COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Sunday, June 23, 2013

மார்ச் - (1-15)~6

நகல் ஆவணம்
விவசாய மற்றும் பிற கிராமப்புற போராட்டங்கள்
(2013, ஏப்ரல் 2 - 6 தேதிகளில் ராஞ்சியில் நடக்கவுள்ள இகக மாலெ (விடுதலை) 9ஆவது கட்சி காங்கிரசில் விவாதிக்கப்படவுள்ள நகல் தீர்மானம் தரப்படுகிறது. வாசகர் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன)
1. விவசாய நெருக்கடி தொடர்ந்து பரவு கிறது. ஆழமடைகிறது. மத்திய மாநில அரசுகள், இந்த நெருக்கடியின் கட்டமைப்பு பரிமாணங் களை எதிர்கொள்வதற்கு பதிலாக, விவசாயத் தில் பொது முதலீட்டை அதிகரிப்பதன் மூலம், விவசாய மக்கள் தொகைக்கு இன்னமும் மேலான உள்கட்டுமான வசதிகளை உருவாக்கு வதன் மூலம், உண்மையான உற்பத்தியாளர் களின் நிலைமைகளை மேம்படுத்தக் கூடிய, நிலம் மற்றும் இதர விவசாய உறவுகளின் முற்போக்கு சீர்திருத்தங்களை மேற்கொள்ளா மல் விவசாய அரங்கில் தொடர்ந்து தமது நவதாராளவாத கொள்கைகளை முன்தள்ளு கின்றன. இதனால் இந்திய விவசாயத்தின் நெருக்கடியும் கிராமப்புற விவசாயிகள் உள்ளிட்ட உண்மையான உற்பத்தியாளர்களின் அவல நிலையும் மேலும் மோசமடைகிறது. தேர்தல் நேரங்களில் வாக்குக் கைப்பற்றும் தந்திரமாக எப்போதாவது அறிவிக்கப்படும் கடன் தள்ளுபடி போன்ற அரசாங்கத்தின் அடையாள நடவடிக்கைகள் கடன் சுமையால் பீடிக்கப்பட்டுள்ள விவசாய சமூகத்துக்கு எந்த நிவாரணமும் அளிப்பதில்லை. விவசாய தற்கொலை என்ற அவமானம் தடையின்றி தொடர்கிறது.
2. விவசாய நிலம் பெருமளவில் கையகப் படுத்தப்படுவதும் விவசாய பயன்பாட்டில் இருந்து விவசாயம் அல்லாத பயன்பாட்டுக்கு திருப்பிவிடப்படுவதும், உணவுப் பாதுகாப்புக்கு ஒரு கடுமையான அச்சுறுத்தலாக மாறியுள்ளது. மண் அரிப்பு, பாலைமயமாதல், உப்புத்தன்மை அதிகரிப்பு, மண் முன்னேற்றம் மற்றும் நில மீட்சியை உறுதி செய்ய திட்டவட்டமான திறன்வாய்ந்த நடவடிக்கைகள் இல்லாமை ஆகியவற்றால் நிகர விளைநில இருப்பு மேலும் குறைந்து கொண்டே இருக்கிறது. உணவு தானிய உற்பத்தியில் சுயசார்பு என பெருமை பேசப்பட்ட நிலை மாறி உணவு இறக்குமதியை பெருமளவில் சார்ந்திருக்க வேண்டியதாய் உள்ளது. 2000க்குப் பிந்தைய உலகளாவிய நிலபேரங்கள் பற்றிய ஓர் ஆய்வு, இந்தியா முதல் பத்து இடங்களில் இருப்பதாகக் காட்டு கிறது. இந்தியாவில் 46 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலம் இழக்கப்பட்டுள்ளது. (உலகம் முழுவதும் 7 கோடியே 2 லட்சம் ஹெக்டேர் கள்). நாடெங்கும் விவசாயிகள் மற்றும் பழங் குடியினரின் கடுமையான எதிர்ப்பின் முன்னால் மத்திய, மாநில அரசாங்கங்கள் தங்களது மிகவும் அவப்புகழ்பெற்ற நிலப்பறி திட்டங்களில் சிலவற்றை கைவிடவோ, தள்ளிவைக்கவோ நேர்ந்தது. மிகவும் குறிப்பிடத்தக்க உதாரணங் களாக மேற்குவங்கத்தில் நந்திகிராம், ஒடிஷாவில் ஜகத்சிங்பூர் (போஸ்கோ) மற்றும் நியாம்கிரி (வேதாந்தா), மகாராஷ்டிராவில் ராய்காட் (ரிலையன்ஸ்) ஆகியவற்றை காண முடியும். மிக வும் சமீபத்தில் மகாராஷ்டிரா மாநில அரசாங் கம் 9000 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்படுதலுக்கு இட்டுச் செல்லப்பட்டிருக்கும் நான்கு உத்தேச சிறப்பு மண்டலத் திட்டங் களை ரத்து செய்ய நேர்ந்தது. நாட்டின் பல்வேறு இடங்களில் நிலம் இழப்பவர்கள் போராடி கூடுதல் தொகைகள் அல்லது இழப்பீடு பெறுகிறார்கள். ஆனால் பல இடங் களில் நில ஆர்ஜிதத்தோடு தொடர்புடைய திட்டமே சட்டப் போராட்டத்தில் சிக்கியுள்ள தால் மொத்த விவகாரமும் கிடப்பில் உள்ளது. சிங்கூர் மிகவும் குறிப்பிடத்தக்க நிகழ்வு.
