத்த முன்வந்தது. மற்றொருபுறம் போராட்டத்தை கைவிடுமாறு மாணவர்களை மிரட்டியது.
அகில இந்திய மாணவர் கழகம் 12.02.2013 அன்று தேர்வு ஆணையர் திரு.ராமகிருஷ்ணனை சந்தித்து மாணவர்களுக்கு மறுதிருத்தம் செய்ய வேண்டும், சம்மந்தப்பட்ட ஆசிரியர்கள் தண்டிக்கப்பட வேண்டும், தேர்வுக்கு விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்ய வேண்டும், பழிவாங்கல் நடவடிக்கை எடுக்கக் கூடாது, மறுதிருத்தம் செய்ய கட்டணம் வசூலிக்கக் கூடாது என்ற கோரிக்கைகளை முன்வைத்தனர். 14.02.2013 அன்று சென்னை
பல்கலைக்கழகத்தை
முற்றுகையிட்டு,
ஆர்ப்பாட்டம்
நடத்தி
மீண்டும்
தேர்வு
ஆணையரை
சந்தித்தனர்.
ஒரு நாளுக்குள் முடிவு சொல்வதாக ஆணையர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 14.02.2013 அன்று கல்லூரி முதல்வரை புரட்சிகர இளைஞர் கழக தேசிய துணைத்தலைவர் தோழர் பாரதி, புரட்சிகர இளைஞர் கழக திருவள்ளூர் மாவட்ட அமைப்பாளர் தோழர் அன்பு, திருவள்ளூர் மாவட்ட அய்சா அமைப்பாளர் தோழர் சீதா,
ஜனநாயக வழக்கறிஞர் சங்க மாவட்டச் செயலாளர் தோழர் விஜய் ஆகியோர் சந்தித்தனர். மாணவர் பிரச்சனையை தீர்க்காவிடில் போராட்டம் தொடரும் என தெரிவித்தனர். சென்னைப் பல்கலைக்கழகத்தை சந்தித்து முறையிட்டதற்கு கல்லூரி நிர்வாகத் தரப்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
15.02.2013 அன்று தேர்வு ஆணையர் திரு.ராமகிருஷ்ணனை மீண்டும் சந்தித்தபோது மாணவர்களுக்கு மறுதிருத்தம் செய்ய கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது என்றும், அகில இந்திய மாணவர் கழகம் விடுத்த கோரிக்கைகள் அனைத்தையும் சென்னை பல்கலைக்கழகம் ஏற்றுக் கொள்வதாகவும் தெரிவித்தார். மறுதிருத்தத்துக்கான நடவடிக் கைகள் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன. இந்த போராட்டத்தில் 60 மாணவர்களில் 35க்கும் மேற்பட்ட மாணவிகள் முன்னணி பங்காற்றி னர். மாணவர்களின் போராட்டத் தோடு ஒன்றிணைந்து செயல்பட்ட அகில இந்திய மாணவர் கழகத்து டன் தொடர்ந்து செயல்பட மாண வர்கள் விருப்பம் தெரிவித்தனர்.
மலர்விழி
*********************************************************************************************