3. மேற்கு வங்கத்தில் சிங்கூர், நந்திகிராம் நிகழ்வுகளால் எழுந்த விவசாய எதிர்ப்பு, மக்கள் வெடிப்புக்கள் ஆகியவற்றால் மேற்கு வங்கத் தில் மார்க்சிஸ்ட் கட்சியும் இடதுமுன்னணி அரசாங்கமும் சந்தித்த அழுத்தந்திருத்தமான தோல்வி, அரசு தலைமையில் நடக்கும் நிலம் கையகப்படுத்துதலின் அரசியல் விலை ஆகக் கூடுதல் என்பதை உணர்த்தியுள்ளது. அதனால் ஆளும் வர்க்கங்கள் கட்டாய நிலம் கையகப் படுத்துதலில் அரசின் நேரடி பங்கு பற்றி தயக் கம் கொண்டுள்ளன. அய்முகூ அமைச்சரவை ஒப்புதல் தந்துள்ள திருத்தப்பட்ட நிலம் கையகப்படுத்துதல் மசோதா நிலம் கையகப் படுத்துதலில் பெருந்தொழில் குழும துறைக்கு நேரடிப் பாத்திரத்தை அளிக்கிறது. மேலான நஷ்ட ஈடு என்ற வாக்குறுதியுடன் அரசு ஓர் ஊக்குவிக்கும் பாத்திரம் ஆற்றுகிறது. இந்திய விவசாயம் மீதும் நிலம் சார்ந்துள்ள மக்கள் மீதும் ஒரு போரையே தொடுத்துள்ள அவப் புகழ்பெற்ற 1894 நிலம் கையகப்படுத்துதல் சட்டம் மற்றும் 2005 சிறப்புப் பொருளாதார மண்டலச் சட்டம் ஆகியவற்றை ரத்து செய்வ தற்கு மாறாக, நில குற்ற கும்பல், நில வணிகத் திமிங்கலங்கள் மற்றும் பிற பெருந்தொழில் குழும நலன்களுக்கு சுதந்திரமாகச் செயல்பட வாய்ப்புத் தந்து பெருந்தொழில் குழும நிலப் பறியை முன்னேற்றுகிறது. உற்பத்தியின் பல கேந்திரத் துறைகளில் மூலதனம் ஓர் ஆழமான நீடித்த நெருக்கடியை சந்திக்கும்போது அரி யானா மற்றும் ராஜஸ்தானில் ராபர்ட் வாத்ரா, டிஎல்எஃப் நிலப்பரிமாற்ற நடவடிக்கைகள், மகாராஷ்டிராவில் முன்னாள் பாஜக தலைவர் நிதின் கட்கரி நிலப்பரிமாற்ற நடவடிக்கைகள் ஆகியவை, நிகழும் ‘நில மோக வேகத்தின்பின்னால் உள்ள அரசியல் செல்வாக்கின் வீச்சை புலப்படுத்துகின்றன.
4. நாடெங்கும் விவசாய இயக்கத்தின் கேந்திரமான நிகழ்ச்சிநிரல் ‘நிலமோக வேகத்தைஎதிர்த்திடுவது மற்றும் விவசாய நிலத்தை பெரும்தொழில் குழும துறையின் பிடிகளில் இருந்து மீட்பது என்பதாக உள்ளது. இந்த எதிர்ப்பில் விவசாயிகள் தனித்து விடப் படுவதில்லை. நிலம் கையகப்படுத்துதலுக்கு எதிரான போராட்டங்கள் எங்கேயும் எப்போ தும் ஒரு பரந்துபட்ட போர்க்குணமிக்க பண்பை அடைவதை அனுபவங்கள் சுட்டுகின் றன. பழங்குடியினர் இந்த எதிர்ப்பில் ஒரு வீரமிக்க பங்காற்றுகின்றனர். இந்தியாவின் பழங்குடி மக்கள் தொகையினருக்கு இருப்பிட மாக இருக்கிற கனிமவளப் பகுதிகள் நிலம் கையகப்படுத்துதல் மற்றும் சுரங்கச் சூறைய ôடலின் இருபக்கங்களாக எழுந்துள்ளன. இந்த அசிங்கம் பிடித்த நாணயத்தின் இருபக்கங் களான பெருந்தொழில் குழும சூறையாடலும் ஆட்கொல்லி திரட்சியும் பழங்குடியினர், அவர்கள் இருப்பிடங்களில் இருந்து முறை சார்ந்த விதத்தில் விரட்டப்படுவதற்கு இட்டுச் செல்கின்றன. விவசாய நிலத்தைக் காப்பதற் கான போராட்டம் பழங்குடி மக்களின் நில வெளியேற்ற எதிர்ப்புப் போராட்டங்களோடு நெருக்கமாக இணைந்து செயல்பட வேண்டும். இரட்டை இலக்குகளாக நில மற்றும் சுரங்கக் குற்ற கும்பல்கள் வைக்கப்பட வேண்டும். ஒன்றுபட்ட போராட்டங்களில் உழைக்கும் மக்களின் மிகப்பரந்த பிரிவினரை அணிதிரட்ட விவசாய மற்றும் வன நிலத்துக்கு சட்டப்பாது காப்பு மற்றும் அனைத்து கனிம வள ஆதாரங் களும் தேசியமயமாக்கப்பட வேண்டும் என்பவை போர்த்தந்திரத்தன்மை வாய்ந்த முழக்கங்களாக எழுப்பப்பட வேண்டும். பல இடங்களில் மக்கள் வன விலங்குகள் பாது காப்பு மற்றும் சுற்றுலா முன்னேற்றம் என்ற பெயராலும் வெளியேற்றப்படுகிறார்கள். பொதுவாக விவசாயத்தையும் குறிப்பாக சிறுவீத விவசாயத்தையும் வீசியெறியப்பட வேண்டிய ஒரு சுமையாகக் கருதுகிற, நிகழும் பெருந்தொழில் குழும சார்பு வளர்ச்சி என்ற பேரழிவுமிக்க பாதையை எதிர்த்திடும்போதே ஒரு மக்கள் சார்பு வளர்ச்சிப் பாதைக்கான மேலும் பரந்ததொரு போராட்டத்தில் சாரமான மற்றும் பிரிக்க முடியாத பகுதியாக விவசாய நிலத்தைக் காப்பது மற்றும் விவசாய மக்கள் தொகையின் உரிமைகளை பாதுகாப்பது என்ற கடமைகள் கையிலெடுக்கப்பட வேண் டும். நமது வேலைப்பகுதிகளில் கட்டாய நிலப்பறிக்கு எதிரான செயலூக்கமான எதிர்ப்பை வளர்த்தெடுக்கும் ஒவ்வொரு பிரச்சனையிலும் நாம் இந்த கையகப்படுத்துதல் எதிர்ப்புப் போராட்டங்களில் நமது தலை யீட்டை மேலும் விரிவுபடுத்த, தீவிரப்படுத்த போராடுகிற மக்களோடு நெருக்கமான பிணைப்புக்களை ஏற்படுத்த எல்லா முயற்சி களும் எடுக்க வேண்டும்.
5. அரசு மறுவிநியோக நிலச்சீர்திருத்த நிகழ்ச்சிநிரலை கைவிட்டுவிட்டது. அந்த நிகழ்ச்சிநிரலின் மீது ஆர்வம் இருப்பதாக காட்டிக்கொள்வதற்காக அவ்வப்போது மத்திய, மாநில அரசுகள் சில ஆணையங்களை அமைக் கின்றன. ஆனால், வெகுசீக்கிரமே அவற்றின் அறிக்கைகள் குப்பைத் தொட்டிக்குச் செல்கின் றன. ஜனவரி 2008ல் பிரதமர் தலைமையில் உருவாக்கப்பட்ட நிலச்சீர்திருத்தங்களுக்கான தேசிய கவுன்சில் 2012 முடிந்தபிறகும் ஒரு கூட்டம் கூட நடத்தவில்லை. அரசு விவசாய உறவுகள் மற்றும் நிலச்சீர்திருத்தங்களின் முடிவு பெறாத கடமை குழுவால் அளிக்கப்பட்ட பரிந்துரைகள் குப்பையில் கிடக்கின்றன. பீகாரில் பந்தோபாத்யாய் ஆணையத்தின் குறைந்தபட்ச பரிந்துரைகளைக் கூட அமல் படுத்துவதில் இருந்து நிதிஷ்குமார் அரசாங்கம் ஒதுங்கிக் கொண்டுள்ளது. பெரிதாகப் பேசப் பட்ட வனஉரிமைகள் சட்டம் 2006 உண்மை யில் ஒரு நிலச்சீர்திருத்தங்கள் சட்டமல்ல; அது குறைந்த பட்சம் 75 ஆண்டுகளாக வனத்தில் குடியிருந்து வாழ்பவர்கள் மற்றும் பழங்குடியி னர் கைவசம் உள்ள நிலத்துக்கு மட்டுமே சட்ட அங்கீகாரம் தருகிறது. ஆனால் இந்த சட்டமும் கூட அமலாக்கப்படுவதற்கு மாறாக, அதிகமாக மீறப்படுகிறது. மறுவிநியோக நிலச்சீர்திருத்தங் கள் கைவிடப்பட்டுள்ளபோது, அதிகாரபூர்வ மாகவோ அல்லது பல பத்தாண்டுகள் நிலப் போராட்டங்கள் மூலமாகவோ மேற்கொள்ளப் பட்ட நிலச்சீர்திருத்தங்களை பின்னோக்கித் திருப்பி வறிய விவசாயிகள் பெற்றிருந்த ஆதாயங்களையும் கொள்ளையடிக்கப் பார்க்கி றார்கள். புரட்சிகர விவசாய இயக்கம் துணிச் சலாக நிலப்போராட்ட ஆதாயங்களை பாது காத்திட வேண்டும். நிலச்சீர்திருத்த நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்க வேண்டும். அதற்கு, நிலவு கிற அனைத்து நிலச்சீர்திருத்தச் சட்டங்களின் கறாரான அமலாக்கம், அனைத்து உச்சவரம்பு உபரி, பினாமி மற்றும் சட்டவிரோதமாக பறிக்கப்பட்டுள்ள நிலத்தின் மறுவிநியோகம், நில உச்சவரம்பைக் குறைப்பது, நிலத்தோடு நேரடித் தொடர்பில்லாத (ஆப்சென்டி) நிலப்பிரபுத்துவ முறையை, கோயில்கள், அறக் கட்டளைகள் பெயரால் நிலங்கள் அபகரிக்கப் பட்டு குவிக்கப்பட்டுள்ள முறையை ஒழித்துக் கட்டுவது, குடியிருப்பு நில உரிமைகளை பெற்றுத் தருவது ஆகியவற்றுக்காக நிர்ப்பந் திக்க வேண்டும்.
6. குத்தகை சீர்திருத்தம் மற்றும் குத்தகை உரிமை குறித்த பிரச்சனை புரட்சிகர விவசாய இயக்க நிகழ்ச்சிநிரலில் உயர் முன்னுரிமை பெற்றிருக்க வேண்டும். அதிகாரபூர்வ குத்தகை சீர்திருத்தம் என்பது குத்தகைதாரர்களுக்கு நிலத்தை சொந்தமாக்குவதற்கு பதிலாக குத்த கைதாரர் பாதுகாப்பு, குத்தகை நிபந்தனைகள் முன்னேற்றம் என்பதாக குறுக்கப்பட்டிருக் கிறது. குத்தகைதாரர்களுக்கு குறைந்தபட்ச உரிமையான கட்டாயப்பதிவு வாரிசுரிமை உழவடை உரிமை மற்றும் நிலச் சொந்தக்காரர் களுக்கு வழங்குவது போல் மானியம், பிற வசதிகளை குத்தகைதாரர்களுக்கு வழங்குவ தற்கு கூட அரசாங்கம் தவறிவிட்டது. வார சாகுபடி முறை, அதிகரித்த அளவில் பண வாடகை முறையை நோக்கிச் சென்று கொண் டிருக்கிறது. குத்தகை விவசாயிகளோ அநேக வழிகளில் நிலத்துக்காக மட்டுமின்றி கடன் மற்றும் இதர இடுபொருட்களுக்காக நிலச் சொந்தக்காரர்களை சார்ந்திருக்க வேண்டியுள் ளது. இவ்வாறு அவர்கள் பல்வேறு வழிகளில் குத்தகை அடிமைத்தனத்தில் சிக்கிக் கொள்கி றார்கள். கோவில் மற்றும் மத அறக்கட்டளை களின் நிர்வாகிகள் நிலப்பிரபுக்கள் போல் நடந்து கொள்கிறார்கள். குத்தகைதாரர்களை ‘குடிகளைப் போல் நடத்துகிறார்கள். பீகாரிலும் இன்னும் பல மாநிலங்களிலும் குத்தகைதாரர் சட்டங்கள் அமல்படுத்தப் படாமலேயே இருக்கின்றன. குத்தகை வாய் மொழியாகவும் மறைமுகமாகவுமே உள்ளது. குத்தகைகளை முறைப்படுத்துவதற்கான முறை ஏதுமில்லை. குத்தகைதாரர்களுக்கு கடன், மானியம், விவசாயம் பொய்த்துப்போகும் சமயங்களில் இழப்பீடு, பயிர்க்காப்பீடு, அரசாங்க விலைக்கு விற்பது ஆகியவை மறுக்கப் படுகின்றன. பீகாரில் உள்ள நிலப்பிரபுத்துவ சக்திகள், குத்தகைப் பதிவு, மற்றும் சீர்திருத்தம் பற்றிய பந்தோபாத்யாயா பரிந்துரைகளை, சிறு நிலச் சொந்தக்காரர்கள் மத்தியில் பீதியைக் கிளப்பிவிட்டு தடுத்து நிறுத்துவதில் வெற்றி பெற்றுள்ளார்கள். குத்தகைதாரர்களும் கூட அமைப்பாகாமலும் நிலப்பிரபுத்துவ தாக்கு தலை பின்னுக்கு தள்ளும் நம்பிக்கையற்றவர் களாகவும் உள்ளனர். குத்தகைதாரர்கள் அவர் கள் நலனை பாதிக்கும் ஒவ்வொரு பிரச்சனை யிலும் அமைப்புரீதியான முறையில் அணி திரட்டப்பட வேண்டும். அவர்களது கோரிக் கைகளை நிறைவேற்றுமாறும் அவர்களது உரிமைகளை அங்கீகரிக்குமாறும் அரசாங்கத்தின் மீது நிர்ப்பந்தம் செலுத்தப்பட வேண்டும். நீடித்த மற்றும் விடாப்பிடியான பிரச்சாரம் மற்றும் கிளர்ச்சிகள் மூலம் குத்தகைதாரர் மத்தியில் நம்பிக்கையை உசுப்பி விட முடியு மானால் அவர்கள் தங்களது போராட்டங்களில் பெருத்த உற்சாகத்தையும் விடாப்பிடியான உறுதியையும் காட்டுகிறார்கள். புரட்சிகர விவசாய இயக்கம், நிலப்பிரபுத்துவ தாக்குதல் களையும் அரசாங்க அலட்சியத்தையும் தோற்கடிக்க குத்தகைதாரர்களை சக்திமிக்க வகையில் தீர்மானகரமான போராட்டங்களில் திரட்டுவதை ஒரு முக்கிய விசயமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
7. மே 2010ல் அகில இந்திய விவசாயிகள் மகா சபா உருவாக்கப்பட்டதானது, அனைத் தும் தழுவிய விவசாய நெருக்கடி மற்றும் விவசாயத்தின் மீது பெருமுதலாளித்துவ - ஏகாதிபத்திய படையெடுப்பு என்ற பின்னணி யில் விவசாய இயக்கத்தை நாடு தழுவிய அளவில் புத்துயிரூட்டவும் சிறு விவசாயி விவசாயத்தை பாதுகாப்பதற்குமான முக்கிய மான நடவடிக்கையாகும். அகில இந்திய விவசாயிகள் மகா சபா, விவசாய நெருக்கடியின்  பல்வேறு பரிமாணங்கள் மீது வினையாற்றத் தொடங்கியிருக்கிறது. கட்டாய நிலக் கையகப் படுத்தல், நீர்ப்பாசனம், மின்சாரம், டீசல், விதைகள், உரம், நேரடி உற்பத்தியாளர்களி டமிருந்து கட்டுப்படியான விலையில் விளை பொருள் மற்றும் பால் கொள்முதல் செய்வது போன்ற பிரச்சனைகளை கையிலெடுத்து வருகிறது. தேசிய அளவில் காலக்கிரமப்படி யான இயக்கங்களை எடுத்து வருகிற அதே வேளை, துயரத்துக்கு ஆளாகியுள்ள பரந்த விவசாய சமூகத்தை ஈடுபடுத்தியும் ஏழை, நடுத்தர விவசாயிகளை, குத்தகைதாரர்களை அவர்களது குறிப்பான கோரிக்கைகளின் மீதும் சக்திமிக்க துடிப்பான உள்ளூர் போராட்டங் களை கட்டமைக்கும் கடமைக்கு நாம் மாபெ ரும் முக்கியத்துவமளித்திட வேண்டும். உரம், நீர், மின்சாரம் உள்ளிட்டவைகள் காலத்தே கிடைக்கச் செய்யும் பிரச்சனையாகட்டும் விளைபொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்வதாகட்டும் அரசாங்கத்தால் தீர்மானிக்கப் படும் குறைந்த பட்ச ஆதார விலை பற்றிய பிரச்சனையாகட்டும் நாடு முழுவதும் விவசாயி கள் கிளர்ச்சிகளில் கிளர்ந்தெழுகிறார்கள். நாம், சக்திமிக்க வகையில் தலையிட்டு, நிர்வாகம் அவர்களது கோரிக்கைகளை சரியாக தீர்த்து வைக்குமாறு கட்டாயப்படுத்த வேண்டும். கட்டமைக்கப்பட்ட புள்ளிகள் அல்லது பகுதி களைக் கொண்டதும் நீடித்த சக்திமிக்க விவசா யிகள் இயக்கமானதுமான விவசாயிகள் எதிர்ப் பின் வெகுமக்கள் மேடையாக அகில இந்திய விவசாயிகள் மகாசபையை எழுந்து நிற்கச் செய்வதை நாம் உறுதி செய்தாக வேண்டும்.
8. விவசாய நெருக்கடியும் விவசாயத்தில் வளர்ந்து வரும் பெரும் தொழில் குழும நுழை வும் இயந்திரமயமாக்கலும் விவசாய வேலை வாய்ப்பில் சரிவைக் கொண்டு வந்துள்ள 21ஆம் நூற்றாண்டின் முதல் பத்தாண்டு, ஆண்டுக்கு 0.13% வேலை வாய்ப்பில் சரிவைக் கண்டது. இந்த பத்தாண்டின் பிற்பாதியில் இன்னும் அழுத்தமான அளவில் 1.63% என்பதாகக் குறைந்து போனது. இதே காலகட்டத்தில் (2004 - 05/2009 - 10) விவசாயமல்லாத பொரு ளாதாரத்தின் ஒப்பீட்டளவிலான வளர்ச்சியின்  காரணமாக 2.8% என்ற அளவில் கிராமப்புற வேலைவாய்ப்பு வளர்ந்தது. இந்த மாறுதல், கிராமப்புற தேசிய உள்நாட்டு உற்பத்தியில் பிரதிபலிக்கிறது. (விவசாயத்தின் பங்கு திட்ட வட்டமாக குறைந்து கொண்டே வருகிறது. விவசாயமல்லாத துறையின் வளர்ச்சி 1970 - 71ல் 28%லிருந்து 2004 - 05ல் 62%ஆக அதிகரித்துள்ளது). மேலும் கிராமப்புற வேலை வாய்ப்பு கட்டமைப்பிலும் இது பிரதிபலிக்கி றது. விவசாயமல்லாத துறையில் வேலை வாய்ப்பு 1972 - 73ல் 28.51 மில்லியன் அல்லது 15% ஆக இருந்து 2009 - 10ல் 107.51 மில்லியனாக அல்லது 32% ஆக அதிகரித்திருக் கிறது. முக்கியமான விவசாயமல்லாத துறை களாக வர்த்தகம், கட்டுமானம், போக்குவரத்து, நிதி சேவை மற்றும் சுகாதாரம், கல்வி, உள் ளிட்ட இதர சமூகத் துறைகள் தொடர்பான அரை அல்லது துணை அரசாங்க நிறுவனங்கள் ஆகியவை முன்வந்துள்ளன. ஆனாலும் விவசாயமல்லாத கிராமப்புற பொருளாதாரம் இன்னமும் கூட வளர்ந்துவரும் கிராமப்புற உழைப்பு சக்தியை ஈர்த்துக் கொள்ளும் நிலையில் இல்லாததால் வேலை வாய்ப்பின்மையும் வேலை தேடி வெளியேறுதலும் அதிகரித்து வருகிறது. விவசாயத் தொழிலாளர் பிரச்சனை களுக்கு கவனம் குவிக்கும் அதே சமயம், விவசா யமல்லாத கிராமப்புறத் தொழிலாளர்கள், ஊழியர்களின் உடனடி கோரிக்கைகள் மீது அவர்களைத் திரட்டுவதற்கும் அதிகரித்த கவனம் செலுத்தியாக வேண்டும். கிராமப்புற கட்டுமானத் தொழில், மணல் அள்ளுதல் (பீகார்), அரிசி ஆலைத் தொழிலாளர்கள் (கர்நாடகா), குளிர்பதன கிட்டங்கித் தொழிலாளர் கள் (மேற்குவங்கம்), பல மாநிலங்களில் சமூகத் துறைகளான ஆஷா, அங்கன்வாடி, மதிய உணவுத் திட்டப் பெண் தொழிலாளர்கள் மத்தியில் நல்ல துவக்கம் நிகழ்த்தப்பட்டுள்ளது.
9. உண்மைக் கூலியில் அல்லது விவசாயத் தொழிலாளர்களின் வாங்கும் சக்தியில் திட்டவட்டமான அரிப்பு இல்லாவிட்டாலும் கூட சிறிதளவே வளர்ச்சி காணப்படுகிறது. பெரும்பா லான மாநிலங்களில் விவசாயக் கூலி, அதிகார பூர்வ கூலிக்கு பின் தங்கியதாகவே உள்ளது. விவசாயக் கூலியில் பால் வேறுபாடு கசப்பான யதார்த்தமாகவே உள்ளது. பெண்கள் பெறும் கூலி, ஆண்கள் பெறும் கூலியில் 90 சதமாக, 50 சதமாகக் கூட இருக்கிறது. ஆண்கள் வேலை தேடி வெளியேறிவரும் நிலையில் விவசாயக் கூலி பெண்மயமாகி வரும் நிலையிலும் கூட பெண் கூலி நிலைமை இவ்வாறுதான் உள்ளது. 95% பெண் விவசாய கூலித் தொழிலாளர்கள் குறைந்தபட்ச கூலியை விடவும் குறைவான கூலியை பெற்று வருவதாக அமைப்புசாரா துறையின் தேசிய ஆணையம் (2007) சுட்டிக் காட்டுகிறது. எனவே, விவசாயத் தொழிலாளர் களது கூலிப் போராட்டம் மிகவும் முக்கியமான தாகவே இருக்கிறது. ஆனால் இத்தகைய போராட்டங்கள் இன்னும் உள்ளூர் தன்மை கொண்டதாகவும் தன்னெழுச்சியானதாக வுமே உள்ளன. அவிதொச அழைப்பு விடுத்த ஜூலை 7, 2010, முதல் முதலான அகில இந்திய கிராமப்புற தொழிலாளர் வேலை நிறுத்தம் மிகவும் உற்சாகமானதாக இருந்தது. மேலான கூலி, வாழ்நிலை முன்னேற்றம், சமூகப்பாது காப்பு ஆகியவற்றுக்கான போராட்டங்கள் அடிக்கடியும் பெரிய அளவிலும் நடத்தப்பட வேண்டும்.
10. அய்முகூ அரசாங்கம், கிராமப்புற வறுமை மற்றும் வேலை இல்லாத் திண்டாட் டத்திற்கான தீர்வாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை அறிமுகப் படுத்தியுள்ளது. தேசிய மாதிரி புள்ளி விவர அமைப்பு நடத்திய ஓர் ஆய்வின் படி ஜ÷ன் 2009 முதல் ஜ÷லை 2010 வரை (தேசிய மாதிரி புள்ளி விவர அமைப்பு 66வது சுற்று) இத் திட்டத்தின் கீழ் வெறும் 24% பேர் மட்டுமே ஏதோ கொஞ்சம் வேலை பெற்றிருக்கிறார்கள். (மிகக் குறைவாக மகாராஷ்ட்ரா 4%, பஞ்சாப் ஹரியானா 5%, கர்நாடகா 8%, சட்டிஸ்கார் 10%ம், கேரளா 11%, உத்தரபிரதேசம் மற்றும் ஜார்க்கண்ட் 16%) இந்த காலகட்டத்தில் பெற்ற சராசரி மனித நாட்கள் 17 நாட்கள் மட்டுமே (மேற்குவங்கம் 17, ஜார்க்கண்ட் 23, பீகார் 24, உத்தரபிரதேசம் 31). உண்மைக் கூலி, பெரும் பாலும் ஒரே சீராக அறிவிக்கப்பட்டக் கூலியை விடக் குறைவாகவே வழங்கப்படுகிறது. கூலி வழங்குவது ஒரு விதி போலவே, தாமதமாக வழங்கப்படுகிறது. வேலை இல்லா காலப்படி அறவே கொடுக்கப்படுவதில்லை. 1000 குடும்பங்களுக்கு 193 பேர் மட்டுமே வேலை அட்டை வைத்திருந்த போதும் கூட அவர் களுக்கும் கூட வேலை கிடைக்கவில்லை. (பீகாரில் வேலை அட்டை வைத்திருப்பவரின் எண்ணிக்கை 1000க்கு 344). 1000 கிராமப்புற குடும்பங்களில் 347 குடும்பங்கள் மட்டுமே வேலை அட்டை வைத்திருப்பதாக அந்த ஆய்வு கூறுகிறது. (அதிகளவாக 55.3% வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள பீகாரில், 1000 குடும்பங்களுக்கு 172 குடும்பங்கள் மட்டுமே வேலை அட்டை வைத்துள்ளனர்.) உலகின் மிகப்பெரிய வேலை வாய்ப்புத் திட்டம் என்று சொல்லிக் கொள்ளப்பட்டாலும் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் கிராமப்புற வறுமை மற்றும் வேலை இல்லாத் திண்டாட்டத்தை குறைப்பதில் பெரிதாக எதையும் சாதிக்க வில்லை. குறைவான கிராமப்புற கூலி நிலவரத் தில் சாதகமான உயர்வைக் கொண்டுவருவது பற்றி சொல்லவேத் தேவையில்லை. தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் கொண்டு வரப் பட்ட துவக்க காலத்தில் அவிதொச மெச்சத் தக்க முன்முயற்சிகளை எடுத்துள்ளது. இந்த வேகத்தை தக்கவைத்துக் கொள்ள தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் தொடர்பான போராட்டங்களில் திட்டமிட்ட முறையான தலையீட்டை மேற்கொள்வது முக்கியமானது.
11. அய்முகூவின் மற்றுமொரு வாக்குறுதி யான உணவுப் பாதுகாப்பு மிக நீண்ட கசப்பானதொரு துரோகக் கதையாகிவிட்டது. 2014 தேர்தல்கள் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் காங்கிரஸ் மீண்டுமொருமுறை உணவுப் பாதுகாப்பை தேர்தல் பிரச்சனை யாக்கிக் கொள்ள மூர்க்கத்தனமாக முயற்சிப்ப தாகத் தெரிகிறது. விலாஸ் முட்டம்வார் தலை மையிலான நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரைகளின் படி பார்த்தால் 75% கிராமப் புற மக்களும் 50%  நகர்ப்புற மக்களும் கிலோ ரூ.3 விலையில் கோதுமை, கிலோ ரூ.2 விலையில் அரிசி, 5 கிலோ மட்டுமே கொடுக்கப் படலாமெனத் தெரிகிறது. இது 5 பேருள்ள ஒரு குடும்பத்துக்கு (மாதம்) 25 கிலோ தானிய மாகவே இருக்கும். மக்கள் நீண்ட காலமாக கோரிவரும் அளவில் இது பாதியென்பதோடு தற்போது வழங்கப்பட்டு வரும் 35 கிலோ அளவை விடவும் குறைவாகும். அரசாங்கத்தின் தற்போதைய வெட்டப்பட்ட உணவுபாது காப்பு முன்மொழிதலுக்கு எதிராக அனைவருக் குமான பொது விநியோகத் திட்டத்திற்காக வெகுமக்கள் நுகர்வுக்கான அனைத்து அத்தியா வசியப் பொருள்களும் வழங்கப்பட வேண்டு மென்ற போராட்டத்தை தீவிரப்படுத்தியாக வேண்டும்.
12. பெரும்பாலான மத்திய அரசாங்கத் திட்டங்கள் வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள பயனாளிகளுக்கானதாகும். ஆனால் வறுமைக் கோட்டை வரையறுப்பதில் அரசாங்கமும் பிரதமர் தலைமையிலான திட்டக் கமிஷனும் நாட்டின் ஏழைகள் மீது குரூரமான நகைச் சுவையை அரங்கேற்றி வருகின்றன. வறுமைக் கோடு அளவு கிராமப்புறத்துக்கு நாளொன் றுக்கு ரூ.26 எனவும் நகர்ப்புறத்துக்கு ரூ.32 எனவும் உள்ள பரிகாசத்துக்குரிய திட்டக்கமி ஷன் வரையறை குறித்து உச்சநீதிமன்றம் உள்ளிட்ட பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப் புகள் வந்திருந்த போதிலும் திட்டக் கமிஷன் வறுமைக் கோட்டு அளவை 2012ல் முறையே ரூ.22.40, ரூ.28.65 என மேலும் குறைத்திருக்கி றது. இதன் மூலம் வறுமையின் அளவு, 2004 - 05ல் 37.2%ல் இருந்து 2009 - 10ல் 29.8% எனக் குறைந்து விட்டதாக கூறிக்கொள்ள முற்படுகி றது. வறுமைக் கோட்டை தீர்மானிக்கும் வகையிலேயே ஏழைகள் வஞ்சிக்கபடுகிறார்கள். மேலும் அவர்கள் வேண்டுமென்றே விலக்கப்ப டும் நிர்வாகத் தவறுகளாலும் பாதிக்கப்படுகி றார்கள். இப்போது மூன்றவதாக ஒரு முறை உரிய பயனாளிக்கு பயன் சென்று சேர்வது என்ற பெயரால் நேரடி பயன் அல்லது பண பரிமாற்றம் (உங்கள் பணம் உங்கள் கையில்) முன்மொழியப்படுகிறது. தற்போது இந்த முறை குறிப்பிட்ட சில மாவட்டங்களில் மட்டும் அறிமுகப்படுத்தப்படுகிறது. படிப்படி யாக அனைத்து நலத் திட்டங்களும் பின்னாளில் உணவுப் பாதுகாப்புத் திட்டமும் கூட இத் திட்டத்தில் சேர்க்கப்படும் எண்ணமும் இருக் கிறது. இந்த திட்டத்தின் படி பயன்பெற, கட்டாய ஆதார் அடையாள அட்டையும், வங்கிக் கணக்குகளும் வேண்டும். இது பயனாளிகளை பயன்பெறுவதில் இருந்து மேலும் விலக்கி வைப்பதை விரிவுபடுத்துவ தாகவே இருக்கும். விலக்கப்படுவதற்கு எதிராக வும் ஏழைகள் உத்தரவாதமான வகையில் நலப்பயன் மற்றும் சமூகப் பாதுகாப்பை கட்டுப்பாடு எதுவுமின்றி பெறுவதற்கான போராட்டமும் கிராமப்புற ஏழைகளின் இயக்கத்தில் முக்கியமான நிகழ்ச்சிநிரலாகும்.
13. கிராமப்புற சாலைகள், மின்வசதி, சுகாதார வசதி, மருத்துவம் மற்றும் கல்வி போன்ற பிரச்சனைகளிலும் கிராமப்புற போராட்டங்கள் போதுமான அளவு கவனம் செலுத்த வேண்டும். அரசாங்கத்தால் கட்டப்ப டுகிற உள்கட்டுமானம், கவலைக்குரிய விதத் தில் போதுமானவை அல்ல. மட்டுமின்றி, அங்கு ஊழல் மலிந்துள்ளது; அவை நிலப்பிரபுத்துவ - குலக் - அதிகாரவர்க்க கூட்டால் கட்டுப்படுத் தப்படுகிறது. தேசிய கிராமப்புற சுகாதாரத் திட்டம், உத்தரபிரதேசத்தில், பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சியில் மெகா ஊழலின் மறுபெயரா னது. சுகாதாரத் துறையின் உயர்அதிகாரிகள் மர்மமான முறையில் கொல்லப்பட்டனர். பீகார், ஜார்க்கண்ட் மற்றும் பிற மாநிலங்களி லும் ஊழல்கள் அம்பலப்படுத்தப்பட்டு வரு கின்றன. சிறுபான்மை சமூகத்தினர், ஒடுக்கப் பட்ட மற்றும் பின்தங்கிய சாதிகளுக்கான நலத்திட்டங்கள் என்ற பெயரில் அறிவிக்கப் பட்ட பல்வேறு மத்திய மற்றும் மாநிலத் திட்டங்கள், மேலோட்டமான அடையாளத் தன்மையில், ஊழலில் ஊறியுள்ளன. இந்த இயக்கப்போக்கில், ஏமாற்றப்படுகிற, ஏதும் பெறாத, அதுபோன்ற திட்டங்களின் உரிமை யுள்ள பயனாளிகள், இந்த ஏமாற்றுக்கு எதி ராகப் போராட, தங்களுக்குச் சேர வேண்டிய சலுகைகளைப் பெற போராட அமைப்பாக்கப் பட வேண்டும். கிட்டத்தட்ட எல்லா மாநில அரசாங்கங்களும் அடிப்படை வசதிகளைக் கூட தராத நிலையில், சாராய வியாபாரத்தை முன்னேற்ற மெனக்கெடுகின்றன. கள்ளச் சார ôயம் காய்ச்சுவதற்கான முகப்பாக, சட்டபூர்வ உரிமைகள்  செயல்படுகின்றன. விளைவாக, வருமானம் பெருகுவது பற்றி அரசாங்கங்கள் பெருமைப்பட்டுக் கொள்ளும்போது, ஆளும் வர்க்கக் கட்சிகள் சாராய மாஃபியாக்களுடன் கூட்டு சேர்ந்து செயல்படும்போது, சாராய சாவுகள் அதிகரிக்கின்றன. எனவே, ஒரு சக்தி வாய்ந்த சாராய எதிர்ப்பு இயக்கம் நமது கிராமப்புற நிகழ்ச்சிநிரலின் பிரிக்க முடியாத பகுதியாக இருக்க வேண்டும்.
14. மத்திய, மாநில அரசாங்கங்களின் கிராமப்புற நிர்வாக வலைப்பின்னலுடன், கிராமப்புற வளர்ச்சி, பல்வேறு பொது சேவைகள், நலத்திட்டங்கள் ஆகியவற்றின் பொருளாதாரத்திலும் அரசியலிலும் பஞ்சாயத் துக்கள் அதிகரித்த அளவில் மய்யமான பாத்திரமாற்றுகின்றன. கூட்டுறவு மய்யங்கள் மற்றும் சுயஉதவிக் குழுக்களும் கிராமப்புற வாழ்க்கையில் முக்கிய பாத்திரமாற்றுகின்றன. இந்த நிறுவனங்களில்  வெளிப்படைத் தன்மை மற்றும் பொறுப்பேற்றல் ஆகியவற்றுக்கான, அவற்றின் மீது நிலப்பிரபுத்துவ - குலக் சக்திகள் கொண்டுள்ள கட்டுப்பாட்டுக்கு எதிரான போராட்டம், கிராமப்புறங்களில் ஜனநாயகத் துக்கானப் போராட்டத்தில் ஒரு முக்கியமான கூறு. கிராமப்புறங்களில் தலைமை தாங்குகிற கட்சி கமிட்டிகளும் வெகுமக்கள் அமைப்புக்க ளின் மொத்த வலைப்பின்னலும், குறிப்பாக அவிதொசவும் அகில இந்திய விவசாயிகள் மகாசபையும், இந்தத் திசையில் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும்.
15. கிராமப்புற இந்தியா தொடர்ந்து காட்டுமிராண்டித்தனமான வடிவங்களில் சாதிய, பால்ரீதியான ஒடுக்குமுறையை, வன் முறையை சந்திக்கிறது. மதவெறி தப்பெண்ணங் களை பரப்பவும் மதவெறி வன்மத்தை விசிறி விடவும் மதவெறி சக்திகளும் கிராமப்புறங் களில் செயல்படுகின்றன. எனவே, சமூகத்தின் ஒடுக்கப்பட்ட பிரிவினரின், குறிப்பாக தலித் மக்கள் மற்றும் பெண்களின், மனித கவுரவம் மற்றும் மனித உரிமைகள் ஆகிய பிரச்சனைகள், கம்யூனிஸ்ட் கிராமப்புற வேலைகளின் கருவான நிகழ்ச்சிநிரலாக புரிந்துகொள்ளப்பட வேண்டும். ஒடுக்குமுறை மற்றும் வன்முறை யின் சில கொச்சையான வடிவங்கள், நீடித்த, தீர்மானகரமான எதிர்ப்பால் பழைய காலத்த வையாகிவிட்டன. ஆனால் இந்த விசயத்தில் நிச்சயமாக சுயதிருப்திக்கு இடம் தந்துவிடக் கூடாது. ஜனநாயகம், கவுரவம், சமூக முன்னேற் றம் ஆகியவற்றுக்கான போராட்டம், கிராமப் புறங்களில் நிலப்பிரபுத்துவ - குலக் ஆணாதிக்க மேலாதிக்கத்துக்கு விடாப்பிடியாக சவால் விடுவதன் மூலம் மட்டுமே முன்னெடுத்துச் செல்லப்பட முடியும்.
16. போர்க்குணமிக்க விவசாயப் போராட் டங்கள் நமது வெகுமக்கள் வலிமையின், புரட்சிகர அடையாளத்தின் முக்கிய ஆதாரமாக இருந்துள்ளன. அதுபோன்ற போராட்டங்கள், கிட்டத்தட்ட எல்லா இடங்களிலும் நிலப் பிரபுத்துவ - குலக் வன்முறையை அரசு ஒடுக்கு முறையை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. பீகாரில் நிலப்பிரபுத்துவ - குலக் சக்திகள் சாதிய வலைப்பின்னல் மற்றும் அரசியல் ஆதரவை பயன்படுத்தி தனியார் படைகளை உருவாக்கி னர். இந்தத் தனியார் படைகள் தண்டனை பற்றிய அச்சமற்றவையாக இருந்தன. சட்ட அமலாக்கப் பொறியமைவுபால் உண்மையில் அச்சமற்றவையாக இருந்தன. இது ரன்வீர் சேனா துவங்கப்பட்டதில் இருந்து, தொடர் வரிசை கொடூரப் படுகொலைகள் செய்வது முதல் அமீர்தாஸ் ஆணையத்தை கலைப்பது வரை, படுகொலைக் குற்றவாளிகள் விடுவிக்கப் படுவது, சேனா தலைவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்த ரன்வீர் சேனா ஆதரவாளர்களின் சீற்றத்தின் முன் அரசு அடிபணிந்தது என, அதன் மொத்த வழித்தடத்திலும் காணப்படு கிறது. அரசுக்கும் ரன்வீர் சேனாவுக்கும் இடையில் இந்தக் கூட்டு இருந்தபோதும், கட்சியும் புரட்சிகர விவசாய இயக்கமும், சேனாவை பலவீனப்படுத்தி, தனிமைப்படுத்தி, விவசாயப் போராட்டங்களை, பரந்துபட்ட கிராமப்புற அணிதிரட்டலை மீட்டெடுத்து, இந்தச் சவாலை எதிர்கொள்வதில் வெற்றி பெற் றன. நிலப்பிரபுத்துவ கோட்டையை தகர்த்த, தனியார் படைகளுடன், குறிப்பாக ரன்வீர் சேனாவுடன் மோதிய, பரந்துபட்ட விவசாய ஒற்றுமையையும் போர்க்குணமிக்க விவசாயப் போராட்டங்களையும் தக்க வைத்த அனுபவம், புரட்சிகர கம்யூனிஸ்டுகளின் விவசாயத் திட்டம் மற்றும் நடைமுறையின் உள்ளார்ந்த பலத்தின் விலைமதிப்பிலா நிரூபணமாகும்.
17. ராணுவ சவால்கள் தவிர, விவசாய மற்றும் கிராமப்புற போராட்டங்கள் பல்வேறு முனைகளில் இருந்தும் சக்திவாய்ந்த அரசியல் சவால்களை எதிர்கொள்கின்றன. அரசின் விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி போர்த் தந்திரம், கிராமப்புற நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி அமைப்பு நிறுவனங்களின் வலைப் பின்னல் ஆகியவற்றின் மீது உறுதியான பிடி கொண்டுள்ள நிலப்பிரபுத்துவ - குலக் கூட்டை உருவாக்கியிருக்கிறது. ஆண்டாண்டு கால நிலப் பிரபுத்துவ எதிர்ப்புப் போராட்டங்களினூடே கட்டியெழுப்பப்பட்டபோர்க்குணமிக்க விவ சாய - கிராமப்புற வறியவர்  ஒற்றுமை, இன்று, இந்த நிலப்பிரபுத்துவ - குலக் - அதிகார வர்க்கக் கூட்டின் சதிக்கு எதிராக நிறுத்தப்பட் டுள்ளது. சலுகைகள் தருவது என்ற ஆளும் வர்க்க அரசியலால் தூண்டப்படுகிற போட்டி மற்றும் பிளவுக்கு ஆட்பட்டுள்ளது. விவசாயத்தி லும் கிராமப்புற பொருளாதாரத்திலும் நடக்கிற அதிகரித்த அளவிலான, கார்ப்பரேட் - ஏகாதிபத்திய ஊடுருவலும் கிராமப்புற காட் சியில், தன்னார்வ நிறுவனங்களின் காளான் போல் வளரும் வலைப்பின்னல், நிலம் மற்றும் பிற ஆதாரங்களின் பணம்பண்ணும் முகவர்கள் மற்றும் இடைத்தரகர்கள் படை என மிகப் பெரிய மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளன. அதுபோன்ற சவால்களை எதிர் கொள்கிற புரட் சிகர விவசாய இயக்கம் தன்னை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். புத்துயிர்த்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு நீண்டகால தேக்கமும் பொருளாதாரவாதத்தின் கேடுகளுக்கும் சுயநல சக்திகள் வளர்வதற்கும் இயக்கத்தை உட்படுத் திவிடும். போராட்டங்களின் ஓட்டத்தைத் தக்க வைத்திருப்பது, நிலம் என்ற அடிப்படை பிரச்ச னையாக இருந்தாலும் தனியொரு பிரச்சனை யில் சுருங்கிவிடாமல் இருப்பது முக்கியமானது. நிலப்பிரபுத்துவ - குலக் ஆதிக்கம் மற்றும் பெரு நிறுவன - ஏகாதிபத்திய ஊடுருவலுக்கு எதி ரான மக்களின் எதிர் மேலாதிக்கத்தை கட்டி யெழுப்பும் உயிரோட்டமான, செயலூக்கமிக்க அரசியல் நோக்குநிலையை உயர்த்திப் பிடித் தால் மட்டுமே போராட்டத்தில் பெற்ற ஆதா யங்களை பாதுகாக்க, உறுதிப்படுத்த, விரிவாக்க முடியும்.

Search